Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 43

Thread: காதல் சடுகுடு!! ("த்ரில் அனுபவம்!!")

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  15,295
  Downloads
  38
  Uploads
  0

  காதல் சடுகுடு!! ("த்ரில் அனுபவம்!!")

  வணக்கம்..

  இதை முழுசா படிச்சி முடிக்கிறவங்களுக்கு ஒரு "மெகா பரிசு" இருக்கு!! (அது என்னன்னு அப்புறம் சொல்றேன்!!)


  காதல்...காதல்..காதல்.. இப்படி முழுநேரமும் காதலே தொழிலென சுற்றிய காலத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தன என் வாழ்வில்..

  அவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்...

  (சுவாரஸ்யம் இல்லாமலிருப்பதாய் தோணினால் எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லையென அர்த்தம்!! :lol: )

  தயவுசெய்து பொறுத்துக்கொண்டு படியுங்கள்..இறுதியாய் திட்டுங்கள்!!!

  உங்களை திருப்பதிக்கு கூட்டிக்கிட்டு போலாம்னு ஆசை..

  கிளம்பலாமா?!! :?:


  என் காதலி வீட்டில் திருப்பதிக்கு போறதா திட்டம் போட்டிருந்தாங்க ..

  அவங்க மொட்டையடிக்க போறாங்களா இல்ல.. என் காதலுக்கு நாமம் போடப்போறாங்களான்னு சந்தேகமே வரல எனக்கு.. ஏன்னா.. நம்ம ஆளு அவ்வளவு "ஸ்ட்ராங்.." 3-ரோஸஸ் டீதான் குடிப்பேன்னு அவ ஒருநாள் சொல்லுபோதே அதை கணிச்சிட்டேன்..

  பயத்துக்கு பூ.. -ன்னு இன்னைக்கு இளசு அண்ணன் சொன்னாருல்ல.. அது இன்னைக்கு நேத்தல்ல... ஆதிகாலத்துலயே வந்துட்ட பட்டம்..( )
  அப்படித்தான் பயந்தேன்.. அவ தனியா குடும்பத்தோட டூர் போறாளே.. போறவழியில பஸ் உருண்டுட்டா.. என்ன ஆகறது.. அவளைவிட்டு பிரிஞ்சிடுவோமோன்னு பயம்..

  "இருந்தாலும் போனாலும் இணைந்தே.". காதல் மதத்துல வேதவாக்காச்சே இது!..


  நான் முடிவு பண்ணிட்டேன்.. அவளோட நானும் திருப்பதிக்கு போகனும்!!

  <span style='color:brown'>"ஏடுகுண்டலவாடா.. ஏதேச்சும் செய்யேண்டா"-</span>ன்னு.. யோசிக்க ஆரம்பிச்சேன்..

  ஆனா பாருங்க.. காதலிச்சா கொஞ்சம் (நிறையவே!!) கிரிமினல் யோசனைகளும் நல்லாவே வரும்..

  "காதல் தீவிரவாதி.."- பொடா இல்ல இங்க..., போடாதான்!!.. (கழுத்தைப்பிடிச்சி வெளியே தள்ளி பொண்ணுங்களோட அப்பன்கள் சொல்லும் "போடா")

  டூருக்கு ரெண்டு நாள் முன்னாடி அவளோட பேசினேன்..

  ஆமாங்க...அதேதான்.. சுண்ணாம்பாறு போட் ஹவுஸ்ல எப்பவும் உட்கார்ந்து பேசுவமே அதே இடத்துலதான்...


  "நானும் வருவேன்" கண்ணை கசக்காம.... , ம்ம்...ம்ம்... கொட்டமா அழுத்தமா சொன்னேன்.. (நான்தான் காதல் தீவிரவாதியாச்சே!!)

  " குழந்தைபோல.. அடம் பண்ணாதடா கண்ணா" .. (அடிப்பாவி.. கண்ணையே கசக்கல பப்பாங்கிறாளே..நல்லவேளைடா சாமி.., அழுதிருந்தா பீடிங் பாட்டில் வாங்கி தந்திருப்பாபோல!)

  ஒருவழியா "சரிடா... என்னவோ பண்ணு.. ஆனா.. விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!!!" (கழண்டுக்கிறயேடி!!!)

  பஸ்ல போறதா சொன்ன அவ திட்டத்தை ரயிலா மாத்துன்னு சொன்னேன்..

  அவ... - "அம்மா" சொன்னா சொன்னதுதான்.. (அங்கேயுமா?!..) மாத்தறது கஷ்டம்னு கைவிரிச்சா..

  கண்ணை கசக்குடி... சிணுங்குடி... சாப்பிடாம.. ரயிலு..ரயிலு..- ன்னு காய்ச்சல் வந்தாப்போல
  உளறுடி...... (எட்டுப்பட்டி ராசா- பாட்டுல வர்றாப்போல சொல்லி..)

  ஒருவழியா ரயிலு.... உட்டேன் பாரு ஒரு ·பிகிலு... ஆனா.. அடுத்த நாளே பயங்கர ·பீவரு..

  ஒரே ரயிலில போய்டலாம்.. சரி.. நாலுநாள் எப்படி ஒட்டிக்கிட்டே ஓட்டறது?!..

  அவளோட அம்மா ஏற்கனவே கொஞ்சம்........... (மாமியா மாறிவிட்டதால் மரியாதைகருதி!! ஹிஹி...)மாட்டிக்கிட்டா அவ்ளோதான் டின் கட்டிடுவாங்க..

  தைரியமா மூணு டிக்கெட் புக் பண்ணினேன்.. நான் ஒரு ஆள்.. ஆனா மூணு டிக்கெட்!!

  அந்த நாளும் வந்துடுத்து...

  சாயங்காலம் 4 மணிக்கு ரயில்.. காலையில 11 மணிக்கு ஒரு போன் போட்டேன்.. என் அண்ணன் வீட்டுக்கு.. அவர்+அண்ணி+ 1 குட்டி பையன்.. தனியா தங்கி இருக்காங்க..

  திருப்பதிக்கு என் நண்பர்கள் வர்றாங்கன்னு 3 டிக்கெட் எடுத்திட்டேன். ஆனா அவங்க (எவுங்க?!!) திடீர்னு வரலன்னு சொல்லிட்டாங்க.. நீங்க வாங்க போலாம்ன்னேன்..

  கையில பைசா இல்லப்பா..- அண்ணி எப்பவும்போல மங்களம் (இவங்க திருமதி.மங்களம்....) பாடலாம்னு.. கைவிரிச்சாங்க..
  நான் பார்த்துக்கிறேன்.. வாங்க...

  (அப்பா.. ரிட்டையர்ட் ஆகும்போது ஆசை ஆசையா வாங்கிப்போட்ட மோதிரத்தை முத்தம் கொடுத்துக்கிட்டே...)


  அவசரமா கிள(ப்)ம்பி.. அண்ணியை கொஞ்சம் சப்பாத்தியும்..புளி சாதமும் கட்டிக்கோங்கன்னு (இதுலதான் மேட்டரே இருக்கு!) அடம்பண்ணி .., ஆட்டோ பிடிச்சி ஸ்டேஷன் வந்தேன்..

  சமைக்கும்போதே அண்ணிக்கிட்ட "அவ" மேட்டரை உடைச்சேன்.. அண்ணிக்கு அவளை அறிமுகப்படுத்தி இருக்கேன் ஏற்கனவே..(ஓசியில நிறையமுறை ஊசி மருந்தெல்லாம் வாங்கிவந்து அண்ணிக்கிட்ட தந்திருக்கேன்..)

  அண்ணியை உள்ள ஒரு பெஞ்ச்ல உட்கார்த்தி அண்ணனை வாசலுக்கு கூட்டிக்கிட்டு போனேன்..கையை பிடிச்சி..(காலா நினைச்சி..) நாமமட்டும் போகல.. கூட ஒரு பொண்ணும் அவங்க ·பேமிலியும் வர்றாங்க.. போய்ட்டு வந்து பேசிக்கலாம் மீதியை.. பிளீஸ்.. கோபப்படாம வாங்க..ன்னு சொல்லி..என் அண்ணனை பேசவே விடாம... (அவன் முகத்தை பார்க்காம..)

  என்னவளும் அவ குடும்பமும் உட்கார்ந்திருந்த பெட்டியை தேடி.. அவங்களுக்கு எதிர் சீட்ல உட்கார வைச்சேன்.. நான் மட்டும் ஏறவே இல்லை.. (ஒரே நடுக்கம்!!)

  அன்னைக்கு மதியமே அவகிட்ட சொல்லிட்டேன்.. அண்ணி வராங்க... தெரிஞ்சவங்கமாதிரியும்..அவங்களும் திருப்பதிதான் போறாங்கங்கிறது தெரியாதமாதிரியும் நடந்துக்கோன்னு..

  அவ என் அண்ணியை.. அட.. வாங்கக்கா.. எங்க கிளம்பிட்டீங்க.. (அடா..அடா...)..திருப்பதிக்கா... அட நாங்களும் அங்கதான்... அம்மா..இவங்க எனக்கு தெரிஞ்ச அக்கா.
  பஸ்ல வருவாங்க... நல்லவேளை தனியா போறதா கடுப்பா இருந்துச்சி.. நீங்களாச்சும் வந்தீங்க..(அப்பாடா... ஒருவழியா..)


  அண்ணி நல்லாவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க... (ஊசி,மருந்து உதவிக்கு பிரதி உபகாரம்!!)

  ரயில் நகர ஆரம்பிச்சதும்.. கையை பிடிச்சி "மச்சான்.. கவலைப்படாத.. எதுவானாலும் பாத்துக்கலாம்.." தூக்கி ஏத்திவிட்டான் என் ·பிரண்ட்..(அடப்பாவிகளா..நீங்க ஏத்தி ஏத்தி உடுங்க.. நான் மாட்டிக்கிறேன்!!)

  அவளைப் பார்த்தா சிரிப்பு வருது.. பார்க்காம இருக்கவும் முடியல...

  விழுப்புரம் ஜங்ஷன்ல 5 மணிக்கு வண்டி நின்னுச்சு.. நான் தண்ணிப்பிடிக்க பாட்டில் எல்லாம் எடுத்துக்கிட்டு இறங்கினேன்..தண்ணி பிடிச்சிக்கிட்டு திரும்பும்போது பாக்கெட்ல ஏற்கனவே வைச்சிருந்த [b]<span style='color:red'>"டயாஸிபாம்"</span>

  ரயில்ல ஏறி மறக்காம "அந்த" பாட்டிலை அவங்க அம்மாக்கிட்ட தந்தேன்..

  என்னவளோட தங்கச்சி படக்னு அதை பிடுங்கி.. மடக்..மடக்.. (போச்சுடா..)

  ஒரு அரைமணிக்கு அப்புறம் தங்கச்சி ·ஆப் ஆயிடுச்சி...

  மணி 8. திருவண்ணாமலைக்கிட்ட போய்க்கிட்டு இருந்தது ரயிலு..

  சாப்பிடலாமே..

  ஓ... பேஷா.. நீங்க வைங்க.. இதை சாப்பிடலாம்.. கெட்டுடும்
  நாளைவரை தாங்காது..

  நாங்க கொண்டுவந்த புளிசாதத்தை நைஸா ரெண்டு குடும்பத்தையும் சாப்பிட வைச்சேன்..

  ஏன் சொல்லுங்க.. ம்ம் அதே...

  எங்க சாப்பட்டை அவங்க சாப்டாச்சு.. நாளைக்கு நாங்க என்ன பண்றது..அவங்க சாப்பாட்டை.. so, ரயிலைவிட்டு இறங்கினதும் பிரியமுடியாதே!!..(ஹாஹா.. வெற்றி!!)

  சாப்பிடும்போதே ஒரு ஆசை.. எழுந்து பாத்ரூம் பக்கம் போனேன்.. இன்னொரு டயாஸியை தண்ணி பாட்டில்ல போட்டுக்கிட்டேன்..

  அவங்க அம்மா.. சாப்பிட்டு முடிச்சி தண்ணீன்னு கையை நீட்டும்போது.. தலையை நீட்டி இந்தாங்க... அவங்க உஷார் பார்ட்டி... பாட்டிலை தூக்கிப்பார்த்தவங்க..
  தூசியா இருக்குப்பா..(சரியா நசுங்காம உள்ளுக்குள்ள நீச்சலடிச்ச மாத்திரை தூள்கள்..) கொட்டிடு.. (அய்யோடா..........)

  அப்புறமென்ன இரவு முழுக்க கண்கள் நான்கும் கூர்க்கா வேலை பார்த்துக்கொண்டே...

  அதிகாலை 4-ல் இறங்கி பேருந்தில் இடம்பிடித்து ஏழுமலையானை அடந்தோம்..

  வரி........................................சை மிக நீளமாய்..

  நின்றால் (காத்திருக்கும் அறை) கோடவுனில் அடைத்துவிடுவார்கள்.. 24 மணி நேரமாவது ஆகும்.. உள்ளே
  அடைந்து கிடந்தால் பேசமுடியாது.. தனித்தனி அறையில் மாட்டிவிட்டால்?!..


  யோசித்தேன்...... ஐடியா பிறந்துவிட்டது....

  திருப்பதியைச்சுற்றி நிறைய இடங்க ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு இரவு வரிசையில் நின்றுகொள்ளலாம்..

  பகலெல்லாம் வீணாகிவிடும் உள்ளே அடைத்துவிட்டால்.. என்ன சொல்கிறீர்கள்..

  என்னவளும் ஜால்ரா போட... அவளின் அம்மா தலை அசைந்தது..

  பகலெல்லாம் சுற்றினோம்.. பஸ் ஏறி இறங்கும்போதெல்லாம் பறந்தேன்.. அவளை இறுதி ஆளாய் இருக்கவைத்து
  கரங்களை இருகப்பற்றி இதயத்தை இனிக்கச் செய்தேன்..


  (இதையெல்லாம் என்னவளின் தங்கை.. பார்த்துக்கொண்டிருந்ததாய்
  பின்னாளில் சொன்னாள்.. அன்று கண்டுக்காமல் விட்டமைக்கு கோடி நன்றிகளை சொன்னேன்!)


  மாலைப்பொழுது... ரூம் வாடகைக்கு எடுக்கவேண்டுமென அவளின் அம்மா...

  அய்ய்ய்ய்ய்யயோ... அப்போ ராத்திரி தனியாவா?!!....

  விடக்கூடாது... மீண்டும் யோசித்தேன்... " கிளிக்"

  நாங்க போனது புரட்டாசி மாதம்.. தினமும் இரவுவேளைகளில் ஏதேனும் நடக்குமாம்..சாமி வீதியுலா வருமாம்.. அன்று பிரம்மோற்சவம் என ஒரு கடைக்காரன் சொன்னது நினைவில்..

  ஏங்க.. ரூம் போடறது வேஸ்ட்... நைட் சாமி வருமாம்.. நாமதான் உள்ள போகல.. வெளிய வர்ற சாமியை ஏன் மிஸ் பண்ணனும். இங்க பாருங்க செம கூட்டம்.. அதனால ஒரு பயமும் இல்ல..
  பார்க்-லயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கலாம்..

  அதுக்கும் சரி.. (மச்சம்டா மச்சான்.. -போய்ட்டு வந்து கதை சொன்னப்ப என் நண்பன் சொன்னது!)

  10 மணி நேரம் ரயில்... பகலெல்லாம் பஸ்பஸ்ஸா ஏறி சுற்றல்.. யாரால தூங்காம இருக்கமுடியும்..

  எங்க ரெண்டுபேரைத்தவிர..

  புல்வெளியில் கால்நீட்டிவிட்டார்கள் அனைவரும்...

  சால்வையை உதறினோம்... கம்பிநீட்டினோம்.. கைபிடித்து கடைவீதிகளில் துள்ளலாய் ஓடினோம்... அந்த நிமிடங்கள் இன்னமும் மறக்கவில்லை..

  எது வாங்குவதென இலக்கில்லாமல் இறக்கைகள் விரித்த குஞ்சாய்.. விசிலடித்து பறந்தோம்..

  சரியாய் 1 மணி நேரம்.. வாங்கியதென்னவோ ஒரே ஒரு ஸ்கார்ப்..(தலையில் பனிக்கு கட்டுவோமே!!)

  நல்லபிள்ளையாய் வந்து படுத்துக்கொண்டு அந்த இருளில் மெல்லிய கீற்றாய் வீசிய மின்னொளியில் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தோம்..

  இரண்டு இரவுகள்.. தூங்காத இரவுகள்...


  பிரம்மோற்சவம் என்ன ஆனதென தெரியவில்லை!!!

  காலையில் எழுந்து.. அவளின் அம்மா திட்டினார்... ஏன் எழுப்பவில்லையென..(என்னையல்ல..) அந்த பரிதாப ஜீவனை.. (அவள் அல்ல.. அவளின் அப்பா!!!)

  அன்று மாலை ஊர் கிளம்ப வேண்டுமென்பதால் சாமிப்பார்க்கும் முடிவில்லை..

  சரி.. இதுதான் போச்சு.. திருத்தணியாவது போலாமென்றார்..

  ஓ.. போலாமே........

  திருத்தணி போனோம்.. பல இடங்களில் மறைந்திருந்து அவளை படமெடுத்தேன்..

  மாலை.. ஊருக்கு கிளம்பவேண்டும்..

  மீண்டும் ரயிலென தூபம் போட்டேன்...

  ரயில் நிலையம் போனோம்.. அந்த நேரம் ரயில் இல்லையாம்.. மேலும் சென்னைக்குதான் உள்ளதாம்..விழுப்புரமெல்லாம் சான்ஸ் இல்லவேயில்லையாம்..

  வருத்தமாய் பஸ்ஸில்தான் பயணமென..பேருந்து நிலையம் வந்தோம்..

  இங்கிருந்து விழுப்புரம் போக 5 மணி நேரம்.. வேலூரைச்சுற்றி சென்றால் 8 மணி நேரமாகலாம்..

  நான் சொன்னேன்.. இப்போது மணி 7. விழுப்புரம் நள்ளிரவில் போய் சேர்ந்தால் உங்கள் ஊருக்கு பஸ் இருக்குமா அப்போது.. (இருவரும் பக்கத்து ஊருதான்.. ஆனால் நாங்கள் வேறு ஊர் சொல்லிவிட்டோம்)
  இல்லையென்றார்கள்..

  அப்ப்டின்னா... காலையில போய் சேர்வதுபோல வேலூரைச்சுற்றி போலாம்.. ரோடும் நல்லா இருக்கும்!!
  (இந்த ஒரு வார்த்தைக்கு கன்னாபின்னாவென வாங்கிக் கட்டிக்கொண்டேன்.. அவ்வளவு மோசமான சாலை!!)

  பஸ்ஸில் மீண்டும் ஆரம்பித்தேன்...

  காதலிக்கும்போது பொதுவாய் எல்லோரும் நீளமாய் நகம் வளர்ப்பார்கள்..

  விரல்படாமல் அவளைத் தொடவேண்டுமானால் அதை உபயோகிக்கலாம்!!

  திருத்தனியில் வாங்கிய பச்சை வாழைப்பழத்தில் ஒன்றை எடுத்து நகத்தால் கீறி உள்ளே பாதி(மீதி) மாத்திரையை சொருகினேன்..

  அவளின் அம்மாவிடம் நீட்டினேன்.. அவர் வாங்கி உரித்து உடைத்தார்... அடக்கடவுளே.......
  கீறின இடம் இலகுவாய் இருந்ததால் அங்கே சரியாய் உடைந்தது.. மாத்திரை பல்லிளித்தது.. உடனே அவர்களை கூப்பிட்டேன்.. திரும்பினார்.. அவளும்தான்..

  ஏதோ பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவளிடம் கண்காட்டினேன்.. காப்பாற்றென கெஞ்சினேன்..

  அவள் சமயோசிதமாய் ஏதோ இருக்கிறதென தட்டிவிட்டுவிட்டால் அதை..

  அப்பாடா... அம்மா வாயில் வைத்தார்.. இலேசான கசப்பு.. கரைந்த தூள்களால்..

  பொறுக்கிபயலுக.. மருந்துபோட்டு பழுக்கவைக்கிறானுங்க... எப்படி கசக்குதுபாரு..

  (அட்றா..அட்றா...) .

  ம்ம்.. ஆமாங்க.. பிஞ்சு பழம்...ஹிஹி.. பால்வடிய வழிந்தேன்!!

  உறங்காமல்... அவளின் கேசத்தை வருடிக்கொண்டே.. மௌனமாய் பேசிக்கொண்டே வந்திறங்கினோம்..

  இப்படியாக.. மூன்று இரவுகள் தொடர்ந்து ஒருநொடிகூட தூங்காமல் கழிந்தது!!

  எந்த ஆபத்துமில்லாமல்..(டயாஸிபாமால்..அவள் அம்மாவிற்கு ஏதேனும் ஆயிருந்தால்?!!)


  பயணம் முடிந்தது!!!


  எத்தனை நெருக்கமாய் ஆழமாய் காதலித்தும்.. அவளின் குடும்பம் அறியாமலயே அவளுடன் மூன்று நாளும் பயணித்துவிட்டேன்!!!

  உங்களை இன்னமும்(ஹஹஹஹஹா.........) அறுக்க மனமில்லாமல் முடிக்கிறேன்..


  உங்களுக்கும் இதுபோன்ற த்ரில்லிங் நிகழ்வுகள் இருந்தால் சொல்லுங்களேன்..

  (என்னைப்போல அறுக்க எவரால் முடியும்?!!)
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:01 AM.
  என் பூக்களின் பாசம்..
  எனக்கு சுவாசம்!!

 2. #2
  மன்றத்தின் தூண்
  Join Date
  19 Apr 2003
  Posts
  3,394
  Post Thanks / Like
  iCash Credits
  5,044
  Downloads
  0
  Uploads
  0
  பூ.. நீங்க கில்லாடியான ஆள்தான் போங்க.. இந்த விவரங்கள் எங்களைப் போன்ற மக்களுக்கும் ஒருவேளை உதவலாம்... அது சரி .. அந்த டயாசிபாம் எங்கு கிடைக்கும்?... .. இவ்வளவு சுவையான உங்கள் சாகசத்தை சுவையான சம்பவங்கள் பகுதியில் போட்டிருக்கலாமே..
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:03 AM.

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் suma's Avatar
  Join Date
  02 Apr 2003
  Location
  Toronto
  Posts
  2,102
  Post Thanks / Like
  iCash Credits
  5,035
  Downloads
  0
  Uploads
  0
  பூ எப்படி உங்க ஆளை கரம் பிடித்தீர். காதலித்து மணம் புரிந்தால் எவ்வளவு சுவையான வாழ்வு கிடைத்து இருக்கும். நான் மிஸ் பண்ணிட்டேன். கரம் பிடித்ததை கூறுங்களேன் பிளீஸ்.......
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:03 AM.

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0
  இப்பதான் தெரியுது
  தம்பியின் கல்யாண அழைப்பிதழின் அர்த்தம்.
  நல்லா அனுபவச்சி இருக்கப்பா.

  வாழ்த்துக்கள்
  அண்ணன்.
  மனோ.ஜி
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:04 AM.
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  அன்பு பூ,
  மூன்று நாள் அனுபவத்தை 10 நிமிடத்தில் படித்து விட்டேன்.. ம்ம்ம்ம்.. உங்களுடைய கல்யாண பத்திரிக்கையை நான் பார்க்கவில்லை.. இங்கே பதிவேற்றம் செய்யலாமே..?! அப்புறம் மெகா பரிசு இதுதானா...? ஒண்ணும் சொல்லவே இல்லியே...!
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:04 AM.

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
  Join Date
  17 May 2003
  Location
  வானலை...
  Posts
  3,192
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  அன்பு பூ...
  அசத்தலான அனுபவத்தை அழகாக இங்கே சரமாக்கியிருக்கிறீர்கள்...உங்களின் அனுபவம் போல சாகசங்கள் எனக்கு இல்லை இருப்பினும் வேறு வகை அனுபவங்கள் உண்டு...உங்கள் மனைவியாருக்கு சகோதரி மட்டும்தான் போல...என் கதையில் 3 சகோதரர்கள்...கிட்டதட்ட காதலுக்கு மரியாதை ரேஞ்சில் அண்ணன்கள்...அஜானுபாகுவான தம்பி...ஹா ஹா ஹா...எப்படியோ கத்தியின்றி ரத்தமின்றி...கல்யாணத்தயும் முடித்துவிட்டேன்(டோம்)...

  "பயத்திற்கு பூ" என்பதை...இந்தப் பதிவைப் பார்த்து நம்பமுடியவில்லை...
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:05 AM.
  நலம் வாழ்க...
  சேரன்கயல்...

 7. #7
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  வியாபார தலைநகரம&
  Posts
  920
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  பூ.. இதுதான் காதல் என்பதா..
  இளமை பொங்கி விட்டதா..
  இதயம் தொட்டு விட்டதா..
  சொல் பூவே....

  ரசிக்கும்படியாக இருந்தது. நான் நெனெச்சேன் நீங்க எப்படியாவது அந்த பழத்துல மாட்டிப்பீங்கன்னு. நீங்க கேரளாவுக்கே வாழைப்பழம் கொடுத்திட்டீங்க. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க.
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:05 AM.

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
  Join Date
  13 Jul 2003
  Location
  Doha-Qatar.
  Posts
  5,199
  Post Thanks / Like
  iCash Credits
  13,840
  Downloads
  10
  Uploads
  0
  பூ தம்பி.... தங்கள் பெண் தவறான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து
  விட்டது என கவலைப் படாத வகையில் ... உங்களைப் பற்றி
  தங்கையின் பெற்றோர்கள் மகிழ்வு கொள்ளும் வகையிலும் ஒரு
  நல்ல வாழ்க்கையை அவருக்கு கொடுத்து வாழ்க்கையில்
  சிறப்பும் மேன்மையும் அடைய என் வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.
  நடப்பவை அனைத்தும் நல்லவையாக அமைய வேண்டுகிறேன்.

  -அன்புடன் அண்ணா.
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:06 AM.

 9. #9
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
  Join Date
  13 Jul 2003
  Location
  Doha-Qatar.
  Posts
  5,199
  Post Thanks / Like
  iCash Credits
  13,840
  Downloads
  10
  Uploads
  0
  இரண்டு இரவுகள்.. தூங்காத இரவுகள்...

  பிரம்மோற்சவம் என்ன ஆனதென தெரியவில்லை!!!

  வந்த சிரிப்பை அடக்கவோ...தவிர்க்கவோ முடியவில்லை.

  -அன்புடன் அண்ணா.
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:06 AM.

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  13,995
  Downloads
  4
  Uploads
  0
  அனுபவித்து எழுதியிருக்கிறாய் பூ . மிக ரசித்து படித்தேன் .
  அன்புடன்
  மணியா
  பி.கு : ஆமாம்....இந்த பூ சுத்தற பழக்கம் அப்போவே இருந்ததா !!?
  வீர்சிங் இதுவரை அந்த டையாசிபாமை பற்றி ஒன்னும் சொல்லவில்லை. எங்கு கிடைக்கும் (பவுடராக )!!!??
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:07 AM.

 11. #11
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
  Join Date
  13 Jul 2003
  Location
  Doha-Qatar.
  Posts
  5,199
  Post Thanks / Like
  iCash Credits
  13,840
  Downloads
  10
  Uploads
  0
  மணியா அண்ணா எதிலும் ஒரு முன் ஜாக்கிரதைதான்.
  (பவுடராக வேண்டுமாம்.)
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:07 AM.

 12. #12
  இனியவர்
  Join Date
  02 Apr 2003
  Location
  Posts
  952
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  அருமையான ஒரு காதல் கதை பூ அவர்களே, இதை வாசிக்கையில் எனது வசந்தகாலம் என் ஆழ்மனதில் ஓடியது, நான் காதலித்தபோது செய்த சில சிலுமிஷ்ங்களை நினைவுபடுத்துகிறது, ஆனால் எங்கள் காதல் வெற்றி பெறவில்லை, பல காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிய நேரிட்டது. அது ஒரு சோக கதை.
  ஆனால் நீங்கள் காதலித்தவரையே திருமணம் முடித்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன், நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
  வாழ்க வளமுடன்.
  Last edited by செல்வா; 31-07-2008 at 01:07 AM.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •