Page 9 of 9 FirstFirst ... 5 6 7 8 9
Results 97 to 104 of 104

Thread: கணினி வினா(டி) விடை.

                  
   
   
  1. #97
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அக்டோபர் 18,2010



    கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் இணைய தளத்திலிருந்து கிடைக்கும் டாகுமெண்ட் பைலை, பிரவுசரில் இருந்த படியே திறந்தால், அவற்றை சேவ் செய்திட முடியவில்லை. ஒரு சின்ன பாப் அப்பில், ""இந்த பைல் ரீட் ஒன்லி; எனவே சேவ் செய்திட முடியாது?'' என்று பிழைச் செய்தி கிடைக்கிறது. எப்படி சேவ் செய்திடலாம்.

    –கா. சிவக்குமார், பழநி

    பதில்: பிரவுசர் மூலம் ஒரு பைலை பிரவுசரில் திறக்கும்போது, அந்த பைல் டெம்பரரி (Temporary) போல்டரில் இறக்கப்பட்டு ரீட் ஒன்லி (Read Only) பைலாகத்தான் திறக்கப்படும்.

    எனவே பைலை வேறு ஒரு போல்டருக்கு மாற்றி Save பட்டன் அழுத்தி சேவ் செய்திடலாம். அல்லது,வேறு ஒரு போல்டரில் சேவ் செய்து பின்னர் திறந்து படிக்கலாம். தேவை இல்லை என்றால் அழித்துவிடலாம்.

    கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரவுஸ் செய்கையில் டிபக்கர் (debugger) பயன்படுத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது.

    இதனைப் பயன்படுத்துவதா? வேண்டாமா? என்று தெரியவில்லை. சில நேரங்களில் Microsoft Visual Studio Debugger என ஒரு பாக்ஸ் கிடைக்கிறது. இதனைக் கேன்சல் செய்வதற்கும் பட்டன் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டவும்.

    –எம். கோவிந்தராஜ், திண்டுக்கல்

    பதில்:இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளப் பக்கத்தினை எடிட் செய்திடலாம். இது ஏன் நமக்குத் தரப்படுகிறது என எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இதன் மூலம் இணையப் பக்கத்தினைச் சரி செய்தாலும், அது உள்ள சர்வரில் அதனை மேற்கொள்ள முடியாது.

    எனவே இந்த ஆப்ஷனைத் தவிர்த்து விடவும். மேலும் இது போல ஆப்ஷன் வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கவும். Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced டேப் தேர்ந்தெடுக்கவும்.

    இதில் ஸ்குரோல் செய்து கீழாக Browse செக்ஷன் செல்லவும். Disabel Script Debugging (Internet Explorer), Disable Script Debugging (Others) என்பதில் கிளிக் செக் செய்திடவும். இந்த வரிகள் முன் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடி, மீண்டும் இயக்கவும்.

    கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வாழ்த்துக் கவிதையினை அழகாக அமைத்துள்ளேன். இதன் பின்புலத்தில், நானும் என் தோழியும் உள்ள படம், கிரே கலரில் பேக் கிரவுண்ட் போல, ரூபாய் நோட்டில் உள்ளது போல, ஒரு வாட்டர்மார்க்காக அமைய வேண்டும். இதனை எப்படி உருவாக்குவது?

    –பெயர் வேண்டாம் என்ற விண்ணப்பத்துடன் திருப்பூர் வாசகர்

    பதில்: பரவாயில்லை, கண்டிஷனுடன் பதில் கேட்கிறீர்கள். இது பலருக்கும் உதவும் என்பதால் சற்று விளக்கமாகவே தருகிறேன்.

    முதலில் குறிப்பிட்ட வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் இணைக்க விரும்பும் இமேஜ் அல்லது போட்டோவினைத் தேர்ந்தெடுத்து இன்ஸெர்ட் செய்திடவும்.

    இப்போது பிக்சர் டூல் பார் திறக்கப்படும். இல்லை என்றால், படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில், பிக்சர் டூல்பார் என்பதில் கிளிக் செய்திடவும்.

    திரையில் தனியே பிக்சர் டூல்பார் கிடைக்கும். இந்த டூல்பாரில் கலர் என்பதில் கிளிக் செய்க. இப்போது தரப்படும் கீழ் விரி மெனு ஆப்ஷன்களில், வாஷ் அவுட் என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.

    உங்கள் படம் வண்ணத்தில் இருந்தால், படம் கலரில் வாட்டர்மார்க் ஆக இருக்கும். அதற்குப் பதிலாக கருப்பு வெள்ளையில் இருக்க வேண்டும் என விரும்பினால், மீண்டும் பிக்சர் டூல் பார் சென்று, கலர் என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் கிரே ஸ்கேல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    மறுபடியும் வாஷ் அவுட் என்பதில் கிளிக் செய்திட வேண்டும். இந்த வாட்டர்மார்க்கில் ஏதேனும் உங்களுக்குப் பிடித்த சொற்களையும் அமைக்க வேண்டும் என்றால், படத்தின் மீது வலது கிளிக் செய்து, கிடைக்கும் விருப்பப் பட்டியலில், வேர்ட் ராப்பிங் என்பதனைத் தேர்ந்தெடுத்து டெக்ஸ்ட் அமைக்கவும்.

    இப்போது படம் உங்கள் டாகுமென்ட்டில் நீங்கள் கேட்டபடி வாட்டர் மார்க்காக அமையும். உங்கள் டாகுமெண்ட் பல பக்கங்களில் அமைந்து, அவை ஒவ்வொன்றிலும் இந்தப் படம் வேண்டும் என்றால், மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் அனைத்தையும், ஹெடர் அல்லது புட்டரில் அமைக்க வேண்டும்.

    கேள்வி: போட்டோ ஷாப் புரோகிராம் மூலம், ஒரு சிறிய டெக்ஸ்ட் அடிப்படையிலான டிசைன் ஒன்று தயார் செய்து என் நண்பருக்கு அனுப்பினேன். அவர் அதில் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். எதனால் இப்படி ஏற்படுகிறது?

    –ஆ. சியாமளா, மதுரை

    பதில்: நீங்கள் பயன்படுத்திய பாண்ட் பைல் அவருடைய கம்ப்யூட்டரில் பாண்ட்ஸ் போல்டரில் இல்லாமல் இருக்கலாம். எனவே நீங்கள் பயன்படுத்திய எழுத்து வகைகளின் பட்டியலை எடுத்து, அந்த எழுத்து வகை கோப்புகள் அனைத்தும் அவரின் பாண்ட்ஸ் போல்டரில் உள்ளனவா என்று பார்க்கச் சொல்லுங்கள்.

    நீங்கள் ஒரே ஒரு பாண்ட் வகையிலேயே முழு பைலும் தயாரித்திருந்தால், அந்த பாண்ட் பைலை அவருக்கு அனுப்பி, அவரின் பாண்ட்ஸ் போல்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர், போட்டோ ஷாப் பைலைப் பார்க்கச் சொல்லுங்கள். அல்லது அந்த பாண்ட்பைல்கள், இணையத்தில் கிடைக்கும். அவற்றை அவர் டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடலாம்.

    கேள்வி: நான் பென்டியம் 2 சிப் கொண்ட கம்ப்யூட்டர் வைத்திருக்கிறேன். இதற்குப் பதிலாக இன்டெல் கோர் ஐ7 சிப்பினை இணைக்க விரும்புகிறேன். மதர்போர்டினை மாற்ற வேண்டுமா? இப்போதைய மதர்போர்டையே பயன்படுத்தலாமா?

    –கி. சுஜாதா, திண்டுக்கல்

    பதில்: ஐ7 சிப்பினை சப்போர்ட் செய்திடும் புதிய மதர்போர்டுக்கு மாற வேண்டும். பழைய மதர்போர்டு நீங்கள் குறிப்பிடும் சிப்பிற்கு உதவாது. ஒவ்வொன்றாக புதியதாக வாங்கி மாற்றுவதற்குப் பதிலாக, இப்போதைய கம்ப்யூட்டரை உபரி கம்ப்யூட்டராக வைத்துக் கொண்டு, புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன். நீங்கள் கம்ப்யூட்டரை வைத்து டி.டி.பி. வேலை செய்வதாக எழுதி உள்ளீர்கள். அதுவே சிறந்த மாற்று வழி.

    கேள்வி: ஷட் டவுண் செய்திடுகையில், ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்தால், ஸ்டேண்ட் பை மோட், ஹைபர்னேட் மோடுக்குச் செல்லவில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது?

    –கா. அழகுராஜ், நத்தம் மேடு

    பதில்: ஹைபர்னேஷன் செயல்பாட்டை இயக்க, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அதில் பவர் ஆப்ஷன்ஸ் போல்டரைத் திறக்கவும். இதில் கிடைக்கும் ஹைபர்னேட் டேப்பில், எனேபில் ஹைபர்னேஷன் என்னும் வரிக்கு எதிரே டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி உங்களுக்கு இந்த ஆப்ஷன் கிடைக்கும்.

    கேள்வி: என் ஜிமெயில் காண்டாக்ட் முகவரிகளை பேக் அப் எடுத்துவைத்துப் பயன்படுத்த முடியுமா? பேக் அப் எடுப்பது எப்படி என டிப்ஸ் தரவும்.

    –ஆ. மல்லிகா, அம்மா பேட்டை, வடக்கனேந்தல்

    பதில்: முதலில் உங்கள் அக்கவுண்ட்டில் சென்று, பக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், அருகே தனியே தரப்பட்டிருக்கும் பிரிவில் காண்டாக்ட்ஸ் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.

    இனி எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். அனைத்து காண்டாக்ட்களுக்கும் பேக் அப் தேவையா? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கா என்று, நீங்கள் விரும்பியபடி ஆப்ஷன் தேர்வு செய்திடவும்.

    இதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து சேவ் டு டிஸ்க் என்பதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் ட்ரைவ் மற்றும் போல்டரைத் தேர்வு செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திட, காண்டாக்ட்ஸ் அனைத்தும் தேர்ந்தெடுத்தபடி பைலாக சேவ் ஆகும். இது சி.எஸ்.வி. பார்மட்டில் இருக்கும்.

    கேள்வி: என் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி, அனைத்து சோதனைகளும் முடிந்து, மானிட்டரில் டெஸ்க்டாப் காட்சி வந்தவுடன், மறுபடியும் ரீஸ்டார்ட் மோடுக்குச் செல்கிறது.

    அப்போது ஒரு எர்ரர் மெசேஜ் வேகமாக வந்து செல்கிறது. அதில் டி.எல்.எல். பைல் ஒன்று மிஸ்ஸிங் என்று வருகிறது. சேப் மோடில் சென்று இயக்கினாலும் இதே கதைதான். ரீ பார்மட் செய்திட வேண்டுமா?


    –டி.மீனாட்சி நாயகம், கூடலூர்

    பதில்: உங்கள் விண்டோஸ் சிஸ்டத்திற்கான முக்கியமான டி.எல்.எல். பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். எர்ரர் செய்தியில் எந்த டி.எல்.எல். பைல்கள் என்று காட்டப்பட்டால், அவற்றை சிஸ்டம் சிடிக்களில் இருந்து காப்பி செய்து, பின்னர் இயக்கிப் பார்க்கலாம்.

    அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால், உடன் ரெகவரி சிடி ஒன்று கொடுத்திருப்பார்கள். அதன் மூலம் சிஸ்டத்தினை இயக்கிப் பின்னர், ரெகவர் செய்திடுமாறு கட்டளை கொடுத்தால், பிழையான பைல்களின் பதிலுக்கான பைல்கள் தானாக காப்பி ஆகும்.

    அல்லது அனைத்து சிஸ்டம் பைல்களையும் காப்பி செய்திடலாம். இவை எதுவும் பலனளிக்காத பட்சத்தில், ஹார்ட் டிஸ்க்கின் சி ட்ரைவினை ரீபார்மட் செய்திடலாம். விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் பதித்திடலாம். அருகில் உள்ள டெக்னீஷியன் ஒருவரின் உதவியை நாடவும்.

    நன்றி.தினமலர்

  2. #98
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அக்டோபர் 25,2010


    கேள்வி: மெகாபைட் என்ற அளவில் இருப்பதை கிகா பைட் என்ற அளவில் சொல்ல வேண்டும். இதற்கான பார்முலா ஏதேனும் உள்ளதா?

    - ஆ. பிரகாஷ், விழுப்புரம்

    பதில்: இதற்கான பார்முலா இருக்கிறது. இதனை நீங்களாகவே கணக்குப் போட்டு சொல்லலாம். இதில் ஒன்றும் பெரிய பார்முலா இல்லை. சாதாரண கணக்குதான்.

    ஒரு ஜிபி என்பது 1024 எம்பி. எனவே ஒரு எம்பி என்பதனை ஜிபி அளவில் சொல்ல வேண்டுமானால், அதனை 1024 ஆல் வகுக்க வேண்டும்.

    எடுத்துக் காட்டாக, ஒரு எம்பி யை எடுத்துக் கொள்வோம். 1 எம்பி = 1/1024 ஜிபி.

    அதாவது, 0.0009765625 ஜிபி. இதனையே 16 எம்பிக்குக் கணக்கிட்டால், 16 x 0.0009765625 ஜிபி. இதனைக் கணக்கிட்டால் கிடைப்பது 16 எம்பி=0.015625 ஜிபி.

    இதே போல் கிகாபைட் அளவினை, மெகா பைட்டில் சொல்லலாம். 4 கிகா பைட், 4 x 1024 =4096 எம்பி. கூகுள் தளம் சென்றால், இந்த மாற்று அளவினை அதுவே

    கணக்கிட்டு எளிதாகத் தரும்.கூகுள் தேடல் தளம் சென்று, தேடல் கட்டத்தில் Convert 128 Mb to Gb என்று கொடுத்துப் பாருங்கள்.

    கேள்வி: நான் தமிழை கம்ப்யூட்டரில் நன்கு பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் என் நண்பர் அனுப்பிய ஒரு டாகுமெண்ட்டில், பாரா தலைப்பு தவிர மற்ற வரிகள் எல்லாம் நன்கு தெரிகின்றன. ஏன் இந்த குறைபாடு? ஸ்டைல் பார்மட்டிங்கினால் இது ஏற்படுகிறதா? என் நண்பர், அவருடைய கம்ப்யூட்டரில் நன்றாகத் தெரிவதாகவும், அந்த டாகுமெண்ட் தன் நண்பர் அனுப்பியதாகவும் கூறுகிறார். வழி சொல்லவும்.

    - ஆ. செந்தமிழ்ச் செல்வன், மதுரை

    பதில்: இதில் சிக்கலே இல்லை, செந்தமிழ். பாரா தலைப்பு மட்டும் தனியான ஒரு தமிழ் எழுத்து வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகை பாண்ட் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்கலாம்.

    அந்த தெரியாத சொற்களில் கர்சரை நிறுத்துங்கள். இப்போது அது எந்த பாண்டில் அமைக்கப்பட்டது என, வேர்ட் உங்களுக்குக் காட்டும். அந்த பாண்ட் பைலை இணையம் அல்லது நண்பரின் கம்ப்யூட்டரிலிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்திட்டால், அவற்றையும் நீங்கள் படிக்கலாம்.

    கேள்வி: விண்டோஸ் 98 மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களில், கர்சர் தெரிந்த அளவிற்கு, விண்டோஸ் 7ல் நன்றாகத் தெரியவில்லை. செட்டிங்ஸ் சென்று எப்படி இதனை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம்?

    - டி. கமலா, கோவை

    பதில்: பொதுவாக சிஸ்டங்கள் மாற்றப்படுகையில், அனைத்தும் புதிய முறையில் தரப்படுவதால், இது போன்ற சில விஷயங்கள் நம்மை உறுத்தும். பழகினால் சரியாகிவிடும். இருப்பினும், நம் விருப்பப்படி கர்சர் இயக்கத்தினை மாற்றிக் கொள்ள வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

    முதலில் Start அழுத்தி Search Box சென்று “Keyboard” என டைப் செய்திடவும். அடுத்து, கண்ட்ரோல் பேனல் விண்டோ பெற்று “Keyboard” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுடைய கீ போர்டு ப்ராப்பர்ட்டீஸ் பாப் அப் விண்டோ கிடைக்கும்.

    இந்த விண்டோவில் கர்சர் பிளிங்க் ரேட் (blink rate) என இருக்கும் இடத்தில், உங்களுக்கு என்ன ஸ்பீட் வேண்டுமோ அதனை அமைக்கவும். இந்த மாற்றத்தை, விண்டோஸ் தொகுப்புகளில், விண்டோஸ் 7 தொகுப்பில் மட்டுமின்றி அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கலாம். கண்ட்ரோல் பேனலில் இந்த வசதி கிடைக்கும்.

    கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சிஸ்டம் பைல்களைத் தேடுகையில், அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தி வருகிறது. நீங்கள் தரும் டிப்ஸ் மற்றும் ஆபத்துக் கால உதவிகளில், இவற்றை காப்பி எடுத்து வைக்கச் சொல்கிறீர்கள். எப்படி இவற்றைப் பெறுவது? எப்போதும் பெறக் கூடிய வகையில் அமைப்பது எப்படி?

    - சி.கனகவேல், பழனி

    கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்கள், சிஸ்டம் பைல்களைக் கையாண்டு அதில் எந்த பிரச்னையும் செய்துவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கைக்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயம் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான வழி இருக்கிறது.

    அந்த வழி இதோ: Start பட்டன் அழுத்துங்கள். Control Panel ஐத் திறக்கவும். Folder Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைக் கிளிக் செய்திடவும்.

    அதில் Show Hidden Files and Folders என்று இருக்கும் வரியின் முன் உள்ள ரேடியோ பட்டனில், மவுஸால் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இனி சிஸ்டம் பைல்களை, மறைத்தபடியே வைத்திட Hide Protected Operating System Files என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இது எப்போதும் நல்லது. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

    கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் சிலவற்றை ஒரு சிடியில் பதிந்து என் உயர் அதிகாரியிடம் தர வேண்டியுள்ளது. இந்த பைல்கள் போல்டரில் அங்கும் இங்குமாக உள்ளது. இவற்றின் மொத்த அளவு எவ்வளவு இருக்கும் என எப்படி அறிவது?

    - ஆ. காமராஜ், மதுரை

    பதில்: இரண்டு வழிகள் உள்ளன. புதிய போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். மற்றவற்றில் இருந்து அடையாளம் காண, உங்கள் அதிகாரி பெயரையே அதற்கு சூட்டுங்கள். இப்போது அவருக்கு காப்பி செய்ய வேண்டிய பைல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த போல்டரில் இடுங்கள். பின்னர், அவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து, அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், எத்தனை பைல்கள், அவற்றின் மொத்த அளவு எவ்வளவு என்று காட்டும்.

    அல்லது அந்த பைல்களை, இருக்கும் ட்ரைவிலேயே, அதன் போல்டரில், கண்ட்ரோல் அழுத்தித் தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தும் பார்க்கலாம். மொத்த அளவு தெரிந்த பின்னர், ஒரு சிடி போதுமா, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிடி வேண்டுமா என முடிவு செய்திடலாம்.

    போல்டரில் போட்டு வைத்தால், சிடியில் காப்பி செய்திடுகையில் உதவும். காப்பி செய்த பின்னர், போல்டரையே அழித்துவிடலாம்.

    கேள்வி: சற்று அதிக நேரம் கம்ப்யூட்டரிலிருந்து விலகிச் செல்ல எண்ணுகையில், அதனை ஷட் டவுண் செய்திடாமல், ஸ்லீப் மோடில் வைத்துவிட்டுச் செல்கிறேன். ஆனால் என்னுடைய மவுஸின் உணர்வு திறன் மிகவும் ஷார்ப்பாக இருப்பதால்,

    அருகில் வேறு எதனையாவது தொட்டுவிட்டால், உடனே கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டு வந்து விடுகிறது. இதனைத் தடுக்க முடியுமா? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.

    - சி. குமரேசன், பொள்ளாச்சி

    பதில்: Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Mouse என்று டைப் செய்திடவும். பின்னர் என்டர் தட்டவும். இப்போது உங்களுக்கு மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் Hardware டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

    கீழாக Properties என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Power Management என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இந்த டேப் இல்லை என்றால், விண்டோவின் கீழாக Change Settings என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

    இங்கு Allow this device to wake the computer என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை எடுத்து விடவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் மவுஸ் தொல்லை கொடுக்காது. இப்படியே எந்த சாதனமும் உறங்கும் கம்ப்யூட்டரை எழுப்பாமல் அமைக்கலாம்.

    கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களை அமைக்கையில், என் பெயரினை, வேர்ட் தானாக அமைத்திடுமா? என் நண்பர் அனுப்பும் வேர்ட் டாகுமெண்ட்களில் இது போல் உள்ளது. இதனை எப்படி செட் செய்வது?

    - கா. சுந்தர வள்ளி, சென்னை

    பதில்: கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் அமைக்கப் பட்டிருந்தால், தாராளமாக அமைக்கலாம். அதாவது, சிஸ்டம் இன்ஸ்டால் செய்கையில் கம்ப்யூட்டர் உரிமையாளரின் பெயர் அல்லது யூசர் அக்கவுண்ட்டில் உங்கள் பெயர் இருக்க வேண்டும்.

    எடுத்துக்காட்டாக, கடிதங்களை டாகுமெண்ட்டாக அமைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் அனுப்புபவர் முகவரியில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் எனில் இதன் மூலம் அமைக்கலாம். முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.

    எங்கு உங்கள் பெயர் இருக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்துங்கள். அடுத்து, இன்ஸெர்ட் மெனுவில் இருந்து, பீல்ட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் பீல்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

    இங்கு காணப்படும் கேடகிரீஸ் லிஸ்ட்டில், யூசர் இன்பர்மேஷன் என்பதனைத் தேர்ந்த்டுக்கவும். இனி, பீல்டு நேம்ஸ் லிஸ்ட்டில், யூசர் நேம் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி இந்த இடத்தில், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் யூசரின் பெயர், தானாக அமைக்கப்படும். யூசரின் பெயரை மாற்றினால், இதுவும் தானாகவே மாறும்.

    கேள்வி: உண்மையாகக் கூறுங்கள். இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு, பத்திரிக்கைகள் கூறும் அளவிற்கா வளர்ந்துவிட்டது. இரண்டாம் நிலை நகரங்களில், இன்டர்நெட் வளர்ச்சி, கம்ப்யூட்டர் பரவிய அளவிற்குப் பரவவில்லை என்பதே என் கருத்து. உங்கள் பதில் என்ன?

    - என். சேஷாத்ரிநாதன், சென்னை

    பதில்: பல விஷயங்களை இணைத்து உங்கள் கேள்வி உள்ளது. அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இதற்கான பதிலைத் தருகிறேன். கம்ப்யூட்டர் வளர்ந்த அளவிற்கு இன்டர்நெட் வளரவில்லை என்பது உண்மை.

    ஏனென்றால், கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த பொருட்களின் விலை குறைந்ததைப் போல, இன்டர்நெட் கட்டணம் குறைக்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசு, கிராமங்களில் இன்டர்நெட் பயன்பாட்டினை ஊக்குவிக்க, பல சலுகைத் திட்டங்களை வழங்கி வருகிறது.

    இது போன்ற திட்டங்கள் இருப்பது மக்கள் அறியும் பட்சத்தில், நிச்சயம் இன்டர்நெட் பயன்பாடும் அதிகரிக்கும். அண்மையில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, சராசரியாக, இந்திய இன்டர்நெட் பயனாளர் ஒருவர், வாரத்திற்கு 3.5 மணி நேரம் பயன்படுத்துகிறார்.

    எனவே, நாளொன்றுக்கு 26 நிமிடங்கள். வார இறுதி நாட்களில் இது 12% குறைகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாகவே, வார இறுதியில் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் 12% அதிக இன்டர்நெட் போக்கு வரத்து உள்ளது.

    நன்றி.தினமலர்

  3. #99
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0


    நவம்பர் 01,2010,

    கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில், மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, கண் சிமிட்டும் கர்சர் ஒன்றைப் பார்த்தேன். இதனை எப்படி தேர்ந்தெடுப்பது? அல்லது புரோகிராமாகக் கிடைக் கிறதா? என் ஆசையை நிறைவேற்ற பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    - தி. ஷண்முக நாதன், திருப்புவனம்

    பதில்: மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, பல வகை கர்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இதற்கு வழி காட்டும் முன் சில எச்சரிக்கைகளைத் தருகிறேன். இந்த கர்சர்கள் பெரும்பாலும் அனிமேஷன் எனப்படும் அசைந்திடும் வரைகலை உருவங்கள்தான்.

    ஆனால், இவற்றின் மூலம் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் இயங்குவதாகத் தகவல்கள் உள்ளன. ஆசையே அழிவிற்குக் காரணம் என்பதை எண்ணி, இந்த வகை ஆசைகளுக்குத் தடை போடுவதே நல்லது.

    மேலும், இவை அனிமேஷன் வகை பைல்கள் என்பதால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியில் எப்போதும் சற்று அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும்.


    சரி, உங்கள் ஆசைக்குச் சரியான தீர்வு தரும் இணைய தளத்தைப் பார்ப்போம். இந்த வகை கர்சர்களைத் தரும் புரோகிராம் ஒன்று, பாதுகாப்பான, மால்வேர் புரோகிராம் எதுவும் இல்லாத தளம் ஒன்றில் உள்ளது.

    www.download.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு (Cursor FX) கர்சர் எப் எக்ஸ் என்ற புரோகிராம் தேடி எடுத்து டவுண்லோட் செய்திடவும். டவுண்லோட் செய்து முடித்த பின்னர், இதனை இன்ஸ்டால் செய்திடவும்.

    இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், இந்த புரோகிராமினைக் காண கண்ட்ரோல் பேனல் செல்லவும். இதில் My Cursors என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது மவுஸ் கர்சராகப் பயன்படுத்த என்ன என்ன கர்சர்கள் உள்ளன என்று காட்டப்படும்.

    இதில் எந்த கர்சர் உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனை வழக்கமான கர்சருக்குப் பதிலாக அமைத்திட Activate என்பதில் கிளிக் செய்திடவும். இந்த கர்சர்கள் இயங்குவதில், சில கூடுதல் செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். Trails என்பதில் கிளிக் செய்து இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.


    கூடுதலாக சிறிய அளவில் ஆடியோ இசையைக் கூட இதில் வெளிப்படுமாறு செய்திடலாம். ஆனால் அதற்குக் கட்டணம் செலுத்தி இந்த புரோகிராமை விலைக்கு வாங்க வேண்டும்.

    கேள்வி: தமிழில் ஆவணம் ஒன்றை, நண்பரிடமிருந்து மின்னஞ்சல் வழியாகப் பெற்று படிக்க முற்படுகையில், அது வெறும் கட்டங்களாகக் காட்சி அளித்தது. நண்பரிடம் இது குறித்துக் கேட்கையில், அது யூனிகோட் எழுத்து முறை என்றும், அது என்னுடைய கம்ப்யூட்டரில் இல்லையா என்றும் கேட்டார். பின்னர் அதனை பி.டி.எப். ஆக மாற்றி அனுப்பினார். யூனிகோட் எழுத்து முறை என்பது என்ன?

    - ஆர். நல்லசிவம், சென்னை


    பதில்: யூனிகோட் என்பது பெரிய அளவில் உலக அளவிலான அனைத்து எழுத்துக்கள் மற்றும் சில குறியீடுகள் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். கம்ப்யூட்டரில் வெகு காலமாக ஆஸ்க்கி மற்றும் ஆன்ஸி குறியீட்டு முறைகளே பின்பற்றப்பட்டு வந்தன.

    இவற்றைப் பயன்படுத்தி, 256 தனிக் குறியீடுகளே அமைத்துப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரில் காட்ட முடியும். உலக அளவில் அனைவரும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், அவர்கள் மொழிகளுக்கான எழுத்துக்களை அமைக்கையில் இந்த முறை ஒத்துழைக்கவில்லை. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன.

    ஏனென்றால் பல மொழிகளில் 256க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருக்கின்றன.
    இந்த பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டதுதான் யூனிகோட் கட்டமைப்பு. இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு எழுத்தும், குறியீடும் இரண்டு பைட்களில், அதாவது 16 பிட்களில் அமைக்கப்படுகின்றன.

    இதனால் 65,536 தனிக் குறியீடுகளை அமைக்க முடியும். உலக அளவில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், மொழி ஆய்வாளர்கள் ஒரு குழுவாக அமைந்து உலக மொழிகள் அனைத்திற்கும் தனிக் குறியீடுகளை ஒரு பைலில் கொண்டு வந்தனர்.

    இதுவே யூனிகோட் குறியீடு அமைப்பாகும். மேலும் சில வழிகளைக் கையாண்டு, இந்த தனிக் குறியீடுகளின் எண்ணிக்கையைப் பல லட்சமாக உயர்த்தவும் முடியும் என்று அறியப்படுகிறது.

    தமிழ் உட்பட உலகின் அனைத்து மொழிகளும், யூனிகோட் கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. உங்கள் கம்ப்யூட்டரில் யூனிகோட் தமிழ் எழுத்துரு வேண்டும் எனில் ஏரியல் யூனிகோட் எம்.எஸ். என்ற பாண்ட் பைல் இருக்க வேண்டும்.

    தமிழ் எழுத்துக்கள் லதா என்ற பெயரில் கிடைக்கும். இணையத்தில் தமிழ் யூனிகோட் தரக்கூடிய பைல்கள் நிறைய உள்ளன. இவற்றை டவுண்ட்லோட் செய்து, பாண்ட்ஸ் போல்டரில் போட்டு வைத்துக் கொண்டால், யூனிகோட் தமிழில் உருவாக்கப்பட்ட பைல்களை அந்த பாண்ட் வகைக்கு மாற்றிப் படித்துக் கொள்ளலாம்.

    எக்ஸ்பி முதல் இப்போது வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வரை யூனிகோட் எழுத்துருக்களை சப்போர்ட் செய்கின்றன.

    கேள்வி: நாங்கள் பலர் இப்போது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறிவிட்டோம். பல புது வசதிகளைப் பயன்படுத்துகிறோம். தங்கள் கணிப்பில், இதற்கான இமெயில் கிளையண்ட் புரோகிராமாக எதனை பரிந்துரை செய்கிறீர் கள்?

    - ஆ. சி. கணேசன், திருவள்ளூர்

    பதில்: பல இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இதற்கென உள்ளன. இருப்பினும் இலவசமாகக் கிடைக்கும் இரண்டு புரோகிராம்கள் குறித்து இங்கு கூறுகிறேன்.

    அவை விண்டோஸ் லைவ் மெயில் மற்றும் தண்டர்பேர்ட். விண்டோஸ் லைவ்மெயில் புரோகிராமினை இலவச மாக http://explore. live.com/windows-live-mail?os=other என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். அடிப்படையில் இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸின் மேம்படுத்தப்பட்ட புரோகிராமாகும்.

    விண்டோஸ் லைவ் மெயிலில், நம்முடைய மற்ற ஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்களை, ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ போன்றவற்றை இணைக்கலாம். இவ்வாறு அனைத்து இமெயில் அக்கவுண்ட்களையும் இதில் பார்க்கலாம். இதில் காலண்டர் ஒன்று இணைத்தே கிடைக்கிறது.

    இதில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைக் குறித்து வைக்கலாம். ஆர். எஸ். எஸ். ரீடர் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதனுடனும் இணைத்து, அதில் போட்டோக்கள் இருப்பின், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மெயில்களை, இதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் ட்ரைவில் பேக் அப் செய்து வைக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இணைந்து பயன்படுத்த, இது ஒரு நம்பிக்கையான இமெயில் கிளையண்ட் புரோகிராமாகும். அடுத்ததாக, இதே போன்ற வசதிகளுடன் கூடிய புரோகிராம், தண்டர்பேர்ட் பதிப்பு 3 ஆகும். இதுவும் கிராஷ் ஆகாமல்,

    நிலைத்து இயங்கக் கூடிய ஒரு புரோகிராம். பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் புதிய காண்டாக்ட் சேர்க்க அனுப்பு பவரின் பெயர் அருகே உள்ள ஸ்டாரை அழுத்தினால் மட்டும் போதும். பிரவுசர் இயங்குவது போல, டேப்களில் மெசேஜ்களைத் திறந்து காட்டும்.

    மிகச் சிறப்பான ஒரு விஷயம் இதனைப் பொறுத்தவரை என்னவென்றால், உங்கள் கடிதத்தில் “attachment” என்ற சொல் இருந்து, நீங்கள் பைல் எதுவும் அட்டாச் செய்யப் படாமல், மெயிலை அனுப்பினால், உடனே ""பைல் அட்டாச் செய்திட மறந்துட்டீங் களா?'' என்று நினைவூட்டும்.

    தானாகவே மொஸில்லா மேற் கொள்ளும் அப்டேட்களை இணைத்துக் கொண்டு, நிலையாக அனைத்து வசதிகளையும் தரும். இந்த இரண்டில் எது மிகச் சிறந்தது என்று கேட்கிறீர்களா? அதனை நீங்கள் தான் முடிவு செய்திட வேண்டும். இரண்டையும் இறக்கிப் பதிந்து, பயன்படுத்திப் பார்த்து முடிவு செய்திடுக.

    கேள்வி: நான் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். புதியதாக நான் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் கம்ப்யூட்டரில், பழைய கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புக்மார்க்குகளை, புதிய கம்ப்யூட்டருக்கு மாற்றுவது எப்படி?

    - டி. பிரதீப் குமார், கோவை

    பதில்: மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் அதிர்ஷ்டவசமாக, அதன் புக்மார்க்குகளை பேக் அப் செய்து, இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வழியைக் கொண்டுள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள்.

    Bookmarks மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் Organize Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது லைப்ரேரி விண்டோ தரப்படும். இதில் Import and Backup என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

    அடுத்து Backup ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இதில் கிளிக் செய்தவுடன், உங்களுக்கு Bookmarks backup filename என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். நீங்கள் தயாரிக்கும் பேக் அப் பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இந்த பைலில் தான், உங்கள் புக் மார்க்குகள் அனைத்தும் சேவ் செய்யப்படும்.

    அடுத்து, சேவ் கிளிக் செய்திட பைல் உருவாகும். இதனை காப்பி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதிலிருந்து புக்மார்க்கு களை இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் செல்ல, அந்த கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் திறந்து, Bookmarks மெனு கிளிக் செய்து, Organize Bookmarks மெனு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

    லைப்ரேரி விண்டோ கிடைக்கும். இதில் Import and Backup என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Restore என்பதில் கிளிக் செய்து, Choose File...... என்பதில் கிளிக் செய்திடவும்.

    இப்போது Select a bookmarks backup என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் சேவ் செய்து வைத்த புக்மார்க் பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் open என்பதில் கிளிக் செய் திடவும்.

    இப்போது Revert Bookmarks என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் ஓகே பட்டன் கிளிக் செய்து, லைப் ரேரி விண்டோ வினை மூடவும். எடுத்து, சேவ் செய்து கொண்டு வந்த புக்மார்க்கு கள் அனைத் தும், புதிய கம்ப்யூட்டரில், பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்கும்.

    நன்றி.தினமலர்.

  4. #100
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நவம்பர் 08,2010.



    கேள்வி: கேப்ஸ் லாக் போன்ற பட்டன்கள் இயக்கப் படுகையில், பீப் ஒலி எழுப்பும் வசதியினை எப்படி அமைப்பது? அத்துடன் அப்போது பிளாஷ் போன்று திரையில் ஏற்பட வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும்?

    –டி. நிரஞ்சன் விநாயகம், சென்னை

    பதில்: இந்த வசதியினை அமைப்பது குறித்து அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் இந்த முறை பிளாஷ் அமைப்பது குறித்தும் பார்க்கலாம்.

    1. Start பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Settings, Control Panel எனச் செல்லவும். (எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் ஸ்டார்ட் மற்றும் கண்ட்ரோல் பேனல் எனச் செல்லவும்) அதன் பின்னர் Accessibility Options ஐகான் மீது கிளிக் செய்து திறக்கவும்.

    2. Keyboard tab டேப் தேர்ந்தெடுத்து, அதன் பின் “Use Toggle Keys” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அவ்வளவு தான்! இனி இந்த டாகிள் கீக்களை அழுத்தினால் பீப் ஒலி கிடைக்கும்.

    இனி, திரை அதிர்வது குறித்து.

    1. Accessibility Options திரையில் Sound tab என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் “Use SoundSentry” என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

    2. அடுத்து செட்டிங்ஸ் என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி “Warning for windowed programs” என்ற கீழ்விரி மெனுவில் “Flash active window” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ப்ராப்பர்ட்டி அண்ட் செட்டிங்ஸ் திரை விலகும் வரை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

    அடுத்து உங்களுக்குப் பிரியமான வேர்ட் ப்ராசசரைத் திறந்து கேப்ஸ் லாக் கீயை அழுத்திப் பார்த்து நீங்கள் விரும்பியது கிடைத்துவிட்டதா எனப் பார்க்கவும்.

    கேள்வி: நான் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் ஒன்றை, பெறுபவர் அதனைப் படித்து விட்டார் என்று அறிய என்னவகையான செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்?

    –கா. சூரியப் பிரகாஷ், கோவை

    பதில்: நீங்கள் கேட்பது, மின்னஞ்சல் தொகுப்புகளில் உள்ள “read receipt” என்னும் வசதி பற்றி. இது நமக்கு நம் அஞ்சல் அலுவலகங்கள் தரும் பதிவுத்தபாலுக்கான அக்னாலட்ஜ்மெண்ட் கார்ட் போல. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெயில்,

    யாருக்கு அனுப்பப்பட்டதோ, அவரால் திறந்து படிக்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதியினை அனைத்து இமெயில் சேவை தரும் நிறுவனங்களும் தருவதில்லை. இதனால் தனிநபர் உரிமை பாதிக்கப் படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    எடுத்துக்காட்டாக, யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில் ஆகிய பிரபல இமெயில் நிறுவனங்கள் இந்த வசதியைத் தருவதில்லை. இன்கிரெடிமெயில் இந்த வசதியைத் தருகிறது. விண்டோஸ் மெயில் சர்வர் (முன்னால் அவுட்லுக்) இதனைத் தங்கள் மெயில் விண்டோவில், டூல்ஸ் மெனுவில் தருகிறது.


    இதனைக் காட்டிலும் ஒரு நல்ல வழியைச் சொல்லட்டுமா! உங்கள் கடிதத்திலேயே, கடிதம் பெறுபவருக்கு, இதனைப் பெற்று படித்ததற்கான பதில் அஞ்சலை அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன் என்ற குறிப்பினை அனுப்பவும். உங்கள் அன்பான குறிப்பை உணர்ந்து, அஞ்சலைப் பெறுபவர் நிச்சயம் பதிலளிப்பார்.

    கேள்வி: டேட்டா பைல்களை ஸ்டோர் செய்திட, அதிக லேயர்கள் கொண்ட டிவிடி இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதனைப் பற்றிய தகவல்களையும், பைல்களைக் காத்திட இந்த டிவிடிக்கள் பயனளிக்குமா என்றும் விளக்கவும்.

    –எஸ். ÷ஷாபா தேவி, மதுரை


    பதில்: டேட்டா பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிவிடி எனப் பார்க்கையில் கோல்டு டிவிடியை (இது தங்கம் அல்ல, ஒரு வகையான டிவிடி) அனைவரும் பரிந்துரைக்கின்றனர். சோதனை செய்து பார்த்ததில் இது 15 ஆண்டுகளுக்கு தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என அறியப்பட்டுள்ளது.


    ஆனால், எந்த வகை டிவிடி என்றாலும் அதில் ஏறத்தாழ 4.7 கிகா பைட் அளவிலான தகவல்களையே பதிய முடியும். மேலும் மேலும் அழித்து எழுதுவது முடியாது. இதனால், இறுதியாக பேக் அப் செய்தது தேவையில்லை என்றால், உடனே நம் பைல்கள் அடுத்தவர் பார்வைக்குச் செல்லாமல் இருக்க, அவற்றை சுக்கு நூறாக உடைப்பதுதான் ஒரே வழி.

    டேட்டா ஸ்டோரேஜ் என்று வருகையில், எந்த வகை டிவிடி என்பது முக்கியமல்ல. எழுதிய பின் அவற்றை எப்படி பாதுகாப்பாக வைக்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். உலர்ந்த சீதோஷ்ண நிலையில் தான் அவற்றை வைத்திருக்க வேண்டும்.

    அவ்வாறு வைத்திருக்கும் வரை பிரச்னை எதுவுமில்லை. உங்கள் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மற்ற சில வழிகளும் உள்ளன. மெமரி கார்ட் இதில் ஒரு வகை. இவை டிவிடிக்களைக் காட்டிலும் அதிக அளவில் டேட்டா கொள்ளக் கூடியவை. இவற்றையும் முன்பு கூறிய படி உலர் சீதோஷ்ணத்தில் வைத்திட வேண்டும்.

    இன்னொரு வழி, கம்ப்யூட்டருக்குள் வைத்திடாமல் தனியே வைத்து இயக்கும் ஹார்ட் டிஸ்க்குகளாகும். இப்போது இவை டெரா பைட் அளவுகளில் கிடைப்பதில், மிகப் பெரிய அளவில் பைல்களைப் பதிந்து வைக்கலாம்.

    மற்றவற்றுடன் ஒப்பிடுகையில், பைல்களின் கொள்ளளவு அடிப்படையில், இதற்கு செலவழிக்கும் பணம் குறைவுதான். இதனை இந்த டிஸ்க் வரும் ஒரிஜினல் பாக்ஸில் வைத்துப் பாதுகாப்பதே நல்லது.

    ஆனால் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். எந்த ஸ்டோரேஜ் வகை என்றாலும், அவை எந்த சூழ்நிலையிலும் பிரச்னைக் குள்ளாகி, நம் டேட்டா பைல்களைத் திரும்பத் தராத நிலைக்குத் தள்ளப் படலாம். எனவே கவனமாகவே, பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளுடன் இவற்றைக் கொள்ள வேண்டும்.

    இதனால் கலவரம் அடைய வேண்டாம். சற்று கவனத்துடன் இவற்றைப் பயன்படுத்தவும், எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும், சமாளித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல். ஒன்றிற்கு இரண்டாக சேமித்து வைப்பதுவும், அடிக்கடி அவற்றைச் சோதனை செய்து, அவை தொடர்ந்து சரியாக உள்ளனவா என்று உறுதி செய்து கொள்வதும் தேவை.

    கேள்வி: போட்டோஷாப் சாப்ட்வேருக்குப் பதிலாக, இலவச இமேஜ் எடிட்டர் புரோகிராம் உள்ளதா? என் நிறுவனத்தில் பயன்படுத்தும் வகையில் உள்ளதைக் கூறவும்.

    –டி.பாலாஜி, தேவி வீடியோஸ், சென்னை


    பதில்: இணையத்தில் பல இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனாலும் அடோப் போட்டோ ஷாப் புரோகிராமில் உள்ள அனைத்தும் கிடைக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் அண்மையில் நான் இணையத்தில் கண்டு பயன்படுத்திய புரோகிராம் ஒன்று பற்றிக் கூறுகிறேன். அதனைப் பயன்படுத்திப் பாருங்கள்.


    அதன் பெயர் GIMP. இது ஓர் இமேஜ் எடிட்டிங் புரோகிராம். போட்டோ மற்றும் படங்களை எடிட் செய்திடவும், டச் அப் செய்திடவும் உதவுகிறது. இதனைப் பொறுத்தவரை உள்ள சிறப்பம்சம், இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற விளக்கக் குறிப்புகள், அதன் தளத்திலேயே இலவசமாகக் கிடைக்கின்றன.

    அத்துடன் அவை Beginner, Intermediate, Expert, Photo Editing, Web, and Scripting எனப் பல்வேறு நிலைகளில் இதனைப் பயன்படுத்து வோருக்கென தரப்பட்டுள்ளன. இந்த புரோகிராம் மற்றும் குறிப்புகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.gimp.org.

    கேள்வி: திடீரென என் விண்டோஸ் எக்ஸ்பி டாஸ்க்பாரில் இரு கோடுகள் மேலாகத் தெரிகின்றன. இது திடீரென ஏன் தோன்றியுள்ளது? வைரஸ் காரணமா? என்ன செய்திட வேண்டும் எனக் கூறவும்.

    –நீ. மதிவாணன், காரைக்கால்

    பதில்: பல எக்ஸ்பி பயனாளர்கள் அண்மையில் இதனைக் குறிப்பிட்டுக் கேட்டுள்ளனர். இது வைரஸால் அல்ல. இதன் பொருள் உங்கள் டாஸ்க் பார் லாக் செய்யப்படவில்லை என்பதே. இதனை மிக எளிதாகச் சரி செய்து விடலாம். டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock the Taskbar என்றுள்ளதன் எதிரே சிறிய டிக் ஒன்றை ஏற்படுத்தவும். இனி கோடுகள் கிடைக்காது.

    கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அலுவலகத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தி வருகிறோம். இதில் பழைய எக்ஸ்பியில் இருந்தது போல் டாஸ்க்பாரினை அமைக்க முடியுமா? வழி காட்டவும்.

    –கே. சிவநேசன், வேளாண்துறை அலுவலகம், விழுப்புரம்.

    பதில்: உங்களுக்கு விண்டோஸ் எக்ஸ்பி பிடித்திருந்தால், அதன் பல அம்சங்களை மீண்டும் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 வழி தருகிறது. இங்கு டாஸ்க்பாருக்கு வழி பார்ப்போம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.

    கிடைக்கும் ஆப்ஷன் பட்டியலில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Taskbar and Start Menu Properties என்ற விண்டோவில், Taskbar என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். Use small icons என்னும் பாக்ஸில் செக் செய்திடவும். Taskbar buttons என்பதில் உள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், Never combine என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

    அடுத்து ஓகே அல்லது அப்ளை என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பப்படி, விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்பில், விண்டோஸ் எக்ஸ்பியில் இருப்பது போன்ற டாஸ்க்பார் கிடைக்கும். இதில் கூடுதலாக, விண்டோஸ் 7 சிறப்பம்சமும் கிடைக்கும். இங்குள்ள பட்டன்கள் மேலாக, உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், திறந்திருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் சிறிய படங்கள் கிடைக்கும். எக்ஸ்பியில் அவற்றின் பெயர்கள் மட்டுமே காட்டப்பட்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

    நன்றி.தினமலர்

  5. #101
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நவம்பர் 15,2010

    கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வைத்து இயக்குகையில், அதன் ஸ்டார்ட் மெனுவில் ரன் என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது விஸ்டாவில் இல்லை. ஏன்? இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்?

    –ஆ. சங்கரலிங்கம், திண்டுக்கல்

    பதில்: இந்த கேள்வியை அனுப்பிய சங்கரலிங்கத்திற்கு நன்றி. நிச்சயமாய் இது பலரின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி என எங்களுக்குத் தெரியும். உங்களின் நீண்ட கடிதம் பதிலை எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினைத் தந்தது. சரி, விஷயத்திற்கு வருவோம்!

    விஸ்டா ரன் பிரிவை விட்டுவிடவில்லை. எப்போது இது வேண்டும் என்றாலும் Win + R கீகளைத் தட்டுங்கள். அதெல்லாம் தெரியாது, எனக்கு ஸ்டார்ட் மெனுவில் தான் வேண்டும் என நீங்கள் ஒரு மாதிரியாக எழுதி பயமுறுத்தி உள்ளீர்கள் – ஜஸ்ட் பார் எ ஜோக். இதனையும் கொண்டு வந்துவிடலாம்.

    முதலில், ஸ்டார்ட் பட்டையில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் பிரிவில் இடது கிளிக் செய்திடுங்கள். ஒரு கட்டம் பாப் அப் ஆகி திரையில் காட்டப்படும். இதுதான் உங்கள் டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் (Taskbar and Start menu Properties) பாக்ஸ். இதில் நான்கு டேப்கள் இருப்பதனைப் பார்க்கலாம்.

    ஸ்டார்ட் மெனு (Start Menu) டேப்பில் இடது கிளிக் செய்திடவும். பின்னர் ஸ்டார்ட் மெனு பட்டன் கிளிக் இடவும். இதில் கஸ்டமைஸ் (Customize) என்பதில் மீண்டும் இடது கிளிக் செய்திடவும். இன்னொரு பெட்டி பாப் அப் ஆகும். இதன் தலையில் கஸ்டமைஸ் ஸ்டார்ட் மெனு (Customize Start Menu) என இருக்கும்.

    இந்த டயலாக் பாக்ஸில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டி ருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு என்று தரப்பட்டுள்ள இடத்தில் கர்சரை நிறுத்தி, அதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத் தினை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், டாஸ்க் பார் அண்ட் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ் இன்னும் இருப்பதனைப் பார்க்கலாம்.

    இதில் அப்ளை (Apply) என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் இங்கே ஓகேயில் இடது கிளிக் செய்து வெளியேறவும். இனி ரன் கட்டளை, உங்கள் ஸ்டார்ட் மெனுவில் உங்கள் முன்னால், உங்களால் பயன்படுத்தப் பட தயாராக இருக்கும். சரியா சங்கரலிங்கம். இந்த தகவல்களைத் தரும் வகையில் நீண்ட கடிதம் எழுதியதற்கு மீண்டும் நன்றி.

    கேள்வி: நான் இரண்டு புரோகிராம்களை அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இவற்றிற்கான கீ போர்ட் ஷார்ட்கட் கீகளை நானே அமைக்க முடியுமா?

    –தெ. மாறன், பழநி.

    பதில்: நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஷார்ட்கட் கீகளை அமைக்கலாம். உங்களுக்கான எடுத்துக்காட்டாக WinRAR புரோகி ராமினை இங்கு பார்ப்போம். இதற்கான ஷார்ட்கட் கீ அமைக்க, முதலில் ஸ்டார்ட் பட்டன் சென்று, அதன் மீது இடது கிளிக் செய்திடவும்.

    அடுத்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) கிளிக் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் மெனு திறக்கப்படும். இங்கு WinRAR சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடலாம். இங்கு திறக்கப்படும் பாப் அப் பெட்டியில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இங்கும் ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும்.

    இதில் பாதியில் ஒரு வரி இருக்கும். அதில் Shortcut key எனத் தரப்பட்டு, அருகே None என இருக்கும். இதன் வலது பக்கம், ஒரு நெட்டுக் கோடு மின்னிடும். உங்கள் ஷார்ட்கட் கீக்கு ஒரு சொல் அல்லது ஒரு எழுத்தைக் கொடுக்கவும்.

    இங்கு WinRAR புரோகிராமிற்கு W எனத் தரலாமா! இதை அமைத்தவுடன் கம்ப்யூட்டர் தானாக Ctrl + Alt என்ற கீகளை அமைக்கும். அடுத்து மின்னிக் கொண்டிருந்த கோடு, நீங்கள் டைப் செய்த சொல்லின் வலது பக்கம் இருக்கும்.

    இதன் பின்னர் Apply என்பதில் இடது கிளிக் செய்து, அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து நீங்கள் WinRAR புரோகிராம் தேவைப்படும்போதெல்லாம், Ctrl + Alt+W அழுத்தினால் போதும்.

    கேள்வி: நான் சென்ற வாரம் ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கியுள்ளேன். இதனைப் பயன்படுத்தி, என் கம்ப்யூட்டரின் சி ட்ரைவில் உள்ளதை அப்படியே காப்பி எடுக்க விரும்புகிறேன். இதற்கான வழிகளைச் சொல்லவும்.

    –என்.கண்மணி ராஜன், திருப்பூர்

    பதில்: நீங்கள் கேட்பது ஒரு டிஸ்க்கின் இமேஜ் அல்லது மிர்ரர் தயார் செய்வது ஆகும். பொதுவாக விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு, ட்ரைவ் எதனையும் அணுக முடியாத நிலையில் பயன்படுத்த இது போல டிஸ்க்கின் மொத்த பைல்களையும் அப்படியே காப்பி எடுப்பது உண்டு.

    நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாக எழுதி உள்ளீர்கள். அதில் ஹோம் எடிஷனா அல்லது புரபஷனல் எடிஷனா என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால், ஹோம் எடிஷனில் பேக் அப் சாப்ட்வேர் எதுவும் தரப்படவில்லை.

    எனவே ஹோஸ்ட் (Ghost) போன்ற பேக் அப் சாப்ட்வேர் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். புரபஷனல் எனில், கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
    முதலில் Start>All Programs>System Tools எனச் செல்லவும். இங்கிருந்து உங்கள் பேக் அப் எங்கு ஸ்டோர் ஆக வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

    அடுத்து Backup and Restore திறக்கப்படும். இங்கு பேக் அப் திரை காட்டப்படும். இதில் Back up Computer என்பதில் கிளிக் செய்திடவும். பாதுகாப்பிற்கென கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, உங்கள் தகவல்களை எங்கு ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனைத் தரவும்.

    அடுத்து தரப்படும் கேள்விகளுக்கான பதில்களைத் தந்த பின், டிஸ்க் முழுமையாக, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஸ்டோர் ஆகும். இடத்தினை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவாகக் கொள்ளலாம். அல்லது கம்ப்யூட்டரின் இன்னொரு ட்ரைவில் ஸ்டோர் செய்து பின் மாற்றிக் கொள்ளலாம்.

    விஸ்டா சிஸ்டத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பைல்கள் பேக் அப் ஆகும்படி செட் செய்திடலாம். ஆனால் சிஸ்டம் பைல்கள் ஆகாது. விண்டோஸ் 7 எந்த பைல்களையும் பேக் அப் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது.

    கேள்வி: யு ட்யூப் விடீயோ பைல்களை டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட பல புரோகிராம்கள் குறித்து எழுதியுள்ளீர்கள். டவுண்லோட் செய்திடுகையில், நமக்கு ஏற்ற பார்மட்டில் பதியும் வசதிக்கு என்ன செய்வது?

    – ஆ.ஸ்நேகா ஸ்டாலின், சென்னை.

    பதில்: அண்மையில் நான் பார்த்த இணைய தளம் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. www.downloadtube.org என்ற முகவரி யில் உள்ளது இந்த தளம்.

    சிறந்த வசதிகளைத் தருவதாக இது உள்ளது. சில தளங்களில் தேவையற்ற பிரிவுகள் தரப்பட்டு, டவுண்லோட் செய்திடும் ஆசையே விட்டுப் போகும் அளவிற்கு இருக்கும். இதில் நாம் விரும்பும் வசதிகள் மட்டும் தரப்பட்டுள்ளன. செயல்முறை மிக எளிது.

    நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும், இணைய பக்கத்தின் முகவரியினை காப்பி செய்து, இந்த தளத்தில் இட வேண்டும்.

    அடுத்த வசதி தான் கேக் மீது இடப்படும் சாக்லேட் கோலம் போல. இங்கு நீங்கள் விரும்பும் பார்மட்டில் அதனை டவுண்லோட் செய்திடலாம். வழக்கமாக யு–ட்யூப் தளத்தில் வீடியோ பைல்கள் எப்.எல்.வி.(‘FLV’ பார்மட்டில் அமைக்கப் பட்டிருக்கும்.

    இவற்றை டவுண்லோட் செய்தவுடன், எப்.எல்.வி. பிளேயர் ஒன்றில் தான் இயக்க முடியும். ஆனால் இந்த தளத்தில் எம்பி4, உங்கள் போன், ஐ பாட் போன்றவற்றில் இயங்கும் வண்ணம் டவுண்லோட் செய்திடுகை யிலேயே மாற்றிப் பதிந்து கொள்ளலாம். முகவரி அமைத்து, தேவையான பார்மட் அமைத்தவுடன் Convert and Download என்பதில் கிளிக் செய்திடவும்.

    அடுத்து ஈணிதீணடூணிச்ஞீ என்ற பட்டனில் கிளிக் செய்தவுடன், நீங்கள் விரும்பிய வீடியோ கிளிப்பிங் நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும்.

    கேள்வி: இணையப் பக்கம் அல்லது இமெயில் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் சில வேளைகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலும் சில வேளைகளில் பயர்பாக்ஸிலும் திறக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்போதும் திறக்கப்படும்படி எப்படி அமைப்பது?

    –கா. ஞானப்பிரகாசம், காரைக்கால்

    பதில்: இது மிக எளிது. எந்த பிரவுசரில் அது திறக்கப்பட வேண்டும் என்பதனை, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம். பயர்பாக்ஸ் பிரவுசரை மாறா நிலையில் உள்ள பிரவுசராக மாற்ற:பயர்பாக்ஸ் திறந்து டூல்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும்.

    கிடைக்கும் பாப் அப் மெனுவில் அட்வான்ஸ்டு டேப் திறக்கவும். அடுத்து செக் நியூ பட்டன் கிளிக் செய்து பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலை பிரவுசராக ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும். அமைக்கப்படவில்லை எனில், பயர்பாக்ஸ் பிரவுசரை அமைக்க உங்களுக்கு ஆப்ஷன் தரப்படும்.

    இன்னொரு வழியும் உள்ளது. Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவின் இடது பக்கத்தில் Set Program Access and Defaults என்று இருக்கும்.

    இங்கு Custom என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வும். இங்கு வலது பக்கம் உள்ள இரண்டு அம்புக் குறி அடையாளத்தில் கிளிக் செய்திடவும். Choose a default Web browser என்ற தலைப்பின் கீழ் Mozilla Firefox என்பதில் கிளிக் செய்திடவும்.

    பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலையில் உள்ள( Default) பிரவுசராக இருக்கும். எந்த இணைய லிங்க்குகளில் கிளிக் செய்தாலும், அது பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்படும்.

    நன்றி.தினமலர்

  6. #102
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0


    நவம்பர் 22,2010

    கேள்வி: நான் டெக்னிக்கல் டாகுமெண்ட்ஸ் அதிகம் எழுதுபவன். வழக்கமாக, வாக்கியங்களின் முதல் எழுத்துத் தானாக, கேப்பிடல் எழுத்தில் அமைவதை நிறுத்திவிடுவேன். வேர்ட் 2010 தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.

    –பழ. செல்லப்பன், காரைக்குடி

    பதில்: முன்பு நீங்கள் எப்படி மற்ற வேர்ட் தொகுப்புகளில் இந்த தடையை உருவாக்கினீர்களோ, அதே போல இப்போதும் அமைக்கலாம்.

    1. ரிப்பனில் “File” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

    2. மைக்ரோசாப்ட் ஆபீஸ் பேக் ஸ்டேஜ் வியூ தோன்றும். இதில் “Options” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். (அல்லது மேலே குறிப்பிட்ட 1 மற்றும் 2ல் உள்ள செயல்பாட்டிற்குப் பதிலாக Alt + T அழுத்திப் பின் எழுத்து கீ O அழுத்தவும்.

    3. இனி, “Word Options” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இடது புறம் உள்ள “Proofing” என்பதில் கிளிக் செய்திடவும்.

    4. வலதுபுறம் உள்ள பிரிவில் “AutoCorrect options” என்பதன் கீழாக உள்ள “AutoCorrect options” பட்டனில் கிளிக் செய்திடவும்.

    5. நிறைய டேப்கள் கொண்ட “AutoCorrect” டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

    6. “AutoCorrect” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

    7. இதில் “Capitalize first letter of sentences” என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் ஏற்கனவே உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து, அதனை நீக்கவும். பின்னர் கிடைக்கும் அனைத்து ஓகே பட்டன்களிலும் கிளிக் செய்து வெளியேறவும். இனி, மீண்டும் வேர்ட் 2010 திறந்து இயக்குகையில்,

    உங்கள் டெக்னிக்கல் டாகுமெண்ட் மட்டுமின்றி, வேறு எந்த டாகுமெண்ட்டிலும், வேர்ட் தானாக, வாக்கியத்தின் முதல் எழுத்தினைக் கேப்பிடல் எழுத்தாக மாற்றி அமைக்காது.

    கேள்வி: என் கம்ப்யூட்டரை நான் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை எப்படி அறிவது?

    – என். லஷ்மி பிரபா, மதுரை

    பதில்: நல்ல கேள்வி. பலரின் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் சந்தேகம் நீக்கும் கேள்வி. அலுவலகங்களில், வீடுகளில் நம் பயன்பாட்டிற்கென உள்ள கம்ப்யூட்டர்களை, நாம் அங்கு இல்லாத போது, மற்றவர் பயன்படுத்தும் நிகழ்வுகள் நிச்சயம் ஏற்படலாம். இதனை எப்படி அறிவது?

    இதற்கு விண்டோஸ் இயக்கத்தில் வழி தரப்பட்டுள்ளது. இதனை நமக்குக் காட்டும் வசதியின் பெயர் Event Viewer ஆகும். எக்ஸ்பி முதல் இன்றைய விண்டோஸ் 7 வரை இது தரப்பட்டுள்ளது. எக்ஸ்பியில் ஸ்டார்ட், ரன் அழுத்தி, eventvwr.msc என டைப் செய்திடவும்.

    விஸ்டாவிலும், விண்டோஸ் 7லும், சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். உடன், எப்போது எந்த நேரத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் காட்டப்படும். இதில் முதலில் தரப்படும் விஷயங்கள் நமக்குப் புரியாது. இறுதியாகப் பயன்படுத்தியவர் பெயர், கம்ப்யூட்டர் பெயர் காட்டப்படும். அதனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    விண்டோஸ் எக்ஸ்பி, கம்ப்யூட்டரில் நடக்கும் நிகழ்வுகளை, Application, Security,, மற்றும் System என மூன்று லாக் பைல்களில் அமைத்து வைத்துக் கொள்கிறது.

    விஸ்டாவில் இவை அனைத்தும் Windows Logs என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் Setupமற்றும் Forwarded Events எனவும் இவற்றைக் கொள்கிறது. உங்களுடைய நோக்கத்திற்கு System log என்பதுதான் தேவை. இடது புறம் உள்ள System என்பதில் கிளிக் செய்தால்,

    கம்ப்யூட்டரில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பட்டியல் கிடைக்கும். இங்கு நீங்கள் கம்ப்யூட்டரை விட்டு நகன்ற தேதி, நேரம் அடிப்படையில் உள்ள நிகழ்வுகளைக் கண்டு, யார் பயன்படுத்தி இருப்பார்கள் எனப் பார்க்கலாம். அத்துடன் யார் அதிக நேரம் பயன்படுத்தினார்கள் என்றும் கவனிக்கலாம்.

    கேள்வி: என் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். வெப்சைட்டுக்கான பெயர் டைப் செய்கையில், ஒவ்வொரு எழுத்திற்கும், ஒரு குரூப் வெப்சைட் பெயர் கிடைக்கும். இப்போது முழுவதும் டைப் செய்த பின்னரே, தளம் கிடைக்கிறது. இதற்கென்ன காரணம்? மீண்டும் எப்படி பழைய முறையில் இணைய தளப் பெயர்களைப் பெறலாம்?

    –டி. காமராஜ் கார்த்தி, சிவகாசி

    பதில்: உங்கள் பிரவுசரில் ஆட்டோ கம்ப்ளீட் (Auto Complete) என்ற வசதி எப்படியோ நிறுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இந்த வசதிதான், நீங்கள் அட்ரஸ் பாரில், இணைய தள முகவரியினை டைப் செய்கையில், எழுத்துக்களை வாங்கிக் கொண்டு தன் நினைவகத்தில் உள்ள, நீங்கள் ஏற்கனவே பார்த்த இணைய தள முகவரிகளுடன் ஒப்பிட்டு, இணையாக உள்ளவற்றைப் பட்டியலிடுகிறது. இந்த வசதியினை மீண்டும் எப்படி ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

    மேலாக, பிரவுசரின் வலது மூலையில் உள்ள Tools என்பதில் கிளிக் செய்திடவும். பின் அங்கிருந்து, Internet Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில், Content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

    இங்கு Auto Complete என்னும் பிரேம் கிடைக்கும். இதில் Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Use Auto complete for என்று தலைப்பிட்டு, கீழாக இணைய முகவரி, படிவம், யூசர் பெயர் ஆகிய பிரிவுகள் இருக்கும்.

    எந்த வகைகளில் உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதி வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறவும். மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து இயக்கினால், நீங்கள் இணைய தள முகவரிகளை அமைக்கையில், முன்பு அமைத்த தள முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். அதிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கும்போது, ஹோம் பேஜ் வெப்சைட்டுக்குப் பதிலாக, நான் இறுதியாகப் பார்த்த வெப்சைட் திறக்கப்பட வேண்டும். இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்.

    –சி. சம்பந்த மூர்த்தி, திண்டுக்கல்

    பதில்: உங்கள் கேள்வியைப் படித்தவுடன் ஆஹா! இது ஒரு அருமையான ஏற்பாடே என்று வியக்கத் தோன்றியது. உங்கள் கேள்விக்கு நன்றி. பயர்பாக்ஸ் பிரவுசர்

    திறக்கும்போது, மூன்று விஷயங்களைக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உங்களுடைய ஹோம் பேஜ், காலியாக இருக்கும் தளம் அல்லது இறுதியாக மூடுகையில் இருந்த தளம் கொண்ட ஒரு டேப் (அல்லது டேப்கள்). இது எப்படி என்று பார்ப்போம்.


    உங்கள் பிரவுசரின் மேல் பகுதிக்குச் செல்லுங்கள். திரையின் குறுக்கே செல்லும் பட்டையில் பைல், எடிட் எனப் பல மெனுக்களுக்கான தலைப்புகள் உள்ளனவா!

    இதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழ் விரி பட்டியலில் Options என்பதில் கிளிக் செய்க. இங்கு ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும். இதில் குறுக்காக, ஏழு டேப்கள் கிடைக்கும். முதலில் உள்ள General என்ற டேப்பில் கிளிக்கிடவும்.

    கீழாக When Firefox starts என்று இருக்கும் இடம் வரை செல்லவும். மேலும் கீழுமாக உள்ள அம்புக் குறிகளில் ஒன்றில் கிளிக் செய்திடவும். இதில் மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இவற்றில் Show my windows and tabs from last time என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஓகே கிளிக் செய்திடவும். அவ்வளவுதாங்க!

    அடுத்த முறை நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் திறக்கையில், மூடும்போது இருந்த தளம் அல்லது தளங்களுடன் பயர்பாக்ஸ் உங்களை வரவேற்கும். மறந்துறாதீங்க! உங்க கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். இதைச் சொல்ல வாய்ப்பளித்தற்கு நன்றி.

    கேள்வி: சீனாவில் மொபைல் போன்களில் ஒரு வைரஸ் பரவி, இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது எனக் கேள்விப் பட்டேன். இது இந்தியாவிற்கும் வருமா?

    –இராச. இளங்கோவன், கோவை

    பதில்: ஏறத்தாழ பத்து லட்சம் மொபைல் போன்களுக்கு மேல் ஒருவித வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஷாங்காய் டெய்லி என்னும் சீன நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற ஒரு மால்வேர் வைரஸ் ரஷ்யாவில் மொபைல் போன்களைத் தாக்கியது.

    ஏறத்தாழ அதே போன்ற தாக்குதலை, இந்த வைரஸ் சீனாவில் ஏற்படுத்தியுள்ளது. போனில் போலியான ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கான லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தவுடன், வைரஸ் போனில் செயல்பட்டு, சிம் குறித்த தனிநபர் தகவல்களை, ஹேக்கர்களின் சர்வருக்கு அனுப்புகிறது.

    இந்த தகவல்கள் கிடைத்தவுடன், அதில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு, பணம் பறிக்கும் வகையிலான எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடி யுவான் சீனப் பணம் ஹேக்கர்களின் வெப்சைட்டுக்குச் செல்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

    சீன அரசு இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய படாத பாடு பட்டுக் கொண்டி ருக்கிறது. ஆனால் அனைத்து முயற்சி களையும் இந்த வைரஸ் ஏமாற்றிக் கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டுள்ளது. அடுத்த படியாக அதிகம் மொபைல் பயன்படுத்தும் நம் நாட்டிற்கும் இது வரலாம் என அஞ்சப்படுகிறது.

    நன்றி.தினமலர்

  7. #103
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0


    நவம்பர் 29,2010

    கேள்வி: நீங்கள் எழுதும்போதும், மொபைல் போன் விளம்பரங்களிலும் 3ஜி என்று சொல்கின்றனர். நீங்கள் எழுதிய கட்டுரையிலும் பல தகவல்கள் இருந்தன. இந்த 3ஜி என்பதன் விளக்கம் என்ன? 4ஜி உள்ளதா? அன்பு கூர்ந்து தெளிவாக விளக்கவும்.

    -நீ. ஷண்முகப் பிரியா, மதுரை

    பதில்: நல்ல கேள்வி தான். தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) தலைமுறை, இரண்டாம் தலைமுறை என அழைக்கப்பட்டன. இப்போது நான்காம் தலைமுறை போன்கள் வந்துவிட்டன.

    இந்தியாவிற்கு மூன்றாம் தலைமுறை போன்கள் வரத் தொடங்கி விட்டன.முதல் தலைமுறை போன்கள் 1980ல் வந்தன. இவை ஏ.எம். மற்றும் எப்.எம். ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தின.

    டிஜிட்டல் வழி தொடர்புகள் இவை மூலம் ஏற்படவில்லை. 1991ல் இரண்டாம் தலைமுறை போன்கள், முதலில் பின்லாந்தில் வந்தன. இவை டிஜிட்டல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தின. டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் இணைய இணைப்பு இருந்தாலும், வேகம் மிக மெதுவாகவே இருந்தது. ஜப்பானில் முதன் முதலாக,

    2001ஆம் ஆண்டில் 3ஜி போன் வெளிவந்தது. நெட்வொர்க் செயல்பாட்டின் வேகம் அதிகமானது. இன்டர்நெட் இணைப்பில் இருக்கையிலேயே, போன் வழி பேசவும்

    முடிந்தது. 4ஜி போன்கள் அண்மைக் காலத்தில் வெளியாகி, மிக அதிகமான வேகத்தில் இயங்கி வருகின்றன. பிராட்பேண்ட் இணைப்பைக் காட்டிலும் அதிகமான வேகத்தில், இன்டர்நெட் இணைப்பைத் தந்து வருகின்றன.

    கேள்வி: என் நண்பர் இடது கைப் பழக்கம் உள்ளவர். அவருக்கு மவுஸை இடம் மாற்றிக் கொடுத்திருக்கிறோம். அதே போல பட்டன் இயங்கும் நிலையையும் மாற்றிக் கொடுக்க முடியுமா? அல்லது இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கென தனி மவுஸ் விற்பனை செய்கிறார்களா?

    -நி. முத்துஸ்வாமி, ராஜபாளையம்

    பதில்:மவுஸின் பட்டன்கள் இயக்கத்தினை மாற்றி அமைத்து செட் செய்திடலாம். இதற்கென தனியான மவுஸ் இல்லை. விண்டோஸ் இயக்கத்தில், இடது மவுஸ் பட்டன் தேர்ந்தெடுப்பதற்கும், இருமுறை கிளிக் செய்தால் புரோகிராமினை இயக்குவதற்கும் பயன்படுகிறது.

    இது இடது கைப் பழக்கம் உள்ளவர் களுக்குச் சற்று ஏமாற்றமாகவும், எரிச்சலாகவும் இருக்கும். இவர்கள் விரும்பும் வகையில், பட்டன்களின் இயக்கத்தினை மாற்றி அமைக்கலாம். அதாவது, இடது மவுஸ் பட்டன் இயக்கத்தினை வலது மவுஸ் பட்டனுக்கும், வலதை இடதிற்கும் மாற்றி அமைக்கலாம்.

    1. முதலில் கண்ட்ரோல் பேனலில், மவுஸ் ஐகான் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். பல டேப்கள் கொண்ட விண்டோ கிடைக்கும். “Mouse Properties” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Buttons” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

    “Switch primary and secondary buttons” என்று இருப்பதில் செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி, உங்கள் நண்பருக்கேற்ற வகையில் மவுஸ் இயங்கும்.

    கேள்வி: விண்டோஸ் சிஸ்டம் வரத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று படித்தேன். இந்த சிஸ்டம் வரத் தொடங்கிய நாள்முதல், தன் உருவாக்கத்தில், ஏற்படுத்திய சாதனைகள் என்ன என்று சுருக்கமாக விளக்குங்கள்.

    -கா. சிவஞானம், திருத்தணி

    பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட வரலாற்றில், சாதனை படைத்தது சில மட்டுமே. விண்டோஸ் பதிப்பு 1 மற்றும் 2 அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.

    ஆனால் பதிப்பு 3, அனைத்து நாடுகளிலும், மக்களைச் சென்றடைந்து பயன்படுத்தப் பட்டது. விண்டோஸ் மீது மக்களுக்கு ஒரு மோகத்தினை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் பல வேலைகள், விஜிஏ கிராபிக்ஸ், ட்ரூ டைப் பாண்ட்ஸ் என அதிசயப்படத் தக்கவைக்கும் விஷயங்கள் கிடைத்தன.


    அடுத்த சாதனை விண்டோஸ் 95. டாஸ் மீது தன் இயக்கத்தினை மேற்கொள்ளாமல், டாஸ் மற்றும் விண்டோஸ் இணைந்ததாக உருவாக்கப்பட்டு இயங்கியது. ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், ப்ளக் அண்ட் பிளே போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு

    கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதுவித செயல்பாட்டினைத் தந்தன. அடுத்த தொகுப்பு விண்டோஸ் எக்ஸ்பி. இன்றும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.

    டாஸ் இல்லாமல், தன் இயக்கத்திற்கு டாஸ் துணை இல்லாமல் வெளிவந்த சிஸ்டம். முன் வந்த சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில் நிலையானதாகவும், சற்று பாதுகாப்பானதாகவும் இருந்தது.


    விண்டாஸ் 7 தொகுப்பு அடுத்த சாதனை. விஸ்டா கொடுத்த அடியிலிருந்து, சரியான பயனுடன் எழ வேண்டும் என்ற வேகத்துடன் உருவாக்கப்பட்டு, தற்போது மெல்ல மெல்ல அனைத்து மக்களும் விரும்பும் தொகுப்பாக உருவாகி வருகிறது.


    இந்த வரிசையில் அடுத்த சாதனையாக, மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் போன் 7 தொகுப்பினைக் கூறலாம். மைக்ரோசாப்ட், மொபைல் போனுக்கென வடிவமைத்த முந்தைய சிஸ்டங்களின் தோல்வியை முழுவதுமாக மறக்கச் செய்து மக்கள் விரும்பும் சிஸ்டமாக இது உருவாகி வருகிறது.

    கேள்வி: நான் விண் ஆர்.ஏ.ஆர். அன்ஸிப் பயன்படுத்துகிறேன். சில வேளைகளில் இதன் மூலம் ஸிப் செய்த பைல்களை அன்ஸிப் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. கூடுதலாக இன்னொரு அன்ஸிப் புரோகிராமினைப் பயன்படுத்தலாமா? எதனை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்?

    -எஸ். கே. பத்மா ஜெயராஜ், சென்னை.

    பதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் போல, ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அன்ஸிப் சாப்ட்வேர் தொகுப்புகள் இருப்பது தவறில்லை. அது நல்லதும் கூட.

    ஆர்.ஏ.ஆர். புரோகிராம் நன்றாகச் செயல்படும் புரோகிராம் தான். இதனைப் போலவே பிரபலமான இன்னொரு புரோகிராம், அனைவரும் அறிந்த விண் ஸிப் (Winzip) புரோகிராம் ஆகும். புதிதாக ஒன்றை உங்களுக்குச் சொல்வதென்றால்,

    7zip புரோகிராமினைப் பரிந்துரைக்கலாம். இதனை http://www.7zip.org/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது பல பார்மட்டுகளில் ஸிப் செய்யப்பட்ட பைல்களைப் பிரித்துத் தருகிறது. zip, gzip, tar, 7z, rar, iso, msi, cab or dmg போன்ற பார்மட்டுகளில் உள்ளவற்றைப் பிரித்துத் தருகிறது.

    இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைந்து செயல்படுவதால், எளிதாக இதனை இயக்கலாம். அதாவது பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில் கிடைக்கும் மெனுவில் இந்த புரோகிராம் பிரிவு ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்து ஸிப் மற்றும் அன்ஸிப் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

    மிக அதிகமான எண்ணிக்கையில் ஸிப் பைல்களைப் பிரித்து, பைல்களைப் பெற வேண்டும் எனில், ExtractNow என்னும் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனை http://www.extractnow.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

    கேள்வி: வேர்ட் பயன்படுத்துகையில், ஏற்கனவே செட் செய்யப்பட்ட மார்ஜின் நமக்குக் கிடைக்கிறது. இதனை மாற்ற வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில்,வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன்.

    -கா. சிவப்பிரகாசம், தேனி.

    பதில்:வேர்ட் தொகுப்பு, டாகுமெண்ட்டிற்கான மார்ஜின்களை மாற்றுவதற்கு மிக எளிய வழிகளைத் தருகிறது. (இங்கு தரப்படும் குறிப்பு வேர்ட் 97 தொடங்கி, வேர்ட் 2003 வரை உள்ள தொகுப்புகளில் பயன்படுத்தலாம்.)


    1. முதலில் டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் File மெனு சென்று Page Setup ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உடன் வேர்ட், Page Setup டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

    2. இதில் உள்ள Margin டேப்பினைத் தேர்ந்தெடுங்கள்.

    3. Top, Bottom, Left, மற்றும் Right என உள்ள மார்ஜின்களை மாற்றவும். மாற்றுகையில் வலது கீழாகக் காட்டப்படும் கட்டத்தில் உங்கள் ஆவணத்தில் என்ன வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சிறிய படம் காட்டப்படும்.

    4. பின்னர் Apply To என்ற கீழ்விரி பட்டியலில் Whole Document என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் நீங்கள் குறிப்பிட்ட பாரா அல்லது பிரிவினை மட்டும் தேர்ந்தெடுத்து, மார்ஜினை அதற்கு மட்டும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய ஆவணத்தில், ஒவ்வொரு பகுதிக்கும், அதன் தனித்துவத்தினைக் காட்ட வெவ்வேறு மார்ஜின் வைத்துக் கொள்ளலாம்.

    கேள்வி: வேர்டில் பிரிண்ட் எடுக்கையில், குறிப்பிட்ட பைலின் சம்மரி இன்பர்மேஷனை பிரிண்ட் செய்திட முடியுமா? வழி காட்டவும்.

    -வி.எம். ராஜேந்திரன், மதுரை

    பதில்: வேர்ட் டாகுமெண்ட் களுக்கான சம்மரி இன்பர்மேஷன் குறித்து அறிந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட் சேவ் செய்திடுகை யில், டாகுமெண்ட் டை சேவ் செய்வது டன், டாகுமெண்ட் குறித்த தகவல்களையும் சேவ் செய்கிறது.

    டாகுமெண்ட் பிரிண்ட் செய்யப் படுகையில், இந்த தகவல்கள் அச்சிடப் படுவதில்லை. இதனையும் அச்சிட வேண்டும் எனில், கீழ்க்காணும் கட்டளைகளைத் தர வேண்டும்.

    File மெனுவிலிருந்து Print தேர்ந்தெடுக்கவும். இப்போது பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

    இங்கு Print What என்ற கீழ்விரி பெட்டி கிடைக்கும். இதில் Document Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து அச்செடுக்கவும்.

    நன்றி.தினமலர்.

  8. #104
    புதியவர்
    Join Date
    26 Jul 2011
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    10,489
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ஆகவில்லை
    access is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,
    அதை எப்படி delete பண்ணுவது.

Page 9 of 9 FirstFirst ... 5 6 7 8 9

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •