Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: கணினியை Trojon வைரஸ்களில் இருந்து காப்பாற்ற ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0

    கணினியை Trojon வைரஸ்களில் இருந்து காப்பாற்ற ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?

    எனது கணினியில் வைரஸ் (Trojon) இருக்கிறது, ஆன்ட்டி வைரஸை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது. மேலும் regedit, msconfig போன்ற system பைல்களை திறக்க முடியவில்லை. ஒரு முறை முழுவதுமாக பார்மேட் செய்தும் பார்த்துவிட்டேன். பிறகு மீன்டும் XP ஐ நிறுவினேன், பழைய பேக்அப் பைல்களை மீன்டும் காப்பி செய்யும் போது மீண்டும் அதே பிரச்சனை வந்துவிட்டது.

    Windows update செய்ய முடியவில்லை. என்னிடம் kasparsky updated ஒரிஜினல் மற்றும் வின்டோஸ் XP ஒரிஜினல் இருந்தும் என்னால் வைரஸை தடுக்க முடியவில்லை என்ன செய்வது? நண்பர்கள் யாராவது எனக்கு தயவுசெய்து உதவ முடியுமா?
    Last edited by பாலகன்; 25-05-2009 at 05:19 PM.



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ட்ரோஞ்சன் கில்லர் என்று பல மென்பொருட்கள் உள்ளன. நான் அறிந்தவரை ட்ரோன்ஞன்களை அழிக்க மக்காஃபீ சிறந்த பூச்சிபிடிகொல்லி. இலவசம் இல்லை தான். இருந்தாலும் அதற்கும் சில வழிவகைகள் உண்டு... நீங்கள் அறியாததா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    என்னுடைய மெக்காபீ பூச்சிபிடி காலாவதியாகிவிட்டது. அதனால் தான் இந்த காஸ்பர்ஸ்கை வாங்கினேன்.

    போன முறை எனது கணினி செயலிழந்த போது நண்பர் பிரவீண் தயவால் மீண்டு(ம்) பிழைத்தேன்

    கணினியையும் பார்மேட் செய்துவிட்டேன். இப்போது ஒரிஜினல் XPயும் வைத்திருக்கிறேன்... Hijackthis என்ற மென்பொருளையும் நிறுவினேன், ஆனால் அதை ரன் செய்ய நம்ம டிரோஸோன் சகாக்கள் விடமாட்டேன் என்கிறார்கள், செய்வதறியாது முழிக்கிறேன்.

    இதை டெக்னிக்கலாக தான் அகற்றமுடியும் என்று நினைக்கிறேன். மென்பொருள் ரன் செய்யவும் regedit, msconfig இவைகள் திறக்கவும் மறுக்கிறது, Antivirus ஆக்டீவ் ஆக இல்லை, அதை திறந்தாலும் வருவதாக இல்லை



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மன்றில் எனக்கு தனிமடல் வேலைசெய்யவில்லை. உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்.

    மீண்டும் போர்மட் செய்து பூச்சிநாசினியை நிறுவியபின்னர் உங்கள் கோப்புக்களை இடமாற்றுங்கள்.

    இல்லாவிட்டால் ஒன்று செய்துபாருங்கள். உங்கள் கணினியை முந்தய திகதிக்கு safemode இல் restore செய்து பாருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    நன்றி நண்பரே,

    நான் முதலில் Restore செய்து பார்க்கிறேன்.

    சரிவரவில்லையெனில் இன்னொரு முறை பார்மேட் தான்

    எனது மின்னஞ்சல் savalrajabilla@gmail.com



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Restore செய்ய முயற்சித்தேன், ஆனால் அந்த ஆப்ஷன் திறக்கவில்லை. அந்த அளவுக்கு கடிச்சி வச்சிருக்கு இந்த பூச்சி. வேறு வழி இல்லையெனில் பார்மேட் செய்துவிடுகிறேன். ஆனால் மீன்டும் பழைய கோப்புக்களின் படியை (Backup files copy) பேஸ்டு செய்தால் பழைய வைரஸ் வராதா? அதனால் நிரந்தரமாக இதை நீக்க ஏதாவது வழி உள்ளதா?

    எப்படி சிக்கிக்கிட்டேன் பாருங்க



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    format செய்துவிட்டு பின் பூச்சிகொல்லியை நிறுவி அப்டேட் செய்துவிட்டு பின்னர் கொப்பி செய்யுங்கள். கொப்பி செய்யமுன் அந்த போல்டரை scan செய்துவிட்டு செய்யுங்கள். அப்போது அந்த பூச்சியை பிடிக்காவிட்டால் கொப்பிசெய்யாது விடுவது நலம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    சேஃப் மோடில் சென்று, மூழூ கணினியையும் காஸ்பர்ஸ்கை(அப்டேட்டடு) மூலம் ஸ்கேன் செய்து பாருங்கள்...

    இதேப் பிரச்சனை எனக்கும் ஏற்பட்டது, நான் அவ்வாறு தான் செய்தேன்... இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை.....

    இல்லை என்றால் Norman_Malware_Cleaner வைத்து சேஃப் மோடில் முயற்சி செய்யுங்கள்...

    ஆனால் ஒரு வழி செய்துவிட்டது என்னை...
    Last edited by இன்பா; 26-05-2009 at 11:03 AM.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    ஒவ்வொருவரும் அவரவர் கனினியில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமான பைல்கள் இவை, ஆபத்து நேரத்தில் உதவும் மென்பொருட்கள்.
    http://siri.geekstogo.com/SmitfraudFix.php (முழுக்க இலவசம் பிரியப்பட்டால் அன்பளிக்கலாம், கட்டாயமில்லை)

    http://download.cnet.com/Trend-Micro...-10227353.html (இலவச மென்பொருள்)

    http://rs154.rapidshare.com/files/79783905/RRT.exe (தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம்)

    ஒரு கம்ப்யூட்டரில் நச்சுநிரல் தொற்று இருப்பதாக அறிந்தால், உடனே அந்தக்கணினியில் பதிந்திருக்கும் நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளை அப்டேட் செய்து இனைய தொடர்பை துண்டித்து, கீழே கண்டவாறு செய்யவும்

    1) கம்ப்யூட்டரை சேப் மோடிற்கு கொண்டு செல்லவும், (கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து அது பீப் என்று இயங்க தொடங்கும் போது F8 key யை விட்டு விட்டு அழுத்தினால் விண்டோஸ் ஸ்டார் மெனு தெரியவரும்., சமயத்தில் சில இண்டெல் மதர்போட்டு வகையறாக்களில் எதில் பூட் செய்ய என்று கேட்கும், அதில் ஹார்ட்டிஸ்க் என்பதை செலக்ட் செய்து அடுத்து F8 key யை விட்டு விட்டு அழுத்தினால் விண்டோஸ் ஸ்டார் மெனு தெரியவரும்)

    2) சேப் மோடில் சென்றவுடன் ரண் விண்டோவில் (ஸ்டார்ட் மெனுவில் இருக்கும்) %temp% என்பதை கொடுத்து எண்டர் செய்தால் டெம்பரவரி போல்டர் தெரியவரும், அதில் இருக்கும் அனைத்து போல்டர்களையும் நீக்கி விடலாம், ஏனென்றால் முக்கால்வாசி நச்சுமென்பொருட்கள் அந்த இடத்தில் இருந்து தான் இயங்குகின்றன.

    3)அடுத்து முன்னரே பதிவிறக்கி வைத்திருக்கும் கீழே கண்ட மென்பொருட்களை ஒவ்வொன்றாக இயக்கவும்.

    அ) ரீமூவ் ரெஸ்ட்ரக்ஸன் டூல் (RRT)
    ஆரம்பத்தில் (வனிகம்)தெரியாமால் அந்த மென்பொருள் தயாரிப்பாளர் ஒருமுறை இலவசமாக கொடுத்தனர், அந்த டூல் மிகவும் சிறப்பாக கீழே கண்ட நச்சுநிரஆல் ஏற்படும் விண்டோஸ் பிழைகளை சிறப்பாக மாற்றியமைக்கிறது.

    ctl+alt+del என்பதை எனேபில் செய்ய
    டாஸ்க்மேனஜரை எனேபில் செய்ய
    ரெஜ் எடிட் எனேபில் செய்ய
    போல்டர் ஆப்சனை எனேபில் செய்ய
    இப்படி சில முக்கியமான வசதிகளை சரி செய்து தருகிறது.


    ஆ) ஸ்மித்ப்ராடுபிக்ஸ்

    இந்த மென்பொருள் சேப்மோடில் தான் சிறப்பாக இயங்கும், இதனை இயக்கிய பின்னர் 2 என்ற ஆப்சனை தேர்ந்தெடுந்தால் போதும். இடையே அது ரிஜிஸ்ட்ரியை க்ளின் செய்யவா என்னும் போது யெஸ் என்பதற்கு Y என்று கொடுக்கவும்.

    [media]http://siri.geekstogo.com/Bitmaps/Fix01b.png[/media]

    [media]http://siri.geekstogo.com/Bitmaps/Fix02b.png[/media]

    இ)ஹைஜாக்திஸ்
    இந்த மென்பொருளை இயக்கி மறைந்திருந்து நம் கம்ப்யூட்டரில் தானே தோன்றும் நச்சுநிரல்களை கண்டறிந்து நீக்கலாம்.

    இதன் பின்னர் மறக்காமல் உங்கள் நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளை இயக்கி முழுக்கம்ப்யூட்டரையும் ஒருமுறை சோதித்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுத்து பின் ரீ ஸ்டார்ட் செய்து பாருங்கள்.
    Last edited by praveen; 27-05-2009 at 06:58 AM.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    பரவீன் எப்படி நன்றி சொல்வது
    என்று தெரியவில்லை.

    நன்றி நன்றி நன்றி

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  11. #11
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    ப்ரவீன் அவர்களுக்கு
    #9 முதல் இரண்டு மென்பொருளுக்கும் பல முறை நன்றி சொல்லி இருந்தாலும் மூன்றாவதாக கொடுத்த மென்பொருளுக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி
    ஜெயிப்பது நிஜம்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    எனது கணினியை காப்பாற்றிய நண்பர் பிரவீண்க்கு நன்றி நன்றி நன்றி

    தாங்கள் அளித்திருக்கும் தகவலுக்கும், மென்பொருள்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.

    இப்போ எந்த இடக்கும் செய்யாமல் கணினி இயங்குகிறது.



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •