Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: விடையற்றதொரு கேள்வி

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0

    விடையற்றதொரு கேள்வி

    ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் இளமதியன் அன்று காலை அவனது தமிழ் பாடத்திலுள்ள மாவட்ட ஆட்சியாளரின் பணிகள் பற்றிய பாடத்தை சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்தான்.

    நான் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவன் படிக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

    “ மாவட்ட ஆட்சி யாளரின் பணிகள் பாடத்துல உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னக்கேளு, நான் விளக்கம் சொல்றேன்!’’ என்று தெனாவெட்டாகக் கேட்டேன்.

    அவன் பதில் சொல்லாமல் பாடத்தை படிப்பதிலேயே கவனமாக இருந்தான். மறுபடியும் நான் கேட்டு தொந்தரவு செய்யவே,

    “ எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கு நீங்க பதில் சொல்லமாட்டீங்க!” என் இம்சை தாங்க முடியாமல் சொன்னான் இளமதியன்.

    எனக்கு கோபம் தலைக்கேறியது . எம்.ஏ படித்திருக்கும் என்னிடம் அவனது கேள்விக்கு பதில் இல்லாமல் போகுமா? எனக்குள் கர்வம் வந்தமர்ந்து உசுப்பேற்றிக்கொண்டிருந்தது.

    ’’அட சும்மா கேளுடா, நான் பதில் சொல்றேன்!’’ அவனிடம் மல்லுக் கட்டி நின்றேன்.

    அவன் தொண்டையை ஒரு முறை கனைத்துவிட்டு கேட்டான்.

    “ ஒரு மாவட்ட ஆட்சியாளர் ஆகணுமுன்னா அதுக்கு ஐ.ஏ.எஸ் படிச்சு பாஸ் பண்ணியிருக்கணும், அப்பறம் உதவி கலைக்டரா இருந்து அனுபவப்பட்டு அப்பறம் தான் ஒரு மாவட்டத்துக்கு கலைக்டரா போடுவாஙக, சாதாரண ஒரு மாவட்டத்த நிவாகம் பண்றதுக்கே ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையின்னு இருக்கிறப்போ, மொத்த மாவட்டத்தையும் நிர்வாகம் பண்ற முதல்வர் மட்டும் ஏன் வெறும் அஞ்சாம் கிளாஸ் படிச்சிருந்தாகூட தேர்தல்ல ஜெயிச்சா போதுமுன்னு உட்கார வைக்கிறீங்க, கட்சியில ஐ.ஏ.எஸ் படிச்சவங்களே கிடையாதா? அவங்கள தேர்தல்ல நிக்க வெச்சு முதல்வர் பதவியுல ஏன் உட்கார வைக்கிறதில்ல..!”

    இளமதியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தேன். விடையற்ற அவனது கேள்வி மட்டும் என்னை அரித்துக்கொண்டே இருந்தது.
    Last edited by ஐரேனிபுரம் பால்ராசய்யா; 31-08-2009 at 05:32 AM.
    நான் மலர்கள் என்று நினைத்து முட்களில் நடந்தவன்.
    முட்களில் நடந்ததால் மனம் கிழிந்து போனவன்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    கண்டிப்பாக யாராலும் பதில் சொல்ல முடியாது....

    விலகிச்செல்வதை தவிற வேறென்ன செய்யமுடியும்.. புத்திசாலி குழந்தைகளிடம் மாட்டிக்கொண்ட பின்..

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    அழகான பதில் இருக்கே!!!

    மாநில முதல்வராய் உள்ளவர் அனுபவம் உள்ளவராய் இருப்பார். படிக்காவிட்டாலும், ஒரு மாநிலம் முழுதும் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஓட்டு வாங்கி ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. மக்களோட ஒட்டு மொத்தப் பிரச்சனைகளை அவர் அறிந்திருக்கிறார். அதை தீர்க்கும் வழி அவர் கையில் இருக்கிறது என்று அறிந்துதான் நாம் அவருக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அதனால் அறிவு என்பது படிப்பை மட்டுமே சார்ந்ததில்லை, மாநில முதல்வர் தம் அனுபவத்தைக் கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்.

    அதை எப்படிச் செய்வது என்பதை படித்த அறிவுள்ள அதிகாரிகளைக் கொண்டு நடத்துகிறார்..


    படிப்பு ஒரு நல்ல தகுதிதான். ஆனால் படிப்பு மட்டுமே தகுதி இல்லை.


    தலைவன் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதால்தான் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஏழைகளின் கால்பணியும் தேர்தல் வருகிறது.

  4. #4
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    அன்பான அல்லிராணி அவர்களுக்கு, தங்களின் பதில் சிந்திக்கவைக்கிறது. கட்சியில ஐ.ஏ.எஸ் படிச்சவங்களே கிடையாதா? அவங்கள தேர்தல்ல நிக்க வெச்சு முதல்வர் பதவியுல ஏன் உட்கார வைக்கிறதில்ல..!” என்ற கேள்வியில் தான் சற்று தடுமாற்றமாகி இந்த கதை உருவானது. தங்களின் உயர்ந்த கருத்துக்கு நன்றி
    நான் மலர்கள் என்று நினைத்து முட்களில் நடந்தவன்.
    முட்களில் நடந்ததால் மனம் கிழிந்து போனவன்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    படித்தவர்களால், ஒற்றுமையாய் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியலை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பல ஐ.ஏ.எஸ் படித்தவர்கள் கட்சிகளில் இருக்கிறார்கள். ஆனால் யாரும் தலைவராக இல்லை.

    அறிவுடன் இணைந்து வளரும் கர்வமும் இதற்குக் காரணமாய் இருக்கலாம்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    அழகான பதில் இருக்கே!!!

    மாநில முதல்வராய் உள்ளவர் அனுபவம் உள்ளவராய் இருப்பார். படிக்காவிட்டாலும், ஒரு மாநிலம் முழுதும் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஓட்டு வாங்கி ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. மக்களோட ஒட்டு மொத்தப் பிரச்சனைகளை அவர் அறிந்திருக்கிறார். அதை தீர்க்கும் வழி அவர் கையில் இருக்கிறது என்று அறிந்துதான் நாம் அவருக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அதனால் அறிவு என்பது படிப்பை மட்டுமே சார்ந்ததில்லை, மாநில முதல்வர் தம் அனுபவத்தைக் கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்.

    அதை எப்படிச் செய்வது என்பதை படித்த அறிவுள்ள அதிகாரிகளைக் கொண்டு நடத்துகிறார்..


    படிப்பு ஒரு நல்ல தகுதிதான். ஆனால் படிப்பு மட்டுமே தகுதி இல்லை.


    தலைவன் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதால்தான் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஏழைகளின் கால்பணியும் தேர்தல் வருகிறது.
    அனுபவம் சரிதான்...
    இந்த கதையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது சில காலம் இணைஆட்சியராக இருந்த பின்னரே அவர்களுக்கும் மாவட்ட ஆட்சி பணி வழங்கப்படுகிறது.

    நான் கேள்விபட்ட வரையில் உலகத்திலேயே மிக உயர்ந்த தேர்வாக மதிக்கப்படுவது இந்திய ஆட்சிப்பணித்துறை.அப்படி இருக்கும்போது கட்சிகளில் ஆலோசகர்களாகவும், உதவியாளர்களாகவும் மட்டுமே இருப்பதற்கான காரணம்தான் புரியவில்லை... மக்களின் நம்பிக்கை மட்டும் பெற்றால் போதுமென்பதும் எனக்கு சரியானதாக படவில்லை(மக்களின் நம்பிக்கையை பெற தற்பொழுது பல்வேறு தவறான வழிமுறைகளை கையாள்கின்றனர் என்பது எனது கருத்து). கட்சிகளில் தலைவன் இடத்தை பெற பணம்,(படை)பலம் அதிகாரம் போன்றவை முக்கிய காரணிகளாக அமைகின்றது என்பதும் எனது கருத்து...

    Quote Originally Posted by அல்லிராணி View Post
    படிப்பு ஒரு நல்ல தகுதிதான். ஆனால் படிப்பு மட்டுமே தகுதி இல்லை.
    இதனை ஏற்றுக்கொள்கிறேன்.. படிப்போடு இணைந்த அனுபவம்தான் தேவை....


    தற்பொழுது உள்ள சூழ்நிலையிலேயே இவற்றை சொல்கிறேன்... பல படிக்காத தலைவர்கள் நடத்திய ஆட்சிமுறையை நான் குறைசொல்ல விரும்பவில்லை காரணம் அவர்கள் படிக்காவிட்டாலும் பண்போடும்,அனுபவத்தோடும் அரசியல் செய்தார்கள்... தற்பொழுது அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் என்பதே எனது கருத்து...

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    அதுவும் சரிதான். அப்படி உலகத்திலேயே மிக உயர்ந்த தேர்வில் வெற்றி பெற்ற அறிவாளிகள் இப்படித்தான் நம் நாடு இருக்க வேண்டும் என்பதில் ஒன்று படாத காரணமும் அறிவுதானோ?

    அந்த நம்பிக்கையை அவர்களுக்குள் துளிர்க்க வைத்து, வளர்த்து மக்களுக்குள் பதியனிட்டுப் பெருக வைத்தால்தானே பலனிருக்கும்!

    யாரோ ரோடுபோட்டால் என் வண்டி போகும் ஜோரா என்று சொல்வதைப் போல படித்தவர்களின் பயம், சோம்பல், நம்பிக்கையின்மை, பேராசை, சுயநலம் போன்றவைதான் அடிப்படைக் காரணம்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    அதுவும் சரிதான். அப்படி உலகத்திலேயே மிக உயர்ந்த தேர்வில் வெற்றி பெற்ற அறிவாளிகள் இப்படித்தான் நம் நாடு இருக்க வேண்டும் என்பதில் ஒன்று படாத காரணமும் அறிவுதானோ?

    அந்த நம்பிக்கையை அவர்களுக்குள் துளிர்க்க வைத்து, வளர்த்து மக்களுக்குள் பதியனிட்டுப் பெருக வைத்தால்தானே பலனிருக்கும்!

    யாரோ ரோடுபோட்டால் என் வண்டி போகும் ஜோரா என்று சொல்வதைப் போல படித்தவர்களின் பயம் சோம்பல், நம்பிக்கையின்மை,, பேராசை, சுயநலம் போன்றவைதான் அடிப்படைக் காரணம்
    நம்பிக்கையின்மை,, பயம்,,பேராசை, சுயநலம்
    இன்றைய நிலையில் இருக்கும் மிகபெரும் அபாயம் இவைதான் அதில் படித்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது வேதனையான விசயம்தான்...

  9. #9
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    நம்பிக்கையின்மை,, பயம்,,பேராசை, சுயநலம்
    இன்றைய நிலையில் இருக்கும் மிகபெரும் அபாயம் இவைதான் அதில் படித்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது வேதனையான விசயம்தான்

    இன்றைய சூழ்நிலையில் இதுதான் உண்மை திரு கா.ரமேஷ் அவர்களே
    நான் மலர்கள் என்று நினைத்து முட்களில் நடந்தவன்.
    முட்களில் நடந்ததால் மனம் கிழிந்து போனவன்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    முதல்வராக வருவதற்கு நன்கு நடிக்க தெரிந்திருக்க வேண்டும். பசப்பலாக பேசத் தெரிந்திருக்க வேண்டும் நீலிக் கண்ணீர் வடிக்க தெரிந்திருக்க வேண்டும். வெட்டு குத்துக்கு அஞ்சாதிருக்க வேண்டும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றிறகு படிப்பறிவு தேவையில்லை. கபடமில்லாமல் பையன் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தந்தை நகர்ந்தது யதார்த்தம். நல்ல கருத்துள்ள கதை. பாராட்டுக்கள் அய்யா

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  11. #11
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    படிக்காம தான் ஆட்சி செய்தார் காமராஜர் ஐயா... அருமையா ஆட்சி செய்தார்... நேர்மையா ஆட்சி செய்தார்...

    ஆனா இன்றைய அரசியல் அந்த சிறுவன் கேட்டது போல தான்... எல்லோரும் சுயநலத்துடன் பதவி வெறியும் சொத்து சேர்க்கும் வெறியும் இருப்பதால் தான் தகுதி பற்றி கேட்கிறார்கள்...

    படிச்சிருக்காரோ இல்லையோ ஆனா பண்புள்ளவரா இருக்கணும்... ஏன்னா அவரை நம்பி இருப்பது ஒருத்தரோ ரெண்டு பேரோ இல்லை ஒரு நாடே அவரை நம்பி இருக்கும்போது ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கனும்...

    அருமையான கதை பால்ராசய்யா...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஒரு அலுவலரையோ, தாசில்தாரையோ அல்லது கலெக்டரையோ தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குறிப்பிட்ட சிலபேருக்கு கொடுக்கப்படுகிறது..

    பொறுப்பு இருப்பதால், அவர்களும் தேர்வு முறையை செவ்வனே வகுத்து தேர்வு செய்கின்றனர்.

    ஆனால் ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டு விட்டதால் அதில் ஏற்படும் தவறுகளுக்கு யாரையும் பொறுப்பாளி ஆக்க இயல்வதில்லை.

    அதனால் எந்த ஒரு காரியம் சிறப்பாய் நடக்கணும் என்றாலும் யாராவது கண்டிப்பா பொறுப்பு ஏத்துகிட்டே ஆகணும். (நம்ம மின்னிதழ் மாதிரி )

    அந்தப் பொறுப்பை பயம், சோம்பல், நம்பிக்கையின்மை,, பேராசை, சுயநலம் போன்ற பல காரணங்களால் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

    அதனால அடுத்த முறையாவது பொறுப்பாக ஓட்டுப் போடுவோம். எது நல்லது என நாலு பேருக்குச் சொல்லுவோம்... (இதைத்தான் சொல்லித் தருது இந்தக் கதை)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •