Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast
Results 49 to 60 of 104

Thread: கணினி வினா(டி) விடை.

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    *****கேள்வி: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களுக்குத் தானாக பேக் அப் காப்பி எடுக்கும் வகையில் எப்படி செட் செய்வது?*****

    இந்த வினாவிற்கு விடைதந்திருக்கிறீர்கள். நன்றி.

    தானாக எடுக்கப்படும் "பேக் அப் காப்பி" எங்கே சேமிக்கப்படும்?
    கணிப்பொறியில் எனக்கு மிகக் குறைவான அறிமுகம் தான்!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #50
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நன்றி. எனக்கும் அது தெரியவில்லை.நம் மன்ற நண்பர்கள் உதவுவார்கள்...

  3. #51
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    ஜனவரி 03,2010


    கேள்வி: விர்ச்சுவல் மெமரி என்பது என்ன? இதுவும் ஒருவகை ராம் மெமரியா?

    –கா.சிவராஜ் ரத்தினம், திருத்தணி

    பதில்: ஆங்கிலத்தில் இதனை nonphysical memory என்று சொல்வார்கள். விண்டோஸ் தன் சிஸ்டத்தில் பிசிகல் மெமரி எனச் சொல்லப்படும் ராம் மெமரி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால்,

    விர்ச்சுவல் மெமரியினைப் பயன்படுத்தும். வழக்கமான ராம் மெமரியில் போட்டுப் பயன்படுத்தும் டேட்டாவினை, உங்கள் ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் 1 ஜிபி ராம் மெமரி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

    நீங்கள் அது, இது என்று நிறைய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை இயக்குகிறீர்கள். இவை எல்லாம் இயங்க எடுத்துக் கொள்ளும் மெமரி 1 ஜிபிக்கு மேல் செல்கையில், விண்டோஸ் மீதம் உள்ள டேட்டாவினை, ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும்.

    கவலைப்பட வேண்டாம்; வேலை முடிந்தவுடன், விண்டோஸ், ஹார்ட் டிரைவில் எடுத்த இடத்தைக் காலி செய்து உங்களுக்கு வழங்கிவிடும்.
    அப்படியானால் கூடுதலாக ராம் மெமரி சிப்களை வாங்கி ஏன் இணைக்கச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

    ராம் மெமரி விரைவாகச் செயல்படும். விர்ச்சுவல் மெமரி அப்படி இல்லை. இப்போது புழக்கத்தில் உள்ள புரோகிராம்களுக்கு குறைந்தது 2 ஜிபி ராம் மெமரி வேண்டியதுள்ளது.


    கேள்வி: இலவசமாக இணையத்தில் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை, அவற்றின் திறன் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டவும்.

    – ஞா. ஜேசுதாசன், காரைக்குடி


    பதில்: கொடுக்க வேண்டிய பதிலையும் வரையறை செய்துவிட்டீர்கள். அதற்காக நான் அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்திட்டு தர வரிசையிட முடியாது.

    சென்ற ஆண்டில் அதிகம் டவுண்லோட் செய்த எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியலைத் தருகிறேன். தேடுதல் தளம் மூலம், இவை கிடைக்கும் தள முகவரி பெற்று, டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்.


    இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் – அதிகம் டவுண்லோட் செய்யப்பட்டவை.


    1. அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் (Avira Anti Virus Personal)


    2.அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் ஹோம் எடிஷன் (Avast Anti Virus Home Edition)


    3.ஏ.வி.ஜி. 8.5 ப்ரீ ( AVG 8.5 Free)


    4.மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி சொல்யூசன்ஸ் (Microsoft Securtity Solutions)


    5.பி.சி. டூல்ஸ் ஆண்ட்டி வைரஸ் பிரீ எடிஷன் (PC Tools Anti Virus Free Edition)



    கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இடையே சில செல்கள் காலியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலி செல்கள் சார்டிங் செய்திடுகையில் தொல்லை கொடுக்குமா?

    -ஆ. சிவபரிமளா, திண்டுக்கல்


    பதில்: காலியாக உள்ள செல்கள் தொல்லை கொடுக்காது. அவற்றுடன் இணைந்த செல்களை அசெண்டிங் அல்லது ‘by eight’ என எந்த வகை சார்டிங் மேற்கொண்டாலும், காலியான செல்கள் இறுதியில் காட்டப்படும்.


    கேள்வி: பைட் என்பது ஒரே சொல்லா? இரு சொற்களின் சுருக்கமா?

    –மா. சந்திர சேகரன், திருமங்கலம்


    பதில்: பைட் என்பது‘by eight’ என்ற இரு சொற்களின் சுருக்கமாகும்.


    கேள்வி: வேர்ட் 2010 சோதனைத் தொகுப்பை யார் வேண்டுமானாலும் டவுண்லோட் செய்து பயன் படுத்தலாமா? மைக்ரோசாப்ட் தளத்தின் எந்த பிரிவில் இது கிடைக்கிறது? அதன் முகவரி என்ன? இதனைப் பயன்படுத்திப் பார்க்க நம் கம்ப்யூட்டரில் என்ன தேவை? சற்று விளக்கமாகப் பதில் தரவும்.

    –சி. ரஞ்சன் குமார், சென்னை


    பதில்: யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். http://www.microsoft.com /office/2010/en/downloadofficeprofessionalplus/default.aspx என்ற முகவரிக்குச் சென்று, இதனை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்டுள்ள மற்ற தகவல்களையும், சார்ந்த விளக்கங்களையும் அடுத்த வாரம் கட்டுரையாகத் தருகிறேனே!


    கேள்வி: மொபைல் போன்களில் திரை பற்றிக் குறிப்பிடுகையில் QVGA என்று குறிப்பிடுகின்றனர். இது எந்த அளவினை அல்லது தன்மையைக் குறிப்பிடுகிறது?

    –ஆ. திருமாறன், ஸ்ரீவில்லிபுத்தூர்


    பதில்: QVGA என்பது Quarter Video Graphics Array என்ற சொற்களின் சுருக்கம்.

    இது 240x320 என்ற அளவில் பிக்ஸெல்களைக் கொண்டது. மொபைல் போன்களில் பலவற்றில் இந்த வகை டிஸ்பிளே திரையைக் காணலாம்.

    இன்னொரு வகை டிஸ்பிளே திரையினை VGA (Video Graphics Array) என அழைப்பார்கள். இது 640 x 480 என்ற அளவில் பிக்ஸெல்களைக் கொண்டது.

    வழக்கத்திற்கு மாறாகச் சற்று பெரிய திரையினைக் கொண்ட போன்களில் இந்த வகை டிஸ்பிளே பயன்படுத்தப்படும்.

    இன்னும் சற்றுப் பெரிய திரை எனில் அதில் WVGA (Wide Video Graphics) டிஸ்பிளே 800 x 480 பிக்ஸெல்களாக இருக்கும். HTC HD என்ற போன் இந்த வகை டிஸ்பிளேயைப் பயன்படுத்துகிறது. இதன் ஸ்கிரீன் அளவு 3.8 அங்குலம். தற்போது இன்னொரு வகையும் சில போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

    அது OLED Organic Light Emitting Diode என்ற வகையைச் சேர்ந்தது. நோக்கியா என் 85 இந்த வகை டிஸ்பிளே திரையைப் பயன்படுத்துகிறது. இன்னும் பலவகை டிஸ்பிளே அளவுகள் இருந்தாலும், மொபைல் போன்கள் பெரும்பாலும் இவற்றையே பயன்படுத்துகின்றன.


    கேள்வி: ஸ்கிராம்ப்ளிங் என்பதும் ஸ்ட்ரீமிங் என்பதுவும் ஒரே தன்மையைக் குறிக்கிறதா? இதில் எது உயர்ந்தது?

    –எஸ். டி.சுரேஷ் குமார், சென்னை


    பதில்: இரண்டும் வெவ்வேறு. எனவே ஒப்பிட முடியாது. ஸ்கிராம்ப்ளிங் என்று நீங்கள் கேட்டிருப்பது Scrambling என்பதைத்தான் என்று நினைக்கிறேன்.

    இது கம்ப்யூட்டரில் டேட்டாவினை அடுத்தவர் அறியாமல் இருக்கும் வகையில் குழப்பி, இன்னொருவருக்கு அனுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்.

    இதில் குழப்பிய டேட்டாவினை மீண்டும் எப்படிப் பெறுவது என்பதனை அனுப்புபவரும், பெறுபவரும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையே டேட்டா மீண்டும் கிடைக்காது.

    ஸ்ட்ரீமிங் (Streaming) என்பது எந்தவித வயர் இணைப்பு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை அதனை ஏற்றுக் கொள்ளும் சாதனத்திற்கு கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து அனுப்பப்படும் தொழில் நுட்பமாகும். எனவே இந்த சொல்லைப் பயன்படுத்துகையில் ஸ்ட்ரீமிங் ஆடியோ, வீடியோ எனச் சொல்வார்கள்.


    கேள்வி: இன்டர்நெட் வெப்சைட்டுகளைப் பார்வையிடுகையில் சிலவற்றில் (Streaming) என்று காட்டப் படுகிறது. இதனைக் கிளிக் செய்தால் வைரஸ் ஏதேனும் வருமா?


    –கே.சுந்தரமூர்த்தி, மேலூர்


    பதில்: நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் வீடியோ காட்சியாக உங்களுக்குத் தகவல் தர ஏதேனும் வீடியோ பைல் ஒன்று அங்கு கிளிக் செய்திடுகையில் இயக்கப்படும்.

    இதற்காகத்தான் Click to activate என்று லிங்க் தரப்படுகிறது. அங்கு பிளாஷ் அனிமேஷன் பைல் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். "Click to activate and use this control" போன்ற அறிவிப்பும் இருக்கலாம்.

    அடோப் பிளாஷ் பிளேயர், ஆதர்வேர் பிளேயர், ஷாக்வேவ் பிளேயர், அடோப் ரீடர், சன் ஜாவா, ஆப்பிள் குயிக் டைம், ரியல்நெட்வொர்க் ரியல் பிளேயர் மற்றும் சில ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் ஆகிய புரோகிராம்களில் ஏதேனும் ஒன்று வெப்சைட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் இந்த செய்தி கிடைக்கும்.

    இது அந்த வெப்சைட்டில் பதிக்கப்பட்ட இயங்கக்கூடிய பைலும் அதன் புரோகிராமும் ஆகும். இதனைக் கிளிக் செய்தால் மட்டுமே இதனுடன் இணைந்த புரோகிராம் இயங்கத் தொடங்கும். பல வேளைகளில் இதனை டவுண்லோட் செய்து இயக்க வேண்டியதிருக்கும்.


    இதில் கிளிக் செய்தால் வைரஸ் வருமா? என்ற கேள்விக்கு வரலாம், வராமலும் இருக்கலாம் என்பதே பதில். உங்களுக்கு ஒரு இமெயில் வந்து அதிலிருந்து ஏதேனும் ஒரு வெப்சைட் போகச் சொல்லி அதில் இது போன்ற கிளிக் விவகாரங்கள் இருந்தால், ஒதுங்கிப் போவது நல்லது. வைரஸ் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வாய்ப்பு இருக்கும்.


    கேள்வி: இலவச பயர்வால் ஒன்றை அமைக்க விரும்புகிறேன். இவை கிடைக்கும் தளங்களைத் தேடிய போது, பல முகவரிகள் கிடைத்தன. ஆனால் எது சிறந்தது என்று தெரியவில்லை. வழி காட்டவும்.

    –ஆர். சிவகுமார், பொள்ளாச்சி


    பதில்: கீழ்க்காணும் இரு தளங்களில் கிடைக்கும் இலவச பயர்வால்கள் பதிந்து இயக்க எளிதானவை. http://www.sunbeltsoftware.com/Kerio.cfm http://www.zonelabs .com/ store/content /company/products/znalm/fre eDownload.jsp முதலில் இலவசமாகக் கிடைக்கும் இந்த பயர்வால், சில நாட்களுக்குப் பின் அடிப்படை வசதிகளை மட்டுமே தரும். கட்டணம் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடனும் தொடர்ந்து கிடைக்கும்.

    நன்றி தினமலர்

  4. #52
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    ஜனவரி 17,2010

    கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் பல டிப்ஸ்களைப் பயன்படுத்த, மெனு பார் சென்று பைல் கிளிக் செய்து பின் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள். பல வேளைகளில் மெனு பாரே காணாமல் போய்விடுகிறது. அப்போது என்ன செய்வது?

    –டி.நமசிவாயம், புதூர், மதுரை


    பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, பின் மேலாகக் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் மெனுவில் favorites, status bar, command bar எனப் பல பிரிவுகள் கிடைக்கும்.

    இதில் Menu bar என்பதற்கு முன் டிக் அடையாளம் உள்ளதா எனப் பார்க்கவும். இல்லை எனில் மவுஸைக் கொண்டு டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி மெனு பார் மேலாக உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

    அடிக்கடி காணாமல் போகிறது என்றால், வேறு ஒருவர் இதனைப் பயன்படுத்துகையில் டிக் அடையாளத்தை எடுத்துவிடுகிறார் என்று தெரிகிறது.


    கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் 2010 பீட்டா தொகுப்பைப் பதித்து இயக்கிப் பார்க்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேரில் கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்களைப் பற்றித் தரவில்லையே நீங்கள்? தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    – ஆர். கணேச மூர்த்தி, இராஜபாளையம்


    பதில்: ஆம், விட்டுப் போயிற்று. இதோ கீழே தருகிறேன்.

    1. வேகமாக இயங்கக் கூடிய இன்டர்நெட் இணைப்பு அவசியம்.


    2. கீழே தரப்படும் குறைந்த பட்ச ஹார்ட்வேர் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். 500 MHz 32 அல்லது 64 பிட் ப்ராசசர்; அதற்கும் மேலாக இருப்பது நல்லது.

    சிஸ்டம் மெமரி 256 எம்.பி. டிஸ்க் ஸ்பேஸ் 3.5 ஜிபி. 1024 x 768 ரெசல்யூசன் அல்லது கூடுதலான ரெசல்யூசனுடன் கூடிய மானிட்டர். டிவிடி ஆர்/டபிள்யூ டிரைவ்.


    3. ஆப்பரேட்டிங் சிஸ்டம் கீழ்க் குறித்துள்ளவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் – விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் 3 (32 பிட்), விண்டோஸ் விஸ்டா + சர்வீஸ் பேக் 1, விண்டோஸ் 7 – 32 அல்லது 64 பிட்.

    டவுண்லோட் செய்த பின் இயக்கிப் பார்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.


    கேள்வி: பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு தொடர்ந்து ஆட் ஆன் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கிடைப்பதாக எழுதி உள்ளீர்கள். தற்சமயம் எத்தனை தொகுப்புகள் அந்த வகையில் உள்ளன. சிறந்தனவற்றை எங்களுக்குத் தருவீர்களா?

    –டி.கே. சுகந்தி சீனிவாசன், பொள்ளாச்சி


    பதில்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கான தொகுப்புகள் பல உருவாக்கப்பட்டு இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. சென்ற மாதம் வரை இவற்றின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டிவிட்டது.

    கம்ப்யூட்டர் மலரில் அவ்வப்போது பயனுள்ள ஆட் ஆன் தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. இந்த இதழிலும் ஒரு புரோகிராம் குறித்து எழுதப்பட்டுள்ளது.


    கேள்வி: என் வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள ஹெடரில் அன்றாடத் தேதி வரும்படி அமைக்க முடியுமா? எந்த தேதியில் டாகுமெண்ட் திறந்து பார்க்கிறோமோ, அந்த தேதி வர வேண்டும்.

    –சி.ஆர். விஜயமாலா, சின்னமனூர்


    பதில்: டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். ஹெடர் கிடைக்க வியூ மெனுவில் ஹெடர் அண்ட் புட்டர் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஹெடர் உங்களுக்குக் காட்டப்படும். இனி அதில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் இன்ஸெர்ட் மெனு சென்று அதில் பீல்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    பின் கிடைக்கும் பட்டியலில் டேட் என்பதைத் தேர்ந்தெடுத்தால், உடனே எந்த பார்மட் என்பதனைத் தேர்ந்தெடுக்க ஒரு பட்டியல் தரப்படும். அதில் தேவையான பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி அந்த நாளின் தேதி நீங்கள் தேர்ந்தெடுத்த பார்மட்டில் கிடைக்கும்.


    கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் வெர்ஷன் என்ற வகையில் நம் பைலில் பல பதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். இதனை எப்படி ஏற்படுத்தலாம்?

    –கே.எல். சுதாகர், சென்னை


    பதில்: இதுவரை கம்ப்யூட்டர் மலரில் சொல்லாத ஒரு தகவலைக் கேட்டுள்ளீர்கள். நன்றி. வேர்ட் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில், டாகுமெண்ட் ஒன்றில் நாம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கேற்ப அதன் வெவ்வேறு பதிப்புகளை (Versions) ஒரே பைலில் தயார் செய்து சேவ் செய்திடலாம்.

    இவ்வாறு செய்வதன் மூலம் நாம் எப்போது என்ன முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தினோம் என்று அறிந்து அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

    இதற்கு மாற்றங்களை ஏற்படுத்திய பின் File மெனு சென்று Versions என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வெர்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். அதில் Save Nowஎன்பதைக் கிளிக் செய்திடவும்.

    உடன் Save Version என்ற பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் அந்த வெர்ஷனுக்கான உங்கள் குறிப்புகளை நீங்கள் அமைக்கலாம். இதில் எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்காக இந்த வெர்ஷனை, அந்த நிலையில் சேவ் செய்கிறீர்கள் என எழுதி வைக்கலாம்.

    பின் குளோஸ் கிளிக் செய்து மூடினால், வேர்ட் அந்த வெர்ஷனை சேவ் செய்திடும். இது உங்கள் டாகுமெண்ட் அந்த நேரத்தில் எப்படி தோற்றமளிக்கிறது என்பதேயாகும். பின் மீண்டும் நீங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் இதில் ஏறாது. இதில் என்ன சிறப்பு என்றால் அனைத்து வெர்ஷன்களும் ஒரே பைலில் இருக்கும்.


    கேள்வி: இன்டர்நெட் முழுவதையும் மொத்தமாக கிராஷ் செய்து அழித்திட முடியுமா?

    –என். ரஞ்சன் தாஸ், சென்னை


    பதில்: நல்ல கற்பனைதான்; அல்லது பயத்தில் விளைந்த எண்ணம்தான். இதற்குப் பதில் ஒரு பெரிய "முடியாது' என்பதுதான். இன்டர்நெட் என்பது பல்வேறு நெட்வொர்க்குகள் கூட்டாக இணைக்கப்பட்டதாகும்.

    இதனை பல்வேறு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அரசுகள் நிர்வகிக்கின்றன. கட்டுப்படுத்துகின்றன. மேலும் இது தேவைக்கு அதிகமான நிலைகளில் நகல் செய்யப்பட்டும் அமைக்கப் பட்டுள்ளது.

    அதாவது ஒரு நெட்வொர்க்கில் ஒரு பகுதி கிராஷ் ஆனாலும், பயனாளர்கள் அதில் உள்ளவற்றை நெட்வொர்க்கின் இன்னொரு பகுதியில் பெற முடியும். பெரிய அளவில் நில அதிர்ச்சி, மின்சக்தி அதிகமாகிச் சேதம் விளைவித்தல் போன்றவை ஏற்பட்டாலும், இன்டர்நெட் முழுமையும் அழியாது.

    எடுத்துக் காட்டாக 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பெரிய அளவில் தொடர் நில அதிர்ச்சி ஏற்பட்ட போது கடலுக்கடியில், இன்டர்நெட் இணைப்பு தரப் பதிக்கப்பட்ட கேபிள்கள் சேதத்தைச் சந்தித்தன.

    இதனால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டு, பின் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சரி செய்யப்பட்டன. எனவே இன்டர்நெட் முழுமையும் அழிந்துவிடுமோ என்ற பயம் அறவே வேண்டாம்.


    கேள்வி: 404 என்னும் எர்ரர் செய்தி இன்டர்நெட் பிரவுசிங் போது ஏன் ஏற்படுகிறது? அப்போது நான் என்ன செய்திட வேண்டும்?

    –கா. உஷா தேவி, தாம்பரம்


    பதில்:இன்டர்நெட் தேடலில் நீங்கள் கொடுத்த முகவரியில் உள்ள தளத்தினைத் தேடிப் பெறாத நிலையில், உங்களின் சர்வர் உங்களுக்குத் தரும் செய்தி இது. "Page Not Found" என்று கூட வரலாம்.

    பல வேளைகளில் இந்த செய்தியுடன் நீங்கள் என்ன செய்யலாம், அல்லது என்ன செய்திருக்கலாம் என்று குறிப்புகளும் தரப்படும்.

    நீங்கள் முகவரியைச் சரியாக டைப் செய்தீர்களா? என்பது பொதுவான ஒரு தகவல். பொதுவாக அந்த முகவரியில் உள்ள தளம் சர்வரில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்.

    எனவே தேடும் முயற்சியைக் கைவிட லாம். அல்லது வேறு ஒரு பிரவுசரின் மூலம் அதனைப் பெற முயற்சிக்கலாம். ஆனால் அது அவ்வளவு மாறுதலான முடிவைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.


    இருப்பினும் கூகுள் இதில் கை கொடுக்கலாம். பொதுவாக கூகுள் தான் இன்டெக்ஸ் செய்திடும் இணைய தளங்களை தன் கேஷ் மெமரியில் வைத்திருக்கும். எனவே மேலே நீங்கள் தந்திருக்கும் பிழைச் செய்தி கிடைத்தால் கூகுள் சர்ச் பாக்ஸ் பெற்று, அதில் cache எனக் கொடுத்து பின் நீங்கள் தந்துள்ள இணைய முகவரியைத் தரவும்.

    உங்கள் இணைய முகவரியில், அந்த தளத்தின் அடிப்படை முகவரிக்குப் பின், அதன் பக்கங்களுக்கான முகவரி பெயர் இருப்பின், அதனை நீக்கி விட்டு தளத்தின் பெயரை மட்டும் அமைத்துத் தேடிப் பார்க்கவும். தளம் கிடைத்தால் பின் அதில் நீங்கள் தேடும் அந்த குறிப்பிட்ட பக்கத்தைத் தேடலாம்.


    கேள்வி: என் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் எண்கள் பெருக்கி அமைக்கும்போது பல தசம ஸ்தானங்களில் விடை கிடைக்கிறது. சில வேளைகளில் அது ரவுண்ட் ஆப் செய்யப்பட்டு கிடைக்கிறது. இதில் உள்ள லாஜிக் புரியவில்லை. விளக்கவும்.

    – ஆர். சிவாஜி. விருதுநகர்


    பதில்: சில எடுத்துக் காட்டுக்களை நீங்கள் தந்து கேட்டிருக்கலாம். பரவாயில்லை; நானே தருகிறேன். B2 செல்லில் 33.33333333 என்ற மதிப்பைத் தரவும். ஆ3யில் 33.333333333 எனத் தரவும்.

    அதாவது முதலில் தந்ததைக் காட்டிலும் ஒரு இலக்கம் கூடுதலாக. அடுத்து செல் C2 ல் = B2*3 என பார்முலா அமைக்கவும். செல் C3 ல் =B3*3 என பார்முலா அமைக்கவும்.

    இப்போது விடையாக C2 ல் 99.99999999 எனக் கிடைக்கும். C3 ல்100 எனக் கிடைக்கும். இது ஏன் இப்படி என்பதுதான் உங்கள் கேள்வி. எக்ஸெல் முதலில் ஒரு ஒர்க் ஷீட்டை உருவாக் குகையில் ஜெனரல் பார்மட்டை பின்பற்றுகிறது.

    எண்கள் பத்து இலக்கங்களாக அமைக்கும் வகையில் உள்ளதே ஜெனரல் பார்மட். புள்ளிக்கு வலது அல்லது இடது பக்கம் என்றிராமல் மொத்தம் பத்து இலக்கங்கள் அமைக்கப்படும்.

    இலக்கங்கள் 10க்கு மேல் கொண்ட தாக அமைக்கப்பட்டாலோ அல்லது கிடைக்கும் விடை 10 இலக்கங்களுக்கு மேல் இருந்தாலோ அது அடுத்த எண்ணுக்கு ரவுண்ட் ஆப் செய்யப்பட்டு காட்டப்படும். புள்ளிக்கு இடது பக்கம் அதிக இலக்கங்கள் இருந்தால், அதற்கேற்ற சயின்டிபிக் நொட்டேஷன் முறையில் எண் காட்டப்படும். இதனை நீங்கள் மாற்ற வேண்டும் என்றால் செல் பார்மட்டினை மாற்ற வேண்டும்.

    நன்றி.தினமலர்

  5. #53
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    ஜனவரி 24,2010


    கேள்வி: கம்ப்யூட்டர் கட்டமைப்பில் சவுண்ட் கார்டு, கிராபிக் கார்டு மற்றும் பல கார்டுகள் குறித்து அடிக்கடி எழுதுகிறீர்கள். இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன? அட் லீஸ்ட், சுருக்கமாகவாவது விளக்கம் தரவும்.

    –சி.ஆனந்த் குமார், தாம்பரம்


    பதில்: பெர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் பலவகையான கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில அதன் கட்டமைப்பில் அடிப்படைப் பயனைத் தருவதாக அமைகின்றன.

    சில, தேவைப் பட்டால் வாங்கி இணைத்துப் பயன் தருவதாக உள்ளன. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் சவுண்ட் கார்ட், வீடியோ கார்ட் மற்றும் நெட்வொர்க் கார்ட் கூட இணைக்கப்பட்டே வரலாம்.

    அல்லது இப்போது கிடைக்கும் நவீன கம்ப்யூட்டர்களில் இவை மதர்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்டே கிடைக்கின்றன. இவை குறித்து நீங்கள் கேட்டுக் கொண்டபடி இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.


    வீடியோ கார்ட்: இதனை கிராபிக்ஸ் அடாப்டர், டிஸ்பிளே அடாப்டர் அல்லது வீடியோ அடாப்டர் என்றும் கூறுவார்கள். திரையில் தகவல்களைக் காட்ட பயன்படுத்தப்படும் சிறிய சர்க்யூட் போர்டு.

    நீங்கள் உங்கள் மானிட்டர் திரைக்கென அமைத்திடும் ரெசல்யூசன், வண்ணங்களின் எண்ணிக்கை, மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட் ஆகிய அனைத்தும் வீடியோ கார்டின் திறன் மற்றும் மானிட்டரின் வரையறைகளைப் பொருத்து செட் செய்யப்படும்.


    சவுண்ட் கார்ட்: பேசுவது அல்லது ஒலியை வாங்கிப் பதிய மைக்ரோபோன் இணைப்பு, ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் இணைப்பு அல்லது ஒலியை வெளியே தரத்தேவையான இணைப்பு வழி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் பெரும்பாலானவற்றில் MIDI கண்ட்ரோலர்கள் இருக்கும்.


    நெட் வொர்க் இன்டர்பேஸ் கார்ட்: இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக "NIC" எனவும் அழைப்பார்கள். இதனைக் கம்ப்யூட்டரில் இணைத்தால், நெட்வொர்க் ஒன்றுடன் கம்ப்யூட்டரை இதன் வழி இணைக்கலாம்.


    பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், அதன் விலையைக் குறைப்பதற்காக, இந்த கார்டுகளில் குறைவான திறன் கொண்டவற்றை இணைத்துத் தருவார்கள். உங்கள் கம்ப்யூட்டர் சிப்பின் திறன் பார்த்து, அவற்றின் இடத்தில் வேறு கூடுதல் திறனுள்ள கார்டுகளை வாங்கி, இணைத்துப் பயன்படுத்தி, கூடுதல் வசதிகளைப் பெறலாம்.


    கேள்வி: நான் விண்டோஸ் விஸ்டா வைத்திருக்கிறேன். என் கம்ப்யூட்டரில் அதனுடன் வந்த பல கேம்ஸ்கள் (Solitaire, Free Cell and Minesweeper) இருக்கின்றன. இவை எனக்குத் தேவை இல்லை. சிஸ்டத்துடன் வந்ததனால் இவற்றை நீக்கலாமா? எப்படி நீக்கலாம்?

    –கே.மஞ்சுளா, கோயம்புத்தூர்


    பதில்: நீங்கள் குறிப்பிடும் கேம்ஸ்களை நீக்கலாம். அதனால் சிஸ்டம் இயங்கும் தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது. Start>Control Panel செல்லவும்.

    பின் Programs and Features என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இதில் "Turn Windows Features On or Off" என்ற ஆப்ஷனைக் காணலாம். இதில் கிளிக் செய்தால் விண்டோ ஒன்று கிடைக்கும்.

    இதில் உள்ள "Games" என்னும் பிரிவை விரிக்கவும். எந்த கேம்ஸ் எல்லாம் வேண்டாமோ அவற்றின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இந்த கேம்ஸ் அன் இன்ஸ்டால் ஆகிவிடும்.

    பின் எப்போது இவை தேவையோ, அப்போது மீண்டும் இதே வழியாக அவற்றை இன்ஸ்டால் செய்திடலாம். என்ன இருந்தாலும் கேம்ஸ் இல்லாத ஒரு கம்ப்யூட்டரா என்று உங்கள் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் சண்டைக்கு வரலாம். எதற்கும் அவர்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.


    கேள்வி: கேப்ஸ் லாக் கீ நம்மை அறியாமல் அழுத்தப்படுகையில் சிறிய அளவில் ஒலி கேட்கும் வகையில் செட் செய்வது எப்படி என்பதைத் தயவு செய்து விளக்கவும்.

    –கா. பிரமோத், சென்னை


    பதில்: நீங்கள் கேட்கும் வசதி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ளது. கேப்ஸ் லாக் மட்டுமின்றி, Num Lock மற்றும் Scroll Lock key ஆகியவற்றையும் அழுத்துகையில் ஒலி ஏற்படும்.

    இதனால் நாம் பெரிய டாகுமெண்ட்களை வேக வேகமாக டைப் செய்திடுகையில் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்துவது நமக்கு அறிவிக்கப்படுகிறது. இதனை எச்சரிக்கையாக நாம் எடுத்துக் கொண்டு செயல்படலாம்.

    இந்த கீகளுக்கும், குறிப்பிட்ட இந்த வசதிக்கும் டாகிள் கீஸ் (Toggle Keys) என்று பெயர். இதனை இயக்க ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து அதில் Accessibility Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

    இப்போது Accessibility Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள பிரிவுகளில் Toggle Keys என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு Use Toggle Keys என்று உள்ள இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


    கேள்வி: கட், டெலீட், பேக் ஸ்பேஸ் இவற்றில் எதை அழுத்தினாலும் அது பின் நோக்கியோ அல்லது கர்சர் தேர்ந்தெடுத்தனையோ அழிக்கிறது. இதில் என்ன வேறுபாடு உள்ளது? விளக்கவும்.

    – என்.எம். சங்கர நாராயணன், போரூர்.


    பதில்: அடிப்படையில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இவற்றின் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடு உள்ளது. இங்கு அதனைப் பார்க்கலாம். ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும்.

    ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. இவற்றில் கட்(CutCtrl+C) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது.

    அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace) பயன் படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்து விடுகிறது.

    இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும். எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்


    கேள்வி: வேர்டில் உள்ள டேபிளில் காணப்படும் டேட்டாவினைக் கொண்டு, அதனை ஒரு சார்ட் ஆக மாற்றமுடியுமா? அதற்கான பார்முலா என்ன? புதிய வேர்ட் தொகுப்பில் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியுமா என்றும் தகவல் கொடுக்கவும்.

    –என். வித்யா சேகர், பொள்ளாச்சி


    பதில்: தாராளமாக மாற்றலாம். இதற்கு பார்முலா இல்லை. சில மெனுக்கள் சென்று மாற்றலாம். வேர்ட் 97 முதல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. வேர்டில் உள்ள நீங்கள் குறிப்பிடும் அட்டவணையில் எண்களில் டேட்டா தரப்பட்டிருக்க வேண்டும்.


    1. முதலில் சம்பந்தப்பட்ட டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.


    2. இன்ஸெர்ட் (Insert) மெனு செல்லவும். இதில் ஆப்ஜெக்ட் (Object) என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.


    3. இதில் ஆப்ஜெக்ட் டைப் (Object Types) என்பதில் ஒரு பட்டியல் காட்டப்படும். இந்த பட்டியலில் Microsoft Graph Chart என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சில வேர்ட் தொகுப்புகளில் இது அந்த வேர்ட் தொகுப்பின் குறிப்பிட்ட பெயருடன் இருக்கலாம். எடுத்துக் காட்டாக Microsoft Graph 2000 Chart என இருக்கலாம்.


    4. ஓகே கிளிக் செய்தவுடன் சார்ட் கிடைக்கும்.


    5. இந்த சார்ட்டினை உங்கள் விருப்பத்திற் கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.


    6. சார்ட்டுக்கு வெளியே கர்சரைக் கொண்டு வந்து தொடர்ந்து டாகுமெண்ட்டில் பணியாற்றலாம்.


    கேள்வி : =rand(5,4) என்ற கட்டளை வேர்ட் தொகுப்பில் எதற்குப் பயன்படுகிறது? நான் இதனைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    –டாக்டர் வினீத் ராஜ், புதுச்சேரி


    பதில்: இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்த்திருக் கலாமே. இது உங்களுக்கு டெக்ஸ்ட் அமைக்க பயன்படுகிறது. வேர்டில் ஏதேனும் ஒரு பயன் பாட்டினை சோதனை செய்திட திட்டமிடுகிறீர்கள். அதற்கு டெக்ஸ்ட் வேண்டும்.

    இதற்காக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே வேர்டில் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதனை டாகுமெண்ட் ஒன்றில் முதல் வரியில் தொடக்கமாகத் தந்தால் The quick brown fox jumps over the lazy dog என்ற வாக்கியம் தரப்படும். இந்த வாக்கியத்தின் சிறப்பினை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    இது ஆங்கில மொழியின் அனைத்து எழுத்துகளும் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். நீங்கள் தந்துள்ள பார்முலாவில் உள்ள எண்களுக்கும் ஒரு வேலை தரப்படுகிறது. முதலில் தரப்பட்டுள்ள எண் பத்தியைக் குறிக்கிறது.

    அடுத்த எண் அந்த பத்தியில் இந்த வாக்கியம் எத்தனை முறை காட்டப்படும் என்பது குறிக்கப்படுகிறது. இங்கு ஐந்து பத்திகளில், ஒவ்வொரு பத்தியிலும் தலா நான்கு முறை இந்த வாக்கியம் அமைக்கப்படும்.


    கேள்வி: பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில் டேப் பயன்பாடு சிறப்பாக இருக்கிறது. இதில் ஒரு டேப்பில் உள்ள தளத்திலிருந்து இன்னொரு டேப்பிற்குச் செல்ல மவுஸ் கர்சரைத்தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது ஷார்ட்கட் கீகள் உள்ளனவா?

    –கா. தமிழ்ச் செல்வன், திருப்பூர்


    பதில்: டேப்களை ஒன்றுக்கு மேல் திறந்த பின்னர், Ctrl + Tab அல்லது Ctrl + Shift + Tab பயன்படுத்தி டேப்களுக்கிடையே நீங்கள் மாறிக் கொள்ளலாம்.

    நன்றி.தினமலர்

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    ஜனவரி 30,2010,

    கேள்வி: =rand(5,4) என்ற கட்டளை வேர்ட் தொகுப்பில் எதற்குப் பயன்படுகிறது? நான் இதனைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    –டாக்டர் வினீத் ராஜ், புதுச்சேரி


    பதில்: இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்த்திருக்கலாமே. இது உங்களுக்கு டெக்ஸ்ட் அமைக்க பயன்படுகிறது. வேர்டில் ஏதேனும் ஒரு பயன்பாட்டினை சோதனை செய்திட திட்டமிடுகிறீர்கள்.

    அதற்கு டெக்ஸ்ட் வேண்டும். இதற்காக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே வேர்டில் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதனை டாகுமெண்ட் ஒன்றில் முதல் வரியில் தொடக்கமாகத் தந்தால் The quick brown fox jumps over the lazy dog என்ற வாக்கியம் தரப்படும்.

    இந்த வாக்கியத்தின் சிறப்பினை நீங்கள் உணர்ந்திருப் பீர்கள் என்று எண்ணுகிறேன். இது ஆங்கில மொழியின் அனைத்து எழுத்துகளும் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். நீங்கள் தந்துள்ள பார்முலாவில் உள்ள எண்களுக்கும் ஒரு வேலை தரப்படுகிறது.

    முதலில் தரப்பட்டுள்ள எண் பத்தியைக் குறிக்கிறது. அடுத்த எண் அந்த பத்தியில் இந்த வாக்கியம் எத்தனை முறை காட்டப்படும் என்பது குறிக்கப்படுகிறது. இங்கு ஐந்து பத்திகளில், ஒவ்வொரு பத்தியிலும் தலா நான்கு முறை இந்த வாக்கியம் அமைக்கப்படும்.


    கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில் எக்ஸ்பி மோட் என்ற வசதி இருக்கும். அதன் மூலம் பழைய புரோகிராம்களை இயக்கலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதனை எப்படி இயக்குவது என்று விளக்கவும்.

    –ஆர். கிருஷ்ண மூர்த்தி, சென்னை


    பதில்: மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் சில ஆய்வுக் குறிப்புகளைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து அந்த தகவல் தரப்பட்டது. அண்மையில் மைக்ரோசாப்ட் தளத்தில் எக்ஸ்பி மோட் இயக்குவதற் கான பைல் டவுண்லோட் செய்வதற்குத் தரப்பட்டுள்ளது.

    இதனை மைக்ரோசாப்ட் தளம் சென்று பெறலாம். இணைய தள முகவரி: http://www.microsoft. com/windows/virtualpc/download.aspx ஆனால் இதிலும் ஒரு சிக்கலைத் தந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் பதிப்பு இருந்தால் மட்டுமே இந்த எக்ஸ்பி மோட் செயல்படும்.


    கேள்வி: நான் வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் ஒன்றைத் தயார் செய்து மிகக் கவனமாக மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்தேன். ஆனால் மீண்டும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரைத் திறந்து பார்த்த போது அந்த பைல் இல்லை. ஏன், எந்த வேர்ட் பைலும் இல்லை. இது எதனால்? வைரஸ் வேலையாக இருக்குமா?

    –எஸ்.கே. குமார், விருதுநகர்


    பதில்: நிச்சயம் இருக்காது. இது பில்டர் (Filter) பிரச்னை என்று நினைக்கிறேன். இது பைல் பில்டர் (File Filter) ஆகும். நீங்கள் Open செலக்ட் செய்து கிளிக் செய்தால், பைல் Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது.

    அங்கு தான் வேர்ட் பைல் எதுவும் இல்லை என்று சொல்கிறீர்கள். இந்த டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள பிரிவுகளில் கீழாக Files of Type என்று இருக்கும்.

    அங்கு உள்ள ஆப்ஷன்களில் நீங்கள் Word Documents என்பதனை செலக்ட் செய்யாமல் வேறு எதோ ஒரு பிரிவினை செலக்ட் செய்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். All Files மற்றும் Word Documents என்றவற்றில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்திருந்தால் தான் வேர்ட் டாகுமெண்ட் கிடைக்கும்.

    மை டாகுமெண்ட்ஸ் போல்டரில், எம்.எஸ். ஆபீஸ் அப்ளிகேஷன் சாப்ட்வேரில் தயாராகும் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் சேவ் செய்யப்படும். அவற்றில் பைல்களை எளிதாகத் தேட இந்த பைல் பில்டர் தரப்படுகிறது. எனவே நீங்கள் மேலே கூறியுள்ளபடி பைல் செலக்ஷன் மேற்கொண்டீர்களா என்று கவனிக்கவும். சரியாக செலக்ஷன் செய்தால் நிச்சயம் உங்கள் பைல்கள் கிடைக்கும்.


    கேள்வி: பெரிய நீளமான இமெயில் கடிதங்களைத் தயார் செய்கையில், அவற்றை இடையே சேவ் செய்திட முடியுமா? அதற்கு வழி உள்ளதா?

    –ச.இசையரசி, கோயம்புத்தூர்


    பதில்: தாராளமாக சேவ் செய்திடலாம். பொதுவாகப் பலரும் தங்கள் இமெயில் கடிதங்களை வேர்ட் அல்லது வேறு வேர்ட் ப்ராசசரில் தயார் செய்து, பின் கட் செய்து பேஸ்ட் செய்வதனைப் பார்த்திருக்கிறேன்.

    ஆனாலும் பல இமெயில் கிளையண்ட்களில் இந்த சேவ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. ஜிமெயிலில் நீங்கள் எந்த கடிதம் தயார் செய்தாலும் அது உடனே சேவ் செய்யப்படும். அதனை உடனே அனுப்பவில்லை என்றால், அது டிராப்ட் போல்டரில் இருக்கும்.

    இதே போல அவுட்லுக், தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில் வசதி உள்ளது. நீங்களே சேவ் செய்திடலாம். பைல் மெனு திறந்து சேவ் அல்லது சேவ் அஸ் (Save / Save As) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அவற்றிலும் ட்ராப்ட்ஸ் (ஈணூச்ஞூtண்) போல்டரில் சேவ் செய்யப்படும்.

    பின் அந்த போல்டரிலிருந்து அதனைத் திறந்து பார்த்து அப்படியே அனுப்பலாம்.
    ஜிமெயிலிலும் மெசேஜ் ஏரியாவிற்கு மேலாகவும் கீழாகவும், சேவ் நவ் (Save Now) என்று ஒரு பட்டன் தரப்பட்டிருக்கும். இதனை அழுத்தி சேவ் செய்தால், மெயில் ட்ராப்ட்ஸ் போல்டரில் சேவ் ஆகும்.


    கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் அட்ரஸ் பாரில் யு.ஆர்.எல். டைப் செய்கையில், கீழாக சார்ந்த தள முகவரிகள் வருகின்றன. ஏன் ஆட்டோ பில் (Auto Fill) வசதி வருவதில்லை. என்னென்னமோ புரட்சி செய்திடும் பயர்பாக்ஸ், இந்த சின்ன விஷயத்தை ஏன் விட்டுவிட்டது?

    –சி.ஆர்.ஸ்ரீனிவாசன், திருவண்ணாமலை


    பதில்: சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் எழுப்பியிருக்கும் பிரச்னை மற்றும் நீங்கள் புரட்சி எனப் புகழ்ந்திருப்பதனையும் சேர்த்துக் கூறுகிறேன். முதலில் இந்த வசதியை பயர்பாக்ஸ் தந்து கொண்டிருந்தது. எங்கோ விட்டுவிட்டது.

    ஆனால் இந்த வசதியை மீண்டும் பெறலாம். சின்ன கான்பிகரேஷன் வேலை செய்திட வேண்டும்.

    முதலில் பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கவும். பின் அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது நீள் செவ்வகத்தில் ஓர் எச்சரிக்கை கிடைக்கும். இந்த வேலை மேற்கொண்டால் வாரண்டி இல்லை என்று எச்சரிக்கும். பரவாயில்லை; பயப்படாமல் I will be careful; I promise என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

    நீங்கள் இதன் மூலம் செல்லக் கூடிய ஏரியா சற்று ஆபத்தானதுதான். ஏதாவது ஏடா கூடமாக மாற்றிவிட்டால், பயர்பாக்ஸ் தீ பிடித்த வீடாகிவிடும். ஜஸ்ட் பார் ஜோக். என்டர் அழுத்தியவுடன் நீளமாக ஒரு பட்டியல் கிடைக்கும். பயந்துவிடாதீர்கள். இது அகர வரிசைப்படி இருப்பதால் browser.urlbar.autofill என்று இருக்கும் இடத்தைக் கண்டறியவும்.

    இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் வேல்யூ False என்று இருக்கும். இதனை True என்று மாற்ற வேண்டும். இதற்கு False என்றுள்ள இடத்தில் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திடவும். வேல்யூ True என மாறிவிடும்.

    வேறு எதுவும் செய்திடாமல் உங்கள் மாற்றத்தை சேவ் செய்து வெளியேறவும். மீண்டும் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தொடங்கவும். இனி நீங்கள் கேட்ட ஆட்டோ பில் எபக்ட் கிடைக்கும்.


    கேள்வி: வெப்சைட் ஒன்றிலிருந்து தமிழ் டெக்ஸ்ட் காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்தேன். ஒரே கட்டம் கட்டமாக எழுத்து தெரிகிறது. எத்தனை முறை, எந்த பிரவுசர் வழியாகச் செய்தாலும் இதே கட்டங்கள் தான். ஒரிஜினல் எழுத்துக்களை எப்படிப் பெறுவது?

    –என். மாலதி, சென்னை


    பதில்: உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து நீங்கள் வெப்சைட்டிலிருந்து காப்பி செய்த தமிழ் டெக்ஸ்ட் யூனிகோட் எழுத்துமுறையில் தயாரான டெக்ஸ்ட் எனத் தெரிகிறது. பேஸ்ட் செய்தவுடன் தெரிகிற கட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

    பின் எழுத்துவகை தெரியும் கட்டம் அருகே இதன் பார்மட் குறித்த ஒரு கட்டம் இருக்கும். அதில் கிளிக் செய்து Clear Formattin என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது யூனிகோட் தமிழ் பாண்ட் லதா என்ற பெயரில் காட்டப்பட்டு டெக்ஸ்ட் நன்றாகப் படிக்கும் வகையில் தெரியும்.


    கேள்வி: எம்.எஸ். அவுட்லுக் இமெயில் கிளையண்ட்டில் Ctrl + Shift + R எதற்குப் பயன்படுகிறது. இதனைப் பயன்படுத்தினால் எந்த வேறுபாடும் நடக்கவில்லை. விளக்கவும்.

    –சி. நந்தகுமார், செங்கல்பட்டு


    பதில்: ஒரு இமெயில் மெசேஜிற்கு பதில் அனுப்புகையில் Ctrl + Shift + R அழுத்தினால், அதே மெயிலுக்கான பதில் மெயில் அனுப்பும்போது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அந்த மெயிலை இந்த கட்டளை அனுப்பும். நீங்கள் அது போன்ற மெயில் எதனையும் பயன்படுத்தி இருக்கமாட்டீர்கள்.


    கேள்வி:வேர்டில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட்டில் பாராக்களைப் பிரிக்காமல், அதாவது அடுத்த பக்கத்திற்குப் பாதியாகச் செல்லாமல், தானாக அமைக்க முடியுமா?

    –சு. தெய்வேந்திரன், போடிநாயக்கனூர்


    பதில்: இவ்வாறு பிரிக்கப்பட்ட பாராக்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அல்லது டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பாராக்களையும் தேர்ந்தெடுங்கள். பின்னர் மவுஸின் கர்சரை பாராக்களுக்குள் எங்கேனும் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும்.

    கிடைக்கும் மெனுவில் "Paragraph" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Line and Page Breaks" என்று இருக்கும் டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது காட்டப்படும் பிரிவுகளில் "Keep lines together" என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்பட்டுத்தி ஓகே கிளிக் செய்து விண்டோவினை மூடவும். இனி பத்திகள் பக்க பிரிவுக் கோட்டினால் பிரிக்கப்படமாட்டாது.


    கேள்வி: ரெஜிஸ்ட்ரி குறித்து அறிய விரும்புகிறேன். ரெஜிஸ்ட்ரி பற்றி தெளிவாக, சாதாரண தொடக்க நிலையில் உள்ளவர்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகங்கள் இன்டர்நெட்டில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்குமா?

    –ஆ. மனோகரன், சின்னமனூர்


    பதில்: நிறைய புத்தகங்கள் பி.டி.எப். பைலாக உள்ளன. உங்களுக்கு நான் www.winguides.com/registry மற்றும் www.major geeks.com /download.php? det=539 என்ற தளங்களில் காணப்படுபவற்றை பரிந்துரைக்கிறேன்.

    நன்றி.தினமலர்.

  7. #55
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    பிப்ரவரி 07,2010
    =============

    கேள்வி: சீனாவின் சர்வர்களில் ஹேக்கர்கள் நுழைந்தது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அமைப்பில் உள்ள தவறினால் தான் என்று செய்து வருகிறதே. அப்படியானால் நம் கம்ப்யூட்டரைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்திடலாம்?

    –கே. எஸ். சுகன்யா தேவி, கோயம்புத்தூர்


    பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாக வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்தலாம். அதிலும் நிச்சயம் ஹேக்கர்கள் பிரச்னை இருக்கும்.

    எனவே மைக்ரோசாப்ட் இந்த பிரச்னையைத் தீர்க்க வெளியிட்டிருக்கும் பேட்ச் பைலை இன்ஸ்டால் செய்திடவும். நீங்கள் விண்டோஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு எந்த பதிப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும்,

    மைக்ரோசாப்ட் தந்துள்ள க்யுமுலேட்டிவ் செக்யூரிட்டி அப்டேட் (Cumulative Security Update) பேட்ச் பைலைப் பயன்படுத்த வேண்டும்.

    இதற்கான விளக்கத்தினை http://support.microsoft. com/kb/978207 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத் தளத்தில் பார்க்கலாம்.

    http://www.micro soft.com /technet/security/bulletin/MS10002.mspx என்ற முகவரி யிலும் இதற்கான விளக்கம் தெளிவாகவும் விரிவாகவும் தரப்பட்டுள்ளது.


    கேள்வி: ஒவ்வொரு முறை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக ஜிமெயில் தளத்தினை அணுகுகையில் ""வெப்சைட் பக்கம் திறக்க முடியவில்லை'' என்று எர்ரர் செய்தி காட்டப்படுகிறது? ஜிமெயில் தளம் திறக்க மறுக்கிறது. இது எதனால்? நான் என்ன செய்ய வேண்டும்?

    –நா. மஹேந்திரன், வி.சி.புரம், சாத்தூர்


    பதில்: இது ஒரு பொதுவான சிறிய பிரச்சினை தான். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள கன்டென்ட் அட்வைஸரை செயல் இழக்கச் செய்திட செட் செய்திட வேண்டும். முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள்.

    பின் Tools>Internet Options எனச் செல்லவும். டூல் பார் இல்லை என்றால் ஆல்ட் கீயை அழுத்துங்கள். டூல்பார் கிடைக்கும். டயலாக் பாக்ஸின் மேலாக Content என ஒரு டேப் இருக்கும்.

    கண்டென்ட் அட்வைஸர் அருகே டிக் செய்யப்பட்டு, அது செயல்படும்படி வைக்கப்பட்டிருந்தால், அதனை எடுத்துவிடுங்கள். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


    அடுத்து உங்கள் பிரவுசரின் கேஷ் மெமரியைக் காலி செய்திட வேண்டும். Tools>Internet Options எனச் செல்லவும்.டயலாக் பாக்ஸின் மேலாக General என ஒரு டேப் இருக்கும்.

    அதைத் தேர்ந்தெடுத்தால், Browsing History என்பதன் கீழாக அங்கு டெலீட் பைல்ஸ் (Delete Files) என ஒரு ஆப்ஷன் கிடைக்கும். பின் Preserve Favorites website data என்று இருப்பதில் டிக் செய்த பின்

    Temporary Internet Files, Cookies History ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Delete என்பதில் கிளிக் செய்திடவும்.


    இறுதியாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடிவிட்டு மீண்டும் திறந்து பயன்படுத்தவும். இன்னும் பிரச்னை இருந்தால், கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பான சர்வரை https://mail.google.com என்ற முகவரியில் பெற்று பயன்படுத்தவும்.


    கேள்வி: எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் அப்போதான நேரத்தையும், தேதி யையும் இன்ஸெர்ட் செய்திடப் பயன்படுத்த வேண்டிய ஷார்ட் கட் கீகள் எவை?

    –கே.முத்துக்குமார், விழுப்புரம்


    பதில்: Alt + Shift + D கொடுத்தால் உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் அன்றைய தேதி இடைச் செருகலாகும். Alt + Shift + T கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.

    இன்னும் ஒரு கூடுதல் தகவல் தரட்டுமா? பவர்பாய்ண்ட் ஸ்லைடில் Alt + Shift + D அல்லது Alt + Shift + T என்ற கீ தொகுப்புகளைக் கொடுத்தால், டைம் மற்றும் டேட் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் இருந்து நீங்கள் எதனை இடைச் செருக வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து கொள்ளலாம்.


    இன்னொன்றும் சொல்லட்டுமா? எக்ஸெல் தொகுப்பில் Ctrl + ; (semicolon) கொடுத்தால் அன்றைய தேதி ஒர்க்ஷீட்டில் அமைக்கப்படும். Ctrl + Shift + : (colon) கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.


    கேள்வி: என் தோழியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது, கம்ப்யூட்டரில் புரோகிராம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது, எர்ரர் செய்தி கிடைத்ததாகவும், அந்த செய்தி ஒரு டயலாக் பாக்ஸில் காட்டப்பட்டதாகவும், உடனே அதனைச் சரி செய்ததாகவும் கூறினார். இந்த டயலாக் பாக்ஸ் என்பது என்ன?

    –சி. ஜான்ஸி கிருபா ராணி, சென்னை

    பதில்: முதலில் இந்த டயலாக் பாக்ஸ் என்ற சொல் தொடரைக் கேட்ட போது எனக்கும் இது என்ன என்று விளங்காமல் தான் இருந்தது. அப்புறம் படித்துத் தெளிவு பெற்ற போது, நம் அன்றாடக் கம்ப்யூட்டர் பணியில் அடிக்கடி கிடைப்பதுதான் எனத் தெரிந்தது.

    டயலாக் பாக்ஸ் என்பது,கம்ப்யூட்டரில் உங்கள் செயலுக்கு மறுமொழியாக எதனையேனும் சிஸ்டம் அறிவிக்க எண்ணுகையில், அல்லது தர வேண்டும் என எண்ணுகையில் காட்டப்படும் பாக்ஸ்தான் அது. ஒரு வேலையினை நீங்கள் செய்திட வேண்டும் , அல்லது தொடங்கிட வேண்டும் என்பன போன்ற வேலைகளை இந்த டயலாக் பாக்ஸ் காட்டும்.

    எடுத்துக் காட்டாக, ஒரு வெப்சைட்டில் நான் ரைட் கிளிக் செய்தேன். உடனே Function Disabled என்று ஒரு செய்தியுடன் ஒரு சிறிய பாக்ஸ் ஒன்று காட்டப்பட்டது. அதாவது இந்த வெப்சைட்டில் இந்த வேலை ஆகாது என்ற செய்தியை ஒரு டயலாக் பாக்ஸ் காட்டியது.

    வேறு வழியில் சொல்லப்போனால், அங்கு ரைட் கிளிக் செய்ய முடியாது என்பதுதான். ஸ்டார்ட் கிளிக் செய்து ரன் தேர்ந்தெடுத்தால் வரும் டயலாக் பாக்ஸ், உங்களிடம் ரன் செயல்பாட்டிற்கான ஆப்ஜெக்டைப் பெற வரும். உங்கள் செயல்பாட்டில் ஏதேனும் எர்ரர் ஏற்பட்டாலும் அது டயலாக் பாக்ஸ் மூலம் காட்டப்படும்.


    கேள்வி: ஆபீஸ் புரோகிராம்களில், பைல் மெனுவில் நான்கு பைல்களுக்குப் பதிலாகக் கூடுதலான எண்ணிக்கை யில் பைல்களைக் காட்டும்படி எப்படி அமைக்கலாம்?

    –சீ. ஷண்முகநாதன், தேனி.


    பதில்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களும் நான்கு பைல்களையேகாட்டும். இதனைக் கூடுதலாக 9 பைல்களைக் காட்ட Tools–> Options –> General (Tab) Recently Used File list என்ற வழியில் சென்று எண்ணை 9 என உயர்த்தி இருப்பீர்கள்.

    இப்போது அதே போல் சென்று Recently Used File list என்பதற்கு எதிரே உள்ள கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். இனி எந்த பைலும் காட்டப்படமாட்டது. ஆனால் இதில் கவனம் தேவை. இது மற்ற எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களையும் பாதிக்கும்.


    கேள்வி: டூயல் பூட் என்பது எதனைக் குறிக்கிறது? இரண்டு வகையில் ஒரு கம்ப்யூட்டரை ஏன் பூட் செய்திட வேண்டும். தேவையில்லையே?

    –எஸ். சீதாராமன், புதுச்சேரி


    பதில்: ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம்.

    எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத் தலாம்.

    இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.

    எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக்கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள்.

    அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல்.

    இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது. எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விஸ்டா பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது.

    இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம்.

    கூடுதலாக விண்டோஸ் விஸ்டா மட்டுமின்றி, விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.


    கேள்வி: இன்டர்நெட் வெப்சைட்டில் பேக் கிரவுண்டில் தெரியும் டிசைன் மற்றும் இமேஜ் இல்லாமல் எப்படி பிரிண்ட் எடுப்பது?

    –சீ, கண்ணபிரான், காரைக்கால்


    பதில்: வெப்சைட்டிலிருந்து டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் எடுப்பது உங்கள் நோக்கம். பெரும்பாலான வெப்சைட்டுகளில் இந்த ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இல்லை என்றால், டெக்ஸ்ட் மட்டும் செலக்ட் செய்து அதனை ஏதேனும் ஒரு வேர்ட் ப்ராசசரில் புதிய பைல் ஒன்றில் பேஸ்ட் செய்திடுங்கள்.

    பின் அந்த பைலை பிரிண்ட் செய்திடலாம். அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும்.

    இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு "Print background colors and images" என இருக்கும்.

    இதனைத் தேர்ந்தெடுக் காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் கேட்டபடி பிரிண்ட் செய்திடலாம். பயர்பாக்ஸ் எனில் பேஜ் செட் அப் பிரிவில் இந்த ஆப்ஷன் கிடைக்கும். அதிலும் டிக் அடையாளம் இல்லாமல் இருப்பதனை உறுதி செய்து பிரிண்ட் எடுக்கவும்.

    நன்றி.தினமலர்.

  8. #56
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    பிப்ரவரி 14,2010

    கேள்வி: கூகுள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 க்கு இனி இணைந்து இயங்காது என்று அறிவிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். இது உண்மையா?

    –சுகன்யா தேவி, மதுரை


    பதில்: ஆமாம். வருத்தம் தரும் உண்மையே. மார்ச் 1, 2010 முதல் கூகுள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பிரவுசருக்குத் தரும் இணைவமைதியைத் தராது. எனவே இந்த பிரவுசரையே இன்னும் பயன்படுத்தி வருபவர்கள், மேம்படுத்தப்பட்ட பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும்.

    இல்லை என்றால் கூகுள் டாக்ஸ், கூகுள் சைட்ஸ் போன்ற கூகுள் தளங்கள் இதில் இயங்காது.

    இது குறித்து கூகுள் அப்ளிகேஷன் மேனேஜர் ராஜன் ஷேத் தன் பிளாக்கில் எழுதுகையில் வேறு பல நிறுவனங்களும் இது போல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 னுடனான தங்கள் உறவினை முறித்துக் கொண்டனர்.

    கூகுள் இப்போதுதான் இந்த முடிவினை அமல்படுத்துகிறது என்றார். எனவே மார்ச் 1 தொடங்கி கூகுள் டாக்ஸ் மற்றும் கூகுள் சைட்ஸ் சரியாக இந்த பிரவுசரில் இயங்காது என்றார். இதனைத் தவிர்க்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4 அல்லது சபாரி 3க்கு மாறிக் கொள்ள வேண்டும் என்றார்.

    இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்குப் பிறகு எத்தனையோ பிரவுசர்கள் வந்துவிட்டன. இலவச மாகவும் கிடைக்கின்றன. பின் ஏன் தயங்குகிறீர்கள், பயப்படுகிறீர்கள். நவீன வசதிகளைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.


    கேள்வி: நான் எப்போதும் பயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி வருகின்றேன். சில வேளைகளில் சில வெப்சைட் தளங்கள் இதில் திறக்க மறுக்கின்றன. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கப்படுகின்றன. இது ஏன்? பயர்பாக்ஸ் பிரச்னயா? கம்ப்யூட்டர் பிரச்னையா?

    –செ. வாசுநாதன், சென்னை


    பதில்: நீங்கள் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்து பவராக இருந்தால், நிச்சயம் சில இணைய தளங்களுடன் இந்த பிரச்னையைச் சந்தித்திருக்கலாம். ஏனென்றால் சில இணைய தளங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டுமே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    அத்தகைய தளங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இயங்காது. எனவே, அந்த தளங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து, அத்தளங்களில் கொடுத்துள்ள தொடர்பு முகவரிக்கு இந்த பிரச்னை குறித்து இமெயில் அனுப்புங்கள்.

    அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரில், டூல்பாரில் ஹெல்ப் (Help) பட்டனை அழுத்தவும். அதன்பின் Report Broken Website என்பதில் கிளிக் செய்திடவும். உடைந்த(!) இணைய தளங்களில் சில வகைகள் இருக்கும். அவற்றில் சில குறித்து உங்களுக்கு இங்கு தருகிறேன்.

    1. Browser Not Supported: இத்தகைய தளங்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. ஏனென்றால் பயர்பாக்ஸ் பிரவுசர் இப்போது ஒரு முதன்மை பிரவுசராக நமக்கு கிடைத்து வருகிறது. இருப்பினும் Report பட்டனை அழுத்தி முன்பு கூறியபடி ரிப்போர்ட் செயல்படவும்.

    2. Plug in Not shown: இதனைத்தான் நான் முழுமையாக வெறுக்கிறேன். பயர்பாக்ஸில் உள்ள ப்ளக் இன் பைண்டர் பொதுவாகவே சரியான ப்ளக் இன் பார்த்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். இருப்பினும் சிலவற்றை அதனால் பெற்று இன்ஸ்டால் செய்திட முடியாது.

    இதில் அதிகம் தொல்லை கொடுப்பது விண்டோஸ் மீடியா பிளேயர் 11 க்கான ப்ளக் இன் தான். எனவே இந்த செய்தி கிடைத்தால் அதற்குத்தானா என்று பார்த்து பெற்று இன்ஸ்டால் செய்திடவும்.

    3. Other content missing; இது பொதுவாக ரிப்போர்ட் செய்யப்பட வேண்டிய ஒன்று. வெப்சைட் ஒன்றில் ஏதேனும் மெனு காட்டப்பட்டு அவை காலியாக இருந்தால் இந்த செய்தி கிடைக்கும். ரிப்போர்ட் பட்டன் அழுத்தி மேலே கூறியபடி தகவல் தர வேண்டியதுதான்.

    4. Can’t Log in : உங்களுடைய அலுவலக இன்ட்ரா நெட் நெட்வொர்க்கினை, வீட்டிலிருந்த படி தொடர்பு கொள்ள முடிந்தால் இந்த தகவல் தரப்படலாம். பாஸ்வேர்ட் மறத்தல், தவறாக டைப் செய்தல் போன்ற தவற்றை நீங்கள் செய்திடவில்லை என்றால், மேலே சொன்னபடி ரிப்போர்ட் செய்திட வேண்டியது தான். மேலே சொன்னவைதான் சிக்கலான பிரச்னைகள். மற்றவை எல்லாம் சாதாரணமானவையே.


    கேள்வி: நான் தொடர்ந்து பயன்படுத்திவரும் மவுஸில், மேலாக உள்ள ஸ்குரோல் வீல் திடீரெனச் சரியாக இயங்கவில்லை. இதனை எப்படி சரி செய்யலாம் என்று ஆலோசனை கூறமுடியுமா?

    –ந. வெங்கட ரங்கன்,கோயமுத்தூர்


    பதில்: நீங்கள் விண்டோஸ் இயக்கத் தொகுப்பின் எந்த பதிப்பு பயன்படுத்தினாலும், முதலில் மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் (Mouse Properties) விண்டோ சென்று அதில் காட்டப்படும் விஷயங்களைப் பார்க்க வேண்டும். இதற்கு Start, Control Panel சென்று Printers and Other Hardware என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பின் அங்குள்ள மவுஸ் (Mouse) லிங்க்கில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்தினால் Start>Control Panel>Hardware and Sound சென்று தேர்ந்தெடுக்கவும். இங்கு "Devices and Printers" என்பதில் Mouse தேர்ந்தெடுத்தால் மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ்(Mouse Properties) பாக்ஸ் கிடைக்கும். இதில் வீல் (Wheel) என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

    இங்கு ஒருமுறை உங்கள் மவுஸின் ஸ்குரோல் வீல் சுழலுகையில் எத்தனை வரிகள் கடக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். இதில் 100 வரை செல்லலாம் என்றாலும், மவுஸ் அதனை ஏற்றுச் செயல்படும் அளவில் வைப்பதே நல்லது. நான் 3 மட்டுமே வைத்துள்ளேன். இந்த எண்ணை மாற்றி, பின் மவுஸை ஸ்குரோல் வீலை இயக்கிப் பார்க்கவும். இப்போது சரியாகிவிட்டால் அப்ளை (Apply), பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

    இப்போதும் சரியாகவில்லை என்றால், மீண்டும் வீல் டேப் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் "One screen at a time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பழைய பதிப்புகளில் இது "One page at a time" என இருக்கும். இது நிச்சயம் உங்கள் பிரச்னைக்குத் தீர்வினைத் தரும். இப்போதும் சரியாகாமல் இருந்தால் என்ன செய்வது?

    மவுஸுடன் ஏதேனும் சிடி கொடுத்திருந்தால், அதனைப் எடுத்து மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும். பொதுவாக விண்டோஸ் தொகுப்பில் இந்த மவுஸிற்கான டிரைவர் இருந்தாலும், லாஜிடெக் கொடுத்த சிடியைப் பயன்படுத்துவதும் நல்லதுதான். இன்னும் சரியாகவில்லை என்றால்? புது மவுஸ் வாங்கி பயன்படுத்த வேண்டியதுதான்.


    கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். அதில் எப்போதும், ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில், ஏற்கனவே டவுண்லோட் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படுகிறது. ஆனால் அவை எங்கிருக்கிறது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

    -எஸ். அரவிந்த் குமார், சிவகாசி

    பதில்: மிக எளிது, அரவிந்த் குமார். Tools கிளிக் செய்து அதில் Downloads என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின் டவுண்லோட் செய்த எந்த புரோகிராம் பற்றி அறிய வேண்டுமோ, அதில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Open Containing Folder என்பதைத் தேர்ந்தெடுத்தால், பைல் இருக்கும் போல்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உங்கள் பைல் இருப்பதனைப் பார்க்கலாம்.


    கேள்வி: swf என்ற து�ணைப் பெயருடன் சில பைல்கள் என் கம்ப்யூட்டரில் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் உள்ளன. சில நாட்களாகத்தான் இவை இங்கு தங்குகின்றன. இவை எவை? வைரஸாக இருக்குமோ?

    –எஸ்.ப்ரியதர்ஷிணி, மேட்டுப்பாளையம்


    பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் அடோப் பிளாஷ் புரோகிராம் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். அந்த புரோகிராம் உருவாக்கும் பைல்கள் தான் இவை. கிராபிக்ஸ் பைல் பார்மட்டில் இவை உருவாக்கபடுகின்றன.

    அனிமேஷன் எனப்படும் நகரும் வரைகலை, கம்ப்யூட்டர் பயன்படுத்து பவருடன் ஏற்படுத்தப்படும் தகவல் பெறல் போன்றவற்றிற்கு இந்த பைல்கள் பயன்படும். டிவிடி மெனு மற்றும் டிவி வர்த்தக விளம்பரங்கள் ஆகியவற்றிற்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த பைல் பெயரை ShockWave Flash அல்லது Small Web Format என விரித்துக் கூறுவார்கள். சிலர் இதன் எழுத்துக்களை மட்டும் S W F என உச்சரிப்பார்கள். ஒரு சிலர் ஸ்விப் ("swiff") பைல் எனவும் கூறுவார்கள். இன்டர்நெட்டில் இன்று வெக்டார் கிராபிக்ஸ் என்று சொல்கையில் இந்த பார்மட் தான் சக்கை போடு போடுகிறது.


    கேள்வி: யு.எஸ்.பி. இனி ஸ்பீட் 3.0 ல் கிடைக்கும் என்றும், இது வேகமாக டேட்டாவினைப் பரிமாறும் என்றும் கூறப்படுகிறது. நீங்களே எழுதியுள்ளீர்கள். இந்த யு.எஸ்.பி. ஸ்பீடை எப்படி அறிந்து கொள்வது? எப்படி அளப்பது?

    –கா. ஸ்டாலின், உதகமண்டலம்


    பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. டிரைவின் வேகத்தைக் காண My Computer ஐகானில் கிளிக் செய்திடவும். பின் அதில் Properties தேர்ந்தெடுக்கவும். அடுத்து Hardware என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின் Device Manager என்பதில் கிளிக் செய்திடவும். புதிய விண்டோ திறக்கப்படும்.

    இங்கு கீழாகச் செல்லவும். அங்கு Universal Serial Bus Controllers என்று ஒரு இடத்தில் காணப்படும். இங்கு உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் யு.எஸ்.பி. குறித்த அனைத்து தகவல்களும் காட்டப்படும்.

    இங்கு USB Enhanced Host Controller எனக் காட்டப்பட்டல் உங்களிடம் யு.எஸ்.பி. 2 வகை உள்ளது என்று பொருள். "Enhanced" என்பது ஸ்பீட் 1.0லிருந்து மேம்படுத்தப்பட்டது. அடுத்து யு.எஸ்.பி. 3 பரவலாகப் புழக்கத்தில் வரும்போது அது வேறு சொற்களுடன் குறிக்கப்படலாம்.

    மற்றபடி அளப்பது என ஒன்றுமில்லை. முதலில் வந்தது 1.0, பின் 2; அதன் பின் 3. அவ்வளவே. டேட்டா எவ்வளவு பரிமாறப்படுகிறது என்பதே முக்கியம். இந்த வகை ஒவ்வொன்றுக்கும் ஒரு வேகம் உள்ளது. அதனை முன்பு கூறிய வழியில் அறியலாம்.
    இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும்.

    ஒரு யு.எஸ்.பி. போர்ட் வகை 2.0 என்றால், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களும் அதே வகையைச் சேர்ந்தவகையாகவே இருக்கும். இருவேறு ஸ்பீட் உள்ள போர்ட்களுடன், பெர்சனல் கம்ப்யூட்டர் பொதுவாக வருவதில்லை.


    நன்றி.தினமலர்.

  9. #57
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    பிப்ரவரி 21,2010

    கேள்வி: சில வேளைகளில் என் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் மீடியா பிளேயர் இயங்க மறுக்கிறது. கோடக் இல்லை என்றெல்லாம் தகவல் தருகிறது. எதனால் இது ஏற்படுகிறது? இதற்கான தீர்வு தரவும்.

    –கா. சுந்தர மூர்த்தி, சின்னமனூர்


    பதில்: சில வேளைகளில் இந்த எர்ரர் மெசேஜ் காட்டப்படுவதாக எழுதி உள்ளீர்கள். இதிலிருந்து சில குறிப்பிட்ட பார்மட்டில் உள்ள வீடியோக்கள் இயங்கவில்லை என்று தெரிகிறது. இப்போது பல பார்மட்களில் வீடியோக்கள் கிடைக்கின்றன.

    அவற்றில் Divx, FLV, MP4, MKV போன்றவை அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் விண்டோஸ் மீடியா பிளேயர் இவற்றில் சில பார்மட்களை இயக்காது. இதற்கான தீர்வாக வேறு எதுவும் செய்திட முடியாது.

    வேறு ஒரு மீடியா பிளேயரை இறக்கி, இன்ஸ்டால் செய்திட வேண்டியதுதான். அந்த வகையில் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஒரு சிறந்த மீடியா பிளேயராகும். இதனை http://www.videolan.org/vlc என்ற முகவரி யிலிருந்து இலவசமாக இறக்கிப் பதியலாம்.

    இது அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது. சராசரியாக விநாடிக்கு 17 பேர் இதனை டவுண்லோட் செய்வதாக தகவல்கள் உள்ளன. எனவே இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்து இயக்கவும்.


    கேள்வி: முன்பு ஐ.பி. அட்ரஸ் குறித்து விளக்கம் அளித்து அதனை எப்படி அறிவது என்றும் எழுதி இருந்தீர்கள். பிரவுசர் சிக்னேச்சர் ஒன்று இதனுடன் சொல்லப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது?

    –என். கே. செல்லமுத்து, கோயம்புத்தூர்


    பதில்: இன்டர்நெட்டில் இணையும் ஒரு கம்ப்யூட்டரின் தனி அடையாளம் தான் அதன் ஐ.பி. முகவரி. பிரவுசர் சிக்னேச்சர் என்பது, உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பிரவுசர் குறித்த அனைத்து தகவல்களையும் அடக்கியுள்ள தொகுப்பாகும்.

    எடுத்துக்காட்டாக என் பிரவுசர் சிக்னேச்சரைத் தேடிய போது Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.1; enUS; rv:1.9.1.7) Gecko/20091221 Firefox/3.5.7 GTB6 எனக் கிடைத்தது. நீங்கள் ஒரு வெப்சைட்டில் உங்கள் கம்ப்யூட்டரை இணைக்கும் போது, இந்த பிரவுசர் சிக்னேச்சரை, உங்கள் பிரவுசர் அதற்கு அனுப்பும்.

    இதில் பிரவுசரின் பெயர், அதன் பதிப்பு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்ற தகவல்களைக் காணலாம்.


    கேள்வி: ஓப்பன் ஆபீஸ் என்பது மைக்ரோசாப்ட் தந்துள்ள ஆபீஸ் தொகுப்பிற்கு இணையானது என்று கூறுகிறார்கள். இது இலவசம் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? இலவசம் எனில் சிடியாகக் கிடைக்குமா? யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

    –என். செந்தில் நாயகம், மதுரை


    பதில்: மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது.

    இந்த அப்ளிகேஷன் தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே.

    ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

    டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html


    கேள்வி: மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போல ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களைப் பயன்படுத்த ஏதுவான புரோகிராம்களில் ஒன்றைக் கூறவும். இலவசமாகக் கிடைக்கும் இன்டர்நெட் வெப்சைட் முகவரியையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    –என். கல்யாணி, திண்டிவனம்


    பதில்: தண்டர்பேர்ட் என்னும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ் நிறைவேற்றும் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும்.

    பி.ஓ.பி. மற்றும் ஐமேப் இமெயில் அக்கவுண்ட்களை இதில் மேற்கொள்ளலாம். இதனை மொஸில்லாவின் தளத்திலிருந்து மேற்கொள்ளலாம். இதன் முகவரியைச் சரியாகத் தருவதென்றால், கீழேயுள்ளவற்றை தவறின்றி டைப் செய்திடவும்.

    http://www.mozilla.com/enUS/products/download. html? product=thunderbird2.0.0.14&os=win&lang=enUS


    கேள்வி: நார்டன் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, எனக்கு கம்ப்யூட்டர் வழங்கிய கடைக்காரர் வழங்கியுள்ளார். தான் பணம் கொடுத்து வாங்கி எனக்கு இலவசமாகத் தந்துள்ளதாகக் கூறுகிறார்.

    ஆனால் இது என் பெர்சனல் கம்ப்யூட்டர் செயல்படுவதனை மிகத் தாமதப்படுத்துவது போலத் தெரிகிறது. இதனையே என் நண்பர்களும் கூறுகின்றனர். மேலும் பணம் செலவழிக்காமல் பயன்படுத்தக் கூடிய நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்று பற்றி தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


    –கே. சுகுமாரன், கொடைரோடு


    பதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் நார்டன் ஆண்ட்டி வைரஸ் மிகச் சிறந்த ஒன்றாகும். இருந்தாலும் நீங்கள் கூறும் குற்றச் சாட்டினை இன்னும் பல வாசகர்களும் எழுதி உள்ளனர்.

    இதற்குப் பதிலாக எனில் ஏ.வி.ஜி. நிறுவனம் தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.

    அண்மையில் வெளி வந்த பதிப்பில் ஆண்ட்டி ஸ்பைவேர் மற்றும் ஆண்ட்டி ரூட்கிட் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

    இவை தவிர இன்னும் சில வசதிகளும் உள்ளன. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avg.com/ inen//downloadavgantivirusfree#tba2


    கேள்வி: என்னுடைய பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கி ஓராண்டு கழிந்த நிலையில், அதில் உள்ள சிடி/டிவிடி ட்ரேயின் கதவு, எஜெக்ட் பட்டனை அழுத்தினால் திறக்க மறுக்கிறது. வாரண்டி முடிந்து விட்டதால், ரிப்பேர் செய்திட அதிகம் கேட்கும் வாய்ப்பு உள்ளது.

    வந்து போகவே ரூ.300 கட்டாயம் என்கின்றனர். ஒவ்வொரு முறையும் மை கம்ப்யூட்டர் சென்று, சிடி ஐகானில் கிளிக் செய்து அதில் கிடைக்கும் எஜெக்ட் பிரிவில் என்டர் செய்து, ட்ரே மூடியைத் திறக்கிறேன். இதற்கு வேறு வழி உள்ளதா? தயவு செய்து உதவவும்.


    –டி.புத்திசிகாமணி, மேலூர்


    பதில்: இது போல சில சிக்கல்களில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் எழுதியுள்ளபடி வந்து போக ரூ.300, பின் பழுது பார்க்க சில நூறு என்றால், நாம் பழுது பார்ப்பதைத் தள்ளித்தான் போடுவோம். சரி, பிரச்னைக்கு வருவோம். மை கம்ப்யூட்டரில் உள்ள எஜெக்ட் அழுத்தி உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் உங்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

    ஏனென்றால், பலருக்கு இது பற்றிக் கூடத் தெரியாது.
    உங்கள் தேவையை மனதில் கொண்டு இணையத்தில் தேடியபோது அருமையான ஒரு புரோகிராம் குறித்த தகவல் கிடைத்தது.

    அதன் பெயர், சொன்னால் நம்பமாட்டீர்கள், Eject CD. உங்களுக்காகவே அந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டது போல உள்ளது.

    இதனைத் தரும் தளத்தின் பெயர் தான் சற்று நீளம். http://forums.overclockersclub.com /index.php?s= 6abe97fda39 274f8d93322c52dce 8902&act=attach&type= post&id= 9952 பிரவுசரில் சரியாக டைப் செய்து என்டர் தட்டவும்.(*அல்லது http://www.snapfiles.com/get/hotkeycd.html )



    இந்த புரோகிராம் பைல் ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்து புரோகிராம் கிடைத்தவுடன் இயக்கி, ஸ்டார்ட் மெனு மீதாக பின் அப்பில் வைத்துக் கொள்ளவும் அல்லது குயிக் லாஞ்ச் பாரில் வைத்துக் கொள்ளலாம். இதில் சிங்கிள் கிளிக் செய்தால் போதும். சிடி ட்ரே தள்ளிக் கொண்டு வெளியே வரும்.


    கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து கிறேன். இதன் மூலம் பைல்களை டவுண்லோட் செய்கையில் ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் இருந்து மட்டுமே டவுண்லோட் செய்திட முடிகிறது. என்னிடம் அதிவேக இணைய இணைப்பு இருப்பதால், கூடுதலான தளங்களிலிருந்து டவுண்லோட் செய்திட முடியுமா? அதற்கான வழி என்ன?

    –டி.தினேஷ் ராஜா, புதுச்சேரி


    பதில்: உங்களுக்கு ஒன்று தெரியுமா தினேஷ்! இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் மட்டுமே, ஒரே நேரத்தில் இரண்டு தளங்களிலிருந்து பைல் டவுண்லோட் செய்திட அனுமதி அளிக்கிறது. நீங்கள் இன்னும் வேண்டும் என்கிறீர்கள். பரவாயில்லை.

    பயர்பாக்ஸ் அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்திடுங்கள்.

    அடுத்து உங்களுக்குக் கிடைக்கும் விண்டோவில் network.http.maxpersistentconnectionsperserver என்ற வரியில் டபுள் கிளிக் செய்திடுங்கள்.

    இப்போது கிடைக்கும் பாக்ஸில் நீங்கள் எத்தனை தளங்களிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட விரும்புகிறீர்கள் என்ற வேல்யு கொடுக்க வேண்டியதிருக்கும். கொடுக்கவும். ஒரேயடியாக மிக அதிகமாகக் கொடுத்தால், பிரச்னைக்குள்ளாகலாம். ஓகே கிளிக் செய்து, பயர்பாக்ஸை மீண்டும் இயக்கி, பின் டவுண்லோட் செய்து பார்க்கவும்.

    நன்றி.தினமலர்.

  10. #58
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    பிப்ரவரி 28,2010

    கேள்வி: கம்ப்யூட்டரில் டயலாக் பாக்ஸ், வேல்யூ பாக்ஸ், எர்ரர் மெசேஜ் பாக்ஸ் கேள்விப் பட்டுள்ளேன். அலர்ட் பாக்ஸ் என்பது என்ன? இதில் என்ன மெசேஜ் அல்லது அறிவிப்பு கிடைக்கும். நாம் பதிலளிக்க வேண்டியதிருக்குமா?

    –ஆர். புவனேஸ்வரி, பொள்ளாச்சி


    பதில்: நீங்கள் குறிப்பிட்ட பாக்ஸ் போலவே தான் இதுவும் கிடைக்கும்.

    இதனை நீங்கள் பலமுறை ஸ்கிரீனில் பெற்றிருப்பீர்கள். கம்ப்யூட்டரில் வேலை மேற்கொண்டிருக்கையில் நீங்கள் மேற்கொள்ளப் போகும் பணியின் தன்மையை நீங்கள் உணர்ந்துதான் மேற்கொள்கிறீர்களா என்பதனை, இந்த அலர்ட் பாக்ஸ் உறுதிப்படுத்திக் கொள்ளும்.

    எடுத்துக் காட்டாக, ஒரு பைலை அழிக்க முயற்சிக்கையில், இது நீக்கப்பட்டு ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும். அந்த வேலையைத் தான் மேற்கொள்கிறீர்களா? என்று கேட்டு உங்களை யெஸ் அல்லது நோ விடை கேட்டு ஒரு பெட்டி கிடைக்கும்.

    அதுதான் அலர்ட் பாக்ஸ். அதே போல ரீசைக்கிள் பின்னிலிருந்து பைலை நீக்குகையில் நிரந்தரமாக பைல் நீக்கப்படவுள்ளது. செய்திடவா? என்ற செய்தியுடன் ஒரு பாக்ஸ் கிடைக்கிறதே, அதுதான் அலர்ட் பாக்ஸ்.

    கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்தினால், அது கீழேயுள்ள செல்லுக்குச் செல்லாமல், மேலே உள்ள செல்லுக்குச் செல்கிறது. இதனை எப்படி மாற்றலாம்?

    \–நீ. ஸ்ரீவதனா, கடலூர்


    பதில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்துகையில் நீங்கள் விரும்பும் திசையில் கர்சர் செல்லும்படி மாற்றும் வழியை செட் செய்திடலாம். Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும்.

    எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும். இதில் Edit என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும். இங்கு Move Selection after Enter என்பதனைக் காணவும்.

    அங்கு கிடைக்கும் ட்ராப் டவுண் (Drop Down) மெனுவினைப் பெற்று அதில் ஈணிதீண என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.


    கேள்வி: பைல்களின் பார்மட்டை மாற்ற புரோகிராம் களைப் பயன்படுத்தாமல் முடியுமா? ஏனென்றால் இன்டர்நெட்டில் கிடைக்கும் புரோகிராம்கள் எல்லாம் சில நாட்களில் பணம் டாலரில் கட்டச் சொல்கின்றனர்.

    எனக்குப் பெரும்பாலும் பல வகை பைல்களை பி.டி.எப். ஆகவும், பி.டி.எப். லிருந்து அதன் சோர்ஸ் பைலாகவும் மாற்ற வேண்டியுள்ளது.

    – டாக்டர் டி. வித்யா கார்த்திகா, மதுரை


    பதில்: பாடுபட்டு சாப்ட்வேர் தயாரித்தவர்கள், அதனைப் பயன்படுத்துவோரிடமிருந்து கட்டணம் செலுத்துங்கள் என்று கேட்பதில் தவறில்லை. உங்களின் நிலையும் தேவையும் நன்றாகப் புரிகிறது.

    பைல்களின் பார்மட் பல வேளைகளில் நமக்கு பிரச்னை கொடுக்கும். ஒரு பார்மட்டிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்ற முடியாது. மாற்றினால் தான் அவற்றை இயக்க முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்போம்.

    இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களையோ, அதனை இயக்கக் கூடிய புரோகிராம்களையோ தேடி அலைவோம். இந்த சிக்கலைத் தீர்க்க http://www.cometdocs.com/ என்ற தளம் உதவுகிறது. இந்த பார்மட் மாற்றித் தரும் தளத்திற்கு முதலில் செல்லுங்கள்.

    அங்கு சென்ற பின் பார்மட் மாற்ற வேண்டிய பைலை அந்த தளத்தில் அப்லோட் செய்துவிடவும். எந்த பார்மட் மாற்றம் தேவை எனக் குறிக்க வேண்டும். பின் பார்மட் மாற்றப்பட்ட பைல், உங்கள் கம்ப்யூட்டரில் எந்த டிரைவில் வந்து சேர வேண்டும் என்பதனை அமைத் திடுங்கள்.

    பின் நீங்கள் குறிப்பிடும் இமெயிலுக்கு, பார்மட் மாற்றப்பட்ட பைல் அனுப்பப்படும்.
    பொதுவாக பி.டி.எப். பைலை அதன் சோர்ஸ் (வேர்ட், பிரசன்டேஷன், எக்ஸெல்) பார்மட்டிற்கு மாற்றவே எண்ணுவோம்.

    இந்த பார்மட் மாற்றும் புரோகிராம், பலவகையான BMP, JPG, GIF, XLS, html, PPS, SXI, SXM, PPT) பார்மட்களை பி.டி.எப். பார்மட்டுக்கும், அதிலிருந்து அதன் ஒரிஜினல் பார்மட்டுக்கும் மாற்றுகிறது.


    கேள்வி: நான் தமிழ் பைபிள் தளம் ஒன்றில் பைபிள் வாசகங்களைப் பார்த்தேன். அது எழுத்துக்கள் மற்றும் எண்களாகவே தெரிகின்றன. அந்த தளத்திலேயே தமிழ் பைபிள் (Tamil Bible) என்று ஒரு பாண்ட் இருந்தது.

    அதனை டவுண்லோட் செய்திட போட்டிருந்தது. செய்தேன். அந்த பாண்ட் என் கம்ப்யூட்டரில் டெஸ்க் டாப்பில் பைலாக உள்ளது. அதன் பின்னும் அந்த தளம் சென்றால், அப்படியே புரியாத வகையில் தான் உள்ளது. என்ன செய்திட வேண்டும் என விளக்கவும்.


    –வி.சாமுண்டீஸ்வரி, சென்னை


    பதில்: பைபிள் படிப்பதில் உள்ள உங்களின் பக்திக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்.

    நீங்கள் எழுத்து வகை பைலை டவுண்லோட் செய்து டெஸ்க்டாப்பில் வைத்தால் மட்டும் போதாது.

    அதனை விண்டோஸ் டைரக்டரி யில் உள்ள பாண்ட்ஸ் போல்டரில் போட்டு இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

    முதலில் டெஸ்க்டாப்பில் உள்ள பைலைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ சி (Ctrl+C) கொடுத்து காப்பி செய்து கொள்ளவும். உங்களுடைய சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என்பதால்,

    சி (C டிரைவில் விண்டோஸ் (Windows) என்பதில் கிளிக் செய்து, பின் பாண்ட்ஸ் (Fonts) என்னும் போல்டரில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து எழுத்து வகை பைல்களும் காட்டப்பட்டும்.

    காலியாக உள்ள இடத்தில் கர்சரை வைத்து, ரைட் கிளிக் செய்து கிடைக் கும் மெனுவில் பேஸ்ட் (Paste) என்னும் பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் டெஸ்க் டாப்பில் வைத்துள்ள தமிழ் பைபிள் என்னும் பாண்ட் இங்கு தானாக இன்ஸ்டால் செய்யப்படும்.

    இனி அந்த தளம் சென்று பாருங்கள். பைபிள் தமிழில் படிக்கக் கூடிய வகையில் கிடைக்கும்.


    கேள்வி: என் நண்பர் எனக்கு தமிழ் என்டர் செய்வதற்குத் தேவையான புரோகிராம் பைல் கொடுத்துள்ளார். இதற்கு ஷார்ட் கட் கீ ஒன்றை அமைக்க என்ன செய்திட வேண்டும்? நன்றி.

    –ஆ. முல்லை ராணி, அவனியாபுரம், மதுரை


    பதில்: அந்த புரோகிராமிற்கான எக்ஸ்கியூட்டபிள் பைல், எந்த இடத்தில் உள்ளதோ, அங்கு சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

    பின் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சிறிய விண்டோவில் மூன்று டேப்கள் இருக்கும்.

    இதில் ஷார்ட் கட் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் இரண்டாவது பிரிவில் ஷார்ட்கட் கீ என்று ஒரு வரி இருக்கும். இதன் அருகே இருக்கும் பாக்ஸில் உங்கள் கர்சரை நிறுத்தவும்.

    இப்போது நீங்கள் எந்த கீகளை அழுத்தினால், இந்த புரோகிராம் இயக்கத்திற்கு வர வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த கீகளை இங்கு டைப் செய்திடவும்.

    எடுத்துக் காட்டாக Ctrl+Shft+T என அமைக்கலாம். பின் அப்ளை (Apply) என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அப்படியும் வராமல் இருந்தால்,

    இந்த கீகள் வேறு ஒரு புரோகிராமிற்கு அல்லது செயல்பாட்டிற்கு ஏற்கனவே அமைக்கப் பட்டுவிட்டன என்று பொருள். மீண்டும் சென்று அங்கு வேறு கீ தொகுப்பினை உருவாக்கவும்.


    கேள்வி: விர்ச்சுவல் கீ போர்டு என்பது என்ன? பணம் சார்ந்த விவகாரங்களுக்குக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, அதனைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவது ஏன்?

    –என். கே. சாம்பசிவம், பெருங்களத்தூர்


    பதில்: விர்ச்சுவல் கீ போர்டு என்பது புரோகிராம் ஒன்றினால் அல்லது இணைய தளங்களினால் திரையில் காட்டப்படும் கீ போர்டு.

    கீ போர்டு மூலம் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களை அமைத்தால், நம் கம்ப்யூட்டரில் நம் செயல்பாடுகளை வேவு பார்க்கவும்,

    இது போல பாஸ்வேர்ட்களைத் திருடவும் அனுப்பப்பட்ட புரோகிராம் களால் அவற்றைத் திருட முடியாது. ஏனென்றால் கீ போர்டு இல்லாமல், மவுஸின் கர்சரைக் கொண்டு விர்ச்சுவல் கீ போர்டினை இயக்குகிறோம்.

    மேலும் விர்ச்சுவல் கீ போர்டில், அவ்வப்போது கீகள் மாறி கிடைக்கும். எனவே விர்ச்சுவல் கீ போர்டு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்துவதே நல்லது.


    கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள டேட் அண்ட் டைம் எப்படி திருத்தினாலும் 01 ஜனவரி 1999 என்றே காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்?

    -இரா.வெங்கடேசன், அரியாங்குப்பம், புதுச்சேரி


    பதில்: உங்களுடய மதர்போர்டில் இதற்கென உள்ள சிறிய வட்ட வடிவிலான சீமாஸ் பேட்டரி காலாவதியாகி, செயல் இழந்துவிட்டது. இதனை மாற்ற வேண்டும்.

    நீங்கள் செட் செய்த நேரம் மற்றும் நாள், கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன் தொடர்ந்து அப்படியே இருக்க சிறிய அளவில் மின்சக்தி தேவை.

    அதனை இந்த பேட்டரி தான் தருகிறது. இது செயல் இழந்து போனதால், கம்ப்யூட்டர் தொடங்கியவுடன் நீங்கள் குறிப்பிடும் நாளைக் காட்டுகிறது. மாற்றிவிட்டால் சரியாகிவிடும்.

    நன்றி.தினமலர்.

  11. #59
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    மார்ச் 07,2010

    கேள்வி: சாலிட் ஸ்டேட் டிரைவ் தற்போது புழக்கத்தில் உள்ளதா? அதன் விலை எந்த அளவிற்கு ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். இது கூடுதல் நன்மை தருமா?

    –ஆர். தினேஷ் ராஜ், கோயம்புத்தூர்


    பதில்: டேட்டா ஸ்டோரேஜ் பிரிவில் அண்மைக் காலத்திய கண்டுபிடிப்பு சாலிட் ஸ்டேட் டிரைவ். தற்போது ஒரு சில கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இது இடம் பெற்று வருகிறது.

    விலை ஹார்ட் டிஸ்க்கைக் காட்டிலும் ஒரு பங்கு கூடுதலாக இருக்கும். அளவில் சிறியதாகவும், கொள்ளளவில் கூடுதலாகவும் உள்ள இந்த டிரைவில் நகரும் பாகங்கள் இல்லை என்பதால், தேய்மானம் இருக்காது.

    அதனால் நீண்ட நாள் உழைக்கும். வர்த்தக ரீதியாகவும், ஜனரீதியாகவும் இந்த டிஸ்க் இடம் பிடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

    அப்போது விலை குறையும். உங்களுக்கு இன்னொரு தகவல் சொல்லட்டுமா! தோஷிபா நிறுவனமும், ஜப்பான் கெய்யோ பல்கலைக் கழகமும் இணைந்து ஒரு ஸ்டாம்ப் சைஸில், சாலிட் ஸ்டேட் டிரைவ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

    இதனை மொபைல் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்கள்,மீடியா பிளேயர்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த வடிவமைப்பிற்கு வரும் 2012 ஆம் ஆண்டுக்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கின்றனர்.


    கேள்வி: எனக்கு சில சொற்களின் எழுத்தளவை ஒரு பாய்ண்ட்டுக்கும் குறைவாக அதிகரிக்கவோ, குறைக்கவோ வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும்?

    –பாரிவள்ளல், சென்னை


    பதில்: அதிகரிக்கவோ குறைக்கவோ வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்த பின், பாண்ட் விண்டோ சென்று எழுத்துருவின் பெயர் உள்ள கட்டம் அருகே, அதன் அளவு எண்களால் கொடுக்கப்பட்டிருக்கும்.

    அதில் கர்சரைக் கொண்டு சென்று 12 என்பதை 12.5 என மாற்றவும். வேறு ஷார்ட் கட் இல்லை. Ctrl+] அழுத்தினால் நீங்கள் கூறுவது போல ஒரு பாய்ண்ட் பெரிதாகும்.


    கேள்வி: நான் என்னுடைய பெயரில் இமெயில் அக்கவுண்ட் தொடங்கி, மெயில்களைப் பெற்று வருகிறேன். ஆனால் அட்டாச்டு பைல்களை டவுண்லோட் செய்தால், அவற்றைப் பின்னர் திறந்து பார்க்க எங்கே உள்ளது என்று தெரியவில்லை. மை டாகுமெண்ட்ஸில் அல்லது மை டவுண்லோடில் இல்லை. நான் தண்டர்பேர்ட் பயன்படுத்துகிறேன்.

    –சி. கார்த்திக், மதுரை


    பதில்: வழக்கமாக புதியவர்களுக்கு வரும் குழப்பமாகும். நீங்கள் அப்படியே டவுண்லோட் செய்து சேவ் செய்யக் கொடுத்தால், அது விண்டோஸ் டைரக்டரியில் உள்ள ஒரு டெம்பரரி டைரக்டரியில் சென்று அமர்ந்து கொள்ளும்.


    இந்த டைரக்டரியைத் தேடி எங்கு இருக்கிறது என்று அறிவது சற்று சிரமமான காரியம் தான். ஆனால் தண்டர்பேர்டில், குறிப்பிட்ட இமெயிலைத் திறந்தால், அட்டாச்டு பைலின் வகையைப் பொறுத்து, அதற்கான ஐகான் ஒன்று கிடைக்கும். அதனைக் கிளிக் செய்தால் பைல் திறக்கப்படும்.


    பின் நீங்கள் Save As என்று கொடுத்தால், அது எந்த டைரக்டரியில் உள்ளதோ அது காட்டப்படும்.


    இதற்குப் பதிலாக, அட்டாச்டு பைலை டவுண்லோட் செய்கையில் கிடைக்கும் விண்டோவில் சேவ் என்பதற்குப் பதிலாக சேவ் அஸ் கொடுத்துப் பார்க்கவும். எந்த டைரக்டரியில் சேவ் செய்திட வேண்டும் என்பதனையும், பைலுக்கு என்ன பெயர் கொடுக்க வேண்டும் என்பதனை யும் நீங்களே முடிவு செய்திடலாம்.


    கேள்வி: என் எக்ஸெல் 2007 ஒர்க் புக்கில் உள்ள செல் கட்டங்களின் பார்டர் கோடுகளை வண்ணத்தில் அமைக்க முடியுமா? எனக்கு வந்த ஒரு ஒர்க்புக்கில் அவ்வாறு இருந்தது? அதற்கான வழி என்ன?

    –டாக்டர் எஸ். முத்துக்குமார், திருவண்ணாமலை


    பதில்: தாராளமாக மாற்றலாம் டாக்டர். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். Office பட்டனில் கிளிக் செய்திடவும். அதன்பின் Excel Option என்பதில் கிளிக் செய்யவும்.

    எக்ஸெல் உடனே எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டும். இந்த பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். Show Gridlines என்ற செக் பாக்ஸ் கிடைக்கும் வரை இதில் ஸ்குரோல் செய்து செல்லவும். இதனை தேர்ந்தெடுக் கவும்.

    இதில் Gridline Colorஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் உங்களுக்குப் பிரியமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வேளயில் Show Gridlines என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

    பின் ஓகே கிளிக் செய்திடவும். ஆபீஸ் 2007க்கு முந்தைய தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும். Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும்.

    Options dialog பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அதே கட்டத்தில் Color ட்ராப் டவுண் பேலட்டைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

    இங்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். Gridlines என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


    கேள்வி: விண்டோஸ் கிளிப் போர்டில் ஒரு ஐட்டம் மட்டுமே காப்பி செய்திட முடிகிறது. இந்த வரையறையை நீக்கி அதிக ஐட்டங்கள் காப்பி செய்து, பின் அதிலிருந்து தேவையானதை எடுத்து பேஸ்ட் செய்திட முடியுமா?

    –ஆர். ராதா கணேஷ், செஞ்சி


    பதில்: விண்டோஸ் கிளிப் போர்டின் வரையறையை மீற முடியாது. ஒரு நேரத்தில் ஒரு ஆப்ஜெக்டைத்தான் காப்பி செய்து வைத்துக் கொள்ளும். அடுத்த ஆப்ஜெக்ட் காப்பி செய்திடுகையில், முதலில் காப்பி செய்தது நீக்கப்படும்.

    ஆனால் உங்கள் தேவையை நிறைவேற்ற பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதில் ஒன்றை இங்கு பார்க்கலாம். அந்த புரோகிராமின் பெயர் Winklipper.. இந்த புரோகிராமினை http://sourceforge.net/projects/ winklipper/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

    இது ஒருஸிப் பைலாகக் கிடைக்கும். இதனை விர்த்து ஒரு புரோகிராம் பைலாக வைத்துக் கொள்ளலாம். அல்லது யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.

    இந்த புரோகிராமினை இயக்கியவுடன் இது விண்டோஸ் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு நீங்கள் காப்பி செய்வதனைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். சிஸ்டம் ட்ரேயில் உள்ள இதன் ஐகானைக் கிளிக் செய்து, விண் கிளிப்பரில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்து கொள்ளுங்கள்.

    ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்ஜெக்ட் காப்பி செய்யப்பட்டிருந்தால், இந்த ஐகானில் கிளிக் செய்திடவும். நீங்கள் காப்பி செய்த வரிசைப்படி அவை காட்டப்படும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்தால், அது விண்டோஸ் கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அதனை வழக்கம்போல பேஸ்ட் செய்திடலாம்.

    இது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் செயல்படுகிறது.


    கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். டிபிராக் செய்வதற்கு, விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் புரோகிராமைக் காட்டிலும், பல கூடுதல் பயனுள்ள டிபிராக் புரோகிராம்கள் உள்ளதாகக் கேள்விப் பட்டேன். அவற்றில் ஒன்று குறித்து தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    –என். தேவராஜ், மே.நி.பள்ளி ஆசிரியர், காரைக்குடி.


    பதில்: ஒன்றென்ன, பல கூறுகிறேன்.1.Defraggler: இந்த புரோகிராமினை http://www.defraggler.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

    இது டிரைவ்களை மட்டுமின்றி, மிகச் சிறிய பைலைக் கூட டிபிராக் செய்து சரியான வரிசையில் பதிவு செய்திடும்.


    2. அடுத்தது JK Defrag. இதனை http://www.kessels.com/ JK Defrag/ என்ற தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.


    3. Contig: இதனை பைல்களைத் தனித்தனியே டிபிராக் செய்திட மட்டும் பயன்படுத்தலாம். தள முகவரி: http://www.microsoft.com/technet/sys...sk/Contig.mspx


    4. Auslogics Disk Defrag:: இந்த புரோகிராம் தனியே இயங்காது. விண்டோஸ் டிபிராக் செயல்பாட்டுடன் இணைந்து கூடுதல் வசதிகளைத் தரும்.

    இதனை http://www.auslogics.com/diskdefrag என்ற தளத்தில் பெற்றுக் கொள்க.


    5. SpeedDefrag: இந்த புரோகிராம், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து, இந்த புரோகிராமை மட்டும் கம்ப்யூட்டரின் மெமரியில் கொண்டு சென்று டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. இதனை http://www.vcsoftwares.com/ Defrag.html என்ற முகவரியில் பெறலாம்.

    நன்றி தினமலர்.

  12. #60
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    மார்ச் 14,2010

    கேள்வி: படம் எதனையாவது காப்பி செய்து ஒட்ட முயற்சிக்கையில், அதன் மேலேயே காப்பி பேஸ்ட் ஆகிறது. ஏன் நாம் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்ட மறுக்கிறது. இதனை ஒரே கீ செயல்பாட்டில் மற்ற டெக்ஸ்ட் ஒட்டுவது போல ஒட்ட முடியாதா?


    –டி.சிவராஜ் குமார், கோவை


    பதில்:பைல் ஒன்றில் படம் அல்லது வேறு ஏதேனும் ஆப்ஜெக்ட் ஒன்றின் காப்பியை இன்னொரு இடத்தில் அதே பைலில் பேஸ்ட் செய்திட விரும்புகிறீர்களா? என்ன செய்கிறீர்கள்?

    முதலில் ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். கண்ட்ரோல்+சி (Ctrl+C)அழுத்தி காப்பி செய்கிறீர்கள். அல்லது எடிட்(Edit)மெனு சென்று அதில் காப்பி (Copy) கிளிக் செய்கிறீர்கள். பின் ஒட்ட வேண்டிய இடத்திற்குச் சென்று, கர்சரை வைத்து அங்கு பேஸ்ட் (Ctrl+V / Paste in Edit menu) கமாண்ட் கொடுக்கிறீர்கள். என்ன நடக்கிறது?

    நீங்கள் காப்பி செய்த படத்தின் நகல், ஒரிஜினல் இருக்கும் இடத்திலேயே பேஸ்ட் செய்யப்படுகிறது. சரியாக அதன் மேல் பேஸ்ட் செய்யப்படாமல், இதோ இங்கு தான் காப்பி உள்ளது என்று காட்டும் வகையில் சிறிது இடம் விட்டு பேஸ்ட் செய்யப்படுகிறது.

    இதன்பின் நாம் மவுஸின் கர்சரைக் கொண்டு அதனை இழுத்து வந்து பேஸ்ட் செய்திட வேண்டிய இடத்தில் அமைக்கிறோம். இந்த இழு பறி இல்லாமல் ஒரே கீ அழுத்தலில், ஒட்ட வேண்டிய இடத்திற்கு படத்தைக் கொண்டு வரும் வழி ஒன்று உள்ளது.


    முதலில் காப்பி செய்ய வேண்டிய ஆப்ஜெக்ட் அல்லது படத்தை தேர்ந்தெடுக்கவும். அடுத்து கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொள்ளவும். பின் ஆப்ஜெக்ட் மீது கிளிக் செய்து அப்படியே எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு இழுத்து வந்து விடவும்.

    பேஸ்ட் ஆகிவிடும். அய்யோ! ஒரிஜினல் அல்லவா இங்கு வந்துவிட்டது என்ற பதற்றம் வேண்டாம். நகல் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதுதான் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் ஆப்ஜெக்ட் அந்த இடத்திலேயே அப்படியே இருக்கும்.


    கேள்வி: நான் எக்ஸ்பி மற்றும் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். அதில் நெட்டு ரூலர் இல்லை. என்ன செட் செய்தாலும் கிடைக்கவில்லை. வியூ மெனு சென்று பலமுறை ரூலர் டிக் செய்து பார்த்துவிட்டேன். பார்மட் மெனுவில் ஏதாவது செய்திட வேண்டுமா? வழி காட்டவும்.

    –என்.குமாரவேல், மேட்டுப் பாளையம்


    பதில்: இந்த சூழ்நிலை பலருக்கு ஏற்படுகிறது. வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் இருந்து இதனை அறிந்திருக்கிறேன். இதற்கான பதிலும் சில மாதங்களுக்கு ஒருமுறை இந்த பகுதியில் வந்திருக்கிறது.

    முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பிரிண்ட் லே அவுட் என்ற வகையில் தோற்றம் (View) அமைந்தால் மட்டுமே நெட்டு வாக்கிலான ரூலர் தெரியும். எனவே View மெனு சென்று Print Lay out பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

    Vertical Ruler ட்டிங் Options விண்டோவில் தரப்பட்டுள்ளது. அதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். Tools மெனு கிளிக் செய்து, Options பிரிவு தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில் View டேப் செல்லவும்.

    இந்த விண்டோவில் Print Lay outOptions என்று மூன்றாவதாக ஒரு பிரிவு காட்டப்படும். அதில் Vertical Ruler (Print View only) என்று இருப்பதைத் தேர்ந்தெடுத்து Oஓ கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் வேர்டில் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், வெர்டிகல் ரூலர் உங்களுக்குக் கிடைக்கும்.


    கேள்வி: ஆண்ட்டி வைரஸ் இலவச புரோகிராம்கள் பலவற்றைப் பட்டியலிடுகிறீர்கள். நீங்கள் சோதனை செய்து பார்த்த புரோகிராம்களின் பட்டியலை, அவற்றின் நிறை குறைகளுடன் சுருக்கமாகத் தரவும்.

    –சி. நல்லசிவம், சென்னை


    பதில்: சரியான கேள்வி. பட்டியல் மட்டும் போட்டால் சரியல்ல; பழகிப் பார்த்து சொல்லுங்க என்று கேட்பது நியாயமான கேள்வி தான்.

    என்னுடைய மற்றும் என் நண்பர்களின் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு, நல்லவை என்று சொல்லப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இங்கு பார்க்கலாம். அவை எதில் சிறப்பாக உள்ளன. எந்த எதிர்பார்ப்பினை செயல்படுத்துவதில் சுணக்கமாய் உள்ளன என்று பார்ப்போம்.


    Avast Home Edition: இது மால்வேர் தொகுப்புகளைக் கண்டறிவதில் சிறப்பாய் இயங்குகிறது. இதனுடைய இன்டர்பேஸ் பயன்படுத்துபவர்களைச் சற்றுக் குழப்பமடையச் செய்திடும்.


    AntiVirus Free Edition 8.5: பெர்சனல் கம்ப்யூட்டர்களில் வைரஸ்கள் பரவாமல் தடுப்பூசி போட்டது போல பாதுகாக்கும் தன்மை உடையது. ஸ்கேன் செய்யச் சொன்னால் கொஞ்சம் மெதுவாகச் செயல்படும். வைரஸ் பாய வருகிறது என்றால், அது எங்கிருந்து வந்தாலும் தடுத்து செய்தி தரும்.


    Avira Anti Virus Personal:பாதித்துள்ள வைரஸ்களை மிகச் சிறப்பாகக் கண்டறியும் தன்மை கொண்டது. அவற்றைக் கம்ப்யூட்டரிலிருந்து களைவதிலும் தனித்தன்மை கொண்டது.

    ஆனால் இதன் இன்டர்பேஸ் சற்று குழப்பமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், முதன் முதலில் இதனைப் பயன்படுத்துபவர்கள் சற்று தடுமாறுவார்கள். ஸ்கேன் செய்வதில் வேகம் மற்றும் முழுமையான பாதுகாப்பு ஆகிய இரண்டு செயல்களுக்காகப் பன்னாட்டளவில் பெயர் பெற்றது.


    Microsoft Security Essentials (Beta): தொற்றிக் கொண்ட வைரஸ்களைக் களைவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. சற்று வேகம் குறைவு எனலாம். சிறப்பான புரோகிராம் என்றுதான் சொல்ல வேண்டும்.


    கேள்வி: வேர்டில் டேபிள் ஒன்று உருவாக்கினேன். அது சற்று நீளமாக இருக்கிறது. இதனால், அதில் உள்ள தகவல்கள் அர்த்தமில்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இதனை எப்படி இரண்டு டேபிளாகப் பிரிப்பது?

    –என். சந்திரக்குமார், கோயம்புத்தூர்


    பதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைப்பதில் நமக்குப் பல வசதிகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று டேபிளைப் பிரிப்பது. நீங்கள் அமைத்திடும் டேபிள் மிகப் பெரிதாகச் செல்கிறதா? இதில் ஒரு பகுதியை டாகுமெண்ட்டின் இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணுகிறீர்களா? கவலையே வேண்டாம்.


    எந்த படுக்கை வரிசையிலிருந்து புதிய டேபிள் உருவாக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அந்த வரிசையின் முதல் செல்லுக்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.

    பின் டேபிள் மெனு சென்று கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அந்த வரிசையிலிருந்து புதிய டேபிள் ஒன்று தரப்படும். இந்த இரண்டு டேபிள்களையும் தனித்தனி டேபிள்களாகப் பயன்படுத்தலாம்.


    கேள்வி: என்னிடம் உள்ள பி.டி.எப்.டாகுமெண்ட்டில் காப்பி செய்ய முயற்சிக்கையில் கர்சர் சிறிய கை போல ஆகிறது. நான் மவுஸ் கிளிக் செய்கையில் அது மூடி விரிகிறது. எப்படி டெக்ஸ்ட் செலக்ட் செய்து காப்பி செய்வது?

    டி.இந்துமதி, பொள்ளாச்சி


    பதில்: பி.டி.எப். டாகுமெண்ட் ரீடரில் காட்டப்படும் கை அடையாளம், உங்கள் டாகுமெண்ட்டைப் பிடித்து மேலும் கீழும் நகர்த்தத் தந்துள்ள வசதியாகும். டெக்ஸ்ட் காப்பி செய்திட, அந்த கர்சரை Select Text tool க மாற்ற வேண்டும். டூல்பாரில் கை ஐகானை அடுத்து பார்த்தால், டெக்ஸ்ட் கர்சர் கிடைக்கும்.

    இதில் பாய்ண்ட்டர் ஆரோ தெரியும். இதுதான் உங்கள் டெக்ஸ்ட் டூல். இதனைத் தேர்ந்தெடுத்து பி.டி.எப். பக்கத்தில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் காப்பி செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி பி.டி.எப். டாகுமெண்ட்டில் உள்ள படங்களையும் செலக்ட் செய்திடலாம்.

    அதற்கு "Copy Image" என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.உங்களுடைய அடோப் ரீடர் தொகுப்பு இந்த வசதியைக் கொண்டிருக்காவிட்டால், லேட்டஸ்ட் அப்டேட்டட் பதிப்பை இறக்கிப் பதியவும். இது முற்றிலும் இலவசமே. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய வெப்சைட் முகவரி:http://get.adobe.com/reader/

    நன்றி,தினமலர்.

Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •