Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: புவன் - இந்திய கூகுள் எர்த்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    37,887
    Downloads
    15
    Uploads
    4

    புவன் - இந்திய கூகுள் எர்த்


    இஸ்ரோ வெப்சைட்டில் இந்தியா மேப்
    ரோட்டில் நிற்கும் கார்கூட தெரியும்



    புதுடெல்லி, ஆக. 14-
    கூகுள் எர்த் இணையதளத்தை போல், இந்தியாவின் எந்த இடத்தையும் பார்க்க உதவும் புதிய இணையதளத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கி உள்ளது. இதில் ரோட்டில் நிற்கும் ஒரு காரைக்கூட தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும்.

    கூகுள் எர்த் இணையதளம் உலக அளவில் பிரபலமானது. இதில் இந்தியாவில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தில் இருந்து அமெரிக்காவின் நியுயார்க் நகரம் வரையில் எந்த இடத்தையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். இவை எல்லாம் செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டவை. ஒரு காரின் நம்பர் பிளேட்டை கூட இதில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், எதிர்ப்புகள் எழுந்ததால் பாதுகாப்பு பிரச்னைகளுக்காக விண்ணில் இருந்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பார்க்க முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டது.

    கூகுள் எர்த்துக்கு போட்டியாக இப்போது இந்தியாவின் இஸ்ரோ புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது.

    http://www.bhuvan.nrsc.gov.in/about.html


    என்ற அந்த இணையதளத்தில் சென்றால், இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் ரோட்டில் உள்ள ஒரு காரை கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும்.
    ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாக பார்க்க முடியாது.

    இதில் உள்ள காட்சிகள் ஒரு ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் கார்டோசாட் 1, கார்டோசாட் 2 ஆகியவை மூலம் முப்பரி மாணத்தில் படம் பிடிக்கப்பட்டவை.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    8,771
    Downloads
    12
    Uploads
    0
    கொடுக்கப்பட்ட அந்த சுட்டியை சொடுக்கினால் அதன் பக்கம் வரமறுக்கிறது.

    இதை செய்தியாக படித்தபோழுதுகூட அந்த சுட்டியை தட்டினேன் வேலைசெய்யவில்லை.

    தகவல் அற்புதம் அறிஞரே. நன்றிகள்

    The page cannot be displayed
    The page you are looking for is currently unavailable. The Web site might be experiencing technical difficulties, or you may need to adjust your browser settings.



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,763
    Post Thanks / Like
    iCash Credits
    45,665
    Downloads
    51
    Uploads
    112
    இந்திய அரசு நிறுவனம் என்றாலும் சாதாரண இனைய இனைப்பிலே தான் அந்த தளத்தை இயக்குகிறார்கள் என்பதால் அதிக கனக்ஸன்களை தாங்க முடியாமல் தளம் தள்ளாடி அடிக்கடி நின்று போய் விடுகிறதாம்.

    இதில் அவர்கள் சொல்லும் மென்பொருளை பதிவிறக்கி, அது பல மனி நேரமாகிறதாம், இனைய இனைப்பு 3 கேபி என்ற அளவிலே ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுவதால் யாரும் இதனை முழுதும் பார்த்தவரில்லையாம்.

    விரைவில் சரி செய்வார்கள். அதற்குள் கூகிள் எர்த்திற்கு போட்டி என்பதெல்லாம் ரெம்ப ஓவர்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    37,887
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    கொடுக்கப்பட்ட அந்த சுட்டியை சொடுக்கினால் அதன் பக்கம் வரமறுக்கிறது.

    இதை செய்தியாக படித்தபோழுதுகூட அந்த சுட்டியை தட்டினேன் வேலைசெய்யவில்லை.

    தகவல் அற்புதம் அறிஞரே. நன்றிகள்
    சுட்டி எனக்கு வேலை செய்கிறதே...
    மற்றவர்களுக்கு எப்படி....

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    59
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    20,272
    Downloads
    10
    Uploads
    0
    எனக்கும் வேலை செய்யவில்லை அறிஞரே...! :(

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    37,887
    Downloads
    15
    Uploads
    4
    bhuvan ISRO எனத் தேடிப்பாருங்களேன்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    120,544
    Downloads
    4
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி அறிஞரே..

    ( எனக்கும் தளம் திறக்கவில்லை..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,763
    Post Thanks / Like
    iCash Credits
    45,665
    Downloads
    51
    Uploads
    112
    தாமதமான பதிலுக்கு மண்ணிக்கவும் அறிஞரே.

    தளம் திறக்கிறது அநேக முயற்சிகளுக்கு பிறகு, ஆனால் அங்கே ரிஜிஸ்டர் ஆன பின் தான் அந்த மென்பொருள் பெற முடியும் போல தெரிகிறது. அடுத்தடுத்த பக்கங்களை சொடுக்கினால் தளம் தோன்ற மறுக்கிறது.

    அவர்கள் தள முகப்பு பக்கத்திலே இதனை தெளிவாக ("Site is heavily loaded with users. Please bear with us for the delay. View in IE 6.0 or above only.") சொல்லியிருக்கிறார்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    13,119
    Downloads
    60
    Uploads
    24
    இப்போது வேகமாக தரவு இறங்குகின்றது... பதிவிறக்கிகொண்டு இருக்கின்றேன் முடிந்த்தும் இன் பின்னூட்டம்.

  10. #10
    புதியவர்
    Join Date
    12 Mar 2009
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    6,831
    Downloads
    0
    Uploads
    0
    புவன் பதிவிறக்கம் செய்துவிட்டேன்.ஆனால் Install செய்தபின் இயங்கவில்லை.எவ்வாறு Install செய்வது என்பதைக் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,763
    Post Thanks / Like
    iCash Credits
    45,665
    Downloads
    51
    Uploads
    112
    இது பற்றி கசப்பான அனுபவம்(ஏமாற்றம்) இருந்ததால் பதில் பதிக்கவில்லை, இருந்தாலும் தங்கமனிக்காக இதோ பதில்.

    புவன் பதிவிறக்கம் செய்யும் பைல் ஒரு ப்ளக் இன் உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கும், பின் நீங்கள் இண்டர்நெட் உலாவியில் சென்று அந்த பக்கம் சென்றால் (பிளக் இன் பதிக்க சொல்லும் பக்கமே) அங்கே உள் நுழைய ஒரு கடவுட்சொல் வேண்டி பதிக்க வேண்டியிருக்கும். பின் நீங்கள் வழிமுறைப்படி சென்றால் புவன் பிரவுசரிலே காட்சி தரும்.

    ஆஹா ஓஹோ என்று நினைத்து சென்றால் ஏமாந்து போவீர்கள். இதனை கூகிள் எர்த்திற்கு போட்டி என்று சொன்னவர்களை கண்டால் எரிச்சல் தான் வருகிறது.

    இன்னும் இஸ்ரோவிற்கு பயிற்சி தேவை போலிருக்கிறது.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    37,887
    Downloads
    15
    Uploads
    4
    கசப்பான அனுபவங்களை பட்டியலிட்டு..புவனை கையாளுபவர்களுக்கு அனுப்பலாமே...

    என்ன பண்ணுறது.. எல்லாம் நம் ஆட்கள்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •