Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 53

Thread: தமிழர்களின் ஹீரோ - பிரபாகரன்!!!

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    தமிழர்களின் ஹீரோ - பிரபாகரன்!!!

    இந்த கட்டுரையில் நான் எழுதவேண்டும் என நினைத்த அத்தனை விடயங்கலும் எழுதப்பட்டுள்ளன. இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.



    எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

    மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.

    நேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.

    தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

    சென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.

    குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.

    அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.

    தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.

    இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

    வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

    எழுதியவர் : யுவகிருஷ்ணா
    (http://www.luckylookonline.com/2009/...g-post_19.html)
    Last edited by Honeytamil; 19-05-2009 at 12:41 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுதுமலையில் மின்னலாய்... கிட்டண்ணாவின் இறுதிச்சடங்கில் தென்றலாய்..

    மக்கள் திலகத்துடன் எனக்குத் தலைவனாவன்.
    தலைவா என்றழைக்கும் இடைவெளி கொடுக்காது அண்ணனானவன்.
    Last edited by அமரன்; 19-05-2009 at 01:17 PM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பிரபாகரன் பற்றி வரிகள்... எண்ணங்கள் அருமை...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    இந்த கட்டுரையை படிக்கும் பொழுதே நெஞ்சு புடைக்கிறது, ஒவ்வொரு வரி படித்து முடித்தவுடன் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை பார்த்தேன் வீரம் தானாகவே ஊற்றெடுக்கிறது. உண்மையில் அவர் மாவீரன் தான், மேலே உள்ள படத்தில் மிக மிக அழகாகவும் இருக்கிறார், பிரபாகரன் அவர்களை பற்றிய இந்த செய்திகளை நீங்கள் அவர் உயிருடன் இருக்கும் பொழுது போட்டு இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும், அந்த ஊக்கத்திலே அவர் இன்னும் பல நாட்கள் வாழ்ந்து இருப்பார். எங்களை போலவர்களுக்கும் அவரின் உண்மையான வரலாறு தெரிந்து இருக்கும். எங்களை போல பல இளைஞர்களுக்கு அவரின் வரலாறு தவறாக திரித்து சொல்லப்பட்டு இருக்கிறது, மன்றம் வந்த பின் தான் அவரைப் பற்றிய பல தகவல்களை படிக்க நேர்ந்தது.

    அமரன் சொன்னது போல உலகத்திலே தனியாக விமானப்படை வைத்திருந்த இயக்கம் அவருடையது மட்டும் தான்.

    பிரபாகரன் உண்மையில் ஒரு ஹீரோ தான், ஆனால் கால் நூற்றாண்டாக பாடுபட்ட ஒருவனுக்கு அவன் கனவை பார்க்காமலே இறந்து போவது ரொம்ப கொடுமையான விஷயம் தான்.

    ஆண்டவா செத்தது பிரபாகரனாக இருக்ககூடாது
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #5
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    உண்மை.. எனக்கு.. எம்.ஜி.ஆரை.. பிடிக்காமல்.. சிவாஜியை பிடித்தது..
    அவ்வளவு தான்....மாற்றம்.. ஆனால் இக்கட்டுரையில் வந்த முதல் பத்தி என் வாழ்க்கையிலும் உண்டு..
    பிரபாகரன் படத்தை.. பெட்டியில் வைக்க பெற்றோர் சொன்னதால்.. என்னுடைய பெட்டியில் இருக்கு...

    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    இன்னும் இன்னும் படிக்கவேண்டும் என்று ஆசை வருகிறது. எவ்வளவு அழகாண செய்தி.
    அன்புடன் உதயா

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பிரபாகரன் பற்றி விக்கிபீடியாவில்

    http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran

  8. #8
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பிரபாகரன் பற்றி விக்கிபீடியாவில்

    http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran
    ஆம் அந்த தளத்தில் எல்லாம் தப்பு தப்பாக எழுதப்பட்டுள்ளது.

  9. #9
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    அவர் ஒரு அண்ணனாக , தம்பியாக , மாமனாக ஒரு ஹீரோவாக நிச்சயம் தமிழர்களினது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நிச்சயம் வாழ்வார்!!! அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    Quote Originally Posted by Honeytamil View Post
    அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம்.
    நிதர்சனமான உண்மை.

  11. #11
    புதியவர்
    Join Date
    18 Aug 2005
    Location
    மத்திய கிழக்கு
    Age
    47
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    10,020
    Downloads
    0
    Uploads
    0

    வணக்கம்

    இந்த கட்டுரையி என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கிரது.
    என் தலைவனின் வீரத்தை சொல்ல வார்த்தைகலே இல்லை.................!

    வருகிற கண்ணீரை கூட அடக்கி கொன்று, நெஞ்சை கல்லாக்கி
    என் தலைவன் மீண்டும் எமக்காயி பிரப்பான் இவ்தரனியிலே.
    என்ற நன்பிக்கையுடன் வாழ்கிரேன்.
    உணர்வுகளை பகிர்ந்து கொன்றதுக்கு.

    நன்றி
    வணக்கம்.........

  12. #12
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    தமிழர்கள் என்றால்...?

    ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •