Results 1 to 5 of 5

Thread: டைரி

                  
   
   
 1. #1
  Awaiting பண்பட்டவர்
  Join Date
  02 Aug 2008
  Posts
  182
  Post Thanks / Like
  iCash Credits
  7,642
  Downloads
  1
  Uploads
  0

  டைரி

  திருமணமான மறுவாரமே அசோகனின் மனைவிக்கும் அவன் அம்மாவிற்க்கும் சமையல் செய்வதில் பிரச்சனை வந்து அது சண்டையாய் மாறியது.

  ” என்னங்க, அத்தை என்ன திட்டினாங்க!” அலுவலகத்திலிருந்து திரும்பிய அசோகனிடம் கண்ணீர் விட்டபடியே சொன்னாள் அவனது மனைவி.

  “ டேய், உன் மனைவி என்கிட்ட மரியாதையில்லாம நடந்துகிட்டா!” வருத்தம் படிந்த முகத்துடன் சொன்னாள் அவனது தாயார். அசோகன் தீவிரமாய் யோசித்து இருவருக்கும் இரண்டு டைரி வாங்கித்தந்தான்.

  ” நீங்க சண்டை போடுங்க தப்பில்ல ஆனா அந்த சண்டை எதுக்காக வந்ததுன்னு நான் தெரிஞ்சுக்கணும் அதனால இந்த டைரியுல நடந்த சண்டைய எழுதி வையுங்க, நான் வந்து படிச்சு தெரிஞ்சுக்கறேன்!” என்றான் அசோகன்.

  ஆரம்பத்தில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடந்த சண்டையை எழுத ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எழுதுவது குறைந்து சண்டையே போடாமல் சமாதானமாகிவிட்டார்கள்.

  அசோகனுக்கு அது ஆச்சரியமாகப்படவே தனது மனைவியிடம் அதற்கான காரணத்தை கேட்டான்.

  ” ஆரம்பத்துல சண்டை போட்டுட்டு அத டைரியுல எழுத ஞாபகப்படுத்தினப்போ இப்படியெல்லாமா கோபத்துல அத்தைய திட்டினோம்னு மனசு கஷ்டமாச்சு, இதேமாதிரி தான் அத்தைக்கும் தோணிச்சாம், அப்பறம் சண்டை போடுறதையே நிறுத்தியிட்டோம்!” அவள் சொல்லச் சொல்ல அசோகன் ஆனந்தப் பரவசமானான்.
  நான் மலர்கள் என்று நினைத்து முட்களில் நடந்தவன்.
  முட்களில் நடந்ததால் மனம் கிழிந்து போனவன்

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,616
  Post Thanks / Like
  iCash Credits
  58,579
  Downloads
  89
  Uploads
  1
  ஆஹா.. அருமையான குறுங்கதை..

  காலங்காலமாய் வழங்கி வரும் மாமியார்-மருமகள் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைக்க சிறந்த யோசனை.

  கோபத்தில் தெறிக்கும் வார்த்தைகள் பின்பு யோசித்தால் நாமே வெட்கப்படுவோம்.. கோபத்தைக் கட்டுப்படுத்தி அன்பில் ஜெயிப்பதே அனைவருக்கும் நல்லது.

  பாராட்டுகள் ஐ.பா.ரா.
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 3. #3
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  164,055
  Downloads
  39
  Uploads
  0
  நல்ல கருத்தை சொற்ப வரிகளில் சொல்லியிருப்பது மிகவும் அருமை. பூமகள் சொன்னதைப்போல மாமியார்-மருமகள் சண்டையை தீர்க்க அருமையான யோசனை.
  வாழ்த்துகள் ஐ.பா.ரா.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
  Join Date
  22 Oct 2008
  Location
  சென்னை
  Posts
  2,064
  Post Thanks / Like
  iCash Credits
  18,225
  Downloads
  34
  Uploads
  6
  நல்ல குறுங்கதை ராசய்யா, ரொம்ப நாள் கழித்து நல்ல குறுங்கதை படித்த திருப்தி

  வாழ்த்துக்கள்
  மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  250,670
  Downloads
  151
  Uploads
  9
  நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தாலே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை அழுத்தமாகச் சொன்னதுக்குப் பாராட்டுகள் ஐ.பா.ரா.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •