Results 1 to 7 of 7

Thread: என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் umakarthick's Avatar
    Join Date
    04 May 2007
    Location
    chennai
    Posts
    372
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    57
    Uploads
    0

    என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?

    என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?- செழியன், கவிதைகள்



    வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க
    குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள்
    ஓடி ஒளியும்போது...
    கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது...
    உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது...
    பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது...
    அப்போதுதான்
    போர் என்பது புரியும் எனில்,
    அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள்.
    அடுத்த தேர்தல் வந்துவிட்டது
    வரிசையில் நின்று வாக்களியுங்கள்.


    --------------------------------------------------------------------------

    பயணத்தில் உங்கள் இருக்கையில்
    இன்னொருவர் அமர்ந்துகொண்டு
    எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?
    சாலையில் உங்கள் வாகனத்தை
    இன்னொரு வாகனம் இடித்துவிட்டால்
    என்ன செய்வீர்கள்?
    உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்
    காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
    பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர் உரசுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
    உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி
    சில அந்நியர் புகுந்தால்
    என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?
    இறையாண்மை பேசுவீர்களோ?
    இதற்கெல்லாம்...
    எதிர்த்தலே தீவிரவாதம் எனில்
    இலங்கையில் நடப்பதும் அஃதே நண்ப!
    ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு
    ஒப்பாரி வெச்சாச்சு
    கண்டனக் கூட்டம் முடிஞ்சுது
    கவிதை வாசிச்சாச்சு
    கட்டுரைகள் எழுதியாச்சு
    ஓவியம் வரைஞ்சாச்சு
    ஊர்வலம் போயாச்சு
    மனிதச் சங்கிலி
    அடையாள உண்ணாவிரதம்
    வழக்கறிஞர் போராட்டம்
    மாணவர் போராட்டம்
    திரையுலகப் போராட்டம்
    கடையடைப்பு.
    தந்தி அடித்து
    மெயில் அனுப்பி
    எஸ்.எம்.எஸ். விட்டு
    வேலைநிறுத்தம் செஞ்சு
    பேருந்துகள் கொளுத்தி
    தூதரகங்களை நொறுக்கி
    ஜெயிலுக்குப் போயி
    சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து
    அட! பதினேழு பேர் தீக்குளிச்சுச் செத்தும்போயாச்சு.
    .....க்காளி... என்னதான்யா செய்யறது இனி!




    இரண்டு வாரத்துக்கு முன்பு விகடனில் படித்த பிடித்த கவிதைகள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல. ஆனால் முள்ளை முள்ளாலதான் எடுக்க வேணும்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    எழுதுவது, படிப்பது எளிது....
    ஆனால் மிஸ்டர் இண்டியனால் ஆக்கப்பூர்வமான முடிவு எடுப்பது சற்றுக் கடினம் தான்...

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கவிதையின் கடைசி வரிதான் என் கேள்வியும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    என்ன செய்ய முடியும் எம்மால் இவற்றைத்தவிற....

    அருமை ... படிக்க தந்ததிற்க்கு நன்றி....

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அதிக பட்சமாக ஆண்டவனை காறி உமிழ்ந்தும் ஆச்சுது,
    ஒன்னும் நடக்கலையே?
    அப்பாவி மக்களை நிம்மதியாக வாழ விடலையே?
    பரஞ்சோதி


  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் umakarthick's Avatar
    Join Date
    04 May 2007
    Location
    chennai
    Posts
    372
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    57
    Uploads
    0
    :(என்ன பண்ணுறது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •