Results 1 to 6 of 6

Thread: imate Jam இலவச windows 6.1 அப்டேட்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112

    imate Jam இலவச windows 6.1 அப்டேட்

    நண்பர்களே, இந்த செய்தி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும் என்றாலும் அதை பொதுவிலே அறிய தராமல் மற்றவர் பெற முடியாது என்பதால் தருகிறேன்.



    என்னிடம் imate jam என்ற விண்டோஸ் மொபைல் போன் நம் தள நண்பர் பட்டாம்பூச்சி அவர்களால், அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றேன். இந்த மொபைல் போன் விண்டோஸ் 2003 SE என்ற pocket PC க்கான OS ஐ உள்ளமைய பெற்றிருந்தது. அதற்கு பின் விண்டோஸ் 5 மற்றும் 6 (6.1) என்று வந்த போதும் இந்த மாடல்களுக்கு அந்த OS அப்டேட் அந்த imate நிறுவனமோ அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனமோ செய்துதர மறுத்து விட்டார்கள். இந்த புதிய இயங்குதளங்கள் முந்தைய போன்களில் இயங்க இயலாது என்றே கேட்பவர்களிடம் சொல்லி ஏமாற்றி வந்தனர். இங்கே ஏமாற்றி என்ற வார்த்தை எதற்கு என்றால், புதுப்புது ஒ.எஸ் விற்றால் தான் புதுப்புது மாடல்களை விற்க முடியும், முன்பே விற்றவருக்கு புது ஒ.எஸ் கொடுத்தால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது என்ற வியபாரதந்திரமே இது.

    இதனை ஒரு ரஷ்ய ஹேக்கர் உடைத்தெறிந்தார், அவர் இந்த imate jam வகை போனான (ஒரிஜினலாகவே) HTC Magician என்ற மாடலுக்கு விண்டோஸ் மொபைல் 6.1 ஒ.எஸ் ஐ மாற்றி தந்தார். இது முழுக்க முழுக்க இலவசம் மற்றும் தனிப்பட்ட உதவியே அன்றி, இதனை பதிக்கும் போது பிழை அல்லது போன் செயலிழந்தால் அவர் பொறுப்பல்ல என்று சொன்ன போதும் பல்லாயிரக்கணக்காவர்கள் அந்த மாடலை அப்டேட் செய்து விட்டனர். அந்த தளம் இதோ. கீழே கண்ட வகையில் ஏதாவது ஒரு போன் வைத்திருப்பவர் இதனை உங்கள் சொந்த ரிஸ்கில் முயன்று பார்க்கலாம்.

    Code:
    HTC Magician also known as Qtek S100 / Qtek S110 / Dopod 818 / 
    
    Dopod 828 / Dopod 828+ / O2 Xda II Mini / Orange SPV M500 / 
    
    T-Mobile MDA Compact / i-mate JAM.
    
    http://www.cotulla.pp.ru/Magician.html
    விரும்புவோர் சென்று பயனடையுங்கள். மேலும் சில மாடல்களுக்கும் அவர் தந்துள்ளார். அந்த தளம் சென்று பெறுங்கள். இது பற்றிய சந்தேகங்கள் விளக்கங்கள் வினா/விடை மற்றவை கீழே உள்ள பொது பாரத்தில் (லாகின் ஆகாமலே) பார்க்க முடியும்.

    Code:
    http://wiki.xda-developers.com/index.php?pagename=HTC_Magician
    நான் முதலில் அந்த தளத்தில் உள்ள முதல் பதிப்பு பதிந்து பின் இரண்டாம் பதிப்பிற்காக தாமதித்து மறந்து போய் மூன்றாம் பதிப்பு பதிந்திருக்கிறேன். மிக சிறப்பாக இருக்கிறது. எனவே நீங்களும் நேரடியாக மூன்றாம் பதிப்பையே நேரிடையாக பதிந்து இன்புறுங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மிக அருமையான தகவலுக்கு நன்றி பிரவீண்.
    பாக்கெட் பிசி வலையிலான கைபேசி வைத்திருப்பவருக்களுக்கு நல்ல சேதி.
    என்னுடைய பழைய ஐமேட் பாக்கெட் பிசியில் இதை முயற்சி செய்து பார்க்கிறேன். விண்டோஸ் 6.1 என்பதால் தமிழ் எழுத்துருக்கள் நன்றாகத்தெரியும் என்று நம்புகிறேன். கோப்பின் அளவுதான் 44 எம்.பி என்பது சற்றே ஆச்சரியமாக இருக்கிறது.

    மீ்ண்டும் நன்றி பிரவீண்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு பிரவீண்,

    எனது கைபேசி பிடிஏ2 வகையை சேர்ந்தது. அதில் ரேடியோ வெளியீடு 1.03 என்று இருக்கிறது.

    விண்டோஸ் 6.0-க்கு மேம்படுத்த ரேடியோ 1.12 தேவை என அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ரேடியோ 1.12 மட்டும் 40 எம்.பி அளவுக்கு மேலே வருகிறது. எனக்கு அந்த அளவுள்ள மென்பொருளை இங்கே பதிவிறக்குவது கடினம். ரேடியோ1.03...விலேயே விண்டோஸ் 6.0க்கு மேம்படுத்தலாமா... கூடாதா...? கூடாதெனில் இன்னும் ஒரு மாதத்திற்கு பின்னரே என்னால் இந்த சோதனையை செய்து பார்க்க இயலும்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    அருமையான பகிர்வுக்கு நன்றி ப்ரவீண்....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by பாரதி View Post
    அன்பு பிரவீண்,

    எனது கைபேசி பிடிஏ2 வகையை சேர்ந்தது. அதில் ரேடியோ வெளியீடு 1.03 என்று இருக்கிறது.

    விண்டோஸ் 6.0-க்கு மேம்படுத்த ரேடியோ 1.12 தேவை என அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ரேடியோ 1.12 மட்டும் 40 எம்.பி அளவுக்கு மேலே வருகிறது. எனக்கு அந்த அளவுள்ள மென்பொருளை இங்கே பதிவிறக்குவது கடினம். ரேடியோ1.03...விலேயே விண்டோஸ் 6.0க்கு மேம்படுத்தலாமா... கூடாதா...? கூடாதெனில் இன்னும் ஒரு மாதத்திற்கு பின்னரே என்னால் இந்த சோதனையை செய்து பார்க்க இயலும்.
    1.03 லே அப்டேட் செய்யலாம்.

    மேலும் டெக்னிக்கலான தகவலுக்கு அவர்கள் பாரத்தை பார்த்தால் தெரியவரும்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    உபயோகமான தகவல்.. சிலருக்கு பயன்படும்.. நன்றி அன்பரே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •