Results 1 to 6 of 6

Thread: பிரபாகரன்… இந்த ஒரு வாரத்தில்!

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    பிரபாகரன்… இந்த ஒரு வாரத்தில்!

    பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாக’ இலங்கை ராணுவம் அறிவித்தது முதல், அவர் உயிரோடு நலமாக உள்ளதாக புலிகள் நான்காவது முறையாக இன்று அறிவித்துள்ளது வரையிலான முக்கிய நிகழ்வுகளும் அதையொட்டிய முரண்பாடுகளையும் இங்கே தொகுத்துள்ளோம்… இதற்கு மேலும் கூட பல செய்திகள் வரலாம்.

    பிரபாகரன் என்ற இன உணர்வை இவர்கள் அறிக்கைப் போர் வடிவத்துக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.

    எனவே இவற்றின் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்து கொள்ளவே நடந்தவற்றை ஒரு தொகுப்பாகத் தருகிறோம்.

    மே 18 :


    “இலங்கை ராணுவ முற்றுகையில் இருந்து (வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி) பிரபாகரன் தனது தளபதிகளுடன் குண்டு துளைக்காத ஒரு கவச வேனில் வட பகுதியை நோக்கி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, ராணுவத்தினர் வீசிய ராக்கெட்டில் பிரபாகரன் சென்ற வேன் சிதறடிக்கப்பட்டது. பின்னர், அந்த வேனுக்குள் இருந்து சிதைந்த நிலையில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டது. எனவே அடையாளம் காணமுடியவில்லை.

    ராணுவத்துடன் நடந்த இறுதிக்கட்ட சண்டையில் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதி செயலகத்தின் இயக்குனர் எஸ்.புலித்தேவன் உள்ளிட்ட 220-க்கும் அதிகமான விடுதலைப்புலிகளும் ராணுவத்துடன் போரிட்டு இறந்தனர்”, என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்செகா தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தி ஒத்து ஊதியவர் உதய நாணயக்கார!

    ராணுவம் வெளியிட்ட இந்த தகவலை மறுத்த, புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன், ‘சேனல் 4′ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இலங்கை ராணுவம் கூறி வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட மோசடியே. களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடல்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று ராணுவம் கூறி வருகிறது. இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது,” என்றார்.

    மே 19 :

    விடுதலைப்புலிகளை போரில் ராணுவம் வீழ்த்திவிட்டது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே தெரிவித்தார். ஆனால், பிரபாகரன் மரணம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

    ராஜபக்சே உரையைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில், போரில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் மதியம் அறிவித்தது. அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வெளியிட்டது.

    இம்முறை வேறு கதை சொன்னது.

    “பிரபாகரனின் உடல் நந்தி கடல் கழிமுக பகுதியில் கிடந்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர். மேஜர் ஜெனரல் கமல் குனரத்னே தலைமையிலான 53-வது படைப்பிரிவினர் பிரபாகரனின் உடலை கண்டு எடுத்தது,” என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கர தெரிவித்தார்.

    பிரபாகரனின் உடலை விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), ராணுவத்தில் சரணடைந்த தயா மாஸ்டர் ஆகியோர் அடையாளம் காட்டியதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

    ஆனால் இப்போதும் செல்வராசா பத்மநாதன் ஒரு பேட்டி அளித்தார்.

    அதில், விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகள் பி.நடேசன், எஸ்.புலித்தேவன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது உண்மையே. ஆனால் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமுடனும் உள்ளார் என்றும், தான் அவரோடு பேசியதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

    பிரபாகரனின் மரணம் உறுதிசெய்யப்படவில்லை என்பதால், அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

    மே 20:

    பிரபாகரன் மரணமடையவில்லை என்று கூறி, புலிகள் தரப்பு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வந்த நிலையில், அவரது மரணம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறிய இலங்கை அரசு, “பிரபாகரன் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை பெறப்படும். அதைத்தொடர்ந்து சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பிறகே பிரபாகரன் உடல் அடக்கம் செய்யப்படும்,” என்று தெரிவித்தது.

    மே 21:

    இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் ஆகியோர் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேயை சந்தித்து விருந்துண்டனர். ஏராளமான புதிய உதவிகளை இலங்கைக்கு அறிவித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பிரபாகரன் மரணம் பற்றிய சான்றிதழை கேட்க வந்ததாகவும், அந்த சான்றிதழ் வந்துவிட்டால் ராஜீவ் கொலை வழக்கை மூடிவிடுவோம். பிரபாகரன் மரணத்தில் இந்தியாவிக்கு சந்தேகமே இல்லை, என்றும் கூறினர்.

    மே 22 :

    இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டி ஒன்றில், “விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாங்கள் போரில் உயிருடன் பிடிக்கவே விரும்பினோம். அப்படி பிடித்திருந்தால் அவரை ராஜீவ்காந்தி கொலை வழக்கிற்காக இந்தியாவின் வசம் ஒப்படைத்திருப்போம். 30 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டிலிருந்து தீவிரவாதிகளை அடியோடு அகற்றி இருக்கிறோம். இப்போது நாங்கள் ஒருங்கிணைந்த, முழுமையான நாடாக திகழ்கிறோம்,” என்றார் ராஜபக்சே. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அவர் கூறவில்லை.

    அதேநேரம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும், தகுந்த நேரத்தில் அவர் மக்கள் முன் தோன்றுவார் என்றும் விடுதலைப்புலிகளின் வெளிவிவகார உளவுத்துறையின் தலைவர் அறிவழகன் அறிவித்தார்.

    இதுபற்றி புலிகள் ஆதரவு இணையதளம் வெளியிட்ட செய்தியில், “தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று இலங்கை அரசாங்கமும், அதன் ராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரசாரத்தை திட்டவட்டமாக மறுக்கிறோம்.

    தமிழீழ விடுதலைக்கு ஆதரவு குரல் எழுப்பி வரும் உலக சமுதாயத்தை குழப்புவதற்காக இலங்கை அரசாங்கம் தமிழ் ஈழ தேசிய தலைவர் தொடர்பான பொய்ப் பிரசாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது. எமது பாசத்துக்குரிய தேசிய தலைவர் உயிருடனும், நலமுடனும் இருக்கிறார். அவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்,” என்று அறிவழகன் கூறியிருந்தார்.

    மே 23:

    விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் உடலை எரித்து, சாம்பலை கடலில் வீசி விட்டதாக, இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா தெரிவித்தார்.

    மே 24

    பிரபாகரன் கொல்லப்பட்டதாக மே 18-ல் இலங்கை ராணுவம் அறிவித்தபோதும், 19-ம் தேதி அவரது உடல் என்ற ஒன்றை ராணுவம் காட்டிய போதும் அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்த புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், மே 24-ம் தேதி ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பிரபாகரன் ‘வீர மரணமடைந்து’விட்டதாகக் கூறி அதிர வைத்தார்.

    மேலும், லண்டன் பி.பி.சி. ரேடியோவுக்கு டெலிபோன் மூலம் அளித்த பேட்டியிலும், பிரபாகரன் மரணமடைந்தாக செல்வராசா பத்மநாதன் திரும்ப திரும்ப கூறினார்.

    பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை தமிழர்கள் யாரும் நம்ப வேண்டாம், பிரபாகரன் தக்க நேரத்தில் வருவார் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டார்.

    இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனும் பத்மநாதனின் அறிக்கையை நம்ப வேண்டாம், பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று கூறினார்.

    மே 25:

    செல்வராஜா பத்மநாதனின் அறிக்கைக்கு மறுப்பாக மீண்டும் புலிகளின் புலம் பெயர்ந்தோர் விடுதலைப்புலிகள் துறை தமிழ்நெட் இணைய தளத்துக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் விடுதலைப்புலிகளுக்கு உளவுத்துறை கொடுத்துள்ள தகவல்படி பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். வேறு எந்த குழப்பமும் வேண்டாம், என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    -இன்னும என்னென்ன சொல்லப் போகிறார்களோ..!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2008
    Location
    தமிழகம்
    Posts
    106
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    காத்திருப்போம் நம்பிக்கையுடன்
    அவர் ஓரு நிகழ்கால சரித்திரமனிதர் என்பதில் அனைவருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.

    இப்போழுது அனைவரும் அங்கிருக்கும் தமிழ்மக்களின் நலனையும் அவர்களின் வாழ்விடங்கள் மறுபடியும் சீரமைக்கபடுவதை பற்றிமட்டும் நினைத்திருப்போம். உலகத்தின் தீவிரகவனத்திலாவது இலங்கை அரசு இனிமேலாவது ஓழுங்காக இருக்கும் என நம்புவோம்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    காத்திருப்போம்..
    இல்லையென்றால்.. வாரிசுகள்
    ஆயிரம் பிரபாகரன்கள் உருவாகட்டும்..
    அதற்கு முன்னர் அரசியல் தீர்வாவது எட்டுவோம்..
    லட்ச்சியத்தை எட்டுவது தான் தலைவரின்..
    போராட்டத்தின் குறிக்கோள்..
    அது மாற்று பாதையில் கிடைத்தாலும்...பரவாயில்லை

    நிச்சயமற்ற செய்திகளை நான் படிப்பதை தவிர்க்கின்றேன்...

    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Feb 2008
    Location
    தற்போது மலேசியா
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0

    நம்பிக்கையுடன் காத்திருப்போம்..

    தமிழனின் அடையாளம்,
    தமிழின் ஒளி விளக்கு,
    ஈழத்தின் உதய சூரியன்,
    வானத்தில் தோன்றா கதிரவன்,
    அந்த வானமே வியக்கும் கதிரவன்,
    வாழ்க நீ பல்லாண்டு,
    உன் சுட்டுவிரல் காட்டு சுட்டெரிப்போம் பகைவனை.
    காத்திருக்கிறோம் உன் எழில் வதனம் காண.
    உன் சிரிப்பே போதும் பகை எரிக்க.ஈழத்தில் ஒரு கொடியிறங்கியதே உலகமெங்கும் புலிக்கொடி பறக்கிறதே!!!
    "தமிழீழம் காக்கும் காவலரண் தலைவன் எங்கள் பிரபாகரன்" என்றே பாடி நிற்கிறோம். நாங்கள் வாடிவிடவில்லை
    காத்திருக்கிறோம் உனக்காக.......
    வாழ்க தமிழ், வெல்க தமிழீழம்
    நன்றியுடன், புதியவன்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    ஈழ வியாபாரி வைகோவின் கோர முகம்....

    ஈழ பிரச்சனைக்காக யார் எது செய்தாலும், குறுக்கு சால் ஓட்டி, அதை எப்படியாவது மழுங்கடிப்பதே வைகோவின் செயல்பாடாய் இருந்துவந்துள்ளது...வெளியிலே ஏதோ தீவிர ஈழ, புலிகள் ஆதரவு போல பேசினாலும், வேடமிட்டாலும், அவரின் செயல்பாடுகள் எப்போதும் எதிர்மறையாக தான் இருந்துவந்துள்ளது..

    முள்ளிவாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது, அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் பல பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளியானது. ஆனால், வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர், அவர்களின் இறப்பினை உறுதிப்படுத்தாமல், பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இன்றும் பிராபகரன் உயிருடன் உள்ளார், நான்காம் ஈழ போரை துவக்குவார் என்று சொல்வது, தங்களின் ஈழ வியாபாரம் பாதிப்படையகூடாது என்பதற்கு தானே...இவர்கள் இப்படி பேசியது, பேசிவருவது, நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை உணரவிடாமல் செய்து விட்டது..

    இவர்கள் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது எல்லாம் கட்டுக்கதையா? இறுதிகட்ட ஈழ போரின் போது, புலி தலைமைக்கு, இந்திய நிலவரம் குறித்து தவறான தகவல்கள் கொடுத்து, கடைசிநேரம் வரை பொய்யான நம்பிக்கைகளை அளித்து அவர்களை கழுத்தறுத்தவர் வைகோ..

    இந்த சம்பவங்கள் நடந்த அன்றே உண்மையை விளக்கி பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் வந்திருக்கும், ஆனால் மொன்னையாக, தெளிவில்லாமல் பேசி, பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒன்றும் நடக்கவில்லை, தப்பித்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லி, அங்கு உண்மையில் நடந்தவைகளை மறைத்து, அந்த படுகொலைகளின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்....
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இலங்கையில் தமிழர்களின்
    தற்போதைய நிலையென்ன?
    ஒரு இணத்தை புல்பூண்டில்லாமல் எவரும் அழிக்கவியலாது என்பது சரித்திரம் கண்ட உண்மை!
    உணர்வுகள் மடியாமல் காப்பற்ப்படுமா!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •