Results 1 to 5 of 5

Thread: சுஜாதா வாரம் -1 ....சுஜாதாவின் கவிதை ஒன்று

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் umakarthick's Avatar
    Join Date
    04 May 2007
    Location
    chennai
    Posts
    372
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    57
    Uploads
    0

    சுஜாதா வாரம் -1 ....சுஜாதாவின் கவிதை ஒன்று

    சுஜாதா அவர்களின் உடல் (உடன்) கவிதை இதுவரை படிக்காதவர்களுக்கு இந்தப் பதிவு. சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, அன்னார் எழுதிய கவிதை இது.

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
    சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
    காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
    கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
    மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
    மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
    கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
    கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
    ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
    ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
    திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்
    தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
    வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
    வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
    குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
    கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
    சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
    சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பகிர்வுக்கு நன்றி உமாகார்த்திக்..

    இந்த எள்ளல், சமூகப்பார்வை - சுஜாதா முத்திரை.

    1) நைலான் ரதங்கள் எனத் தனித்திரியாய் சுஜாதா கவிதைகள் இலக்கியங்கள் பகுதியில் இருக்கிறது . இக்கவிதையும்.

    2) படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாற்றலாமே?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    நல்ல பகிர்வுக்கு நன்றி ...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    சுஜாதா ஒரு ஜீனியஸ் தாம்பா.. என்ன அருமையான கண்ணோட்டம் அவருடையது...பகிர்வுக்கு நன்றி உமாகார்த்திக்....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் umakarthick's Avatar
    Join Date
    04 May 2007
    Location
    chennai
    Posts
    372
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post
    சுஜாதா ஒரு ஜீனியஸ் தாம்பா.. என்ன அருமையான கண்ணோட்டம் அவருடையது...பகிர்வுக்கு நன்றி உமாகார்த்திக்....
    யூசர் நேம் சரியா அமையல நான் பையன் தான்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •