Page 22 of 22 FirstFirst ... 12 18 19 20 21 22
Results 253 to 262 of 262

Thread: என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க

                  
   
   
 1. #253
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
  Join Date
  25 Apr 2009
  Location
  மதுரை, தமிழ்நாடு
  Posts
  1,833
  Post Thanks / Like
  iCash Credits
  21,698
  Downloads
  25
  Uploads
  0

  Unhappy காலை வரை கண்ணில் படவில்லை .....

  அட இரவு பதினோரு மணிவரை வெட்கம் இல்லாமல் உலவி வந்தவளுக்கு அப்படி என்ன வெட்கமோ .... காலை வரை கண்ணில் படவில்லை ..... மேகராஜனுடன் அப்படி என்ன லீலையோ ..... இரவு முழுதும் அரை தூக்கத்தில் வானத்தை பார்த்து கிடந்ததுதான் மிச்சம் ....


  ந.இரவீந்திரன்
  வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

 2. #254
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,828
  Post Thanks / Like
  iCash Credits
  32,562
  Downloads
  183
  Uploads
  12
  நிலவை விட ஒளிமயமான வால் நட்சத்திரம்..

  அடுத்த ஆண்டு டிசம்பர் மாதக் கடைசி வாக்கில் வானில் ராட்சத வால் நட்சத்திரம் தெரியப் போவதாக வானவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இருட்டிய பின்னர் மேற்கு வானில் இந்த வால் நட்சத்திரம் iமிகுந்த பிரகாசத்துடன் தெரியும் என்கிறார்கள். இதன் ஒளி பௌர்ணமி நிலவை விட 10 மடங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது பகலிலும் மங்கலாகத் தெரியும் என்று கூறப்படுகிறது.

  இந்த வால நட்சத்திரம் இப்போது மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் உள்ள்து. .ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக் ஆகிய இருவரும் செப்டம்பர் மாதம் இதை சக்திமிக்க தொலைனோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

  புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ISON என்ற பெயரும் உண்டு. மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே இது சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.

  இது மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது அடுத்த ஆண்டு நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது அதற்கும் சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே -- 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .

  அடுத்த ஆண்டு தலைகாட்ட இருக்கும் வால் நட்சத்திரம் பற்றி வால நட்சத்திர நிபுணர் ஹான் போர்ட்டில் கூறுகையில் ஒரு வேளை இது 1680 ஆம் ஆண்டில் தலைகாட்டிய அதே வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.

  வேறு சில நிபுணர்கள் அடுத்த ஆண்டு வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன

  கண்டுபிடிக்கப்பட்ட நாள் : 21 September 2012
  கண்டு பிடித்தவர் : விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக்


  இது ஊர்ட் கிளௌட் எனப்படும் மேகக்கூட்டத்தில் இருந்து வரும் ஒன்றாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. (இதுக்குத்தான் நான் 2012 நிகழ்ச்சி செய்யலைன்னு சொன்னேன் ஆதி.)

  இது 2013, செப்டெம்பர் 28 ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில் ( 18 இலட்சம் கிலோமீட்டர் ) செல்லும். இது சூரியனின் மையத்திலிருந்து. சூரியனின் பரப்பிலிருந்து எனப்பார்த்தால் 11 இலட்சம் கிலோமீட்டர்தான். டிசம்பர் 26, 2013 அன்று பூமியிலிருந்து ஆற்கோடியே முப்பது இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் செல்லும் என்று கணித்திருக்கிறார்கள். அடுத்த வருடம் அக்டோபருக்கு மேல் இது வெறும் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

  சில விஷயங்கள் இன்னும் தெளிவாகவில்லை. 1, இதன் நிறை, அளவு 2. இதன் சுற்றுப்பாதை செப்டம்பரிலிருந்து இன்று வரை இதன் பாதையை கவனித்ததால் யூகித்தது. 3. இது சூரியனுக்கு மிக அருகில் சென்று பின்பு திரும்ப வரும் பாதையில்தான் பூமிக்கு அருகில் வரும். சூரியனின் ஈர்ப்பு விசை உண்டாக்கும் பாதிப்பு என்ன என்பது தெரியாது, இதுவும் ஷூ மேக்கர் போல உடைந்து போய் சூரியனில் விழுந்து விடலாம்.
  இதைப் பற்றித் தெளிவாக அறிந்து பின்னர் பகிர்கிறேன்
  Attached Thumbnails Attached Thumbnails Click image for larger version. 

Name:	Orbit_comet_2012_S1_ISON.jpg 
Views:	46 
Size:	19.3 KB 
ID:	934  
  Last edited by தாமரை; 26-12-2012 at 08:13 AM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 3. #255
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
  Join Date
  04 Sep 2009
  Posts
  1,295
  Post Thanks / Like
  iCash Credits
  29,869
  Downloads
  0
  Uploads
  0
  அரிய செய்தியை அறிவித்துள்ளீர்கள் . பாராட்டு . அதைப் பார்க்க நான் வாழ்வேன் என நம்புகிறேன் . மேற்கொண்டு தகவல் தாருங்கள் .

 4. #256
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,828
  Post Thanks / Like
  iCash Credits
  32,562
  Downloads
  183
  Uploads
  12
  இந்த வால்நட்சத்திரத்தின் பாதையை இங்கே முப்பரிமாணத்தில் பல கோணங்களில் பாருங்களேன்..

  http://ssd.jpl.nasa.gov/sbdb.cgi?sst...og=0;cad=0#orb
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 5. #257
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,826
  Post Thanks / Like
  iCash Credits
  80,024
  Downloads
  57
  Uploads
  0
  அண்ணா, நிலவைவிட 10 மடங்கு பிரகாசம் என்றால் அது பூமிக்கு மிக அருகில் வருமா ? அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா ? எந்த தீங்கு விளைவிக்காத தண்ணி பாம்பு மாதிரியா ?
  அன்புடன் ஆதி 6. #258
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,828
  Post Thanks / Like
  iCash Credits
  32,562
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by சொ.ஞானசம்பந்தன் View Post
  அரிய செய்தியை அறிவித்துள்ளீர்கள் . பாராட்டு . அதைப் பார்க்க நான் வாழ்வேன் என நம்புகிறேன் . மேற்கொண்டு தகவல் தாருங்கள் .
  கண்டிப்பாக, நாம் இருவரும் சென்னையின் கடற்கரையில் இருந்து இதை ஒர் பெரிய தொலை நோக்கியின் மூலம் அங்குல அங்குலமாக ரசிக்கலாம்..
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 7. Likes ஆதி liked this post
 8. #259
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,828
  Post Thanks / Like
  iCash Credits
  32,562
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by ஆதி View Post
  அண்ணா, நிலவைவிட 10 மடங்கு பிரகாசம் என்றால் அது பூமிக்கு மிக அருகில் வருமா ? அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா ? எந்த தீங்கு விளைவிக்காத தண்ணி பாம்பு மாதிரியா ?
  நிலவை விட பிரஹாசம் என்பது கவனம் ஈர்க்கும் ஒரு விஷயம்தான் ஆதி. சந்திரன் பூமியிலிருந்து 3,84,4903 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த வால் பையனோ ஆறரை கோடி கிலோ மீட்டர் தூரத்தில் போகப் போகிறான். அதுவுமின்றி இவன் பூமியை விட சூரியனுக்கு மிக மிக அருகில் கடக்கப் போவதால் பூமிக்கு அருகில் வரும் வரை இருக்குமா என்பது முதல் கேள்வி. ஏனென்றால் சூரியனைச் சுற்றிக் கொண்டு வரும்பொழுதுதான் பூமிக்கு அருகில் வரும். சூரியனைக் கடக்கும் போதே இது உடைய வாய்ப்பு உண்டு. இதன் பிரகாசத்திற்கு காரனம் இதில் இருக்கப் போகும் பனிதான். அதில்லாமல் அதன் தூசிப் படலம்.

  வால் நட்சத்திரம் பூமி சுற்றும் பாதையைக் கடக்கவில்லை. அதன் சுற்றுதளமே வேறு. அதனால் அது விட்டுச் செல்லும் தூசு பூமிக்கு வர வாய்ப்பில்லை. இதை நான் முன்பதிவில் காட்டியுள்ள வால் நட்சத்திரப் பாதையை பல கோணங்களில் பார்ப்பதன் மூலம் அறியலாம்.

  வழக்கமாக டெம்பில் டட்டில் காட்டும் வாணவேடிக்கை இதில் இருக்காது. காரணம் டெம்பிள் டட்டில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கிறது. அதனால்தான் அது பூமியை உரச வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறோம்.

  இது தண்ணி பாம்பு மாதிரி அல்ல கானல் நீர் மாதிரி. கண்ணுக்குத் தெரியும். அவ்வளவுதான் என்று இதை வரை கிடைத்த தகவல்களைக் கொண்டு யூகிக்கிறேன்.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 9. #260
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,828
  Post Thanks / Like
  iCash Credits
  32,562
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by தாமரை View Post
  அதுவுமின்றி இவன் பூமியை விட சூரியனுக்கு மிக மிக அருகில் கடக்கப் போவதால் பூமிக்கு அருகில் வரும் வரை இருக்குமா என்பது முதல் கேள்வி. ஏனென்றால் சூரியனைச் சுற்றிக் கொண்டு வரும்பொழுதுதான் பூமிக்கு அருகில் வரும். சூரியனைக் கடக்கும் போதே இது உடைய வாய்ப்பு உண்டு.
  .
  எதிர்பார்த்த மாதிரியே இந்த வால் நட்சத்திரம் சூரியனைக் கடக்க இயலாமல் சிதறிவிட்டது.. அடுத்த வால் பையன் வரும் போது பாக்கலாம்
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 10. #261
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  17 Mar 2008
  Posts
  1,037
  Post Thanks / Like
  iCash Credits
  23,607
  Downloads
  39
  Uploads
  0
  பிரமிக்க வைக்கும் அழகான படங்கள் அருமையான விளக்கங்கள்,

  முழுமையாக இன்னும் படிக்கவில்லை.

  மன்றத்து பொக்கிஷ திரிகளில் இதுவும் ஒன்றாக சொல்லலாம்.

  கீழை நாடான்

 11. #262
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,828
  Post Thanks / Like
  iCash Credits
  32,562
  Downloads
  183
  Uploads
  12
  http://krishna.org/astronomy-debunke...d-by-the-moon/

  இந்த சுட்டியை அனுப்பினார் நம் நண்பர் ஆரென். அதிலிருக்கும் செய்தி இதுதான்.

  Solar Eclipses are not Caused by the Moon

  According to Vedic Astronomy, the most ancient and accurate system of astronomy on the planet, solar eclipses are not caused by the Moon coming in front of the Sun as astronomers believe. Rather the Moon is described as being further away than the Sun and what happens at the time of a solar eclipse is the Moon goes behind the Sun and a dark planet call Rahu comes between the Sun and the Earth.

  Of course, because we have been conditioned to believe as fact the structure of the universe as it has been taught to us since childhood we find it very difficult to accept such a thing. But it only requires a little thought to see that actually the ‘modern’ scientific idea is incompatible with our observations and the timeless Vedic knowledge is compatible with our observations.

  Look at the moon on a full-moon night. It is shining so brightly that it lights up the whole surface of the Earth. On a full moon night you can very clearly see everything. Of course it is not as bright as the sunshine, but everything is very clearly visible. And if you were to view the earth from space on a full moon night it would not be dark. It would be illuminated by the moonshine and all the features of the earth would be clearly visible.

  As there is ‘moonshine’ there must also be ‘earthshine’. Much of the earth is covered by water which is a good reflector of sunlight. In fact the scientists say ‘earthshine’ is much brighter than ‘moonshine’. And according to our understanding the earth is enormous in comparison to the size of the moon. So if the moonshine can completely illuminate this earth on a full moon night then the earthshine can completely illuminate the moon.

  The ‘earthshine’ bombarding the moon at the time of a total solar eclipse would be at least ten times brighter than the moonshine on the earth on a full moon night.

  If Western astronomers are correct the solar eclipse would be the prefect time to see the moon illuminated by earthshine. The shadow created which causes the solar eclipse on earth is, according to NASA, at most 167 miles wide. So if you were sitting on the moon during a solar eclipse you would see an extremely bright earth planet with a dark circle of only 167 miles wide. This is not enough to diminish the earthshine in any significant way. So even though the sun is behind the moon, the full force of the sunshine is hitting the earth and reflecting off those shiny blue oceans and reflecting off the land also. So the moon is completely illuminated by earthshine, even though the sun is directly behind it.

  Now if Western astronomers were correct, if you were in that 167 mile wide path of the total eclipse of the sun when the sun was completely covered you would of course see the sky become black and then you could see the stars. But if the sun was covered by the moon you would be able to see the moon quite clearly, in front of the sun, illuminated by the ‘earthshine’. Of course it would not be as bright as the full moon, but the earthshine would certainly illuminate the surface of the moon so we could clearly see it and clearly make out the features on the moon’s surface.

  But this does not happen… During a solar eclipse the sun goes completely black and even though the sunlight is blocked out and the sky goes black one can not detect the moon at all. It is just black. No moon. Of course we should be able to see the features on the moon as it is being bathed in brilliant earthshine… The sun should disappear and we should see the stars and in the place of the sun we should see the moon, illuminated by the earthshine. But we don’t see this.

  So what does that mean? It means it is not the moon causing the solar eclipses. We know from the Vedas that what causes solar eclipses is a dark planet, currently unknown in the Western world, which hides in the shadow of the moon. Rahu is relatively close to us, around about the same distance as we think the moon is, but it is completely black, it does not reflect light at all. So even though there is plenty of earthshine falling on Rahu, because it is a black planet none of that light will be reflected back so we will see the sun simply blacked out in the sky on a full eclipse. Which is what we do see.

  So this is absolute proof that the assumption of Western astronomers that solar eclipses are caused by the moon coming between the earth and the sun is wrong. Because if that was the case we would be able to see the moon during the full eclipse of the sun as it would be bathed in bright earthshine….

  Chant Hare Krishna and be happy!

  ==================================================================================================================================

  இதன் சுருக்கமான விரிவாக்கம் இதுதான். எப்படி நமக்கு முழு நிலவன்று நிலாவெளிச்சம் உண்டோ அது போல அமாவாசை அன்று நிலவிற்கு அதுதான் பௌர்ணமி. நிலவின் இருண்ட பாகம் எப்படி பௌர்ணமி அன்று பூமி ஒரு வெளிச்சம் கொள்ளுமோ அதை விட நான்கு மடங்கு அதிக வெளிச்சம் பெறும்.

  மேலும் நிலவில் வளிமண்டலம் மிக மெல்லியது என்பதால் வெளிச்சம் இன்னும் அதிகமாக இருக்கும்.

  இப்படி இருக்க சூரிய ஒளியை சந்திரன் மறைக்கும் பொழுது அது முழு இருட்டாக தெரியாது, சுற்றி உள்ள நட்சத்திரங்கள் தெரியும் அளவிற்கு ஒளி பரவுவதால் நிலவு பௌர்ணமி போல இல்லாவிட்டாலும் அட்டைக்கருப்பாக தெரியக் கூடாது. நிழலாகத்தான் தெரிய வேண்டும். காரணம் நிலா மறைக்கும் பொழுது பூமியில் 167 மைல்கள் அகலத்துக்கு மட்டுமே நிழல் விழுகிறது. எனவே பூமியின் வெளிச்சத்தில் நிலவின் திட்டுக்கள் தெரியவேண்டும். அப்படித் தெரிவதில்லை. காரணம் இராகு என்னும் நிழல் கிரகம் இருப்பதுவே. இதை மேலை நாட்டு அறிவியலாளரால் காண இயலாததால் அவர்களால் இந்த முழு இருட்டிற்கான காரணத்தை விளக்க இயலவில்லை. ஆனால் சூரிய கிரஹணத்தின் போதுதான் இந்த நிழல் கிரகம் இருப்பது தெரிகிறது.

  சரி.. இவரை இப்படி சிந்திக்கத் தூண்டியது எது?
  அமாவாசைக்கு பிந்தைய நாட்களில் நிலாவை கவனித்து இருப்பீர்கள். மேற்கண்ட படத்தில் உள்ளமாதிரி முழு நிலவும் தெரியும். ஒரு மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் இப்படி பூமியால் ஒளியூட்டப்பட்ட நிலவு தெரியும். நிலவின் சூரிய ஒளிபெறும் பகுதி அதிகமாக அதிகமாக பூமி ஒளிபெறும் பகுதி மறைந்து விடும்.

  இவர் தன்னுடைய முழு சித்தாந்தத்தை இதன் அ்டிப்படையில் அமைத்துள்ளார்.

  பூரண சூரிய கிரஹணத்தின் போது சூரியன் முழுக்க சந்திரனால் மறைக்கப்பட்டு விடுகிறது. நட்சத்திரங்கள் பகலிலேலேயே தெரிகின்றன, அப்படி இருக்கும்பொழுதும் 167 மைல் அகல பூமியின் மீதுதான் சூரியஒளி இல்லை. எனவே சந்திரன் ஒளியூட்டப்பட்டு நிலவில் திட்டுக்கள் தெரியவேண்டும். இதுதான் இவர் வைக்கும் வாதம்.

  நேரடியாகப் பார்த்தால் இந்த வாதம் சரிதான். அட ஆமாமில்ல என யோசிக்கணும். ஆனால் அது தப்பு.

  இப்பொழுது சூரியன் மட்டும் ஒளியின் மூலம். அது சந்திரனால் மறைக்கப்படுகிறது.

  அப்படி மறைக்கப்பட்டால் சந்திரனின் நிழல் சந்திரனை விட பெரிதாகத்தானே பூமியின் மேலே விழ வேண்டும். ஏன் நிழல் 167 மைல்கள் மட்டுமே இருக்கு?

  காரணம் சந்திரனை சூரியன் வடிவத்தில் பெரியது. அதனால் கீழ்கண்டவாறு நடக்கிறது.
  ஒளி வளைவு

  இது பரிசோதிப்பது பெரும் காரியம். ஒளி கொஞ்சூண்டு தான் வளையும். அது தாண்டி போகும் கோள் அல்லது நட்சத்திரம் பெரிதாக இருந்தால் இன்னும் கொஞ்சூண்டு வளையும். ஒளியை எப்படி வளைச்சு பரிசோதிக்கறது? இதுக்கு ஆர்தர் எடிங்க்டன் அப்படீன்றவர் ஒரு யோசனை கொண்டுவந்தார். எப்படீன்னா முழு சூரிய கிரகணம் ஆகும் போது சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் நல்லா தெரியும். சூரியகிரகணம் ஆகும் போது பூமியில் அந்த இடத்தில் இருந்து நட்சத்திரங்களின் இடத்தை பார்ப்போம் அதோ போல் கிரகணம் இல்லாத இடத்தில் இருந்தும் நட்சத்திரங்களோட இடத்தை பார்ப்போம். இந்த இரண்டுக்கும் வேறுபாடு இருந்தால் ஒளி வளையுது என உறுதியாக சொல்லிவிடலாம் அப்படீன்னார்.

  இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னா சூரியனுக்கு அருகில் இருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளியை சூரியன் வளைக்கும். எனவே ஒரே சமயத்தில் பூமியில் இரண்டு இடத்தில் இருந்து அந்த நட்சத்திரத்தின் இடத்தை பார்த்தால் போதும். சாதாரணமா இதை பண்ண முடியாது, ஏன்னா பூமியின் இரவு பகல் வேறுபாடு. சூரிய கிரகணம் வரும் போதும் ஒரு சில நிமிடம் பூமியில் இரண்டு பக்கமும் இரவு இருக்கும் அப்போ இந்த பரிசோதனை பண்ணினா கண்டு பிடிச்சிடலாம்.

  ஆர்தர் இதை 1919 ஆம் வருட முழு சூரிய கிரகணம் அப்போ செய்தார். ஐன்ஸ்டன் சொன்னது போல் ஒளி வளைவது உறுதிப்பட்டது. இதை ஐன்ஸ்டைனிடம் சொல்லி ஒருவேளை உங்கள் கொள்கை தவறு என சொல்லப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டார்கள். அதற்கு அவர், பரிசோதனை செய்தவருக்காக வருத்தப்படுவேன். அந்த கொள்கை எப்படியாயினும் சரியானது என்றார்.


  ஒளி ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு போகும் போது சிகப்பாக மாறும்.
  ஒளி ஈர்ப்புவிசை குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து அதிகமாக இடத்திற்கு போகும் போது நீலமாக மாறும்

  நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும்பொழுது ஒளி வளைகிறது. இதனால் சந்திரனின் வெளிவிளிம்பு ஒளிபெறுகிறது. இந்த ஒளிவிளிம்பு இப்படி தெரிகிறது
  சந்திரனை தாண்டுவதால் ஒளி வளைந்தது.

  இப்பொழுது சந்திரனின் நிழல் திட்டுகள் ஏன் தெரியவில்லை என்பது கேள்வி.

  இதை மணிரத்னம் படத்தில் பி.சி. ஸ்ரீராம் அழகாக விளக்கி இருப்பார், ஒரு உருவத்தின் பின்புறம் இருந்து ஒளி விழும்படி செய்து விளிம்புகளை ஒளிர விட்டிருப்பார். ராஜா ராஜாதி ராஜா பாட்டில் ரயில் பெட்டிகளின் இடையில் கடப்பது போல காட்டி இருப்பார்.

  விளிம்புகள் ஒளிபெறும்பொழுது நமது கண்களின் பாப்பா அந்த ஒளிக்கேற்ப சுருங்கி தன்னுடைய ஒளி உள்வாங்குதலைக் குறைத்துக் கொள்ளும். அதனால் சந்திரன் முழுக்க கருப்பாய்தான் தெரியும்.

  உண்மையின் சந்திரனின் பூமியின் ஒளியால் ஒளியூட்டப்பட்டவை தெரியத்தான் செய்கின்றன. அதை வெறும் கண்களால் காண இயலாது.

  2009 ஆம் ஆண்டு கோடையில் மார்ஷல் தீவுகளில் வானியலார்கள் Canon EOS 5D கேமிராவினால் 31 படங்கள் எடுத்து அவற்றை இணைத்ததில் வெளிவிளிம்பில் சூரியக்கதிர் வளைவுகள், சூரியனின் கரோனா பகுதி ஆகியவை தெளிவாக படம் பிடிக்கப்பட்டன. அதில் நிலவு பூமியின் ஒளியால் வெளிச்சம் பெறுவது தெளிவாக தெரிகிறது.

  இந்தப் பக்கம் பார்க்க

  http://www.wired.com/2010/01/solar-e...corona-detail/

  The annular solar eclipse that was visible earlier this month in parts of Africa, the Indian Ocean and Asia yielded some beautiful photographs of the moon obscuring the light from the sun.

  But none of them provided the kind of exquisite detail that a team of astronomers watching from the Marshall Islands captured during last summer’s total solar eclipse. By combining 31 images of the eclipse shot with a Canon EOS 5D, the composite shows the incredible structure of the sun’s corona stretching out from occluded central disc. The moon’s surface details are also clearly visible.

  The next total solar eclipse will occur on July 11 and will be visible only from the South Pacific

  Last edited by தாமரை; 23-09-2015 at 04:39 PM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 22 of 22 FirstFirst ... 12 18 19 20 21 22

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •