Results 1 to 12 of 12

Thread: ஈழப்பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0

    ஈழப்பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா

    இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.



    இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.


    இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர், இலக்கியவாதிகள், ஓவியர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.


    கூட்ட முடிவில் பேசிய இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாத மத்திய அரசு, தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்தார்.


    இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தாம் மனம் நொந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த பத்மஸ்ரீ விருது, தனது மிகப்பெரிய உறுத்தலாக இருப்பதாகவும், அதனால் அந்த விருதை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7328

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பாரதிராஜாவின் மாந்தநேசத்திக்கு தலை வணங்குகிறேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    உங்கள் செய்திக்கும் லிங்க்-ற்கும் நன்றி,

    அதை பிடித்து சென்ற நான் பாரதிராஜா பேசிய எட்டாவது அதிசயம் பிராபகரன் என்ற விடியோவையும் பார்த்தேன். அதில் இறுதியாக பிச்சைக்காரன் இல்லாத நாட்டையும், நகையுடன் பெண் ஒருத்தி இரவில் சென்று பத்திரமாக வீடு திரும்பும் பத்திரமான இடத்தை நிர்வகித்தவர் தான் பிரபாகரன் என்று முடியும் அந்த வீடியோ, பிரமிப்பாக இருந்தது அவர் பேச்சு.

    =============

    இந்த மாதிரி மத்திய அரசிடம் இதுவரை விருது வாங்கிய தமிழர் அனைவரும் திருப்பி தந்தால் தான் சுரனை(கொஞ்சமாவது இருந்தால்)யுள்ள மத்திய அரசிற்கு கொஞ்சமாவது சுருக் என்று இருக்கும். அப்பவும் அசைந்து கொடுக்க மாட்டார்கள். இன்னும் வேறு ஏதாவது செய்ய வேண்டும், செருப்பு வீச்சு மாதிரி.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மானமும், மன ஈரமும் உள்ள பாரதிராஜா அவர்களை பாராட்டுகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நல்லதொரு கவன ஈர்ப்பு.....!!

    பாரதிராஜா அவர்களுக்கு தலை வணங்குகிறேன்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    சினிமா உலகம் நிறய விசயங்களை தக்க சமயத்தில் செயல்படுத்த ஆயத்தமாகி உள்ளது பாராட்டதக்கது சில முன்னெடுப்புகள் இங்கே

    http://www.tamilwin.com/view.php?2a2...g2h92ccb1j0Q2e

    http://www.puthinam.com/full.php?2b3...436WV2a035Om3e

  7. #7
    இளையவர் பண்பட்டவர் Tamilmagal's Avatar
    Join Date
    23 Mar 2009
    Location
    ஜேர்மனி
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    37
    Uploads
    0
    தமிழ் உணர்வும் ஈழதமிழர்கள்மீது அக்கறையும் கொண்ட பாரதிராஜா அவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்.
    என்றும் நட்புடன்
    தமிழ்மகள்


    தரணியெங்கும் தமிழ் பரவட்டும்!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பாரதிராஜாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    ---------
    ஒரு நாட்டை மற்றொரு நாடு வலியுறுத்ததான் இயலும். ஆனால் கட்டளையிட முடியாது..

    இலங்கை கேட்காவிட்டால், இந்தியாவால் எதுவும் செய்ய இயலாது.. என்பது அனைவரும் அறிந்ததே..

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பாரதிராஜாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    ---------
    ஒரு நாட்டை மற்றொரு நாடு வலியுறுத்ததான் இயலும். ஆனால் கட்டளையிட முடியாது..

    இலங்கை கேட்காவிட்டால், இந்தியாவால் எதுவும் செய்ய இயலாது.. என்பது அனைவரும் அறிந்ததே..
    அறிஞர் அவர்களே, இந்த சோதா பயல்கள் ராணுவம் கடந்த பல ஆண்டுகளாக செய்யமுடியாததை இப்போது செய்தது எப்படி என்று கொஞ்சம் யோசித்தால், பின் வேலைகளை செய்து வருவது யார் என்று தெரியும். இந்தியா நிறுத்து என்று சொல்லாமல் இலங்கை நிறுத்தாது. இந்தியா பின்னால் இருப்பது தெரிந்து தான் உலக நாடுகள் தூர நிற்கின்றன.

    சொல்லும் விதத்தில் சொன்னால் உடனே கேட்பார்கள். இதே இலங்கை ராணுவம் விடுதலை புலிகளால் முற்றுகையிட்டு 5,000 பேர் சாக இருந்த போது இந்தியா தலையிட்டு விடுதலைபுலிகளிடம் கேட்டுக்கொண்டதால் தானே அன்று இலங்கை ராணுவம் தப்பித்தது. இப்போது அப்படி செய்ய ஏன் மாட்டேன்கிறார்கள் என்றால் அவர்கள் நோக்கம் விடுதலை புலிகளை (குறிப்பாக அதன் தலைவரை) ஒழிப்பது தான்.

    பல வருடங்கள் முன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்று இந்திய ராணுவம் விமாணங்கள் மூலம் உணவுப்பொருள் போட்ட போது, அது இலங்கையிடம் அனுமதி வாங்கியா செய்தது?, அப்போது மனம் இருந்தது, இப்போது குரோதம் தான் இருக்கிறது.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ஆட்சி மாறினால் நல்லது நடக்குதா என பார்ப்போம்... பிரவீன்

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by praveen View Post
    அறிஞர் அவர்களே, இந்த சோதா பயல்கள் ராணுவம் கடந்த பல ஆண்டுகளாக செய்யமுடியாததை இப்போது செய்தது எப்படி என்று கொஞ்சம் யோசித்தால், பின் வேலைகளை செய்து வருவது யார் என்று தெரியும். இந்தியா நிறுத்து என்று சொல்லாமல் இலங்கை நிறுத்தாது. இந்தியா பின்னால் இருப்பது தெரிந்து தான் உலக நாடுகள் தூர நிற்கின்றன.

    சொல்லும் விதத்தில் சொன்னால் உடனே கேட்பார்கள். இதே இலங்கை ராணுவம் விடுதலை புலிகளால் முற்றுகையிட்டு 5,000 பேர் சாக இருந்த போது இந்தியா தலையிட்டு விடுதலைபுலிகளிடம் கேட்டுக்கொண்டதால் தானே அன்று இலங்கை ராணுவம் தப்பித்தது. இப்போது அப்படி செய்ய ஏன் மாட்டேன்கிறார்கள் என்றால் அவர்கள் நோக்கம் விடுதலை புலிகளை (குறிப்பாக அதன் தலைவரை) ஒழிப்பது தான்.

    பல வருடங்கள் முன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்று இந்திய ராணுவம் விமாணங்கள் மூலம் உணவுப்பொருள் போட்ட போது, அது இலங்கையிடம் அனுமதி வாங்கியா செய்தது?, அப்போது மனம் இருந்தது, இப்போது குரோதம் தான் இருக்கிறது.
    ப்ரவீன்,

    நீங்க சொன்னது அத்தனையும் உண்மை. மத்திய அரசுக்கு மனம் இல்லை. அதனால மார்க்கமும் இல்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் நம் இனத்தாருக்கு.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அறிஞரே!

    ஈழ விவகாரம் பற்றிய என் பார்வையை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

    இறுதியாக நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கத் தரப்பில் பேசவல்ல ஒருவர் "இந்தப் பேச்சு வார்த்தை முறிவடையுமாக இருந்தால் புலிகள் பலம் பொருந்திய ஸ்ரீலங்கா ராணுவத்துடன் போராட வேண்டி இருக்கும்" என்று சொன்னார். அப்போது அவருடைய கூற்று "புலிகளே! வழக்கமாக நீங்கள் தான் போர் நிறுத்தத்தை முறிப்பது வழக்கம். இந்த முறை அப்படிச் செய்யாதீர்கள்" என்று அச்சுறுத்தி வலியிறுத்துவதாக பலராலும் கருதப்பட்டது.

    அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஸ்ரீலங்காவில் தடை இல்லாத போது சர்வதேச ரீதியில் புலிகளை தடை செய்தார்கள்; ஸ்ரீலங்காவின் சீண்டல்களுக்கு பலத்த அமைதியை பதிலாகக் கொடுத்தனர் புலிகள். பொறுமை உடைத்துப் புலிகளை உறும வைக்க இயலாத நிலையில் ஒப்பந்தத்தை தானே கிழித்தெறிந்தது ஸ்ரீலங்கா. போர் மூண்டது. உலக நாடுகள் பல சேர்ந்து புலிகளை அழிக்கும் திட்டவரைபை தயாரித்தனர். இந்தியாவை தலைமையாக்கி அழிப்பை வேகம் கூட்டினர்.

    ஆனால் ஸ்ரீலங்கா அரசு தனிப்பட்ட ரீதியில் இன அழிப்புக்கு சதித் திட்டம் தீட்டியது. தெளிவாகச் சொன்னால் சர்வதேசம் புலிகளை அழிக்க திட்டம் தீட்ட ஸ்ரீலங்காவோ அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இன அழிப்பைச் செய்ய சதித் திட்டம் போட்டது.

    இந்த ஆண்டில் ஆரம்பத்திலேயே இந்த அழிப்பு சதித்திட்டம் அம்பலமானது. இதை எல்லாம் எதிர்பார்த்து புலிகள் ஏற்கனவே வேறு உபாயங்களை வகுத்து வைத்திருந்தனர். பிரச்சினை வராதவாறு ஒரு எடுத்துக்காட்டு சொல்வதானால் தமிழ் தேசியக் கொடி (விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடிக்கும் இதுக்கும் உத்துப் பார்த்தால் தெரியும் வேறுபாடுகள் உண்டு) , தேசியப்பூ, தேசிய விலங்கு போன்றவற்றின் பிரகடனத்தைச் சொலலாம். அவர்கள் வகுத்த திட்டத்தை தக்க சமயத்தில் அதை நடைமுறைப் படுத்தினர்.

    இலங்கையின் சூழ்ச்சிப் போரை உணர்ந்தும் ஆப்பிழுத்த குரங்காக இருந்த உலகம் மக்களின் எழுச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக விழித்தது. முழித்தது. இந்த சமயத்திலும் மௌனம் காத்தமைதான் இந்தியா மீதான பலரது பார்வைகளில் சந்தேகத்தை கலந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உலக ஊடகங்களில் தமிழர் குரல்கள் பதிவு செய்யப்பட்டு (பி.பி.சி. போன்ற பிரபல்யமான ஊடகங்கள் பாராமுகம் காட்டி ஊமையாக இருக்க உள்ளூர் ஊடகங்களின் ஊடாக உண்மை வெளிச்சம் கண்டது) உலக மக்களை அடைந்த வேளை உலக நாடுகள் ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தன.

    அதள பாதாளத்தில் போய்க் கொண்டிருக்கும் ஸ்ரீலங்காப் பொருளாதாரம், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, தன் மீதான போரியல் குற்றங்கள் நிரூபணம் ஆகும் வகையில் வெளிவந்த ஆதாரங்கள், உலக நாடுகளி அழுத்தங்கள் எனப் பல சேர்ந்து பூதமாய் எதிரில் நிற்க அதனை சமாளிக்கும் நோக்கில் இந்தப் போருக்கு பூரண ஆதரவு தந்த இந்தியாவுக்கு நன்றி என்று தன் குற்றங்களில் இந்தியாவுக்கும் பங்கு கொடுக்கிறது ஸ்ரீலங்கா.

    ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க முடியாத நிலையில் முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் புலிகளுக்கு எதிரான தரப்புகள் இக்கட்டான சூழ்நிலையில் நிற்கிறது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து அரசியல் தீர்வை முன் வைக்கலாம் என்றால் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. நிலங்களை இழக்க விரும்பாத புலிகள் புத்தி மழுங்கி சண்டையிட்டு விரைவில் பலமிழப்பர் என்ற எதிர்பாப்பும் ஆயிரம் செத்ததும் மக்கள் பக்கம் மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்ட நிலையில் போரின் முடிவு தள்ளிப் போகிறது.

    புலிகளுக்கு எதிரான தரப்பு நினைத்தபடி புலிகளை அழித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு இருக்குக் கச்சேரி. இவர்கள் நினைத்தபடி, இவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு வழங்கிய உறுதிப்படி தமிழருக்கு தீர்வு கொடுக்கப்படுமா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஏனெனில் இலங்கையில் சிங்களவர்களிடத்தில் புரையோடி இருக்கும் மனோபாவம் அப்படி. புத்த பகவான் போதை மங்கி "அநாகரிக"தர்பால போதை சிங்களவரிடத்தில் மேலோங்கி நிற்கிறது.

    இந்த நேரத்தில் கலைஞரோ அல்லது தமிழகத் தலைவர்களோ தமது வீச்சமான பங்களிப்பை நல்க வாய்ப்புண்டு. தவிர புலிகளை எதிர்த்தவர்கள் பலர் கூட தமிழ்மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டவர்கள்தான். அவர்கள் பங்களிப்பும் கிடைக்கும் சாத்தியம் உண்டு. இலங்கையின் புவியியல் கேந்திரம் கருதி ஸ்ரீலங்காவுக்கு ஒத்தூதவும் சந்தர்ப்பம் உள்ளது. ஏனென்றால் அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்ப காலியாகும் என்று வாய்பிளந்து காத்திருக்கும் கூட்டம் உலகில் உண்டு. எல்லாம் நடந்த பிறகுதான் உறுதிப்படுத்த முடியும்.
    Last edited by அமரன்; 24-04-2009 at 04:43 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •