Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    20 Jan 2009
    Location
    இலங்கை,கொழும்பு
    Posts
    225
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0

    இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி!

    M.S.தோனியின் இந்திய அணிக்கு – முன்னர் மார்க்டெய்லர்,ஸ்டீவ்வோவின் அவுஸ்திரேலியா அணிக்கு இருந்த அதே வியாதி பீடித்துள்ளது. COMPLACENCY..


    தொடரை வென்றவுடன் தொடர் முடிவில் மாற்றமேதும் ஏற்படுத்தாத கடைசிப்போட்டியை Dead rubber/Dead match என்று அழைப்பார்கள். இப்போதைய அவுஸ்திரேலிய அணி வெற்றியொன்றைப் பெறவே தட்டுத்தடுமாறி வந்து இப்போதுதான் வெற்றிகளைத் தொடர்ந்து சுவைக்க ஆரம்பித்துள்ள அணி. எனினும் முன்னைய சம்பியன் அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் போன்ற தொடர்களில் வரிசையாக எல்லாப் போட்டிகளையும் வென்றபின்னர்,தொடர் தமது வசமான பின்னர்,கடைசிப் போட்டியில் கொஞ்சம் கவனயீனமாக அல்லது அக்கறையில்லாமல் விளையாடித தோற்பது வழமையானது.

    இதனால் அவுஸ்திரேலியா white wash செய்யாமல் விட்ட தொடர் பலப்பல! எனினும் வேறு பெரிய இழப்புக்கள் ஏற்படவில்லை!

    ஆனால் இந்திய அணி அண்மையில் இரண்டு dead rubberகளை இழந்தது. இலங்கையில் வைத்து முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்றபின்னர் ஐந்தாவது போட்டியில் தோற்றது. அந்தப் போட்டியை வென்றிருந்தால் ICC ஒருநாள் தரப்படுத்தலில் முதலாமிடத்தைப் பிடித்திருக்கலாம்.

    அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாகப் பத்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற மைக்கல்லையும் கோட்டை விட்டார்கள்.


    இலங்கையில் வைத்து White wash அடிப்படையில் ஒருநாள் தொடரை முதல் தடவையாக வென்ற பெருமையையும் பெறமுடியாமல் போனது.

    இப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.

    இதனால் இம்முறை இந்தியா இழந்திருப்பது ICC யின் தரப்படுத்தலில் முதலாம் ஸ்தானத்தை மட்டுமல்ல – பெறுமதிவாய்ந்த பணப்பரிசையும் தான்!

    இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்துள்ள ஒராண்டுக் காலக்கட்டத்தில் டெஸ்ட்,ஒருநாள் தரப்படுத்தல்களில் முதலிடம் பெறும் அணிகளுக்கும் பெரும் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

    சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் தோல்வியுற்றதுடன் இந்தியாவுக்கு இன்னமும் எஞ்சியுள்ள ஒருமாதத்துக்குள்ளே முதலிடத்தைப் பெறும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. 3இடம் தான்!

    முதலிடத்துக்கான பணப்பரிசு இனி அவுஸ்திரேலியாவுக்கு அல்லது தென் ஆபிரிக்காவுக்குத் தான்1

    தொடர்ந்து வெற்றிகளை சுவைத்து வரும் இளமையும் துடிப்பும் மிக்க இந்திய கிரிக்கட் அணியிடம் complacency என்பது இல்லை என்று அடிக்கடி தோனி சொல்லி வருகிறார். ஒவ்வொரு போட்டியுமே வெல்லப்படவேண்டியவை என்றும் வலியுறுத்தி வருகிறார்.

    நியூசிலாந்திடம் தோற்றுப்போன போட்டியிலும் கூட தினேஷ் கார்த்திக்,ப்ரக்யான் ஒஜ்ஹா,இர்பான் பதான் போன்றோருக்கான பயிற்சி வாய்ப்புக்கள் கூட வழங்கப்படாமல் முழுமையான அணியே விளையாடிருந்தது. சச்சின் டெண்டுல்கர் உபாதை
    காரணமாக விளையாடவில்லை.

    தோல்வியும் வெற்றியும் சகஜமே.ஆனாலும் கூட இவ்வாறான முக்கியமான,வெல்லப்பட வேண்டிய போட்டிகளில் தோற்பது அதுவும் தொடர்ச்சியாகத் தோற்பது ஒரு தொடர் வியாதியாகிவிடக் கூடாது.

    முன்பு ஒருகாலம் இந்திய கிரிக்கட் அணிக்கு ஒரு வியாதி இருந்தது.சிறப்பாக விளையாடி வந்தாலும் எந்தவொரு தொடரினதும் இறுதிப்போட்டியில் (final) தோற்றுவிடும். (இங்கிலாந்தின் Nat west cup,1998 ஷார்ஜா கிண்ணம்,2002 மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது.)

    M.S.தோனியின் தலைமை அதை மாற்றியமைத்து,உத்வேகமான எந்த சவாலையும் எதிர்கொண்டு எந்த அணிக்கெதிராகவும் எந்த சூழ்நிலையிலும் எங்கேயும் வெற்றி பெறும் ஒரு அணியாக மாற்றியிருந்தாலும்,இப்போது தொடங்கியுள்ள இந்த COMPLACENCY வியாதி பயங்கரமானது அணியின் எதிர்காலத்தை சிதைத்துவிடக் கூடியது.

    கிரிக்கட் ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பதனால் இந்த வியாதியை ஆரம்பித்திலேயே குணப்படுத்தாவிட்டால் பின்னர் விளைவுகள் குணப்படுத்த முடியாமல் பல தோல்விகளைத் தந்துவிடும்!

    http://loshan-loshan.blogspot.com/20...post_7542.html
    A.R.V.LOSHAN

    www.arvloshan.com

    லோஷன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    இந்தியா அணிக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்த கங்குலி தலைமையில் கூட பல இறுதிப்போட்டிகளில் தோற்று போனது.ஒருவேலை புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தோற்று இருந்தாலும் ஏற்று கொள்ளலாம்.இந்த வியாதி மாற்றப்பட வேண்டிய விசயம் தான்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வித்தியாசமான கோணத்தில் நல்லதொரு அலசல் அண்ணா , dead rubber போட்டிகளை இழப்பது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாதென பலர் வாதாடினாலும் முதன்மை அணியாக தம் இடத்தினை தக்க வைக்க அவை நன்கு பயன்படுத்தப் பட வேண்டியவையே...

    அப்படியே புதிய, மற்றும் ஃபோர்மில் இல்லாதிருந்து மீண்டும் ஃபோர்முக்கு வந்த வீரர்களைப் பரீட்சிக்கும் களமாகவும் பயன்படுத்தலாம், இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் தினேஸ் கார்த்திக்கை இந்திய அணி இறக்கிப் பார்த்திருக்கலாம்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அருமையான அலசல்.

    மன்றத்தில் நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

    இன்றைய காலக்கட்டத்தில் நிறைய போட்டிகளின் முடிவு முன்னமே தீர்மானிக்க்ப்படுகிறது. அதற்கு காரணம் பணம், உள்ளூர் மக்களை மீண்டும் மைதானத்திற்கு வரவழைப்பது, தொலைக்காட்சியில் பார்க்க வைப்பது போன்றவை.

    இந்திய அணிக்கு இரண்டாவது, மூன்றாவது இடமே போதும் என்று முடிவு செய்திருப்பாங்க. ஐசிசி கொடுக்கும் காசு எல்லாம் சும்மா, பிசாத்து காசுன்னு நினைச்சிருப்பாங்க.
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by பரஞ்சோதி View Post
    இந்திய அணிக்கு இரண்டாவது, மூன்றாவது இடமே போதும் என்று முடிவு செய்திருப்பாங்க. ஐசிசி கொடுக்கும் காசு எல்லாம் சும்மா, பிசாத்து காசுன்னு நினைச்சிருப்பாங்க.
    ஆமா, இப்படியும் இருக்குமோ.......!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    தொடரை வென்றவுடன் பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களுக்கும் சந்தர்பம் கொடுக்கவேண்டும் என்று நினைப்பினாலும், தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் முன்னனி ஆட்டக்காரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கவேண்டும் என்ற நினைப்பினாலும் நம்மால் தொடர்ந்து வெல்லமுடியாமல் போய்விடுகிறது. ஆனாலும் இப்படி பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களுக்கும் சந்தர்பம் கொடுத்தால் நன்றாக ஆடுபவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் ஆட முடியாமல் போனால் பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்கள் மேட்ச் ஃபிட்டுடன் இருப்பார்கள் என்பதால் இது ஒரு நல்லதற்கே.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சிறப்பான அலசல். இந்தியா அணிமீதான என் நம்பிக்கைக்கு இன்னும் காலம் வரவேண்டும்.


    ஆரென் அண்ணா..
    பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களை இப்படியான போட்டிகளங்களில் இறக்க வேண்டும். அணியில் இடம்பிடிக்க வேண்டும், தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதால் சிறப்பாக விளையாடுவார்கள். அதைப் பார்த்த ஓய்வு வீரர்கள் தங்கள் இடத்துக்கு ஆபத்து என்ற எண்ணம் மேலிட இன்னும் சிறப்பாக ஆடுவார்கள். இவர்களை இப்படி பயமுறுத்தினால்தான். பெஞ்சு மேலெ ஏற்றிப் பயமுறுத்த முடியாதே.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நல்ல அலசல். பாராட்டுகள்..

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    சிறப்பான அலசல். இந்தியா அணிமீதான என் நம்பிக்கைக்கு இன்னும் காலம் வரவேண்டும்.


    ஆரென் அண்ணா..
    பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களை இப்படியான போட்டிகளங்களில் இறக்க வேண்டும். அணியில் இடம்பிடிக்க வேண்டும், தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதால் சிறப்பாக விளையாடுவார்கள். அதைப் பார்த்த ஓய்வு வீரர்கள் தங்கள் இடத்துக்கு ஆபத்து என்ற எண்ணம் மேலிட இன்னும் சிறப்பாக ஆடுவார்கள். இவர்களை இப்படி பயமுறுத்தினால்தான். பெஞ்சு மேலெ ஏற்றிப் பயமுறுத்த முடியாதே.

    சரியாக சொன்னீங்க அமரன்,

    இது போன்ற போட்டிகளில் இதுவரை துணைத்தலைவராக இருந்தவரை அணியின் தலைமையேற்க சொல்ல வேண்டும்.

    வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படி கொடுக்கும் போது இதுவரை ஆடாத அனைவருக்கும் கொடுப்பது நல்லது.

    இதுவே வருங்காலங்களில் சிறந்த அணியை உருவாக்க உதவும், தர வரிசை எல்லாம் ஓடும் மேகத்தின் தூறல் மாதிரி, அது மாறிட்டே இருக்கும். அது நமக்கு தேவையில்லை தான்.
    பரஞ்சோதி


  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் subashinii's Avatar
    Join Date
    24 Feb 2009
    Location
    TX/CA
    Posts
    118
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    உள்ளூரில் ஒரு அணியை ரொம்ப நோகவைத்தால் பாவமில்லையா??? அதான்..
    அன்புடன் சுபா

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Location
    திருச்சி இப்போது வேலைக்காக சிங்கை
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by loshan View Post
    M.S.தோனியின் இந்திய அணிக்கு – முன்னர் மார்க்டெய்லர்,ஸ்டீவ்வோவின் அவுஸ்திரேலியா அணிக்கு இருந்த அதே வியாதி பீடித்துள்ளது. COMPLACENCY..
    மிக சரியாக சொன்னிங்க இந்திய அணியினருக்கு KILLING INSTINCT எதிரணியை கடைசி வரை புரட்டி எடுப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும் இது தொடர்களில் வெற்றி பெருவதில் மட்டுமில்லை சில சுலபாம ஜெயிக்க வேண்டிய ஆட்டங்களை கடைசி நேர வரை இழுத்தடித்து உச்ச கட்ட* டென்சசனை எகிர செய்துவிடுகிறார்கள்
    Quote Originally Posted by loshan View Post
    இப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.
    இது கொஞ்சம் பரிதாபமான நிலை

    இலங்கையில் உதியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வின்னிங்க் காம்னேஷனை மாற்றி அமைத்து படு தோல்வி கண்டார்கள்

    அதே போல் நீயுசிலாந்தில் நடக்க கூடாது என்று முழு தெம்புடன் களம் இறங்கினார்கள் ஆனால் அதிலும் தோல்வி

    கரணம் தொடர்தான் நம்ம கைக்கு வந்துவிட்டதே என்ற மெத்தனம்
    Quote Originally Posted by loshan View Post
    கிரிக்கட் ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பதனால் இந்த வியாதியை ஆரம்பித்திலேயே குணப்படுத்தாவிட்டால் பின்னர் விளைவுகள் குணப்படுத்த முடியாமல் பல தோல்விகளைத் தந்துவிடும்!
    ஆமாம் இந்த வியதியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் ஒவ்வரு போட்டிடையும் இறுதி போட்டியாக நினைத்து விளையாட வேண்டும் அப்போதுதான் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும்
    Quote Originally Posted by பரஞ்சோதி View Post
    இந்திய அணிக்கு இரண்டாவது, மூன்றாவது இடமே போதும் என்று முடிவு செய்திருப்பாங்க. ஐசிசி கொடுக்கும் காசு எல்லாம் சும்மா, பிசாத்து காசுன்னு நினைச்சிருப்பாங்க.
    பொதுவாகவே போதும் என்ற மனமே... இந்தியர்களுக்கு மேலோங்கி இருக்கும் அத்வும் ஒரு காரணமாக இருக்கலாம்
    -------------------
    என்றும் நட்புடன்
    ஜாக்

    எனது அறிமுகம் உங்களுக்காக

  12. #12
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    பாவம்க விட்டோரியின் முகத்தை பார்க சகிக்கலை...!
    இறக்கம் காட்டின் தோணியை இப்படி சொல்றீங்களே..!

    தோணி நீ ரொம்ப நல்ல..................................வேம்பா
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •