Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: ஈழம்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    ஈழம்!

    1

    என்றும் உலராத
    இருதய ஈரமே
    உயிர் படும்
    அல்லல் தீர்க்க
    ஆதிக்கம் எதிர்த்துப்
    போராடும் வீரமாய்
    இரத்த விதைகளை
    இலங்கை மண்ணில்
    இசைவுடன் பிசைந்து
    இரசவாத அதிசயமாய்
    ஈட்டுத்தரும் விடுதலைக்
    கற்பக விருட்சம்!

    2

    தமிழின இதயம் விதையாய்
    இலங்கையில் விழுந்து
    இனிதே எழுந்த விடுதலை மரத்தில்
    கனிந்து தொங்கும் இருதயப் பழங்களில்
    மன இத ஊட்ட சத்து!

    3

    விடுதலை வேட்கை
    இலங்கைக் கோப்பையில்
    புலிப் பழம் அழுத்திப் பிழியும்
    அமுத இரசம்!

    4

    இலங்கைக் காட்டில்
    புலி வயிற்றில் பிறக்கும்
    சமாதானப் புறா!

    5

    இலங்கை மண்ணில் விழுந்த மெய்கள்
    விண் முட்ட எழுந்தன
    அழியா மெய்யாய்!

    6

    அமுதத் தமிழினம்
    விதையாய் விழுந்த
    இலங்கையில்
    எழாமல் போகுமோ
    இந்த கற்பக விருட்சம்?!

    7

    புலியைக் கொல்லப்
    பாயும் சிங்கங்களால்
    மாய்க்க இயலா
    விடுதலை வேட்கை
    இலங்கையில் வரையும்
    இருதய தேசம்!

    8

    தமிழினக் கூட்டுப் புழுவுள்ளே
    விடுதலை வேட்கை செய்யும் இரசவாதம்
    பறக்க விடாமலா போகும்
    இந்த வண்ணத்துப் பூச்சியை!?

    9

    ஆயுதங்களால் நசிக்க முடியாத
    விடுதலை வேட்கை
    ஈட்டுத் தரும் சமாதான சமரச இலாபம்!

    10

    .ஓரினத்துக்கே முற்றுப் புள்ளி வைக்க முனையும் ராஜ ஆதிக்கம் முன்
    ?கேள்விக் குறியாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப் பிரபா
    !ஆச்சரியமாய் நிமிரும் ஈழம்

    11

    தமிழின இரத்தச் சேற்றில்
    இறவாது பூத்திருக்கும்
    இருதயத் தாமரை!

    12

    எருவான மெய்களால்
    உருவான மெய்யிதை
    இருதயத்தே போற்று!

    13

    தலைக் காட்டில்
    திரு விழிச் சாலையில் பயணித்து
    தொண்டை நாடு வழியே
    இலங்கை இருதயத்துள் இறங்கும்
    திரு பூமி!

    14

    இலங்கை மண்ணில் மக்கி மடிந்ததாய்
    எண்ணப் பட்ட மெய்கள் தாம் ஈன்ற
    விண்ணை முட்டும் உயிர்மெய்!

    15

    ராஜ ஆதிக்கம் எதிர்த்தெழும்
    விடுதலை வேட்கையாம் பிரபா கரம்
    இலங்கையில் சுட்டும்
    இருதயத் திருத்தலம்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    16

    தமிழத்தின் அல்லல் நீக்க
    அங்கையில் கனியாய்ப் பொருந்திய
    ஒப்பில் அதிசயம்!

    17

    அடிமைப் புன் கண்
    பூசலிட்டுப் பாயும்
    அன்பின் நன்னீர்
    அதிசயமாய் ஆக்கும்
    விடுதலை ஆரோக்கியம்!

    18

    இருதயத்தில் கேட்கும் சமரச நாதம்
    இலங்கையில் ஆக்கும் சமாதான ஜோதி
    இன வெறி நீக்கித் தேக்கும் மன இதம்!

    19

    மாயாத் தமிழம்
    ஈன்ற மனிதம்
    ஓங்கும் தாயகம்!

    20

    இருதயம் பிழியும்
    விடுதலை வேட்கை
    வன்மன வரட்சி நீக்கும்
    வற்றா சமரசம்!

    21

    வன்பை விட்டொழித்த
    சிங்கமும் புலியும்
    அன்பைத் தொட்டெய்தும்
    என்றும் அழியா
    இன்பின் இல்லம்!

    22

    வன்புலியின் இருதயத்தில்
    இன்புற்றிருக்கும்
    அன்பே சிவம்
    சிங்கத்தின் சினமடக்கப்
    பொங்கும் மன இதம்!

    23

    வன்பில் திரிவதை விடுத்து
    அன்பில் மனத்தை இருத்தி
    திருட்டியைத் திருத்திப் பார்க்கத்
    தெரியும் இருதயத் திரு பூமி!

    24

    மிருகம் ஈன்ற மனிதம்
    தனக்குள் போந்து தன்னை அறிய
    எனக்குள் தோன்றும் மெய்யுணர்வு!

    (ஈழ தியானத்தில் நான் அடைந்த மெய்யுணர்வின் உச்சம், வாழ்க தமிழம், வளர்க மனிதம்! மெய்யாம் தமிழம்! உயிராம் மனிதம்! உயிர்மெய்யாம் ஒருமையே மெய்யுணர்வாம் ஈழம், புலிகளின் தன்னலமற்ற வீரப் பயணம் நிச்சயம் நம்மைச் சேர்க்கும் ஈழம்! விழலுக்கு இறைத்த நீரல்ல தமிழ இரத்தம்! பாரிங்கே விடிந்தது போரில்லா ஈழம்! பொய்யல்ல, மெய் உணர்வீர் உம் இருதய ஆழம்!)
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தட்ட இயலாத அழைப்பை விடுக்கிறது தலைப்பு. கட்டிப் போடுகிறது சொந்தப் பொறுப்பு. விரைவில் ஈழம் காண்பேன் என்று நம்புகிறேன். இப்போதைக்கு நன்றி மட்டும் நாகரா அய்யா.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நாகரா அவர்களுக்கு என் நன்றிகளும்...!

    என்றாவது ஒரு நாள் இந்த வரிகளெல்லாம் உயிர் பெற்றிடுமென்ற நம்பிக்கையிலேயே இன்னமும் நாமும்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி நாகரா அய்யா.. நிச்சயம் வெல்லும் ஈழம்

  6. #6
    இளையவர் பண்பட்டவர் Tamilmagal's Avatar
    Join Date
    23 Mar 2009
    Location
    ஜேர்மனி
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    37
    Uploads
    0
    நாகரா அவர்களுக்கு நன்றி.

    என்றாவது ஒரு நாள் நிச்சயம் விடியும் போரில்லா ஈழம்!
    என்றும் நட்புடன்
    தமிழ்மகள்


    தரணியெங்கும் தமிழ் பரவட்டும்!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  8. #8
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    காத்திருக்கிறோம் இந்த கிழக்கு ஈழம் எனும் விடியலை நோக்கி நகர்வதை காண்பதற்க்கு...நன்றி தோழரெ...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    ஈழம் விடியும் நிச்சயம் சுதந்திர
    வாழ்வில் சிறக்கும் நம்மினம்

    உம் பின்னூட்டத்துக்கு நன்றி ரமேஷ்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    25

    இருதய ஆழத்தில்
    புலியுஞ் சிங்கமும்
    அற்புதப் பசுக்களாய்
    அதிசயமாய்ப் பரிமாறி
    ஒருங்கே மேயும்
    அன்பின் புல்வெளி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by நாகரா View Post
    25

    இருதய ஆழத்தில்
    புலியுஞ் சிங்கமும்
    அற்புதப் பசுக்களாய்
    அதிசயமாய்ப் பரிமாறி
    ஒருங்கே மேயும்
    அன்பின் புல்வெளி
    நிச்சயமாக புலியும், சிங்கமும் மேய்வதென்பது சாத்தியமில்லை.
    ஏறத்தாள 40 வருடங்களாக இந்த போராட்டமும் அவலமும் தொடர்கிறது. இன்று வரையும் தமிழர் பிரதேசங்களில் காணாமல் போதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தவண்ணம் தான் இருக்கின்றது.... இனவாதம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை தோண்டிப் பார்த்தால் 2000 வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது.
    என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.???????????????????????????????????

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் மாற்றுக் கருத்துக்கு நன்றி திரு. ராஜ்குலன்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •