Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: யுத்த நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான ஊடக செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by விராடன் View Post
    பொதுவாக ஒன்றைக் கேட்கிறேன்....
    இந்தத்தள்ளாத வயதில் ஏன் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்?
    பதிலுக்கு பதில் தருவதாக நினைக்க வேண்டாம் நண்பரே, மனதில் தோன்றியதை சொல்கிறேன்.

    அவர் அடைந்திருக்கும் முதல்வர் பதவி என்பது நியமனபதவி அல்ல, அவர் தேர்தலில் வெல்லாமல் மேல்சபை மூலம் முதல்வராக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் கொடுத்தது அது. அவர் ஆசைப்பட்டாலும் தமிழக மக்கள் அனுமதிக்காமால் அவர் அந்த பதவியில் அமர முடியுமா?. இந்த தள்ளாத வயதிலும் திட்டங்கள் தீட்டுவதிலும் அதனை செயல்படுத்துவதிலும் மற்றவர்களுக்கு முன் உதராணமாக இருக்கிறார். சமீபத்தில் இலங்கையில் அல்லற்படும் மக்களுக்கு நிவாரண பொருட்களை பேக் செய்து அனுப்பும் இடத்திற்கு நேரிலே மோட்டார் நாற்காலியில் சென்று பார்த்து அனுப்பினார். அவர் வயோதிகத்தை காரணம் காட்டி ஏதாவது செய்யாமலிருக்கிறாரா என்று சொல்லுங்கள்.

    இதற்கு முன் ஒரு முதலமைச்சர் பேசக்கூட முடியாமல் இருந்தாரே, அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுந்ததா?. கருணாநிதி என்றால் இலங்கை தமிழருக்கு இளக்காரம் தான். இவர் முன்பு பிறந்த நாள் நிதியில் இருந்து பணம் ஒவ்வொரு ஈழ இயங்கங்களுக்கு கொடுத்த போதும் ஒரு இயக்கம் மட்டும் அண்ணன் கோவித்து கொள்வார் என்று வாங்க மறுத்தது மறந்து போய் விட்டதோ, எட்டி உதைத்த காலுக்கும் முத்தம் கொடுக்க நினைத்தவர் தான் கலைஞர்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    ஈழத்தமிழர் விசயத்தில் கலைஞரை விட மற்றவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால், நான் நிச்சய்ம் சொல்வேண்.கலைஞருக்கு அதை விட பல மடங்கு இருக்கும்.இதில் சந்தேகம் இல்லை.ஆனால் சமிப காலமாக அவரது நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது.அதனால் அவரது நடவடிக்கைகல் முனைப்புடன் இல்லை.

  3. #15
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by நேசம் View Post
    ஈழத்தமிழர் விசயத்தில் கலைஞரை விட மற்றவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால், நான் நிச்சய்ம் சொல்வேண்.கலைஞருக்கு அதை விட பல மடங்கு இருக்கும்.இதில் சந்தேகம் இல்லை.ஆனால் சமிப காலமாக அவரது நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது.அதனால் அவரது நடவடிக்கைகல் முனைப்புடன் இல்லை.
    பதில் உங்கள் பதிவிலேயே இருக்கிறதே,

    ஈழத்தமிழர் விசயத்தில் கலைஞருக்கு அக்கறை இல்லை என்று யாரும் சொல்லவில்லை, ஆனால் கலைஞரின் தராசில் ஒரு பக்கம் பதவியும் மறு பக்கம் ஈழத்தமிழர் பிரச்சனையும் வைத்தால்...

    ஈழத்தமிழர் பிரச்சனையில் யாருக்கு அதிக அக்கறை இருக்க வேண்டும், தமிழராகிய நமக்கு தானே, அவர் பதவிக்கு ஆசைப் பட்டாரா? மக்கள் அமரவைத்தாரா? சரி மக்களே அமர வைத்தார்கள், மக்களின் மனநிலை புரிந்துக்கொள்ள வேண்டுமல்லவா? மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க வேண்டுமல்லவா?

    அவர் நல்ல திட்டங்களை செயல் படுத்தியவர் தான் மறுப்பதற்கில்லை, ஆனால் தற்போது அவரின் எண்ணமெல்லாம் வேறு, தனக்குப் பிறகு திமுக என்ற கவலையொன்றன்றி வேறு இல்லவே இல்லை.

    ஏன் வெறுமனே கேள்விகள் கேட்க வேண்டும், இப்படி கேள்விகள் அடுக்கிக் கொண்டு போய்கொண்டே இருக்கலாம்.

    ஒரே கேள்வியில் எல்லாவற்றையும் அடுக்கிவிடலாம்?

    அவர் இன்னும் ஏன் காங். கூட்டணியில் இருக்கிறார்?
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆட்சிமாறினால் காட்சிமாறும் என்பதை நானும் நம்பவில்லை.

    நாட்டு நலன், பிராந்திய நலன், உலக நலன் என்ற ஓட்டத்துடன் ஒத்தோடத் தொடங்கிவிட்டது ஈழம் தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு.

    உலக அரங்கில் நின்று கடந்த, நிகழ்காலங்களை பாருங்கள். உண்மைகள் புலப்படும்.

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    இந்தியா உதவில்லையென்றால் மற்ற நாடுகள் அதாவது பாகிஸ்தான் அல்லது சீனா இலங்கைக்கு உதவி செய்யும்.அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமாக அமையும்.அதனால்தான் இந்தியா உதவி செய்யுகிறது என்று சொல்லப்படுகிறது.இதை மத்திய அரசு விளக்கமாக கலைஞருக்கு சொல்லி விட்டதால், அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும், மேலும் வேறு எந்த அரசு இருந்தாலும் இலங்கைக்கு கண்டிப்பாக உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. உண்மையா...

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இந்த முறை கலைஞரால் அதிகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல இயலவில்லை.. நான்கு முறைதான் சென்றார் என்று நினைக்கிறேன்.. ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் தமிழ்நாட்டையே அரைநாளில் தம் பக்கம் திருப்பி கொண்டார்.. அவர் தனது அரசியல் முதிர்ச்சியை, காய் நகர்த்தும் வித்தையை இந்த விடயத்தில் காட்டி இருக்க கூடாது..
    அன்புடன் ஆதி



  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இலங்கை சார்க் நாடுகளில் ஒன்று தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று உதவ வேண்டும் என்பது ஒரு கொள்கை.

    மேலும் இந்தியா உதவவில்லை என்றால் மற்ற நாட்டின் உதவியை நிச்சயம் இலங்கை நாடும், பின்னர் உதவி செய்தவர் இலங்கையில் பதிலுக்கு வணிகம் அல்லது மற்ற(ராணுவ) வேலைகளுக்காக உறவு மேற்படுத்துவர். இதனால் இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்து. மற்றவன் செய்யும் வேலையை நாம் செய்வோம் என்றும்.

    புலிகள் ஒழிப்பது என்பது காங்- அரசின் எண்ணம், அதற்கு உதவினால் போல் ஆயிற்று இதனை திமுக மாதிரி தமிழ் கட்சியிடம் சொல்லி அதரவு வாங்க முடியாது என்பதால் மேலே சொன்னதை சொல்லி காங்கிரஸ் காரியம் சாதிக்கிறது.

    வடஇந்திய முதலாளிகள் பெரிய அளவில் லாபம் அடைய இந்த போரை இந்திய அரசு ஊக்கப்படுத்துகிறது என்றும் சொல்கிறார்கள். இந்திய பொருட்களை சந்தையிட இலங்கை நல்ல வாய்ப்பாக இருப்பதாலும், நிறைய வளங்கள் இருப்பதால் அங்கே அமைதி நிலவினால் நிறைய தொழிற்சாலைகள் அமைத்து அதிக லாபம் பெறலாம் என்பதால் தீவிரவாதம் ஒழிய பெரிய அளவில் கூட்டனி அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

    தீவிரவாதி என்ற சொல்லால் உலக அளவில் புலிகள் இயக்கத்தை குறிப்பிடுகின்றனர், ஆனால் தமிழ்நாட்டில் யாரொருவரும் (மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களை தவிர) புலிகளை அப்படி பொதுவாக சொல்வதில்லை.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by praveen View Post
    தமிழ்நாட்டில் யாரொருவரும் (மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களை தவிர) புலிகளை அப்படி பொதுவாக சொல்வதில்லை.
    அப்படியாயின் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் சுயநிர்ணய உரிமையையும் ஆமோதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிரம் தாழ்த்துகிறேன்.

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாநகர மேஜர் ஒருவர் சொன்னார் "புலிகள் தமிழரின் காவலர். பயங்கரவாதிகள் அல்லர்". இன்னொருவர் சொன்னார் "நீங்கள் பயங்கரவாதி என்றால் நானும்தான் பயங்கரவதி. உரிமைக்காக தினமும் நான் போராடுகிறேன்".

    இங்கே நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்கள் தொகை, எழுப்பட்டும் கோசங்கள், பதாகை சுலோகங்கள், பேச்சாளர்கள் வார்த்தைகள் எல்லாமே அரச்சாங்கத்தினால் ஆவணப்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •