Page 3 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 104

Thread: கணினி வினா(டி) விடை.

                  
   
   
 1. #25
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  175,526
  Downloads
  39
  Uploads
  0
  பயனுள்ள பதில்களைத் தொகுத்து வழங்கும் உங்கள் சேவைக்கு நன்றி நூர்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 2. #26
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Posts
  3,716
  Post Thanks / Like
  iCash Credits
  6,852
  Downloads
  0
  Uploads
  0
  பாராட்ட வேண்டிய பதிவு இது....பாராட்டுகள் நூர்.....தொடரட்டும்
  உங்கள் பணி

  இளசு இந்த பக்கம் எல்லாம் வர மாட்டாரே?????????

 3. #27
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
  -----------------------------------

  இப்போது எந்த பிரவுசர் குறித்து படித்தாலும் பிரைவேட் பிரவுசிங் என்பது குறித்து எழுதப்படுகிறது. இதனால் என்ன பயன்? இதுவரை நாம் பிரைவேட்டாக பிரவுசிங் செய்திடவில்லையா? இது உண்மையிலேயே நல்லது என்றால் அதனை எப்படி செட் செய்வது?

  – டாக்டர் என். லீலா ஈஸ்வரன், கோயம்புத்தூர்


  நாம் இன்டர்நெட்டில் இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் டிக்கட் வாங்குவது, எலக்ட்ரிசிட்டி, டெலிபோன் பில் கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

  இந்த தளங்களுக்குச் செல்கையில் பிரவுசர்கள் நீங்கள் எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டு வைத்துக் கொண்டு பின் நாளில் அந்த தளத்தின் முதல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கினாலே தளத்தின் முகவரியைத் தந்துவிடும். முழுமையான முகவரியை டைப் செய்திடாமலேயே நமக்குத் தள முகவரி கிடைக்கும்.


  இதில் என்ன ஆபத்து எனில் அந்த கம்ப்யூட்டரைக் கையாளும் மற்றவர்களுக்கும் இந்த பட்டியல் கிடைக்கும். நீங்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமா என்ன? அப்படியானால் இதற்கு வழி என்ன? என்று கண்டறிய முயற்சிக்கையில் ஏற்பட்ட தீர்வு தான் பிரைவேட் பிரவுசிங். இந்த சொற்களை பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறது. இதன் தற்போதைய பதிப்பில் இது தரப்படுகிறது.


  Tools சென்று கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Start Private Browsing என்று ஒரு பிரிவு இருக்கும். இதைக் கிளிக் செய்தால் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த டேப்களெல்லாம் மறைந்து இப்போதிருந்து பிரைவேட் பிரவுசிங் ஆரம்பிக்கிறது.

  பயர்பாக்ஸ் நீங்கள் பார்க்கும் தளங்களை குறித்து எந்த பதிவினையும் ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் ஏற்படுத்தும் புக் மார்க் போன்றவை பதியபப்படும் என்று அறிவிப்பு வரும். இதில் ஓர் எச்சரிக்கையும் உண்டு. பயர்பாக்ஸ்தான் பதிந்து கொள்ளாது.எனவே நீங்கள் இன்டர்நெட்டில் எந்த எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது.

  ஆனால் உங்களுக்கு இணைய சேவை தரும் நிறுவனத்திற்குத் தெரியும். எனவே உங்களுக்கு ஊதியம்கொடுத்து வேலைக்கு வைத்திருப்பவர் நினைத்தால் அவரும் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம் என்று ஓர் எச்சரிக்கை வரும்.


  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இதனை InPrivate Browsing என அழைக்கின்றனர். இது என்ன செய்கிறது என்றால் அப்போது நீங்கள் செல்லும் தளங்களின் பட்டியலை பதிய வைத்துக் கொண்டு உங்கள் பிரவுசிங் பணி முடித்து பிரவுசரை முடிக்கையில் அனைத்தையும் அழித்துவிடுகிறது. இரண்டு தொகுப்புகளிலும் இதனை பெற ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பு உண்டு. அது Ctrl + Shft + P ஆகும்.  ப்ளக் இன் புரோகிராம் என்று குறிப்பிடப்படுவது எந்த வகையைச் சேர்ந்தது? இது ஒரு வகை பைலா?

  –என். நாகேஸ்வரன், மதுரை


  ப்ளக் இன் என்பது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். சில வடிவில் இருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படும்.

  எடுத்துக் காட்டாக சில வெப் தளங்கள் நீங்கள் கேம்ஸ் விளையாட ஷாக்வேவ் தரும் வசதியினைப் பயன்படுத்துகின்றன. எனவே நீங்கள் இந்த கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் ஷாக் வேவ் ப்ளக் இன் கட்டாயம் தேவை.

  அப்படியானால் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டுமா என்று எண்ண வேண்டாம்.


  நீங்கள் குறிப்பிட்ட கேம்ஸ் அல்லது வேறு வகை வெப் மீடியாவினைத் திறக்க எண்ணுகையில் அந்த தளமே உங்கள் கம்ப்யூட்டரைத் தேடிப் பார்த்து இந்த ப்ளக் இன் இல்லை.

  சற்றுப் பொறுக்கவும்; நானே தேடிப் பதிந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டு அந்த ப்ளக் இன் புரோகிராமினைப் பதிந்துவிடும். ஆனால் இப்போது வரும் பெரும்பாலான பிரவுசர்கள் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களையும் உள்ளடக்கியே வருகின்றன.


  நான் என்னுடைய அல்லது பொதுவாக ஒரு கம்ப்யூட்டரைக் காலையில் இயக்க தொடங்கினால் அலுவலக நேரம் முடியும் வரை அதனை அணைக்காமல் இருக்கலாமா? அது கம்ப்யூட்டருக்கு நல்லதா? அல்லது தொடர்ந்து அணைக்காமலேயே வைத்துவிடலாமா?


  –எஸ். கே. கண்ணன், புதுச்சேரி


  என்னடா இந்த பட்டிமன்றக் கேள்வி சில மாதங்களாகக் காணோமே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் கண்ணன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை இங்கு இது குறித்துக் கூறுகிறேன்.

  ஏன் பட்டிமன்றம் என்று குறிப்பிட்டேன் என்றால் இரண்டு வகையான கருத்து இப்படியும் அப்படியும் நிலவுகிறது. கம்ப்யூட்டரை வெகுநேரம் வேலை முடியும் வரை அப்படியே விட்டுவிடலாம்; தீங்கு ஒன்றும் நேராது என்று ஒரு கோஷ்டி.

  இல்லை விடக்கூடாது; அவ்வப்போது வேலை இல்லை என்றால் அணைத்து ஓய்வு கொடுங்கள். பின்பு தேவைப்படும்போது மீண்டும் இயக்கிக் கொள்ளலாம் என்றுஒரு கோஷ்டி கூறுகிறது. இவர்கள் கூறும் காரணங்களைப் பார்ப் போமா?

  கம்ப்யூட்டரில் உள்ள எலக்ட்ரானிக் பாகங்கள் அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்திடாமல் வைத்தால் தான் வெகு நாட்களுக்கு நன்றாக வேலை செய்திடும். முதல் முதலில் கம்ப்யூட்டரை ஆன் செய்கையில் ஒரு எலக்ட்ரிக் பம்பிங் இருக்கும்.

  அடிக்கடி செய்தால் இந்த லேசான அதிர்ச்சியை கம்ப்யூட்டர் அடிக்கடி பெற வேண்டுமே. மேலும் அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்தால் கம்ப்யூட்டர் பூட் செய்திட எடுக்கும் நீண்ட நேரத்தை அடிக்கடி சந்திக்க வேண்டும். இது வீணான நேரம் தானே. இதனை ஏன் அடிக்கடி கொள்ள வேண்டும்?


  வேலையில்லையா, உடனே ஆப் செய்துவிடு என்று கூறுபவர்கள் ஹார்ட் டிஸ்க் நீண்ட நாட்கள் உழைக்க அது வேலையில் இல்லாத் நேரத்தில் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

  தொடர்ந்து ஹார்ட் டிரைவின் மோட்டார் ஓடிக் கொண்டிருப்பது அதன் பாகங்களைத் தேயவைக்காதா? என்ற கேள்வியை இவர்கள் எழுப்புகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

  ஏனென்றால் ஹார்ட் டிஸ்க் தயாரிப்பவர்கள் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமலா தயாரித்திருப்பார்கள் என்று பலரும் சொல்கின்றனர். மேலும் ஹீட், டஸ்ட் அதிகம் பெறும் வாய்ப்பு அது தொடர்ந்து ஓடினால் அதிகமாகிறது. எனவே அவ்வப்போது ஆப் செய்திடுங்கள் என்று உரத்த குரலில் இவர்கள் கூறுகின்றனர்.


  சரி, என்ன செய்யலாம்? நான் பகலில் வேலை இருக்கும்போது அப்படியே தொடர்ந்து ஓடவிடுகிறேன். இரவில் ஆப் செய்து விடுகிறேன். இடையே வேலை இல்லை என்றால் ஆப் செய்துவிடுகிறேன்.

  சும்மா இருக்கையில் ஏன் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 133 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்திற்கு மேல் செயல்படும் எந்த ப்ராசசர் சிப்பிற்கும் அதன் வெப்பத்தினைத் தவிர்க்க ஒரு சிறிய விசிறி தேவைப்படுகிறது.

  ஆனால் இந்த விசிறிகள் மட்டும் போதாது. எனவே வேலை இருக்கும்போது இயக்கிவிட்டு, வேலை இல்லையா, கம்ப்யூட்டரை அணைத்துவிட்டுப் பின் தேவைப்படுகையில் இயக்கவும்.  கம்ப்யூட்டருக்கு அருகில் சிகரெட் பிடிக்கலாமா? அதிலிருந்து வரும் புகை கம்ப்யூட்டருக்குக் கெடுதலா? எந்த பகுதியைப் பாதிக்கும்?


  – எஸ். நித்யா, செஞ்சி


  கம்ப்யூட்டர் பரவத் தொடங்கிய 1980 மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் கம்ப்யூட்டர்கள் தூசி இல்லாத ஏர் கண்டிஷனிங் அறைகளில் வைத்து மட்டுமே இயக்கப்பட்டன.

  மூடிய குளிரூட்டப்பட்ட அறைக் கதவுகளில் தயவு செய்து காலணிகளைக் கழட்டிவிட்டு நுழையுங்கள் என்றெல்லாம் அறிவிப்புகள் இருந்தன. கம்ப்யூட்டர் இருந்த அறை எல்லாம் ஆராய்ச்சி செய்திடும் பெரிய லேபரட்டரிகளாகக் கருதப்பட்டன.

  ஆனால் இப்போது மானிட்டர் மீது ஸ்நாக்ஸ், டேபிளில் காபி, அருகே சிகரெட் சாம்பலைத் தட்ட ஆஷ் ட்ரே என கம்ப்யூட்டர் மேஜை அமர்க்களப்படுகிறது.


  சிகரெட் புகை கம்ப்யூட்டருக்குள் நுழைந்தால் கெடுதல் விளைவிக்கலாம். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்குள் நுழைந்தால் அதிலுள்ள சிறு துகள்கள் டிஸ்க்கின் ஹெட் மற்றும் ப்ளாட்டர்களுக்கு இடையே சென்று நிச்சயம் அதன் இயக்கத்தினை நிறுத்தும்.

  சிகரெட் புகையில் இருக்கும் கெமிக்கல்ஸ் உங்கள் மானிட்டரின் திரைக்குத் தீங்குவிளைவிக்கும். கீ போர்டு பிரவுண் கலர் கலந்த மஞ்சள் நிறத்தை சிகரெட் புகையிலிருந்து பெறும்.

  இந்த புகை சிடி/டிவிடி ரைட்டர்களின் துல்லிய ஆப்டிக்ஸ் செயல்பாட்டிற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கும். ஆக கம்ப்யூட்டருக்கு எப்படி இருந்தாலும் பாதிப்பு இருக்கும். சரி, சிகரெட் பிடிக்கும் நபருக்கு இதைக் காட்டிலும் பாதிப்பு இருக்குமே.

  கம்ப்யூட்டர் போனால் இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். உடம்பு,இதயம் போனால் வாங்க முடியாது. எனவே கம்ப்யூட்டரைச் சுற்றி இல்லாமல் எந்த இடத்திலும் சிகரெட்டைப் பயன்படுத்தாமல் இருப்போம்.  என் கம்ப்யூட்டர்களில் பலவகை பைல்களைத் திறந்து பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய டாஸ்க் பாரில் பல ஐகான்கள் இருக்கின்றன. எந்த ஐகான் எந்த புரோகிராமினுடையது என்று எப்படி அறிவது?


  –என். ரங்க பாஷ்யம், மேட்டுப் பாளையம்


  பொதுவாக டாஸ்க் பாரில் ஐகானோடு அந்த பைலின் பெயர் இருக்குமே. அல்லது கர்சரை அந்த ஐகான் உள்ள இடத்தில் கொண்டு சென்றால் சிறிய மஞ்சள் கட்டத்தில் அந்த புரோகிராமின் பெயர் மற்றும் பைலின் பெயர் கிடைக்கும்.

  அல்லது ஆல்ட் +டேப் கீகளைத் தட்டுங்கள். திறந்திருக்கும் பைல்களுக்கான புரோகிராம் ஐகான்கள் வரிசையாகத் திரையின் நடுவில் காட்டப்படும். அதன் கீழாகவே குறிப்பிட்ட ஐகானின் அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் பைலின் பெயர் இருக்கும்.


  இன்னொரு தேவையான டிப்ஸ் சொல்லட்டுமா? ஆல்ட் +டேப் பயன்படுத்தித் திறந்து வைக்கப்பட்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களின் வழியே செல்கையில் அடுத்தடுத்துத்தான் செல்ல வேண்டும். பின்னால் செல்ல முடியாது.

  இடது பக்கம் இருக்கும் ஐகானுக்கு மீண்டும் வர வேண்டும் என்றால் முழு வரிசையும் சென்று தான் மீண்டும் பெற வேண்டும் என நாம் பழகி உள்ளோம். இதற்கும் ஒரு வழி உள்ளது; ஐகான் வரிசையில் பின்னோக்கி வர ஆல்ட்+ஷிப்ட் +டேப் அழுத்தவும்.


  பல வேளைகளில் நீங்கள் கன்பிகர் என்ற சொல்லைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் (Configure) எழுதுகிறீர்கள். இதன் சரியான பொருள் என்ன? கம்ப்யூட்டரின் எந்த வேலையை இது குறிக்கிறது?

  –கே.நமசிவாயம், பெருங்களத்தூர்


  அடிக்கடி பந்தை உதைப்பது போலப் பயன்படுத்தப்படும் சொல் என இன்னொரு வாசகர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆம், உண்மையே. நாம் பல முறை இதனைப் பயன்படுத்தி உள்ளோம்.

  இது உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர், மெமரி, சாதனங்கள் மற்றும் சாப்ட்வேரினை அமைப்பது, நிறுவுவது மற்றும் இணைப்பதனைக் குறிக்கிறது. இது உங்கள் சாப்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம், பயன்பாடுகள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்த ஒரு வேலையையும் குறிக்கும்.

  உங்கள் சாப்ட்வேர் தொகுப்பை உங்கள் தேவைக்கேற்றபடி சில வசதிகளுக்கு மாற்றினாலும் அது கான்பிகர் தான்.


  உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா! கம்ப்யூட்டரில் உருவாகும் பல பிரச்சினைகள் இந்த கான்பிகர் வேலையைச் சரியாகச் செய்யாததுதான்.

  எப்போது ஒரு அப்ளிகேஷன் புரோகிராமை இன்ஸ்டால் செய்தாலும் அல்லது ஒரு துணை சாதனத்தை இணைத்தாலும் அதன் ரீட் மி (Read Me) பைலைப் படித்து அவற்றை எப்படி கான்பிகர் செய்திட வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

  ஒன்றை நம் தேவைகளுக்கேற்பவும், நம் சிஸ்டத்தின் செயல்பாடுகளுக்கேற்பவும் அமைப்பதே கான்பிகர் செய்தல்.


  விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் என்ன வேறுபாடு? ஒன்று போலத்தானே இருக்கிறது. பின் ஏன் இரண்டு?


  –கே. நல்லமாயன், உசிலம்பட்டி


  சரியான சந்தேகம். இரண்டும் பைல்களைக் காட்டுவதில் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. ஒரே புரோகிராமின் இரண்டு ஸ்பிளிட் பெர்சனாலிட்டி என்று கூடச் சொல்லலாம்.

  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திட உதவுகிறது. விண்டோஸ் எக்ஸ்புளோரர் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ், போல்டர்கள் மற்றும் பைல்களைத் தேடி எடுக்க உதவுகிறது.

  இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் C:\My Documents என கம்ப்யூட்டரின் டைரக்டரியை டைப் செய்திடுங்கள். அங்கேயே மை டாகுமெண்ட்ஸ் டைரக்டரியைப் பார்க்கலாம். அதே போல விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் இன்டர்நெட் பக்கங்களையும் காணலாம்.


  "Send To" மெனு என்பது என்ன செய்கிறது? எதற்காக இந்தப் பிரிவு தரப்படுகிறது? ஒரு சில மெனுக்களில் மட்டுமே இது கிடைக்கிறது, ஏன்? இதன் பயன்கள் குறித்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


  –சை.சிக்கந்தர் பாட்சா, தேவாரம்


  ஒரு சின்ன மெனு குறித்து எத்தனை கேள்விகளை அடுக்கி உள்ளீர்கள். (ஒரு சில மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது) விண்டோஸ் எக்ஸ்புளோரர் அல்லது மை கம்ப்யூட்டரில் நீங்கள் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் உள்ள ஆப்ஷன்களில் இதுவும் ஒன்று.

  இந்த "Send To" ஆப்ஷனை நீங்கள் அப்போது எடுத்துக் கொண்டிருக்கும் பைலை நீங்கள் திட்டமிடும் இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லலாம். இதில் என்னவென்றால் வித்தியாசமான இன்னொரு ஆப்ஷனும் இந்த "Send To"ஆப்ஷனில் கிடைக்கும்.

  அது desktop (shortcut) ஆகும். நீங்கள் அப்போது வைத்திருக்கும் பைலுக்கு ஷார்ட் கட் ஒன்றை இதன் மூலம் உருவாக்க முடியும். இதனைப் பயன்படுத்தி ஒரு பைலை கம்ப்யூட்டருக்குள் மட்டுமின்றி ஒரு பிளாப்பி மற்றும் ஒரு பிளாஷ் டிரைவிற்கும் கொண்டு செல்ல முடியும்.

  இமெயில் பெறுபவர் ஒருவருக்கும் அனுப்ப இதனைப் பயன்படுத்தலாம். இதில் என்ன வேடிக்கை என்றால் இத்தனை வசதிகள் உள்ள இந்த வசதியை அவ்வளாவாக யாரும் பயன்படுத்துவதில்லை.


  என்னுடைய ஸ்டார்ட் மெனுவில் My Recent Documents என்ற போல்டர் இல்லை. இதனை எப்படி இதில் கொண்டு வருவது? நானும் பல வழிகளை மேற்கொண்டு பார்த்துவிட்டேன். உதவவும்.


  –செ. மங்களாம்பிகா, கோயம்புத்தூர்.


  இதற்கு தீர்வு மிக எளிது. கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.


  1. Start பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். ஸ்டார்ட் மெனு ஏற்கனவே மேலே இருந்தால் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties மட்டுமே கிடைக்கும்.


  2. Properties மெனுவில் ஸ்டார்ட் மெனு டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Advanced என்ற பட்டனை அழுத்தவும்.


  3.இங்கு Recent Documents என்ற இடத்தில் உள்ள "List my most recently opened documents" என்பதனை அடுத்திருக்கும் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

  4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அடுத்த முறை ஸ்டார்ட் மெனு திறந்தால் My Recent Documents என்ற பிரிவு கிடைக்கும். இதே போல இந்த பிரிவு தேவையில்லை என்று கருதுபவர்கள் மேலே சொன்ன வழி சென்று என்ற இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.


  ஒவ்வொரு முறை ஒரு குறிப்பிட்ட புரோகிராமினைப் பயன்படுத்துகையில் ஒரு பாப் அப் விண்டோ எழுந்துவந்து இதில் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கான ரிபோர்ட்டை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பவா? என்று கேட்கிறது.

  வேண்டாம் என்று கிளிக் செய்து அடுத்த முறை அந்த புரோகிராமினை ஸ்டார்ட் செய்கையில் சரியாகத் தொடங்குகிறது. ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் ரிப்போர்ட் தரவா பல்லவி தொடர்கிறது. இதற்குக் காரணம் வைரஸா? அல்லது புரோகிராமினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? இத்தகைய பாப் அப் எர்ரர் செய்தி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


  விண்டோஸ் எக்ஸ்பி தரும் இந்த பாப் அப் விண்டோ எர்ரர் செய்தியினை நீங்கள் விரும்பவில்லை என்றால் தடுத்துவிடலாம். டெஸ்க் டாப்பில் உள்ள My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

  கிடைக்கும் மெனுவில் "Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் System Properties விண்டோவில் Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Error Reporting" என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இதில் உங்களுக்கு சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். எர்ரர் ரிபோர்ட்டிங் என்பதனை இயங்காமல் செய்துவிடலாம். Disable error reporting என்பதனை இயக்கலாம்.

  அவ்வாறு செய்துவிட்டால் கிராஷ் ஆகும் புரோகிராம் அப்படியே கிராஷ் ஆகிவிடுமே ஒழிய எர்ரர் ரிப்போர்டிங் எல்லாம் கொடுக்காது. எந்தவிதமான ரிபோர்ட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் செல்லாது.


  இன்னொரு ஆப்ஷனும் உள்ளது. But Notify Me When Critical Errors Occur என்பதையும் இயக்கலாம். இது மிக மோசமான பொதுவான பிரச்சினைகள் குறித்து மட்டும் ரிப்போர்ட் செய்திடும்.

  ஆனால் இந்த எர்ரர் ரிப்போர்டிங் நல்லதுதானே. ஏனென்றால் விண்டோஸ் தானாகவே ரிப்போர்ட் தயாரிக்கும் போது நம்மால் எடுத்து அனுப்ப இயலாத சில சிஸ்டம் விஷயங்களைத் தெளிவாக அனுப்பும்.

  அதனைப் படித்து அறியும் மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வாளர்கள் எதில் பிரச்சினை இருக்கிறது என்று கண்டறிந்து அந்த பிரச்சினை பொதுவானது அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினுடையது என்றால் அதற்கான தீர்வினைக் கண்டறிய முயற்சித்து தங்களுடைய பேட்ச் பைலில் இணைத்துத் தருவார்கள்.  புதியதாக வால் பேப்பர் ஒன்றை என் கம்ப்யூட்டரில் அமைத்தேன். ஆனால் அதை மாற்ற வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்?

  – சி. பூங்குழலி, திருவான்மியூர்


  உங்கள் டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties தேர்ந்தெடுத்து Desktop என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதில் வால் பேப்பர் பயன்படுத்த என படங்கள் பட்டியல் ஒன்று கிடைக்கும்.

  அதில் எந்த பேக் கிரவுண்ட் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். அது டெஸ்க்டாப்பில் எப்படி காட்டப்படும் என்பதற்கு ஒரு முன் தோற்றம் கிடைக்கும். பின் அந்த காட்சி திரையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மூன்று ஆப்ஷன்கள் (Center, Tile, or Stretch) கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

  இதில் உள்ள Browse என்ற பட்டனில் கிளிக் செய்தால் உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும். இதன்மூலம் கம்ப்யூட்டரில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள படங்களைத் தேடிப் பார்த்து உங்களுக்குப் பிடித்த பட பைலைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

  நன்றி.தினமலர்.03/08/09

 4. #28
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  என்னுடைய கம்ப்யூட்டரில் திடீரென்று மை கம்ப்யூட்டர் ஐகான் காணாமல் போய்விட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. நானாக அதனை அழிக்கவில்லை. இதை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்று உதவவும்.

  –செ. கந்தசாமி, நத்தம்


  தானாக My Computer ஐகான் போயிருக்க வழியில்லை. நீங்களாக உங்களை அறியாமலேயே நீக்கியிருக்கலாம். அல்லது ஏதேனும் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் அல்லது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும்போது இது நீக்கப்பட்டிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். இதனை மீட்டுவிடலாம்.

  டெஸ்க்டாப் சென்று காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், Desktop பட்டன் மீது கிளிக் செய்து அதன்பின் Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும்.

  இப்போது கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பினைத் தட்டவும். இங்கு கிடைக்கும் நீள விண்டோவில் முக்கியமான ஐகான்கள் வரிசையாகப் பட்டியலிடப்படும். அதில் எது வேண்டுமோ அதனைக் கிளிக் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஐகான் கிடைத்துவிடும்.

  உங்களுடைய சிஸ்டம் விஸ்டா என்றால் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Personalize என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அதன் பின் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்திடவும்.

  இங்கிருந்து உங்களுக்குத் தேவையான டெஸ்க்டாப் ஐகானைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செல்லலாம். இதே வழியில் உங்களுக்குத் தேவையில்லாத ஐகானத் திரையிலிருந்தும் நீக்கலாம்.


  புரோகிராம் அல்லது கண்ட்ரோல் பேனலில் மாற்றம் ஒன்றை மேற்கொள்கையில் அப்ளை பட்டனைக் கிளிக் செய்துதான் ஓகே பட்டனைக் கிளிக் செய்திட வேண்டுமா? அல்லது ஓகே பட்டனை நேரடியாகக் கிளிக் செய்திடலாமா?


  – நா.வ.பெருமாள், திருமங்கலம்


  ஓகே கிளிக் செய்தால் நீங்கள் புரோகிராமில் மேற்கொண்ட மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வரும். எனவே அப்ளை பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதில்லை. அப்ளை பட்டன் பிரச்சினை எங்கு வருகிறது என்று பார்ப்போமா! நீங்கள் டெஸ்க்டாப் தீம், கலர் மாற்றம்,

  ஸ்கிரீன் ரெசல்யூசன், ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த மாற்றத்தை நீங்கள் முதலில் பார்க்க வேண்டும் என எண்ணினால் அப்ளை பட்டனில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தைப் பார்க்கலாம். இதில் உங்களுக்குச் சம்மதம் இல்லை என்றால் மீண்டும் மாற்றி, அப்ளை கிளிக் செய்து, அனைத்தும் முடிந்த பின்னர் ஓகே கிளிக் செய்திடலாம்.

  சிலர் அனைத்து மாற்றங்களுக்கும் அப்ளை கிளிக் செய்த பின்னரே ஓகே கிளிக் செய்தால் பாதுகாப்பானது என்று எண்ணுகிறார்கள். அப்படியும் செய்திடலாம். அதில் தவறேதும் இல்லை.  செகண்ட் ஹேண்ட் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். அதில் நாகரிகமில்லாத படம் ஒன்று வால் பேப்பராக வந்து உட்கார்ந்திருந்தது. இப்போது என் வால் பேப்பராக எதுவும் இல்லை என்றாலும் அந்த பைலை எப்படி நீக்குவது. டெஸ்க் டாப்பில் கிளிக் செய்து வால் பேப்பர் இடத்தில் பார்த்தால் டெலீட் பட்டன் இல்லை. தயவு செய்து இதற்கு ஒரு வழி கூறவும்.


  – பெயர் தரவில்லை, ஊர்– சென்னை


  டெஸ்க்டாப் / டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் சென்று பார்த்தால் வால் பேப்பருக்கான அனைத்து படங்களும் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வது போல அவற்றை அங்கு வைத்து நீக்க முடியாது.

  வேறு வழியில் நீக்கலாம். வழக்கமாக வால் பேப்பர் போல்டர் C:\WINDOWS\Web\WALLPAPER என்ற இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அங்கு அந்த போல்டர் இல்லை என்றால் சர்ச் கட்டம் சென்று அங்கு WALLPAPER என டைப் செய்து தேடினால் எங்கிருக்கிறது என்று காட்டப்படும். பின் அந்த போல்டர் இருக்குமிடம் செல்லவும்.

  அந்த போல்டர் சென்ற பின் வியூவினை கூட umbnail என்பதற்கு மாற்றவும். ஏனென்றால் உங்களுக்குப் படமாகத்தான் தெரியும். அதன் பெயர் தெரியாது அல்லவா? படமாக இந்த பைல்கள் தெரியும்போது நீங்கள் விரும்பாத படம் அங்கே இருக்கும்.

  அதனைத் தேர்ந்தெடுத்து கீ போர்டில் உள்ள டெலீட் பட்டனை ஷிப்ட் அழுத்தியவாறு அழுத்தவும். அந்த பட பைல் ரீசைக்கிள் பின் தொட்டிக்குப் போகாமல் முற்றிலுமாக நீக்கப்படும்.  என்னுடைய நிறுவனம் பள்ளிகளுக்கான நோட்ஸ் நூல்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். நாங்கள் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் நிறைய சிம்பல்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு சிம்பலுக்கும் இன்ஸெர்ட் மெனு சென்று பின் சிம்பல் பாக்ஸ் தேர்ந்தெடுத்து பின் மீண்டும் இன்ஸெர்ட் அழுத்தி அதன் பின் மீண்டும் வேர்ட் சென்று பார்ப்பதில் அதிக நேரம் செலவாகிறது. இதற்கு வேறு வழி உள்ளதா?


  –சி. புஷ்பலதா, சிவகாசி


  நல்ல கேள்வி. அனுபவம் தான் அதிக சந்தேகங்களையும் கேள்விகளையும் தரும் என்பது சரிதான். ஓகே, உங்களுக்கான தீர்வுக்கு பல வழிகளில் முயன்ற பின் கீழ்க்காணும் வழி தான் எங்களுக்குத் தெரிந்தது.


  முதலில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சிம்பல்கள் என்னவென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு இன்ஸெர்ட் சென்று சிம்பல் பாக்ஸ் திறந்து பின் அங்குள்ள சிம்பல்களை இன்ஸெர்ட் செய்திடத் தொடங்குங்கள்.

  முதல் சிம்பலை இன்ஸெர்ட் செய்தவுடன் சிம்பல் பாக்ஸ் அப்படியே டாகுமெண்ட் மீது இருப்பதனைப் பார்க்கலாம். இதனால் அனைத்துசிம்பல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக உங்களால் இன்ஸெர்ட் செய்திட முடியும்.

  இவை அனைத்தையும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஓர் இடத்தில் கொண்டு வந்தால் பின் அதிலிருந்து கட் செய்து தேவையான இடத்திற்குக் கொண்டு செல்வது குறைவான நேரத்தையே எடுக்கும் அல்லவா? உங்களிடம் வேர்ட் 2007 இருந்தால் கூடுதலாக வசதி உண்டு. சிம்பல் பாக்ஸ் திறந்திருக்கும்போதே டாகுமெண்ட்டையும் எடிட் செய்திடலாம்.  ஒரு போல்டரை மினிமைஸ் செய்த பின்னர் அது டாஸ்க் பாரில் இருக்கும் போது அதில் பைலை காப்பி செய்வது எப்படி?


  –தினேஷ் குமார், கோயம்புத்தூர்


  பைலை அப்படியே இழுத்து வந்து அந்த போல்டரின் மீது மவுஸின் பட்டனிலிருந்து அழுத்தத்தை எடுக்காமல் வைத்திருக்கவும். போல்டர் தானாகத் திறந்திடும். இப்போது அந்த விண்டோவில் பைலைப் போட்டுவிடலாம்.  புரோகிராம்களைத் திறக்க ஷார்ட் கட் ஐகான்களை அமைத்துத் திறக்கிறோம். ஆனால் கம்ப் யூட்டரில் அந்த புரோகிராம் பைல்கள் உள்ள போல்டர் எங்கே இருக்கிறது என்று பார்க்க டிரைவ் டிரைவாகத் தேட வேண்டியுள்ளது. இதற்கும் ஒரு ஷார்ட் கட் ஐகான் அமைத்திட முடியுமா?


  –கே. ஆர். செம்பகராணி, ஓய்வு பெற்ற ஆசிரியை, பரவை, மதுரை


  ஏற்கனவே உள்ள ஷார்ட் கட் ஐகானில் அதற்கான கீ உள்ளது, மேடம். குறிப்பிட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஷார்ட் கட் டேபிற்குக் கீழாக Find Target என்று ஒரு கட்டம் இருக்கும்.

  நீங்கள் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் ‘Open File Location’ என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராம் பைல்கள் இருக்கும் போல்டரை உங்களுக்காகத் திறக்கும். அதில் மெயின் இ.எக்ஸ்.இ. பைல் உட்பட அனைத்து பைல்களும் இருப்பதனைக் காணலாம்.  இலவச இமெயில் தரும் இன்டர்நெட் வெப்சைட்களில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் எந்த யூசர் பெயரும் உடனே நமக்குக் கிடைப்பதில்லை. ஒவ்வொன்றாகப் போட்டு பார்க்க வேண்டியதுள்ளது. இறுதியில் அது தரும் பெயரில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழியே இல்லையா?


  ஏனென்றால் அது கொடுக்கும் யூசர் நேமைப் பயன்படுத்தினால் நமக்கு அது மறந்து போகிறது.  –அருமை பாக்கியராஜ் , புதுச்சேரி


  வேறு வழியில்லை. சில பெயர்களில் பல மாணவர்கள் ஒரு பள்ளியில் இருக்கலாம். ஆனால் இணைய தளம் தரும் அக்கவுண்ட்டில் ஒரு பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும்.

  இல்லை என்றால் கடிதங்கள் முகவரி மாறிப் போய்விடுமே. எனவே வித்தியாசமான முறையில் உங்கள் யூசர் நேம் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த தளம் கொடுக்கும் பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


  உங்கள் கேள்வியைப் படித்தவுடன் இணைய தளம் ஒன்று நினைவிற்கு வருகிறது. இது எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று தெரியாது. வித்தியாசமான முறையில் இயங்குவதால் அது குறித்து உங்களுக்குத் தகவல் தருகிறேன்.

  அந்த தளத்தின் பெயர் http://namechk.com என்பதாகும். இந்த தளம் சென்று உங்களுக்குப் பிடித்தமான யூசர் நேம் சில தளங்களில் கிடைக்குமா என்பதனை அறிந்து கொள்ளலாம். பெயரை டைப் செய்து செக் என்ற இடத்தில் கிளிக் செய்தால் அது 122 வெப்சைட்டுகளுக்குச் சென்று அங்கு உங்கள் பெயரை யூசர் நேமாகப் பயன் படுத்த முடியுமா என்று பார்த்து பதில் அளிக்கிறது.

  முதலில் பிரபலமான வெப்சைட்டுகளில் மட்டும் உங்கள் பெயருக்கு இடம் இருக்குமா என்று காட்டுகிறது. நீங்கள் அனைத்தும் அறிய ஆவலாய் இருந்தால் அதற்கான பட்டனில் கிளிக் செய்தால் 122 தளங்கள் பெயரும் எதில் உங்கள் பெயருக்கு இடம் உள்ளது என்றும் காட்டும்.

  சோசியல் நெட்வொர்க்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வெப்சைட் உதவியாய் இருக்கும். குறிப்பிட்ட பெயர் எந்த தளங்களில் கிடைக்கிறதோ அவற்றில் லாக் இன் செய்து அங்கு உள்ள நண்பர்களைச் சந்திக்கலாமே.  விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டிரைவ் மற்றும் பைல்களைப் பார்க்கையில் சில போல்டர்களின் முன் + அடையாளமும் சிலவற்றின் முன் – (மைனஸ்) அடையாளமும் உள்ளது. ஏன் இந்த வேறுபாடு? இது எதனைக் குறிக்கிறது?


  – வி.கீதா லட்சுமி, சின்னமனூர்


  போல்டருக்குள் சில போல்டர்கள் இருந்தால் அதன் முன் + அடையாளம் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் இன்னும் சில சப் போல்டர்களைப் பார்க்கலாம் என்று பொருள்.

  அப்படி கிளிக் செய்து அதில் இருக்கும் போல்டர்கள் விரிக்கப்பட்டால் அந்த + அடையாளம் மைனஸ் அடையாளமாக மாறிவிடும். அதாவது உள்ளே இருக்கும் போல்டர்களை விரித்து விட்டேன். இனிமேல் உள்ளே எதுவும் இல்லை என்று பொருள்.

  அப்படி விரித்து வெளிவந்த போல்டர்களில் உள்ளே போல்டர்கள் இருப்பின் அதன் முன்னும் + அடையாளத்தைக் காணலாம்.  ஆடியோ அல்லது வீடியோ பைல்கள், பெரும்பாலும் வீடியோ பைல்களை பிளே செய்திட முயற் சிக்கையில் கோடக் (CODEC) ஒன்றை டவுண் லோட் செய்தால் தான் இதனைப் பிளே செய்திட முடியும் என்று செய்தி வருகிறது. ஆனால் மற்ற பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பிளே ஆகின்றன. என்ன பிரச்சினை? தீர்வு என்ன?


  –ஆர். ரெங்க ராஜன், மேட்டுப் பாளையம்


  கோடெக் என்பது Coder Decoder அல்லது Compressor Decompressor ஆகிய இரண்டையும் குறிக்கும் சுருக்குச் சொல். இவற்றில் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் கோடக் உள்ளன.

  இவை ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் சப் டைட்டிலிங் ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் டவுண் லோட் செய்த வீடியோ கிளிப்களுக்குத்தான் இது போன்ற கோடக் தேவைப்படும்.  ஓப்பன் சோர்ஸ் என்ற சொற்களை அடிக்கடி சில புரோகிராம்கள் மற்றும் பிரவுசர்களுக்குப் பயன்படுத்துகிறீர்கள். இந்த அடைமொழியை ஏன் தருகிறீர்கள். இலவசமாகக் கிடைப்பவை எல்லாம் ஓப்பன் சோர்ஸ் என அழைக்கலாமா?


  –கா. பொன்ராஜ், காரைக்கால்


  அடிப்படையில் எந்த ஒரு புரோகிராமிற்கான சோர்ஸ் கோடினை (புரோகிராம் வரிகள்) அதனை எழுதியவர் மற்றவர் பார்க்கும்படியாகவும், படித்துத் திருத்தக் கூடிய வகையிலும் தருகிறாரோ அவை மட்டுமே ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என அழைக்கப்படுகின்றன.

  சோர்ஸ் என்பது மூல ஆதாரம். இந்த புரோகிராமின் மூல ஆதாரங்களை யாரும் கண்டு கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் (விண்டோஸ் மற்றும் ஆபீஸ்) சோர்ஸ் கோட் எவருக்கும் கிடைக்காது.

  ஆனால் ஓப்பன் ஆபீஸ், லினக்ஸ் சிஸ்டம், மொஸில்லா பிரவுசர் ஆகியவற்றின் சோர்ஸ் கோடினை யார் வேண்டுமானாலும் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனால் தான் புரோகிராம் டெவலப்பர்கள் இந்த சாப்ட்வேர்களில் இயங்கக் கூடிய வகையில் துணை புரோகிராம்களையும் ஆட் ஆன் தொகுப்புகளையும் எழுதி மக்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.


  இதில் என்ன லாபம் உள்ளது என்று எண்ணுகிறீர்களா? ஓப்பனாக சோர்ஸ் கோட் தருவதால் ஏற்கனவே உள்ள புரோகிராம்களுக்கு மேம்பாட்டிற்கான சிறிய புரோகிராம்களை நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் புரோகிராமர்கள் பாடுபட்டு உருவாக்கி இலவசமாகத் தருகின்றனர்.

  ஒரு நிறுவனம் இவர்களை வேலைக்கு நியமித்து அவற்றை எழுத வைப்பது என்றால் அதிகம் செலவாகுமே. மேலும் இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் பயன்படுத்த இலவசமே. ஆனால் அவற்றை சப்போர்ட் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


  ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் பெரும்பாலும் இலவசமே. ஆனால் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்கள் அனைத்தும் ஓப்பன் சோர்ஸ் அல்ல. விண்டோஸ் ஓப்பன் சோர்ஸ் ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? சான்ஸே இல்லை சார்.  கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லும் படங்களை நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் ஒட்டுகையில் கண்ட்ரோல் +வி அல்லது பாப் அப் மெனுவில் பேஸ்ட் கட்டளையைக் கிளிக் செய்து ஒட்டுகிறோம். ஏன் இன்ஸெர்ட் கீயினைப் பயன்படுத்த முடியவில்லை?


  –சின்னஞ்சிறு கோபு, சீனிவாசபுரம்


  இன்ஸெர்ட் கீயினையும் பயன்படுத்திக் கிளிப் போர்டில் உள்ளதை ஒட்டலாம். இதற்கு சின்ன செட்டிங்ஸ் செய்திட வேண்டும். அதற்கு முன் அந்த கீ குறித்தும் சில முன் தகவல்களைப் பார்ப்போம்.

  கீ போர்டில் உள்ள இன்ஸெர்ட் கீ என்னும் டாகிள் கீக்கு இரண்டு வகையான செயல்பாடு உண்டு. ஒரு நிலையில் நாம் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் மேலாக டைப் செய்தால் டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை இடையில் புகுத்தும். ஏற்கனவே இருப்பதை அழிக்காது.


  இன்னொரு நிலையில் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் மேலாக டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை அமைத்திடும். இந்த கீக்கு இன்னொரு செயல்பாட்டையும் செட் செய்திடலாம்.

  நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் அல்லது படம் எதுவானாலும் அது கிளிப் போர்டில் காப்பி ஆகி நாம் விரும்பும் இடத்தில் ஒட்டுவதற்காகக் காத்திருக்கிறது. இதனை கர்சர் உள்ள இடத்தில் ஒட்டிட Ctrl+V கீகளை அழுத்துகிறோம்; அல்லது Paste கட்டளை கொடுக்கிறோம். ஆனால் இந்த செயல்பாட்டை Insert கீ அழுத்தி மேற்கொள்ளலாம்.

  இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்கவும். பின் டேப்களுடன் கிடைக்கும் விண்டோவில் Edit டேபில் கிளிக் செய்திடவும். அதில் Use the Ins key for paste என்று இருக்கும் இடத்தில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் எதையேனும் காப்பி செய்து வைத்தால் அதனை விருப்பப்பட்ட இடத்தில் ஒட்ட Insert கீயினை அழுத்தினால் போதும்.  டிரைவர் பைல் கரப்ட் ஆனது என்றும், புதிய டிரைவர் பைலை அந்த தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் என்றும் எழுதுகிறீர்கள். டிரைவர் பைல் என்ன செய்கிறது? இது அவசியம் தேவையா?


  –எஸ். கிருஷ்ணன், காஞ்சிபுரம்


  அடிப்படையில் டிரைவர் பைல் என்பது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கம்ப்யூட்டருக்குச் சொல்லும் புரோகிராம் ஆகும்.

  எனவே இது ஏதாவது காரணத்தால் கெட்டுப் போய்விட்டால் மீண்டும் அந்த பைலை இன்ஸ்டால் செய்தால் தான் குறிப்பிட்ட அந்த சாதனம் இயங்கும். அந்த சாதனத்தைப் பயன்படுத்தி புதிய வசதிகள் அளிக்க அதனைத் தயாரித்த நிறுவனம் முன்வருகையில் அதற்கான டிரைவர் பைலைப் புதுப்பித்து வழங்கும்.

  எனவே அதனை டவுண்லோட் செய்து பதிய வேண்டும். கீ போர்டு, மவுஸ் மற்றும் பிரிண்டர் போன்ற சாதனங்களுக்கான டிரைவர்கள் வழக்கமாகக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும். வேறு புதிய சாதனங்கள் வாங்குகையில் இந்த டிரைவர் பைல்கள் பதிந்து சிடி உடன் வழங்கப்படும்.

  சிடியைப் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்தவுடன் அதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பின் நாளில் பைல் கரப்ட் ஆன பின்னர் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் இன்ஸ்டால் செய்கையில், ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்கையில் இது தேவைப்படலாம்.

  நிறுவனங்களின் வெப்சைட்டுகளில் புதிய டிரைவர்கள் கிடைப்பது சிக்கலாக இருந்தால் www.windrivers.com, www.driverguide.com ஆகிய தளங்களில் முயற்சித்துப் பார்க்கவும்.


  வெப்சைட்டுகளைப் பார்வையிட முயற்சிக்கையில் பலவாறாக அவை சில விளம்பரங்களை அனிமேஷனுடன் தருகின்றன. மேலும் மியூசிக் என்ற பெயரில் கேட்க முடியாத அளவிற்குஇரைச்சல் வருகிறது. வற்றை எப்படி நிறுத்திப் பார்ப்பது?

  – சா. மருது பாண்டியன், திருநகர்.


  தலைவலி தரும் அளவிற்கு இரைச்சல் என்ற பெயரில் மியூசிக் இருந்தால் கம்ப்யூட்டரில் வால்யூமை மியூட் செய்து நிறுத்திவிடலாம். அல்லது வசதி இருந்தால் உங்கள் ஸ்பீக்கரை ஆப் செய்து வைக்கலாம்.

  ஆனால் அனிமேஷனை நிறுத்தும் வழி? வெப்சைட் முழுவதும் இறங்கும் வரை காத்திருக்கவும். இறங்கியவுடன் பிரவுசரில் ஸ்டாப் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து அனிமேஷன் மற்றும் மியூசிக் வருவது நின்றுவிடும்.

  தேவையான தகவல்களை மட்டும் படித்துத் தேவையானால் டெக்ஸ்ட்டினை காப்பி செய்து எடுத்துக் கொள்ளலாம்.  வெப்சைட்டிலிருந்து புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து அதனைப் பதிந்து இயக்கிவருகிறேன். டவுண்லோட் செய்த அந்த புரோகிராம் பைலை இன்னும் கம்ப்யூட்டரில் வைத்திருக்க வேண்டுமா?


  –க. முருகேசன், திருப்பூர்


  டவுண்லோட் செய்த புரோகிராம் பைல் எத்தகையது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுவாக அது ஒரு ஸிப் பைலாக இருக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைத்த டயலாக் பாக்ஸில் தரப்பட்ட ஆப்ஷன்களைப் பின்பற்றி புரோகிராமினைப் பதிந்திருப்பீர்கள்.

  அடுத்து இந்த டவுண்லோட் செய்த புரோகிராம் தேவையில்லை. எனவே நீக்கிவிடலாம். சில புரோகிராம்கள் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக இருக்கும். இதிலும் இரண்டு வகை உண்டு. சில இ.எக்ஸ்.இ. பைலை இயக்கினால் அது விரிந்து பல பைல்களை ஒரு தொகுப்பாகப் பதிந்து கொள்ளும்.

  இதில் அந்த புரோகிராமிற்கான இ.எக்ஸ்.இ.பைல் இருக்கும். எனவே டவுண்லோட் செய்த இந்த வகை பைலும் தேவை இருக்காது. ஆனால் நேரடியாக இயங்கும் இ.எக்ஸ்.இ. பைல் எனில் அது கட்டாயம் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். அதனைக் கிளிக் செய்துதான் நமக்கு அந்த புரோகிராம் கிடைக்கும்.  பொதுவாக இந்த பைல்களை நாம் மீண்டும் டவுண்லோட் செய்திடலாம் என்றாலும் 20% பைல்கள் தளங்களிலிருந்து எடுக்கப்பட்டு விடுகின்றன. அல்லது அப்டேட் செய்யப்படுகின்றன. எனவே இது போல பைல்களை தனி டைரக்டரியில் சேவ் செய்து புரோகிராம்களைப் பதியவும்.

  பின் அந்த பைல்கள் அனைத்தையும், உங்களுக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் சிடி, டிவிடி, ஸிப் டிரைவ் போன்றவற்றில் பதிந்து வைக்கலாம்.


  இன்டர்நெட்டைக் கண்ட்ரோல் செய்வது யார்? ஐ.நா. சபை போல ஏதாவது குழு உள்ளதா? எந்த நாட்டிற்கு இதில் அதிக அதிகாரம் உண்டு?


  –கா. சிவக்கொழுந்து, திண்டுக்கல்


  இன்டர்நெட் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இன்டர்நெட் தனி ஒருவருக்குச் சொந்தமில்லை. என்ன இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் என்று நினைக்கிறீர்களா? ஆம், எந்த ஒரு தனி நாட்டிற்கும் இது சொந்தமில்லை.

  இன்டர்நெட்டை The World Wide Web Consortium என்ற அமைப்பு தான் கண்ட்ரோல் செய்கிறது. இதனை ஙி3இ என்றும் அழைப்பார்கள். இது பன்னாட்டளவிலான ஓர் அமைப்பு. இந்த அமைப்பில் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இன்டர்நெட்டின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் கவனம் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன.

  இவை ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் நாடு ஒன்றில் கூடி இன்டர்நெட் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் விவாதிப்பார்கள். அங்கு பல முடிவுகள் எடுக்கப்படும்.

  மேலும் அவ்வப்போது சில முடிவுகளும் எடுக்கப்பட்டு அனைவருக்கும் அறிவிக்கப்படும். HTTP, FTP, HTML, PHP மற்றும் அகுக என்றெல்லாம் இன்டர்நெட் வெப்சைட் குறித்து பேசுகிறோம் அல்லவா? இவற்றை வரையறை செய்வது இதுதான். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சுருக்கமான பெயர் தரப்படுகிறது அல்லவா! அவற்றை முடிவு செய்வதும் இந்த அமைப்புதான். இணையப் பெயர்கள் எப்படி இருக்க வேண்டும்

  (இந்தியாவிற்கு in ) என்று வரையறை செய்வதில் இருந்து இன்டர்நெட் டிராபிக் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தையும் இந்த அமைப்பு முடிவெடுத்துச் செயல்படுத்துகிறது. இதற்கு இன்டர்நெட் தொடர்பான பல நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன.

  இந்த அமைப்பு ஜனநாயக ரீதியாக, எந்த ஒரு நாட்டையும் சாராமல், முடிவெடுப்பதனால்தான் உலகின் அனைத்து குடிமக்களும் இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடிகிறது.

  நன்றி.தினமலர் .ஆகஸ்ட் 10,2009
  Last edited by நூர்; 10-08-2009 at 06:19 AM.

 5. #29
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: எனக்கு மட்டும் இடது பக்கம் ரூலர் வேர்டில் கிடைக்கவில்லை. நீங்கள் முன்பு எழுதிய டிப்ஸ்படி வியூ சென்று ரூலர் செலக்ட் செய்தேன். பிரிண்ட் லே அவுட் வியூவும் செலக்ட் செய்தேன்.

  அங்குலத்தைக் கூட சென்டிமீட்டருக்கு மாற்றும் வேலையையும் மேற்கொன்டேன். ஆனால் என்ன செய்தாலும் இடது பக்க ரூலர் கிடைக்கவில்லை. வழி காட்டவும்.  –எஸ்.முருகேசன், எழுமலை


  பதில்: இந்த பிரச்சினை ரூலரில் இல்லை. உங்கள் வேர்ட் டாகுமெண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. இடது பக்க ரூலர் பிரிண்ட் லே அவுட் வியூவில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் செலக்ட் செய்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  தவறு செட்டிங்ஸில்தான். டாகுமெண்ட்டைத் திறந்து டூல்ஸ் கிளிக் செய்து மெனுவில் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும். விண்டோ ஒன்று பல டேப்களுடன் விரியும். இதில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் நான்கு பிரிவாகத் தரப்பட்டிருக்கும்.

  இதில் மூன்றாவதாக பிரிண்ட் அண்ட் வெப் லே அவுட் ஆப்ஷன்ஸ் என்ற பிரிவு இருக்கும். அதில் ஆறாவதாக வெர்டிகல் ரூலர் (பிரிண்ட் வியூ ஒன்லி) என்றிருப்பதற்கு எதிரே சிறிய டிக் அடையாளம் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

  கேள்வி: ஒரு இணைய தளத்திற்கும் அதன் யு.ஆர்.எல்.க்கும் என்ன வித்தியாசம்? விண்டோஸ் எக்ஸ்பியின் எஸ்.பி.3 யின் யு.ஆர்.எல்.ஐ எப்படிக் கண்டுபிடிப்பது?


  –பா.நரசிம்மன், பள்ளிக்கரணை


  பதில்: ஓர் இணைய தளம் எந்த சர்வரில் உள்ளது என்பதை அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல். விண்டோஸ் எக்ஸ்பியின் எஸ்.பி.3 யின் யு.ஆர்.எல். ஐக் கண்டுபிடிப்பது என்று சொல்வதைக் காட்டிலும் இந்த பேட்ச் பைல் எந்த தளத்தில் உள்ளது என்று அறிவது என்று சொல்லலாம்.

  இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்குவதால் என்ற தளத்திற்குச் சென்று அங்கிருந்து தேடிப் பெறலாம். அல்லது ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் என்று கொடுத்தால் இந்த பைல் இருக்கும் தளங்களின் முகவரிகள் (யு.ஆர்.எல்.) பட்டியலிடப்படும். அவற்றின் மீது கிளிக் செய்து பெறலாம்.

  கேள்வி: நான் கேப்ஸ் லாக் கீயினை அழுத்துகையில் பீப் என்ற ஒலி கேட்கும் படி அமைத்திருந்தேன். என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் தனக்கு அது இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓசை வராமல் செட் செய்து விட்டார். மீண்டும் இதனை எப்படி அமைப்பது?


  –மு.நமசிவாயம், மேலூர்


  பதில்: இதனை டாகிள் கீ ஒலி என்று கூறுவார்கள். டாகிள் கீ என்பது ஒரே கீ எதிர்மறையான இரு செயல்பாடுகளுக்கு மாறி மாறி அழுத்தும்போது செயல்பட வைக்கும்.

  எடுத்துக் காட்டாக கேப்ஸ் லாக் கீயை அழுத்தினால் அனைத்தும் கேபிடல் எழுத்துக்களாகக் கிடைக்கும். மீண்டும் அ� த கீயை அழுத்தினால் அந்த செயல்பாடு நின்றுவிடும். கம்ப்யூட்டர் கீ போர்டில் இதே போல நம்லாக் கீ, ஸ்குரோல் லாக் கீ ஆகி யவைகள் உள்ளன.

  இவற்றை அழுத்து கையில் பீப் ஒலி நம்மை எச்சரிப்பதற்காக ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஒலி வேண்டாம் எனில் இதனைத் தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தியவாறு இருந்தால் போதும். இந்த செயல்பாடு தடைபடும். பீப் ஒலி கேட்காது.

  இனி உங்கள் கேள்விக்கு வரும். மீண்டும் இந்த ஒலியை அமைக்க மீண்டும் ஏதேனும் ஒரு கீயினை தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தவும். திரையில் ஓர் ஆப்ஷன் பாக்ஸ் கிடைக்கும். இப்படி அழுத்தினால் மூன்று வகை செயல்பாட்டிற்கான கட்டம் இது. எந்த செயல்பாடு வேண்டுமோ அதற்கேற்ப அழுத்தவும் என்று செய்தி காட்டப்படும். முதல் ஆப்ஷனை அழுத்தி ஓகே கிளிக் செய்தால் மீண்டும் ஒலி கிடைக்கும்.

  நன்றி.தினமலர்.ஆகஸ்ட் 17,2009

 6. #30
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கின்ற என் மகனுக்கு லேப்டாப் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதனை சார்ஜ் செய்வதற்காக இரவு முழுவதும் கனெக்ஷன் கொடுத்து வைக்கிறான். பேட்டரி இருக்கும் பக்கம் சூடாகிறது. இது சரியா?


  –என்.ஆதிநாராயணன், தேனி


  பதில்: முற்றிலும் தவறு. லேப் டாப் கம்ப்யூட்டர்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நாளில் மேலும் சில தகவல்களைக் கூற விரும்புகிறேன். வெகுநேரம் லேப்டாப் கம்ப்யூட்டரை சார்ஜ் செய்தால் நிறைய பவர் கிடைக்கும் என எண்ணுகின்றனர். இது தவறு.

  தேவைக்கும் அதிகமான நேரம் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தால் அதிக சூடாகும் வாய்ப்பு, ஏன், பேட்டரி வெடிக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம். இத்துடன் இன்னும் சில முன் எச்சரிக்கைகளைப் பார்க்கலாம். கவன மில்லாமல் லேப் டாப் கம்ப்யூட்டரைக் கையாள்வது தவறு.

  தவறான முனைகளில் இணைப்பு கொடுத்து பேட்டரியை இணைப்பது தவறு. வேலை இல்லாத போதும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்யாமல் இருக்கக் கூடாது. பேட்டரி கம்பார்ட்மெண்ட்டில் இஷ்டத்திற்கு ஸ்குரூ டிரைவர் போன்றவற்றைப் பயன்படுத்துவது; அல்லது வேறு பொருட்களை வைப்பது தவறு. கம்ப்யூட்டரை வடிவமைத்த நிறுவனம் பரிந்துரைக்காத பேட்டரிகளைப் பயன்படுத்தக் கூடாது.

  அதிக சூடு தென்படுகிறது என்று தெரிந்த பின்னும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது. லேப்டாப்புடன் வராத வேறு ஒரு சார்ஜரைப் பயன்படுத்துவது கூடாது. மேலே சொல்லப்பட்ட பல எச்சரிக்கைகள் மொபைல் போனுக்கும் பொருந்தும்.


  கேள்வி: சிடி அல்லது டிவிடியில் டேட்டா எழுதி முடித்த பின்னர் ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்கவா என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதனை எப்போதும் கேன்சல் செய்து வேலையை முடிக்கிறோம். உண்மையிலேயே அது எதனைக் குறிக்கிறது? அதனால் என்ன லாபம்? –என். மஹேஸ்வரன், மதுரை


  பதில்: நல்ல கேள்வி. முதலில் ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு .டிண்ணி பைல். இது டிஸ்க் ஒன்றின் இமேஜ் அல்லது ஆப்டிகல் டிஸ்க் இமேஜைக் குறிக்கிறது. அடிப்படையில், ஏற்கனவே உள்ள ஒரு பைலின் அசலான காப்பியை இது குறிக்கிறது.

  அதனால் தான் பெரும்பாலும் சிடி அல்லது டிவிடியில் டேட்டா எழுதும் வேலையைச் சார்ந்து இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு மியூசிக் சிடியாக பைலைக் காப்பி செய்தாலும் அந்த வேலையில் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றை உருவாக்குகிறீர்கள் என்று பொருள்.

  ஒரு சிடியில் எதனை (டேட்டா, ஆடியோ, வீடியோ, கிராபிக்ஸ், படங்கள் போன்ற எதுவாயினும்) காப்பி செய்தாலும் அங்கு ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்கப்படுகிறது.


  இதனை உருவாக்கும் வேலையை எந்த சிடி பர்னிங் சாப்ட்வேர் மூலமாகவும் செய்திடலாம். கம்ப்யூட்டருடன் வந்த சிடி பர்னிங் சாப்ட்வேர் அல்லது டிவிடி ரைட்டருடன் கொடுக்கப்பட்ட சாப்ட்வேர் எதன் மூலமும் இதனை உருவாக்கலாம்.

  எனவே நீங்கள் ஏற்கனவே சிடி அல்லது டிவிடி ஒன்றை உருவாக்கி இருந்தால் அதில், ஐ.எஸ்.ஓ. இமேஜ் என அறியாமலேயே, அதனை உருவாக்கி யிருக்கிறீர்கள்.


  கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்றும் என் பிள்ளைகள் அனைவரும் இதனையே பயன்படுத்துவதால் புக்மார்க் பட்டியலில் நிறைய தளங்கள் மார்க் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏதேனும் ஒன்று வேண்டும் என்றால் நேரம் எடுத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழி உண்டா?–ஆ. சிவப்பிரகாசம், புதுச்சேரி


  பதில்: எல்லாருக்கும் இந்த கதைதான். இதற்கான வழி உண்டு.


  புக்மார்க் மெனுவினை கிளிக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் பார்க்க விரும்பும் புக் மார்க்கின் முதல் எழுத்தை அடிக்கவும். உடனே லிஸ்ட்டில் அந்த எழுத்தில் தொடங்கும் முதல் புக் மார்க் ஹைலைட் செய்யப்படும்.

  அது நீங்கள் தேடும் புக் மார்க் இல்லை என்றால், மீண்டும் அதே எழுத்திற்கான கீயினை அழுத்தவும். அதே எழுத்தில் தொடங்கும் அடுத்த புக்மார்க்கிற்கு எடுத்துச் செல்லப் படுவீர்கள். இப்படியே உங்களுக்கு வேண்டிய தளத்திற்கான புக் மார்க் வரும்வரை தட்ட வேண்டியதுதான்.


  கேள்வி: கூகுள் சர்ச் என்னும் தேடும் தளத்திற்குச் சென்றால், தேடும் சொல் டைப் செய்ய வேண்டிய கட்டத்திற்குக் கீழே Google Search மற்றும் I’m Feeling Lucky என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இதில் I’m Feeling Lucky என்பதில் கிளிக் செய்தால் ஒரே ஒரு தளமே கிடைக்கிறது. இது எதற்காக? –ஆர். தனலஷ்மி, திருநகர், மதுரை

  பதில்: கூகுள் சர்ச் என்பதில் வழக்கமாக கிளிக் செய்வோம். உடனே நீங்கள் தேடும் பொருள் அல்லது சொல் குறித்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். இதில் எப்போதும் நாம் தேடும் பொருள் குறித்துத் தகவல் தரும் ஹோம் பேஜ் கிடைக்கும்.

  எடுத்துக் காட்டாக தினமலர் என்று நீங்கள் டைப் செய்திருந்தால் முதல் தளமாக தினமலர் பத்திரிக்கையின் ஹோம் பேஜ் கிடைக்கும். பின் தினமலரின் மற்ற தகவல்கள் விவரங்களுடன் அதே ஹோம் பேஜ் முகவரிக்கான தளங்கள் பட்டியலிடப்படும்.

  தொடர்ந்து தினமலர் குறித்து மற்ற தளங்கள் தரும் தகவல்களும் அவற்றிற்கான தளப் பெயர்களும் பட்டியலிடப்படும். ஆனால் I’m Feeling Lucky என்பதில் கிளிக் செய்தால் முதலில் குறிப்பிட்ட தினமலரின் ஹோ ம் பேஜ் மட்டும் கிடைக்கும்.

  அந்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதனைக் கிளிக் செய்தால், நாம் ஏற்கனவே அந்த தளத்திற்குச் சென்றிருந்தால் அதனை அறிந்து பயன்படுத்தலாம். ஆனால் முன்பு அதற்குச் செல்லாமல் இருந்தால் மற்ற தளங்கள் குறித்து அறியாமல் இருப்போம்.


  கேள்வி: இன்டர்நெட் சைட்களில் படங்கள் கிடைக்கும்போது அவற்றை எப்படி நம் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்வது? பட பைலின் அளவை எப்படி குறைத்து சேவ் செய்திடலாம்?–அ.யசோதா, திருமங்கலம்


  பதில்: வெகு எளிது. அந்த படத்தின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Save Image as என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் Save as டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் டைரக்டரி மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம்.

  பைலின் அளவு குறைய வேண்டும் என்றால் அதன் பார்மட்டை மாற்ற வேண்டும். இதற்கு மீண்டும் அதனை படங்க ளைக் கையாளும் பெயிண்ட், அடோப் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம்களில் திறந்து எடிட் செய்திடலாம். வெப்சைட்டில் உள்ள படங்களை டவுண்லோட் செய்திடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் படங்களை மட்டுமே உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியும்.

  டவுண்லோட் செய்ய முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்தால் அந்த படம் உள்ள இடம் முழுமையாக மானிட்டர் ஸ்கிரீனில் இருக்கையில் பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தவும். இது கிளிப் போர்டில் படத்துடன் கூடிய தளத்தைப் படமாக எடுத்து பதிவு செய்திடும். பின் இதனை மேலே கூறிய இமேஜ் எடிட்டரில் பேஸ்ட் செய்து படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து புதிய பைலாக, தேவையான பார்மட்டில் சேவ் செய்திடலாம்.


  கேள்வி: ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர் களை அடிக்கும் போது வேர்டில் சிறிய அளவில் கேப்பிடல் லெட்டர்களை அமைக்க முடியுமா? அதற்கான வழி என்ன? –செ. கந்தசாமி, சிவகாசி


  பதில்: முதலில் உங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். பின் எந்த சொல்லைச் சிறிய கேப்பிடல் லெட்டர்களில் அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுங்கள். மெனு பாரில் Format கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் மேலாக உள்ள Font தேர்ந்தெடுக்கவும்.

  பின் கிடைக்கும் பாண்ட் டயலாக் பாக்ஸில் வலது பக்கம் உள்ள பிரிவுகளில் Small Caps என இருக்கும். இதனை டிக் செய்திடவும். பின் OK கிளிக் செய்து வெளியேறவும். சிறிய கேப்பிடல் லெட்டர் களில் தேர்ந்தெடுத்த சொல் இருக்கும். மற்ற பெரிய எழுத்துக்களுடன் இதனை ஒப்பிட்டால் அழகாக சிறியதாக இருப்பது தெரியவரும்.


  கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் பாரங்கள் பில் அப் செய்திடுகையில், பிளாக்குகள் எழுதுகையில் சொற்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டால் சில கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் தொகுப்பு அதனைக் காட்டுகிறது. ஆனால் எனக்கு அது போல் இல்லை. அதனை எப்படி ஏற்படுத்துவது? நான்பயர்பாக்ஸ் 3.5 பயன்படுத்துகிறேன். –எஸ். யஷ்வந்தன், சென்னை


  பதில்: நல்ல சந்தேகம். இதில் நிதர்சனமான உண்மை என்னவென்றால் பயர்பாக்ஸ் பிரவுசரில் தான் ஸ்பெல் செக் இணைந்தே தரப்படுகிறது. பயர்பாக்ஸ் இன்ஸ்டால் செய்யப்படுகையில் இதுவும் இன்ஸ்டால் செய்யப் படுகிறது. டிபால்ட்டாக இயக்கப் பட்டு செயல்படுகிறது.

  உங்கள் கம்ப்யூட்டரில் மட்டும் ஏன் இல்லை என்று தெரியவில்லை. யாராவது மாற்றி இருக்கலாம். மீண்டும் அதனைக் கொண்டு வர பயர்பாக்ஸ் தொகுப்பை இயக்கி Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.

  பின் மேலாக உள்ள ஐகான் டேப்களில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் General என்ற டேப்பில் கிளிக் செய்தால், "Check my Spelling as I Type" என்ற ஆப்ஷன் கிடைக்கும்.

  இதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அமைக்கும் சொற்களில் எழுத்துப் பிழை ஏற்படுகையில் சிகப்பு கோடு கீழாகத் தெரியும்.


  கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு பல அப்டேட்கள் உள்ளன. இதனைப் பதியும்போது அப்டேட் இருந்தால் தானாக அப்டேட் செய்திடும்படி பதிந்து கொடுத்தார்கள். இதனால் ஏதேனும் புதிய அப்டேட் என் கம்ப்யூட்டரில் பதியப்பட்டதா என்று தெரியவில்லை. எப்படி தெரிந்து கொள்வது? –டி. திவ்ய கீர்த்தி, சென்னை


  பதில்: பயர்பாக்ஸ் பிரவுசர் பதியப்படுகையில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் அப்டேட்களைத் தானாகத் தேடிப் பார்த்து இன்ஸ்டால் செய்யபப்டும் வகையில் தான் அமைக்கப் பட்டிருக்கும். அதனால் எந்த அப்டேட் வரை இன்ஸ்டால் செய்யப்பட்டது என நமக்குத் தெரியாது.

  ஆனால் இதனைத் தெரிந்து கொள்ள பயர்பாக்ஸ் வழி ஒன்று தந்துள்ளது. பயர்பாக்ஸ் தொகுப்பை இயக்கி Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக் கவும். பின் மேலாக உள்ள ஐகான் டேப்களில் Advanced என்ப தனைத் தேர்ந் தெடுக்கவும்.

  இதில் Update என்ப தில் கிளிக் செய்தால் கீழாக Show Update History என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த அப்டேட் எப்போது மேற்கொள்ளப் பட்டது. அது வெற்றிகரமாக பதியப்பட்டதா; பதியப்பட முடியாமல் போனதா; அதற்கு என்ன காரணம் எனத் தரப்பட்டிருக்கும்.

  இதனைப் பார்த்து அறிந்து கொண்டு பதியப்படாமல் போன அப்டேட்களை நீங்களாக பயர்பாக்ஸ் தளம் சென்று தேடி எடுத்து அப்டேட் செய்திடலாம்.

  கேள்வி: அடிக்கடி பீட்டா வெர்ஷன் என்று சாப்ட்வேர் மற்றும் பிரவுசர் குறித்து எழுதப் படுகிறது. இது எதனைக் குறிக்கிறது? இலவச மாகத் தரப்படும் சாப்ட்வேர், பீட்டா வெர்ஷனா? இதனைத் தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? –என். கல்யாணி, மதுரவாயல்


  பதில்: சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கு கையில் முதலில் அதனை ஆல்பா டெஸ்டிங் என்று ஒரு சோதனையை அதனை உருவாக்கியவர்கள் மேற்கொள்வார்கள். இதில் அந்த சாப்ட்வேர் வெற்றி பெற்றவுடன், அதனை அதிகார பூர்வமாக வெளியிடும்

  முன், அதனைப் பயன்படுத்து பவர்களுக்குத் தந்து பயன்படுத்திப் பார்க்கச் சொல்வார்கள். இதுதான் பீட்டா வெர்ஷன் எனப்படுவது. பயன்படுத்துபவர்கள் பல்வேறு ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்களில், பல்வேறு சாப்ட்வேர் அப்ளிகேஷன்களுடன் பயன்படுத்திப் பார்க்கும் போது,

  சாப்ட்வேர் தொகுப்பை உருவாக்கியவர்களே எதிர்பாராத சில பிரச்சினைகள் ஏற்படும். பீட்டா வெர்ஷனைப் பயன்படுத்துபவர்கள் இந்த பிரச்சினைகளை சாப்ட்வேரை உருவாக்கியவர்களுக்கு தெரிவிக்கலாம். பின் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீக்கப்பட்டு முழுமையான சாப்ட்வேர் தொகுப்பாக, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தால் வெளியிடப்படும்.


  பீட்டா வெர்ஷன் இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் வழங்கப்படும். டவுண்லோட் செய்யப்படும் தளத்திலேயே அதற்கான வழிமுறைகள் கிடைக்கும். மேலும் பிரச்சினைகள் ஏற்படுகையில் அது குறித்த தகவல்களை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவலும் கிடைக்கும். பீட்டா வெர்ஷனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் – சிக்கல் எதுவும் இல்லாமலிருந்தால்.


  கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதன் ஹெல்ப் பக்கத்தில் கிடைக்கும் உதவிக் குறிப்புகள் அனைத்தும் மிகச் சிறிய எழுத்து அளவில் உள்ளன. என்ன செய்தும் இவற்றை பெரிதாக அமைக்க முடிவதில்லை. காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்து பின் பெரிதாக ஆக்க வேண்டியுள்ளது. தோன்றும் போதே அதனைப் பெரிதாக ஆக்க முடியாதா? –ஸ்ரீகுமார், சிறுசேரி, சென்னை


  பதில்: எழுத்தின் அளவை மாற்றலாம். ஆனால் அதற்கான செட்டிங்ஸ் என்று எக்ஸ்பி எதனையும் தரவில்லை. எப்படி மாற்றலாம் என்பதை இங்கு காண்போம்.

  எக்ஸ்பி சிஸ்டத்தில் ஹெல்ப் பைல்கள் எச்.டி.எம்.எல். வழியில் உருவாக்கப் பட்டவை. Cascading Style Sheets என்ற வகையில் அமைக்கப்பட்டவை. இவற்றைக் காண்பதற்கு நாம் வெப் சைட் பேஜ்களைப் பார்க்கும் வகையினை மாற்ற வேண்டும்.

  இதற்கு கண்ட்ரோல் பேனல் திறக்கவும். இதில் Internet Options என்று உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் என்று உள்ள டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Accessibility என்று ஒரு பிரிவு கிடைக்கும்.

  இங்கு Ignore font sizes specified on Web pages என இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே செய்து வெளியே வரவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் View / Text Size என்ற பிரிவில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட் சைஸ் அமைத்திடவும்.

  நீங்கள் ஏற்கனவே அமைத்ததன்படி பைலில் உள்ள டெக்ஸ்ட் சைஸ் இருக்கும். அதனை உருவாக்கி அமைத்த டெக்ஸ்ட் சைஸ் மாற்றப்படும்.


  கேள்வி: இணைய தளங்களை அவற்றின் பெயர் இல்லாமல், அதற்கான எண் கிளஸ்டர் மூலம் தேடிப் பெறுவது நல்லது என்று கூறுகிறார் என் நண்பர். அது போல சில தளங்களுக்கு வைத்து விளையாட்டு காட்டுகிறார். நானும் அது போல செய்திட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்?சு. கிருஷ்ணதாஸ், பொள்ளாச்சி


  பதில்: நீங்களே சொல்லி விட்டீர்கள் விளையாட்டு காட்டுகிறார் என்று. இந்த விளையாட்டு தேவையா? எண்களில் தான் ஒரு தள முகவரி அமைகிறது. இதனை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் தான் அதனைப் பெயரில் நினைவில் வைத்துக் கொள்கிறோம்.

  டொமைன் நேம் சர்வர் என்ற சர்வர் தரும் வசதியின் மூலம் இந்த பெயர் முகவரி, அதற்கான எண் முகவரியாக மாற்றப்பட்டு நமக்கு தளம் எளிதாகக் கிடைக்கிறது. நீங்கள் மறுபடியும் எண்களில் தளத்தின் பெயரை அமைத்திட விரும்பு கிறீர்கள். சரி, இதில் கூடுதலாக சில தகவல்களைத் தர முடியும் என்பதால் கீழே உள்ளதைப் படியுங்கள்.


  எண் வடிவ முகவரியைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


  நீங்கள் எழுத்துக்களினால் ஆன முகவரியினை அமைத்து தேடிப் பிடித்துப் பார்க்கையில், பிரவுசரின் இடது அடிப்பாகத்தில் அந்த முகவரிக்கான எண்கள் தெரியும். அதனை அப்படியே எழுதி வைத்து மீண்டும் முகவரிக்காக பயன்படுத்தலாம். அல்லது நேரடியாகவே கண்டுபிடிக்கலாம்.

  முதலில் இணையத் தொடர்பை ஏற்படுத்துங்கள். பின்னர் Start பட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் Run விண்டோவில் cmd என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும்.

  அதில் tracert என டைப் செய்து (trace routeஎன்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும்.

  ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.

  இதனைக் குறித்து வைத்துப் பயன் படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தினால் பிரவுசர் தன் ஹிஸ்டரியில் குறித்து வைத்து நீங்கள் முகவரியை டைப் செய்யத் தொடங்கியவுடன் அந்த தளம் ஹிஸ்டரியிலிருந்து எடுத்துக் காட்டப்படும்.

  அதனைக் கிளிக் செய்தாலே போதும். எதற்காக எண்கள், சொற்கள் என ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட வேண்டும்.

  நன்றி.தினமலர்.திங்கள் ,ஆகஸ்ட்,24, 2009
  Last edited by நூர்; 23-08-2009 at 11:55 PM.

 7. #31
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: போல்டர் ஒன்றை பாஸ்வேர்ட் கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க முடியுமா? எங்கள் அலுவலகத்தில் பலர் ஒரு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். அதற்கான வழிகளைக் கூறவும்.


  –என். ரவீந்திரன், மேலப்புதூர்

  பதில்: விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிலேயே போல்டர் ஒன்றைப் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென சில இலவசமாக டவுண்லோட் செய்து பயன் படுத்தும் புரோகிராம்களும் உள்ளன.


  1. உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரில் உங்களுக்கென யூசர் அக்கவுண்ட்டுடன் பாஸ்வேர்ட் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதன் பைல் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS) என்று எண்ணுகிறேன்.


  2. இனி எந்த போல்டருக்குப் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டுமோ அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Alt அழுத்திய வாறே டபுள் கிளிக் செய்திடவும்.

  3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ள பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. பின் Apply என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். பாஸ்வேர்ட் ஒன்றை தரப்போகிறீர் களா? என்று கேட்கப்படும்.

  உங்கள் போல்டரை நீங்கள் பிரைவேட் ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த பாஸ்வேர்டினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கம்ப்யூட்டரில் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைகையிலும் அதே பாஸ்வேர்டினைக் கொடுக்க வேண்டியதிருக்கும்.

  5. பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்து பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும்.

  6. பின் Properties டயலாக் பாக்ஸில் OK கிளிக் செய்திடவும்.

  7. இனி உங்கள் பாஸ்வேர்ட் இல்லாமல் இந்த போல்டரை யாரும் திறக்க முடியாது. இரண்டாவதாக ஒரு வழி: இந்த போல்டர் ஸிப் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக பாஸ்வேர்ட் ஒன்றினைக் கொடுக்க முடியாது.

  இதற்கு ஸிப் செய்யப்பட்ட போல்டர் மீது இருமுறை கிளிக் செய்திடவும். மேலாக உள்ள மெனுவில் பைல் தேர்ந்தெடுத்து, பின் ‘Add a Password’ என்பதில் கிளிக் செய்திடவும். பாஸ்வேர்ட் பாக்ஸில் பாஸ்வேர்ட் ஒன்றை டைப் செய்திடவும்.

  மீண்டும் Confirm Password பாக்ஸிலும் இதனை டைப் செய்திடவும். இனி இந்த போல்டரை நீங்கள் மட்டுமே பாஸ்வேர்ட் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

  கேள்வி: பண்டிகைக் காலங்களில் பரிசாகத்தரக் கூடிய மொபைல்கள் குறித்த கட்டுரை நல்ல வழி நடத்தலுடன் இருந்தது. நான் சிறந்த மல்ட்டிமீடியா போன் ஒன்றை ரூ.4,000க்குள் வாங்க விரும்புகிறேன். சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவும்.

  –என். சுகந்தி, கோயம்புத்தூர்

  பதில்: மார்க்கட்டில் நிறைய இருக்கின்றன. என்றாலும் ஒரு சில போன்கள் குறித்து இங்கு தருகிறேன். இவற்றை நன்றாக ஆய்வு செய்து பார்த்து வாங்கவும்.


  1. மோட்டாரோலா டபிள்யூ 230: கேண்டி பார் செட், அலைவரிசைகளை நன்கு பெற்றுத் தரும் எப்.எம். ரேடியோ, 2 ஜிபி கார்ட் வரை மெமரி, எம்பி 3 பிளேயர் என வசதிகள் கொண்ட ஓர் மல்ட்டிமீடியா அடிப்படை செட். மார்க்கட் விலை ரூ. 2,911.


  2. சாம்சங் குரு E1410: கேண்டி பார் செட், குறைந்த எடை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 ஜிபி வரை மெமரி, நல்ல ஒலி தரும் மியூசிக் பிளேயர், ஆப்பரா மினி பிரவுசர், AD2P புளுடூத், யு.எஸ்.பி, மொபைல் ட்ரேக்கர் மற்றும் நல்ல பேட்டரி. மார்க்கட் விலை ரூ. 3,000


  3. எல்.ஜி. கேஜி 195: கேண்டி பார் செட், 70 கிராம் எடை, விஜிஏ கேமரா,நல்ல நெட்வொர்க் இணைப்பு, AD2P புளுடூத், யு.எஸ்.பி, எம்.பெக் 4, 3ஜிபி, எம்பி3, வேவ் பார்மட் சப்போர்ட், டைம் குறித்து ரெகார்ட் செய்திடும் வசதியுடன் எப்.எம். ரேடியோ, அனைத்து வக வழக்கமான வசதிகள் என இந்த போன் உள்ளது. மார்க்கட் விலை ரூ.3,549.


  கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டர் சில வேளைகளில் சேப் மோடில் உள்ளது போலத் தோற்றமளிக்கிறது. இதனை எப்படி மீண்டும் சரி செய்வது?
  –என். கிருஷ்ண குமார், பரவை

  பதில்: கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிய பின் அல்லது சேப் மோடில் சில மணித்துளிகள் இயக்கிய பின் நம் திரையில் உள்ள ஐகான்கள் மற்றும் கலர் பேட்டர்ன் மாறியது போலத் தோற்றமளிக்கும்.

  ஏன் இந்த மாற்றம்? உங்களுடைய மானிட்டரின் ரெசல்யூசன் மற்றும் கலர் பிட் பேட்டர்ன் உயர்ந்த அளவில் வைக்கப்பட்டிருந்தால், அவை மானிட்டர் மற்றும் கம்ப்யூட்டரின் திறனை அதிகம் உறிஞ்சும்.

  சில கம்ப்யூட்டர் கேம்ஸ் இவற்றை மிகவும் குறைவான செட்டிங்ஸில் தானே அமைத்துவிடும். அப்போதுதான் கம்ப்யூட்டரின் முழுத் திறனைப் பயன்படுத்தி வேகமாக இயங்க முடியும்.

  சில கேம்ஸ்களில் இந்த மாற்றம் உங்களைக் கேட்டுத்தான் நடைபெறும்; சிலவற்றில் கேட்காமலேயே நடைபெறும். கேம்ஸ் முடிந்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் வகையில் இவை அமைந்திருக்காது. அதனால் தான் இந்த மாறுதலான சூழ்நிலை.


  உங்களுடைய டாஸ்க் பாரின் வலது மூலையில் மானிட்டர் அல்லது கிராபிக்ஸ் கார்டுக்கான ஐகான் இருந்தால், அதன் மீது ரைட்கிளிக் செய்து அதிலேயே பழைய நிலைக்கு மாற்றிவிடலாம். கேம்ஸ் கலர் சிஸ்டத்தினை 256 கலர் திட்டத்திற்கு மாற்றி இருக்கலாம்.

  அதனை "High Colour" (16 bit) அல்லது "True Colour (32 Bit)" என்பதற்கு மாற்றவும். இல்லை என்றால் டெஸ்க் டாப் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Settings செலக்ட் செய்திடவும். அதில் தேவையான ரெசல்யூசன் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.


  கேள்வி: என் வெப் பிரவுசரை எப்போது திறந்தாலும் அதன் திரை சிறியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் திரையின் மேலாக வலது புறம் சென்று மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டியுள்ளது. செட்டிங்ஸ் மாற்றத்தின் மூலம் இதனை எப்படி மாற்றலாம்?

  -சித. முருகேசன், பள்ளத்தூர்

  பதில்: ஒவ்வொரு முறை மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்திப் பின் இன்டர்நெட் பிரவுசிங் செய்வது என்பது மிகவும் எரிச்சல் ஊட்டும் விஷயம்தான். எனக்கும் இது போல் முன்பு நேர்ந்தது. சரி செய்த பின் அந்த பிரச்சினை இல்லை. அதற்கான வழியைச் சொல்கிறேன்.


  இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் அது சிறியதாகக் கூட இருக்கலாம். மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டாம். இனி மவுஸின் கர்சரை நான்கு முனைகளுக்கும் கொண்டு செல்லுங்கள்.

  கர்சரை ஓரமாக வைத்து இழுங்கள். திரையளவு விரியும். உங்களுக்குத் தேவையான அளவு, திரை முழுவதும் திரை விரிந்த பின்னர் அப்படியே விட்டுவிடவும். இதனை இரு புறமும் செய்திடலாம். பின் விண்டோவை மூடவும். இனி மீண்டும் பிரவுசரைத் திறந்தால் அது திரை முழுவதுமான விண்டோவினைக் கொண்டிருக்கும்.


  ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் நீங்கள் பிரவுஸ் செய்வதாக இருந்தால், பிரவுசிங் முடித்து மூடும் கடைசி விண்டோ நீங்கள் விரும்பும் அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் அதனை மூடுகையில் எந்த அளவில் விண்டோவினை வைத்திருந்தீர்களோ, அந்த அளவிலேயே அடுத்து திறக்கும்போது விண்டோவினைக் காட்டும்.


  கேள்வி: பைல் மற்றும் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பது போல சிடி ஒன்றுக்கு முழுமையாக பாஸ்வேர்ட் கொடுக்க முடியுமா? அதாவது பாஸ்வேர்ட் இல்லாமல் அந்த சிடிக்குள் நுழைய முடியாதபடி அமைக்க முடியுமா?


  –எம். வசந்தன், டி.புதுப்பட்டி


  பதில்: சிடியில் பதிவு செய்கிற பைல்களுக்குத்தான் பாஸ்வேர்ட் கொடுக்க முடியும். மொத்தமாக சிடி ஒன்றுக்குப் பாஸ்வேர்ட் கொடுக்கும் வசதியை விண்டோஸ் தரவில்லை. CryptCD என்று ஒரு சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையைச் செய்வதாகப் படித்திருக்கிறேன். இதனை www.cryptcd.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்று பயன்படுத்திப் பார்க்கவும். இது இலவசம்தான்.


  கேள்வி: ஸ்டார்ட் மெனுவில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்களை வைத்துப் பயன்படுத்த எண்ணுகிறேன். புரோகிராம்களின் எண்ணிக்கையை அதிகமாக செட் செய்திட என்ன செய்ய வேண்டும்?

  –டாக்டர் கா. மஞ்சுளா, மேட்டுப்பாளையம்


  பதில்: நல்ல யோசனை தான். இதனால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதாக எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்தாலும் இயக்கலாம். இதோ அதற்கான வழி.

  Start பட்டனில் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அங்கு ஸ்டார்ட் மெனு டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Customize பட்டன் கிளிக் செய்யப்பட்டு அந்த பிரிவு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் டேப்பில் கிளிக் செய்திடவும்.

  இங்கு உள்ள பெட்டியின் நடுப்பாகத்தைக் கவனிக்கவும். இங்கு தான் ஸ்டார்ட் மெனுவில் எத்தனை புரோகிராம்கள் வைத்துக் கொள்ளலாம் என குறைக்கவோ அதிகரிக்கவோ முடியும். இது 0 விலிருந்து 30 வரை செல்கிறது. எத்தனைக்கெத்தனை அதிகமாக உள்ளதோ அந்த புரோகிராம்களை வேகமாகப் பெற்று இயக்க முடியும்.

  நன்றி.தினமலர் 31/08/09

 8. #32
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு பேஜ் பிரேக் உருவாக்குவது எப்படி? பின் தேவை இல்லை என்றால் அதனை நீக்குவது எப்படி?


  –சி. கமலேஷ் குமார், திருப்பரங்குன்றம்


  பதில்: எந்த இடத்தில் பேஜ் பிரேக் வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைத்து, பின் கண்ட்ரோல் + என்டர் தட்டுங்கள். பேஜ் பிரேக் கிடைக்கும்.

  இதனை மெனு பார் வழியாகவும் மேற்கொள்ளலாம். இன்ஸெர்ட் மெனு சென்று அதில் முதலாவதாகக் கிடைக்கும் பிரேக் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய பாக்ஸ் ஒன்றுகிடைக்கும். அதில் பிரேக் டைப்ஸ் மற்றும் செக்ஷன் பிரேக் டைப்ஸ் என்ற இரண்டு வகை பிரேக் பிரிவுகள் இருக்கும்.

  உங்களுக்கு எந்த வகை பிரேக் வேண்டுமோ அதற்கான ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்திடலாம். இங்கு சென்றால் அனைத்து வகை பிரேக் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

  இனி இதனை நீக்கும் வழியைப் பார்க்கலாம். டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு, பேஜ் பிரேக் உங்கள் டாகுமெண்ட்டில் புள்ளிகள் வைத்த பெரிய நீண்ட கோடாகக் காட்சி அளிக்கும்.

  டாகுமெண்ட் நார்மல் வியூவில் இருக்க வேண்டும். இதற்கு வியூ மெனுவில் நார்மல் தேர்ந்தெடுக்கவும். இந்த வியூவில் தான் பேஜ் பிரேக் கோடாகத் தெரியும். பேஜ் பிரேக் உள்ள இடத்திற்குச் செல்லவும். அங்கு கர்சரை வைத்து டெலீட் பட்டன் அழுத்தினால் பேஜ் பிரேக் நீக்கப்படும்.

  அல்லது அம்புக் குறி கர்சரை பேஜ் பிரேக் கோட்டில் இடது மூலைக்குக் கொண்டு சென்று கிளிக் செய்தால் பேஜ் பிரேக் கோடு தேர்ந்தெடுக்கப்படும். பின் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் அழுத்தி இதனை நீக்கலாம்.

  கேள்வி: எனக்கு ஒரு டெக்ஸ்ட் வந்துள்ளது. அதனை வேர்டில் டைப் செய்திட வேண்டும். அதில் கேள்விக் குறி தலைகீழாக டைப் செய்திட வேண்டியுள்ளது.

  அதே போல ஆக்சென்ட் கிரேவ் என்று எழுதி அந்த சிம்பல் போடச் சொல்லி அருகே இன்ஸ்ட்ரக்ஷன் தரப்பட்டுள்ளது. விங்டிங்ஸ் சிம்பல் பயன்படுத்த முடியவில்லை. இதனை எப்படி டைப் செய்வது?  –சீ. உத்தமராஜ், சென்னை(தொலபேசி மூலம்)

  பதில்: உங்களுக்கு தொலை பேசியில் தீர்வு வழங்கப் பட்டது என்றாலும் அனைவரும் அறியும் வகையில் இன்னும் சில தகவல்களையும் இங்கு தருகிறேன். ஆங்கில எழுத்துக்களின் மேலாக இடது புறம் சாய்வாக ஒரு சிறு குறியை இடுவதனை ஆக்ஸென்ட் கிரேவ் ( Accent Grave) என்கின்றனர்.

  இந்த அடையாளம் கீ போர்டில் உள்ள முதல் கீயில் இருக்கும். ஓர் எழுத்தின் மேலாக இதனை அமைக்க கண்ட்ரோல்+இந்த ஆக்ஸென்ட் கிரேவ் குறியீடு+அந்த எழுத்தினை அழுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக இவ்வாறு (�), அமையும்.

  இதே போல அபாஸ்ட்ரபி (�) கேரட் சிம்பல் (ஜி), டில்டே(ஜீ), கோலன் (ஜ்) ஆகியவற்றையும் அமைக்கலாம். நீங்கள் கேட்ட தலைகீழ் கேள்விக் குறி அமைக்க ஆல்ட்+ கண்ட்ரோல்+ஷிப்ட்+? (லூ)அழுத்தவும்.


  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண்களை எளிதாக இன்ஸெர்ட் மெனு மூலம் அமைத்து விடுகிறோம். ஆனால் அவற்றை நீக்க முடியவில்லையே. இதற்கான வழி என்ன? வழி தெரியாததால் பக்க எண்களை இப்போது அமைப்பதே இல்லை.


  – என். ரீனா தேவி, பொள்ளாச்சி

  பதில்: பக்க எண்களை வேர்ட் டாகுமெண்ட்டில் இருந்து நீக்குவது, நீங்கள் அவற்றை எப்படி அமைத்தீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. 1. வியூ மெனு சென்று ஹெடர்ஸ் அண்ட் புட்டர்ஸ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

  ஏதாவது ஒரு ஹெடர் அல்லது புட்டருக்குச் செல்லவும். அதில் உள்ள பக்க எண் மீது டபுள் கிளிக் செய்திடுங்கள். எண் தேர்ந்தெடுக்கப்படும்.


  2. நீங்கள் இன்ஸெர்ட் மெனு சென்று பக்க எண் கொடுத்திருந்தால், ஹெடர் அல்லது புட்டர் பிரேம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு படம் அல்லது கிராபிக்ஸ் தேர்ந்தெடுப்பதைப் போன்றது. அதன் பின் டெலீட் அல்லது பேக்ஸ்பேஸ் அழுத்தவும். பக்க எண்கள் நீக்கப்படும்.


  கேள்வி: ஏதேனும் ஒரு டூல்பாரை மெனு பாரில் நிலையாக வைத்துக் கொள்ள முடியுமா? அதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்?


  –எஸ்.சித்தார்த்த சீலன், புதுச்சேரி

  பதில்: இது ஒரு நல்ல கேள்வி. அடிக்கடி ஒரு டூல்பாரை நீங்கள் பயன்படுத்தி வந்தால் அந்த டூல்பாரினை மெனு பாரில் வைப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் மெனுவில் கிளிக் செய்து டூல்பாரைத் தேடி இயக்கும் நேரம் மிச்சமாகும். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.


  எடுத்துக்காட்டாக, நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் வேர்ட் கவுண்ட் பயன்பாட்டினை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொற்களுடன் கட்டுரைகள் மற்றும் சிறிய குறிப்புகளைத் தயார் செய்திட இது அவசியமாகும்.
  வேர்ட் கவுண்ட் வசதியினை இரு வகைகளில் பெறலாம்.


  ஏதேனும் ஒரு டூல்பாரில் ரைட் கிளிக் செய்தால் விரியும் மெனுவில் இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். அப்போது வேர்ட் கவுண்ட் டூல் பார் நீள் சதுர கட்டமாகக் கிடைக்கும். அடுத்து டூல்ஸ் என்பதில் கிளிக் செய்து அதில் வேர்ட் கவுண்ட் என்பதில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் டைத் தேர்ந்தெடுத்து சொற்களை எண்ணிச் சொல்லுமாறு செய்திடலாம்.

  இப்போது கிடைக்கும் இந்த வேர்ட் கவுண்ட் டூல்பாரினை அப்படியே இழுத்து வந்து மேலாக உள்ள மெனுபாரில் வைத்துவிட்டால் இதுவும் ஒரு மெனுவாக அப்படியே அமைந்துவிடும். அடுத்த முறை தேவைப்படுகையில் இதிலேயே நேரடியாகக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.


  கேள்வி: சாப்ட்வேர் அல்லது பிரவுசர் புரோகிராம்கள் வரும்போது அதன் பின்னே இரண்டு அல்லது மூன்று எண்கள் கொண்ட தொடர் தரப்படுகிறது. இவை எதனைக் குறிக்கின்றன? இவை தெரியாத புரோகிராம்களின் நம்பர் அறிய என்ன செய்ய வேண்டும்?


  –டிசில்வா மார்கரெட், புதுச்சேரி

  பதில்: புரோகிராம் பெயருக்குப் பின் உள்ள எண்கள், அந்த புரோகிராமின் பதிப்பு எண்ணைக் குறிக்கின்றன. அப்படி எண் இல்லாத ஒரு புரோகிராமின் பதிப்பு எண்ணைத் தெரிய ஹெல்ப் மெனு அழுத்தி அதில் என்பதில் கிளிக் செய்தால் புரோகிராம் தயாரிப்பு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறும்.

  அதில் பதிப்பு எண் இருக்கும். சரி, இவை எதனைக் குறிக்கின்றன என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக புரோகிராம் ஒன்றின் எண் 6.1.2 என இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் (6) அந்த புரோகிராமின் பதிப்புகளில் மிகப் பெரிய அளவில் வேறுபாடு கொண்ட பதிப்பின் எண்ணாகும். நிச்சயமாக அதன் பதிப்பு 5 – லிருந்து பதிப்பு 6 பல வழிகளில் வேறுபட்டிருக்கும்.


  அதிகமான மாறுதல்கள் இருந்தால் தான் இந்த எண் மாற்றப்படும். (1) என்ற இரண்டாவது இடத்தில் இருக்கும் எண் சிறிய அப்டேட் மாற்றங்கள் கொண்ட அடுத்த பதிப்பைக் குறிக்கிறது.

  மூன்றாவதாக உள்ள (2) என்பது அண்மையில் மேற்கொண்ட புரோகிராம் பக் (Bug) ஒன்றிற்கான திருத்தங்கள் அடங்கிய பதிப்பு எண்ணாகும்.

  எனவே இங்கு எடுத்துக் காட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 6.1.2 பதிப்பு எண்ணுடைய புரோகிராமில், அண்மைக் காலத்தில் இரண்டு பிழைகள் (Bugs) கண்டறியப்பட்டு இது இரண்டாவதாகத் திருத்தப்பட்டது என்று சொல்கிறது.

  6.1 பதிப்பு இதுவரை இரண்டு பிழைகளைச் சரி செய்துள்ளது என்று பொருள். சில புரோகிராம்கள் எண்களுக்குப் பதிலாக எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.


  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட்டுக்கு அடிக்கோடிடுகையில் டபுள் லைனாக கோடு அமைய ஷிப்ட் அழுத்தி அன்டர்லைன் ஐகானை அழுத்தினேன். வழக்கம்போல் ஒற்றைக் கோடுதான் கிடைத்தது. ஆனால் நீங்கள் முன்பு ஒருமுறை ஷிப்ட் அழுத்தினால் அது இரட்டைக் கோடாகக் கிடைக்கும் என்று டிப்ஸ் கொடுத்திருந்தீர்கள். விளக்கம் தரவும்.


  –கா. நல்லதம்பி, தேவாரம்

  பதில்: முகவரியில் தெரு மாறி வீடு தேடுவது போல உள்ளது உங்களின் கேள்வி. ஷிப்ட் அழுத்தி அடிக்கோடு இரண்டாகக் கிடைப்பது எக்ஸெல் தொகுப்பில். நீங்கள் அதனைச் சோதனை செய்து பார்த்தது வேர்ட் தொகுப்பில். இரட்டைக் கோடு கிடைக்க வேர்டில் கீழ்க்கண்டபடி செயல்படவும்.

  டாகுமெண்ட்டில் நீங்கள் கோடிட விரும்பும் டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ளவும். பின் Format மெனு கிளிக் செய்து அதில் Font என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

  கிடைக்கும் விண்டோவில் Font என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில் Underline Style List என்பதன் கீழாகப் பல ஸ்டைல் கோடுகள் கிடைக்கும்.


  உங்களுக்குத் தேவையான ஸ்டைலைத் தேர்ந்தெடுத்துப் பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். டெக்ஸ்ட்டின் கீழ் உங்களுக்குப் பிடித்த ஸ்டைலில் அடிக்கோடு கிடைக்கும்.

  அதே விண்டோவில் Underline Color list என்று ஒரு லிஸ்ட் இருக்கும். அதில் தேவைப்படும் வண்ணத்தை செலக்ட் செய்தால், அந்த வண்ணத்தில் கோடுகள் கிடைக்கும்.


  எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிட, இதே போல கோடிட வேண்டிய டெக்ஸ்டைத் தேர்ந்தெடுத்து, பின் அன்டர்லைன் பட்டனை ஷிப்ட் கீயுடன் அழுத்தினால் அது டபுள் அன்டர்லைனாக மாறும். இதே போல ஷிப்ட் கீயை அழுத்தினால் Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.


  கேள்வி: மல்ட்டி மீடியா மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்புகிறேன். விபரங்கள் மற்றும் விலையினை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எந்த எந்த போன்களைப் பார்த்த பின்னர் நான் ஒரு போனை முடிவு செய்திட வேண்டும் என முக்கியமான பத்து போன்களின் பெயர் மற்றும் மாடல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


  –கா. தினேஷ் ராஜா, சென்னை

  பதில்: நல்ல கேள்வி. எனக்குத் தெரிந்த வரை சென்னை மொபைல் மார்க்கட்டில் விற்பனை யாகும் சில மல்ட்டி மீடியா போன்களின் பட்டியலைத் தருகிறேன்.

  இவற்றின் செயல்பாடு குறித்து அறிந்து உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் வாங்கிக் கொள்ளவும். இவற்றின் விலை பல நிலைகளில் இருக்கும்; திறனும் அது போலவே.

  நோக்கியா 5130 எக்ஸ்பிரஸ் மியூசிக், நோக்கியா என் 79, நோக்கியா என் 86, நோக்கியா என் 97, சோனி எரிக்சன் சி 510, சோனி எரிக்சன் டபிள்யூ 595, சோனி எரிக்சன் டபிள்யூ 995, சாம்சங் ஜெட், பிளாக் பெரி கர்வ் 8900, ஆப்பிள் ஐ போன் 3ஜி ஆகியவை சிறந்த மல்ட்டிமீடியா போன்களாகும்.

  விரைவில் வர இருக்கும் சில போன்கள் எனக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம். ஆப்பிள் ஐ போன் 3ஜி எஸ், சாம்சங் ஆம்னியா எச்.டி., சோனி எரிக்சன் சேஷியோ மற்றும் நோக்கியா 5530 எக்ஸ்பிரஸ் மியூசிக்.

  ந்ன்றி.தினமலர்.
  செப்டம்பர் 06,2009,
  Last edited by நூர்; 07-09-2009 at 01:51 PM.

 9. #33
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?


  –எஸ். சம்பந்த மூர்த்தி, விவசாயக் கல்லூரி, ஒத்தக்கடை

  பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும்.

  இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.

  எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில்Tools>Options செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

  இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும்.

  அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


  கேள்வி: இன்டர்நெட் வெப்சைட்டிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை எடிட் செய்திடும் புரோகிராம் ஒன்றை இறக்கினேன். எத்தனை முறை இன்ஸ்டால் செய்தாலும் அது முழுவதுமாக இன்ஸ்டால் ஆக மறுக்கிறது. என்ன காரணமாக இருக்கும்?

  –வி.முனியப்பன், திருப்பூர்

  பதில்: அந்த சாப்ட்வேர் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லையே. பொதுவாக இது போன்ற பிரச்சினை ஒரு சிலருக்கு ஏற்படும். அதற்கான காரணங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக் கைகளையும் இங்கு சுருக்கமாகக் கூறுகிறேன்.

  1.முதலில் ஒரு சாப்ட்வேர் புரோகிராமிற்கான பைல்களை வெப் சைட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் முன், அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தகவல்களை நன்றாகப் படிக்கவும்.

  அதில் அந்த பைலை எப்படி இயக்கி இன்ஸ்டால் செய்திட வேண்டும்; எந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் இடம் தேவைப்படும்; இன்ஸ்டால் செய்திடும் முன் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டுமா? வேறு எந்த புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்ற தகவல்கள் எல்லாம் தரப்பட்டிருக்கும்.

  2. மேலும் அது முற்றிலும் இலவசமான புரோகிராமா? அல்லது குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டும் இயங்குமா? என்ற தகவலும் தரப்பட்டிருக்கும்.


  3. சில தளங்களில் அந்த புரோகிராமினைப் பயன்படுத்தியவர்களின் குறிப்புகளும் இருக்கும். இவை அனைத்தையும் படித்தபின்னரே, அந்த புரோகிராம் வேண்டுமா என்பதனையும், அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்திட கம்ப்யூட்டரில் இடம் உள்ளதா என்பதனையும் முடிவு செய்து, பின் டவுண்லோட் செய்திடலாம்.

  பொதுவாக அந்த புரோகிராம் கேட்கும் காலி டிஸ்க் இடத்தைக் காட்டிலும் குறைந்த பட்சம் இரு மடங்கு இடம் இருந்தாலே பதிய வேண்டும்.


  கேள்வி: வேர்டில் பொதுவாக ஒரு சொல் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் வரிகளைத் தேர்ந்தெடுத்தபின், அதில் மவுஸ் கர்சரைக் கொண்டு அழுத்தி அப்படியே இழுத்துச் சென்று இன்னொரு இடத்தில் விடலாம்.

  என் அலுவல கத்தில் நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இதனை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் வீட்டில் முடிகிறது. இரண்டிலும் வேர்ட் 2003 தான் உள்ளது.  –என்.பிரிய தர்ஷிணி, கோயம்புத்தூர்

  பதில்: அலுவலகக் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் இந்த வசதி வேண்டாம் என செட் செய்யப்பட்டுள்ளது. கவலைப்பட வேண்டாம். மிக எளிதாக மாற்றிவிடலாம். கீழ்க்கண்டபடி செயல்படவும்.

  1. டூல்ஸ் (Tools) மெனு சென்று ஆப்ஷன்ஸ் (Options) செலக்ட் செய்திடவும்.


  2. கிடைக்கும் விண்டோவில் எடிட் (Edit) டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. இந்த விண்டோவில் (Drag and Drop Text Editing) ட்ராக் அண்ட் ட்ராப் டெக்ஸ்ட் எடிட்டிங் என்று ஒரு வரி இருக்கும். அதன் முன்னே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை மவுஸ் கிளிக் செய்வதன் மூலம் ஏற்படுத்தவும்.

  4.ஓகே கிளிக் செய்து ஆப்ஷன்ஸ் பாக்ஸை மூடவும்.
  இனி நீங்கள் விரும்பியபடி டெக்ஸ்ட் செலக்ட் செய்து, அதன் மேல் மவுஸால் அழுத்தியவாறே, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று பேஸ்ட் செய்திடலாம்.


  கேள்வி: வேர்டில் பயன்படுத்தப்படும் டெம்ப்ளேட் பைல்கள் எந்த டைரக்டரியில் சேவ் செய்து வைக்கப்பட்டிருக்கும்? இந்த டைரக்டரியை மாற்றலாமா?


  –என். கணேஷ், மேலூர்

  பதில்: புதிய, உங்களுக்குப் பிடித்த வகையில் டெம்ப்ளேட் பைல்களை உருவாக்கி சேவ் செய்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் டெம்ப்ளேட் பைல்கள் இருக்கும் டைரக்டரியை மாற்றுவது அவ்வளவு நல்லதல்ல.

  வேர்ட் டிபால்ட் முறையில் அந்த குறிப்பிட்ட டைரக்டரியில் தான் தேடும்; சேவ் செய்திடும். இருப்பினும் இந்த டெம்ப்ளேட்கள் எங்கு உள்ளன என்று அறியும் வழியைச் சொல்கிறேன்.

  1. வேர்ட் தொகுப்பைத் திறந்து கொண்டு அதில் Tools மெனுவில் Options தேர்ந்தெடுக் கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கும்.

  2. இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் File Types List என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3.இந்த லிஸ்ட்டில் User Templates என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அது எந்த டைரக்டரியில் டெம்ப்ளேட் சேவ் செய்யப்படுகிறது என்று காட்டும். அதனைக் குறித்துக் கொள்ளவும்.


  கேள்வி: நான் இப்போது பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். சில வேலைகளுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் சரியாக வருகிறது என்று தெரிகிறது. இனி அதனையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாமா? இதனால் பிரச்சினை வராதா?


  –டி.தேவநேசன், காரைக்கால்


  பதில்: ஒரு கம்ப்யூட்டரில் எத்தனை பிரவுசர் வேண்டுமானாலும் வைத்துப் பயன் படுத்தலாம். இதனால் பிரச்சினை ஏற்படாது. ஆனால் ஒரு பிரவுசர் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாறா நிலையில் (Default) இருக்கும்.

  அதாவது இன்டர்நெட் முகவரியுடன் கூடிய லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த பிரவுசர் மூலம் தான் அந்த தளம் திறக்கப்படும். இரண்டு பிரவுசர் வைத்துக் கொள்வது நல்லதும் கூட. ஏதாவது ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டால் இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பயர்பாக்ஸில் நீங்கள் வைத்துள்ள புக்மார்க் அடையாளங்களை மாற்றிக் கொள்வதற்கும் வசதி தரப்பட்டுள்ளது. (சென்ற இதழைப் பார்க்கவும்.) எனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை நீங்கள் பதிந்து வைத்து இயக்கலாம்.


  கேள்வி: அடிக்கடி பைல்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேட வேண்டியதுள்ளது. எந்த வகைகளில் எல்லாம் ஒரு பைலை கம்ப்யூட்டரில் தேடி அறியலாம் என்பதற்கு விளக்கம் தரவும். ஏற்கனவே கூறியிருந்தால்,மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும்.


  டி. ஆறுமுகத் தேவன், மதுரை

  பதில்: உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தவறே இல்லை ஆறுமுகம். இதோ விளக்கமான பதிலைத் தருகிறேன்.
  பைல் தேடுவதற்கான மெனுவினை முதலில் பெற வேண்டும்.

  இதற்கு Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for? என்று கொடுக்கப்பட்டுள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.இனி இந்தப் பிரிவுகளைப் பார்ப்போம்.

  1. முதல் வகையாக பைலின் முழுப் பெயர் தெரியாத வகையினைக் காணலாம். உங்களுக்கு இந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது


  *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டு மானாலும் இருக்கலாம். பைலை வகைப் படுத்தித் தேடலாம். இந்த தேடலை முதல் பிரிவில் தரவும்.


  2. பெயரும் தெரியவில்லை; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் உள்ளது என்றால் அதனை வைத்தும் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.


  3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look in என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம்.

  எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.


  4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனைப் பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.

  இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.


  கேள்வி: என்னுடைய போட்டோ மற்றும் படங்கள் (ஜேபெக் பைல்கள்) எப்போது வெப் பிரவுசரிலேயே திறக்கின்றன. போட்டோக் களுக்கான புரோகிராம்களில் இவற்றைத் திறக்குமாறு செய்திட என்ன செய்ய வேண்டும்?


  –சி.கந்தசுவாமி, திருவண்ணாமலை


  பதில்: உங்கள் பிரச்சினையை பைல் அசோசியேஷன் (File Association) பிரச்சினை என்று சொல்வார்கள். பலவாறான பைல்கள் இது போன்ற வேறு புரோகிராம்களில், ஏன் சில வேளைகளில் தவறான புரோகிராம்களிலும் திறக்கப்படும். இதனை எளிதாக சரி செய்திடலாம்.


  1.விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். ஸ்டார்ட் (Start) பட்டனில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் எக்ஸ்புளோர் (Explore) என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் கிடைக்கும். இங்கே நீங்கள் தொடர்பு தவறாக உள்ள டைப் பைல் ஒன்றைக் கண்டறிந்து அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

  இனி உங்களுக்குக் கிடைக்கும் மெனுவில் Oணீஞுண ஙிடிtட என்றசொற்களுடன் இப்போது அந்த பைல் திறக்கப்படும் புரோகிராமின் பெயர் இருக்கும். இதனை மாற்ற வேண்டும் என்றால் கீழே உள்ள Open With என்பதில் கிளிக் செய்தால், அந்த பைல் திறக்கப்படக் கூடிய புரோகிராம்களின் பட்டியல் இருக்கும். இதில் நீங்கள் விரும்பிய புரோகிராம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

  தற்போது இருக்கும் புரோகிராமினை விடுத்து வேறு ஒரு புதிய புரோகிராம் ஒன்றில் இது திறக்கப்பட வேண்டும் என விரும்பினால், Open With என்று இருப்பதில் கிளிக் செய்தால் வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றிலிருந்து நீங்கள் விரும்பும் புரோகிராமின் பெயரைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலம்.

  புரோகிராமின் பெயரைத் தேர்ந்தெடுத்தபின், புரோகிராம்கள் பட்டியலின் கீழாக " Always use this program to open this type of file" என்று ஓர் வரி இருக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதில் நீங்கள் விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக் கலாம். அதுவே மீண்டும் மாற்றாதவரை அத்தகைய பைல்களைத் திறக்கும் புரோகிராமாக அமையும்.  கேள்வி: விஸார்ட் ஒன்று கிடைக்கும்; அதில் இது போல தேர்ந்தெடுங்கள் –– என்று எழுதுகிறீர்கள். விஸார்ட் என்பது எதனைக் குறிக்கிறது?


  –சீ. சுமலதா, பெருங்களத்தூர்

  பதில்: பொதுவாக Wizard என்றால் மந்திரவாதி, சூனியக்காரன் என்று பொருள். அதனை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த சொல் கம்ப்யூட்டர் அறிவியலில் வேறு பொருளைத் தந்தாலும் கிட்டத்தட்ட ஒரு மந்திரவாதி போலத்தான் இதுவும் செயல்படுகிறது.

  தெருவோரம் கூட்டம் சேர்க்கும் செப்படி வித்தைக்காரன் அப்படிச் செய்,அதைப் பார்த்தாயா! இப்படிப் போடு, கண்ணை மூடு என்றெல்லாம் சொல்வது போல, விண்டோஸ் இயக்கத்தில் கிடைக்கும் விஸார்ட் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு, அதற்கான ஆப்ஷன்களையும் (விருப்பங்கள்) கேட்டு, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வேலையை முடிக்கும்.

  புரோகிராம் இன்ஸ்டலேசன், புரோகிராமில் முதலில் பைல் உருவாக்கும் நிலை போன்றவற்றில் நம்மை வழி நடத்தும் டயலாக் பாக்ஸே விஸார்ட் எனப்படுவது. இது எப்போதும் நமது நண்பனே.


  கேள்வி: எனக்கு வரும் இமெயில்களில் உள்ள சில இணைய தளங்களின் முகவரிகள் லிங்க்காக இல்லாமல் டெக்ஸ்ட்டாக இருக்கின்றன. இதனால் இவற்றில் கிளிக் செய்து இணைய தளத்தைப் பெற முடியவில்லை. இது எதனால் ஏற்படுகிறது. தீர்வு என்ன?

  –சி. கணேஷ் குமார், வத்தலக்குண்டு

  பதில்: பொதுவாக அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் இணைய முகவரியினை லிங்க்காகத்தான் தரும் வகையில் செயல்படும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் எது என்று நீங்கள் குறிப்பிடவில்லை.

  உங்கள் புரோகிராம் அப்படிப்பட்டதாக இருப்பின் அதனை மாற்றும் வழி அதன் மெனுக்களில் இருக்கும். இல்லை எனில் முகவரியினை காப்பி செய்து பிரவுசரில் பேஸ்ட் செய்து தளத்தைக் காண வேண்டியதுதான்.

  நன்றி.தினமலர்.செப்டம்பர் 13,2009,

 10. #34
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: பலவகையான அட்ரஸ் புக்குகள் விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ளதாகவும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஒன்று உள்ளதாகவும் கூறுகிறார்கள். இது குறித்து விளக்கவும்.

  – சி.நாராயண மூர்த்தி, கண்டமனூர்


  பதில் : விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக ஒரு விண்டோஸ் அட்ரஸ் புக் உள்ளது. இதனை Start, All Programs, Accessories, Address Book என வரிசையாகச் சென்று பெறலாம்.

  இதில் நமக்குத் தேவைப்படும் நபர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள், இமெயில் முகவரிகள் எனப் பல வகையான தகவல் களைப் போட்டு வைக்கலாம்.

  இதில் குரூப், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என வகை வகையாகப் பிரித்தும் போட்டு வைக்கலாம். இதுவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் உள்ள அட்ரஸ் புக்கும் வேறு வேறு.


  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பாரா முதல் வரி இடைவெளியை (பாரா இன்டென்ட்) அப்படியே வைத்து கீ போர்டில் உள்ள கீகள் வழியாக டெக்ஸ்ட்டை அப்படியே தள்ளி அமைக்கலாமா?அதற்கான வழிகளைக் கூறவும்.

  –சி. பவித்ரா, சின்னமனூர்


  பதில்: உங்கள் கேள்வி சரியே. கீ போர்டின் உதவியுடனும் இதனை அமைக்கலாம். டெக்ஸ்ட் அமைப்பதில் முதல் வெளி எனப்படும் இன்டென்ட் அமைக்கிறோம் அல்லவா? இதனை கீ போர்டு மூலமும் மாற்றி அமைக்கலாம்.

  எடுத்துக் காட்டாக பத்தி ஒன்றில் தொடக்க வரி அரை அங்குலம் தள்ளியும் மற்ற வரிகள் முதல் இடத்திலும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பத்தியில் கர்சரை வைத்து கண்ட்ரோல் + எம் கீகளை அழுத்துங்கள்.

  இப்போது அந்த பத்தி அப்படியே வலது புறமாக அரை அங்குலம் நகர்த்தப்படும். பாரா தொடக்க இன்டெண்ட் மாறாது.

  இதனை வேண்டாம் என்று கருதினால் கண்ட்ரோல்+ ஷிப்ட் + எம் கீகளை அழுத்தினால் பழைய நிலைக்கு வந்துவிடும். இனி கண்ட்ரோல் + ட்டி (Ctrl + T) அழுத்துங்கள் . பாராவின் முதல்வரி எங்கு தொடங்குகிறதோ அந்த இடத்திற்கு மீத வரிகள் அனைத்தும் வந்துவிடும்.

  இதனை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற (Ctrl + T + Shift) என்ற கீகளை அழுத்துங்கள்.


  கேள்வி: கூகுள் இணைய தளத்தில் உள்ள காலண்டர் வசதியை எப்படி பெற்று பயன்படுத்தலாம்?

  –என். சதீஷ் குமார், கோயம்புத்தூர்


  பதில்: கூகுல் தரும் பல வசதிகளில் இது ஓர் அருமையான வசதி ஆகும். இதனை இலவசமாகவே அமைத்துக் கொள்ளலாம்.

  இதனை www.google.com/calendar என்ற தளத்தில் பெறலாம். இதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளை டைப் செய்தால் அது தானாகவே அந்த தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்து கொண்டு நமக்கு நினைவூட்டும்.

  எடுத்துக்காட்டாக office meeting edding at 13.30 Hrs என டைப் செய்தால் குறிப்பிட்ட நாளிற்கானதாக அது எடுத்துக் கொள்ளப்படும். பின் இதனைப் பார்க்கும் உரிமை உங்களுக்கு மட்டுமா அல்லது குறிப்பிட்ட நண்பர்கள் குழுவிற்காக அல்லது அனைத்து நபர்களுக்குமா என்பதனையும் நாம் வரையறை செய்திடலாம்.

  இது யாஹூ காலண்டர் சேவையைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு காலண்டர்களுக்கிடையே நிகழ்வுகளை மாற்றிக் கொள்ளும் வசதியினைடு கூகுள் தந்துள்ளது.


  கேள்வி: சில வேளைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட புரோகிராம்களைத் திறந்து வேலை பார்க்கிறேன். அப்போது ஒரு சில புரோகிராம்களை மட்டும் மூட வேண்டியுள்ளது. ஒரே முயற்சியில் அவற்றை மூட முடியுமா? அல்லது ஒவ்வொன்றாகத்தான் மூட வேண்டுமா?


  – எஸ். பவன்தாஸ், விழுப்புரம்

  பதில்: ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. கண்ட்ரோல் கீ அழுத்திக் கொள்ளுங்கள். பின் மூட வேண்டிய புரோகிராம்களை, டாஸ்க்பாரில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

  பின்னர், கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே மவுஸால் ரைட் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் மெனுவில் குளோஸ் (Close) பட்டனை அழுத்தவும். இதே முறையைப் பயன்படுத்தி இந்த புரோகிராம்களை மினிமைஸ், மேக்ஸிமைஸ், ரெஸ்டோர், காஸ்கேட் ஆகிய வேலைகளையும் மேற்கொள்ளலாம்.


  கேள்வி: நான் முதலில் பயன்படுத்திய கம்ப்யூட்டரில் பல்வேறு (ஸ்கைப், கூகுள் டாக், யாஹூ ஐ.எம்.) புரோகிராம்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் என் நண்பர்களுடன் ஹெட் செட் பயன்படுத்தி பேசி வந்தேன். ஆனால் புதிய கம்ப்யூட்டரில் எந்த புரோகிராமிலும் பேச முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?


  –சீ. ஸ்ரீனிவாஸ் தங்கதுரை, திண்டிவனம்


  பதில்: மிகப் பெரிய கடிதம் எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதியதிலிருந்து உங்கள் மைக் அல்லது ஹெட்செட்டிலிருந்து செல்லும் வயர் சரியாகப் பொருத்தப்படவில்லை என்று தெரிகிறது.

  மைக் சரியாக உங்கள் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும். பொதுவாக இது இளஞ்சிகப்பு வண்ணத்தில் இருக்கும். அடுத்து உங்கள் மைக்ரோபோன் மியூட் (Mute) செய்யப் படாமல் உள்ளதா என்று டெஸ்ட் செய்திடவும். இதற்கு உங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திடவும்.

  அப்போது வால்யூம் கண்ட்ரோல் என்ற கண்ட்ரோல் பாக்ஸ் கிடைக்கும். இதில் இறுதியாக லைன் இன் (Line In) என்று இருப்பதன் கீழாக Mute என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறு கட்டத்தில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்து விடவும். அநேகமாக இனி உங்கள் மைக் செயல்படத் தொடங்கும் என எண்ணுகிறேன்.


  கேள்வி: பைல்களை எப்படி ட்ராக் அண்ட் ட்ராப் மூலம் ஒரு டைரக்டரியிலிருந்து இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற முடியும்?

  –ஆர்.கே. செல்வராஜ் பிள்ளை, இராஜபாளையம்


  பதில்: முதலில் எந்த பைலை மாற்ற வேண்டுமோ அந்த டைரக்டரி அல்லது போல்டரை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் திறந்து கொள்ளுங்கள். பின் அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

  இனி மீண்டும் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளவும். இப்போது அந்த பைலை எந்த போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்ற வேண்டுமோ அதனைத் திறக்கவும்.

  இப்போது இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் ரெஸ்டோர் டவுண் (Restore Down ) செய்திடவும். இதனை விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கட்டங்களில், நடுவில் உள்ள இரண்டு சதுரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள கட்டத்தின் மேல் கிளிக் செய்து மேற்கொள்ளலாம்.

  இப்போது உங்கள் மானிட்டர் திரையில் பைல் இருக்கும் இடமும், அது செல்ல வேண்டிய இடமும் தெரியும். இனி தேர்ந்தெடுத்த பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்துச் சென்று, அது இருக்க வேண்டிய இன்னொரு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள டைரக்டரி அல்லது போல்டரில் விடவும்.

  சிறிய மெனு ஒன்று தெரியும். காப்பி/மூவ் செய்திடவா என்று கேட்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து விடுங்கள். பைல் இடம் மாறிவிடும்.


  கேள்வி: என் அலுவலகத்தில் அக்கவுண்ட் மெய்ன்டெய்ன் செய்திட எக்ஸெல் ஒர்க் புக் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு முறை ரூபாய் மற்றும் இரண்டு தசம ஸ்தானத்தில் பைசா டைப் செய்கையில் புள்ளி அடிக்க வேண்டியுள்ளது. இதனைக் கம்ப்யூட்டரே டைப் செய்திடும் வகையில் மாற்ற முடியுமா?

  –என். கன்னையா, திண்டுக்கல்


  பதில்: தாராளமாக செட் செய்திடலாம். ஆனால் செட் செய்த பின் நீங்கள் வெறும் ரூபாய் மட்டும் டைப் செய்திடக் கூடாது. ஏனென்றால் நீங்கள் 123 ரூபாய் என்பதை 123 என டைப் செய்தால், நீங்கள் செட் செய்தபடி,

  எக்ஸெல் 1.23 (ஒரு ரூபாய் இருபத்து மூன்று பைசா) என எடுத்துக்கொள்ளும். எனவே 123 ரூபாய் என்றால் 12300 என டைப் செய்திட வேண்டும். சரியா! இனி இதற்கான செட்டிங்ஸ் குறித்துப் பார்க்கலாம்.


  எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். டூல்ஸ் (Tools) கிளிக் செய்து அதில் கிடைக்கும் பிரிவுகளில் ஆப்ஷன்ஸ் (Options) தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

  கிடைக்கும் விண்டோவில் எடிட் (Edit) டேப் கிளிக் செய்திடவும். இதில் செட்டிங்ஸ் (Settings) என்று இருப்பதில் நான்காவதாக உள்ள பிக்ஸெட் டெசிமல் பிளேசஸ் (Fixe Decimal Places) என்று இருப்பதைக் காணவும்.

  இதில் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அருகில் உள்ள சிறிய கட்டம் இப்போது உயிர் பெற்று அதில் 2 எனத் தெரியும். இதனை அப்படியே விட்டுவிடலாம்.

  வேறு எண் இருந்தால் அதனை 2 என மாற்றவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இதனை மாற்றாதவரை நீங்கள் எந்த எண் டைப் செய்தாலும் அதன் கடைசி இரண்டு இலக்கங்கள் இரண்டு தசம ஸ்தானங்களாக எடுத்துக் கொள்ளப்படும்.


  கேள்வி: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்ப்பது எப்படி? இதில் அந்த பைலின் பெயர் மற்றும் வகை தவிர வேறு என்ன என்ன தகவல் கிடைக்கும்?

  –கே. கமலேஷ் குமார், செக்கானூரணி


  பதில்: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்க்க இரு வழிகள் உள்ளன. பைலை அதன் டைரக்டரி சென்று அதன் பெயரில் அல்லது டெஸ்க்டாப்பில் அதன் ஐகானில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

  பின் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் கீழாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும்.

  இதில் கிளிக் செய்தால் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் பைலின் பெயர், அதன் வகை, அது எந்த புரோகிராமில் திறக்கும்படி செட் செய்யப்பட்டுள்ளது, அருகேயே அந்த புரோகிராமினை மாற்றுவதற்கு வசதி தரப்பட்டிருக்கும்.

  இதனை அடுத்துள்ள பிரிவில் அந்த பைல் கம்ப்யூட்டரில் உள்ள டைரக்டரி, அந்த பைலின் அளவு, அது டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும் இட அளவு தரப்பட்டிருக்கும்.


  மூன்றாவது பிரிவில் அது என்று உருவாக்கப்பட்டது, என்று திருத்தப்பட்டது, என்று காணப்பட்டது என்று காட்டப்படும். இறுதியான பிரிவில் அந்த பைல் எந்த வகையில் பதியப்பட்டுள்ளது என்று காட்டப்படும்.

  அதைப் பார்க்க மட்டும் தான், திருத்தப்படக்கூடாது என்றால் Read only என்றும், திருத்தப்படலாம் என்றால் Hidden என்றும் தரப்பட்டிருக்கும். இந்த இடங்களில் பைலின் தன்மையை மாற்றலாம்.

  இதனுடன் மேலும் சில மாற்றங்களை பைலின் பண்புகளில் மேற்கொள்ள வேண்டும் என்றால் Advanced என்ற பிரிவில் கிளிக் செய்து மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.


  ப்ராப்பர்ட்டீஸ் விண்டோவினைப் பெற இன்னொரு வழியும் உள்ளது. பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஆல்ட்+என்டர் கீகளை அழுத்தவும்.


  கேள்வி: நான் என் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்தவுடன் அது தானாக ஆப் ஆகிவிடுகிறது. முதலில் ஆன் செய்தபோதுஅழுத்திய ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டிய நிலை ஏற்படவில்லை.

  ஆனால் மானிட்டரில் அதுவரை இளம் பச்சையாக எரிந்து கொண்டிருந்த சிறிய இன்டிகேட்டர் விளக்கு தீ சிகப்பாக மாறிவிடுகிறது. இது எதனைக் குறிக்கிறது? மானிட்டர் ஆப் ஆகிறதா? அல்லது ஆப் செய்திட வேண்டுமா?


  –கா. அழகிய மணவாளன், திருவண்ணாமலை


  பதில்: கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கும் பல வாசகர்கள் இது குறித்து அவ்வப்போது கேட்கும் கேள்வி இது. இப்போதைய கம்ப்யூட்டர்களில் ஷட் டவுண் செய்தாலே போதும். சிபியுவிற்குச் செல்லும் மின்சாரம் நிறுத்தப்படும். முன்பெல்லாம் சிபியுவின் ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டும்.

  ஆனால் மானிட்டரின் விளக்கு நிறம் மாறுவது எதனைக் காட்டுகிறது? பச்சையிலிருந்து இளஞ்சிகப்பு நிறத்திற்கு மாறினால், மானிட்டருக்கு வந்து கொண்டிருக்கிற தகவல்கள் நின்றுவிட்டன என்று பொருள்.

  சிபியு ஆப் செய்யப்பட்டுவிட்டதால் தகவல் வராது அல்லவா? ஆனால் பவர் மானிட்டருக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருள். திரை ஒளியூட்டப் படவில்லை.

  இதற்கு செல்லும் மின்சக்தியை நிறுத்த வேண்டும் என்றால், மானிட்டரின் ஸ்விட்சை (பெரும்பாலும் அழுத்தும் வகையில் இருக்கும்) அழுத்தினால் போதும்.

  சில பழைய வகை மானிட்டர்களில் திரை நீல நிறத்தில் அல்லது பல வண்ணங்களில் கோடுகள் உள்ள தொகுதி தெரியும். மற்ற சாதனங்களையும் பாருங்கள்.

  சில ஆப்டிகல் மவுஸ்களில் மின்சக்தி வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் சிறிய அளவில் விளக்கு எரியும். இதே போல் சில ஸ்கேனர்கள், பிரிண்டர்கள் மற்றும் கீ போர்டுகளில் கூட இதே போல் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியலாம்.

  இவை எரிவதால் பிரச்சினை எதுவும் இல்லை என்றாலும், மொத்தமாக இவை அனைத்திற்கும் ஒரு ஸ்விட்ச் வைத்துக் கொண்டு, இவற்றிற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திவிடலாம்.

  நன்றி.தினமலர்.செப்டம்பர் 20,2009
  Last edited by நூர்; 20-09-2009 at 08:18 PM.

 11. #35
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி : எங்கள் ஊரில் கம்ப்யூட்டர் செய்து கொடுப்பவரிடம் புதிய அதிக திறன் கொண்ட கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, அதில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு ஒன்றையும் பெற்றுள்ளேன்.

  மற்ற என் நண்பர்கள் இதற்கு புராடக்ட் கீ வாங்கினாயா என்று கேட்கிறார்கள். அது தேவை இல்லை என எனக்குக் கம்ப்யூட்டர் கொடுத்தவர் கூறுகிறார். இது எதனைக் குறிக்கிறது? அவசியம் தேவையா?  –கா. ஆறுமுகம், திண்டுக்கல்

  பதில்: தங்களின் சாப்ட்வேர் தொகுப்பு திருடப்பட்டு பயன் படுத்தப்படாமல் இருக்க, சாப்ட்வேர் நிறுவனங்கள் பயன்படுத்தும் பல வழிகளில் இந்த புராடக்ட் கீயும் ஒன்று. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு இந்த புராடக்ட் கீயினை வழங்கு கிறது.

  ஒவ்வொரு சாப்ட்வேர் தொகுப் பிற்கும் ஒரு கீ ஒன்றை உருவாக்கி அதனைச் சரியாகக் கொடுத்தாலே அத்தொகுப்பு இயங்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்குகையில் பொதுவான ஒரு கீ அதில் அச்சடிக்கப்பட்டுத் தரப்படும். இதனை சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் பயன்படுத்த வேண்டும்.


  அதன்பின் அந்த தொகுப்பைப் பயன்படுத்த நாம் மேற் கொள்ளும் முதல் முயற்சியில், புராடக்ட் கீ கேட்கும். அப்போது சாப்ட்வேர் வழங்கிய நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்று அதனைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இமெயில் மூலம் பெறலாம்.

  அல்லது கட்டணமின்றி பயன்படுத்தக் கூடிய தொலைபேசி எண் தந்திருப்பார்கள். அதனைத் தொடர்பு கொண்டு நம் சிடி எண்ணைத் தந்தால் புராடக்ட் கீ தருவார்கள். பொதுவாக இந்த கீ பல எண்கள் மற்றும் எழுத்துகள் கொண்டதாக இருக்கும். எனவே கவனமுடன் கேட்டு வாங்கி சிஸ்டத்தில் அமைக்க வேண்டும்.

  உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுத்த நபர் அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர் ஏற்கனவே இந்த வேலையை எல்லாம் செய்து முடித்து உங்களுக்கு எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பதிந்து தந்திருப்பார். இருப்பினும் அவரிடம் சிடிக்கான கீயினைப் பெறுவது நல்லது. பின் நாளில் புதிய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைப் பதிக்கை யில் உதவும். அல்லது பதியப் பட்ட ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்த பின் பதிக்கையிலும் தேவைப்படும்.


  கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 ஐ தொடர்ந்து இன்னும் நான் பயன்படுத்தி வருகிறேன். வெகுநாட்களாக இந்த சந்தேகம் என்னிடம் உள்ளது.

  ஏன் அதனை மூடும்போது அடுத்த முறை இதனைத் திறக்கையில் அனைத்து டேப்களையும் திறக்கவா என்று ஒரு கேள்வி வருகிறது? இது எர்ரர் செய்தியா? எர்ரர் என்றால் இதனை எப்படி சந்திப்பது?


  –எஸ். நாகேந்திரன், திருப்பூர்

  பதில்: புதிதாய் இயக்கத்தில் உள்ள பிரவுசர்கள் அனைத்துமே டேப் பிரவுசிங் எனப்படும் வசதியைத் தருகின்றன. இப்படி பல டேப்களைத் திறந்து, அவற்றின் ஒவ்வொன்றிலும் ஓர் இணைய தளத்தினைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மூடுகிறோம்.

  சில வேளைகளில் நம்மை அறியாமல் மூடுவதற்கான எக்ஸ் அடையாளத் தை அழுத்திவிடுவோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்மை எச்சரிக்கை செய்வதற்காக இந்த ஏற்பாடு உள்ளது. அனைத்து டேப்களையும் சேவ் செய்து பின் அடுத்த முறைத் திறக்கையில் அந்த டேப்களில் உள்ள தளங்களையும் இது திறக்கும்.


  இப்படிப்பட்ட செய்தி வருவது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால், அதனை நிறுத்தும் வகையில் செட் செய்துவிடலாம். முதலில் "Tools" தேர்ந்தெடுத்து அதில் "Internet Options" பட்டன் அழுத்தவும். பின்னர் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.

  இதில் "General" என்ற டேபை அழுத்தவும். இதில் நான்காவதாக உள்ள "Tabs" என்ற பிரிவில் கிடைக்கும் "Settings" என்ற பட்டனை அழுத்தவும். இப்போது "Tabbed Browsing Settings" என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

  இதில் "Warn me when closing multiple tabs" என்ற வரிக்கு முன்னால் உள்ள சிறிய கட்டத்தில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரை வைத்து அழுத்தி எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த எச்சரிக்கை கிடைக்காது.


  கேள்வி: இணைய தளம் ஒன்றில் என் பெயரைப் பதிந்த போது நான் கொடுத்த பாஸ்வேர்ட் Weak Password என செய்தி தரப்பட்டது. பாஸ்வேர்டில் எப்படி Weak உண்டு. ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி உருவாக்க முடியும்?

  –என்.சிவகுமார், திருமங்கலம்


  பதில்: Weak Password என்பது சுலபமாக மற்றவர்கள் அடையாளம் காணக் கூடியதாகும். எடுத்துக் காட்டாக, உங்கள் பிறந்த நாள், திருமண நாள், மனைவியின் பெயர், ஊரின் பெயர், qwerty, 1234 என்றெல்லாம் கொடுத்தால் எளிதாக ஒருவர் கண்டு கொள்ளலாமே.

  எனவே தான் யாரும் கண்டறியாத வகையில் பாஸ்வேர்டை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ramukavis என உங்கள் பெயரை வலமிருந்து இடதாக அமைத்தால் கூட ஒரு சிலர் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே தான் பாஸ் வேர்டில் எண்களும், எழுத்துக் களும், பிற குறியீடுகளும் கொண்டு அமைத்தால் அது ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு அமைக்கும்படி கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்த அனைத்து இதழ்களும் அறிவுறுத்துகின்றன.


  உங்கள் கேள்வியைப் படிக்கும் போது நேற்று நான் இணையத்தில் படித்த குறிப்பு நினைவிற்கு வந்தது. அண்மையில் 28 ஆயிரம் பாஸ்வேர்ட்களை மாதிரிக்கு எடுத்து ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் 16% பேர் தங்கள் பெயரின் முதல் சொல்லையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

  14% பேர் மிக எளிமையாக 1234 போன்ற பாஸ்வேர்டினைக் கொண்டுள்ளனர். 5% பேர் டிவியில் நடத்தப்படும் சீரியல் தலைப்புகள், அதில் வரும் கதா பாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு அமைத்துள்ளனர். மொத்தத்தில் 42% பேர் மிக எளிதான,

  யாரும் கண்டு கொள்ளக் கூடிய பாஸ்வேர்ட் களையே பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வந்தது. 66% பேர் தங்கள் பாஸ்வேர்ட்களை மாற்றுவதே இல்லை என்றும் தெரிகிறது. இவை அனைத்துமே சரியல்லை. வங்கிக் கணக்கு போன்றவற்றில் மிகக் கடுமையான, யாரும் அணுக முடியாத பாஸ்வேர்ட் களை வைத்திருப்பதே நல்லது.


  கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி என் சிஸ்டத்தில் உள்ளது. இதில் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்து பின் டிரைவ் ஐகானைத் தேர்ந்தெடுத்து, பைல்களைப் பார்ப்பது வழக்கம்.

  ஆனால் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்தவுடன், டிரைவ் ஐகான்கள் மற்றும் அவை கொண்ட திரை கிடைக்க தாமதமாகிறது. இதனை வேகமாகக் கிடைக்கும்படி செய்திட முடியுமா?


  –ஜி. விக்னேஷ், சென்னை

  பதில்: உங்கள் சந்தேகம் சரியானதுதான். வேகமாக நம் வேலையை முடிக்க வேண்டும் என எண்ணி மை கம்ப்யூட்டரைக் கிளிக் செய்தால், நமக்கு வர வேண் டிய முதல் திரை தாமதமாக வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

  இது ஏன் ஏற்படு கிறது என்றும், இதனை எப்படி சரி செய்திடலாம் என்றும் பார்க்கலாம்.

  பிரவுஸ் செய்து பைல்களைத் தேடுவதற்காக, மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்தவுடன், விண்டோஸ் எக்ஸ்பி உடனே அதன் நெட்வொர்க் பைல் களையும், கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர்களையும் தேடி அறிந்து கொள்ள முயற் சிக்கும். இதனால் தான் அந்த திரையில் உடன் கிடைக்க வேண்டிய ஐகான்கள் வர சற்று தாமதமாகிறது.

  முதல் தோற்றத்தில் டிபால்ட்டாக உள்ள விண்டோஸ் ஐகான் கிடைக்கும். பின் சற்று நேரத்தில் மற்ற ஐகான்கள் கிடைக்கும். இதனைத் தவிர்க்கக் கீழ்க்காணும்படி செட் செய்திடவும்.

  1. முதலில் My Computer ஐகானில் டபுள் கிளிக் செய்து அதனைத் திறக்கவும்.

  2.பின் Tools மெனுவில் கிளிக் செய்து, அந்த மெனுவில் Folder Options என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. Folder Options என்பதன் கீழ் View என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. அதில் உள்ள முதல் பாக்ஸில் "Automatically search for network folders and printers" என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

  அதன் பின் Apply என்பதில் கிளிக் செய்து, OK யில் என்டர் தட்டி வெளியேறவும். இதன்பின் உங்கள் மை கம்ப்யூட்டர் திரை தோன்றுவது மிக வேகமாக நடைபெறும்.


  கேள்வி: ஷார்ட் கட் கீகள் ஆபீஸ் 2007 தொகுப்பில் உள்ளனவா? ரிப்பன் இன்டர்பேஸ் இதில் உள்ளதால் இந்த சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் நான் வேர்ட் 2003 பயன்படுத்தி வந்த போது நிறைய ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறேன். அவை இங்கு பயன்படுமா?

  –கே. செல்வகுமாரி, மதுரை

  பதில்: ஆபீஸ் 2007 தொகுப் பிலும் நிறைய ஷார்ட் கட் கீ தொகுப்புகள் பயன்பாட்டில் உள்ளன என்று கேட்டால் நீங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவீர்கள். ஏறத்தாழ நீங்கள் வேர்ட் 2003ல் பயன்படுத்திய பெரும்பாலான ஷார்ட் கட் கீகள் இதிலும் பயன்படும்.

  எடுத்துக் காட்டாக கண்ட்ரோல் + ஐ அழுத்தினால் எழுத்துகள் சாய்வாக அமையும்; கண்ட்ரோல் + யு அழுத்தினால் அடிக்கோடு கிடைக்கும். அதே போல வேர்ட் 2003ல் இருந்தது போல மெனு கட்டளைகளை ஆல்ட் கீயுடன் அதற்கான எழுத்திற்கான கீயுடன் அழுத்தி நிறைவேற்றலாம்.

  எடுத்துக் காட்டாக Alt + F அழுத்தினால் பைல் மெனு கிடைக்கும். அதே போல புதிய தொகுப்பில் ரிப்பன் தரும் கட்டளைகளை Alt+R அழுத்திப் பெறலாம்.

  ஆபீஸ் 2007ல் ஆபீஸ் ரிப்பனுக்கு வலது பக்கமாக உள்ள குயிக் அக்செஸ் டூல்பாரில் கிடைக்கும் ஷார்ட் கட் ஐகான் களை நாம் எண்களுக்கான கீகளை அழுத்திப் பெறலாம். டேப் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்த பின்னர், ரிப்பனில் லேபில்கள் தோன்றும். இவற்றின் மூலம் பல்வேறு கட்டளைகளை இயக்கலாம்.


  சில கட்டளைகளை இயக்க, ஒன்றுக்கு மேற்பட்ட கீகளை இயக்க வேண்டியதிருக்கும். அப்போது லேபிலில் ஒன்றுக்கு மேற்பட்ட கீகள் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, தேர்ந்தெடுக் கப்பட்ட டெக்ஸ்ட் ஒன்றின் எழுத்து அளவைக் கூட்ட Alt கீ அழுத்திய பின்னர் ஏ கீயைஅழுத்த வேண்டும்.

  இப்போது ஹோம் டேப் கிடைக்கும். அடுத்து எப் கீ அழுத்திப் பின் ஜி கீ அழுத்தவும். இப்போது பாண்ட் அளவு உயரும். ஆபீஸ் 2007 ஷார்ட் கட் கீ தொகுப்புகள் குறித்த விளக்கத்தினை கீழ்க்காணும் மைக் ரோசாப்ட் தளத்தில் காணலாம்.

  www.tinyurl.com/ 36tbh8. . இந்த தளத்தில் 20 நிமிடங்கள் விளக்கப் படம் கிடைக்கும். இதனை இன்டர் நெட் எக்ஸ்புளோரரில் பார்க்கவும். பயர்பாக்ஸில் இதன் ஆடியோ சரியாகக் கேட்பதில்லை.ஷார்ட் கட் கீ தொகுப்புகள் குறித்த மாற்றங்களை அறிய www.tinyurl. com/2qaftz என்ற தளத்திற்குச் செல்லவும்.


  கேள்வி: நான் புதிதாகப் பெற்ற கம்ப்யூட்டரில் விண்டோஸ் விஸ்டா உள்ளது. எக்ஸ்பி சிஸ்டம் ஷட் டவுண் செய்திட முன்பு நீங்கள் கொடுத்த ஷார்ட் கட் கீயினை அமைத்திருந்தேன். விஸ்டாவிற்கு எப்படி அமைப்பது என்று உதவவும்.

  –சீ. தனுஷ்கோடி, சென்னை


  பதில்: உங்களைப் போல பல வாசகர்கள் கேட்டுள்ளனர். கம்ப்யூட்டர் மலரில் எக்ஸ்பிக்கு மட்டும் தந்துவிட்டு, விஸ்டா விற்குத் தரவில்லையே என்று குற்றம் சாட்டியவர்களும் பலர் உள்ளனர். இதோ அந்த வழி: முதலில் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும்.

  கிடைக்கும் மெனுவில் New என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shortcut ஆப்ஷனில் கிளிக் செய்க. பின் New Shortcut விஸார்ட் கிடைக்கும் வரை காத்திருக்கவும்.

  இந்த விஸார்டில் உங்கள் புதிய ஷார்ட் கட் எங்கிருந்து உருவாக்க வேண்டும் எனக் காட்டுமாறு ஒரு நீள விண்டோ கிடைக்கும். இதில் shutdown s t 01 என டைப் செய்திடவும். அடுத்து Next பட்டனில் கிளிக் செய்து இந்த வேலையை முடிக்கவும்.


  இவ்வாறு ஷார்ட்கட் உருவாக்கும் வேலையை முடித்தபின்னர், டெஸ்க்டாப் ஸ்கிரீனில் புதியதொரு ஐகானை நீங்கள் பார்க்கலாம். இல்லை என்றால் நீங்கள் டைப் செய்த சொற்கள் மற்றும் எழுத்துகளில் ஏதேனும் விடுதல் அல்லது அதிகப்படியான ஸ்பேஸ் விட்டிருக்கலாம். மீண்டும் சரியாகச் செயல்படவும்.


  கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் நம் சொற்களில் உள்ள பிழைகளைத் திருத்த, அதுவே சிகப்பு கோடுகளைக் காட்டி, திருத்தச் சொல்கிறது. ரைட் கிளிக் செய்து திருத்துகிறோம்.

  ஆனால் அக்ரோனிம் (Acronym) எனப்படும் சுருக்குச் சொற்களை நான் என் பாட சம்பந்தமாக, அதிகம் பயன்படுத்துகையில் அதனை ஏன் தவறாகக் காட்டுகிறது என்று புரியவில்லை. இந்த மாதிரி சொற்களை வேர்ட் பிழை என்று காட்டாமல் இருக்க முடியுமா?


  –சி. அழகம்மை, காரைக்குடி

  பதில்: வேர்ட் டாகுமெண்ட்டை எடிட் செய்கையில், குறிப்பாக உங்களைப் போன்ற மாணவியர்கள் எடிட் செய்கையில் சரியான சொற்களுக்கு சிகப்பு கோடுகள் வந்தால், சற்று எரிச்சலாகத்தான் இருக்கும். அதற்கான மருந்து வேர்ட் தொகுப்பில் சில மாற்றங்கள் செய்வதில் இருக்கிறது.


  எப்படி இந்த மாற்றங்களை மேற்கொள்வது என்று பார்ப்போமா? அதற்கு முன் உங்களுக்கு உதவும் வகையில் சில ஆலோசனையும் கூறுகிறேன்.
  முதலில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்குச் சொல் இருந்தால் அதனை உங்கள் கம்ப்யூட்டரில் தரப்பட்டுள்ள Custom Dictionary சேர்க்கச் சொல்லிவிடலாம்.

  அந்த சொல்லின் மீதாக ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Add to Dictionary என்பதில் கிளிக் செய்தால், அந்த சொல் டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுவிடும். பின் அந்த குறிப்பிட்ட சொல்லின் கீழ் சிகப்புக் கோடு வராது. இந்த வகையில் நீங்கள் அடிக்கடி உங்கள் பாடத்திற்கெனப் பயன்படுத்தும் சொற்களை டிக்ஷனரியில் சேர்த்துவிடலாம்.

  ஆனால் இது போல நிறைய வெவ்வேறு சுருக்குச் சொற்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் அதற்கு வேறு வழி உள்ளது. டூல்ஸ் கிளிக் செய்து பின் கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். பின் பல டேப்களுடன் ஒரு விண்டோ கிடைக்கும். இதில் Spelling and Grammar என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

  இந்த விண்டோவில் ஐந்தாவதாக Ignore words in Upper Case என்று இருக்கும். இதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனிமேல் உங்கள் சுருக்குச் சொற்களின் கீழே, ஆசிரியர் போடுவது போல சிகப்புக் கோடுகள் கிடைக்காது.


  இதுவே ஆபீஸ் 2007 தொகுப்பாக இருந்தால், Office பட்டன், பின் Prgograms Office Button என வரிசையாகக் கிளிக் செய்து அதில் proofing கேடகிரியைத் தேர்ந்தெடுக்கவும். இதிலும் Ignore words in Upper Case என்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


  கேள்வி: நான் விரும்பும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதனை எப்படி இணைப்பது?

  –ஆர்.கே. கலா ராணி, திண்டிவனம்

  பதில்: முதலில் உங்கள் புரோகிராம் இருக்கும் இடத்திற்கு ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் பட்டன்களை அழுத்திச் செல்லுங்கள். பின் அந்த புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Pin to Start menu என்பதில் கிளிக் செய்திடவும்.

  பின் இதனை முடித்து வந்து ஸ்டார்ட் மெனுவைக் காணவும். நீங்கள் விரும்பிய புரோகிராம் அதன் பட்டியலில் ஒன்றாக இருக்கும். இப்படி எந்த புரோகிராமினையும் கொண்டு வரலாம். கொண்டு வந்த புரோகி ராமினை நீக்குவதைப் பார்ப் போமா! மீண்டும் நீக்க வேண் டிய புரோகிராமினை ஆல் புரோகிராம் லிஸ்ட்டில் கண்டறிந்து,

  அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில்Unpin from Start menu என்பதில் கிளிக் செய்தால், புரோகிராம் ஸ்டார்ட் மெனு பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஆனால் கவலை எதுவும் பட வேண்டாம். கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த இடத்தில் புரோகிராம் அப்படியே இருக்கும்.

  நன்றி.தினமலர்.செப்டம்பர் 27,2009.

 12. #36
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,008
  Downloads
  120
  Uploads
  0
  கேள்வி: கம்ப்யூட்டர் வாங்குவது குறித்து எழுதுகை யில் கம்ப்யூட்டர் ப்ராசசர் டூயல் கோர் (Dual Core) ஆக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதில் டூயல் கோர் என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது?

  –கா.செந்தமிழ்ச் செல்வி, சின்னமனூர்

  பதில்: நல்ல கேள்வி. பல மாணவர்கள் இதனை தொலைபேசி வழியாகவும் கேட்டுள்ளனர். எனவே சற்று விரிவான பதிலைத் தருகிறேன்.

  இன்டெல், 2007 களில் இந்த டூயல் கோர் குறித்து பிரபலமாக விளம்பரம் செய்தது. இந்த ப்ராசசரினால் ஒரு கம்ப்யூட்டரின் திறன் பல மடங்கு பெருகு வதாகவும் அறிவித்திருந்தது. முன்பு கம்ப்யூட்டர் ஒன்றில் ஒரே ஒரு ப்ராசசர் தான் இருக்கும். அதுவே கம்ப்யூட்டர் மேற் கொள்ளும் அனைத்து வேலை களையும் கவனித்து வந்தது.

  இதற்குப் பதிலாக இரண்டு ப்ராசசரை ஒரே சிப்பில் இணைத்து இன்டெல் கொண்டு வந்தது. இதனால் கம்ப்யூட்டரின் திறன் இரு மடங்கு ஆனது. வேகமும் கூடியது. கம்ப்யூட்டரில் நீங்கள் இயக்கும் ஒவ்வொரு அப்ளி கேஷனும் ஒரு ப்ராசஸ் (Process) என அழைக்கப் படுகிறது.

  வழக்கமான பழைய ப்ராசசரில் ஒரு செயல்பாடு ஒரு இழை செயல்பாடாகச் சென்று கொண்டே இருக்கும். இப்போது இரு ப்ராசசர் இருப்பதனால் இந்த செயல்பாடு சற்று வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப் படுகிறது.

  இங்கு இன்டெல் என்று நான் கூறியது உங்களுக்குத் தெரிந்த ஒன்றைக் கூறுவதற்காகத் தான். ஏ.எம்.டி. நிறுவனமும் பல டூயல் கோர் ப்ராசசர்களை வெளியிட்டுள்ளது.


  கேள்வி: ஒர்க் புக் ஒன்றைத் தயார் செய்த போது, அன்றாட கணக்கு வழக்குகளை தேதிவாரியாக அறிய, தேதியை அமைக்க வேண்டி தேதி தெரியவேண்டிய செல்லில் =now என டைப் செய்தேன். ஆனால் ஒவ்வொரு முறை திறந்தவுடன் அன்றைய நாள் தான் காட்டப்படுகிறது.

  கணக்கு வழக்குகளை மேற்கொண்ட நாள் காட்டப்பட வில்லை. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இப்போது எழுத்தில் அமைத்து வருகிறோம். ஏன் இந்த தவறு ஏற்படுகிறது?


  –கா.உதயமூர்த்தி, விருதுநகர்

  பதில்: பார்முலா கொடுக்கும் முன் அது எந்த விளைவை ஏற்படுத்தும் எனத் தெரிந்து கொடுக்க வேண்டும், நீங்கள் கொடுத்த பார்முலா ஒர்க் ஷீட்டைத் திறக்கும் நாளினைக் கம்ப்யூட்டரி லிருந்து பெற்றுக் காட்டும்.

  இதற்குப் பதிலாக நீங்கள் தேதி அமைத்தது மாறாமல் இருக்க வேண்டும் என்றால் கண்ட் ரோல் + செமிகோலன் கீகளை அழுத்துங்கள். அப்படியே அதனை சேவ் செய்து பின் ஒரு நாளில் திறந்து பாருங்கள். என்று சேவ் செய்தீர்களோ அந்த நாளின் தேதி மாறாமல் இருக்கும். சரியா!


  கேள்வி: என்னுடைய ஸ்கிரீன் மற்றும் சிஸ்டம் பைல்களில் காட்டப்படும் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் ஆகியவற்றைப் பெரிதாகப் பார்க்க விரும்பு கிறேன். இதற்கான செட்டிங்ஸ் எங்கு உள்ளது?

  –எஸ். செல்வகுமார், மதுரை


  பதில்: உங்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என எழுதி உள்ளீர்கள். அதில் Start அழுத்திப் பின் Control Panel செல்லவும். இதில் Classic View இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

  பின் Display ஐகானில் டபுள் கிளிக் செய்திடுங்கள். பின் கிடைக்கும் விண்டோவில் Settings என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். பின் அந்த விண்டோவில் உள்ள Advanced என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

  அதன்பின் கிடைக்கும் விண்டோவில் General என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எத்தனை ஈ.க.ஐ. அளவில் ஐகான்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிளிக் செய்தால் Normal, Large, Custom என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

  இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்தவுடன், கம்ப்யூட்டரை நீங்கள் ரீஸ்டார்ட் செய்திடச் சொல்லி செய்தி கிடைக்கும். யெஸ் கொடுத்தால், கம்ப்யூட்டர் ரீபூட் செய்யப்படும். இப்போது ஐகான்கள் மற்றும் படங்கள் எல்லாம் பெரிதாகக் கிடைக்கும்.

  இனி நீங்கள் எழுத்தின் அளவையும் மாற்ற விரும்பினால், முன்பு செய்ததைப் போல டிஸ்பிளே ஐகான் வரை செல்லவும். அதன்பின் அப்பியரன்ஸ் டேபில் கிளிக் செய்து பாண்ட் சைஸ் ட்ராப் டவுண் கட்டத்தினைப் பெறவும்.

  இங்கு நார்மல், லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்ற மூன்று அளவுகள் கிடைக்கும். பின் ஓகே பட்டன் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பப்படி எல்லாமே புதிய மாற்றங்களுடன் இருக்கும்.


  கேள்வி: இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் மவுஸ் ஒன்றின் செயல்பாட்டினை மாற்ற முடியும் என்று என் நண்பன் கூறுகிறார். இதனை எப்படி மாற்றுவது? நீங்கள் சொல்ல முடியுமா?

  –கா. அருணாச்சலம், கோயம்புத்தூர்


  பதில்: விண்டோஸ் 98 தொகுப்பிலிருந்து இந்த வசதியை மைக்ரோசாப்ட் தந்து வருகிறது. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாகக் கூறி உள்ளதால் அதற்கேற்ற செட்டிங்ஸ் பார்க்கலாம்.

  Start பட்டன் அழுத்தி Control Panel செல்லவும். இது Category View –வில் இருப் பதனை உறுதி செய்திடவும். இந்த வியூவில் Printers and Other Hardwares என்று ஒரு இடம் இருக்கும். அங்கே பிரிண்டர் மற்றும் மவுஸ் இணைந்து இருப்பது போல ஐகான் தென்படும்.

  இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில் மவுஸ் ஐகான் மீது மீண்டும் டபுள் கிளிக் செய்திடவும். இப்போது Mouse Properties என்று ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் டேப் Button என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், அதில் மவுஸ் பட்டன்களை செட் செய்திடலாம்.

  முதல் பிரிவில் Button Configuration என்று இருக்கும் இடத்தில் பிரைமரி / செகண்டரி கீகளை மாற்ற Switch Primary and Secondary Buttons என்று இருக்கும். இதில் சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி வழக்கமாக அனைவரும் மவுஸில் வலது கை வைத்து இயக்குவதனை இடது கையால் ஏற்படுத்தலாம்.

  இதுவரை இடதுபட்டனில் என்ன என்ன செயல்பாடு மேற்கொண்டீர்களோ அவற்றை எல்லாம் வலது பட்டனிலும், வலது பட்டனில் மேற்கொண்ட தனை இடது பட்டனிலும் மேற் கொள்ளலாம்.


  கேள்வி: பவர்பாய்ண்ட் பிரசன் டேஷன் அடிக்கடி பயன்படுத்து கிறேன். வெகு நாட்களாக ஒரு குழப்பம் உள்ளது. என் உடன் பணி புரிபவர்களும் இதனைத் தீர்க்க முடிவதில்லை.

  அதாவது புல்லட் பாய்ண்ட்டுடன் டெக்ஸ்ட் அமைக்கும்போது, புல்லட் சைஸுக்கும், டெக்ஸ்ட் சைஸு க்கும் ஒத்துப் போகவில்லை. இவை இரண்டை யும் ஒருங்கி ணைக்கும் வகையில் அமைக்க முடிவதில்லை. இது ஏன்? தீர்வு உள்ளதா?


  –என்.சிதம்பரமூர்த்தி, பொள்ளாச்சி


  பதில்: நல்ல கேள்வி. வெகுநாட்களாக எனக்கும் இந்த பிரச்சினை இருந்து வருகையில் ஒரு மாணவர் எனக்கு இதற்கான வழி சொன்னார். வழியையும் மாணவரையும் இன்னும் நினைவு வைத்திருக்கிறேன். இங்கு புல்லட் அல்லது நம்பர் ஆகிய இரண்டில் ஒன்றை அட்ஜஸ்ட் செய்வ தற்கான வழியைக் கண்டறிய வேண்டும்.

  எனவே புல்லட் அண்ட் நம்பரிங் என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே Format மெனு சென்று அங்கு Bullets and Numbering என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் நீங்கள் எதனைத் திருத்தி அமைக்க இருக்கிறீர் களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

  இதில் புல்லட்டட், நம்பர்டு என்ற இரண்டு பிரிவுகள் இருக்கும். எடுத்துக் காட்டுக்கு புல்லட்டட் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக் கவும். வரிசை யாகப் பல புல்லட்கள் வகை கள் இருக்கும். இவற்றிற்குக் கீழாக சைஸ், கலர், % ஆப் டெக்ஸ்ட் என்று இருக்கும்.

  இதில் சைஸ் என்பதை நமக்கு ஏற்கனவே இருக்கும் சைஸி னை அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்பதைப் பொறுத்து மாற்றவும். இதனை 25 முதல் 400 வரை வைக்கலாம் என்று எண்ணுகிறேன். மாற்றியபின் ஓகே கிளிக் செய்து வெளியே செல்லவும்.

  இனி மீண்டும் டெக்ஸ்ட் மற்றும் புல்லட் அல்லது நம்பர் மற்றும் டெக்ஸ்ட் வைத்துப் பார்க்கவும். அளவு சரியாக இருந்தால் விட்டு விடவும். கூடவோ குறைவாக வோ இருந்தால், மீண்டும் அதற்கேற்ற வகையில் மாற்றவும்.


  கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில் வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் டாகுமெண்ட்டைச் சுற்றி அதன் மார்ஜின் அளவில் கோடு போட்டு கட்டம் தெரிகிறது. ஆனால் என் கம்ப்யூட்டரில் இல்லை. எம்.எஸ்.ஆபீஸ் இன்ஸ்டலேஷனில் பிரச்சினை இருக்குமா? எப்படி நிவர்த்தி செய்யலாம்?

  –கே.எஸ். மஹாலஷ்மி, சோழவந்தான்


  பதில்: இன்ஸ்டலேஷனில் பிரச்சினை இல்லை. செட்டிங்ஸ் அதற்கேற்றபடி அமைக்கவில்லை. கீழே தரப்பட்டுள்ள வகையில் செட் செய்திடவும்.

  டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் View திறந்து Print Layout பிரிவில் கிளிக் செய்திடுங்கள். பின் மெனுவில் Tools பிரிவில் உள்ள Options மீது கிளிக் செய்து வரும் விண்டோவைக் காணவும். அதில் View என்ற டேப்பின் கீழாக Print and Web Layout options என்று இருக்கும் இடத்தில் Text Boundaries என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்து வெளியேறவும்.

  இனி டாக்கு மெண்ட் சுற்றிலும் காம்ப வுண்ட் சுவர் எழுப்பியது போல மார்ஜின் கோடுகளுடன் காட்சி அளிக்கும்.


  கேள்வி: பைல் வியூ பார்க்கையில் தம்ப் நெயில் படங்கள் ஏன் சிறிதாகவே அமைகின்றன. பாண்ட் செட்டிங் போல எப்போதும் அல்லது வேண்டுகின்ற போது பெரிதான அளவில் அமைக்க முடியுமா?

  –கே. ஷ்யாம் சுந்தர், கோயம்புத்தூர்


  பதில்:தம்ப் நெயில் படங்கள் சிஸ்டத்தில் அமைத்துள்ளபடி நமக்குக் கிடைக்கின்றன. இவற்றை செட்டிங்ஸ் மூலம் மாற்ற முடியாது. நாம் விரும்பும்போது மட்டும் பெரிய அளவில் பெறவும் முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு.


  மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் TweakUI என்னும் யுடிலிட்டி சாப்ட்வேர் தொகுப்பினை www.microsoft.com/windowsxp/ downloads/powertoys/xppowertoys .mspx என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொண்டு கம்ப்யூட்டரில் பதிக்கவும். பின்னர் இத்தொகுப்பை இயக்கவும்.

  அதன் பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி வியூ என்பதில் தம்ப்நெயில் என்பதை கிளிக் செய்தால் இங்கு இதன் அளவை மாற்றும் வசதி கிடைக்கும். 32 முதல் 256 பிக்ஸெல் வரை வேண்டும் அளவில் இதனை அமைக்கலாம்.

  முதலில் எந்த அளவு எப்படி இருக்கும் என்பதனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கையில் பட அளவு 96 பிக்ஸெல் அளவில் இருக்கும். 256 x 256 என்பது இதன் ஏழு மடங்கு பெரிதாகும். எனவே உங்களுடைய விருப்பத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

  நன்றி.தினமலர் 11/10/09
  Last edited by நூர்; 12-10-2009 at 06:34 PM.

Page 3 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •