Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 84

Thread: பட்டிமன்றம் போடலாம் வாங்கோ....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    பட்டிமன்றம் போடலாம் வாங்கோ....

    நண்பர்களே…
    மன்றத்தில் பலவிதமான விவாதங்களில் நாம் இதுவரைப் பங்கெடுத்து வருகிறோம். இப்போது புதிய வடிவில்… எழுத்து வடிவில் பட்டி மன்றம் என்ற விவாதக்களம் ஒன்று அறிமுகப் படுத்துவோமா?

    விதிகள்:
    • பட்டி மன்ற நடுவர் ஒருவர் இருப்பார்.

    • நடுவர் பட்டிமன்றத் தலைப்பைத் தேர்வு செய்து நிர்வாக அனுமதியுடன் (நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தனிமடலில் அனுப்பி) புதிதாகத் திரி ஒன்றைத் துவக்குவார்.

    • கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் விருப்பத்தைத் தனிமடலில் தெரிவிக்க வேண்டும். அதோடு எந்தப் பக்கத்தில் வாதிட விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்கலாம்.

    • எந்தப்பக்கம் நீங்கள் வாதிட வேண்டும் என்பதை நடுவர் தான் இறுதி செய்வார்.

    • கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அணிகளின் உறுப்பினர் எண்ணிக்கை இருக்கும்.

    • ஒற்றைப் படையாக இருக்கும் பட்சத்தில் நடுவர் விருப்பப்படி புதிதாக ஒருவரை அழைக்கவோ அல்லது ஒருவரை விலக்கவோ செய்யலாம்.

    • நடுவர் முதலில் அறிமுகவுரை கொடுத்துவிட்டு எழுதவேண்டிய நபரை அழைப்பார்.

    • தொடர்ந்து அழைக்கப்பட்டவர் தனது பக்க விவாதத்தை வைப்பார்.

    • ஒருவரை அழைக்கும் போது அவர் தனது விவாதத்தைப் பதிய வேண்டிய அவதியும் நடுவரால் கொடுக்கப்படும்.

    • அதில் எதேனும் மாற்றம் வேண்டும் என்றால் நடுவருக்குத் தனிமடலில் தெரிவிக்க வேண்டும்.

    • குறிப்பிட்ட நாளுக்குள் அவர் கருத்துப் பதியவில்லை என்றால் நடுவரின் விருப்பத்திற்கேற்ப அடுத்த அணிக்கோ அல்லது அதே அணியின் அடுத்த நபருக்கோ அல்லது புதிதாக யாரையேனும் சேர்த்துக் கொள்ளவோ செய்யலாம்.

    • மொத்தம் இரண்டுச் சுற்றுகள் விவாதம் வரும்.

    • ஒருவருக்கு ஒரு சுற்றுக்கு ஒரு பதிவுக்கு மட்டுமே அனுமதி.

    • அணி விவாதகர்கள் ஒவ்வொருவரின் பதிவுக்கு அடுத்து நடுவர் அடுத்த பதிவரை அழைப்பார்.

    • நடுவரின் அழைப்பிற்குப் பிறகு தனது பதிவைத் திருத்திப் பதிதல் கூடாது. எழுத்துப் பிழைகளை பொறுப்பாளர்கள் வாயிலாக நீக்கலாம்.

    • மன்ற விதிகளுக்கு கட்டுப்படாத வாதங்களை நீக்கும் உரிமை நடுவருக்கும் நிர்வாகத்திற்கும் உண்டு.

    • தவறான கருத்துக்களை பதித்து திருத்த இயலாதோர் தனது அணியின் அடுத்தப் பதிவாளருக்கு தனி மடலிட்டு அவரது பதிவில் தெரிவிக்கச் சொல்லலாம்..

    • தனது அணியின் பிற உறுப்பினர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் அனைத்தும் தனிமடல் மூலமாகவே இருக்கவேண்டும். திரியில் இடம்பெறக் கூடாது.

    • இறுதியாக எல்லோருடைய பதிவுகளின் தொகுப்புரைக்குப் பின் நடுவர் தனது தீர்ப்பை வழங்குவார்.

    • ஒரு பட்டி மன்றத்தின் இறுதியில் அடுத்த நடுவர் தேர்ந்தெடுக்கப் படுவார். அவர் அடுத்தப் பட்டிமன்றத்தைத் தொடர்வார்.

    • இதற்குப் பின்னரே மற்றவர்கள் அந்தத் திரியில் பின்னூட்டமிட அனுமதிக்கப் படுவீர்கள்.



    என்ன நண்பர்களே களத்தில் இறங்கத் தயாரா ?

    இது தொடர்பான உங்களது ஆலோசனைகளை முன்வையுங்கள்.
    Last edited by செல்வா; 21-08-2009 at 11:48 AM.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல முயற்சி செல்வா..

    கொஞ்சம் புரிந்துணர்வும் பொறுப்புணர்வும் இருந்தால்
    சரளமாய்க் கொண்டு செல்லலாம்..

    கால அவகாசமும் அவசியம்.

    வெற்றிக்கு என் முன் வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இனியா என்ற உறுப்பினர், பட்டிமன்றம் போல ஒன்று ஆரம்பித்து, அது திரி பூட்டலில் முடிந்தது.


    அதற்குப் பிறகு நான் ஆரம்பித்த பட்டிமன்றத்தை பலர் பார்த்ததோடு சரி...

    இந்த பட்டிமன்றமாவது நீடித்திருக்கட்டும்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நடுவருக்கு திரியை மாற்றயமைக்கவோ அல்லது நீக்கவோ அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு உடன்படுபவர்கள் மட்டுமே இந்த பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கவேண்டும், இதனால் பின்னால் வரும் பிரச்சனைகளை தடுத்துநிறுத்தமுடியும்.

    நல்ல ஐடியா செல்வா. பாராட்டுக்கள்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    1. பின்னூட்டம் இடத்துடிக்கும் கைகளை கட்டுப் படுத்த அல்லது வேறு வடிகால் தர திட்டம்?

    2. வாதாடுபவர்களின் வேலை கொஞ்சம் அதிகம்தான்... சொன்னதுக்கு உடனே பாராட்டு வேணும்னு எதிபார்ப்பாங்க... அந்த அங்கீகாரத்தாகத்துக்கு தண்ணீர் எங்க?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    விமர்சனத்திரி தனியேக் கொளுத்திவிடலாமா?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    இதுக்கு தலைவர் யாரென்று எனக்கு தெரிந்துவிட்டது.....

    யார் யார் என்னென்ன பாடு படப்போறாங்களோ...

    இந்த தலைவர்கிட்ட.....

    ஆனா இவர் வாதாடுவோரா வந்திட்டா:

    எதிர்ப்பக்கம் வாதாடுரவங்க நிலைமை.... அவ்வளவுதான்...

    அதனால இந்தத்திரி சுவாரசியமாக இருக்கும்..... எல்லோரும் எழுத்துக்களால சண்டை பிடிக்கிறதா நான் பார்த்ததே இல்லை...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பட்டிமன்ற தலைப்பு யாரையும் புண்படுத்தாத வண்ணம் இருக்க்க வேண்டும்.. நடுவர் நிர்வாத்துடன் ஒப்புதல் பெற்று தலைப்பை இடுவது நல்லது..

    நகைச்சுவை கலந்து பட்டிமன்றம் செல்வது நல்ல சுவையாக இருக்கும் என்றாலும் அடுத்தவரை காயப்படுத்தாமல் நையாண்டி செய்வது நலம்..

    //ஒற்றைப் படையாக இருக்கும் பட்சத்தில் நடுவர் விருப்பப்படி புதிதாக ஒருவரை அழைக்கவோ அல்லது ஒருவரை விலக்கவோ செய்யலாம்.
    //

    இது வேண்டாமே, இதனால் ஆர்வமுள்ளவர்களின் ஆசைகள் காயப்படலாம்.. அதற்கு பதிலாக பொறுப்பாளர்கள் யாரைவாவது அழைத்து வாதிட சொல்ல வேண்டியதுதான்..

    இத்திரி வெற்றியை சூட வாழ்த்துகள் டா..
    அன்புடன் ஆதி



  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post
    இதுக்கு தலைவர் யாரென்று எனக்கு தெரிந்துவிட்டது.....

    யார் யார் என்னென்ன பாடு படப்போறாங்களோ...

    இந்த தலைவர்கிட்ட.....

    ஆனா இவர் வாதாடுவோரா வந்திட்டா:

    எதிர்ப்பக்கம் வாதாடுரவங்க நிலைமை.... அவ்வளவுதான்...

    அதனால இந்தத்திரி சுவாரசியமாக இருக்கும்..... எல்லோரும் எழுத்துக்களால சண்டை பிடிக்கிறதா நான் பார்த்ததே இல்லை...

    என்னதான் என்பேரில் பாதியை வச்சிருந்தாலும் செல்வாவை இப்படியெல்லாம் வாரக்கூடாது..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    1. பின்னூட்டம் இடத்துடிக்கும் கைகளை கட்டுப் படுத்த அல்லது வேறு வடிகால் தர திட்டம்?

    2. வாதாடுபவர்களின் வேலை கொஞ்சம் அதிகம்தான்... சொன்னதுக்கு உடனே பாராட்டு வேணும்னு எதிபார்ப்பாங்க... அந்த அங்கீகாரத்தாகத்துக்கு தண்ணீர் எங்க?
    நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு சொல்லவும் சந்தர்ப்பம் வழங்கிட்டாப் போச்சு. தாமதமாக் கிடைச்சாலும் தரமாக் கிடைச்சால் போதுமில்ல.

    பட்டி'மன்றம் ஆகாதிருக்கட்டும். விதிகள் வலிதாகட்டும். வலிகள் தராதிருக்கட்டும்.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    என்னதான் என்பேரில் பாதியை வச்சிருந்தாலும் செல்வாவை இப்படியெல்லாம் வாரக்கூடாது..
    செல்வத்தை வாரினா அது நம்மை வாரிவிட்டுடும்ன்னு எனக்கு தெரியாதா என்ன?

    ஆனாலும் வாரிவிடுவமிள்ள......

    அதுவொரு இனிய உணர்வு அது மத்தவங்களுக்கு புரியாது.....

    ஹா ஹா ஹா.....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நடுவரின் அழைப்பிற்குப் பிறகு தனது பதிவைத் திருத்திப் பதிதல் கூடாது. எழுத்துப் பிழைகளைதல் நீங்கலாக.
    எழுத்துப்பிழைகளை பொறுப்பாளர் மூலம் திருத்தச் சொல்லலாமோ.

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •