ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கையர்கள், தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு, அங்குள்ள இலங்கைத் தூதரகங்களாற் கோரப்பட்டுள்ளதாகத் தமிழ்வின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் இந்தச் செய்தியை நான் உறுதி செய்யவில்லை என்றாலும், உறவுகள் தெரிந்து கொள்வதற்காகப் பதிவிடுகின்றேன்.

யாரேனும் இவ்வறிவித்தலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியுமானால் நன்று.

தமிழ்வின் இணையத்தில் வெளியான செய்தி:
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள சகல இலங்கைப் பிரஜைகளும் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் இணைந்து இந்தப் பதிவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.

ஜூலை முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் முற்பகல் 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் அனைவரும் தமது முழுப்பெயர், கடவுச்சீட்டு இலக்கம், முகவரி, தொலைபேசி இலக்கம், தொழில் விபரங்கள், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்ற தினம், ஆகிய தகவல்களை மின்னஞ்சல் அல்லது தொலைநகல் ஆகியவற்றின் மூலம் தூதரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
அறிவித்தல் உண்மை என்னும்பட்சத்தில்,
மேலதிக, தேவையான விபரங்களை, அறிய இயலுமானவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால்,
தேவைப்படும் அனைவருக்கும், பதிவை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

நன்றி: தமிழ்வின் இணையம்