Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 104

Thread: கணினி வினா(டி) விடை.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0

    கணினி வினா(டி) விடை.

    சிஸ்டம் கிராஷ் ஆகி பைல்கள் தொலையக் கூடாது என்பதற்காக ஒரே பைலை C:, D:, E: என எல்லா டிரைவ்களிலும் பேக்கப் எடுத்து வருகிறேன். இப்போது இந்த டூப்ளிகேட் பைல்களை அழிக்க நான் விரும்புகிறேன். ஏதேனும் இதற்கான சாப்ட்வேர் குறித்து சொல்லவும். அல்லது வேறு வழிகளைக் கூறவும்.
    -என்.ஜி. முருகன், ஊத்துக் கோட்டை

    உங்கள் முயற்சியும் திட்டமும் நல்லதுதான். ஆனால் டிஸ்க் ஸ்பேஸ் சுருங்குகையில் டூப்ளிகேட் பைல்களை நீக்கவே விரும்புவோம். பைல்களைப் பாதுகாக்க வேறு வழிகளையும் நீங்கள் பின்பற்றலாம்.

    இது குறித்து கம்ப்யூட்டர் மலரில் பல குறிப்புகள் தரப்பட்டுள்ளன. உங்களுக்கான இன்றைய கேள்விக்கான குறிப்பு. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் Double Killer என்ற இலவச சாப்ட்வேரை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்கள் எல்லாவற்றையும் அது கண்டுபிடித்து தரும். வேண்டியனவற்றை வைத்துவிட்டு தேவையற்றவற்றை நீங்கள் அழிக்கலாம். இந்த சாப்ட்வேரை www.download.com தளத்தில் இருந்து டவுண்லோடு செய்யுங்கள்.

    எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். எக்ஸ்புளோரர் மூலம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பைல்களைப் பார்க்கையில் C:/windows போல்டரின் கீழ் Prefetch என்ற போல்டர் உள்ளது. அதிலுள்ள பைல்கள் தேவையற்றவை, வைரஸ் பைல்களால் உருவானவை என்று எண்ணி அழித்தேன். வழக்கம்போல் சிஸ்டம் ஒர்க் ஆனது. ஆனால் மீண்டும் அவை உருவாகியுள்ளன. என்ன வகை வைரஸ் இதனை ஏற்படுத்துகிறது? எப்படி நீக்கலாம்?
    - தி. சிவசங்கரன், சென்னை

    இவையெல்லாம் விண்டோஸ் இயக்கம் வேகமாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்ட சிஸ்டம் பைல்கள். விண்டோஸ் எக்ஸ்பிதான் அந்த பைல்களை உருவாக்குகிறது. எனவே அந்த பைல்கள் இருந்துவிட்டு போகட்டும். மீறி நீங்கள் அழித்தால் அந்த பைல்களை விண்டோஸ் எக்ஸ்பியே பழையபடி உருவாக்கிவிடும்.


    எக்ஸெல் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். நாள், மாதம் குறித்து தகவல்கள் தந்துள்ளீர்கள். எனக்கு ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றை கொடுத்தால் அதற்கான கிழமை என்னவென்று செல்லில் தெரிய வேண்டும். இதற்கான பார்முலா என்ன?


    - கே. சுப்புலஷ்மி, கள்ளப்பாளையம்


    2009-வது அண்டு 3-வது மாதம், 30-ம் தேதி என்ன கிழமை எனத் தெரிய வேண்டுமானால் ஏதாவது செல்லில் =DATE(2009,03,30) என்ற பார்முலாவைக் கொடுங்கள். கிடைக்கிற விடையை ரைட்-கிளிக் செய்து Format Cells கட்டளையைத் தேர்வு செய்யுங்கள். Number டேபைக் கிளிக் செய்து அதிலுள்ள Custom என்பதை Categoryயின்கீழ் தேர்வு செய்யுங்கள். Type என்பதில் dddd என டைப் செய்து OK செய்யுங்கள். கிழமை தெரியும்.
    நன்றி:தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.30/03/2009
    Last edited by நூர்; 08-06-2009 at 10:46 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இரட்டைச் சேமிப்பை அகற்றும் விடயம் மிகவும் பயனுள்ளதே.

    எம்முடன் இதை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    கருத்திட்டமைக்கு நன்றி.
    -----------------------------
    நான் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். டிபால்ட்டாக Task Pane கிடைக்கிறது. இதனை மாற்ற முன்பு நீங்கள் எழுதியபடி Tools>Options கட்டளையைக் கொடுத்து Startup Task Pane என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டும் அது தெரிகிறது. ஏன்? இதனை முற்றிலுமாக நீக்க வழி என்ன?


    –எஸ்.சின்ன ராஜ், கோயம்புத்தூர்

    ஏன் மீண்டும் வருகிறது என்று புரியவில்லை. நீங்கள் செட் செய்த பின்னர் மீண்டும் அது வரக் கூடாது. இதனை நிரந்தரமாகத் தடுக்க ஒரு வழி உள்ளது. Start >Run கட்டளை கொடுத்து கிடைக்கும் பாக்ஸில் Regedit என்று டைப் செய்தால் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்திட முடியும். இப்போது ரெஜிஸ்ட்ரி கிடைத்தவுடன்


    HKEYCURRENTUSER/SOFTWARE/MICROSOFT/OFFICE/11.0/ COMMON/GENERAL என்ற கீயைத் தேடி அது இருக்குமிடம் கன்டு எடிட் செய்திடத் தயாராகுங்கள். இதன் வலது பக்கம் உள்ள பிரிவில் Do not dismiss File New Task Pane என்று இருப்பதைப் பார்க்கவும். அதில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். பின் அதற்கான மதிப்பு தரும் இடத்தில் 0 கொடுங்கள். இனி டாஸ்க் பேன் உங்களுக்குக் காட்டப்பட மாட்டாது.


    நான் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயாரித்தேன். இப்போது அருமையான சிறிய வீடியோ மூவி ஒன்று கிடைத்துள்ளது. இதனை அந்த பிரசன்டேஷனில் இணைத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும். எப்படி இணைப்பது என்று விளக்கவும்.


    –கே.சுரேஷ் குமார், திண்டுக்கல்.

    இதற்குப் பல வழிகள் உள்ளன சுரேஷ் குமார். உங்களுக்கு எது எளிதானது என்று பார்த்துப் பயன்படுத்தவும். Insert Movies and Sounds என்ற கட்டளை மூலம் இதனை நிறைவேற்றலாம். இதனைக் கொடுத்தவுடன் வீடியோவினைக் காட்ட விண்டோ ஒன்று காட்டப்படும்.

    விண்டோவில் கிளிக் செய்தால் வீடியோ இயங்கும். இந்த பிரசன்டேஷனை எடுத்து செல்கையில் அந்த வீடியோ கிளிப்பினையும் அதே போல்டரில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.

    அடுத்ததாக Insert Object என்ற கட்டளையைக் கொடுங்கள். கிடைக்கும் மெனுவில் Windows Media Player என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். இவ்வழியிலும் வீடியோவினை இயக்கலாம். Insert Object கட்டளையைக் கொடுத்து அதில் Windows Media Player என்பதைத் தேர்வு செய்வது பவர்பாயிண்ட் தரும் இரண்டாவது வழியாகும்.

    மீடியா பிளேயரை ரைட்-கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆப்ஜெக்டிற்கான கண்ட்ரோல்களை நீங்கள் கொண்டு வரலாம். Custom என்பதைக் கிளிக் செய்து வீடியோ பைலைத் தேர்வு செய்யலாம். வால்யூம் கண்ட்ரோல், ஸ்லைடர் பார் போன்றவற்றைக் கொண்டு வரவும், வீடியோவை பெரியதாக்கி முழுத் திறையில் வெளிப்படுத்தவும்,

    அடையாளப்படுத்தப்பட்ட வீடியோ காட்சிக்கு தாவவும் இந்த Insert Object வழி யைப் பயன்படுத்தலாம். இந்த வழிகளில் இணைக்கப்படும் வீடியோ காட்சிகள் ரியல் வீடியோ மற்றும் குயிக் டைம் வீடியோக்களுக்கு உகந்தவை அல்ல.

    ஆனால் இந்த வகை வீடியோ தான் இணைக்க வேண்டும் என்றால் Slide Show மெனுவின் கீழ் காணப்படும் Action Button வழியே சிறந்தது. பவர்பாயிண்டினுள் எந்த அப்ளிகேஷனையும் இயக்க Action Button உதவுமாதலால் அதைப் பயன்படுத்தி ரியல் வீடியோ அல்லது குயிக் டைம் பிளேயரை இயக்கிவிடலாம். Action Button கிளிக் செய்தால் பிளேயர் இயங்கி வீடியோ ஓட ஆரம்பிக்கும்.


    நான் பேஜ் மேக்கர் மற்றும் வேர்ட் தொகுப்புகளைப் பயன்படுத்துகிறேன். பேஜ் மேக்கரில் இன்ஸெர்ட் கீயை அழுத்தினால் காப்பி செய்து வைத்திருக்கும் டெக்ஸ்ட் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் வேர்டில் ஒட்டுவதில்லையே ஏன்? வேர்டில் இந்த செயல்பாடு இல்லையா?


    –கே. உதயகுமார், மதுரை


    நீங்கள் சொல்வது சரிதான். நானும் இதே போன்ற சூழ்நிலையைச் சந்தித்து இருக்கிறேன். வேர்டில் இதற்கு தனியே ஒரு செட்டிங்ஸ் அமைத்தால் தான் இன்ஸெர்ட் கீ அழுத்துகையில் டெக்ஸ்ட் ஒட்டப்படும். முதலில் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள்.

    அதில் Options என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் Edit டேபினைக் கிளிக் செய்திடவும். இங்கு "Use the INS Key for Paste" என்று இருக்கும்இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை இடவும்.

    இனி ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடிவிடவும். அடுத்து இன்ஸெர்ட் கீ அழுத்தும் போதெல்லாம் காப்பி செய்து வைத்த டெக்ஸ்ட் ஒட்டிக் கொள்ளும்.


    வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்று அமைத்தேன். இது டாகுமெண்ட்டின் இடது ஓரத்தில் அமைந்துள்ளது. இதனை நடுவில் கொண்டு வர முயற்சி எடுத்தால் சரியாக அமையவில்லை. எப்படிச் சரியாக நடுவில் கொண்டு வருவது?


    –க. சுப்பிரமணியம், நெய்வேலி


    எளிதாக இதனை மேற்கொள்ளலாம். டேபிளில் ரைட் கிளிக் செய்திடவும். வேர்டில் உடனே ஒரு காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இந்த மெனுவில் Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டேபிள் ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

    இதில் டேபிள் என்னும் டேப் தேர்ந்தெடுங்கள். பின் Center என்பதில் கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னவென்று நீங்கள் கூறவில்லை. உங்களுடையது விண்டோஸ் 97 ஆக இருந்தால் மேலே சொல்லப்பட்ட வழிகள் செயல்படாது.

    கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும். டேபிளின் உள்ளாக கர்சரைக் கொண்டு செல்லவும். பின் Table menu விலிருந்து Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மெனுவிலிருந்து டேபிள் செல்லின் உயரம் மற்றும் அகலத்தைத் (Cell Height and Width) தேர்ந்தெடுக்கவும்.

    இப்போது செல்லின் அகலம் மற்றும் உயரம் செட் செய்திடும் டயலாக் பாக்ஸ் படுக்கை வரிசைக்கான டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிடைக்கும். இனி அங்கு இருக்கும் சென்டர் என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


    ஒரு பைலுக்கு பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டால் அதனைத் திறக்காமல் பிரிண்ட் செய்திட வழி உண்டா?

    – என்.ஜி. முருகன், ஊத்துக் கோட்டை


    எந்த பைலையும் திறந்து இயக்கத்திற்குக் கொண்டு வந்த பின்னரே அதனை அச்சிட முடியும். ஏதேனும் புரோகிராம் எழுதி அதனை அச்சிட முயற்சித்தாலும் அதற்கு பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருந்தால் புரோகிராம் முடங்கி நின்றுவிடும்.


    நான் இன்டர்நெட் இணைப்பு பெற முடிவு செய்துள்ளேன். இதற்கான பணத்தை டெலிபோன் பில்லுடன் கட்ட வேண்டுமா? அல்லது தனியே கட்ட வேண்டுமா? மாதம் ஒரு முறையா? வருடம் ஒரு முறையா?


    –ஆர். பாஸ்கரன், வத்தலக்குண்டு


    நீங்கள் வாங்கும் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்தது. இன்டர்நெட் இணைப்பிற்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும். கால அடிப்படையில் (3 மாதம் – 100 மணி நேரம்) பெற்றால் முதலிலேயே கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் அதனைப் பயன்படுத்த வேண்டும்.

    மீதமிருந்து இணைப்பை புதுப்பித்தால் ஏற்கனவே உங்கள் அக்கவுண்ட்டில் உள்ள பணம் சேர்ந்து கொள்ளும். டெலிபோன் வழி இணைப்பு எனில் இணைப்புக்கான பணத்தை தனியாக செலுத்திய பின்னர் டெலிபோன் பயன்படுத்துவது அதற்கான பில்லில் டெலிபோன் பயன்பாட்டுடன் இணைந்தே வரும்.

    இப்போது தனியே இணைப்பின்றி டெலிபோன் எண்ணையே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பயன்படுத்தலாம். இதற்கான கட்டணமும் டெலிபோன் பில்லுடன் தொலைபேசி அழைப்பு கட்டணமாக இணைந்தே வரும்.

    நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.06/04/09
    Last edited by நூர்; 06-07-2009 at 06:05 AM.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    என் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படுகையில் அதன் விர்ச்சுவல் மெமரி மிகவும் குறைவு என்றும் அதனைச் சரி செய்வதற்காக சில வேலைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்தி வருகிறது. ஆனால் ஒன்றும் நடை பெறுவதாகத் தெரியவில்லை. கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக செயல்படுகிறது. என்ன நடைபெறுகிறது என்று தெரியவில்லை.


    –ஞா. திருவாசகம், கோயம்புத்தூர்


    கம்ப்யூட்டரின் மெமரிக்கான இடம் நிறைந்து தொடர்ந்து இயங்க இடம் இல்லாத போது ஹார்ட் டிஸ்க் இடம் மெமரிக்காக எடுத்துக் கொள்ளப்படும். அதுவே விர்ச் சுவல் மெமரி ஆகும். இந்த இடம் கிடைக் கவில்லை என்றால் கம்ப்யூட்டர் மெதுவாகத் தான் இயங்கும்.

    விண்டோஸ் தானாக அதன் ஹார்ட் டிஸ்க்கில் தேவையான இடத்தை ஒதுக்கி அமைத்துக் கொள்ளும். இதனைத்தான் பேஜிங் பைல் (Paging File) என்றும் கூறுவார்கள். உங்கள் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் இடம் ஒதுக்கும் செயல்பாடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஆனால் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும். ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிச்சம் பிடிப்பதாக எண்ணிக் கொண்டு செயல்படாமல் இருக்க வேண்டாம். ஏனென்றால் இந்த இடம் இல்லை என்றால் கம்ப்யூட்டர் மெதுவாகத்தான் செயல்படும்.


    Start பட்டனில் கிளிக் செய்து My Computer ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Advanced என்ற டேப்பில் அடுத்து கிளிக் செய்திடவும்.

    இங்கு Performance என்ற பிரிவில் Settings பட்டன் கிளிக் செய்திடவும். மீண்டும் இங்கு Advanced டேப்பில் கிளிக் செய்யவும். இதில் கீழாக உள்ள Change பட்டன் மீது அழுத்தவும். இங்கு உள்ள Customs Size என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


    இதில் உள்ள Initial மற்றும் Maximum சைஸ் பாக்ஸில் 2048 எனக் கொடுக்கவும். இது கம்ப்யூட்டரின் செயல்பாட்டிற்குத் தேவையான இடத்தைக் கொடுக்கும். பின் செட் பட்டனில் கிளிக் செய்து அதன் பின் மூன்று இடங்களில் OK என்டர் செய்து வெளியேறவும்.

    உங்கள் கம்ப்யூட்டர் அது இயங்கத் தொடங்கும்போதே நிறைய புரோகிராம்களை இயக்கும் வகையில் செட் செய்திருந்தால் அவற்றில் தேவையானதை நீக்கவும். இதனால் ராம் மெமரி தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவது தடுக்கப்படும்.

    வாசகர்களே, இது போன்ற சந்தேகங்களை எழுதுகையில் கம்ப்யூட்டர் தரும் பிழைச் செய்தியை அப்படியே தரவும்.
    ஒரு CDRW பயன்படுத்தி வீட்டில் அலுவலகப் பணியை மேற்கொள்வதற்காக அலுவலகப் பைல்களைக் காப்பி செய்தேன்.

    ஆனால் அதனைத் திறந்து பைல் எடிட் செய்தால் பைல் Read Only என்றும் மாற்றங்கள் அனுமதிக்கப்படமாட்டா என்று செய்தி கிடைக்கிறது. சிடி அழித்து எழுதும் தன்மை இருந்தும் ஏன் இது போன்ற செய்தி கிடைக்கிறது? இதற்கு என்ன செட் செய்திட வேண்டும்? வேறு வகை சிடி பயன்படுத்த வேண்டுமா?



    –கே. எல். இராமாமிர்தம், காரைக்குடி


    உங்களுடைய ஆதங்கம் புரிகிறது இராமாமிர்தம். சிடியோ அழித்து அழித்து எழுதும் தன்மை கொண்ட சாதாரண சிடியைக் காட்டிலும் சற்று விலை உயர்ந்தது. ஆனால் பைலை அழித்து எழுத முடியவில்லையே என்பதுதானே. நீங்கள் தேடி எடுத்த சிடி சரிதான். ஆனால் பைல் அழித்து எழுதும் பைலாக பதியப்படவில்லை.

    RW என்பது Rewritable என்பதையே குறிக்கிறது. இந்த சிடியில் நீங்கள் நினைப்பது போல் பைலை அழித்து மீண்டும் அதிலேயே பழைய பிளாப்பியில் எழுதுவது போல் எளிதான வேலை அல்ல. இங்கு அந்த பைலின் புதிய காப்பி ஒன்றை அதே இடத்தில் சிடியில் பதியலாம்.

    நீங்கள் பயன்படுத்தும் சிடி பர்னிங் சாப்ட்வேர் இதனை உங்களுக்கு செய்து கொடுக்கும். நீங்கள் விரும்பினால் சிடி முழுவதையும் அழித்து துடைத்து புதியதாக மாற்றும். அப்போது எடிட் செய்யக் கூடிய பைலாக உங்கள் பைல்களை காப்பி செய்திடுங்கள்.

    நீங்கள் ஏன் தற்போது அதிகப் பயன்பாட்டில் இருக்கும் யு.எஸ்.பி. டிரைவ் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. வெகு எளிதாக கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி.போர்ட்டில் செருகி பைல்களை காப்பி செய்து பரிமாறிக் கொள்ளலாமே. எடுத்துச் செல்வதும் எளிது. இங்கு பைல் பர்னிங் பிரச்சினை எதுவும் கிடையாது.


    எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் மூன்று ஒர்க்புக் முடிந்த பின்னர் நான்காவது ஒர்க்புக் தேவைப்படுகையில் இன்ஸெர்ட் அழுத்தி பின் ஒர்க்ஷீட் பிரிவில் கிளிக் செய்திட வேண்டியுள்ளது. மவுஸ் அல்லது கீ போர்டு மூலம் இதனை எளிதாக மேற்கொள்ள முடியாதா?

    –சி. கமலம், மதுரை


    பொதுவாக எக்ஸெல் பயன்படுத்துபவர்கள் பலர் இது போன்ற வழியில் தான் செல்கின்றனர். புதியதாக கூடுதலாக ஒர்க் புக் தேவை என்றால் Shift + F11 அழுத்துங்கள். கூடுதல் ஒர்க்புக் கிடைக்கும். இதே பணியை இன்னொரு கீ தொகுப்பும் செய்திடும். அது ஆல்ட் + ஷிப்ட் + எப் 1 (Alt + Shift + F1 ) இரண்டு ஷார்ட் கட் கீகள் உண்டு.


    எக்ஸெல் ஒர்க் புக்கில் ரோக்களையும் காலங்களையும் தேர்ந்தெடுத்து ஹை லைட் செய்திட விரும்புகிறேன். ஷிப்ட் அழுத்தி ஆரோ கீகளை அழுத்தாமல் ஏதேனும் வழிகள் உண்டா?


    –கா.ஆரோக்கியசாமி, பசுமலை, மதுரை


    நெட்டு வரிசைகளையும் படுக்கை வரிசைகளையும் ஜஸ்ட் இரண்டே இரண்டு கீகளைப் பயன்படுத்தி ஹைலைட் செய்திடும் வசதி எக்ஸெல் தொகுப்பில் உண்டு. ஹைலைட் செய்யப்பட வேண்டிய நெட்டு வரிசை (காலம்) யில் ஒரு செல்லில் கர்சரை வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் Ctrl + Spacebar கீகளை அழுத்தினால் அந்த நெட்டு வரிசை முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். அதே போல Shift+ Spacebar கீகளை அழுத்தினால் அந்த படுக்கை வரிசை முழுவதும் ஹைலைட் ஆகும். அடுத்து தொடர்ந்து வரிசைகளை ஹைலைட் செய்திட ஷிப்ட் கீயை இணைத்து ஆரோ கீகளைப் பயன்படுத்தலாம்.

    நன்றி: தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.ஏப்ரல்,20, 2009
    Last edited by நூர்; 06-07-2009 at 06:11 AM.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    பிரிண்ட் ஸ்கிரீன் பயன்படுத்தித் திரைக் காட்சிகளை படங்களாக மாற்றிப் பயன்படுத்த விரும்பி முயற்சித்தேன். ஆனால் அடுத்தடுத்து காட்சிகளைப் படங்களாகப் பதியமுடியவில்லை.
    இரண்டாவது முறை பிரிண்ட் ஸ்கிரீன் பட்டனை அழுத்துகையில் முதலில் எடுத்தது மறைந்து போய்விடுகிறது. தொடர்ந்து பல காட்சிகளை பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் எடுக்க என்ன வழி?

    –எம். பிரதீப் குமார், மதுரை

    ஸ்கிரீன் பிரிண்ட் எடுக்க விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்துள்ள சாப்ட்வேர் மூலம் கிளிப் போர்டில் ஒரு படத்தை மட்டுமே சேவ் செய்து வைக்க முடியும். ஏனென்றால் கிளிப் போர்டில் ஒரு படத்தை மட்டுமே ஒரு முறை சேவ் செய்திட முடியும்.

    எனவே அடுத்தடுத்து படங்களை பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் எடுத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு வேறு தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இதில் சிறந்த சாப்ட்வேர் ஒன்றினை அண்மையில் நான் இறக்கிப் பதிந்து பயன்படுத்தினேன். இதன் பெயர் Gadwin Print Screen என்பதாகும்.

    இதனை http://www.gadwin.com/printscreen என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை இறக்கி இன்ஸ்டால் செய்துவிட்டால் ஒரு சின்ன ஸ்கிரீனில் கேமரா இருப்பது போன்ற ஐகான் ஒன்று நோட்டிபிகேஷன் ஏரியாவில் இருக்கும்.

    இதனை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். டெஸ்டினேஷன் ஐகானில் இடது பக்கம் கிளிக் செய்திடவும். போல்டர் இல்லை என்று சொல்லி ஒன்றை உருவாக்கவா என்று கேட்கும். யெஸ் அழுத்தவும். அடுத்து Copy captured area to File என்றுஉள்ள இடத்தில் டிக் அடையாளம் அமைக்கவும். பின் அருகே தானாக பெயர் இடும் ஆப்ஷன் இருக்கும்.

    அதிலும் கிளிக் செய்திடவும். அல்லது நீங்களாக பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இதன் மூலம் ஒரே வகை ஸ்கிரீன் ஷாட்களை குழுவாக அமைக்க முடியும். இதனை மூடி வைத்து பின் ஸ்கிரீன் பிரிண்ட் பட்டனை தொடர்ந்து அழுத்த அழுத்த படங்கள் உருவாகி உங்களுக்கு அதன் டைரக்டரியில் காத்திருக்கும்.

    நன்றி: தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.04/05/09
    Last edited by நூர்; 08-06-2009 at 10:16 AM.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    சென்ற இரு இதழ்களுக்கு முன் Pinned Mode வைத்திடுங்கள் என்று எழுதியிருந்தீர்கள். இது எதனைக் குறிக்கிறது? விளக்கவும்.


    –கா. சுப்புலஷ்மி, திருப்பூர்



    கம்ப்யூட்டர் உலகில் Pinned என்பது பின் எடுத்து குத்தி வைப்பதனைக் குறிக்காது. ஒரு விண்டோவிற்குள்ளாக ஒரே இடத்தில் எளிதாக எடுத்து இயக்கும் வகையில் நாம் அமைத்திருப்பதனை இது குறிக்கும்.

    இதில் புரோகிராம்கள், வெப்சைட்டுகள், அப்ளிகேஷன்கள் என எதனை வேண்டுமானாலும் பின் செய்து வைக்கலாம். எடுத்துக் காட்டாக நான் பயன்படுத்தும் விஸ்டா கம்ப்யூட்டரில் கீழ்க்கண்ட ஸ்டார்ட் மெனு காட்சியினை எடுத்துக் காட்டுகிறேன்.


    இந்த மெனுவில் முதல் பாதியில் பின் செய்யப்படும் புரோகிராம்களைக் காணலாம். போட் டோ ஷாப், இல்லஸ்ட் ரேட்டர் மற்றும் ட்ரீம் வீவரை நான் தினந்தோறும் பயன்படுத்துவதால் அவற்றை பின் செய்து வைத்திருக்கிறேன்.

    எந்த நேரத்திலும் இங்கிருந்து அவற்றை இயக்க முடியும். கீழ் பகுதியில் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் பட்டியல் உள்ளது. நீங்கள் பயன்படுத்துவதற்கேற்ப இந்த பட்டியல் தானாக மாறும். எப்படி உங்களுக்கு வேண்டிய புரோகிராம்களை பின் அப் செய்வது என்று பார்ப்போமா! பின் அப் செய்ய வேண்டிய புரோகிராம் ஐகான் மீது,

    அது டெஸ்க் டாப்பில் இருந்தாலும் அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். எழும் மெனுவில் Pin to Start Menu என இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்தால் உடனே இந்த ஸ்டார்ட் மெனுவில் அது பின் அப் புரோகிராமாக அமைந்திடும்.


    நான் அடிக்கடி வேர்டில் டேபிள் உருவாக்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. டேபிளைத் தயாரிக்கையில் முதல் வரியில் அமைத்துவிட்டால் பின் டேபிளுக்கு மேலாக எந்த தலைப்பும் அடிக்க முடியவில்லை. முதல் ரோவில் அமைத்து பின் அதனை அழித்தும் அமைக்க முடியவில்லை. இதற்கு என்ன வழி?

    –க. நல்லசிவம், துடியலூர்



    இத்தனை நாளும் என்ன செய்தீர்கள் நல்லசிவம்? எந்த வரிசைக்கு மேலாக தலைப்பு அமைக்க வேண்டுமோ அதன் முதல் செல்லில் முதல் எழுத்துக்கு முன் கர்சரை வைத்துக் கொண்டு கண்ட்ரோல் மற்றும் என்டர் தட்டுங்கள். இப்போது கர்சர் மேலே சென்றிருக்கும். பின் உங்கள் இஷ்டம் போல மேலே இடம் அமைத்து தலைப்பும் அமைக்கலாம்.

    நான் மைக்ரோசாப்ட் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். திடீரென ஒரு நாள் டூல்பாரினைக் காண முடியவில்லை. ரூலருக்கு மேல் ஒன்றும் இல்லை. பல நாள் இது போல் இருந்த பின் சிஸ்டம் டிஸ்க் பயன்படுத்திப் பார்த்தேன். அப்போதும் ஒன்றும் சரியாகவில்லை. ஆனால் பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்கள் சரியாக இயங்குகின்றன. ஏன் இந்தக் கோளாறு? சரி செய்திட என்ன செய்ய வேண்டும்?



    கா. சூரிய பிரகாசம், புதுச்சேரி



    பிரச்சினை உங்களிடம் தான். நீங்களே உங்களை அறியாமல் ஏதோ செட்டிங்ஸ் அமைத்தி இதனை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். வேர்ட் எப்போதும் எந்த எந்த டூல்பார்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற தேர்வை உங்களிடமே விட்டுவிடுகிறது. அதே போல அனைத்து டூல் பார்களையும் கூட வேண்டாம் என்று நீங்கள் அமைக்கலாம்.

    இவ்வாறு மறைப்பதற்கான தேர்வை நீங்கள் உங்களை அறியாமல் எடுத்திருக்கலாம். அல்லது வேர்ட் தொகுப்பில் முழுத்திரையும் (full screen) காட்டும் வகையில் நீங்கள் செட் செய்திருக்கலாம். இந்த வகைத் தேர்வில் அனைத்து டூல்பார்களும் மறைந்து போகும்.

    அப்படியானால் Alt + V அழுத்தவும். இப்போது View மெனு கிடைக்கும். இதில் U அழுத்தவும். உடனே நார்மல் வியூ கிடைக்கும். இந்நிலையிலேயே வேர்ட் தொகுப்பை மூடவும். இனி மீண்டும் வேர்ட் இயக்குகையில் full screen க்குச் செல்லாது. பின் View மெனு அழுத்தி அதில் டூல் பாரினையும் அழுத்தி உங்களுக்கு என்ன என்ன டூல் வேண்டுமோ அவற்றை டிக் செய்து பெறவும்.

    நன்றி: தினமலர்:கம்ப்யூட்டர் மலர்மே 11,2009
    Last edited by நூர்; 06-07-2009 at 06:15 AM.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    என்னுடைய டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான்களுக்குப் பின்னால் பெயரை அடுத்து நல்ல சாலிட் கலரில் கட்டம் தெரிகிறது. இது என் வால் பேப்பரின் அழகைக் கெடுக்கிறது. இதனை மாற்றமுடியாதா?
    இதனை எப்படி தீர்க்கலாம் என்பதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.



    நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம். My Computer ல் ரைட் கிளிக் செய்து மெனுவினைப் பெறவும். இதில் Properties கட்டதில் கிளிக் செய்து அந்த விண்டோவினைப் பெறவும். இந்த விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் கீழ் Performance என்னும் பிரிவில் செட்டிங்ஸ் பட்டன் இருக்கும். அதன் மீது கிளிக் செய்திடவும். இனி Performance Options விண்டோ கிடைக்கும்.


    இங்கு Visual Options டேப்பின் கீழாக உள்ள Custom ரேடியோ பட்டனை அழுத்தவும். இங்கு நிறைய செக் பாக்ஸ்களைக் காணலாம். இதில் "Use drop shadows for icon labels on the desktop" என உள்ள இடத்தில் டிக் இருந்தால் அதனை எடுத்துவிடவும். பின் Applly மற்றும் Oஓ கிளிக் செய்து வெளியறவும். இனி உங்கள் மனதைத் தொடும் வால் பேப்பரை நன்றாகப் பார்க்கலாம்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    சிறிய எண்களுக்கான ரோமன் எண்ணை நாம் அமைத்துவிடலாம். அதுவே பெரிய எண்ணாக இருந்தால் கண்டுபிடிக்க கம்ப்யூட்டரில் எந்த மொழியில் புரோகிராம் உள்ளது?



    –கே. ஷண்முகம், சென்னை



    இதற்கென புரோகிராமினை அமைக்க வேண்டியதில்லை. எம்.எஸ்.எக்ஸெல் போதும். இதற்கான பார்முலா =roman(NUMBER,FORM). இந்த பார்முலாவினை ஒரு செல்லில் கொடுக்கவும். கொடுத்து அதற்கான எண்களை அமைக்க வேண்டும். இதில் NUMBER என்பது நீங்கள் எந்த எண்ணுக்குத் தேடுகிறீர்களோ அந்த எண். என்ன பார்மட் தேவை என்பதை அடுத்தபடியாகத் தர வேண்டும். இதனை கொடுக்காமல் விட்டாலும் விடை கிடைக்கும். எடுத்துக் காட்டாக =roman(1999,1) என்ற பார்முலா MLMVLIV என்ற விடையைக் கொடுக்கும். =roman(1999,0) எனக் கொடுத்தால் MCMXCIX என்ற விடை கிடைக்கும். இரண்டாவது எண் கூடுதலாக இருப்பின் விடை சிம்பிளாகக் கிடைக்கும். . =roman(2006,0) என்பதன் விடை MMVI.
    நன்றி: தினமலர்.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏ.வி.ஜி. இலவச ஆண்டி வைரஸ் தொகுப்பு 7.5 னைப் பதிந்து பயன்படுத்தி வருகிறேன். சமீப காலமாக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில் என்னுடைய இலவச ஆண்டி வைரஸ் பதிப்ப்பிற்கான சப்போர்ட் விரைவில் முடிந்துவிடும் என்று செய்தி கிடைக்கிறது. அப்படி என்றால் தொடர்ந்து இந்த ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியதிருக்குமா?


    –என்.சுந்தரேசன், திருவண்ணாமலை


    நீங்கள் பயன்படுத்துவது ஏ.வி.ஜி. வழங்கிய பழைய ஆண்டி வைரஸ் தொகுப்பு. இதற்குப் பதிலாக புதிய இலவசத் தொகுப்பு இப்போது அதன் தளத்தில் கிடைக்கிறது. ஏ.வி.ஜி. நிறுவனம் கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை அளித்து வருகிறது. ஆனால் அதற்காக இலவச புரோகிராம் பயன்படுத்துபவர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் பெறுவதில்லை. புதிய இலவச புரோகிராமினை www.grisoft.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனைப் பதிந்து அவ்வப்போது தானாக அப்டேட் செய்திடும்படி செட் செய்து கொள்ளலாம். செட் செய்த பின் இந்த ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்கினால் அதுவே உங்களுக்கு ஆட்டோமேடிக் அப்டேட் செய்திட வழி காட்டும்.

    என் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் மெனுவினை ஸ்குரோல் செய்திடும்படி என் நண்பர் அமைத்துக் கொடுத்தார். இதனால் பல கட்டங்களாகக் காட்டப்படாமல் அது ஸ்குரோல் ஆகி மறையும். இப்போது பழைய படி நான் வைத்திருந்தது போல கட்டங்களாக அமைக்க ஆசைப்படுகிறேன். ஆனால் எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. படிப்படியாக வழி காட்டவும்.


    –ச. யோகேஷ், நாகமலைப் புதுக்கோட்டை


    இது போல உங்கள் கம்ப்யூட்டர்களில் நண்பர்கள் செட்டிங்ஸை மாற்றுகையில் அனுமதிக்காதீர்கள். அல்லது மீண்டும் பழையபடி எப்படிக் கொண்டு வருவது எனக் கேட்டுக் கொண்டு அனுமதியுங்கள். அதே போல நீங்களும் அடுத்தவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இது போன்ற செட்டிங்ஸ்களை மாற்றாதீர்கள்.

    சரி, இனி விஷயத்திற்கு வருவோம். பழையபடி நீங்கள் விரும்பும் வகையில் ஸ்டார்ட் மெனு செயல்பாட்டினை அமைப்போம். டாஸ்க்பாரில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுவோம். பின் கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவில் இடது கிளிக் செய்திடவும். அடுத்து ஸ்டார்ட் மெனு டேப்பில் கிளிக் செய்து Customize பட்டனைத் தட்டவும். இங்கு Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

    இங்கு ஸ்குரோல் செய்து ஆப்ஷன்ஸ் லிஸ்ட்டின் நடுவே செல்லவும். இங்கு Scroll Programs என்னும் பாக்ஸில் கிளிக் செய்து அதில் உள்ள டிக் அடையாளத்தை அகற்றவும். பின் இந்த மாற்றங்களை சேவ் செய்திட இரண்டு விண்டோக்களிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி ஸ்டார்ட் மெனு இயங்கும்.

    வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். என் நண்பர் பைலை சேவ் செய்கையில் எந்த பெயரும் இல்லாமல் சேவ் செய்திட முடியும் என்கிறார். ஆனால் தனக்கு வழி தெரியவில்லை என்று சொல்கிறார். ஒருவர் செய்ததைப் பார்த்ததாகவும் கூறுகிறார். இது உண்மையா? அப்படியானால் எப்படி சேவ் செய்திட முடியும்?


    –கி. கிருஷ்ணமூர்த்தி, வத்தலக்குண்டு


    பைலுக்கு ஒரு பெயர் கொடுக்காமல் சேவ் செய்திட முடியாது. ஆனால் கொடுக்கும் பெயர் மற்றவருக்குத் தெரியாமல் இருக்கச் செய்யலாம். அதாவது ஸ்கிரீனில் காட்டப்படமாட்டாது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு 255 என டைப் செய்திடுங்கள். எதுவுமே டைப் செய்யப்படாமல் காலி ஸ்பேஸ் உருவாகும். பைலும் சேவ் ஆகும். இந்த பைலைத் திறக்க இதே போல மீண்டும் டைப் செய்திட வேண்டும். இதனை மறந்துவிட்டால் பைல் அவ்வளவுதான்.

    எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மாணவர்களின் பெயர்கள், பாட பெயர்கள், வாங்கிய மதிப்பெண்கள் என பல காலங்களில் வைத்துள்ளேன். இவற்றை அப்படியே வேர்டில் ஒரு டேபிளாக அமைத்திட விரும்புகிறேன். டேபிள் அமைத்து ஒவ்வொன்றாக காப்பி செய்திடாமல் வேறு வழி உள்ளதா?


    –என்.எஸ். மணியம், புதுச்சேரி


    எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நீங்கள் அமைத்துள்ள தகவல்கள் அடங்கியுள்ள நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை அப்படியே செலக்ட் செய்திடவும். அதன் பின் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கவும்; அல்லது உருவாக்கவும். இதில் எடிட் (Edit) மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் (Paste Special)என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

    அதில் கிடைக்கும் மெனுவில் Microsoft Office Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்திடவும். மிக அழகாக டேபிள் அட்டவணைக் கட்டங்கள் போல தகவல்கள் அமைக்கப்பட்டுவிடும். இது போல பல வகைகளில் இந்த இரண்டு புரோகிராம்களும் இணைந்து செயல்படும்.

    நான் அடிக்கடி என் நண்பர்களுக்கு படங்களை வேர்ட் அல்லது பிரசன்டேஷன் பைல்களில் பதிந்து அனுப்புகிறேன். ஏனென்றால் படங்களுக்கான தலைப்புகளை அமைக்க இவை உதவுகின்றன. ஆனால் பைல் சைஸ் மிகப் பெரிதாக அமைந்துவிடுகிறது. இவற்றை எப்படி கம்ப்ரஸ் அல்லது ஷ்ரிங்க் செய்வது?


    –ஆர். சியாமளா, கோயம்புத்தூர்


    வேர்ட் அல்லது பவர்பாய்ண்ட்டில் உள்ள ஒரு படத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Show Picture Toolbar என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் Compress Pictures என்னும் ஐகானில் கிளிக் செய்திடவும். அதன் பின் All pictures in document என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Web/Screen என்பதைத் தேர்ந்தெடுக் கவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். படங்களின் அளவு சுருங்கிவிடும்.

    என்னுடைய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும்போதெல்லாம் "Your computer might be at risk" என்று ஒரு செய்தி திரையில் காட்டப்படுகிறது. இதனை எப்படி நிறுத்துவது? நான் ஆட்டோமேடிக் அப்டேட் செய்வதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் அதனை இயக்கினால் என்னுடைய 21 ஜிபி ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய கம்ப்யூட்டர் மிக நன்றாக எனக்கான பணிகளுக்காக இயங்குவதால் எனக்கு எந்த அப்டேட் பைல்களும் தேவையில்லை. என்னுடைய பாலிசி இதில் என்னவென்றால் ஒரு குதிரை நன்றாக ஓடுகிறதா? அப்படியானால் தேவையற்ற புல்லைப் போடாதே என்பதுதான்.


    –கே. கருணாகரன், சிவகாசி


    உங்களுக்கு வரும் இந்த மெசேஜை ஆப் செய்துவிடலாம். ஆனால் ஆட்டோமேடிக் அப்டேட்டை முடக்கிவைப்பது முற்றிலும் தவறான முடிவு கருணாகரன். இதை ஏன் தொடக்கத்திலேயே கூறுகிறேன் என்றால் உங்களுக்கு ஆப் செய்திடும் வழியைக் கூறினால் இதே போல் மற்றவர்களும்க் மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். ஓகே. உங்கள் கம்ப்யூட்டர் மிக நன்றாக இயங்கிக் கொண்டிருக் கிறதா? அப்படி என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உள்ளே பிரச்சினை இருக்கலாம். அது தற்சமயத்திற்கு வெளிப்படை யாகத் தெரியாமல் இருக்கலாம். ஆட்டோமேடிக் அப்டேட் என்பது உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏற்படும் பிரச்சினைகளை உங்களுக்குத் தெரியாமல் தீர்த்து வைத்திடத்தான் தரப்பட்டுள்ளது.


    இதனை செட் செய்திட Start>> Control Panel>> Security Center எனச் செல்லவும். இங்கு இடது பக்கம் உள்ள ‘Change the way Security Center alerts me’ என்பதில் கிளிக் செய்திடவும். அங்கு Automatic Updates என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தைன் மீது கிளிக் செய்து அதனை நீக்கவும்.

    பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இத்துடன் பயர்வால் மற்றும் வைரஸ் பாதுகாப்பு குறித்தவற்றையும் இதே விண்டோவில் ஆப் செய்துவிடலாம். ஆனால் மீண்டும் எச்சரிக்கிறேன். இது உங்கள் கம்ப்யூட்டரை முற்றிலும் பாதுகாப்பற்றதாக மாற்றிவிடும். மேலும் அது போல் மாறிவருவது உங்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட மாட்டாது. ஆட்டோமேடிக் அப்டேட் இல்லை என்றாலும் நீங்களாக மைக்ரோசாப்ட் தளம் சென்று அப்டேட்களை டவுண்லோட் செய்து இணைத்துக் கொள்வதே நல்லது.
    நன்றி:தினமலர்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    வேர்ட் தொகுப்பு குறித்த நோட்ஸ்களில் நார்மல் டெம்ப்ளேட் என்று அடிக்கடி படிக்கிறேன். இது எதனைக் குறிக்கிறது? இதனால் என்ன நன்மை?
    –செ.விஜயகுமார், விழுப்புரம்

    வேர்ட் தொகுப்பில் நார்மல் டெம்ப்ளேட் என்பது அத்தொகுப்பிலேயே வடிவமைக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றின் கட்டமைப்பாகும். ஒரு புதிய டாகுமெண்ட்டைத் தொடங்குகையில் இதுவே உங்களுக்குப் பணிபுரிய கிடைக்கும். மார்ஜின், எழுத்து வகை, ஸ்டைல் போன்றவை இதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதனை மாற்றுவதற்கும் இதிலேயே வசதிகள் தரப்பட்டிருக்கும்.

    நீங்கள் இந்த நார்மல் டெம்ப்ளேட்டினை மாற்றினால் அதன் பின் அமைக்கப்படும் அனைத்து டாகுமெண்ட்களும் அதே வடிவமைப்பில் உருவாக்கப்படும். Normal.dot என்பது இந்த டெம்ப்ளேட் பைலின் பெயர். இது Template எனப்படும் போல்டரில் இருக்கும்.

    எந்த டைரக்டரியில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தீர் களோ அந்த டைரக்டரியில் இதனைக் காணலாம். இந்த பைலை நீங்கள் அழித்துவிட்டால் அடுத்த முறை வேர்ட் தொடங்கும்போது ஏற்கனவே இருந்த செட்டிங்ஸ் அடிப்படையில் புதிய நார்மல் டெம்ப்ளேட் ஒன்றை அது தானாக உருவாக்கிக் கொள்ளும்.

    என் நண்பரின் கம்ப்யூட்டரில் வேர்ட் தொகுப்பு தொடங்குவது வித்தியாசமாக இருக்கிறது. இதனை ஒருவர் செட் செய்ததாக நண்பர் கூறுகிறார். எப்படி செட் செய்வது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

    –கா. நல்லதம்பி, திண்டுக்கல்

    வேர்ட் தொடங்குவதனை நாம் விரும்பியபடி அமைக்கலாம். அதற்கான வழிகளும் எளிதுதான். வேர்ட் தொகுப்பின் அடிப்படை இயக்க பைலின் பெயர் Winword.exe ஆகும். இது புரோகிராம் பைல்ஸ் போல்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இன்ஸ்டால் செய்த இடத்தில் இருக்கும்.

    இந்த பைலுக்கு ஒரு கட்டளை வரி ஷார்ட் கட் ஐகான் வழி கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஷார்ட் கட் ஐகான் டெஸ்க் டாப் அல்லது குயிக் லாஞ்ச் பாரில் இருக்கும். இந்த ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஷார்ட் கட் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் கமாண்ட் லைன் பாக்ஸ் கிடைக்கும்.

    இதில் வேர்ட் பைல் திறந்திட அதன் பாத் உடன் கட்டளை வரி இருக்கும். வழக்கமாக இது "C:\Program Files\Microsoft Office\ Office\Winword.exe"என இருக்கும். சில கம்ப்யூட்டர்களில் இது வேறாக இருக்கலாம். இந்த வரியின் இறுதியில் கீழே தரப்பட்டுள்ள ஸ்விட்ச்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை அமைக்கலாம்.


    1. எந்த ஸ்விட்சும் அமைக்கப்படாவிட்டால் வேர்ட் புதிய டாகுமெண்ட் ஒன்றுடன் தொடங்கும். ஏற்கனவே தொடங்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட பைல்கள் இருப்பின் அவை பட்டியலிடப்படும்.



    2./n என்ற ஸ்விட்ச்சை இணைத்தால் வேர்ட் புதிய காலி டாகுமெண்ட் இல்லாமல் தொடங்கப்படும்.


    3. /w என்ற ஸ்விட்ச் புதிய காலி டாகுமெண்ட் ஒன்றுடன் வேர்ட் தொடங்கும்.


    4./ttemplatename என்ற ஸ்விட்சில் நீங்கள் தயார் செய்த டெம்ப்ளேட் பைலின் பெயரை templatename என்ற இடத்தில் அமைத்தால் அந்த டெம்ப்ளேட்டிற்கு ஏற்றபடி புதிய டாகுமெண்ட் அமைக்கப்படும்.


    5. /a என்ற ஸ்விட்ச் வேர்ட் தொகுப்பினைத் தொடங்கி ஆட் இன் தொகுப்புகள் மற்றும் நார்மல் டெம்ப்ளேட் பைல்களுடன் இயங்குவது தடுக்கப்படும். இந்த ஸ்விட்ச் இணைக்கப்பட்ட பின் உருவாக்கப்படும் பைல்களை படிக்கவும் எடிட் செய்திடவும் முடியாது.


    6. /m என்ற ஸ்விட்ச் ஆட்டோ எக்ஸிகியூட்டபிள் மேக்ரோக்கள் இன்றி வேர்ட் தொடங்கிட வழி வகுக்கும்.


    7. /mmacroname என்ற ஸ்விட்ச் மேக்ரோ நேம் என்ற இடத்தில் தரப்பட்டுள்ள மேக்ரோவின் பெயரில் உள்ள மேக்ரோ பைலை இயக்கும். மற்ற மேக்ரோ இயங்குவதனைத் தடுக்கும்.



    டாகுமெண்ட் அமைக்கையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு கிடைக்கும் டிபால்ட் மார்ஜினை எப்படி மாற்றி அமைப்பது? அதே போல எழுத்து வகையினையும் நான் விரும்பியபடி அமைப்பதற்கும் வழி சொல்லவும்.



    –சி. ஏழுமலை, கண்டமனூர்



    File மெனுவில் Page Setup தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Margin என்ற டேப்பின் மீது கிளிக் செய்திடவும். பின் உங்களின் விருப்பப்படி மார்ஜின் செட் செய்திடவும். அதன் பின் அதே திரையில் உள்ள Default என்பதில் கிளிக் செய்திடவும்.

    உடனே வேர்ட் ஓர் எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றம் இனிமேல் அமைக்கப்படும் வேர்ட் டாகுமெண்ட்களைப் பாதிக்கும் என்றுசொல்லும். சரி என இசைவினைக் கொடுத்தால் புதிய மார்ஜின் அமலுக்கு வரும்.



    டிபால்ட் எழுத்தைப் பொறுத்தவரை Format மெனு சென்று அதில் Font என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் நீங்கள் எந்த எழுத்துவகை எப்படி இருக்க வேண்டும் (அளவு, சாய்வு, போல்டு) என விரும்புகிறீர்களோ அதை எல்லாம் அமைக்கவும். அதன்பின் Default பட்டனை அழுத்தவும். வேர்ட் தரும் எச்சரிக்கையினை தள்ளிவிட்டு ஓகே அழுத்தி வெளியே வரவும். இனி நீங்கள் அமைத்த மார்ஜின் மற்றும் எழுத்து வகை புதியதாக அமைக்கப்படும் டாகுமெண்ட்களில் அமையும்.



    வேர்டில் பேஜ் நம்பர், ஹெடர், புட்டர், புட் நோட் மற்றும் எண்ட் நோட் ஆகியவற்றில் உள்ள டிபால்ட் எழுத்து வகையினை எப்படி மாற்றுவது? பார்மட் மெனுவில் இதற்கான இடம் இல்லையே? நான் வேர்ட் 2000 பயன்படுத்தி வருகிறேன்.
    –எஸ். ரமேஷ் பாபு, புதுச்சேரி

    இவை எல்லாம் Style (ஸ்டைல்) சம்பந்தப் பட்டவையாகும். இவற்றில் எதனை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் மாற்றங்களை Template பைலில் மாற்ற வேண்டும். நீங்கள் வழக்கமாக நார்மல் டெம்ப்ளேட்டினைப் பயன்படுத்துவதாக இருந்தால் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.


    நீங்கள் வேர்ட் 2000 பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள்.

    1. Format மெனுவில் இருந்து Style என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

    2. List பாக்ஸில் All Styles என்பதனைக் கிளிக் செய்திடவும்.

    3. Style பாக்ஸில் எந்த ஸ்டைலுக்கு நீங்கள் மாற விரும்புகிறீர்கள் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

    4. இதில் Modify என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Format என்பதில் கிளிக் செய்து ஸ்டைலில் எதனை மாற்ற வேண்டுமோ (Font, Paragraph) அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

    5. பின் நீங்கள் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்தவும். அதன் பின் ஓகே கிளிக் செய்திடவும்.

    6. அடுத்து Add to Template என்ற செக்பாக்ஸில் கிளிக் செய்திடவும். நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் டெம்ப்ளேட் பைலில் சேர்க்கப்பட்டு டிபால்ட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினால்தான் இந்த டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். அப்படி செக் செய்யவில்லை என்றால் நீங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றங்கள் எல்லாம் அப்போதைய டாகுமெண்ட்டில் மட்டுமே அமையும்.

    7. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதே மாற்றங்களை எக்ஸ்பி / 2003 தொகுப்புகளில் எப்படி ஏற்படுத்துவது என்று பார்க்கலாம்.

    1. Format மெனுவில் இருந்து Styles and Formattingஎன்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.


    2. வலது பக்கம் உள்ள டாஸ்க் பேனில் �ஷா லிஸ்ட்டில் ஆல் ஸ்டைல்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.



    3. எந்த வகை ஸ்டைல் வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்திடவும். அதன் பின் Modify என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


    4. இதில் Format என்பதில் கிளிக் செய்து ஸ்டைலில் எதனை மாற்ற வேண்டுமோ (Font, Paragraph) அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

    5. பின் நீங்கள் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்தவும். அதன் பின் ஓகே கிளிக் செய்திடவும். ஓகே கிளிக் செய்திடவும்.

    6. அடுத்து Add to Templateஎன்ற செக்பாக்ஸில் கிளிக் செய்திடவும். நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் டெம்ப்ளேட் பைலில் சேர்க்கப்பட்டு டிபால்ட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினால்தான் இந்த டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். அப்படி செக் செய்யவில்லை என்றால் நீங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றங்கள் எல்லாம் அப்போதைய டாகுமெண்ட்டில் மட்டுமே அமையும்.

    7. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

    ஆட்டோ டெக்ஸ்ட் என்பது என்ன? வேர்டில் இது எதற்கு பயன்படுகிறது?
    –எஸ். வினயா, காரைக்கால்

    நாம் வேர்ட் தொகுப்பில் அடிக்கடி பயன்படுத்தும் டெக்ஸ்ட், படம், டேபிள், கிராபிக்ஸ், பீல்ட் ஆகியவற்றை ஸ்டோர் செய்து தேவைப்படும்போது டெக்ஸ்ட்டில் செருகலாகப் பயன்படுத்துவதே ஆட்டோ டெக்ஸ்ட். வேர்ட் தொகுப்பு பல்வேறு ஆட்டோ டெக்ஸ்ட் அமைப்புடன் தரப்படுகிறது. Insert மெனு சென்று அதில் Auto Text பிரிவில் இவை என்னவென்று பார்க்கலாம்.

    அல்லது Auto Text Toolbar செலக்ட் செய்து All Entries என்பதைத் தேர்ந்தெடுத்து இவற்றைப் பார்க்கலாம். இவை மட்டுமின்றி நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில சொற்கள், சொற் கோவைகள், படங்கள் ஆகியவற்றையும் ஆட்டோ டெக்ஸ்ட்டில் இணைக்கலாம். அதற்கு கீழ்க்காணும் வகையில் செயல்பட வேண்டும்.

    வழி 1:



    1. Tools மெனுவில் இருந்து AutoCorrect அல்லது AutoCorrect Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் AutoText என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

    2. நீங்கள் விரும்பும் Auto Text என்ட்ரியை AutoText entries hereஎன்ற பாக்ஸில் டைப் செய்திடவும். பின் Add என்பதில் கிளிக் செய்திடவும்.

    3. Show AutoComplete tip என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.

    4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

    நீங்கள் கொடுத்த ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியில் உள்ள சொல்லில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களை நீங்கள் டாகுமெண்ட்டில் டைப் செய்தவுடன் வேர்ட் ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியில் உள்ளதைக் காட்டும். அது உங்களுக்குத் தேவை என எண்ணினால் உடனே என்டர் தட்ட நீங்கள் கொடுத்த டெக்ஸ்ட் கிடைக்கும். ஆட்டோ கம்ப்ளீட் ஆப் செய்யப்பட்டிருந்தால் ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரீஸ் களை ஆட்டோ டெக்ஸ்ட் டூல் பார் மூலம் இணைக்கலாம்.
    வழி 2:

    1. View மெனுவில் இருந்து Toolbars என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து AutoText என்பதில் கிளிக் செய்திடவும். இதில் AutoText toolbarஎன்பதை இயக்கவும்.

    2. அடுத்து நீங்கள் விரும்பும் AutoText என்ட்ரிக்கான டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும். பின் AutoText toolbarல் உள்ள New பட்டனில் கிளிக் செய்திடவும்.

    3. இதற்கு ஒரு ஷார்ட்கட் பெயர் ஒன்றை உருவாக்கவும்.

    4.இந்த ஷார்ட் கட்டினைப் பயன்படுத்தி டெக்ஸ்ட் அமைத்திட இந்த ஷார்ட் கட் என்ட்ரியை டைப் செய்திடவும். உடன் F3அழுத்தவும்.

    வேர்ட் இந்த ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிகளை அந்த கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்கிறது. எனவே புதியதாக அமைக்கப்பட்ட ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரி அந்தக் கம்ப்யூட்டரில் தான் பயன்படுத்த முடியும். நெட்வொர்க்கில் கூட அடுத்த கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது.
    நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.01/06/09
    Last edited by நூர்; 08-06-2009 at 10:03 AM.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நன்றி.
    Last edited by நூர்; 08-06-2009 at 11:06 AM.

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    கேள்வி: ஐ.எஸ்.பி. என்று அடிக்கடி எழுதுகிறீர்கள்.இதன் முழு விரிவாக்கம் என்ன? இன்டர்நெட்டில் இது எதனைக் குறிக்கிறது?

    –எஸ். தில்லைநாயகம், சிதம்பரம்


    பதில்: ஐ.எஸ்.பி. என்பது Internet Service Provider என்பதன் சுருக்கம். உங்களிடம் கட்டணம் பெற்றுக் கொண்டு இன்டர்நெட் இணைப்பை உங்களுக்குத் தரும் நிறுவனமே அவ்வாறு அழைக்கப்படுகிறது. நீங்கள் டயல் செய்து உங்கள் கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட் இணைப்பைப் பெறுகையில் இணைப்பைப் பெற்றுத் தரும் நிறுவனம் அது. அந்நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் இணைய வலையில் இணைகிறீர்கள்.


    கேள்வி: சில வேளைகளில் புரோகிராம்களை மூடுகையில் பெரிய அளவில் டெக்ஸ்ட் கிளிப் போர்டில் இருக்கிறது. அதனை வைத்துக் கொள்ளவா? என்ற கேள்வி கேட்கப் படுகிறது. புரோகிராமினையே மூடுகையில் ஏன் இந்தக் கேள்வி? அப்படியே கிளிப் போர்டில் பைல் அல்லது டெக்ஸ்ட் இருந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது?

    கே.கருணாநிதி, காரைக்கால்


    பதில்: நீங்கள் எந்த புரோகிராமினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் அதில் கட் அல்லது காப்பி கட்டளையைப் பயன் படுத்துகையில் அவ்வாறு செய்யப் படும் டெக்ஸ்ட் அல்லது படம் அல்லது எந்த ஒரு ஆப்ஜெக்ட்டும் விண்டோஸ் இயக்கத் தின் கிளிப் போர்டில் வைக்கப் படும். புரோகிராம் மூடப்பட்டாலும் அது அங்கேயேதான் தங்கும். நீங்கள் வேறு புரோகிராமினைத் திறந்து அங்கும் கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட்டை ஒட்டிக் கொள்ளலாம்.


    இந்த கிளிப் போர்டில் ஒட்டப்படும் பிட் ராம் மெமரியில் இடம் எடுத்துக் கொள்கிறது. இதில் ஒட்டுவதற்கான கட்டளை எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. கிளிப் போர்டுக்குச் செல்லும் அனைத்தும் ராம் மெமரியில் தான் இருக்கும்.


    எனவே மிக அதிகமான அளவிலான படம் ஒன்றை காப்பி செய்தால் அது அதே அளவில் ராம் மெமரியை எடுத்துக் கொள்ளும். ராம் மெமரி என்பது நம் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையானத் தற்காலிக சமாச்சாரங்கள் தங்கி இயக்கப்படும் இடமாகும். இதில் அதிகமான இடத்தை ஒன்று எடுத்துக் கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் மெதுவாகும்.


    எடுத்துக்காட்டாக 32 எம்பி ராம் மெமரி இருக்கையில், நான் 10 எம்பி பட பைல் ஒன்றை கிளிப் போர்டுக்கு காப்பி செய்தால் அதனை அழிக்கும் வரை தொடர்ந்து அந்த இடம் காலி செய்யப்படாமல் இருக்கும். எனவே தான் ஒரு புரோகிராமினை மூடுகையில் உங்களுக்கு அந்த எச்சரிக்கை கிடைக்கிறது. எனவே அந்த எச்சரிக்கை கிடைக்கையில் அது வேண்டாம் என நம் விருப்பத்தினைத் தெரிவித்துவிடலாம். கிளிப் போர்டு காலி ஆவதுடன் ராம் மெமரியும் ரிலீஸ் ஆகும். அல்லது ஏதேனும் ஒரு சிறிய எழுத்தைக் காப்பி செய்தால் பெரிய பட பைல் எடுத்துக் கொண்டிருக்கும் இடம் காலி செய்யப்பட்டு சிறிய அளவிலேயே கிளிப் போர்டும் ராம் மெமரியும் பயன் படுத்தப்படும்.


    நீங்கள் Clipboard Viewer Edit Delete என்று சென்றும் அதில் உள்ளவற்றைக் காலி செய்திடலாம். கிளிப் போர்டு வியூவர் செல்வதற்கு Start, Programs, Accessories, System Tools எனச் செல்லவும்.
    நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர் 08/06/09

Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •