எழுதுவதை விட படிப்பது எனக்கு பிடித்த விஷயம் ..அப்படி படித்த சில
1.
மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.”
2.
எனக்கு நிகழ்ந்த எல்லாமும்
உங்களுக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும்’
என்ற வரிகளில் ஆரம்பித்த
என் அடுத்த கவிதையை
எப்படித் தொடர்வதென்ற
யோசனையில் இருக்கிறேன் நான்.
எனினும்
அந்த
அடுத்த வரி எனக்குத்
தோன்றும்போது
நீங்கள் உங்கள்
வழக்கமான வேலைகளுக்குத்
திரும்பியிருக்கக்கூடும்.
நானும்...
3.
நேற்று என் அப்பாவுக்கு
ஸ்போக்கன் இந்தி!
இன்று எனக்கு
ஸ்போக்கன் இங்கிலீஷ்!
நாளை என் மகளுக்கு
ஸ்போக்கன் தமிழ்!
http://www.parisalkaaran.com
Bookmarks