Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: யுடிலிட்டி ஆட்டக்காரர்கள்!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    யுடிலிட்டி ஆட்டக்காரர்கள்!!!

    ஒரு நாள் போட்டிகளில் முளை விட்டு வளர்ந்த ஒரு தனி இனம் இவர்கள்.

    கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள், பௌலர்கள், விக்கெட் கீப்பர்கள் என மூன்ரு இனங்கள் இருந்தனர்.

    இதில் ஆல்ரவுண்டர்கள் என புதிய இனம் உண்டானது. ஆல்ரவுண்டர்கள் என்றால் அவர்கள் பேட்டிங்கிலும் சிறந்தவர்கள். பௌலிங்கிலும் சிறந்தவர்கள்.

    அதாவது எந்த ஒரு வீரர் தன்னுடைய பேட்டிங்கால் மட்டுமோ அல்லது பௌலிங்கால் மட்டுமோ ஒரு டீமில் இடம் பிடிக்கும் அளவிற்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள்.

    போட்டியின் கடுமை அதிகமாகிக் கொண்டே போக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மென் என்ற புதிய இனமும் உற்பத்தியானது.

    இந்த வரிசையில் ஒரு நாள் போட்டிகளில் கடைசியாக உருவானவர்கள் தான் இந்த யுடிலிட்டி பிளேயர்கள். இவர்கள் நல்ல பேட்ஸ்மேனும் அல்ல. நல்ல பௌலரும் அல்ல.

    ஆவரேஜ் பேட்டிங், ஆவரேஜ் பௌலிங், நல்ல ஃபீல்டிங் திறமை கொண்ட செமி ஆல்ரவுண்டர்கள் இவர்கள். ராபின் சிங் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

    நான்கைந்து ஓவர்கள் பந்து வீசி, ஏழாவது அல்லது எட்டாவது பாட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக்கு வழி வகுப்பவர்கள் இவர்கள். இவர்களிம் ஃபீல்டிங் 20 ரன்களை சேமிக்க, இவர்களது பேட்டிங் ஒரு 20 ரன்களை சேர்க்க, அவ்வப்போது பந்து வீசி நல்ல பௌலர்களின் ஓவர்களைச் சேமித்து தேவையான நேரத்தில் உபயோகப்படுத்த உதவுபவர்கள் இவர்கள்.

    பலசமயம் பிரேக் த்ரூ கொடுத்து அணியினைக் காப்பாற்றுபவர்கள்.

    ஆனால் இப்பொழுது புகழ்பெற்று வரும் 20 / 20 போட்டிகளில் இவர்களின் பயன் என்ன?

    யுடிலிட்டி பிளேயர்கள் 20 / 20 போட்டிகளில் இதுவரை எந்த எதிர் பார்ப்பையும் ஏற்படுத்த வில்லை. யுடிலிட்டி பிளேயர்கள் 20 / 20 போட்டிகளுக்குத் தேவையில்லை என்ற கருத்து உருவாக ஆரம்பித்து இருக்கிறது.

    ஒரு நாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர்கள் பஞ்சத்தை இந்த யுடிலிட்டி பிளேயர்கள் தீர்த்து வந்தனர். 6 பேட்ஸ்மேன்கள் + 4 பவுலர்கள் + 1 விக்கெட் கீப்பர் என்ற விகிதம் சரியாக அமைய யுடிலிட்டி பிளேயர்கள் ஒரு காரணம். 5 பேட்ஸ்மேன்கள் + 1 ஆல்ரவுண்டர் + 1 விக்கெட் கீப்பர் + 4 பவுலர்கள் என்பதை 4 பேட்ஸ்மேன்கள் + 1 ஆல்ரவுண்டர் + 1 யுடிலிட்டி பிளேயர் + 1 விக்கெட் கீப்பர் + 4 பௌலர்கள் என மாற்றி அமைத்து பல அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

    ஆனால் 20 / 20 போட்டிகளில் யுடிலிட்டி பிளேயர்களின் பந்து வீச்சு பலவீனமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றிரண்டு ஓவர்களில் அணி வெற்றியை இழந்து விடலாம். இதனால் யுடிலிட்டி பிளேயர்கள் 12 வது இடத்தை விட்டு நகருவது கடினமாக இருக்கிறது.

    வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் ஒழிய யுடிலிட்டி பிளேயர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

    இதற்கு மத்தியில் சேவாக், ரெய்னா, பதான் சகோதரர்கள், கிறிஸ் கெய்ல், ஜாகீர்கான், ஜெயசூர்யா போன்ற செமி ஆல்ரவுண்டர்கள் வேறு இவர்களின் வயிற்றில் புளியைக் கலக்குகிறார்கள். இவர்கள் ஒரு துறையில் பிராகாசிப்பவர்கள். யுடிலிட்டி பிளேயர்கள் போலவே இன்னொரு துறையில் அவ்வப்போது உதவுவதால் யுடிலிட்டி பிளேயர்களுக்கு வாய்ப்பு வெகுவாக குறைகிறது.

    எனவே 20 / 20 போட்டிகளில் வாய்ப்பு வேண்டுமானால் எதாவது ஒரு துறையில் பிரகாசித்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது.

    ஏழைகளின் ஆல்ரவுண்டர் என வர்ணிக்கப் படும் யுடிலிட்டி பிளேயர்களின் வாழ்க்கையில் ஒளி வரவேண்டுமானால் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்.

    ஜோகிந்தர் ஷர்மா ஒரு யுடிலிட்டி பிளேயர்தான்.

    உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரை மறக்க முடியுமா? ஆனாலும் பாருங்க ஐ.பி.எல் சென்னை கிங்க்ஸ்ல தான் அவரும் இருக்கார். அதே தோனிதான் கேப்டன். ஆனாலும் அவருக்கு விளையாட வாய்ப்பு சரியா கிடைக்கலியே..

    சாதாரணமா இந்த மாதிரி சாதனை செஞ்சவங்களுக்கு கொஞ்ச நாள் தொடர்ச்சியா வாய்ப்பு கொடுப்பாங்க. மொகம்மது கைஃப் இது மாதிரி ஒரு மேட்சை ஜெயிச்சு குடுக்கிற மேட்ச் வின்னர்களுக்கு பத்து மேட்சுக்காவது வாய்ப்பு கொடுப்பாங்க. ஆனால் ஜோகிந்தர் ஷர்மா?

    பந்துவீச்சில் எந்த அணியும் 20/20 ல் சற்றும் கவனக் குறைவாக இருக்க விரும்புவதில்லை. ஏனென்றால் 4 ஓவர்களில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிடுவார்கள். இப்போதைக்கு நாலு ஸ்பெஷலிஸ்டு பௌலர்கள், ஒரு ஆல்ரவுண்டர், 5 பேட்ஸ்மேன்கள் ஒரு விக்கெட் கீப்பர் என்னும் ட்ரெடிஷனல் அணியாக இருக்கு, அல்லது இரண்டு ஆல்ரவுண்டர்கள் மூன்று பந்து வீச்சாளர்கள் என்பதும் உண்டு.

    ஒண்ணுக்கு மேல ஆல்ரவுண்டர் இருப்பது கடினமான விஷயம். செமி ஆல்ரவுண்டர் வேணும்னா ஈஸியா கிடைக்கிறாங்க. ஒண்ணுக்கு மேல ஆல்ரவுண்டர்கள் பலமா பல்வீனமா என்பது டெக்கான் சார்ஜர்ஸோட போன வருஷ ஆட்டத்தைப் பார்த்து முடிவு பண்ண முடியாது. ஸ்காட் ஸ்டைரிஸ், சைமண்ட்ஸ், அஃபிரிடி என மூணு ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் ஆல் - ரவுண்டாகிப் போச்சுது..

    இந்த வருஷம் ஆல் ரவுண்டர்கள் - யுடிலிட்டி பிளேயர்களை ஐபிஎல் -ல் கவனிப்போம்.. அப்போ உண்மை தெரிஞ்சிரும்
    Last edited by தாமரை; 13-04-2009 at 03:20 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    ஆமாம்.....ஆமாம்.....ஆமாம்....
    அன்புடன்
    பின்பாட்டு மணியா...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஜாகீர்கானும் செமி ஆல் ரவுண்டர்.. ஜெய சூர்யாவும் செமி ஆல்ரவுண்டரா..?


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஜாகீர்கான் 20/20 க்கு ஏற்ப பேட்டிங் ஸ்டைல் கொண்டவர்,

    ஜெயசூர்யாவின் பந்து வீச்சு 20/20 ல் சரிவு முகத்தைச் சந்திக்க இருக்கிறது. இது வரை ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 3 ஓவர்கள் விசி வருகிறார். இது 2 ஆகக் குறையக் கூடும். அதனாலேயே செமி ஆல்ரவுண்டராகச் சொன்னேன்,

    ஒரு நாள் போட்டியைப் பொருத்தவரை ஜெயசூர்யா ஆல்ரவுண்டர், ஜாகீர்கான் பௌலர் மட்டுமே!!!

    சென்ற ஐ.பி.எல் லில் ஜெயசூர்யா பந்துவீச்சு

    முதல் போட்டி : 4 0 39 1 9.75
    இரண்டாம் போட்டி : பந்து வீசவில்லை
    மூன்றாம் போட்டி : பந்து வீசவில்லை
    நான்காம் போட்டி : 2 0 17 0 8.50
    ஐந்தாம் போட்டி : 4 1 14 3 3.50
    ஆறாம் போட்டி : 1 0 16 0 16.00
    ஏழாம் போட்டி : 2 0 17 0 8.50
    எட்டாம் போட்டி : பந்து வீசவில்லை
    ஒன்பதாம் போட்டி : பந்து வீசவில்லை
    பத்தாம் போட்டி : 2 0 13 0 6.50
    பதினோராம் போட்டி : பந்து விசவில்லை
    பனிரெண்டாம் போட்டி : 4 0 35 0
    பதிமூன்றாம் போட்டி : 2 0 8 0
    பதினான்காம் போட்டி : பந்து வீசவில்லை
    Last edited by தாமரை; 13-04-2009 at 02:58 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post

    ஜெயசூர்யாவின் பந்து வீச்சு 20/20 ல் சரிவு முகத்தைச் சந்திக்க இருக்கிறது. இது வரை ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 3 ஓவர்கள் விசி வருகிறார். இது 2 ஆகக் குறையக் கூடும். அதனாலேயே செமி ஆல்ரவுண்டராகச் சொன்னேன்,
    இதுதான் செமி ஆல்ரவுண்டருக்கு இலக்கணமா..?


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அவரால் முழு பந்துவீச்சாளராக செயல்பட முடியாது என்பதுதான் இலக்கணம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அவரால் முழு பந்துவீச்சாளராக செயல்பட முடியாது என்பதுதான் இலக்கணம்.
    அப்போ அவரை மட்டையாளர்ன்னு மட்டும் சொல்லலாமே.. செமி ஆல்ரவுண்டர்ன்னு எப்படி சொல்றீங்க..?

    செமி ஆல்ரவுண்டருக்கு இலக்கணம் என்ன..?

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அதை நல்லாவே வரையறுத்து இருக்கேனே..


    இவர்கள் ஒரு துறையில் பிராகாசிப்பவர்கள். யுடிலிட்டி பிளேயர்கள் போலவே இன்னொரு துறையில் அவ்வப்போது உதவுபவர்கள்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்ல அலசல்...
    யுடிலிட்டு வீரர்கள்.. சரியாக விளையாட அனுமதித்தால்.. அவர்கள் திறமைகள் வெளிப்படும்.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அதை நல்லாவே வரையறுத்து இருக்கேனே..


    இவர்கள் ஒரு துறையில் பிராகாசிப்பவர்கள். யுடிலிட்டி பிளேயர்கள் போலவே இன்னொரு துறையில் அவ்வப்போது உதவுபவர்கள்.

    நன்றி..!

    சுரேஷ் ரெய்னாவும் இப்பட்டியலில் உள்ளார்.. அவர் மட்டையாளராக இனம் காணப்படுகிறார்.. அவர் அவ்வப்போது பிரகாசிக்கும் இன்னொரு துறை எது..?

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அவர் வலக்கை ஆஃப் ஸ்பின் பௌலரும் கூட. அவரின் பந்துவீச்சுத் திறமைக்கு இதுவரை வாய்ப்பு தரப்படாததால் வெளியே தெரியவில்லை.

    இதுவரை மிகக் குறைவாகவே பந்து வீசி இருந்தாலும், சில போட்டிகளில் இவரின் பந்து வீச்சை கவனித்து இருக்கிறேன். 22 வயதான இவர் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் சேவாக் போல மாறலாம் என்று கணித்து இருக்கிறேன்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் செமி வரையறுப்பின்படி, ரெய்னா பந்துவீச்சில் அவ்வப்போது பிரகாசித்திருக்க வேண்டுமல்லவா..

    அப்படி அவர் வீச்சில் பிரகாசித்த நிகழ்வுகள் என்னென்ன..?

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •