Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 104

Thread: கணினி வினா(டி) விடை.

                  
   
   
 1. #37
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  அக்டோபர் 19,2009

  கேள்வி: என்னிடம் இன்டெல் கோர் 2 டூயோ சிப் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் வைத்திருக் கிறேன். ராம் மெமரி 2 ஜிபி. ஹார்ட் டிஸ்க் 320 ஜிபி. இந்த ஹார்ட் டிஸ்க்கில் பேட் செக்டார் கள் சில உருவாகி உள்ளதாக ஹார்ட் டிஸ்க்கினை டிஸ்க் செக் செய்திடுகையில் தெரிந்தது.

  இது என்னுடைய ஹார்ட் டிஸ்க்கிற்கு கெடுதல் விளைவிக்குமா? பேட் செக்டார் என்பது சரியாக எதனைக் குறிக்கிறது? எதனால் இது ஏற்படுகிறது?


  –கி.மா. கல்யாணராமன், கோயம்புத்தூர்

  பதில்: பேட் செக்டார் என்பது ஹார்ட் டிஸ்க்கில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ள மிகச் சிறிய இடம். அன்றாட கம்ப்யூட்டர் செயல் பாடுகளில் இதனால் எந்தவிதப் பிரச்சினை யும் ஏற்படாது.

  நீங்கள் டிஸ்க்கை ஸ்கேன் செய்திடுகை யில் அந்த புரோ கிராம் இது போன்ற பாதிக்கப் பட்ட இடங்களை பேட் செக்டார் எனக் குறியிட்டு, மேற்கொண்டு அந்த இடத்தில் டேட்டா எதுவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் எழுதப்படாத வகையில் செய்கிறது.


  எதனால் ஏற்படுகிறது? இந்த கேள்விக்குப் பல பதில்களைக் கூறலாம். ஹார்ட் டிஸ்க் தயாரிக்கப் படுகையிலேயே இது ஏற்பட்டிருக் கலாம்; அடிக்கடி பயன்படுத்து வதனால் உருவாகி இருக்கலாம்; அல்லது ஹார்ட் டிஸ்க் இயங்கிக் கொண்டிருக்கையில் திடீரென மின்சக்தி நிறுத்தப்பட்டதனால் ஏற்பட்டிருக்கலாம்.


  இதனைச் சரி செய்திட முடியுமா? முயற்சிக்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஹார்ட் டிரைவில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.

  வரும் விண்டோவில் Tools என்னும் டேப்பில் கிளிக் செய்தால் அதில் உள்ள மூன்று பிரிவுகளில் முதல் பிரிவில் Error Checking என்ற பிரிவில் உள்ள Check Now பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் சிறிய விண்டோவில் இரண்டாவதாக உள்ள Scan for and Attempt Recovery of Bad Sectors என்ற பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.


  கேள்வி: நான் யாஹுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இப்போது அவ்வள வாகப் பயன்படுத்து வது இல்லை. மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

  ஆனால் யாஹூவில் என்னுடைய அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்தால், நிறைய தேவையற்ற, வேண்டாத மெயில்கள் வந்து இன்பாக்ஸை நிறைக்கின்றன. ஸ்பேம் பில்டரில் சில முகவரிகள் குறித்து கம்ப்ளைண்ட் ஏற்படுத் தினாலும், தேவையற்ற மெயில் கள் வருவது குறையவில்லை.

  குறிப்பாக லாட்டரி அடித்துள் ளது, நைஜீரியாவில் பேங்க்கில் உள்ள பணம் என்பது போன்ற மெயில்கள் நிறைய வருகின்றன. என் கேள்வி எல்லாம், பாஸ்வேர்டை மாற்று வது போல யூசர் ஐடியையும் மாற்ற முடியுமா? இந்த வகை யில் பெஸ்ட் இமெயில் தருபவர் யார்? இலவசமாகத்தான்.


  –நீ.அண்ணாத்துரை, சங்கரன்கோவில்


  பதில்: தனி நபர்களை அடையாளம் காண்ப தற்காக யூசர் ஐ.டி. தரப்படுகிறது. இதுவரை இதனை மாற்றச் சொல்லி யாரும் கேட்கவில்லை. நீங்கள் வேண்டு மானால் இன்னொரு பெயரில் புதிய அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொள்ளுங்களேன்.

  ஆனால் ஏற்கனவே ஏற்படுத்தியது வீணாகிப் போய்விடும். பெஸ்ட் இமெயில் (இலவ சமாகத்தான்) தருபவர் என எந்த இமெயில் சர்வீஸ் புரவைடரையும் கூற முடியாது. இதுவரை மிகவும் பாப்பு லரான இலவச இமெயில் புரவைடர் ஜிமெயில்தான்.

  நமக்கு வரும் இமெயில்களைக் கொண்டு வைக்க மிகப் பெரிய அளவில் பாக்ஸ்களைத் தருகின்றனர். மேலும் நீங்கள் பயன்படுத்த, பயன்படுத்த அதன் அளவு உயர்ந்து கொண் டே போகும்.

  இப்போது ஜிமெயில்களை உங்கள் கம்ப்யூட்டருக்கே கொண்டு வரும் பி.ஓ.பி3 (POP3) வசதியும் தரப்படுகிறது. மேலும் ஸ்பேம் மெயில் களை பில்டர் செய்திடும், நல்ல பில்டர் ஒன்று ஜிமெயில் தளத்தில் தரப்பட்டுள்ளது.


  கேள்வி: என் கம்ப்யூட்டர் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கு கிறது. கம்ப்யூட்டரை ஆன் செய்த வுடன் யாஹூ மெசஞ்சர் கட்டம் எழுந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் குளோஸ் செய்த பின்னரே, வேறு புரோகிராம்களை இயக்குகிறேன். இது எதனால் ஏற்படுகிறது? வைரஸ் எதுவும் வந்திருக்குமோ?

  – வி.சம்பத் குமார், கோயம்புத்தூர்


  பதில்: யாஹூ மெசஞ்சர் இன்ஸ்டால் செய்கையில், அந்த தொகுப்பை சிஸ்டம் இயங்கும் போதே இயக்குவா? என்ற கேள்விக்கு யெஸ் என்று பதில் கொடுத்திருப் பீர்கள். அது ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் பட்டியலில் சேர்ந்தி ருக்கும்.

  ஸ்டார்ட் அப்பட்டியலில் இருக்கும் அனைத்து புரோகிராம்களும், விண்டோஸ் இயக்கம் தொடங்கும்போது தொடங்கப் படும். எனவே தான் நீங்கள் கம்ப்யூட்டரைத் தொடங்கு கையில் யாஹு மெசஞ்சர் கட்டம் கிடைக்கிறது.

  இதனை நீக்க, ஸ்டார்ட் கீ அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் ரன் பட்டன் அழுத்தவும். இதில் msconfig என டைப் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும். இதில் ஸ்டார்ட் அப் என்று ஒரு டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் சிறிய விண் டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது இயக்கப்படும் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும்.

  இதில் வரிசையாகச் சென்று யாஹு மெசஞ்சரைக் கண்டுபிடித்து, அதன் தொடக் கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

  அதன்பின் அப்ளை கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மீண்டும் விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்தால் தான் இது இயக்கத்திற்கு வரும். அல்லது அடுத்த முறை ஸ்டார்ட் செய்யும் போது இயங்கும். அதனால் யாஹு மெசஞ்சர் கட்டம் கிடைக்காது.

  இந்த மாற்றங்களை மேற்கொள்கையில், நீங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டுள் ளீர்கள்; இதனால் வழக்கமாக இயங்கும் நிலையில் பிரச்சினை கிடைக்கலாம் என்றெல்லாம் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அதனை அலட்சியப்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். ஆனால் வேறு எந்தக் கட்டத்திலும் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டாம்.


  கேள்வி: அண்மையில் என்னுடைய கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் இடம் இல்லை என அடிக்கடி செய்தி வந்ததால், புதிய ஹார்ட் டிஸ்க் ஒன்றை நிறுவினேன். இப்போது எப்படி புரோகிராம்களை, அடோப் பேஜ் மேக்கர், அக்ரோபட் ரீடர், ஆபீஸ் ஆகியவற்றை எப்படி புதிய ஹார்ட் டிரைவிற்கு மாற்றுவது?

  –டாக்டர் மா. தையல்நாயகி, திண்டுக்கல்

  பதில்: புதிய ஹார்ட் டிரைவ் கூடுதலாக வாங்கி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். இனி உங்கள் கேள்விகளைப் பார்ப்போம். புரோகிராம்களை அப்படியே மாற்ற முடியாது. முதலில் உங்கள் பைல்களை மாற்றுங்கள். குறிப்பாக WAV, BMP, JPEG, MP3 ஆகிய பைல்கள் அதிக அளவு கொண்டவை.

  இவற்றை அப்படியே செலக்ட் செய்து புதிய டிஸ்க்கில் உள்ள போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்றவும். இரண்டு விண்டோக் களில் இவற்றைத் திறந்து அப்படியே கூடுமானவரை மொத்தமாக செலக்ட் செய்து மவுஸின் கர்சரை அழுத்தியவாறு இழுத்து விடவும்.

  இவ்வாறு அனைத்தையும் மாற்றிய பின் உங்களுக்குப் பழைய ஹார்ட் டிஸ்க் இடம் நிறைய கிடைக்கும். மேலும் திடீரென பழைய ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால் இந்த பைல்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். இதற்குப் பிறகும் புதிய ஹார்ட் டிஸ்க்குகளில் புரோகிராம்களை நிறுவ வேண்டும் என எண்ணி னால், பழைய டிஸ்க்கிலிருந்து அவற்றை அன் இன்ஸ்டால் செய்து,பின் புதிய டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும்.


  கேள்வி:என்னுடைய சாம்சங் செல்போனுக்குரிய பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். இதை எப்படி கண்டுபிடிப்பது?

  –டாக்டர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சுல்தான்பேட்டை


  பதில்: எந்த வகை பாஸ்வேர்ட், எதற்காக அமைத்தது என்று நீங்கள் விளக்கம் தரவில்லை. செட்டிங்ஸ் மெனு கிடைக்க முயன்றால், டிபால்ட் செட்டிங்ஸ் அமைத்து இயக்க முடியுமா என்று பார்க்கவும். இல்லையேல் இதற்கான வாடிக்கையாளர் மையம் சென்று சாப்ட்வேர் மறுபடியும் இன்ஸ்டால் செய்திடவும்.


  கேள்வி: இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்தி வந்த நான், தற்போது தண்டர்பேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு வரும் இமெயில்களை அனுப்பியவர் களின் பெயர்களை இதன் அட்ரஸ் புக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் டைப் செய்திடாமலேயே சேர்க்க வேண்டும். அதற்கான வழி என்ன?

  –பெ.பாஸ்கரன், மதுரை

  பதில்: மொஸில்லாவின் பயர் பாக்ஸிற்கு மாறியதால் தண்டர் பேர்டுக்கும் மாறிய தாக, உங்களின் நீண்ட கடிதத் தில் குறிப்பிட்டுள் ளீர்கள். எதனால் இந்த முடிவெடுத்துள்ளீர்கள் என இன்னொரு கடிதத்தில் கூறவும். சரி, உங்கள் பிரச்சினைக்கு வருவோம்.

  தண்டர்பேர்ட் ஒரு சிறந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் அட்ரஸ் புக்கினைக் கையாள்வது மிக மிக எளிது. ஆனால் பெயர் தவிர்த்து மற்ற தகவல்களை நீங்களாகத்தான் டைப் செய்திட வேண்டும்.


  நீங்கள் யாருடைய இமெயில் முகவரியை அட்ரஸ் புக்கில் சேர்க்க விரும்பு கிறீர்களோ அந்த இமெயில் மெசேஜை முதலில் திறந்து கொள்ளவும். பின் From என்பதில் உள்ள முகவரியில் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் சிறிய மெனுவில் Add to Address Book என்ற பிரிவில் கிளிக் செய்தால் விஸார்ட் ஒன்று கிடைக்கும்.

  இதில் அவரின் இமெயில் முகவரி தரப்பட்டி ருக்கும். மற்ற தகவல்களான அவரின் பெயர், செல்லப் பெயர், எப்படி திரையில் காட்டப்பட வேண்டும், அவரின் போன் எண் போன்ற உங்களிடம் இருக்கும் தகவல்களைத் தரவும். அனைத்து கட்டங்களும் நிரப்பப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் ஓகே கிளிக் செய்தால் இந்த முகவரி அட்ரஸ் புக்கில் நிரப்பப்பட்டுவிடும்.


  கேள்வி: விரைவில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 3ஜி சேவை மொபைல் போனில் வர இருக்கிறது என்கிறார்கள். ஆனால் 3ஜி போன் விலை யானை விலையாக உள்ளது. புதிய மொபைல் வாங்க இருக்கும் நான் இது போன்ற போனையே வாங்க இருக்கிறேன். பொறுத்துப் பார்த்து வாங்கலமா? விலை குறையுமா?

  –ஆர். லஷ்மி முரளிதரன், சென்னை


  பதில்: அருமையான கேள்வி. பல வாசகர்கள் மட்டுமல்ல, என் மனதிலும் இந்த எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் 3ஜி சுனாமி நம் மொபைல் மார்க்கட்டைச் சூழ்ந்து கொள்ளப்போகிறது.

  இப்போதே விநாடிக்கு ஒரு பைசா என்ற ஒரு புயல் அனைத்து நிறுவனங் களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு, வாடிக்கை யாளர்களுக்குத் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது.


  இன்னும் இரண்டொரு மாதங்களில் 3ஜி நிச்சயம் வர இருக்கிறது. ஒரு புறம் 3ஜி வசதி தரும் மொபைல் இணைப்பு சேவை நிறுவனங்கள் மக்களைக் கவர பல திட்டங்களுடன் போட்டியிடப் போகிறார்கள்.

  மொபைல் போன் நிறுவனங்களும் 3ஜி தரக்கூடிய பல மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்து வார்கள். நிச்சயம் போட்டியில் இவற்றின் விலை தொடர்ந்து குறையும். எனவே நீங்கள் வாங்கப் போவது உங்களுக்கான இரண்டாவது போனாக இருக்கும் பட்சத்தில் இன்னும் நான்கு மாதங்கள் பொறுத்திருந்து பின் வாங்குவதே சிறந்தது.


  கேள்வி: என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிகவும் குறைவாக இருப்ப தாகச் செய்தி வருகிறது. இடம் குறைவாக இருப்பதனை எப்படி அறிவது?

  –எஸ். நீதிராஜன், தேனி


  பதில்: மிகவும் சுலபம். ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும்.

  உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ் களுக்கான ஐகான்கள் கிடைக் கும். இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும்.

  இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட் டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடு த்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும். இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

  படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப்பட்டிருக்கும். டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும். இந்த விண்டோவில் மற்ற பிரிவுகளுக் கான டேப்களும் தரப்பட்டி ருக்கும்.

  டிரைவில் உள்ள பைல்களைச் சுருக்கு வது, டிபிராக்மெண்ட் செய்வது போன்ற செயல்க ளுக்கான டேப்கள் இருக்கும். இவற்றைக் கிளிக் செய்து பார்ப்பதோடு நின்று விடுங்கள். ஏதாவது எசகு பிசகாக செட்டிங்ஸ் மாற்றி விட்டால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.


  கேள்வி: நோட்பேட் புரோகி ராமில் சில பைல்களை உருவாக் கினேன். இதனை பிரிண்ட் செய்கையில் மார்ஜின் மற்றும் பிறவற்றை எப்படி செட் செய்திடலாம்?

  –டி. சிவநேசன், பழநி

  பதில்: நோட்பேட் தொகுப்பு உங்கள் பிரிண்ட் வேலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த உங்களுக்கு உதவுகிறது.

  நீங்கள் கேட்டபடி மார்ஜின் மற்றும் ஹெடர், புட்டர்களையும் மாற்றி அமைக்க உதவுகிறது. நோட்பேடினைத் திறந்து பைல், பேஜ் செட் அப் செல்லவும். இங்கு பேப்பர் அளவு மற்றும் மார்ஜின் அளவை செட் செய்திடலாம். இவை நமக்கு விளங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


  ஆனால் அதற்குக் கீழாகப் பார்க்கையில் ஹெடரிலும் புட்டரிலும் "&f" / "Page &p" என அமைக்கப்பட்டிருக்கிறதே அது என்ன என்று நீங்கள் வியக்கலாம். முதலாவதாக ஹெடரில் தரப்பட்டி ருக்கும் குறியீடு, பைல் பெயரை டைப் செய்திட வழி தருகிறது. அடுத்ததாக புட்டரில் தரப்பட்டிருக்கும் குறியீடு பக்க எண்ணை பிரிண்ட் செய்திடத் தரப்பட்டுள்ளது.


  உங்களுக்குச் சரியான குறியீடு தெரியும் என்றால் இவற்றையும் மாற்றலாம்; அல்லது இணைக்கலாம். "&d" – அன்றைய தேதியை அச்சிடும். "&t" – அப்போதைய நேரத்தை அச்சிடும். நேரத்தைக் கம்ப்யூட்டரிலிருந்து பெற்றுக் கொள்ளும். "&&" ஒரு அடை யாளத்தை அச்சிடும்.

  இந்த ஹெடர் மற்றும் புட்டரில் அச்சடிப்பதை இடது, வலது அல்லது நடுவில் என அலைன் செய்திட வேண்டுமா? இதோ அதற்கான குறியீடுகள். இடதுபுறம் என்றால் "&l" . நடுவில் என்றால் "&c" வலது புறம் என்றால் "&r" எடுத்துக்காட்டாக &l &d &r &p எனக் கொடுத்தால் தேதி இடதுபக்கமும்,

  பக்க எண் வலது பக்கமும் ஒதுக்கி அச்சடிக்கப்படும். இந்த ஹெடரில் உங்கள் சொற்களையும் டைப் செய்திடலாம்.
  இவ்வளவு விஷயங்கள் நோட்பேடில் இருக்கிறது என்று இதுவரை தெரிய வில்லையே என்று நீங்கள் ஆச்சரியப் படுவது எனக்குப் புரிகிறது.


  கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த அப்ளிகேஷனைத் திறந்தாலும் அதில் வலது பக்கம் ஒரு கட்டம் வருகிறது. இதில் Getting Started எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதனை மூடவேண்டியுள்ளது. இது எதற்கு வருகிறது? ஏன் இந்த ஏற்பாடு என்று புரியவில்லை. விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  –கா. நமச்சிவாயம், பல்லடம்


  பதில்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளின் அமைப்பி லேயே அது போல அமைக்கிறது. இதற்கு Startup Task Pane என்று பெயர். இது ஒரு வழிக்கு நல்லதுதான். இதன் மூலம் நமக்குத் தேவையான உதவி களைப் பெறலாம்.

  நாம் முன்பு திறந்து பார்த்த பைல்களின் பட்டியல் இருக்கும். அதில் நமக்கு வேண்டிய பைல் மீது கிளிக் செய்து பைலைத் திறக்கலாம். இருப்பினும் நீங்கள் அதனை விரும்பாததால் அந்த Task Pane கட்டம் இல்லாமல் திறக்க ஒரு வழி சொல்கிறேன். வேர்டைத் திறந்து "Tools" பின் "Options" செல்லவும்.

  கிடைக்கின்ற டேப்கள் நிறைந்த விண்டோவில் முதலாக உள்ள View என்னும் டேப்பைத் தேர்ந்தெடுத்து அதில் முதலாவதாக உள்ள Show என்பதன் கீழ் பார்க்கவும். இதிலும் முதலாவதாக Startup Task Pane என்று இருக்கும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

  பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் வேர்டைத் திறக்கையில் வலது பக்கம் டாஸ்க் பேன் வராது. முழு பக்கமும் உங்கள் பயன்பாட்டிற்கே கிடைக்கும்.

  நன்றி.தினமலர்.

 2. #38
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: யு–ட்யூப் வீடியோவில் பார்மட் மாற்ற நீங்கள் காட்டிய கன்வெர்ட் ட்யூப் புரோகிராம், வேலை செய்யவில்லை. அதாவது எப்.எல்.வி. பார்மட் வீடியோ வினை ஏ.வி.ஐ. பார்மட்டுக்கு மாற்ற முடியவில்லை. இவ்வாறு மாற்றி அதனை டிவிடி அல்லது விசிடியாக பதிய வேண்டும். இதற்கான புரோகிராம் ஒன்றைக் கூறவும்.


  பேரா. எம்.கே. நடராஜன்,

  தர்பாரி மூத்தோர் இல்லம், கோவை


  பதில்: யு–ட்யூப் வீடியோக் களை டவுண்லோட் செய்வதற் கும், டவுண்லோட் செய்த வற்றின் பார்மட்களை மாற்று வதற்கும் பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் உள்ளன. சில குறிப்பிட்ட பார்மட்டுகளை மட்டும் மாற்றும் தன்மை கொண்டவையாக வடிவமைக் கப்பட்டிருக்கலாம்.

  இருப்பினும் உங்கள் தேவைக்குக் http://www.nchsoftware. com/prism/prismsetup.exe என்ற முகவரி யில் கிடைக்கும் பிரிசம் வீடியோ கன்வெர்டர் சாப்ட்வேர் என்ற புரோகிராம் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

  இது ஏ.வி.ஐ., எம்பி4, டபிள்யூ எம் வி, எம் ஓ வி, எம்பெக், எப்.எல்.வி. மற்றும் பல பார்மட்களிடையே மாற்றங்களைத் தருகிறது. இதன் இன்னொரு சிறப்பு என்ன வென்றால் நூற்றுக் கணக்கான பைல்களை மொத்தமாக பேட்ச் வீடியோ கன்வெர்டராக மாற்றுகிறது. மேலும் எந்த அளவில் பைல் வேண்டும் என்பதனை இதில் வரையறை செய்து கொள்ளலாம்.

  பார்மட் மாற்றும் முன் சாம்பிள் பைலைப் பார்த்துப் பின் தேர்ந்தெடுக்கலாம்.

  வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியாத தனிநபர் பதிப்பு இலவசமாக இந்த தளத்தில் கிடைக்கிறது. மேலும் மேக் கம்ப்யூட்டருக்கான பதிப்பும் கிடைக்கிறது.

  இன்னொரு புரோகிராம் உங்கள் தேவைக்கு மட்டும் என்றபடி கிடைக்கிறது. FLV to AVI Converter என்பது இதன் பெயர். http://www.download3000.com/download_18966 .html என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.

  இந்த புரோகிராம் புதியதாக வந்துள்ள மேம்பட்ட ஒரு பிளாஷ் புரோகிராம் டூல். இது பிளாஷ் வீடியோ () மற்றும் அடோப் பிளாஷ் பைல்களை குறிப்பிட்ட கிராபிக் பார்மட் களுக்கு மாற்றுகிறது.


  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் நிறைய உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறோம். செய்திகள் அனுப்பும் வேலையில் இருப்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டாகுமெண்ட்டில் உள்ள சொற்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்கும். வேர்டில் இதற்காக வேர்ட் கவுண்ட் வசதியைப் பயன்படுத்துகிறோம்.

  சில வேளைகளில், டாகுமெண்ட் இருந்தும் வேர்ட் 0 எனக் கிடைக்கிறது. இந்த தவறு ஏன் நேர்கிறது என்று தெரியவில்லை. எப்படி இதனைச் சரி செய்திடலாம்?


  –எம். ஸ்ரீநிவாசன், தாம்பரம்


  பதில்: கம்ப்யூட்டரில் சில வேளைகளில் மட்டுமே தவறுகள் ஏற்படுகையில், அந்த தவறு நேர்வதற்கு முன் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது பொதுவான தேவை.

  அநேகமாக இந்த டாகுமெண்ட்டுக்கான சொல் கவுண்ட் கட்டளை கொடுக்கும் முன் நீங்கள் ஏதாவது ஒரு படம், கிராபிக்ஸ் செலக்ட் செய்திருக்கலாம். வேர்ட் கவுண்ட் செயல்பாடு எந்த டாகுமெண்ட்டும் செலக்ட் ஆகாத போது, ஏற்கனவே செலக்ட் செய்யப்பட்டு கிளிப் போர்டில் உள்ளதை எண்ணிப் பார்த்துச் சொல்லும்.

  எனவே கர்சரை டாகுமெண்ட்டின் உள்ளாக வைத்து மீண்டும் வேர்ட் கவுண்ட் கட்டளை கொடுக்கவும்.


  கேள்வி: என்னிடம் உள்ள கம்ப்யூட்டருடன் இன்டர்நெட் இணைப்பு இல்லாததால், எங்கள் ஊரில் இன்டர்நெட் இணைப்பு இன்னும் தரப்படாததால், ஆண்ட்டி வைரஸ் பேக்கேஜ் களை அப்டேட் செய்திட முடி வதில்லை. எனவே வைரஸ்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த வகை பைல்களைத் தாக்க முயற்சிக்கும் என்று சொன்னால் நான் கவனமாக இருப்பேன்.

  –எஸ். மூர்த்தி, டி.கல்லுப்பட்டி


  பதில்: உங்கள் ஊரில் நிச்சயம் இன்டர்நெட் வந்திருக்க வேண்டு மே. இல்லை என்றா லும் வயர்லெஸ் இன்டர்நெட் இணை ப்பிற்கு முயற்சி செய்தி டுங்கள். மேலும் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால்,

  வைரஸ்கள் வருவதில் 50% வாய்ப்புகள் குறைந்துவிடும். மற்றபடி நீங்கள் பயன்படுத்தும் பிளாப்பி டிஸ்க் மற்றும் சிடிக்கள் வழியாக வைரஸ் வரலாம். இருப்பினும் உங்கள் கேள்வி பொதுவான தன்மையையும் கொண்டுள் ளதால் இதோ பதில்.


  வைரஸ்கள் பொதுவாக ஒரு பைலை இயக்கும் எக்ஸிகியூட் டபிள் கோட் என்பதனை எளிதாகக் கைப்பற்றி சேதத்தை ஏற்படுத்தும். புரோகிராம் பைல்கள் என்பதை மட்டுமே கைப்பற்றும் என்பது தவறு.

  எடுத்துக் காட்டாக பிளாப்பி டிஸ்க்கில் உள்ள பூட் செக்டாரை எளிதில் கைப்பற்றி அதனைச் செயலிழக்க வைக்கும்.

  அல்லது கம்ப்யூட்டர் அதனை இயக்குகை யில் கம்ப்யூட்டருக்குள் சென்று தாக்கும். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்கிலும் சிஸ்டம் ஏரியாவில் உள்ள எக்ஸிகியூட்டபிள் செக்டா ரைப் பாதிக்கும்.


  இன்னொரு வைரஸ் டைப் ஒன்று பொதுவாக எங்கும் பார்க்கலாம். இவை மேக்ரோ வைரஸ் என அழைக்கப் படுகிறது. வேர்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்கள் மேக்ரோக்களை அதிகம் பயன்படுத்துவதால் இந்த வகை வைரஸ்கள் திருட்டுத்தனமாக இந்த புரோகிராம்களுக்குள் நுழைந்து கம்ப்யூட்டரின் இயக்கத்தைக் கெடுக்கும் வேலைகளில் இறங்கும்.

  மேலும் ஜாவா ஸ்க்ரிப்ட் அதிகம் பயன்படுத்தும் எச்.டி.எம். எல்.பைல்களிலும் (ஒரு இயக்கத்தைத் தொடங்கி இயக்கும்) எக்ஸிகியூடபிள் கோட் இருப் பதால் அதனை யும் வைரஸ்கள் எளிதாகக் கைப்பற்றி செயல் படும்.

  ஆனால் இவற்றை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். எனவே வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு வழிகளை எப்படி யாவது அப்டேட் செய்திடப் பாருங்கள்.

  உங்கள் ஊர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் என்னும் ஊரில் பொறியியல் பல்கலைக் கழகம் இயங்குகிறதே. அங்கிருந்து நிறைய மாணவர்கள் நம் இதழுக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார்கள். அவர்களைச் சந்தித்து இன்டர்நெட் இணை ப்பு குறித்து விசாரிக்கவும்.


  கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதில் சிஸ்டம் ஷட் டவுண் செய்திடுகையில் கிடைக்கும் விண்டோவில் எனக்கு Standby, Turn Off, Restart மட்டுமே கிடைக்கிறது. ஹைபர் னேட் கிடைக்க வில்லை. இதனை எப்படிப் பெறுவது?

  –ச. தம்பிராஜ், பொள்ளாச்சி


  பதில்: இல்லை; அது உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. ஸ்டார்ட், டர்ன் ஆப் கம்ப்யூட்டர் கிளிக் செய்தால் கிடைக்கும் விண் டோவில் நீங்கள் குறிப்பிட்ட மூன்றும் கிடைக்கிறதல்லவா?

  இப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த விண்டோவினைப் பார்க்கவும். இப்போது Standby என்பது Hibernate என மாறி இருக்கும்.
  என்ன ஆகலையா? சரி, பரவாயில்லை. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னும் Hibernate செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை போல் தெரிகிறது.

  அதைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். ஸ்டார்ட் அழுத்தி கண்ட் ரோல் பேனல் பெறவும். கேடகிரிவியூவில் ‘Performance and Maintenance’ சென்று பின் ‘Power Options’ ’என்பதனைத் தேர்ந் தெடுக்கவும்.

  இதில் Hibernate என்ற டேப்பைத் தேர்ந் தெடுக்கவும். பின் Enable Hibernation என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி ஹைபர் னேஷன் உங்களுக்குக் கிடைக்கும்.


  கேள்வி: நான் என்னுடைய போல்டர் லாக்கர் பாஸ்வேர் டினை மறந்துவிட்டேன். இலவச பாஸ்வேர்ட் வியூவர் சாப்ட்வேர் ஒன்று கூறவும். மறந்ததைப் பெற.

  –அ.ஷமியுத்தீன், கடலூர்


  பதில்: பாஸ்வேர்ட் மறந்தால் ஒன்றும் செய்திட முடியாது. இதற்கான தேர்ட்பார்ட்டி சாப்ட்வேர்கள் எல்லாம் பயன்தரும் என்றும் உறுதி கூற முடியாது. போல்டரை மறந்துவிட வேண்டியதுதான்.

  நன்றி.தினமலர்.அக்டோபர் 25,2009
  Last edited by நூர்; 30-10-2009 at 04:56 AM.

 3. #39
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிகவும் குறைவாக இருப்பதாகச் செய்தி வருகிறது. இடம் குறைவாக இருப்பதனை எப்படி அறிவது?


  –எஸ். நீதிராஜன், தேனி

  பதில்: மிகவும் சுலபம். ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கான ஐகான்கள் கிடைக்கும்.

  இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும்.

  இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப் பட்டிருக்கும்.

  டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும். இந்த விண்டோவில் மற்ற பிரிவுகளுக்கான டேப்களும் தரப்பட்டிருக்கும். டிரைவில் உள்ள பைல்களைச் சுருக்குவது, டிபிராக்மெண்ட் செய்வது போன்ற செயல்களுக்கான டேப்கள் இருக்கும்.

  இவற்றைக் கிளிக் செய்து பார்ப்பதோடு நின்றுவிடுங்கள். ஏதாவது எசகுபிசகாக செட்டிங்ஸ் மாற்றி விட்டால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.


  கேள்வி:என்னுடைய சாம்சங் செல்போனுக்குரிய பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். இதை எப்படி கண்டுபிடிப்பது?

  –டாக்டர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சுல்தான்பேட்டை


  பதில்: எந்த வகை பாஸ்வேர்ட், எதற்காக அமைத்தது என்று நீங்கள் விளக்கம் தரவில்லை. செட்டிங்ஸ் மெனு கிடைக்க முயன்றால், டிபால்ட் செட்டிங்ஸ் அமைத்து இயக்க முடியுமா என்று பார்க்கவும். இல்லையேல் இதற்கான வாடிக்கையாளர் மையம் சென்று சாப்ட்வேர் மறுபடியும் இன்ஸ்டால் செய்திடவும்.


  கேள்வி: நான் ஆப்பரா பிரவுசர் குறித்து அண்மையில் நிறைய தெரிந்து கொண்டேன். இந்த தொகுப்பு மற்றவை போல இலவசமாகக் கிடைக்கிறதா? அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி என்ன?

  –செ.ராமலிங்கம், மதுரை

  பதில்: நல்ல முயற்சி. இலவசமாகக் கிடைக்கிறது. அண்மைக் காலத்திய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். இணைய தள முகவரி : http://www.opera.com/ download/


  கேள்வி: ஆல்ட் கீ தனியாக எந்த செயல்பாட்டுக்கும் பயன்படாதா? ஒன்றுடன் இணைத்து மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? ஏன் இதனை ஆல்ட் கீ என அழைக்கிறோம்?

  – கா. மணவாளன், சிங்கம்புணரி


  பதில்: நல்ல கேள்விகள். இதனை ஆல்ட் (ALT) என அழைப்பதற்குக் காரணம் அது ALTERNATE என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகும். இதன் பொருள் “இரண்டில் ஒன்று” என்பதாகும். இந்த கீயைப் பொதுவாக சில கீகளுடன் இணைந்தே பயன்படுத்துகிறோம். அப்படிப் பயன்படுத்தும் போது இணையும் கீயின் வழக்கமான செயல்பாட்டிற்குப் பதிலாக அந்த புரோகிராமின் தன்மைக்கேற்ப புதிய பயன்பாடு கிடைக்கும்.

  எடுத்துக்காட்டாக F கீ அழுத்தினால் ஆங்கில எழுத்து F வரும். இதனை ஆல்ட் கீயுடன் இணைந்து அழுத்தினால் வேறு செயல்பாடு கிடைக்கும். சில இடங்களில் ஆல்ட் கீயைத் தனியே அழுத்திச் சில பயன் பாடுகளை மேற்கொள்ள லாம். எடுத்துக் காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 தொகுப்பில் பழைய பைல் மெனு இருப்பதில்லை.

  ஆல்ட் கீ அழுத்தினால் இடது மேல் புறத்தில் பழைய மெனு கிடைப்பதனைப் பார்க்கலாம். ஆனால் இது போன்ற தனிச் செயல்பாடுகள் குறைவுதான்.


  கேள்வி: வேர்டில் பேக்கப் பைல் என்றால் என்ன? இது எதற்கு பயன்படுகிறது?

  –கரு.சின்னசாமி, செங்கல்பட்டு

  பதில்: வேர்ட் போன்ற தொகுப்புகளில், டாகுமெண்ட் பைல்களின் பேக்கப் பைல்கள் உருவாகின்றன. நீங்கள் இறுதியாக சேவ் செய்திடுவதற்கு முன் வரை உள்ள பைல், பேக்கப் பைலாக சேவ் செய்து வைக்கப் படுகிறது.

  ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களுடைய ஒரிஜினல் பைல் கெட்டுப் போய் அதனை மீட்க முடியாத போது இந்த பேக்கப் பைலைத் திறந்து தனியாக சேவ் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.


  கேள்வி: நான் தீபாவளிக்கு ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கினேன். படங்களை நன்றாக எடுக்க முடிகிறது என்றாலும், சில ஐகான்கள் திரையில் தெரிகின்றன. இவை பலவகையான மோட் எனக் கூறுகின்றனர். இவை என்ன செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  –கே. திருவாசகம், காரைக்குடி


  பதில்: டிஜிட்டல் கேமராவில் தோன்றும் ஐகான்களின் இடம் ஒவ்வொரு கேமரா விலும் மாறுபடும் என்றாலும், இவை தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். எனவே சுருக்கமாக அவற்றைப் பட்டியலிடுகிறேன்.

  ஆட்டோமேடிக் (Automatic):
  ------------------------------
  இது டிஜிட்டல் கேமராக்களில் தானாக செட் செய்யப்பட்டு வருவது. இது Auto எனச் சுருக்கமாக இருக்கலாம். இது தானாகவே கேமராவிற்கான பிளாஷ், போகஸ், எக்ஸ்போஷர் ஆகியவற்றை செட் செய்திடும். சாதாரணமான படங்கள் எடுக்க இதனைப் பின்பற்றினால் போதும். ஏதேனும் ஸ்பெஷல் எபக்ட் தேவை என்றால் மற்றவற்றை நாட வேண்டும்.

  குளோஸ் அப் (Close up):
  -----------------------
  ஏதேனும் ஒரு பொருளை அல்லது நபரை மிகவும் நெருக்கமாகச் சென்று போட்டோ எடுக்க விரும்பினால், இதனைப் பயன்படுத் தலாம். இதனைப் பயன்படுத்துகையில் பிளாஷ் தானாக செட்டிங் அமைத்துக் கொள்ளாது. எனவே அதனை நீங்களே செட் செய்திட வேண்டியதிருக்கும்.


  லேண்ட்ஸ்கேப் (Landscape):
  ---------------------------
  மிகத் தொலைவாக ஒரு பொருளை அல்லது நபரை போட்டோ எடுக்க வேண்டும் என்றால் இதனைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். இந்த வகை படங்கள் எடுக்கையில் பிளாஷ் இயக்கப்படாமல் இருப்பது நல்லது. இந்த மோட் சில கேமராக்களில் 8 என்ற எண்ணாலும் காட்டப்படும்.


  ஸ்போர்ட் மோட்(Sport mode):
  ----------------------------
  நகரும் உருவங்களை அதிக அளவில் எடுக்கையில் இந்த மோட் உங்களுக்குப் பயன்படும். இந்த மோடைத் தேர்ந்தெடுக்கையில், கேமரா தன் ஷட்டர் ஸ்பீடை மிக வேகமான நிலையில் செட் செய்து கொள்ளும்.


  நைட் மோட் (Night Mode):
  ----------------------------
  மிகக் குறைந்த ஒளியில் படங்களை எடுக்கையில் இதனைப் பயன்படுத்தலாம். அல்லது இரவு ஒளியில் பயன்படுத்தலாம். இந்த மோடில் ஷட்டர் ஸ்பீட் மிக மிகக் குறைவாகத் தானாக செட் செய்யப்படும். பிளாஷ் தானாக இயங்கிக் கொள்ளும்.

  இதற்கான ஐகான்கள் பொதுவாக ஒவ்வொரு கேமராவிற்கும் மாறுபடும்.
  போர்ட்ரெய்ட் மோட் (Portrait Mode): இது பொதுவாக போட்டோ எடுக்கும் நபர்களின் முகங்களைக் குறி வைக்கையில் பயன்படுகிறது.

  இதன் மூலம் போட்டோ ஒன்றில் உள்ள அதன் பின்புலம் சிதைவது தடுக்கப்படுகிறது. இவ்வகையில் போட்டோ எடுக்கையில் வழக்கமாக ரெட் ஐ ரிடக்ஷன் என்பது இயக்கப்படும். இல்லையேல் இயக்கிக் கொள்ள வேண்டும்.

  வீடியோ மோட் (Video Mode):
  --------------------------------
  சிறிய அளவிலான வீடியோ படங்களை எடுக்க இந்த மோட் வகையைப் பயன்படுத்தலாம்.

  மேனுவல் மோட் (Manual Mode):
  ----------------------------------
  இதனை யும் நாம் அடிக்கடி பயன்படுத்தலாம். உங்கள் டிஜிட்டல் கேமராவின் முழு கண்ட்ரோல், இந்த வகையில் உங்களிடமே இருக்கும். அபர்ச்சர், ஷட்டர் ஸ்பீட் என அனைத்தும் நீங்களே செட் செய்திடலாம்.


  கேள்வி: புரோகிராம்களுக்கு ஸ்கின்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கும்; தோற்றத்தை இதன் மூலம் மாற்றலாம் என்று நான் படித்துள்ளேன். இந்த ஸ்கின் என்பது என்ன? புரோகிராம்களில் இவை என்ன செய்திடும்?

  –எஸ்.சுதர்சன ராஜன், பொள்ளாச்சி


  பதில்: இங்கு குறிப்பிடப் படும் ஸ்கின்கள் ("Skin") மிருகங்களுடன் சம்பந்தப் பட்டவை அல்ல. ஒரு புரோகிரா மிற்கான யூச ர் இன்டர்பேஸ் என்று சொல்லப் படும் கட்டங் கள் மற்றும் பிறவற்றின் தோற்றங்களுக்கு அழகு தரும் சிறிய கிராபிக்ஸ் பைல்களாகும்.

  இவற்றை தீம்ஸ் (Themes) எனவும் அழைப்பார்கள். இவற்றைத் தயாரித்து பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. சில புரோகிராம்களில் இவை இணைந்தே கிடைக்கும். விண் ஆம்ப், ரியல் ஒன், விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற பிரபலமான மீடியா பிளேயர் கள் இந்த ஸ்கின்களை புரோகிராம்களுடன் வழங்கு கின்றன.

  நம் விருப்பத்திற் கேற்ப இவற்றை மாற்றிக் கொள்ளலாம். அதாவது புரோகிராமின் தோற்றத்தை மாற்றலாம். பயர்பாக்ஸ், ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களும் இந்த ஸ்கின்களைக் கொண்டுள் ளன. மற்ற சாப்ட்வேர் தயாரிப் பவர்களும் இந்த பிரவுசர் களுக்கு ஸ்கின்களைத் தந்து வருகின்றன.

  அவ்வப்போது இந்த ஸ்கின்களை மாற்றினால் நமக்கும், இவை ஒரே மாதிரி யான தோற்றம் இல்லாமல் மாற்றத்துடன் காட்சி அளிப்பது சற்று புத்துணர்வாக இருக்கும்.


  கேள்வி: டிவிடிக்களில் டிவிடி மைனஸ் ஆர் என்றும், டிவிடி ப்ளஸ் ஆர் என்று சிலவும் உள்ளன. இரண்டிற்கும் விலையும் வேறுபடுகிறது. இதில் எது மிகச் சிறந்தது? ஏன் இந்த வேறுபாடு?

  –சி. புஷ்பராணி, மதுராந்தகம்


  பதில்: அவ்வளவாக ஒன்றும் வேறுபாடு இல்லை. இதில் டேட்டா எழுதும் விதம் தான் வேறுபடுகிறது. இந்த இரண்டில் டிவிடி மைனஸ் ஆர் என்ப து பழைய பார்மட்.

  இப்போது வருகின்ற அனைத்து டிவிடி பிளேயர்களுடன் இயங்கும் வகையில் டிவிடி +ஆர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் பிளேயர்கள் பொதுவாக இரண்டு வகை டிவிடிக் களையும் இயக்கு கின்றன. இரண்டிலும் எழுதுகின்றன.

  நன்றி.தினமலர்.நவம்பர் 01,2009

 4. #40
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: பட பைல்களை உருவாக்கும்போதும் எடிட் செய்திடும்போதும் அதனை ஏன் ஜேபெக் பார்மட்டில் கொண்டு வர வேண்டும் என்று சொல்கின்றனர். இதன் சிறப்பு என்ன? அந்த பெயர் எதனைக் குறிக்கிறது?


  –நா.ஸ்ரீனிவாசன், திருப்பூர்


  பதில்: நல்ல கேள்வி. சுருக்கமாகப் பதில் தருகிறேன். Joint Photographic Experts Group என்பதன் சுருக்கம் தான் ஜேபெக் (JPEG) என்பது. ஜேபெக் பைல் என்று ஒன்றைக் குறிப்பிடுகையில் இந்த குரூப் வடிவமைத்த பார்மட்டில் உள்ள பட பைலைக் குறிப்பிடுகின்றோம்.

  இவை டிஸ்க் இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக சுருக்கப்படுகின்றன. பொதுவாக இவை போட்டோக்களாக இருக்கும். சில வேளைகளில் உருவாக்கப்பட்ட படங்களாகவும் இருக்கும். சாதாரணமாக 250 கேபி அளவில் உள்ள ஒரு பி.எம்.பி. பார்மட்டில் உள்ள பட பைலை,

  ஜேபெக் பார்மட்டுக்குக் கொண்டு வருகையில் அது 35 கேபி அளவில் சுருக்கப்பட்டுவிடும். இந்த வேலையில் படம் சார்ந்த தகவல்கள், அதன் தன்மையைக் கெடுக்காத வகையில் இழக்கப்படும்.


  பொதுவாக படங்களை எடிட் செய்யக்கூடிய அனைத்து புரோகிராம்களும், ஜெபெக் பார்மட்டினைக் கையாளுவதாலும், இந்த பார்மட்டில் அமையும் பைல்களின் டிஸ்க் ஸ்பேஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும்

  ஜெபெக் பார்மட்டிலேயே படங்கள் இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். படங்களின் தன்மை மிகவும் உயர் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும் எனில் பி.எம்.பி. போன்ற மற்ற பார்மட்கள் விரும்பப்படுகின்றன.


  மேலும் இது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் http://www.faqs.org/faqs/jpegfaq/part1/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


  கேள்வி: இமெயில் பார்ப்பதற்கு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துகிறோம். என் வீட்டில் மூன்று பேர் இதனைப் பயன்படுத்துகிறோம்.

  அவ்வப்போது இமெயில் கடிதங்களை அழித்தாலும் அவை டிஸ்க்கில் ஸ்பேஸ் எடுத்துக் கொள்ளும். எனவே அவற்றை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுகின்றனர். இதற்கு எப்படி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?


  –என். தனுஷ்கோடி, திருத்தணி


  பதில்: இமெயில் செய்திகளை அழிக்கையில் எக்ஸ்பியில் உள்ள அவுட்லுக் எக்ஸ்பிரஸ், அவற்றை உடனே அழிக்காமல்


  "Deleted Items"


  என்ற போல்டரில் வைத்துக் கொள்கிறது. எனவே நாம் கடிதங்கள் வந்து தங்கும் இன்பாக்ஸில் உள்ள மெயில்களை மொத்தமாகக் காலி செய்திடுகையில், அவை இந்த டெலீட்டட் ஐட்டம்ஸ் போல்டரில் தங்கி ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பிடிக்கின்றன.

  இதற்குப் பதிலாக, அவை அழிக்கப்படும்போதே இந்த போல்டருக்குச் செல்லாமல் முற்றிலுமாக நீக்கப்படுவதற்கான செட்டிங்ஸை அமைக்கலாம். இதற்கு முதலில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பைத் திறந்து கொண்டு பின் Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.

  இப்போது பல டேப்கள் அடங்கிய Options என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Maintenance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

  இதன் கீழாக "Cleaning up Messages" என்ற வரியைத் தேர்ந்தெடுத்து "Empty messages from the ‘Deleted Items’ folder on exit" என்பதில் டிக் அடையாளத்தை உருவாக்கவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனிமேல் நீங்கள் கடிதங்களை அழிக்கையில் அவை கம்ப்யூட்டரை விட்டே நீக்கப்படும்.


  கேள்வி: அண்மையில் வேர்ட் குறித்த கட்டுரையில் எம்.ஆர்.யு. (MRU) என்று போட்டிருந்தது. இறுதி வரை அதன் முழு விரிவாக்கம் தரப்படவில்லை. நீங்கள் வாராவாரம் தரும் லிஸ்ட்டிலும் இது இல்லை. இந்த சுருக்குச் சொல் எதனைக் குறிக்கிறது?

  –ஜே.பி. வள்ளிமுத்து, சிவகாசி


  பதில்: சில சுருக்குச் சொற்கள் எப்போதாவது சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப் படுவதால் நாம் அறியாமலே இருக்கிறோம். வேர்ட் புரோகிராம் மட்டுமல்ல,

  மற்றவற்றிலும் (MRU) என்பது அண்மையில் பயன்படுத்திய பைல்களைக் (Most Recently Used) குறிக்கும். வேர்ட் புரோகிராம் திறந்தவுடன், பைல் மெனுவினைக் கிளிக் செய்தால் கீழ் பிரிவில் 1,2,3,4 எனப் பட்டியலிட்டு, நீங்கள் அண்மையில் உருவாக்கிய அல்லது எடிட் செய்த பைல்களின் பட்டியலைத் தரும்.

  இந்த பட்டியலில் உள்ள பைல்களின் எண்ணிக்கையை 9 ஆக்கும் செட்டிங்ஸ் பற்றி சென்ற இதழில் டிப்ஸ் பட்டியலில் தரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். வேர்ட் 2007 தொகுப்பில் இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கலாம்.


  கேள்வி: வேர்ட் புரோகிராமில் ஆரோ கீகளைப் பயன்படுத்துகையில் எப்படி சொற்கள் அளவில் வேகமாக நகர்த்துவது? சில வேளைகளில் பாரா பாராவாகத் தாவமுடியும் என்று சொல்கின்றனரே! விளக்கவும்.

  –ஆ. கல்யாண சுந்தரம், சின்னாளபட்டி


  பதில்: மிக எளிதான வேலை. ஆரோ கீயை அழுத்தினால், அநேகமாக அனைத்து வேர்ட் புராசசர்களிலும், கீயின் திசைக்கேற்ப ஒரு ஸ்பேஸ் கர்சர் நகரும். இதே செயல்பாட்டினை கண்ட்ரோல் கீயுடன் அழுத்தி ஆரோ கீயை அழுத்தினால் ஒரு சொல் திசைக்கேற்ப நகரும்.

  மேல் கீழ் ஆரோ கீகளுடன் அழுத்தினால், பாரா பாராவாக அல்லது செக்ஷன் செக்ஷனாக நகரும்.

  இத்துடன் ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயைச் சேர்த்து ஆரோ கீயுடன் அழுத்தினால் அது நகரும் பகுதி முழுவதையும் தேர்ந்தெடுக்கும்.

  எம்.எஸ்.வேர்ட், நோட்பேட், வேர்ட் பேட், ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் ஆகிய அனைத்திலும் இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.


  கேள்வி: என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் அமைத்துக் கொடுத்த ஸ்கிரீன் சேவர் பிடிக்கவில்லை. மற்றவர்கள் போல வேறு நல்ல ஸ்கிரீன் சேவரை அமைத்துக் கொள்ள விருப்பப்படுகிறேன். இதனை எப்படி மாற்றுவது?

  –ச. உதயராஜன், திருத்தணி


  பதில்: இதுவரை பார்த்து ரசித்த ஸ்கிரீன் சேவர், இன்னொரு அழகான ஸ்கிரீன் சேவர் காட்சியினைப் பார்த்தவுடன் பிடிக்காமல் போய்விட்டது. இல்லையா! மாற்றிவிடலாம். மிக எளிதாக மாற்றிவிடலாம்.

  டெஸ்க்டாப் செல்லுங்கள். காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனு கட்டத்தில் கீழாக உள்ள Properties என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

  கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Screen Saver என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அங்கே இருக்கும் கட்டத்தில் பல ஸ்கிரீன் சேவர் பைல்களின் பெயர்கள் இருக்கும். இதில் எதனையேனும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

  தேர்ந்தெடுத்தபின் Apply என்ற பட்டனில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அதில் உள்ள மற்றவற்றைப் பாருங்கள். ஸ்கிரீன் சேவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் வேலை எதுவும் செய்திடாமல் இருந்தால் தோன்ற வேண்டும் என்பதற்கு நிமிடக் கணக்கில் செட் செய்திட வழி தரப்பட்டிருக்கும்.

  அதே போல நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஸ்கிரீன் சேவர் எப்படி தோற்றமளிக்கும் என்பதனைக் காண பிரிவியூ என்ற பிரிவு இருக்கும். இதனை எல்லாம் செயல்படுத்தி, அதனால் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.

  சரி, எந்த ஸ்கிரீன் சேவரும் தேவை இல்லை என்றால் அதே ஆப்ஷன் கட்டத்தில் None என்று ஒரு சாய்ஸ் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.


  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண்கள் அமைக்கையில் மூன்று சாய்ஸ் மட்டுமே கொடுக்கிறது. இந்த இடங்கள் போக நாம் அமைக்க நினைக்கும் இடத்தில் பக்க எண்ணை அமைக்க முடியுமா?

  –எஸ். விஜய குமாரி, அரும்பாக்கம்


  பதில்: தாராளமாக மிக எளிதாக அமைக்கலாம். எந்த ஒரு பக்கத்திலும், அல்லது அனைத்து பக்கத்திலும் நீங்கள் எந்த இடத்தில் பக்க எண் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகி றோமோ,

  அந்த இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு ஆல்ட்+ஷிப்ட் + ப்பி (Alt + Shift + P) அழுத்தவும். உடனே அந்த பக்க எண் அந்த இடத்தில் டெக்ஸ்ட்டாகப் பதியப்படும். ஒன்று நினைவில் கொள்ள வேண்டும்.

  இன்ஸெர்ட் அழுத்தி பக்க எண்ணை அமைக்கையில் அது டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைக்கப்படும். இந்த முறையில் எந்த பக்கத்தில் அல்லது பக்கங்களில் ஆல்ட்+ஷிப்ட்+ப்பி கொடுக்கிறோமோ அந்த பக்கங்களில் மட்டுமே அமைக்கப்படும்.

  நன்றி தினமலர்
  நவம்பர் 08,2009
  Last edited by நூர்; 09-11-2009 at 10:17 AM.

 5. #41
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: எனக்கு ஒரு பிரச்னை வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ளது. கண்ட்ரோல் கீ அழுத்தி மவுஸ் ரோலரை முன்பக்கமாகத் தள்ளினால் எழுத்தின் அளவு பெரிதாக மாறுகிறது.

  ஆனால் மானிட்டரின் அளவை மீறிச் செல்வதினால் படிக்கும்போது பக்கவாட்டில் நகர்த்தி நகர்த்தி படிக்க வேண்டியுள்ளது. இதனைச் சரி செய்ய என்ன வழி?


  –எஸ். இன்பராஜன், மேட்டுப்பாளையம்


  பதில்: மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தும்போது இந்த பிரச்னை ஏற்படும். எழுத்துக்கள் பெரிதானாலும், டாகுமெண்ட் ஸ்கிரீன் அளவிற்குள் இருக்க வேண்டும் என்றால் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் அழுத்தியவாறே வலது சதுர பிராக்கட் கீயை அழுத்த வேண்டும்.

  இப்போது எழுத்துக்கள் பெரிதாக மாறும். அதே நேரத்தில் வரிகள் அளவு கூடும்போது மடங்கி அடுத்த வரியாக உருவாகும்.


  கேள்வி: விஸ்டா சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். குறிப்பிட்ட வகை பைல்களை இந்த புரோகிராமில் தான் திறக்க வேண்டும் என தொடர்பு படுத்துவது எக்ஸ்பியில் எளிதாக இருந்தது. விஸ்டாவில் என்ன செய்தும் எப்படி என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த வசதி இல்லையோ? தெளிவுபடுத்தவும்.


  –சி.அருமைசிங், புதுச்சேரி

  பதில்: ஒரு சிரமமான வேலை குறித்த கேள்விதான். ஆனால் எளிதான பதிலைத் தருகிறேன். விஸ்டாவில் Start>Control Panel>Default Programs>Associate a file type or protocol with a program ச்ட் எனச் செல்லவும்.

  சிறிது நேரம் பொறுமையாக இருக்கவும். அடுத்து பைல்களின் எக்ஸ்டென்ஷன் பெயர்களுடன் ஒரு லிஸ்ட் கிடைக்கும். இதில் நீங்கள் எந்த வகை பைலை எந்த புரோகிராமுடன் தொடர்பு படுத்த விரும்புகிறீர்கள் என இரண்டுக்கும் ஆப்ஷன் கிடைக்கும்.

  இவற்றைத் தேர்ந்தெடுத்த பின் இந்த பட்டியலில் மேலாக உள்ள Change Program" என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் என்ன செய்யலாம்? பிரவுஸ் செய்து அந்த புரோகிராமின் இ.எக்ஸ்.இ. பைலைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.


  கேள்வி: என் அலுவலகப் பணியைத் தொடங்குகையில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரைத் திறந்து அதில் உள்ள பைல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது.

  இந்த போல்டரை நான் சிஸ்டத்தில் லாக் ஆகும் போது திறக்கும்படி செய்திடலாமா?

  -ஆர். செல்வநாயகி, திருப்பூர்

  பதில்: முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அந்த போல்டரைத் திறக்கவும். பின் மெனுபாரில் உள்ள டூல்ஸ் என்பதில் போல்டர்ஸ் (Folders) என்பதில் கிளிக் செய்திடவும்.

  இப்போது போல்டர் ஆப்ஷன்ஸ் (Folder Options) என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் வியூ என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் (Advanced Settings) என்ற பாக்ஸில் Restore previous folder windows at log on என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி,

  பின் அப்ளை, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் லாக் செய்திடுகையில் நீங்கள் விரும்பும் வகையில் குறிப்பிட்ட போல்டர் திறக்கப்பட்டே கிடைக்கும்.


  கேள்வி: ஆங்கிலத்தில் பிளாக் என்றும் தமிழில் வலைமனை மற்றும் பிற சொற்களில் குறிப்பிடும் இது என்ன? இவற்றை இணையத்தில் சென்று தான் பார்க்க வேண்டுமா? பிளாக் அமைக்க வேண்டும் என்றால் கட்டணம் எங்கு செலுத்த வேண்டும்?


  -ஆர். சேகர், வத்தலக்குண்டு

  பதில்: உலகிற்கு உங்கள் எண்ணங்களைத் தயங்காமல் வெளிப்படுத்த ஓர் இடம் வேண்டுமா? அதற்கு வழி தருவதுதான் பிளாக் (Blog) தமிழில் அழகாக வலை மனை என்று சொல்கின்றனர்.

  இன்டர்நெட்டில் இலவசமாக வெப்சைட்டே உருவாக்கி வைக்கலாம் என்ற நிலையில் பிளாக்குகள் அமைப்பதற்கா கட்டணம் தேவை? இல்லவே இல்லை. பல தளங்கள் இலவசமாக பிளாக்குகளை அமைத்து இயக்க இடம் தருவதுடன்,

  அவற்றை அமைக்க பல டூல்ஸ்களையும் தருகின்றனர். Web Log என்ற இரண்டு சொற்களின் சுருக்குச் சொல் தான் Blog. இவற்றை அமைத்தால் அங்கு உங்கள் எண்ணங்களை எழுதலாம் (மற்றவர்கள் மனம் புண்படாமல்). படங்களை அப்லோட் செய்திடலாம்; உங்கள் பிளாக்குகளுக்கு வரும் நண்பர்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க இடம் உண்டு.

  உங்களுக்கு வேறு இணைய தளங்கள் இருப்பின் அல்லது உங்களுக்கு விருப்பமான தளங்கள் இருப்பின் அதற்கான லிங்க்குகளைத் தரலாம்.
  தற்போது பிளாக்குகள் செய்திகளைத் தரும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

  பல ஆன்மிகத் தளங்கள் உருவாக்கப்பட்டு, அலைபாயும் பல மனங்களுக்கு அமைதியைத் தந்து வருகின்றன. நீங்கள் விரும்பும் பொருள் வாரியாக உள்ள பிளாக்குகளைத் தேடிப் படிக்கலாம்.

  கூகுளில் தேடிப் பெறலாம் என்றாலும் கீழ்க்காணும் தளங்கள் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகின்றன.
  http://blogcatalog.com/


  http://www.blog searchengine.com/


  http://www.blogarama.com/


  பலர் அவர்களின் தளங்களில் தமிழில் எழுதி வருகின்றனர். முதலில் சில தளங்களைப் பாருங்கள், படியுங்கள். பின் இந்த தளங்களை உருவாக்க உதவும் தளங்களுக்குச் சென்று உங்கள் பிளாக்குகளை உருவாக்குங்கள்.

  அதுவரை உங்கள் பிளாக்குக்கு ஓர் அருமையான பெயரை மனதிற்குள் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


  கேள்வி: புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியாகும்போது அதனுடன் சில எண்கள் காட்டப்படுகின்றன. இவற்றின் பொருள் என்ன? இந்த எண் வரிசை எதனைக் குறிக்கிறது?

  –எம். கருணாநிதி, பொள்ளாச்சி.


  பதில்: எடுத்துக் காட்டாக ஒரு புரோகிராமின் புதிய பதிப்பு 6.1.2 என்ற எண்ணைக் கொண்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். 6 என்பது அந்த புரோகிராமின் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்ட புதிய பதிப்பு. முக்கிய மாற்றங்கள் இருந்தால் தான் அடுத்தடுத்து இந்த எண் மாறும்.

  1 என்ற எண் ஒரு சிறிய மாற்றத்துடன் கூடிய அப்டேட் பைல் என்பதைக் குறிக்கிறது. ஒன்றிரண்டு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் இந்த எண் சுட்டிக்காட்டும்.

  மூன்றாவதாக உள்ள 2 என்பது அந்த புரோகிராமில் உள்ள பிரச்னைகளைக் (Bugs) குறிக்கிறது. இரண்டு பிரச்னைகள் இந்த அப்டேட்டட் புரோகிராமில் தீர்க்கப்பட்டுள்ளன என்று காட்டப்படுகிறது.

  சில புரோகிராம்கள் எழுத்துக்களையும் இணைக்கும். எழுத்துக்கள் மிக மிக முக்கியம் இல்லாத மாற்றங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்.


  கேள்வி: இன்டர்நெட் பிரவுசரில் பைல்களைத் திறக்க முடியுமா? அதனால் பைல்களுக்குப் பாதகம் ஏற்படுமா?

  -கே.என். சிவராமன், சென்னை

  பதில்: ஒரு சாதாரண பைல் ஒன்றை உருவாக்கித் திறந்து பார்த்திருக்கலாமே, சிவராமன். ஓகே. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்களில் நீங்கள் தாராளமாக பைலைத் திறக்கலாம்.

  இணைய தளங்கள் மட்டுமின்றி பைல்களைத் திறக்கவும் இவை பயன்படுகின்றன. பைல் டைரக்டரியிலிருந்து அப்படியே பைலை இழுத்து வந்து பிரவுசரின் முகவரி விண்டோவில் போட்டுப் பாருங்கள்.

  குறிப்பாக பட (ஜேபெக், டிப் போன்றவை) பைல்கள் அழகாகத் திறக்கப்படும். மற்றவற்றைத் திறக்க அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.


  கேள்வி: டி.எல்.எல். பைல் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்க காப்பி செய்து திறந்து பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. இதற்கு எந்த பாண்ட் வேண்டும்.
  ஒரிஜினலைத்தான் படிக்க வேண்டுமா?

  –எஸ். ரேணுகா சீனிவாசன், சென்னை.

  பதில்: டி.எல்.எல். ஒரிஜினலைத் திறக்க பயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. படிக்கலாம். வழக்கமான பாண்ட்கள் மூலம் இதனைப் படிக்க இயலாது. Quick view plus என்ற ஒரு சாப்ட்வேர் மூலம் இதனைப் படிக்கலாம். டவுண்லோட் செய்து முயற்சித்துப் பார்க்கவும்.


  கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பெயர்கள் மற்றும் சொற்களாக உள்ள டேட்டாவினை டெக்ஸ்ட்டாக மாற்ற விரும்புகிறேன். எப்படி மாற்றலாம்?

  –எஸ். கீர்த்திவாசன், பழநி


  பதில்: நீங்கள் குறிப்பிடும் சொற்களை மாற்றலாம். ஆனால் அதில் சார்ட்டுகள், பார்முலாக்கள் மற்றும் பிற பார்மட்டிங்குகள் இருந்தால் அவை எல்லாம் காணாமல் போய்விடும். பரவாயில்லையா? நீங்கள் செய்ய வேண்டியது:


  1) டேட்டா உள்ள எக்செல் பைலைத் திறந்து கொள்ளுங்கள்.

  2) File=>Save As கட்டளையைக் கொடுங்கள்.

  3) Save as type என்ற டிராப்-டவுன் லிஸ்ட்டை கிளிக் செய்து அங்கு உள்ள பிரிவுகளில் Formatted text அல்லது text அல்லது CSV என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். CSV என்பது Comma Separated value என்று பொருள்படும்.


  4. பைலிற்கு ஏதாவது பெயரை டைப் செய்து விட்டு Save பட்டனை அழுத்துங்கள்.


  கேள்வி: நான் உருவாக்கிய எக்ஸெல் ஒர்க் ஷீட்டில்,தொடர் வரிகள் வராமல் தனி வரி ஒன்று உருவாக்க எண்ணி, ஷிப்ட் என்டர் அழுத்தி செல் ஒன்றில் ஒரு லைன் பிரேக் உருவாக்க முயற்சித்தேன்.

  ஆனால் செல்களுக்கு மேலாக கர்சர் சென்றது. செல்களில் எப்படி தகவல்களை வரிகளில் அமைப்பது? எந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்?


  –டி. உஷா ரவீந்திரன், சென்னை


  பதில்: நீங்கள் வேர்டில் உள்ள வழக்கத்தை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வேர்டில் இருப்பது போல லைன் பிரேக் ஏற்படுத்த ஷிப்ட் என்டர் எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

  எக்ஸெல் தொகுப்பில் இது என்டர் கீயின் பயன்பாட்டிற்கு எதிரான செயல்பாட்டை மேற்கொள்ளும். அதாவது என்டர் அழுத்தினால் செல்லுக்குக் கீழே வரும் கர்சர் ஷிப்ட் + என்டர் அழுத்தினால் மேலே செல்லும். செல்லில் லைன் பிரேக் அமைத்திட AltEnter அழுத்தவும். விளக்கவும்.

  நன்றி.தினமலர்.நவம்பர் 15,2009

 6. #42
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி : எனக்கு கூகுள் குரோம் பிரவுசர் தான் பிரியமாக உள்ளது. ஆனால் ஆட் ஆன் தொகுப்புகள் என்று வருகையில், பயர்பாக்ஸ் பிரவுசருக்கே அதிகம் உள்ளன. பயர்பாக்ஸ் ஸ்டைலில் குரோம் பிரவுசருக்கு ஆட் ஆன் கிடைக்குமா?

  –சி.நாகலஷ்மி, சென்னை

  பதில்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உள்ள ஒரு குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு போலத்தான் வேண்டும் என்றில்லாமல் கூகுள் குரோமிற்கான ஆட் ஆன தொகுப்பு வேண்டும் என்றால்,

  குரோம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட http://www.chromefans. org/chromeplugins/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அல்லது http://www.mychrome addons.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


  கேள்வி: ஐ.இ. 8 வைத்துள்ளேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள அட்ரஸ் பார் வேறு என்ன சிறப்பான பணிகளுக்கு உதவும்?

  –நா.குமாரசாமி, கோயம்புத்தூர்

  பதில்: உங்கள் மிகப் பெரிய கேள்வியைச் சுருக்கி இந்த பதிலைத் தருகிறேன். மிகப் பெரிய வேலை எல்லாம் இல்லை.

  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அட்ரஸ் பாரில், சர்ச் பாக்ஸில் தேடுவது போல தேடித் தகவல்களைப் பெறலாம். இணைய தளங்களிலும் வெப் ஆக்சிலரேட்டர் போல புரோகிராம்களைப் பயன்படுத்தித் தேடலாம்.

  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐ இயக்கவும். ஆல்ட்+டி கீகளை அழுத்தினால் கர்சர் அட்ரஸ் பாக்ஸில் சென்று நிற்கும். அங்கு யு.ஆர்.எல். (இணைய முகவரி) யினை டைப் செய்வதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு சொல்லை டைப் செய்திடவும்.

  நான் noodles என்று டைப் செய்தேன். உடனே உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எது டிபால்ட் சர்ச் இஞ்சினாக செட் செய்யப்பட்டுள்ளதோ அது இயக்கப்பட்டு என்பதற்கான முன்னணி தளங்களைப் பட்டியலிடும்.

  அதே டேப்பில் தகவல்கள் இடம் பெற வேண்டாம் என்று எண்ணினால், சொல்லை டைப் செய்துவிட்டு என்டர் தட்டுவதற்குப் பதிலாக, ஆல்ட் +என்டர் தட்டவும்.

  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புதிய டேப் ஒன்றைத் திறந்து தகவல்களைக் காட்டும். இன்னொரு வழியிலும் தேடலாம். அட்ரஸ் பாரில் go noodles அல்லது find noodles என டைப் செய்தும் தேடலாம்.


  கேள்வி: வேர்டில் ஒரு லைனை செலக்ட் செய்திட, அதன் இடது மார்ஜினில் கிளிக் செய்திட எழுதி இருந்தீர்கள். என்ன செய்தாலும் செலக்ட் ஆகவில்லை. விளக்கவும்.

  –சி. ஜெயராமன், திண்டிவனம்


  பதில்: நன்றாகக் கவனிக்கவும். இடது புறம் ரூலர் லைன் இருக்கிறதா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இடது மார்ஜின் தெரியும் அல்லவா?

  எந்த வரியைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வரிக்கு இடது புறமாக மார்ஜினில் கர்சரைக் கொண்டு செல்லவும்.

  அவ்வாறு கொண்டு செல்கையில் காணப்படும் அம்புக் குறி பொதுவாக இடது புறம் சாய்ந்திருக்கும். மார்ஜின் கோட்டின் ஓரத்தில் கொண்டு செல்கையில், ஒரு நிலையில் அது வலதுபுறமாகச் சாயும். அந்த இடத்தில் ஒரு கிளிக் செய்திடுங்கள்.

  அந்த வரி தேர்ந்தெடுக்கப்படும். மிச்சக் குறிப்பையும் தருகிறேன். ஒரு பாராவினைத் தேர்ந்தெடுக்க அந்த பாராவில் எங்காவது ஒரு இடத்தில், கர்சரை வைத்து மூன்று முறை கிளிக் செய்திடவும்.

  அல்லது மேலே சொன்ன மார்ஜின் இடத்தில் வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அதே இடது மார்ஜினில் கர்சரை வைத்துக் கொண்டு மூன்று முறை கிளிக் செய்தால், முழு டாகுமெண்ட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.


  கேள்வி: ஒர்க் ஷீட் ஒன்றின் செல்லில் எண்களை அமைக்கையில், அதனுடன் சிறிய குறிப்பு அல்லது அடையாளம் காட்டும் எழுத்துக்களை அமைக்கலாமா? எப்படி எனக் கூறவும்.

  –சி.கே.பிரபு, திருப்பூர்


  பதில்: செல்லில் டெக்ஸ்ட்டை எண்களுடன் இணைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் அதற்கான செட்டிங்ஸை ஏற்படுத்த வேண்டும். முதலில் செல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

  Format | Cells | Number எனத் தேர்ந்தெடுக்கவும். Category லிஸ்ட்டில் Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Type லிஸ்ட்டில் General என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

  மேலே இருக்கும் சிறிய கட்டத்தில் General என்ற சொல்லை ஒன்றும் தொடாமல் அதன் அருகில் என்ன சொல் எண்கள் கட்டத்தில் இடம் பெற வேண்டுமோ அதனை மேற்கோள் குறிக்குள் டைப் செய்திடவும்.

  எடுத்துக் காட்டாக General "at" என டைப் செய்தால் எண்களை அடுத்து ச்t என்ற சொல் செல்லில் இடம் பெறும். ஆனால் இது பார்முலா, கூட்டல்,கழித்தல் போன்ற செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுத்தாது.


  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், ஹைபன் அல்லது டேஷ் அமைத்தால் உடனே அது ஒரு பெரிய கோடாக மாறிவிடுகிறது. இதனை அழிக்கவும் முடியவில்லை. இந்த தேவையற்றதைத் தடுப்பது எப்படி?

  –சி.எஸ். மாரியப்பன், திண்டுக்கல்


  பதில்: ஒரு கோட்டினை அமைக்கத் தொடர்ந்து இந்த ஹைபன் மற்றும் டேஷ் தொடர்ந்து இயக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில், வேர்ட் தொகுப்பு மாறா நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

  இது தாமாக இயங்கும் பார்மட் சம்பந்தப்பட்டதாகும். இது நமக்கு வசதிதான் என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல என்பதால் பலருக்குப் பிடிப்பதில்லை (எனக்கும்தான்). தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும்.

  பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள்.

  அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள்.

  அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.


  கேள்வி: என் சிறிய நிறுவனத்திற்காக அமைக்கப்படும் கடிதப் போக்குவரத்துகளில், என் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒரு பொன்மொழி கீழாக டைப் செய்யப்படாமலேயே ஒவ்வொரு பக்கத்திலும் வர வேண்டும். அதனை எப்படி அமைக்கலாம்?

  –ஆல்பர்ட் பிரகாசம், புதுச்சேரி


  பதில்: டைப் செய்யாமல் எதுவும் தோன்றாது. ஒவ்வொரு பக்கத்திலும் டைப் செய்திடாமல், ஒருமுறை டைப் செய்து விட்டால் அனைத்து பக்கங்களிலும் வருமாறு செய்திடலாம்.

  வேர்ட் தொகுப்பில் நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட்டைத் திறந்து, அதில் View => Header and Footer செல்லுங்கள். ஹெடர் தெரியும். அங்குள்ள டூல்பாக்ஸில் உள்ள Switch between Header and Footer டூலைக் கிளிக் செய்து புட்டருக்கு மாறிக் கொள்ளுங்கள்.

  நீங்கள் விரும்பும் பொன்மொழியை டைப் செய்து கொள்ளுங்கள். Close என்ற டூல் பட்டனை அழுத்துங்கள். இனி அந்த டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களின் கீழாக, இந்தப் பொன்மொழி கிடைக்கும்.


  கேள்வி: இன்டர்நெட் தளங்களுக்கு பெயர்களை வைக்கும் பழக்கம் முதலில் இருந்து வழக்கமானதால்தான் அதனையே விரும்புகிறோம். ஏதேனும் ஒரு முறையில் எண்களை நினைவில் இருக்கும்படி தொடர்ந்து வைத்திருக்கலாம் அல்லவா! ஏன் இதனைத் தொடங்கக் கூடாது?

  –சி.என்.இந்திரா ராணி, மதுரை


  பதில்: இந்த கேள்வியின் விபரீதத்தினை உணர்ந்து பதில் அளிக்க எடுத்துக் கொண்டேன். எப்படி எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்,

  இந்திரா ராணி. உங்கள் நண்பர்களுக்குள் 2436030 என்ற தொலைபேசியை வைத்திருப்பது யார் என்று கேட்டால் சற்று நேரம் விழிப்பீர்கள். அதே நேரத்தில் நண்பர் ராமசாமியைத் தெரியுமா என்று கேட்டால் உடனே அவரை நினைவிற்குக் கொண்டு வந்துவிடுவீர்கள்.

  இதற்குக் காரணம் எண்களை நினைவில் வைப்பதைக் காட்டிலும் பெயரை நினைவில் வைப்பது எளிது. இது மனித இயல்பு. அதனால் தான் இன்டர்நெட் தளங்களின் பெயரை வடிவமைக்கையில்,

  அதன் வல்லுநர்கள் எண்களைத் தவிர்த்தனர். எண்களை நினைவில் வைத்திருக்கும் பழக்கம் உள்ள ஒன்றை எண்ணிப் பாருங்கள். கிடைக்காது.


  கேள்வி: மானிட்டரில் பல விண்டோக்களைத் திறந்து ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களில் வேலை செய்கையில், அவற்றை திரையில் அடுத்தடுத்து காட்டுவதற்கு எப்படி செட் செய்திட வேண்டும்?

  –கே. உத்தம் குமார், அவினாசி


  பதில்: புரோகிராம்களைத் திறந்த பின்னர், அவை டாஸ்க்பாரில் டேப்களாகக் காட்டப்படுவதனைக் காணலாம். நீங்கள் கேட்டுள்ளபடி செட் செய்திட, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும்.

  கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா,

  படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக்கள் அமையும்.


  கேள்வி: நான் எட்டாவது படிக்கிறேன். இமெயில் அக்கவுண்ட் ஒன்று வைத்து நண்பர்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன். இமெயில் வந்தால் அதில் வைரஸ் வரும் என்று கூறுகின்றனர். உண்மையா? அப்படியானால் அப்படி வரும் இமெயில்களில் ஏதேனும் அடையாளம் இருக்குமா?

  –என். சுதந்திரா, மேல்மருவத்தூர்

  பதில்: வாழ்த்துக்கள். உங்களுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்து இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்திய பெற்றோர் அல்லது மூத்த சகோதரர்கள் துணையுடன் இதனை மேற்கொள்ளவும்.

  உங்களுக்கு அறிமுகமில்லாத நண்பர்களிடமிருந்து, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பெயரில், அவசர உதவி கொடுத்தால் பணம் என்ற தலைப்பில், பேங்க் அக்கவுண்ட் குறித்து பெரிய வங்கிகளின் பெயரில் இமெயில்கள் வந்தால் தயவு செய்து திறக்க வேண்டாம்.

  இந்த எச்சரிக்கை கொஞ்சம் தான். போகப் போக நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். இன்டர்நெட்டைப் பயன்படுத்தி கல்வியில் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

  நன்றி.தினமலர். நவம்பர் 22,2009
  Last edited by நூர்; 23-11-2009 at 10:30 AM.

 7. #43
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: வேர்ட் தொகுப்பில் சொற்களைத் தேடுகையில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டம் மூலம் தேடுகிறோம். முதல் இடம் கண்ட பின்னர், தேடுதல் விடை அடுத்து எங்குள்ளது என்று அறிய முடியாமல் அந்த கட்டம் தடுக்கிறது.

  அதை அடிக்கடி நகர்த்திப் பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழி உள்ளதா? கட்டத்தைச் சிறிதாக்க முடியுமா? அல்லது கட்டம் இல்லாமல் தேட முடியுமா?


  –எஸ். சிவதாஸ், விருதுநகர்


  பதில்: வேர்ட் தொகுப்பில் மட்டுமல்ல, எக்ஸெல் தொகுப்பிலும் இதே பிரச்னையை நீங்கள் சந்தித்திருக்கலாம். தீர்வைப் பார்ப்போமா! முதலில் நீங்கள் கண்ட்ரோல் + எப் கீ அழுத்தி, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தைப் பெற்றிருப்பீர்கள். அல்லது மெனு பாரிலிருந்து பெற்றிருக்கலாம்.


  நீங்கள் கூறியிருப்பது போல, முதல் விடையைக் கண்டவுடன், எஸ்கேப் கீயைத் தட்டுங்கள். பைண்ட் அண்ட் ரீபிளேஸ் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும். அடுத்த விடை தெரிய ஷிப்ட் + எப்4 அழுத்துங்கள். அடுத்த விடை எங்குள்ளதோ அந்த சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுக் காட்டப்படும்.

  இப்படியே அடுத்தடுத்து செல்லலாம். இறுதியில் தேடும் சொல் இல்லை என்றால், இறுதி செய்தி கிடைக்கும்.


  கேள்வி: வேர்டில் சில வேளைகளில் பல டாகுமெண்ட்களைத் திறந்து வைத்துப் பணியாற்ற வேண்டியுள்ளது. அனைத்து டாகுமெண்ட்களையும் ஒரே திரையில் திறந்து, நம் தேவைக்கேற்றபடி அவற்றில் இடம் அமைத்து வேலை செய்திட முடியுமா?

  –எஸ். அன்புச் செல்வி, பொள்ளாச்சி


  பதில்: தாராளமாகச் செயல்படலாம். வேலை செய்திட விரும்பும் அனைத்து டாகுமெண்ட்களையும் திறந்து கொள்ளவும். அடுத்து மெனு பாரில் விண்டோ மெனுவில் அழுத்திக் கிடைக்கும் மெனுவில் அரேஞ்ச் ஆல் என்பதில் கிளிக் செய்திடவும்.

  உங்கள் மானிட்டர் ஸ்கிரீன் இடம் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் இடம் அளிக்கும். நிறைய டாகுமெண்ட்கள் இருப்பின், ஒவ்வொன்றுக்கும் கொஞ்சமாவது இடம் கிடைக்கும்.


  இனி எந்த டாகுமெண் ட்டிற்கு அதிக இடம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த விண்டோவில் உள்ள டாகுமெண்ட்டில் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது அந்த விண்டோ உயிர் பெறும். இனி கர்சரை அதன் பார்டரில் கொண்டு சென்று வைத்தால், அம்புக் குறி மாறுபடும்.

  அப்படியே மவுஸை இழுத்தால் விண்டோ சற்றுப் பெரிதாகும். தேவையான அளவு பெரிதாக்கியவுடன் விட்டுவிட்டு தொடர்ந்து வேலை செய்திடவும். தேவையில்லாத டாகுமெண்ட் வின்டோவினை மட்டும் மூடவும் செய்திடலாம்.


  கேள்வி: நான் தயாரித்து வைத்திருக்கும் பேவரிட்ஸ் தளங்களின் பட்டியலை பிரிண்ட் எடுக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?

  –சீ. குமாரவேல் ராஜன், புதுச்சேரி


  பதில்: முடியும், ஆனால் சில சுற்று வழிகளைக் கையாள வேண்டும். எளிதுதான். இங்கு அவற்றைப் பார்ப்போம். நேரடியாக பிரவுசரில் பேவரிட்ஸ் மெனுவில் கிளிக் செய்து அப்படியே பிரிண்ட் எடுக்க, எந்த பிரவுசரிலும் வசதி செய்து தரப்படவில்லை.

  பிரிண்ட் செய்வதற்கு ஏற்றபடி ஒரு எச்.டி.எம்.எல். பைல் ஒன்றைத் தயார் செய்து அச்சடிக்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பைல் – இம்போர்ட்/எக்ஸ்போர்ட் (File>Import/Export) கிளிக் செய்திடவும்.

  இப்போது இம்போர்ட்/ எக்ஸ்போர்ட் விஸார்ட் கிடைக்கும். இதில் Export to a File என்பதில் டிக் அடித்து, அதன்பின் Next என்பதில் கிளிக் செய்திடவும்.

  அடுத்து கிடைக்கும் விண்டோவில் Favourites என்பதை செலக்ட் செய்து, பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய பேவரிட் தளங்களை போல்டர்களில் பிரித்து வைத்து சேவ் செய்திருந்தால் Save All என்பதில் கிளிக் செய்திடவும்.

  இதில் பேவரிட்ஸ் போல்டர் முழுவதையும் பிரிண்ட் செய்திடுமாறு செய்திடலாம். அல்லது குறிப்பிட்ட போல்டரை மட்டும் பிரிண்ட் செய்திடுமாறு தேர்ந்தெடுக்கலாம்.


  இனி இந்த பைலை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எக்ஸ்போர்ட் செய்திட சுட்டிக் காட்ட வேண்டும். பிரவுஸ் பட்டனை அழுத்தி உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் எங்கேனும் பதியலாம்.

  டெஸ்க்டாப்பில் பதிந்தால் பின் தேடி எடுப்பது எளிது. தேர்ந்தெடுத்தபின் எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்துவிட்டால் பைல் ரெடியாகிவிடும். இப்போது இந்த பைலை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்? இது இருக்குமிடம் சென்று அதன் ஐகானில் டபுள் கிளிக் செய்திடவும்.

  இந்த பைல் ஒரு எச்.டி.எம்.எல். பைல் என்பதால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கப்படும். ஒரு பக்கத்தில் பெயர்களும், அவற்றிற்கான லிங்க்குகளும் காட்டப்படும்.

  கவலைப்பட வேண்டாம். அடுத்து இந்த பேவரிட்ஸ் முகவரிகளை பிரிண்ட் செய்வது குறித்துப் பார்க்கலாம்.


  பைல் மெனு கிளிக் செய்து அதில் பிரின்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் ஆப்ஷன்ஸ் என்ற டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்த பின் Print table of links என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்தபின் பிரிண்ட் என்ற பட்டனில் என்டர் செய்தால் உடன் இணைய முகவரிகள் அடங்கிய பட்டியல் பிரிண்ட் ஆகும்.


  கேள்வி: கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் கிளிக் செய்த பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள இடது பக்க பிரிவில் Set Program access and defaults என்று உள்ளது. இது எதற்காக? இதனால் என்ன மாற்றங்களை மேற்கொள்ளலாம்?

  -எஸ். வினோத் குமார், சென்னை


  பதில்: விரிவான கட்டுரை எழுதக் கூடிய அளவிற்கான நல்ல கேள்வி. சுருக்கமாகத் தகவல்களைத் தருகிறேன். முதலில் இந்த வசதியைப் பயன்படுத்த, உங்கள் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும்.

  அதன் பின் இந்த பிரிவில் கிளிக் செய்து விண்டோவினைப் பெறுங்கள். இதில் நான்கு ஆப்ஷன்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். அவை:


  1.உங்கள் கம்ப்யூட்டரை முதன் முதலில் அதன் நிறுவனத்தில் செட் செய்தபோது அமைத்த செட்டிங்ஸை மீண்டும் திரும்பப் பெறலாம். இதற்கு Computer Manufacturer Choice என்ற இடத்தில் கிளிக் செய்திடலாம். இந்த ஆப்ஷன் உங்கள் கம்ப்யூட்டரைத் தயாரித்தவர் சர்வீஸ் பேக் 1 இன்ஸ்டால் செய்திருந்தால் தான் கிடைக்கும்.


  2. இரண்டாவதாக, நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் வேலைகளுக்கேற்றபடி செட் செய்திட வேண்டும் என்றால், Microsoft Windows என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடலாம்.

  இதன் மூலம் மைக்ரோசாப்ட் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களின் புரோகிராம்களையும் அணுகலாம். இவற்றை ஸ்டார்ட் மெனு, டெஸ்க்டாப் மற்றும் நீங்கள் விரும்பும் எந்த இடத்திலிருந்தும் அணுகலாம்.


  அடுத்து மைக்ரோசாப்ட் இல்லாத நிறுவனங்களின் புரோகிராம்களை உங்கள் டிபால்ட் புரோகிராம்களாகத் தேர்ந்தெடுக்க Non Microsoft என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  நான்காவதாக, இரண்டு நிறுவனங்களின் புரோகிராம்களை செட் செய்திட இதண்tணிட் என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். பலரும் இதனையே விரும்பி செலக்ட் செய்து டிபால்ட் புரோகிராம்களை அமைப்பார்கள்.

  ஏனென்றால் இது பெரிய அளவில் ஆப்ஷன்களைத் தருகிறது. உங்கள் தேர்வுகள் அனைத்தையும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம்கள் டிபால்ட் புரோகிராம்களாக இயங்கத் தொடங்கும்.


  கேள்வி: ஸ்விப் பைல் என்பது என்ன? என்னுடன் பணி புரிபவர்கள் இது பற்றி அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள். இதன் முழு விபரத்தினைச் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  –கு. மாரிசாமி, கோயமுத்தூர்


  பதில்: உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரிலோ அடோப் பிளாஷ் புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகிறதா? அவை தரும் பைல்களைத் தான் ஸ்விப் (Swiff) பைல் என அழைக்கிறார்கள்.

  சரியாகச் சொல்வதென்றால் இவை .swf என்ற எக்ஸ்டென்ஷன் கொண்ட பைல்களாகும். இந்த வகை பைல்கள் கிராபிக்ஸ் பைல் பார்மட்டில் அடோப் பிளாஷ் புரோகிராமினால் அமைக்கப்படுகின்றன.

  அனிமேஷன் எனப்படும் நகரும் வரைகலை, தகவல்களைக் கேட்டு வாங்கும் சிறிய ஆப்லெட் புரோகிராம்கள் ஆகியவற்றை அடோப் பிளாஷ் தயாரிக்கும்போது இந்த பார்மட் பைல்களில் உருவாக்கப்படுகின்றன.

  டிவியில் வர்த்தக நிகழ்ச்சிகள் மற்றும் டிவிடிக்களில் மெனுக்கள் ஆகியவை தயாரிக்கும் போதும் இந்த பார்மட் பைல்கள் பயன்படுகின்றன.

  இந்த மூன்று எழுத்துக்களை –SWF –Small Web Format அல்லது Shock Wave Flash என்று விரித்துப் படிப்பார்கள். இணைய தளங்களில் இவை பெரிய அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.


  கேள்வி: பெர்சனல் பைல்கள் சிலவற்றை என் சிடியில் காப்பி செய்து சில வேளைகளில் அலுவலகக் கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிறேன். அவற்றை எடுத்துவிட்டாலும், My Recent Documents என்பதில் அவை தெரிகின்றன. இவற்றை மற்றவர் பார்க்காத வகையில் எப்படி நீக்கலாம்?

  –என். கணேஷ், சென்னை


  பதில்: அலுவலகக் கம்ப்யூட்டரில் சொந்த பைல்களைப் பயன்படுத்தலாமா என்பது உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் உள்ள பிரச்னை. இருந்தாலும் உங்கள் பிரச்னைக்கு தீர்வினைத் தருகிறேன். மானிட்டர் ஸ்கீரினில் உள்ள டாஸ்க் பார் செல்லுங்கள். அங்கு எதுவும் இல்லாத இடத்தில் மவுஸ் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

  கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். "Taskbar and Start Menu Properties" என்னும் விண்டோ கிடைக்கும். இதில் " Start Menu" என்னும் டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Customize என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும்.

  இதில் Advanced என்ற டேபில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழாக Recent Documents என்ற பிரிவு இருக்கும். அதில் List my recently opened documents என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

  அதன் அருகே Clear List என்று உள்ள பெட்டியில் கிளிக் செய்திடவும். Recent Documents என்ற பிரிவில் உள்ள பைல்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்.

  நன்றி.தினமலர். நவம்பர் 29,2009.

 8. #44
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: நான் கம்ப்யூட்டர் வாங்கும்போது மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிந்து கொடுத்து அதற்கான டிஸ்க்கினையும் கொடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. டிஸ்க்கை பார்மட் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதற்கான ஆக்டிவேஷன் கீக்கு பணம் செலுத்த வேண்டுமா?

  –ஆ. திருமேனி, திருப்பூர்

  பதில்: உங்களிடம் உள்ள ஒரிஜினல் டிஸ்க்கில் ஒரு இலவச தொலைபேசி எண் தரப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினால், உங்களிடம் சில கேள்விகள் கேட்டு புதிய எண் தருவார்கள்.

  அதனைக் கேட்டு வாங்கும்போதே தவறின்றி எழுதிக் கொள்ளுங்கள். அல்லது எழுதியபடியே கம்ப்யூட்டரில் ஆக்டிவேட் செய்து பாருங்கள். சரியாகிவிடும். இதில் உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனத்தின் உதவியையும் கேட்கலாம்.


  கேள்வி: என்னுடைய விண்டோ விஸ்டா அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். என்ன செய்தாலும் நினைவிற்கு வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டைத் திரும்பப் பெற ஏதேனும் வழி உள்ளதா?

  –ஆர். அனுராதா, திண்டுக்கல்


  பதில்: விண்டோஸ் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் ரெகவரி சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் தளங்களில் உள்ள டூலைப் பயன்படுத்தவும். முகவரி www.passwordchanger.com மற்றும் http://home.eunet.no/pnordahl/ntpassword.


  கேள்வி: பிளாஷ் மெமரி என்பது எப்போது வந்தது? இதனை யார் கண்டுபிடித்தார்கள்? எந்த சிப்களில் இவை பயன்படுத்தப் படுகின்றன?

  –வா. மீனா தங்கசாமி, சென்னை


  பதில்: 1984 ஆம் ஆண்டு. இந்த பிளாஷ் டிரைவினை Dr.Fujio Masuoka. என்பவர் உலகுக்கு அறிமுகப் படுத்தினார். இதனை அவர் மட்டுமே கண்டுபிடித்தார் என்று கூற முடியாது.

  ஏற்கனவே இருந்த ஒன்றின் மேம்பாடாக இது வெளியானது. இவர் தோஷிபா நிறுவனத்தைச் சேர்ந்தவர். இன்று இந்த பிளாஷ் மெமரி அனைத்திலும் உள்ளது. பென் டிரைவ், தம்ப் டிரைவ், எம்பி3/எம்பி4 பிளேயர், டிஜிட்டல் கேமரா, பி.டி.ஏ. என அடுக்கிக் கொண்டே போகலாம் .

  சுருக்கமாகச் சொல்வதென்றால் கைகளில் எடுத்துச் சென்று டேட்டா ஸ்டோர் செய்திடும் வகையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான டிஜிட்டல் சாதனங்களில் இது பயன்படுகிறது.

  இதில் இ.இ.ப்ராம் (EEPROM Electronically Erasable Programmable Read only Memory) சிப் ஒன்று இருக்கும். இரு கோடுகள் குறுக்கிடுகையில் செல்கள் ஏற்படும் இல்லையா! இது போல நூற்றுக்கணக்கான கோடி செல்கள் ஒரு பிளாஷ் மெமரியில் இருக்கும். இந்த செல்லில் ஒரு ட்ரான்சிஸ்டர் இருக்கும். இவைதான் டேட்டாவைத் தாங்குகின்றன.


  கேள்வி: ரூ.13,000க்குள் மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்பி, பல போன்களைப் பார்த்த பின் இறுதியில் நோக்கியா 5630 மற்றும் சோனி எரிக்சன் டபிள்யூ 595 ஆகிய இரண்டு போனில் என் தேர்வு நிற்கிறது. இதில் எதனை வாங்கலாம் என்று அறிவுரை கூறவும்.

  –டி. எஸ். ராஜேஷ், மதுரை


  பதில்: இதில் அறிவுரை என்றெல்லாம் யார் கூறுவது? தெளிவுரை வேண்டுமானால் கூறுகிறேன். முதலில் நீங்கள் இந்த இரண்டில் எதனை எடுத்தாலும் அது தவறான தேர்வாக இருக்காது.

  இரண்டுமே சிறந்த போன்கள். இசை மற்றும் இசை வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தால், சோனி எரிக்சன் போனை வாங்கலாம். நிறைய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த திட்டமிட்டால், சிம்பியன் சிஸ்டம் உள்ள நோக்கியா போனைத் தேர்ந்தெடுக்கவும்.


  கேள்வி: என் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் அளித்துள்ள இமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அதனைத் திறந்து படித்து ப்ராசஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது. நல்ல மாற்று இமெயில் அக்கவுண்ட் ஒன்று எனக்கு சஜஸ்ட் செய்திடவும்.

  –மா. கருணாநிதி, திண்டுக்கல்


  பதில்: பயனுள்ள இமெயில் சேவையினை அளிக்க நிறைய இலவச இமெயில் தளங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானவை இரண்டு. அவை http://gmail. google.com

  மற்றும் http://mail. yahoo.com. இவற்றில் என்ன ப்ளஸ் பாய்ண்ட் என்றால், உங்களின் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் அளித்திடும் இமெயில்களை இந்த மெயில் அக்கவுண்ட்டில் பெற்று படிக்கலாம். உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் அந்த இமெயிலை விட்டுவிட்டீர்கள் என அறிவிக்க வேண்டியதில்லை.


  கேள்வி: நிறைய ஸ்பைவேர்கள் இருந்ததனால் என்னுடைய கம்ப்யூட்டரின் சி டிரைவினை ரீ பார்மட் செய்து எக்ஸ்பி இன்ஸ்டால் செய்தேன்.

  மீண்டும் அதே பிரச்னை இருந்ததால், டி டிரைவில் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்தேன். இப்போது பூட் செய்திடுகையில் மூன்று ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இருப்பதாகக் காட்டப்படுகிறது.

  1) ஈ டிரைவ் டியில் உள்ள சிஸ்டம்
  2) பூட் ஆகாத விண்டோஸ் எக்ஸ்பி
  3)ட்யூன் அப் பேக் அப் (இது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒன்று)

  இந்த குழப்பத்தினை எப்படி தீர்ப்பது? ஞணிணிt.டிணடி பைலில் தேவையற்றதை நீக்குவது எப்படி?


  –கே.எல். ராமகிருஷ்ணன், தேவாரம்.


  பதில்: ஸ்டார்ட் அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் boot.ini டேப்பில் கிளிக் செய்திடவும்.

  அடுத்து Check All Boot Paths என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது அந்த பைலில் உள்ள என்ட்ரிகள் சோதனை செய்யப்பட்டு, சரியற்ற என்ட்ரிகள் காட்டப்படும். அவற்றை நீக்கி, ஓகே கிளிக் செய்து, ரீஸ்டார்ட் செய்திடவும்.


  கேள்வி: சில கட்டுரைகளில் ஸ்பைவேர் எனப் படிக்கிறேன். சிலவற்றில் வைரஸ் புரோகிராம் என்று எழுதுகிறார்கள். இரண்டும் ஒன்றா? வேறு வேறு என்றால் எப்படி நம் கம்ப்யூட்டரை இவற்றிலிருந்து பாதுகாப்பது?

  –தி. பெருமாள், விருதுநகர்


  பதில்: இரண்டும் நம் கம்ப்யூட்டரில் நுழைந்த அழையாத விருந்தினர்தான். கெடுதல் விளைவிக்கும் இவற்றை பொதுவாக "malware" எனவும் அழைக்கின்றனர்.

  ஸ்பைவேர் தொகுப்பை சில வேளைகளில் adware எனவும் அழைக்கின்றனர். கெடுதல் விளைவிப்பதில் இரண்டிற்கும் சின்ன வேறுபாடு உள்ளது. ஸ்பைவேர் உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை உங்கள் கம்ப்யூட்டரி லிருந்து பெற்று அதனை அனுப்பியவருக்கு அனுப்பும்.

  வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் தங்கி, தன்னைப் போன்ற இன்னொன்றை உருவாக்கி, தான் வந்த வழிமுறையில் இன்னொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பவும். வைரஸ்கள் அனைத்தும் கம்ப்யூட்டர்களில் பல நாச வேலைகளை மேற்கொள்ளும்.

  டேட்டாக்களைத் திருடி அனுப்புவதுடன், கம்ப்யூட்டரின் இயக்கத்திலும் நாசம் விளைவிக்கும்.கம்ப்யூட்டரை இவற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு பாதுகாப்பு புரோகிராம்கள் தேவை. பயர்வால் இன்ஸ்டால் செய்திடுங்கள். நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றையும் இன்ஸ்டால் செய்திடவும்.


  கேள்வி: எம்.எஸ்.எக்ஸெல் 2003ல் கரன்சி $ என்பதை கீண். என்று மாற்ற முடியுமா? அதற்கு செட் அப் செய்வது எப்படி?

  -மா. தேன்மலர், கோயமுத்தூர்.

  பதில்: நிச்சயமாய் முடியும். எந்த ஒர்க் ஷீட்டில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமோ, அதனைத் திறக்கவும்.

  அடுத்து Format என்பதில் கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்துத் திறக்கவும். இனி Format Cells என்ற விண்டோ கிடைக்கும்.

  இதில் கேடகிரி (Category) கட்டத்தில் தேர்ந்தெடுத்தால், அதன் வலது புறத்தில் பலவகையான கரன்சிக்கான அடையாளங்களைப் பார்க்கலாம். அங்கே Rs Urudu என இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பம் நிறைவேறும்.


  கேள்வி: கால்குலேட்டர், கேரக்டர் மேப், விண்டோஸ் கிளிப் போர்டு, கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றைத் திறக்க ரன் கட்டத்தில் என்ன டைப் செய்திட வேண்டும்?

  –எஸ்.தினகரன், புதுச்சேரி


  பதில்: இவற்றிற்கான பைல்களின் பெயரை டைப் செய்திட வேண்டும். முறையே Calc, charmap, clipbrd,control என டைப் செய்திடவும்.

  நன்றி.தினமலர் டிசம்பர் 06,2009
  Last edited by நூர்; 07-12-2009 at 05:43 PM.

 9. #45
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  டிசம்பர் 13,2009


  கேள்வி: எண்ட் கீ ஒன்று தரப்பட்டுள்ளது. இது வரிகளில் ஓரத்திற்குச் செல்ல உதவுவதைக் காட்டிலும் வேறு எதற்காவது பயன்படுகிறதா?

  –கே. ரங்கநாதன், விருதுநகர்


  பதில்: நல்ல கேள்வி. இப்படி பல கீகள் நம் கீ போர்டில் உள்ளன. இவற்றை அறிந்து கொள்வது அவசியம். எண்ட் கீயைப் பொறுத்தவரை நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமிற்கு ஏற்ற வகையில் அது செயல்படும்.

  இதனுடைய முக்கிய பயன்பாடு உங்களை டாகுமெண்ட்டின் பக்கம் ஒன்றில் டாப் பகுதியிலிருந்து, கீழ் பகுதிக்கு எடுத்துச் செல்ல உதவிடும். இதுவே இணையதளத்திலும் செயல்படும்.

  எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேண்டியது அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் உள்ளது. எண்ட் கீயினை அழுத்தினால் உங்கள் கர்சர் அங்கே இருக்கும்.

  சிறிய டெக்ஸ்ட்டில் வரி ஒன்றின் இறுதி இடத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த கீ நம்பர் பேடிற்கு இடது பக்கம் உள்ள பேஜ் டவுண் கீக்கு அருகே இடது பக்கம் இருக்கும்.


  கேள்வி: இமெயில் கடிதங்களில் பல சுருக்குச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக சில சொற்கள்: LMFR, SLOS, GTG, BF, WAREZ, ASL, PAH, FOAF, JFGI ஐ இவை என்ன பொருள் தருகின்றன; எதனைச் சுருக்கமாகச் சொல்கின்றன என்று தெரியவில்லை. இதற்கென இணையத்தில் ஏதேனும் டிக்ஷனரி உள்ளதா?

  -ந. வேலாயுதம், காரைக்குடி


  பதில்: நல்ல கேள்வி. நீங்கள் கூறிய பின்னரே நான் இணையத்தில் அப்படி ஒரு டிக்ஷனரி உள்ளதா என்று தேடினேன். இதனை ஸ்லாங் (Slang) என அழைத்து, இதற்கான டிக்ஷனரியை ஸ்லாங் (Slang Dictionary) எனக் கூறுகின்றனர்.

  அப்படி ஒரு டிக்ஷனரியை http://www.noslang. com/index.php என்னும் முகவரியில் உள்ள தளத்தில் பார்த்தேன். இதன் அடிப்படை என்னவென்றால் இந்த சுருக்குச் சொற்களை, இந்த டிக்ஷனரி ஸ்லாங் இல்லை என்று சொல்லி பொருளைத் தருகிறது.

  ஸ்லாங் ட்ரான்ஸ்லேட்டர், ஸ்லாங் டிக்ஷனரி, நெட்ஸ்பீக் கைட், ஆட் ஸ்லாங், எப்.ஏ.க்யூ, பிளாக் மற்றும் சர்ச் என்ற பல டேப்களுடன் இந்த தளம் அமைந்துள்ளது.

  இதனை இயக்கி உங்களுக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் பொருள் காண விரும்பும் சொல்லை டைப் செய்து பதிலைப் பெறலாம். மிக சுவராஸ்யமான சங்கதிகள் எல்லாம் இதில் கிடைக்கின்றன. இன்டர்நெட்டில் பரிமாறிக் கொள்ளப் படும் சொற்களுக்கு இந்த தளம் அருமையான ஒரு வழிகாட்டி.


  கேள்வி: கால்குலேட்டர், டாஸ் கமாண்ட் ப்ராம்ப்ட், பெயிண்ட் போன்ற நான் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களைத் திறக்க ரன் கட்டத்தில் கட்டளைகளை டைப் செய்து திறக்கிறேன். ஆனால் இந்த கட்டத்தைப் பெற ஸ்டார்ட் கிளிக் செய்து இதனைப் பெற வேண்டியுள்ளது. குயிக் லாஞ்ச் பாரில் இதனை வைத்து இயக்க முடியுமா?

  –எஸ். பிரதீப் குமார், உத்தமபாளையம்


  பதில்: ரன் பாக்ஸ் சுருக்கமான கீகளில் வேண்டும் என்றால், விண்டோஸ் கீயுடன் ஆர் கீயை அழுத்தினால் போதும். நான் அப்படித்தான் செய்வேன்.

  ஆனால் உங்கள் கேள்வியைப் படித்த பின்னரே, இதுவும் நல்ல வழியாய் உள்ளதே என்று எண்ணி வழி தேடினேன். வழி கிடைத்தது. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து எழும் கட்டத்தில் கீழாக உள்ள ரன் கட்டளை அருகே உள்ள ஐகான் அருகே உங்கள் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள்.

  அப்படியே அந்த ஐகான் மீது மவுஸ் கிளிக் செய்து இழுத்து வந்து குயிக் லாஞ்ச் பாரில் விட்டுவிடுங்கள். இப்போது ரன் ஐகான் குயிக் லாஞ்ச் பாரில் இருக்கும். இதன் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் -கீதண என்று கிடைக்கும்.

  இதன் பெயரை மாற்ற வேண்டுமானால், ஐகான் மீது ரைட் கிளிக் செய்து ரீநேம் தேர்ந்தெடுத்து மாற்றலாம். இந்த ஐகானில் கிளிக் செய்தால் உடன் ரன் பாக்ஸ் கிடைக்கும். நீங்கள் திறக்க விரும்பும் புரோகிராமிற்கான கட்டளைச் சொல்லை டைப் செய்து என்டர் செய்திடலாம்.

  இந்த ஐகான பின் நாளில் நீக்க வேண்டும் என்றாலும் மற்ற ஐகான்களை நீக்குவது போல நீக்கிவிடலாம்.  கேள்வி: தேவையற்ற பைல்களைக் கிளீன் செய்திடுகையில், தேவையான இரண்டு பைல்களையும் டெலீட் செய்து நீக்கிவிட்டேன். இந்த இரண்டு பைல்களையும் எப்படி மீட்கலாம்?


  –என். ஜெயந்தி மனோகர், திண்டுக்கல்


  பதில்: நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் மிகவும் குறைவு. எனவே நீண்ட பதில் தருகிறேன். முதலில் ரீசைக்கிள் பின்னைத் தேடவும். அதில் நீங்கள் அழித்த பைல் இருந்தால், அதனைத் தேர்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.

  பின் Restore என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், பைல் எந்த போல்டரிலிருந்து வந்ததோ அந்த போல்டருக்கு அனுப்பப்படும். இந்த பைலை நீங்கள் விரும்பும் போல்டரில் வைத்திட வேண்டும் என விரும்பினால், Cut என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

  இப்போது அந்த பைல் தற்காலிகமாக நீக்கப்படும். எந்த போல்டரில் வைத்திட விரும்புகிறீர்களோ, அந்த போல்டரைத் திறந்து ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Paste என்பதில் கிளிக் செய்திடவும்.

  இந்த இரு பைல்களை அழித்த பின் அதிகமான எண்ணிக்கையில் பைல்களை அழித்திருந்தால், மற்ற பைல்களுக்கு இடம் அளிக்க, ரீசைக்கிள் பின் இந்த பைல்களை வெட்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் இந்த பக்கங்களில் அடிக்கடி தரப்பட்ட பைல் மீட்பு புரோகிராம்களில் ஒன்றின் மூலம் மீட்க முயற்சிக்கவும்.


  கேள்வி: நான் விஸ்டா பயன்படுத்துகிறேன். இதனை செட் செய்கையில், டிபிராக் புரோகிராம் தானாக, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கம்ப்யூட்டரை இயக்கினால் இயங்கும்படி அமைத்திருக்கிறார்கள். இது கம்ப்யூட்டரை மந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனை நிறுத்தி நான் விரும்பும்போது மட்டும் இயங்குபடி அமைக்க முடியுமா?


  –கே.டி. திருஞானம், வேளச்சேரி


  பதில்: முடியும். விஸ்டா மட்டுமின்றி விண்டோஸ் 7 தொகுப்பிலும் இவ்வாறு டிபால்ட்டாக செட் செய்யப்பட்டுள்ளது. இந்த செட் அப்பை மாற்றலாம். முதலில் டெஸ்க்டாப்பில் உள்ள My Computer ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும்.

  பின் அதில் உள்ள C ரைவில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Properties என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Tools என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.

  இதில் Defragment Now என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். (என்ன சார், நான் கேட்பதற்கு நேர்மாறாகப் பதில் தருகிறீர்களே என்று மனதிற்குள்ளேயே சொல்லி திட்டாதீர்கள்) மேலும் கீழே செல்லவும்.

  அங்கு Run on a Schedule தன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இதனால் எப்போதெல்லாம் டிபிராக் இயக்கப்பட வேண்டும் என்று குறித்து வைத்தவை அனைத்தும் நீக்கப்படும். இனி நீங்கள் விரும்பி இயக்கினால் மட்டுமே டிபிராக் செயல்படும். விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இதே போல் மாற்றிவிடலாம்.


  கேள்வி: மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. குறித்து திடீரென ஏன் இந்த நடவடிக்கை? இந்த எண் எதைக் குறிக்கிறது? இதனை எப்படி தெரிந்து கொள்வது?

  –கா. மங்கையர்க்கரசி, திருவாடனை


  பதில்: அனைத்து மொபைல் போன்களும் அதனை அடையாளம் காட்டும் எண்ணுடன் அமைக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டுவிதி. ஆனால் பல போலி நிறுவனங்கள், குறிப்பாக சீன நிறுவனங்கள், இந்த எண் இல்லாமல் மொபைல் போனை வடிவமைத்து குறைந்த விலையில் விற்று வந்தனர்.

  இது தேசிய அளவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், அரசு இந்த தீவிர நடவடிக்கையை, தகுந்த காலக்கெடுவுடன் எச்சரிக்கை கொடுத்துத்தான் எடுத்தது.

  இந்த எண் குறித்து மேலும் தகவல்கள் அறிய http://www.numberingplans.com/?page=analysis‚"=imeinr என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதற்கு முன் உங்களின் மொபைல் போன் எண்ணைத் தெரிந்து கொள்ளவும்.

  போனில் *#06# என எண்ணாக டைப் செய்து பட்டனை அழுத்தினால் உங்கள் போனின் தனி எண் கிடைக்கும். இல்லை என்றால் போனின் பேட்டரியைக் கழட்டினால் அதன் கீழாக இந்த எண் கிடைக்கும்.

  இது 15 இலக்கங்கள் கொண்ட எண். இதனை மேலே சொன்ன இணைய தளத்தில் என்டர் செய்தால், எண்ணில் உள்ள ஹைபன் உட்பட, உங்கள் போன் தயாரிக்கப்பட்ட நாடு, நிறுவனம், போனின் மாடல் எண் ஆகியவை கிடைக்கும். இவை அனைத்தும் அந்த எண்ணில் உள்ளது.

  நன்றி. தினமலர்.

 10. #46
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  டிசம்பர் 20,2009


  கேள்வி: எங்கள் கம்ப்யூட்டர்களில் ஒன்று பழையது. அதில் இன்னும் ஆபீஸ் 97 தான் பயன்படுத்துகிறோம். எங்கள் தேவைக்கு இது போதும். இந்த சாப்ட்வேர்களைப் பயன்படுத்த, குறிப்பாக வேர்ட் மற்றும் எக்ஸெல், நூல்கள் இன்டர்நெட்டில் கிடைக்குமா? இலவசமாகக் குறிப்புகள் வேண்டும். தயவு செய்து கூறவும்.

  –செ. முத்துராஜன், போடி


  பதில்: தொடர்ந்து பழைய கம்ப்யூட்டரையும், முன்பு வந்த ஆபீஸ் தொகுப்பினையும் குறிப்பிட்ட சில வேலைகளுக்காகப் பயன்படுத்தி வரும் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் கேள்விக்கான பதில் இதோ:
  Microsoft excel 97 quick reference

  http://www.parsian.net/set1252/pages/books. htm


  http://www.emu.edu.tr/english/facilitie sservices/computercenter/bookslib/


  Microsoft word 97 quick reference


  http://www.parsian.net/set1252/pages/books .htm


  http://www.emu.edu.t r/english/facilitiesservices/ computercenter/bookslib/


  இந்த தளங்களில் நீங்கள் கேட்டபடி இலவசக் குறிப்புகள் கிடைக்கின்றன.
  இந்த தளங்களில் வேறு பல கம்ப்யூட்டர் நூல்களும் கிடைக்கும். குறிப்பாகக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் பயனடையும் வகையில் பல நூல்கள் உள்ளன.


  கேள்வி: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களுக்குத் தானாக பேக் அப் காப்பி எடுக்கும் வகையில் எப்படி செட் செய்வது?

  –சி. கனகசுந்தரம், திருப்பூர்


  பதில்: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சேவ் செய்திடவும், அவற்றிற்கு பேக் அப் காப்பி ஒன்றை அமைக்கவும் வசதி உள்ளது. வேர்ட் தொகுப்பு டிபால்ட்டாக இதனை பத்து நிமிடங்களில் செய்திடும். ஆனால் இந்த நேரத்தினைக் குறைத்தோ, அதிகப்படுத்தியோ நீங்கள் செட் செய்திடலாம்.


  டூல்ஸ் மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும். இதில் சேவ் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதில் "Always create backup copy" என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும்.

  அதன் பின் Save AutoRecover info every என்ற இடத்தில் டிக் அடையாளம் அமைத்து, அதன் எதிரே எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை டாகுமெண்ட் சேவ் செய்யப்படும் என்பதனையும் செட் செய்திடவும்.

  இந்த ஏற்பாடு அனைவருக்கும் தேவையான ஒன்றுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது அடிக்கடி நடைபெறுவதால், நாம் அதுவரை உருவாக்கிய டாகுமெண்ட்டை இழக்காமல் இருக்க கம்ப்யூட்டர் தானாக அமைக்கும் பேக் அப் காப்பி தேவை. இது wbk என்ற துணைப் பெயருடன் உருவாகும். இறுதியாக சேவ் செய்த மாற்றங்கள் வரை இந்த டாகுமெண்ட்டில் இருக்கும்.


  கேள்வி: டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பைல் விபரங்களுடன் ஒரு விண்டோ காட்டப்படுகிறது. அதில் ரன் என்றும் சேவ் என்றும் இரண்டு ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

  –ஆர். ப்ரியா ராணி, புதுச்சேரி


  பதில்: இணையத்திலிருந்து பைல் ஒன்றை டவுண்லோட் செய்திடுகையில் மற்றும் என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். இரண்டுமே புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் செட் அப் செய்வதற்கான வழிகள்தான்.

  ஒன்று உடனே இன்ஸ்டால் செய்திடும் வேலையை மேற்கொள்ளும். இன்னொன்று பின்னொரு நேரத்தில் இன்ஸ்டால் செய்திட, அதன் பைலை கம்ப்யூட்டரில் நீங்கள் காட்டும் இடத்தில் சேவ் செய்து வைக்கும்.

  சேவ் (Save) என்பதைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதற்கான பைல் கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும்.

  ரன் (Run) என்பதைக் கிளிக் செய்தால், அந்த புரோகிராமினை செட் அப் செய்திடும் பணி மேற்கொள்ளப்படும். பொதுவாகப் பலரும் பைலை கம்ப்யூட்டரில் சேவ் செய்து, பின் இயக்கி இன்ஸ்டால் செய்வதனையே விரும்புவார்கள்.

  இதனை காப்பி செய்து மற்றவர்களுக்கு வழங்கலாம்; நமக்கும் தேவைப்படும் போது இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.


  கேள்வி: ஒரே நேரத்தில் நான்கு தேடல்களை கூகுள் தளத்தில் நடத்த முடியும் என்றும், அதற்கான விடைகளும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்? முடியும் என்றால் என்ன வழி?

  –டி.கருப்பையா, சோழவந்தான்.


  பதில்: முடியும். இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், உங்கள் பிரவுசரில் GoogleGoogleGoogleGoogle.com என டைப் செய்து என்டர் தட்டவும். திரையில் என்ன தெரிகிறது? நான்கு கூகுள் கட்டங்கள் தெரிகின்றனவா?

  எல்லாமே உயிர்த் துடிப்புடன் உள்ளனவா? ஒவ்வொன்றிலும் ஒரு தேடல் சொல்லைக் கொடுத்துப் பாருங்கள். அதற்கான விடைகள் தனியே கொடுத்தால் எப்படிக் கிடைக்குமோ அப்படியே கிடைக்கும்.

  இரட்டைக் குழந்தை பிறந்தால் சந்தோஷம் தான். அதற்கு மேல் என்றால் சமாளிக்க முடியுமா? அது போல் தான் இதுவும். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்.


  கேள்வி: ஹை ஸ்கூல் குழந்தைகளுக்கு கணக்கு பாடம், குறிப்பாக அல்ஜிப்ரா அல்லது ஜியோமெட்ரி குறித்துக் கற்றுக் கொடுக்கும் தளம் உண்டா? பயனுள்ளதாகக் கூறவும்.

  ஆ. திலகவள்ளி, பேரையூர்


  பதில்: இவை குறித்து பல்வேறு தளங்கள் உள்ளன. கூகுள் தளத்தில் சென்று தேடல் கட்டம் மூலம் பார்க்கலாம். ஆனாலும் நான் அண்மையில் கண்ட ஜியோமெட்ரி குறித்த தளம் மிகவும் சிறப்பாக மாணவர்களுக்கு இக்கணிதப் பிரிவைக் கற்றுத் தருகிறது.

  இதன் முகவரி http://www.ics.uci.edu/~eppstein/junkyard/topic.html ஷேப், ஏரியா, வால்யூம் போன்ற சொற்களுக்கான விளக்கம் தேடுகையில் இந்த தளம் குறுக்கே வந்தது. உள்ளே பார்த்தால், ஜியோமெட்ரி குறித்து டன் கணக்கில் தகவல்கள் இருந்தன.

  ஏறத்தாழ அதனை மூட முடியாமல் 50 நிமிடங்களுக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரி ஜியோமெட்ரியில் எனக்கு ஆனா, ஆவன்னா கூட நினைவில் இல்லை என்பதுதான் உண்மை.


  கேள்வி: Times New Roman என்ற எழுத்து வகை வேர்டில் நிரந்தர எழுத்தாக அமைந்துள்ளது. இதனை மாற்றி வேறு ஒரு எழுத்தினை அமைக்க முடியுமா?

  –எஸ்.முருகேசன், திண்டுக்கல்


  பதில்: தாராளமாக முடியும். வேர்ட் தொகுப்பை இயக்கி Format=>font கட்டளையை கிளிக் செய்யுங்கள். இனி இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களைப் பயன்படுத்தி விருப்பபட்ட பான்டைத் தேர்வு செய்து Default பட்டனை கிளிக் செய்யுங்கள். வேர்ட் கேட்கிற கேள்விக்கு Yes பட்டனை அழுத்தி ஒப்புதல் கொடுங்கள்.


  கேள்வி: நான் எச் பி லேசர் பிரிண்டர் வைத்துள்ளேன். இதில் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுக்கையில் கீழே உள்ள பார்டர் மட்டும் அச்சாகவில்லை. எப்படிக் கொடுத்தாலும் அச்சாக மறுக்கிறது. ஏன் இந்தப் பிரச்னை? எப்படித் தீர்க்கலாம்?

  –ஜி.தேவநாதன், அச்சரப்பாக்கம்


  பதில்: இந்த பிரச்னை ஒரு சில பிரிண்டர்களில் உள்ளது. உங்களிடம் உள்ள பிரிண்டரின் மாடல் எண்ணை நீங்கள் தந்திருக்கலாம். பரவாயில்லை. இந்தப் பிரச்னையின் பொதுத்தன்மை யினை இங்கு விளக்குகிறேன்.

  காகிதத்தின் கீழ் விளிம்பில் இருந்து 0.67 அங்குல அளவில் உள்ள பகுதியை dead zone எனப் பல லேசர் பிரிண்டர்கள் எடுத்துக் கொள்ளும்.

  எனவே Bottom Margin அளவை அதிகரியுங்கள். File => Page Setup கட்டளை கொடுங்கள். Layout டேபை அழுத்துங்கள். Borders பட்டனையும் அடுத்து Option பட்டனையும் அழுத்துங்கள். Measure from என்ற டிராப்- டவுனில் இருந்து Text என்பதை தேர்வு செய்து OK செய்யுங்கள்.


  கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பள்ளி மாணவர்களுக்கான பல பட்டியல்கள் தயாரிக்கிறோம். பல செல்கள் ஒன்றாக இருப்பதால், டேட்டாவினைத் தவறாக எடிட் செய்துவிடுகிறோம். சில டேட்டா என்டர் செய்த பின்னரே இது தெரிகிறது. இதனால் இரட்டிப்பு வேலை ஆகிறது? இதனைத் தவிர்க்க என்ன வழி?

  –டி. ரமேஷ் குமார், பழநி


  பதில்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில் செல்களைத் தவறாக அடையாளம் கொண்டு தவறான தகவல்களை எடிட் செய்து ரீ பிளேஸ் செய்து விடுவது நீங்கள் மட்டுமல்ல; பலரும் செய்திடும் தவறு தான். நீங்கள் ஆசிரியர் என்பதால், இந்த தவறு உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. இதற்கான தீர்வு என்ன?


  Undo பட்டனை அழுத்துவதுதான். அல்லது Ctrl + Z என்ற கீகளை அழுத்துவதுதான். இன்னொரு வழியும் உள்ளது. நீங்கள் இன்னும் செல்லில் இருந்து தவற்றை ஏற்படுத்திய மாற்றங்கள் இன்னும் முடியவில்லை என்றால் ஒரே பட்டன் அழுத்தலில் இதனைச் சரி செய்துவிடலாம்.

  அது Esc கீயை அழுத்துவது. என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும் வழியில் இருந்தீர்களோ அவை அனைத்தும் நீக்கப்பட்டுவிடும். பழைய தகவல்கள் செல்களில் இருக்கும்.

  நன்றி.தினமலர்.
  Last edited by நூர்; 22-12-2009 at 06:05 AM.

 11. #47
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  டிசம்பர் 28,2009,

  கேள்வி: வேர்டில் பல பக்கங்களில் நீளும் டேபிளில் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு கட்டங்களில் உள்ள தலைப்புகளை, அடுத்த அனைத்து பக்கங்களிலும் அமைய என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?

  – சி.கு. சாம்பசிவம், விழுப்புரம்

  பதில்: முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும்.

  விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும்.

  பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும்.

  நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும் நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும்.


  கேள்வி: உங்களுடைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கட்டுரையில் பைல்களைக் காப்பி செய்திட டெரா காப்பி செய்திடுங்கள்; இதனால் நேரம் மிச்சமாகும். வேலை விரைவாக நடக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இந்த டெரா காப்பி குறித்து கூடுதல் தகவல்களைத் தரவும்.

  –ஆர். கலாவல்லி, நாகமலை புதுக்கோட்டை


  பதில்: பெரிய பைல்களைக் காப்பி செய்திடுகையில் விண்டோஸ் சில வேளைகளில் இடையே நின்றுவிடும். பைல்கள் அடங்கிய முழு போல்டர்களைக் காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னை ஏற்பட்டால் எந்த பைல் வரை சரியாகக் காப்பி ஆனது என்று தெரியாது.

  இந்தக் குறையை நீக்கவும், காப்பி செய்வதனை எளிதாகவும் விரைவாகவும் அமைக்க டெரா காப்பி (TeraCopy) புரோகிராம் உள்ளது. இதனை http://www.box.net/shared/o16me8egx3 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளவும்.

  அதன்பின் நீங்கள் எப்போது காப்பி மற்றும் பேஸ்ட் செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் இது தானாக இயங்க ஆரம்பிக்கும். இது காப்பி வேலையை மிக எளிதாகவும் வேகமாகவும் மேற்கொள்ளும். ஒரு பைலைக் காப்பி செய்கையில் இடையே நிறுத்திப் பின் மீண்டும் தொடரலாம்.

  பல பைல்களைக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்து, காப்பி செய்திடுகையில் ஒரு பைலைக் காப்பி செய்வதில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து அடுத்த பைலுக்குச் செல்லும். பிரச்னை ஏற்பட்ட பைலைக் காட்டும். பின் பிரச்னையைச் சரி செய்து காப்பியைத் தொடரலாம்.


  ஒரு பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்தால் ஏற்படும் மெனுவில் டெரா காப்பி என்றொரு வரியும் ஆப்ஷனாகத் தென்படும். இதனுடன் வழக்கமான காப்பி பிரிவும் கிடைக்கும். இந்த டெரா காப்பி தேவை இல்லை என்றால் உடனே அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.


  கேள்வி: ஆர்வத்தில் இணையப் பக்கங்களுக்கான தளங்கள் பலவற்றிற்கு புக்மார்க்குகளை, பயர்பாக்ஸ் பிரவுசரில் ஏற்படுத்தி உள்ளேன். அவசரத்திற்குத் தேவையான தளத்தைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது. இப்போது தேவைப்படாத புக்மார்க்குகளை எப்படி அழிப்பது?

  –என்.சாய்ராம், பொள்ளாச்சி

  பதில்: கவலையே வேண்டாம். எந்த புக்மார்க் தேவையில்லையோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் ரைட் கிளிக் செய்திடவும். உடனே ஒரு மெனு விரியும். இதில் டெலீட் பட்டன் தெரியும். அதனை அழுத்தவும். அழித்து நீக்கி விடவா? இல்லை என்றால் ஜஸ்ட் நீக்கிவிடவா என்று கேட்கப்படும். உடனே யெஸ் என்ற பட்டனில் அழுத்தினால் புக்மார்க் தள லிஸ்ட்டில் இருந்து அது நீக்கப்படும்.


  கேள்வி: ஒரு ரௌட்டர் என்ன வேலை செய்கிறது? இன்டர்நெட் இணைப்பிற்கு அது அவசியம் தேவையா?

  –எஸ்.ஜே. பரந்தாமன், திண்டிவனம்


  பதில்: நெட்வொர்க் ஒன்றில் டேட்டா பரிமாற்றத்திற்கு ரௌட்டர் என்னும் சாதனம் ஒரு அவசியத் தேவையாகும். நெட்வொர்க் இயக்கத்தினைக் கண்காணித்து இது டேட்டாவினை வழங்கும். இன்டர்நெட் என்பது பல நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு பெரிய நெட்வொர்க். எனவே ரௌட்டர் இன்டர்நெட் இணைப்பிற்கு அவசியம் தேவை.


  கேள்வி: வேர்ட் தொகுப்பில் ஹெடர் அண்ட் புட்டர் பற்றி அடிக்கடி படிக்கிறேன். இதனால் என்ன பயன்? இதனை எப்படி அமைப்பது?

  –சீ. கார்த்திகேயன், திருத்தங்கல்


  பதில்: டாகுமெண்ட் ஒன்றை பிரிண்ட் செய்கையில், ஒவ்வொரு பக்கத்திலும், அதன் தலைப்பிலும், கீழாகவும் அச்சிடப்படும் டெக்ஸ்ட் அமைக்க ஹெடர் அண்ட் புட்டர் பயன்படுகிறது. இதன் பெரும் வசதி என்னவென்றால்,

  இவற்றை ஒருமுறை வடிவமைத்தால் போதும். வேர்ட் தானாக அதனை அனைத்து பக்கங்களிலும் அமைத்திடும். ஹெடர் அண்ட் புட்டரில் டெக்ஸ்ட் அமைக்கக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திட வேண்டும்.


  1. வியூ (View) மெனுவில் ஹெடர் அண்ட் புட்டர் (Header and Footer) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஹெடர் அண்ட் புட்டர் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது கர்சர் இருக்கும் பக்கத்தில் ஹெடர் பாக்ஸ் ஒன்று காட்டப்படும்.


  2. அந்த ஹெடர் கட்டத்தில், டாகுமெண்ட் தலைப்பில் வரவேண்டும் என நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை டைப் செய்திடவும். வழக்கமாக ஒரு டெக்ஸ்ட்டை எப்படி டைப் செய்து பார்மட் செய்வோமோ அதே போல இந்த டெக்ஸ்ட்டையும் அமைக்கலாம்.


  3. இதே போல புட்டர் பாக்ஸிலும் அமைக்கலாம்.


  4. அதன் பின் குளோஸ் கிளிக் செய்து, இந்த பாக்ஸ்களை மூடவும். இனி நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் ஒவ்வொரு பக்கத்திலும் மேலாகவும், கீழாகவும் அச்சடிக்கப்படும்.


  கேள்வி: இன்றைய மொபைல் கேமராக்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மெகா பிக்ஸெல் என்று ஒரு அளவு தரப்படுகிறது. இது பற்றி விளக்கவும்.

  –சி. என். நரசிம்மன், தேவாரம்


  பதில்: Picture element என்பதன் சுருக்கமே பிக்ஸெல் (Pixel) என்று அழைக்கப்படுகிறது. படம் ஒன்று பல புள்ளிகளால் அமைக்கப்படுகிறது.

  அந்த ஒரு டிஜிட்டல் புள்ளி தான் பிக்ஸெல். எனவே ஒரு படத்தில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், படம் மிக நன்றாகச் சிறப்பாக இருக்கும்.

  எனவே ஒரு டிஜிட்டல் படம் சார்பாக மெகா பிக்ஸெல் என்று கூறுகையில் அதில் அடங்கியுள்ள புள்ளிகளைக் குறிப்பிடுகிறோம். ஒரு மெகா பிக்ஸெல் என்பது பத்து லட்சம் சிறிய புள்ளிகளால் ஆன படம். எனவே டிஜிட்டல் கேமரா மற்றும் கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து மொபைல் வாங்குகையில் உங்கள் பணத்திற்கேற்ப கூடுதலான மெகாபிக்ஸெல் திறன் கொண்டதாக வாங்கவும்.


  கேள்வி: என் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பெயரில், அல்லது இமெயில் முகவரி பதிந்து வைத்த இன்டர்நெட் தளங்களிலிருந்து ஆடியோ, வீடியோ, பிரசன்டேஷன் மற்றும் டெக்ஸ்ட் பைல்கள் இணைப்பாகக் கொண்டு மெயில்கள் வருகின்றன. இவற்றை டவுண்ட்லோட் செய்திட பயமாகவும் உள்ளது.

  அதே நேரத்தில் முக்கிய பைல்களை பெறாமலும் இருக்க முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?  பதில்: கஷ்டம் தான். நம் மின்னஞ்சல் தொடர்புகள் பெருகி வரும் அதே வேளையில், ஸ்பைவேர்களும் மால்வேர்களும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. சந்தேகப்படும் இமெயில்களைத் திறக்க வேண்டாம்.

  அவற்றின் சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ளதை எடுத்துவிட்டு, அதில் SCAN என்று டைப் செய்து scan@virustotal.com என்ற முகவரிக்கு மெயில் செய்திடவும். உடனே உங்களுக்குச் சில நொடிகளில் அதே மெயில் திரும்ப வரும்.

  அறிக்கையாக வரும் இந்த மெயிலில், எத்தனை ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மூலம் நீங்கள் அனுப்பிய மெயில், இணைப்பு பைல் ஆகியவை சோதனைக்குள்ளாக்கப்பட்டன என்ற விபரமும், அதன் முடிவும் காட்டப்படும்.

  இதிலிருந்து உங்களுக்கு வந்த இமெயில் ஸ்பைவேர், வைரஸ், மால்வேர் உள்ளதா எனத் தெரியவரும். இதற்குக் கட்டணம் இல்லை.


  கேள்வி: விஸ்டா தொகுப்பில் கம்ப்யூட்டரை இயக்குகிறேன். சில புரோகிராம்களை இயக்க கட்டளை கொடுத்தால், அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் மட்டுமே இயக்க முடியும் என்று செய்தி வருகிறது. நான் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் மட்டுமே வைத்து இயக்கிவந்தாலும் இந்த பிரச்னை வருகிறது. எங்கு சிக்கல் உள்ளது? எப்படி இதனைத் தீர்ப்பது?

  –உ.மாரியப்பன், மதுரை


  பதில்: இது போன்ற வேளைகளில் நமக்கு எரிச்சல்தான் வரும். இதன் அடிப்படைக் காரணம் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் கமாண்ட் ப்ராம்ப்ட், டாஸ்க் ஷெட்யூலர், ரெக் எடிட் போன்றவை இயக்கும் வழிகள் சரியாக அப்டேட் செய்யப்படாததே காரணம். இந்த பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி உள்ளது.

  ஸ்டார்ட் பட்டன் அழுத்தி உங்களுக்கு உரிமை தர மறுக்கும் புரோகிராமினை இரண்டு அல்லது மூன்று முறை, ரன் பாக்ஸ் மூலம், இயக்கினால், அந்த புரோகிராம் ஸ்டார்ட் பட்டியலில் இடம் பெறும்.

  அல்லது நேரடியாகவே அதனை ஸ்டார்ட் மெனுவில் கொண்டு வாருங்கள். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Run as என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும்.

  இதன் பின் தரப்படும் சிறிய கட்டத்தில் Run as Administrator என்று இருக்கும் இடத்தில் உள்ள ரேடியோ பட்டனைக் கிளிக் செய்து ஓகே கொடுத்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கும் புரோகிராமாகத்தானாகவே இயக்கப்படும். இங்கு நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டருக்கான பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்.


  கேள்வி: கம்ப்யூட்டர் பைலுக்கான ப்ராபர்ட்டீஸ் பிரிவில், பட பைல் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் மொபைல் போன் மூலம் எடுத்த போட்டோ பைலுக்கான ப்ராப்பர்ட்டீஸ் எப்படி பெறுவது. மொபைலில் இதற்கு வழி உள்ளதா?

  –எஸ். ஆஷா, திருத்தணி

  பதில்: மொபைலில் வழி இல்லை. அந்த பட பைலை கம்ப்யூட்டருக்கு மாற்றுங்கள். அது பைலாக ஸ்டோர் செய்யப்படும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் விண்டோவில் சம்மரி (Summary) என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்களைக் காட்டிலும் கூடுதலாகவே தகவல்கள் கிடைக்கும்.

  நன்றி.தினமலர்

 12. #48
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  30,398
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: என் மகள் எனக்கு தந்த மொபைல் போனில் 5 எம்பி கேமரா உள்ளது என்று சொல்கின்றனர். 5 மெகா பிக்ஸெல் என்றால் அதன் ரெசல்யூசன் எவ்வளவு இருக்கும்? சரியாக இருக்குமா?

  -கே.எஸ். சாம்பசிவம், சென்னை


  பதில்: ஐந்து மெகா பிக்ஸெல் என்பது 2560 x 1920 என்ற பிக்ஸெல் ரெசல்யூசனைக் குறிக்கும். மொபைல் போன் அல்லது கேமரா தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்து இதில் சற்று கூட குறைய இருக்கலாம்.


  கேள்வி: ஜிமெயிலில் உள்ள நட்சத்திரக் குறி எதனைக் குறிக்கிறது? என்னுடைய இமெயில் அக்கவுன்ட்டில் அதனை நான் பயன்படுத்த முடியுமா?

  –எஸ். உதயசந்திரன், பள்ளத்தூர்


  பதில்: இந்த கேள்விக்கான பதிலைத் தொடங்கும் முன், ஜிமெயில் என்பது எதனைக் குறிக்கிறது என்று சொல்லிவிடுகிறேன்.

  ஏனென்றால், ஜிமெயில் பற்றி தெரியாமல், அதனைப் பயன்படுத்துவது குறித்து அறியாமல் இன்னும் சிலர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கூகுள் நிறுவனத்தின் இமெயில் கிளையண்ட் புரோகிராம் தான் ஜிமெயில் என்பதாகும். இதனை www.google.co.in என்ற தளத்தில் காணலாம்.

  யாரும் எளிதாக இலவசமாக இதில் ஓர் அக்கவுன்ட் திறக்க முடியும். இது பல்வேறு சிறப்பான வசதிகளைத் தருவதாலும், அளவற்ற டிஸ்க் இடம் தருவதாலும், அநேகமாக இணையம் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் இதில் ஓர் அக்கவுன்ட் வைத்துள்ளனர்.


  ஜிமெயிலின் ஒரு அம்சம் ஸ்டாரிங் என்னும் நட்சத்திரக் குறியீடு இடுவது. ஸ்டார் அடையாளம் ஒன்றை, இமெயில் பக்கத்தில் அமைப்பதன் மூலம், அந்த குறிப்பிட்ட இமெயில் மற்ற மெயில்களிடமிருந்து ஒரு வகையில் சிறப்பானது என்று அடையாளம் அமைக்கிறோம்.

  ஒரு மெயிலை ஸ்டார் ஆக்க, வெள்ளை வண்ணத்தில், மெசேஜுக்கான செக் பாக்ஸுக்கு வலது பக்கத்தில் இருப்பதனைக் காணலாம். அதில் கிளிக் செய்தால், அந்த ஸ்டார் மஞ்சள் வண்ணத்தில் மாறி, மெசேஜுக்கு அருகே அமையும். இதன் பின் அந்த மெயில் தனி இடம் பெறுகிறது.


  கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். கம்ப்யூட்டரை ஆப் செய்திடுகையில் சில வேளைகளில் "This application failed to initialize, because the window station is shutting down" என்னும் மெசேஜ் காட்டப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது? இதனை நிறுத்த முடியுமா?

  –என். ஜெசிந்தா ராணி, காரைக்கால்


  பதில்: இந்த செய்தி கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடும்போது மட்டுமே கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்திட செய்தியைப் பெற்றபோது, முக்கியமான புரோகிராம் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தால், இந்த செய்தி கிடைக்கும்.

  கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதனால், இயங்கத் தொடங்கிய அந்த புரோகிராம் முடங்கிப் போனதால், இந்த செய்தி கிடைக்கிறது. இந்த செய்தி நீங்கள் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் இன்ஸ்டால் செய்து, பின் அது உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடும்போதும் கிடைக்கும்.

  எனவே நீங்கள் புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடும்போதும், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடும்போதும், அனைத்து புரோகிராம்களும் மூடப்பட்டுவிட்டதா எனச் சோதனை செய்து மூட வேண்டும். வேறு வழியில் இதனை நிறுத்த முடியாது.


  கேள்வி: யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் ஒன்றை பார்மட் செய்திட முடியுமா? முடியும் என்றால் எவ்வாறு?

  –டி.சிராஜுதீன், புதுச்சேரி


  பதில்: பலர் வெகுநாட்களாகக் கேட்டு வரும் கேள்வி. நீங்கள் பிளாஷ் டிரைவ் ஒன்றை அதன் யு.எஸ்.பி. போர்ட்டில் செருகியவுடன், கம்ப்யூட்டர் சிஸ்டம் அதனை ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவாகப் புரிந்து கொண்டு அறிந்தேற்பு செய்திடும்.

  எனவே அதனை எளிதாக பார்மட் செய்திடலாம். (நீங்கள் இன்னும் விண்டோஸ் 95 அல்லது 98 பயன்படுத்திக் கொண்டிருந்தால், பிளாஷ் டிரைவிற் கான டிரைவர்களை இன்ஸ்டால் செய்திடாமல் பார்மட் செய்திடமுடியாது).


  பிளாஷ் டிரைவினை ரீபார்மட் செய்திட, மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் உங்கள் பிளாஷ் டிரைவிற்கான ஐகானைக் கண்டறியவும். பின் இந்த ஐகானில் ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் மெனுவில் பார்மட் என்பதனைக் கிளிக் செய்தால், டிரைவ் பார்மட் செய்யப்படும்.


  கேள்வி: இன்டர்நெட் சைட்களில் உள்ள முக்கிய தகவல்கள் அடங்கிய பக்கங்களை பிரின்ட் எடுக்கையில் வலது பக்கம் உள்ள தகவல்கள் அச்சில் வர மறுக்கின்றன. எப்படி பிரின்ட் எடுத்தாலும் இதே கதிதான். இதற்கு எதனை மாற்றுவது?

  –டி. பிரகாச மூர்த்தி, அவினாசி


  பதில்: இணைய தளம் மற்றும் இமெயில் மெசேஜ் பிரின்ட் எடுக்கையில் இது போல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இணைய தளம் வடிவமைக்கும் பலர் இதனை உணர்ந்து, எந்தப் பக்கமும் அச்சில் வெட்டப்படாத வகையில் பார்த்துக் கொள்வார்கள்.

  அது போன்ற தளங்களைப் பிரின்ட் எடுக்கையில், பேஜ் செட் அப்பில் போர்ட்ரெய்ட் செட் செய்து பிரின்ட் எடுக்கலாம். பிரின்ட் எடுக்கும் முன் பிரின்ட் பிரிவியூ செல்லவும்.

  இதற்கு பிரவுசர்களில் வசதி உண்டு. அதில் தகவல்கள் வலது, இடது பக்கங்களில் கட் ஆவது தெரிந்தால், பேஜ் செட் அப் சென்று இதனை லேண்ட்ஸ்கேப் வகைக்கு மாற்றி, பிரிண்ட் பிரிவியூ பார்க்கவும். அநேகமாக இந்த வகையில் சரியாக அச்சாகும்.

  இதிலும் சரியாக இல்லை என்றால், தகவல்களை காப்பி செய்து வேர்ட் போன்ற புரோகிராம் பக்கங்களில் பேஸ்ட் செய்து பிரிண்ட் எடுக்கவும். அத்துடன், அந்த தளத்தின் வெப் மாஸ்டருக்கு காரசாரமாக பிரச்சினையை எழுதி ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.


  கேள்வி: ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களை மேற்கொண்டால், சிக்கல்கள் ஏற்படும் என்று சொல்லியே எங்களுக்கு ரெஜிஸ்ட்ரி மாற்றங்கள் ஏற்படுத்துவதனைச் சொல்ல மறுக்கிறீர்கள்.

  ரெஜிஸ்ட்ரியின் பேக் அப் காப்பி எடுப்பது எப்படி? பின் மீண்டும் அதனை கொண்டுவருவது எப்படி என்று விளக்கவும்.


  –எஸ். கலாவல்லி, மதுரை


  பதில்: முன்பு இது குறித்து தனிக் கட்டுரை ஒன்று இந்த பகுதியில் வெளியிடப்பட்டது. விஷயத்தைச் சுருக்கமாகக் கூறுகிறேன். Start அழுத்தி கீதண பாக்ஸ் செல்லவும்.

  அதில் Regedit என டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் File மெனு அழுத்தி, அந்த பிரிவில் Export என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  இப்போது கிடைக்கும் பாக்ஸில் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ரெஜிஸ்ட்ரி பேக் அப் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்திடவும்.

  இப்போது உங்கள் ரெஜிஸ்ட்ரி பைலுக்கான பேக் அப் ரெடி. இங்கு ஒரு சிறு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

  விண்டோஸ் எப்போதும் தான் ஷட் டவுண் ஆகும்போது ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்துவிட்டுத்தான் ஷட் டவுண் ஆகும். இதனையும் சிக்கல் ஏற்படுகையில் பயன்படுத்தலாம்.

  அடுத்து எப்படி ரெஜிஸ்ட்ரி பேக் அப் பைலை மீண்டும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

  பொதுவாக விண்டோஸ் உங்கள் சிஸ்டத்தில் உள்ள ரெஜிஸ்ட்ரியை இயக்கத்திற்குக் கொண்டு வருகையில் ஏதேனும் பிரச்னை யைச் சந்தித்தால், தானாகவே பேக் அப் பைலை இயக்கத் திற்குக் கொண்டு வரும்.

  எனவே நீங்கள் பேக் அப் செய்த ரெஜிஸ்ட்ரி பேக் அப்பிற்கு வேலை இருக்காது.

  ஆனால் நீங்கள் தயாரித்த பேக் அப் பைலைத் தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணினால், ரெஜிஸ்ட்ரி எடிட்டரில், ரெஜிஸ்ட்ரி மெனுவில் கிளிக் செய்திடவும்.

  பின் Import Regisry என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து நீங்கள் வைத்துள்ள உங்கள் பேக் அப் பைலைச் சுட்டிக் காட்டினால், அந்த ரெஜிஸ்ட்ரி பைல் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்.


  கேள்வி: சிஸ்டம் அப் டைம் என்பது என்ன? அதனை எப்படி அறிவது?

  –கே. கார்த்திகேயன், விழுப்புரம்

  பதில்: சிஸ்டம் அப் டைம் (System Uptime) என்பது, இறுதியாக சிஸ்டம் ஆன் செய்து இயங்கத் தொடங்கியதிலிருந்து இப்போது வரை உள்ள கால நேரம். அதாவது கடைசியாக கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். இதனை எப்படி அறிவது?

  உங்களுடைய சிஸ்டம் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் Start பட்டன் அழுத்தி Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இதில் CMD என டைப் செய்து என்டர் அழுத்த கருப்பு திரையில் டாஸ் ப்ராம்ப்ட் என்று சொல்லப்படும் கட்டளைப் புள்ளி கிடைக்கும்.

  இதில் Systeminfo என இடைவெளி விடாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது உங்கள் சிஸ்டம் படிக்கப்பட்டு, சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். இதில் 11 ஆவது வரியில் System Uptime எனக் காட்டப்பட்டு அதன் எதிரே, இதுவரை உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாக ஆன் செய்ததிலிருந்து எவ்வளவு நேரம் ஓடியுள்ளது எனக் காட்டப்படும்.

  நாட்கணக்கில் ஓடியிருந்தாலும் Days, Hours, Minutes, Seconds எனக் காட்டப்படும். மேலும் சிஸ்டம் குறித்த பல ருசிகரமான தகவல்கள் அதில் இருக்கும்.


  கேள்வி: குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில தளங்களின் முகவரிகளைத் தரவும்.

  -கே. ஏ. சிற்சபேசன், காரைக்குடி

  பதில்: இந்த பகுதியில் அடிக்கடி தரப்படுகிறதே. இன்னும் பயன்படுத்த வில்லையா! அதனா லென்ன! இதோ தருகிறேன்.
  http://tux4kids. alioth.debian. org/tuxmath/download.php


  http://crayonphysics.en. softonic.com/download


  www.kiranreddys.com


  http://ldd.lego.com/download


  http://scratch.mit.edu/


  இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு இவற்றை அறிமுகப்படுத்தி உடனிருந்து அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று கோடி காட்டுங்கள். நம் குழந்தைகள் கோட்டையே கட்டிவிடுவார்கள். வழி காட்டி அவர்களை உற்சாகப்படுத்தினால் போதும்.

  நன்றி.தினமலர்.11/01/10
  Last edited by நூர்; 11-01-2010 at 06:00 AM.

Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •