Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: தற்சமயம் துவண்டு கிடக்கும் நடிகர் விஜய்க்காக சில யோசனைகள்..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    தற்சமயம் துவண்டு கிடக்கும் நடிகர் விஜய்க்காக சில யோசனைகள்..!

    முன் குறிப்பு:


    இப்பதிவு எனக்கு மின்னஞ்சலில் கிட்டியது. நகைச்சுவையாக இருக்கவே இங்கு பதிக்கிறேன்.. இதில் வேறெதுவும் உள் கூத்து இல்லீங்கோ..!



    தற்சமயம் துவண்டு கிடக்கும் விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.


    யோசனை1:திருச்சி பிரஸ் மீட்டிங்கில் நான் கலந்து கொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர்செய்த சதி இது. அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை, அதுவும் போலி தான் என அறிக்கை ஒன்றை விட்டால் ரசிகர்கள் உங்களை நம்பிவிடுவார்கள்.


    யோசனை2:இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட்நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்கவருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.


    யோசனை3:இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைக் கண்டுபிடிப்பவருக்கு ஒருகாண்டாசாகார்பரிசு என போட்டிவைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது.


    யோசனை4:டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை, ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.


    யோசனை5:திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.


    யோசனை6:திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார்நிலையில் வைத்து படம் பார்த்து விட்டு வெளியே வரும் முதியவர்கள், இதய பலகீனமுள்ளவர்கள்ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படிசெய்தால் அவர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பிவருவார்கள்.


    யோசனை7:உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச்டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.


    யோசனை8:குறிப்பாக*நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அது மட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்.


    யோசனை9:டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" எனப் படித்து விடுகிறார்கள். எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம். மசாலா புயல் பேரரசுவிடம் கன்சல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.


    யோசனை10:குருவி,வில்லு போன்ற பேரடிகளைமறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து, முத்துக்காளைஆகியோரைப்போல காமெடிவேடங்களில் நடிக்கலாம். காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள்சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.


    யோசனை11:உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோவிடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்து விடுவார்கள்.




    பின்குறிப்பு: இனிமேல்எந்தமாதிரிபடங்களைரீமேக்செய்யலாம்:
    மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால்இனி போனியாகாது.
    * எம்ஜியார்நடித்தரிக்ஷாக்காரன்படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக் செய்யலாம். மெரினாபீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு வச்சிட்டாய்ங்கே ஆப்பு" எனஅருமையான டூயட்போட்டு அசத்திவிடலாம்
    * பழைய ராமராஜன்படங்களை ரீமேக் செய்து "எங்கஊரு எருமக்காரன்" என்றபெயரில் நடிக்கலாம்.

    அறிவிப்பு:அன்புநெஞ்சங்களே! இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல. தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //யோசனை2:இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட்நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்கவருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.


    யோசனை3:இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைக் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசாகார்” பரிசு என போட்டிவைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது.
    //



    பகிர்ந்தமைக்கு நன்றி..
    அன்புடன் ஆதி



  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    off the record ல் வரும் மற்ற நடிக நடிகைகளின் கூத்துக்களையும் பந்தாக்களையும் பார்த்தால் ஒரு திரைப்படத்தினையும் பார்க்காது விடவேண்டிவரும்.......

    தேல்விப்படங்களுக்காக வாருவது சரியல்ல. மற்றவர்கள் புண்பட வைத்து சிரிப்பது அழகுமல்ல...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    வில்லுப்படத்தாலும் அன்றைய பிரஸ் மீட்டிங்காலும் உடைந்துபோன விஜய் இதை மட்டும் படித்தால் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுவார்.

    பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போலத்தான் இருக்கிறது. காமடி காமடி என்று சொல்லியே கொலை செய்துவிட்டார்கள் இந்த மின்னஞ்சலால்.

    என்பக்க கருத்து இதுதாங்க. விஜய் என்பவர் நடிப்பு என்ற பிஷ்ணஸ் செய்தார். அதில் இந்த முறை கொஞ்சம் நஷ்டமடைந்துவிட்டார். அவ்வளவுதான்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13
    விஜயை முன்னுக்கு கொண்டு வர அவர் தந்தை செய்த தகுடு தத்தங்கள் முடிந்தாயிற்று. திறமை இல்லாமல் இதனை காலம் இருந்ததே மிகபெரிது. நல்ல நடிகர்களுக்கு வாழ்கை கொடுங்கப்பா.. (இதுவும் எனக்கு அவர் பேரில் உள்ள காண்டால் சொன்னதல்ல.. பொதுவாக சொன்னேன்)
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    சினிமாவில் திறமையானவர்களின் பெயர்களை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் xavier_raja....????!!!!
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by xavier_raja View Post
    விஜயை முன்னுக்கு கொண்டு வர அவர் தந்தை செய்த தகுடு தத்தங்கள் முடிந்தாயிற்று. திறமை இல்லாமல் இதனை காலம் இருந்ததே மிகபெரிது. நல்ல நடிகர்களுக்கு வாழ்கை கொடுங்கப்பா.. (இதுவும் எனக்கு அவர் பேரில் உள்ள காண்டால் சொன்னதல்ல.. பொதுவாக சொன்னேன்)
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    சினிமாவில் திறமையானவர்களின் பெயர்களை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் xavier_raja....????!!!!
    திரைக்கு வர அப்பா உதவினார் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் இவ்வளவு காலம் நீடிப்பது அப்பாவினால் அல்ல...
    காதலுக்கு மரியாதைக்கு பிறகு ஓரளவு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
    சூர்யாவும் முதலில் நடிக்கவில்லை.. இப்ப நடிக்கிறார்.
    விக்ரம் நல்ல நடிகர்...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    குருவி, வில்லு மாதிரி டைப் படத்தின் தோல்விகளுக்கு பதிலாக
    ஒரு நல்ல படம் கொடுத்து ரிஸ்க் எடுக்கலாம்..!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    //தேல்விப்படங்களுக்காக வாருவது சரியல்ல. மற்றவர்கள் புண்பட வைத்து சிரிப்பது அழகுமல்ல...//

    அன்பு இந்த கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன், ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான். ஒரு மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டங்க இந்த வலைபதிவாளர்கள், ஏற்ற்கனவே நொந்திருக்கும் விஜய்க்கு இது இன்னும் வேதனையாக இருக்கும்.

    என்னால் பதிவை ரசிக்க முடியவில்லை.

    யாரோ எழுதியது அதனால் பூமகளை நான் குறைக்கூறவில்லை, எழுதியவருக்கு மட்டும் என் கண்டனம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    சிரிக்க மட்டும்னு தலைப்பு போட்டு எனக்கும் மின்னஞ்சல் வந்தது, ஜாலியாக சிரித்து விட்டு அடுத்த மெயிலுக்கு போனேன், பூமகள் உங்களால் இன்னொரு முறை சிரித்து அடுத்த திரிக்கு போகப்போகிறேன்.....................வாழ்த்துக்கள் பூமகள்...... நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    ஏற்கனவே நொந்திருக்கும் விஜய்க்கு இது இன்னும் வேதனையாக இருக்கும்.
    ஆமாங்க....
    ஒரு காலத்தில வரிசையா உருப்படாத படங்களாவே நடிச்சிட்டு அப்புறமா ஏதோ கொஞ்சம் நல்ல நல்ல இயக்குனர்களால சில நல்ல படங்கள் நடிச்சு... அப்படியே அடிதடி ரகளை என்று மாறி இப்போ அரசியல் மற்றும் உச்ச நட்சத்திர மோகத்தால் தொடர்ந்து உதவாக்கரை படங்களா நடிச்சி தயரிப்பாளர்கள் முதல் சாதாரண இரசிகன் தலைவரை மிளகாய் அரைக்கிறவர் ரொம்ப தான் நொந்து போய் இருப்பாரு
    அவர் நினைத்திருந்தால் ஆட்டோ கிராப் துவங்கி எத்தனையோ கதையம்சம் கொண்ட படங்கள் நடித்திருக்கலாம்.
    தமிழ் நாட்டுல திரையில குடுக்கிற பில்டப்பெல்லாம் நிஜவாழ்க்கை கிடையாதுங்கிற மனநிலை வரத்துவங்கியாச்சு...
    இன்னும் எம்.ஜி. இராமச்சந்திரன் கால கட்டத்திலேயே தமிழ் நாடு இருக்கிறதா நெனச்சிகிட்டு படம் நடிக்கிறவர என்ன சொல்றது.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    ஆமாங்க....
    ஒரு காலத்தில வரிசையா உருப்படாத படங்களாவே நடிச்சிட்டு அப்புறமா ஏதோ கொஞ்சம் நல்ல நல்ல இயக்குனர்களால சில நல்ல படங்கள் நடிச்சு... அப்படியே அடிதடி ரகளை என்று மாறி இப்போ அரசியல் மற்றும் உச்ச நட்சத்திர மோகத்தால் தொடர்ந்து உதவாக்கரை படங்களா நடிச்சி தயரிப்பாளர்கள் முதல் சாதாரண இரசிகன் தலைவரை மிளகாய் அரைக்கிறவர் ரொம்ப தான் நொந்து போய் இருப்பாரு
    அவர் நினைத்திருந்தால் ஆட்டோ கிராப் துவங்கி எத்தனையோ கதையம்சம் கொண்ட படங்கள் நடித்திருக்கலாம்.
    தமிழ் நாட்டுல திரையில குடுக்கிற பில்டப்பெல்லாம் நிஜவாழ்க்கை கிடையாதுங்கிற மனநிலை வரத்துவங்கியாச்சு...
    இன்னும் எம்.ஜி. இராமச்சந்திரன் கால கட்டத்திலேயே தமிழ் நாடு இருக்கிறதா நெனச்சிகிட்டு படம் நடிக்கிறவர என்ன சொல்றது.

    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •