Page 4 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 153

Thread: தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு கெட்ட செய்தி

                  
   
   
  1. #37
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Feb 2008
    Location
    தற்போது மலேசியா
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0

    வேலுப்பிள்ளை பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் எங்கே? செய்தி ஆய்வு குளோபல் தமிழச் செய்

    விடுதலைப்புலிகளின் தலைவல் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

    வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

    விடுதலைப்புலிகள் தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டுள்ளனர் அவர்களிடையேதான் பிரபாகரனும் இருக்கலாம் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

    ஆயின் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கே? படையினர் சுற்றிவளைத்துள்ள 800 மீற்றர் பரப்பிற்கு உள்ளேயா? அல்லது, அதற்கு வெளியே வன்னியிலா அல்லது அதற்கும் அப்பால் இலங்கையினுள்ளேயா? இல்லை வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றுவிட்டாரா? ஏன்ற கேள்விகள் பலரையும் உலுப்பிவிட்டு இருக்கிறது.

    இன்று இலங்கையில் ஜனாதிபதி தரையிறங்கி மண்ணை முத்தமிட்ட போது நாட்டில் பட்டாசுகள் வெடித்துக் கிழம்பின. சிங்கள மக்கள் நாட்டிற்கு இரண்டாவது தடவையாகக் சுதந்திரம் கிடைத்துவிட்டதெனக் கூறி பால்பொங்கல் பொங்கி உண்டு மகிழ்ந்தனர்.

    இன்று கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காவற்துறை மற்றும் இராணுவ வாகணங்களில் சென்று வீதி உயர வானுயர சிங்கக் கொடிகளையும் தேசியக் கொடிகளையும்;, பௌத்த கொடிகளையும் பாதுகாப்பு தரப்பினர் கட்டுகின்றனர். திருமலையில் வெள்ளவத்தையில், கண்டியில் நுவரெலியாவில் என எல்லா இடங்களிலும் கொழுத்தப்பட்ட வெடிகள் மணித்தியாளக்கணக்காக வெடித்தனவாம். தமிழ் மக்கள் கூனிக் குறிகி பார்த்து நிற்கிறார்களாம்.

    இந்த மகிழ்ச்சியைத் தூண்டுமுகமாக தலைநகரில் கையடக்கத் தொலைபேசியில் தககவல்களையும்; செவி வழியான தகவல்களையும் அரசாங்கத் தரப்பினர் வேகமாகப் பரப்பி விட்டனர்;. பிரபாகரனின் சடலம் கொழும்பு வைத்தியசாலையில் என்றனர். பனாங்கொட ராணுவ முகாமில் என்றனர். இல்லை அவரது சடலம் எரிந்துவிட்டதகவும் கூறினர்.

    இந்தியாவிலும் வேகமாகவே செய்திகள் பரவின. பல ஊடகங்களும் செய்திகளை வேகமாகவே வெளியிட்டன.

    அரசாங்கத்திற்கும் ஒரு தேவை உண்டு யுத்தத்தை முடிப்பதாக இருந்தால் ஆகக் குறைந்தது பிரபாகரனை அல்லது பொட்டு அம்மானை முடித்தாக வேண்டும். அப்போதுதான் யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்க முடியும்.

    அதனால் முடிந்து விட்டதாகக் கூறினால்த்தான் மக்களிடம் இவர்கள் யுத்தம் முடிந்ததாக கூற முடியும்.

    ஆனால் களத்தில் நடப்பதுவோ வேறு. அரச படைகளின் தாக்குதல்களால் அப்பாவிப் பொதுமக்களே பெருமளவில் கொல்லப்பட்டு பெருமளவில் காயம் அடைகின்றனர்.

    நடக்கும் சண்டையில் புலிகளும் கொல்லப்படுகின்றனர். சில முக்கியஸ்த்தர்களுடன் பல போராளிகளும் கொல்லப்படுகின்றனர். காயமடையும் கொல்லப்படும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான புலிகளே மரணிக்கின்றனர். இந்த நிலையில் கொல்லப்படும் மக்களும் புலிகளின் பட்டியலிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இவை இவ்வாறு இருக்க ஜோர்டானில் இருந்து முண்டியடித்துக் கொண்டு இலங்கை சென்ற ஜனாதிபதி இன்று இலங்கை நேரம் 1.30ற்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருந்தார். முடியவில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பிற்போட்டுள்ளார்.

    முல்லைத் தீவின் கரை முள்ளிவாய்க்கால் பகுதியின் ஒரு கிலோ மீற்றர் பகுதிக்குள் இருந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட புலிகள் தொடர்ந்தும் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருவதாக படைத்தரப்பினர் இரகசியமாகக் கூறுகின்றனர்.

    இதில் நேற்றைய தினம் இரவும் அதிகாலையும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எனது நேற்றைய செய்தி ஆய்வில் நந்திக்கடல் பரப்பின் ஒரு பக்கம் யாருடைய கட்டுப்பாட்டில் என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கான விடையை இன்று பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

    முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்கள் பல படகுகள் தப்பிச் சென்றுள்ளதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    ஆயின் 26 வருடங்களின் பின் புலிகளிடம் இருந்து கடல்ப் பகுதியை கட்டுப்பாட்டுள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் பாதுகாப்புத் தரப்பு வெளியிட்ட அறிக்கையின் அர்த்தம் என்ன?

    இந்த கடல்ப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் புலநாய்வுத் துறையைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தளபதிகள் கொல்லப்பட்டது உண்மை எனத் தெரிய வருகிறது. இதில் யாழ்மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த மாஸ்ரர் என்பவரும் உள்ளடங்குவதாக தெரிய வருகிறது. ஆயினும் புலிகள் தரப்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    எனினும் மூழ்கடிக்கப்பட்ட படகுகள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தவிர தப்பிச் சென்ற படகுகளில் சென்றவர்கள் யார் அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற கேள்வி பாதுகாப்புத் தரப்பை பெரும் குளப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஆனால் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் அந்தப் படகுகளில் பாதுகாப்பான தமது தளத்திற்குச் சென்றதுவே உண்மை என பேசப்படுகிறது.

    அப்போ புலநாய்வுத் துறை தலைவர் நேற்று கரை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றார் ஆயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் இனியும் அங்கு இருப்பாரா? அல்லது கொல்லப்பட்டு இருப்பாரா? அல்லது தற்கொலை செய்திருப்பாரா? அவையும் பொய்யான பிரச்சாரம் என்றே புலிகளில் பலர் கூறுகின்றனர். அவர் முன்னரே தனது பாதுகாப்புத் தளத்திற்குச் சென்று விட்டதாகவே கூறுகிறார்கள்.

    ஆக விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்துகின்ற உயர் கட்டமைப்பு, புலனாய்வுக் கட்மைப்பு, அவற்றிற்குரிய ஆளணி தளபாடங்கள் என்பவை பாதுகாக்கப்பட்டுவிட்டதாகவே புலிகளின் உட்கட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.

    ஆனால் அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய ஊடக பிரச்சாரத்தை புலிகளும் மறுக்கப் போவதில்லை எனவும் தெரிய வருகிறது. காரணம் தொடருகின்ற சர்வதேச பிராந்திய அரசியல் நகர்வுகளிற்கு அரசாங்கத்தின் பிரச்சாரம் வெகுவாக உதவும் என்பதால் புலிகள் மொனம் காக்கவே முற்படுவர்.

    தமது சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனின் அரசியல் நகர்வுகள், அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கோரிக்கை, அதனை நோக்கிய புலிகளின் பதில்கள், இந்திய அரசின் முன் நடவடிக்கைகள் சர்வதேசத்தின் கைகளில் வழங்கப்பட்டுள்ள பந்தை அவர்கள் பிரயோகிக்கும் முறை முதலானவற்றைப் பொறுத்தே புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் எனவும் புலிகள் தரப்பில் பேசப்படுகிறது
    தகவல் : kusnacht siva
    18 May 2009 USA

    நன்றி,
    ஈழம் வெப்சைட்.கொம்

  2. #38
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Feb 2008
    Location
    தற்போது மலேசியா
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0

    முக்கியமான சில தகவல்கள் : செல்வராசா பத்மநாதனிடமிருந்து

    நாங்கள் விடுதலைக்காகப் போராட எடுத்த ஆயுதம் சரணடைய அல்ல - நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கிறோம். சரணடைய அல்ல- செல்வராசா பத்மநாதன்

    www.nitharsanam.com/public/LTTE/kpvp.jpg
    திங்கட்கிழமை 18 மே 2009

    சிறிலங்காவில் விடுதலைப்புலிகளின் இப்போதைய நிலைமைகள் என்ன?
    செல்வராசா பத்மநாதன்: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே வைக்கவும் அரசியல் நீரோட்டத்தில் கலக்கவும் தயாராக உள்ளது.

    அலெக்ஸ் தொம்சன்: எவ்வளவு போராளிகள் அங்கிருக்கின்றனர்?
    செல்வராசா பத்மநாதன்: ஆகக்குறைந்தது இரண்டாயிரம் போராளிகள் உள்ளனர். நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்குத் தயாராக உள்ளோம். எங்கள் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மணித்தியாலமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிலிருந்து இதுவரை மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 25000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

    அலெக்ஸ் தொம்சன்: இவர்கள் பொதுமக்கள் தானா?

    செல்வராசா பத்மநாதன்: ஆம்.

    அலெக்ஸ் தொம்சன்: சிறிலங்கா அரசாங்கத்திற்கு என்னவாறான அழைப்பை நீங்கள் விடுத்திருக்கிறீர்கள்?
    செல்வராசா பத்மநாதன்: உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு நேற்றிலிருந்து கோரி வருகிறோம். நாங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவும் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

    அலெக்ஸ் தொம்சன்: இது இந்தப் போர்களின் ஒரு முடிவா?
    செல்வராசா பத்மநாதன்: ஆம் நாம் போரை நிறுத்த விரும்புகிறோம்.

    அலெக்ஸ் தொம்சன்: விடுதலைப் புலிகள் போரை இன்னொரு வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வார்களா? அதாவது ஒரு கெரில்லாப் போராக.

    செல்வராசா பத்மநாதன்: நாங்கள் கடந்த 38 வருடங்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டே வருகிறார்கள். இன்னொரு 30 வருடங்களுக்கு... நாங்கள் அதனை நம்பவில்லை. நாங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காணவே விரும்புகிறோம்.

    அலெக்ஸ் தொம்சன்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து எவ்வாறான உத்தரவுகள் வருகின்றன?
    செல்வராசா பத்மநாதன்: நான்கு மணித்தியாலங்களாக நான் அவருடன் உரையாடினேன். அவர் இந்தச் செய்தியைத் தான் சிறிலங்காவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்கச் சொன்னார். இப்போது நாங்கள் அவர்களுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இதுவரை ஒருவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை. ஒருவரும் போரை நிறுத்த முன்வரவில்லை.

    அலெக்ஸ் தொம்சன்: பிரபாகரன் இன்னமும் அங்கு தான் இருக்கிறாரா?
    செல்வராசா பத்மநாதன்: ஆம்.

    அலெக்ஸ் தொம்சன்: அவர் சுற்றிவளைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்தா உங்களுடன் பேசினார்? அவர் சரணடையத் தயாரா?
    செல்வராசா பத்மநாதன்: சரணடைய அல்ல. நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கிறோம். சரணடைய அல்ல.

    அலெக்ஸ் தொம்சன்: ஏன் சரணடைய மாட்டீர்கள்?
    செல்வராசா பத்மநாதன்: முக்கியமாக இதில் பாதுகாப்புப் பிரச்சினை உள்ளது. நாங்கள் விடுதலைக்காகப் போராடவே ஆயுதம் எடுத்தோம். அவ்வாறானால் ஏன் சரணடைய வேண்டும். நாங்கள் அவர்களுடன் இணைந்து பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக உள்ளோம். சரணடைய அல்ல.

    அலெக்ஸ் தொம்சன்: ஏன் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை வெளியேற விடவில்லை.
    செல்வராசா பத்மநாதன்: நாங்கள் பொதுமக்களை எங்களுடன் தடுத்து வைத்திருக்கவி;ல்லை. அந்தப் பொதுமக்கள் எங்களுடைய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அல்லது சிறிலங்கா இராணுவம் தமக்குப் பாதுகாப்பளிக்கும் என நம்ப அவர்கள் மறுக்கிறார்கள். அவர்கள் முகாமுக்குப் போக விரும்பவில்லை. அங்கு சித்திரவதையும் துன்புறுத்தல்களும் இடம்பெறுவதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் சிறிலங்காப்படையினரிடம் செல்லத் தயாராக இல்லை. அரசாங்கம் உணவையும் மருந்தையும் நிறுத்தி விட்டுள்ளது. அவை இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் 35000 பேரை அனுப்பி வைத்தோம். நாங்கள் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருக்கவில்லை. அது ஒரு தவறான தகவல். தவறான பிரச்சாரம்.

    அலெக்ஸ் தொம்சன்: அது உண்மையானால் ஏன் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அங்கிருந்து மக்களை வெளியேற விடாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்கள்?

    செல்வராசா பத்மநாதன்: உண்மையில் நாங்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்யவில்லை. இருதரப்பிற்குமான துப்பாக்கிப்பிரயோகத்துள் சிலர் அகப்பட்டார்கள். நாங்கள் ஏன் எங்களுடைய மக்களைக் கொல்ல வேண்டும்?

    அலெக்ஸ் தொம்சன்: பொதுமக்களுடைய நிலைமை பற்றி அங்கிருந்து நேர்காணல்கள் வழங்கிக் கொண்டிருந்த இரண்டு வைத்தியர்களைப் பற்றி உங்களிடம் கேட்கலாமா? அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டார்களா?

    செல்வராசா பத்மநாதன்: நேற்றிரவு ஒரு வைத்தியர் காயமடைந்தார். நாங்கள் அவரை சிகிச்சைக்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இன்னொரு வைத்தியர் இராணுவ முகாம் ஒன்றில் சிகிச்சை பெறுவதாக அறிந்தேன்.

    அலெக்ஸ் தொம்சன்: ஆக சாராம்சத்தில்ää விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராக இருக்கிறார். சரணடைய அல்ல.
    செல்வராசா பத்மநாதன்: ஆம். சரணடைய அல்ல. ஆயதங்களைக் கீழே வைக்கத் தயார். சரணடைய அல்ல.

    அலெக்ஸ் தொம்சன்: ஆக போர் முடிவுக்கு வந்து விட்டது. அல்லது மாற்றமடைந்துள்ளது.
    செல்வராசா பத்மநாதன்: போர் முடிவடைந்து விட்டது. அது அரசியல் வழிக்கு மாற்றமடைந்து விட்டது. சில மணித்தியாலங்கள் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம். நாங்கள் சொல்கிறோம்ää எங்களுடைய தேசத்திற்கான அரசியல் தீர்வுக்காக நாங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராக இருக்கிறோம்.

    4 மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:
    Channel

    நன்றி,
    நிதர்சனம்

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    மரபணுச் சோதனைக்கு பிரபாகரனின், அல்லது அவருடைய நெருங்கிய உறவினரின் மரபணு தேவையல்லவா? அதை எங்கிருந்து பெறுவார்கள்?

    ரொம்பக் குழப்புறாங்களப்பா

  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by விராடன் View Post
    மரபணுச் சோதனைக்கு பிரபாகரனின், அல்லது அவருடைய நெருங்கிய உறவினரின் மரபணு தேவையல்லவா? அதை எங்கிருந்து பெறுவார்கள்?
    இல்லைடா, அதற்குத்தான் நேற்று சாள்ஸ் அன்ரனியின் உடலைக் கண்டெடுத்ததாக கூறினார்கள்...

    அதுசரி, சாள்ஸ் அன்ரனியின் உடலை யாருடன் மரபணு சோதனை செய்து உறுதிப் படுத்துவார்கள், பிரபாகரனின் உடலுடனா...??

    என்று யோசித்தால் நீ கூறுவது போல குழப்பம் தான் மிஞ்சும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #41
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Feb 2008
    Location
    தற்போது மலேசியா
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

    http://www.nitharsanam.com/public/LTTE/kpvp.jpg

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
    பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.

    கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

    இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர்.

    எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.

    நன்றி,
    ஈழம் வெப்சைட்.கொம்.

    விதிமுறைகளை மீறி செய்தி வெளியிட்டிருபின் மன்னிக்கவும்.

    இப்படிக்கு,
    புதியவன்.

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இறந்தக்து சாள்ஸ் அன்ரனியாகவும், மரபணு செய்ய வைத்திருக்கும் உடல் பிரபாகரனுடையதாகவும் இருக்கட்டுமே. ஆக இப்ப ஈழத்தில் (அரசின் மொழியில்) பயங்கரவாதிகளுமில்லை, பயங்கரவாதமும் இல்லை. பூண்டோடு அழிந்துவிட்டது. இனியாவது உலக நாடுகள் சொன்னதுபோல் நல்லதோர் அரசியல்த்தீர்வு அமையுமா?
    பார்க்கலாம். அவ்வாறு ஓர் அரசியல்த்தீர்வு அமைந்துவிட்டால் அனைவருக்கும் சந்தோசந்தான்.

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இத்தனை பேர் இறந்து கொண்டிருக்கையில் வாய் மூடியிருந்த உலக நாடுகள், இனி வாய் திறந்து நல்லதொரு அரசியல் தீர்வுக்கு வழி சமைக்குமென்ற நம்பிக்கை எனக்கு ஏனோ இல்லை, அப்படி ஒரு தீர்வு கிடைக்காது போனால் நமக்கென ஒரு நாடு இனி எப்போதும் இருக்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    நான் மட்டும் நம்பிக்கை வைத்தா சொன்னேன்....

    எமது ஐயம் உருப்பெற்றால்.... என்று சிந்தித்துப்பார்த்தேன். அப்போது உதயமானது ...

    "தமிழினி மெல்ல சாகும்" என்று சொல்லிய வார்த்தை மாறி
    ”தமிழினி விரைந்து சாகும்” என்றுதான் அமையும்.

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறோம்.

  10. #46
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    நான் அப்பவே நினைச்சேன்... அதுக்குள்ள புலி சோககீதம் எல்லாம் பாடிடுச்சி. சீக்கிரம் அந்த நல்லசெய்தியுடன் வாருங்கள் நண்பரே



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  11. #47
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    தவறாக பதித்துவிட்டேன். என் பதிப்பை நீக்குகிறேன்.
    அன்புடன் உதயா

  12. #48
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    http://www.channel4.com/news/article...script/3151457

    key Tamil Tiger leader has spoken exclusively to Channel 4 News, saying their chief is still alive and they want a political solution. Alex Thomson reports.
    A full transcript of the interview with LTTE Tamil Tigers head of international relations Selvarajah Pathmanathan.

    Alex Thomson (AT): What is the latest situation for LTTE in Sri Lanka?

    Selvarajah Pathmanathan (SP): Our organisation is ready to lay down its arms and participate in the peace process.

    AT: How many cadres or soldiers are involved here?

    SP: Less than 2000 cadres. They are in the perimeter area. We prepared to stop the war. Our people are dying. Every hour more than a hundred dying. More than 3000 die from yesterday. 25,000 wounded.

    AT: These are civilians, yes?

    SP: Yes.

    AT: What are you calling on the Sri Lankan government to do?

    SP: From yesterday we are calling on talks to stop the fighting and immediate ceasefire. We are ready to lay down the arms and participate in the peace process.

    AT: Is this end of the war after all these wars?

    SP: Yes we'd like to end this war.

    AT: What do you say that the LTTE will continue fighting by other means, guerrilla war?

    SP: I believe that over the 38 years we fight and only the civilian and human life are every day dying. The...in another 30 years will continue we don't believe that - we believe in peaceful way for solution for Tamil people.

    AT: What are the orders from the LTTE leader Velupillai Prabhakaran ?

    SP: Prabhakaran actually ordered that. For 4 hours I talked to him - he passed this message to Sri Lanka Government and international players...and we are waiting for their answer. Until now no one give their answer or no one stop the war.

    AT: Is Mr Prabhakaran still in this area in Sri Lanka?

    SP: Yes sir.

    AT: And you spoke to him from this surrounded area, and he is ready to surrender?

    SP: Not surrender. We are lay down the arms not surrender.

    AT: Why not surrender?

    SP: Actually its mainly a thing...about security...we take arms for freedom struggle - why surrender to them. We ready to work with them not surrender.

    AT: Why did LTTE take so many human shields and not allow them to leave?

    SP: We never take the civilian with us. The civilian they are relative our family or the related. Or they don't believe Sri Lankan army will give security to them. They don't like to go to camp. As you know they torture and harassment. They don't want to go to Sri Lanka forces. The government stop medicine and food. People are dying without. We asked - we sent 35,000 out ourselves. We don't take human shield. It's the wrong information. Wrong propaganda.

    AT: So its not true then that LTTE cadres fired on civilians to prevent them leaving?

    ST: Actually we never shoot them. Some crossfire happened. Why would we kill our own people?

    AT: Can I ask about the two doctors who were giving interviews about the condition of the civilians. They have disappeared?

    SP: Last night one doctor injured. We send them to the military side. And for the treatment. Acutally now I heard one doctor in Colombo for treatment other in military camp.

    AT: To summarise, the condition of the commander Pr...LTTE are willing to lay down weapons but not surrender?

    SP: Yes not surrender - willing to lay down arms not surrender.

    AT: So is the war over or changing?

    SP: War maybe over or changing to political way. Depending on few hours to see what going on. We are saying...willing to lay down arms...willing to lay down arms and find political solution for our nation.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 4 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •