Page 14 of 22 FirstFirst ... 4 10 11 12 13 14 15 16 17 18 ... LastLast
Results 157 to 168 of 262

Thread: என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க

                  
   
   
  1. #157
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சனிக் கிரகம் ஒரு வாயுக் கோளமாகும். வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் ஆகிய நான்கு கோள்களும் வாயுக் கோளங்களே. இம்மாதிரி ராட்சச வாயுக் கோள்களை ஜோவியன் பிளானட்ஸ் (அதாவது ஜூபிடரைப் போன்ற கோள்கள்) என அழைக்கிறார்கள். எப்படு பூமி மாதிரி அளவும், திடமான மேற்பரப்பும், வளிமண்டலமும் கொண்ட கோள்களை எர்த் லைக் பிளானட்ஸ் என அழைக்கிறார்களோ அப்படு ஜோவியன் பிளானட் என்றால் வியாழனைப் போன்ற பெரிய அள்வும், வாயுக் கோளமாகவும் இருக்கும் கோள் என்று அர்த்தம்.

    சனிக்கிரகம் உயரம் குறைந்து இடைபெருத்த லொள்ளுவாத்தியார் மாதிரியான உருவம் கொண்டது ஆகும். அதாவது வடக்கிலிருந்து தெற்காக இது 54,364 கிலோமீட்டரும், கிழக்கிலிருந்து மேற்காக இது 60,268 கிலோமீட்டரும் ஆரம் கொண்டது.

    இந்த வடிவத்துக்குக் காரணம் மைய விலக்கு விசை / மற்றும் குறைந்த சனியீர்ப்பு விசை ஆகியவை ஆகும். சனிக்கிரகம் பூமியை விட 95 மடங்கு எடையில் பெரிசு..

    ஆனால் அளவிலோ 764 மடங்கு பெருசு...(9.5 மடங்கு பெரிய விட்டம் கொண்டது சனிக்கிரகம்)

    பக்கத்தில பக்கத்தில வச்சா எப்படி இருக்கும் தெரியுமா?




    சனிக்கிரகத்தின் உள் அமைப்பைப் பத்தி தெளிவா தெரியாட்டியும், ஒரு அனுமானம் உண்டு...

    அதனுடைய் உட்புறமும் நம்ம வியாழன் மாதிரி ஒரு சின்ன பாறையாய் இறுகிய உட்கருவும், அதைச் சுற்றி ஹைட்ரஜனும் ஹீலியமும் அடர்ந்த திரவ வடிவிலும்(உலோக ஹைட்ரஜன்) அதன் மேல் திரவ வடிவலான ஹைட்ரஜனும் ஹீலியமும், அதன் மேல்புறம் சுமார் 1000 கிலோமீட்டர் உயரத்துக்கு வாயு வடிவலான ஹைட்ரஜனும் இருக்கறதா நினைக்கிறாங்க.

    பூமிக்கு வெப்பம் எங்கிருந்து கிடைக்குது அப்படின்னா சூரியனில் இருந்துன்னு சொல்வோம். ஏற்கனவே வியாழனில் பார்த்தோம் வியாழன் எவ்வளவு வெப்பத்தை சூரியனிடம் இருந்து வாங்குதோ அவ்வளவு உள்புறமிருந்தும் சூடாகுது அப்படின்னு. அதாவது வியாழக்கிரகம் வருஷத்துக்கு 2 செ.மீ சுருங்குது அப்படின்னு படிச்சொம்.

    சனிக்கிரகம் சூரியனில் இருந்து பெறுகின்ற வெப்பத்தை விட 2.5 மடங்கு வெப்பத்தை வெளிய விடுது.

    இதுக்குக் காரணம் ஒண்ணு குருவில் இருக்கிர மாதிரி கெல்வின் ஹெச்மோட்ஸ் நிகழ்வு அப்படிங்கற நிகழ்வு.. அதவாது ஈர்ப்பு விசையால் கிரகங்கள் மெல்ல சுருங்க ஆரம்பிப்பது.

    சனிக்கிரகத்தில் கூடுதலாக எடை அதிகமுள்ள ஹீலியம் எடை குறைவான ஹைட்ரஜனுக்குள் மழைத்துளி மாதிரி இறங்குவதால் இன்னும் கொஞ்சம் வெப்பம் அதிகமா உண்டாகுது.

    சனிக்கிரகம் தன்னைத் தானே சுத்திக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 10 மணி 34 நிமிஷம். ஏற்கனவே அஸ்ட்ராய்ட் பெல்ட்டைப் பற்றி பார்த்தப்ப சனிக்கிரகம் சூரியனில் இருந்து சராசரியாக 1.400,000,000 கிமீதூரத்தில் இருக்குன்னு பார்த்தோம். இது சூரியனைச் சுற்றிவர 10759 நாட்கள் எடுத்துக்குது. (29-1/2 வருடம்)

    நம்ம சந்திரன் நம்மைச் சுற்றி வருதே 27 நாட்களுக்கு ஒருமுறை.. அப்ப சந்திரன், சூரியனுடன் ஒப்பிடும் பொழுது சூரியனுக்கும் நமக்கும் ஒரே நேர்கோட்டில் தெரிய ஆகும் இடைவெளி எவ்வள்வு ? 29-1/2 நாட்கள்.. இதை சைனோடிக் பீரியட் அப்படின்னு சொல்வாங்க.

    இதே மாதிரி புதன் 116 நாட்களும், வெள்ளி 584 நாட்களும், செவ்வாய் 780 நாட்களும், குரு 399 நாட்களும், சனி 378 நாட்களும் இது மாதிரி தெரிய எடுத்துக்கும். காரணம் இது பூமி சூரியனைச் சுற்றுவதற்கும் மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்கும் உள்ள கால வித்தியாசங்கள்..

    சனிகிரகத்திற்கும் காந்தப் புலம் உண்டு. ஆனால் அது பூமியின் காந்தப் புலத்தை விட வலிமை குறைந்தது. குருவில் உண்டாகிற மாதிரியே மெடாலிக் ஹைட்ரஜன் திரவ ஹைட்ரஜன் உராய்வினால் இந்த காந்தப் புலம் தோன்றுது.

    என்னங்க ஒரே வறட்சியா இருக்கேன்னு பார்க்கறீங்களா? என்ன் செய்யறது.. அங்கதான் தண்ணியே இல்லையே...

    கொஞ்சம் கலர் ஃபுல்லா மாத்தட்டுமா? சனியின் படங்களைப் உத்துப் பாருங்க.. நாம படம் போடும் போது அவுட்லைன் போடற மாதிரி நீலமா ஒரு அவுட் லைன் தெரியும் பாருங்க... நீலமா தெரியுதா? சனிக் கிரகம் நாம பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இப்படிக் கருநீலமாத்தாங்க தெரியும். பெரிதாக்கிப் பார்க்கும் போதுதான் உள்ள இருக்கிற அந்த காவி- ஆரஞ்சு கலர் கொஞ்சமா தெரியும்,..

    குருவில் பார்த்தமே அதே மாதிரி சனியிலும் பட்டைகள் உண்டு.. ஆனால் அதெல்லாம் ரொம்ப லைட்டா இருக்கும்... அதை அப்புறமா பாக்கலாம்...
    Last edited by தாமரை; 05-08-2010 at 12:04 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #158
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சனி என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வர்ரது வளையங்கள் தான். வளையம்னாலே மோதிரமும், மோதிரம் என்றாலே கல்யாணமும், கல்யாணம்னாலே சனியும் நினைவுக்கு வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம்தான்,

    சனியின் வளையங்களை முதலில் கவனிச்சவர் வேற யாரா இருக்கும்.. கலிலியோவைத் தவிர.. அவர் என்ன சொன்னாருன்னா, சனிக் கிரகம் ஒண்ணில்ல.. மூணு கிரகம் சேர்ந்திருக்கும் போல.. எல்லாம் ரொம்ப பக்கம் பக்கமா இருக்குது போல அப்படின்னார்...

    1655 ல தான் கிறிஸ்டன் ஹைகஸ் அப்படிங்கறவர் அது வளையம்னு கண்டு பிடிச்சார்.. மெலிசா, தட்டையா ஓட்டைபோட்ட அப்பளம் மாதிரி சனியைச் சுற்றி இருக்கு. அது நீள் வட்ட வடிவமானது அப்படின்னு எல்லாம் சொன்னார்.

    1800களின் மையப்பகுதியில்தான் அந்த வளையங்கள் சின்னச் சின்ன துகள்களினால் ஆனது.. சாதா அப்பளமில்ல.. நொறுங்கிப் போன அப்பளம் அப்படின்னு கண்டுபிடிச்சாங்க.




    சனிக் கிரகத்தின் இந்த வளைய்ங்களை பயனியர் 11 தான் 1979 ல் முதன் முதலா படம்புடிச்சது. அதுக்கு முன்னால பூமியில் இருந்து எடுக்கப் பட்ட படங்களை விட இந்தப் படங்கள் தெளிவாகவே இருந்தது.. அதுக்குப் பின்னால வாயேஜர்1, வாயேஜர் 2 ஆகியவை 1980, 81 லும் காசினி 2004 லும் சனிக்கிரகத்தை படமெடுத்தன. காசினி சனியைச் சுத்தி வருது,,, இன்னும் சுத்துதான்னு தேடணும்.

    சனியின் வளையங்களில் மொத்தம் 7 பெரிய வளையங்கள் இருக்கறதா வரிசைப் படுத்தி இருக்காங்க.. அவை சனியில் இருந்து இருக்கும் வரிசையில் பார்த்தால்

    D, C, B, A, F, G, E

    அதாவது D என்பது வெளிப்புறத்தில் இருப்பது E என்பது உட்புற வளையம்..

    A, B, C மூணும் அகலமா இருக்கும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வளையங்கள் இவைதான்.

    அதுக்கப்புறம் நுணுக்கமாப் பாக்குறப்பதான் C இரண்டு பகுதியா இருக்கறதும் A நாலு பகுதியா இருக்கறதும் மெதுவா மெதுவா புரிஞ்சது..

    இன்னும் வரும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #159
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இந்த வளையங்கள் எல்லாம் என்ன என்று சொல்லவில்லையே

  4. #160
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    [media]http://upload.wikimedia.org/wikipedia/commons/9/96/Saturn_eclipse_exaggerated.jpg[/media]

    [media]http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8a/Unraveling_Saturn%27s_Rings.jpg[/media]


    வளையங்கள் குரு, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களுகும் உண்டு. இருந்தாலும் சனிகிரகத்திற்கு உள்ளது போல அழகான அழுத்தமான வளையங்கள் வேறு எந்த கிரகத்துக்கும் இல்லை..

    ஆமாம் அந்த வளையங்களில் அப்படி என்னதான் இருக்கு?

    இந்த வளையங்கள் சராசரியாக 20 மீட்டர் மட்டுமே தடிமன் உள்ளவை. இதில் 93 சதவிகிதம் பனிப்பறைகளும் 7 சதவிகிதம் கரிமமும் வேறு சில பாறைத் துகள்களும் உண்டு.

    இப்போ சூரிய மண்டலத்தை கண் முன் கொண்டு வந்து பாருங்க... கோள்கள் சூரிய மண்டலத்தை சுற்றி வரும் பாதையைப் பார்த்தால்...

    அதுவும் சனிக் கிரகத்தை சுற்றி உள்ள வளையம் போல ஒரு தட்டு வடுவில்தான் தெரியும்.. கொஞ்சம் மேல போய் நம்ம பால் வீதியை எடுத்துக்குங்க.. அதுவும் ஒரு மிகப் பெரிய கருந்துளையை சுற்றி வரும் வட்டு வடிவில்தான் இருக்கு,,

    வட்டு வடிவம் என்பது கிரகங்கள் அமைவதில் ஒரு மைல்கல்லாகும்.. பூமிக்கும் ஒரு காலத்தில் இதே போல் வளையம் இருந்து அதில் இரண்டு சந்திரன்கள் இருந்து அவைகளும் கூடி ஒரே சந்திரன் ஆனதை முன்னால சந்திரன் உண்டான தியரியைச் சொன்னப்ப சொல்லி இருக்கேன். அதோட சிமுலேசன் படம்கூட இங்க இருக்கு பாருங்க..

    http://www.tamilmantram.com/vb/showt...479#post453479

    ஒரு கிரகம் உண்டாகும் போது அது கோளவடிவம் பெரும்பொழுது இதுமாதிரி தூசிகள் வட்டு வடிவத்தை கொண்டு அந்த கிரகத்தைச் சுற்றி வருவதும்.. மெல்ல மெல்ல கிரகத்தின் ஈர்ப்பு விசையால் அவை கிரகதில் விழுந்து கிரகம் பெரிதாவதும் கிரகத்தின் வளர்ச்சிப் பாதையில் உள்ள பகுதிதான்.

    இப்போ மறுபடி சனியின் வளையத்திற்கு வருவோம். இப்போ நாம பாக்கிறமே அதை முக்கிய வளையம் அப்படின்னு சொல்லலாம். ஏன்னா, 2009 அக்டோபர்ல இன்னொரு பெரிய வளையத்தை கண்டு பிடிச்சிருக்காங்க. சனியின் இந்தப் பெரிய வளையம் ரொம்ப மெல்லியது, அதே சமயம் மிக மிக பெரியது... அது முழுக்க முழுக்க பனித் துகள்கள்தான்.

    முக்கிய வளையம் ஏழு பெரும் பகுதிகளை கொண்டு இருப்பதாக பார்த்தோம்..

    முதல்ல A -வளையத்தைப் பார்ப்போம்.

    மிகவும் பிரகாசமான A,B,C வளையங்களில் A தான் மிக வெளிப்புறம் உள்ளது. இதன் உட்பகுது காஸினி எல்லையில் அட்லஸ் என்னும் சின்ன சந்திரன் இருக்கு...

    A வளையத்தின் வெளிப்புற எல்லையில் எபிமேதியூஸ், ஜேனஸ் என்னும் இரண்டு சந்திரன்கள் உள்ளன..

    A வளையத்தின் சுற்று வேகமும், இந்தச் சந்திரன்களின் சுற்றுவேகமும் 7:6 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அதாவது வளையம் சனியை 7 முறை சுற்றும் நேரத்தில் இந்தச் சந்திரன்கள் 6 முறை சுற்றி வரும். இதனால் நம்ம பால்வீதியில் எப்படி ஸ்பைரல் அமைப்பு இருக்கோ அதே மாதிரி வளையத்திலும் ஸ்பைரல் அலைகள் உண்டாகுது..

    இன்னும் வரும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #161
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எபிமேதியூஸ் சந்திரனில் தண்ணீர் இருப்பதாக இன்று ஒரு ஆர்டிகள் வந்துள்ளதே பார்த்தீர்களா? மேல் விப*ர*ங்க*ளுக்கு

    http://news.rediff.com/report/2010/f...ntain-life.htm

  6. #162
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    குரு மற்றும் சனி கிரகங்களின் சந்திரன்களில் தண்ணீர் இருப்பதை முன்பே சொல்லி இருக்கறனே...முழுசா படிக்கலையோ?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #163
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அதுக்கான நேரம் வரும் போது சொல்லலாம் என்று இருந்தேன்..

    http://www.space.com/common/media/vi...P_090622_Mimas

    காசினி எடுத்த படத்தைப் பாருங்க



    என்சிலாடஸ், டைட்டன் போன்ற கிரகக்ங்களில் கிய்சர்கள் இருப்பதை கூட படம் எடுத்திருக்கு...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #164
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சனியின் மிகப் பெரிய வளையம் கொஞ்ச நாளைக்கு முன்னால் கண்டு பிடிச்சாங்களே அது எவ்வளவு பெரிசு பாருங்க



    இதனோட உள்வளைவு சனிக்கிரகத்தில் இருந்து முப்பத்தி ஏழு இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பிக்குது. அங்கிருந்து 1 கோடியே 20 இல்ட்சம் மைல் அகலம் கொண்ட இராஜபாட்டை இது.. (இந்த ஏரியாவில 100 கோடி பூமிகளை வைக்கலாம்..)

    இது சகார பாலைவன மக்கள் தொகையை விட மிக குறைந்த நெருக்கம் கொண்ட பகுதி.. 1கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடினா 10 அல்லது 15 துகள்கள் இருக்கலாம்..

    இது மற்ற வளையங்கள் போல இல்லாமல் வேறு கோணத்தில இருப்பதையும் கவனிக்கலாம்...

    இதைப் பத்தியும் எழுத வேண்டி இருக்கு.. இன்னும் நிறைய இருக்கு...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #165
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Oct 2009
    Posts
    190
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    1
    Uploads
    0
    wow. என்னால நம்பவே முடியலை. நிங்க சுஜாதா மாதிரி விஞ்ஞானி அண்ட் ரைட்டரா? எனக்கு ரொம்ப ஆர்வம் ஆயிடுச்சு உங்க எழுத்த படைச்சுட்டு

  10. #166
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இந்த புதிய வளையம் இவ்வளவு தூரம் தள்ளி இருப்பதால் இது ஆஸ்டிராய்ட் பெல்ட் மாதிரியும் இருக்கலாமே

  11. #167
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அருமையான திரி.

    இப்போ தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

    சுவாரசியமான விசயங்களை எளிமையாக தொகுத்து தருவதற்காக தாமரை அண்ணாவைப் பாராட்டியே ஆகவேண்டும்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #168
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post
    அருமையான திரி.

    இப்போ தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

    சுவாரசியமான விசயங்களை எளிமையாக தொகுத்து தருவதற்காக தாமரை அண்ணாவைப் பாராட்டியே ஆகவேண்டும்.
    இப்போவாவது உங்களுக்கு இங்கே வரவேண்டும் என்று தோன்றியதே, அதுவே நல்லது. இன்னும் நம்ம அறிஞர் இந்தத் திரி பக்கமே வரவில்லையே.

Page 14 of 22 FirstFirst ... 4 10 11 12 13 14 15 16 17 18 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •