வசந்த் செந்திலின் இரண்டாம் கவிதை தொகுப்பு..அருமையான சில கவிதைகள் இங்கே உங்களுக்காக..ஏற்கெனவே இவரின் சில கவிதைகளை சில வாரங்களுக்கு முன்பு கொடுத்திருந்தேன்..

புத்தகச்சந்தையில் முதலில் இவர் புத்தகம் தான் வாங்கினேன்..


"எத்தனை முறை தட்டினாலும்
திறப்பதில்லை சில கதவுகள்

நகர் முழுக்க
இந்த கதவுகளைத் தட்டிப் பார்த்துவிட்டு
என்றோ ஒரு நாள்
தாகத்தில் நா வறண்டு
செத்துவிட போகிறார்
எல்லாரையும் காக்கும் கடவுள் "


"ஒரு விபத்து
நடந்துவிட்டது

ஒரு கணம்
தாமதித்த பின்
ஒவ்வொருவரின்
அலுவலும் தொடர்ந்தது

அன்றைய இரவு
ஒரு கணத் தாமத்தில்
எல்லாரும் உறங்க ஆரம்பித்தார்கள்"

"பின் மண்டையில்
துப்பாக்கியை அழுத்தி

அகாலத்தில்
அம்மாவின் மார்வு வலிக்கு
மருந்து வாங்கச் சென்ற பெண்ணை
மூச்சடைக்க கற்பழித்தவனை
சுட்டுக்கொல்

ஒரு கவிதை எழுதுகிற
நேரம்தான் அதற்கு ஆகும்"