Results 1 to 6 of 6

Thread: குழந்தைகளுக்கான ஐந்து தளங்கள்.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0

    குழந்தைகளுக்கான ஐந்து தளங்கள்.

    குழந்தைகளுக்கான ஐந்து தளங்கள்

    ஜூலை 27,2009

    கம்ப்யூட்டர்கள் இன்று நம் வாழ்வின் ஓர் அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது. கம்ப்யூட்டரின் அடிப்படையையும் அதனை இயக்குவதனையும் தெரிந்து கொள்வது இன்றியமையாத ஓர் திறனாக அமைந்துவிட்டது.

    எனவே குழந்தைகள் கற்கத் தொடங்கியவுடன் கம்ப்யூட்டர் இயக்கத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வது எப்போதும் முறையோடு தொடங்கிச் சீராகச் செல்லவேண்டும். அப்போதுதான் ஆழமாக எதனையும் புரிந்து கற்றுக் கொள்ள முடியும்.

    இங்கு குழந்தைகள் அவசியம் கற்றுக் கொள்ளக் கிடைக்கும் இலவச கம்ப்யூட்டர் புரோகிராம்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.


    Tux of Math Command: அனைத்து அறிவியலுக்கும் கணிதமே அடிப்படை என்று சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு அவர்கள் கற்றலின் தொடக்கத்திலேயே கணிதத்தைக் கற்றுக் கொடுத்தால் கணிதத்தின் அடிப்படை குறித்த நல்ல அறிவு பெறுவதுடன் தொடர்ந்து அறிவியலின் அனைத்து பரிமாணங்களையும் கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும்.

    இந்த புரோகிராம் அதனைத் தருகிறது. சில விளையாட்டுக்கள் மூலம் முதலில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலை இது கற்றுக் கொடுக்கும் வழி சிறப்பாக உள்ளது. எடுத்துக் காட்டாக ஓர் எரிநட்சத்திரம் பூமியை நோக்கி வருகிறது. அதில் கணக்கு ஒன்று காட்டப்படுகிறது. கீழே ஐஸ் கட்டி வீடும் அதனுள் பெங்குவின் பறவைகளும் உள்ளன.

    குழந்தை தான் பெங்குவின் பறவை. எரி நட்சத்திரம் பூமியை நெருங்கும் முன் இந்த பெங்குவின் அதனை அழிக்க வேண்டும். எப்படி அழிக்க முடியும்? அந்த எரிநட்சத்திரத்தில் உள்ள கணக்கிற்கு விடை தர வேண்டும்.


    இந்த வகையில் கணிதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எந்தக் குழந்தைக்குத்தான் இது மகிழ்ச்சியைத் தராது! அதே சமயத்தில் கணிதத்திலும் திறன் வளரும்! இந்த புரோகிராமினைப் பெற

    http://tux4kids.alioth.debian.org/tuxmath/download.php என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.


    Crayon Physics: கணிதத்தை அடுத்து அறிவியலுக்குச் செல்லலாம். கிரேயான் பிசிக்ஸ் என்ற பிரபலமான விளையாட்டிற்கான புரோகிராம் அறிவியல் கற்றுக் கொள்வதில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தருகிறது.

    இந்த விளையாட்டில் ஒரு பந்தினை நட்சத்திரக் குறியிட்ட இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதனைக் கொண்டு செல்ல பல வழிகள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் அறிவியலின் அடிப்படைகளைக் கற்றுத் தருகின்றன.

    இயற்பியல் கோட்பாடுகளின் எளிய விதிகளை விளையாட்டாகக் கற்றுக் கொடுக்கின்றன. இந்த விளையாட்டு ஒரு இரண்டு பரிமாணக் காட்சியில் காட்டப்படுகிறது. பிசிக்ஸ் பிரிவின் gravity, momentum, inertia, mass, friction, kinetic and potential energy எனப் பல கோட்பாடுகள் விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது.

    எந்த லெவலில் குழந்தைகள் விளையாடலாம் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். நன்கு கற்று அறிந்தவர்கள் வெறும் விளையாட்டாகவும் இதனை எடுத்துக் கொண்டு பொழுதைப் போக்கவும் செய்திடலாம்.

    ஆனால் விளையாடுகையில் சிந்திக்கும் திறனை நன்கு வளர்க்கும் விதத்தில் இந்த கேம் வடிவமைகக்ப்பட்டுள்ளது.

    இந்த கேம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே விளையாட முடியும். இதனைப் பெற http://crayonphysics.en.softonic.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


    3. Kiran’s Typing Tutor: கம்ப்யூட்டரை எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டுமானால் அதன் கீ போர்டை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஆங்கில டைப்பிங் திறன் கொண்டிருக்க வேண்டும்.

    கிரன் குமார் என்பவர் தயாரித்த Kiran’s Typing Tutor என்ற புரோகிராம் இதற்கு உதவுகிறது. டைப்பிங் கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ள புரோகிராம் இது. இதனை எளிதாக டவுண்லோட் செய்திடும் வகையில் சிறிய அளவில் இருக்கிறது. விண்டோஸ் சிஸ்டத்தில் எந்த பதிப்பிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

    www.kiranreddys.com என்ற முகவரி உள்ள தளத்தில் கிடைக்கிறது. தொடக்கம் முதல் டைப்பிங் செய்வதனை அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுக்கிறது. எந்த வயதுக் காரர்களும் இதனைப் பயன்படுத்தி டைப்பிங் கற்றுக் கொள்ளலாம்.

    ஏற்கனவே ஓரளவிற்கு டைப்பிங் கற்றுக் கொண்டவர்கள் இதில் உள்ள உயர்நிலைப் பாடங்களைக் கற்று தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.


    இந்த புரோகிராம் தரும் இன்டர்பேஸ் வண்ணமயமாக இருப்பதால் குழந்தைகள் இதன் மூலம் பழக விரும்புவார்கள். விரல்களை எங்கு வைத்து எப்படி அழுத்த வேண்டும் என்பது திரையில் படமாகவே காட்டப்படுவது குழந்தைகளை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.

    பழகப் பழக உங்கள் டைப்பிங் திறன் எவ்வளவு துல்லியமானது, நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களால் டைப் செய்திட முடிகிறது என்றெல்லாம் காட்டப்படுகிறது.

    உங்களுடைய டைப்பிங் திறன் முன்னேற்றம் ஒரு வரைபடமாகக் காட்டப்படுகையில் எந்தக் குழந்தைக்கும் அது ஒரு நல்ல தூண்டுகோலாகத்தானே இருக்கும்.

    மேலும் இதன் மூலம் ஒரு குழந்தை தன் பிழைகளை உணர்ந்து திருத்திக் கொள்ளவும் முடியும். இந்த புரோகிராமினை இறக்கி இன்ஸ்டால் செய்து உங்கள் குழந்தை டைப்பிங் கற்றுக் கொள்வதனைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.


    4. Lego Digital Designer: இது கிட்டத்தட்ட ஒரு சாப்ட்வேர் எனலாம். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பழகும் சாப்ட்வேர் தொகுப்பாக இது நமக்குக் கிடைக்கிறது. Lego Digital Designer என்பது இதன் பெயர்.

    வெகுநாட்களாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருபவர்கள் Lego bricks என்னும் விளையாட்டினை முன்பு விளையாடியிருப்பார்கள். அந்த விளையாட்டு இப்போது மேலும் டிஜிட்டலாகி டிஜிட்டல் செங்கற்களோடு வந்திருக்கிறது.

    பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் செங்கற்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, உங்கள் புத்திக் கூர்மையின் மூலம் தரப்பட்டுள்ள வெவ்வேறு வடிவங்களை உருவாக்க வேண்டும்.


    அடிப்படையில் இது ஒரு CAD சாப்ட்வேர் போலத்தான். ஆனால் குழந்தைகள் இதில் விளையாடுகையில் மிகவும் குதூகலத்துடன் சவால்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் விளையாடுவதனைப் பார்க்கலாம்.

    அவர்கள் தங்கள் கற்பனைக் குதிரையத் தட்டிவிட்டு தாங்கள் விரும்பும் வகையில் வடிவங்களை அமைக்கலாம். இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட 28 எம்பி அளவிலான பைல் http://ldd.lego.com/download என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கென தனித் தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.


    5.Scratch: இந்த புரோகிராம் எட்டு அல்லது பத்து வயதுக்கு மேலான சிறுவர் சிறுமியர்களுக்கானது. இது ஒரு புரோகிராமிங் மொழி. விசுவல் புரோகிராமிங் லாங்குவேஜ் வழியாக குழந்தைகளுக்கு புரோகிராமிங் குறித்த அடிப்படைகளைக் கற்றுத் தருகிறது.

    இதனைப் படித்துத் தெரிந்து கொண்ட பின்னர் சிறுவர்கள் தாங்களாகவே கம்ப்யூட்டருக்கான கேம்ஸ்களை உருவாக்க முடியும். வீடியோ மற்றும் மியூசிக் புரோகிராம்களையும் வடிவமைக்க முடியும்.

    இது ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்குவதைப் போல இயங்குகிறது. வண்ணங்களில் இயங்கும் இதன் தன்மை நம்மை ஈர்க்கிறது. புரோகிராமிங்கிற்குத் தேவையான அனைத்தும் பல்வேறு பேனல்களில் தரப்படுகிறது.

    அவற்றிலிருந்து தேவையானதை எடுத்துப் போட்டு நாம் விரும்புவதனை உருவாக்கலாம். புரோகிராமிங் மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு உங்கள் குழந்தைகளுக்குச் சரியான தொடக்கத்தினை இந்த புரோகிராம் கொடுக்கிறது.

    இந்த புரோகிராமும் விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களுக்கெனத் தரப்படுகிறது. இதனை பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://scratch.mit.edu/

    நன்றி.தினமலர்.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மிக உபயோகமான தகவல். மிக்க நன்றி..
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    புதியவர்
    Join Date
    24 Sep 2009
    Location
    bangalore
    Posts
    19
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    3
    Uploads
    0

    நன்றி நூர் அவர்களே!

    உங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி. எனக்கு மிக உபயோகமான தகவல்கள்....

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    நல்ல தகவல்.பகிர்தலுக்கு நன்றி நூர்

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2011
    Location
    லண்டன்
    Posts
    36
    Post Thanks / Like
    iCash Credits
    12,391
    Downloads
    12
    Uploads
    0
    பயனுள்ள தகவல்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பயனுள்ள தகவல்,
    பகிர்தலுக்கு நன்றி நூர்...............
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •