Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: குறும்பட போட்டி- ஆஸ்கார் விருது பெற்ற குறும்படம்

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    குறும்பட போட்டி- ஆஸ்கார் விருது பெற்ற குறும்படம்

    வெல்கம் டு சினிமா (Welcome to Cinema) மாதப் பத்திரிகை நடத்தும் குறும்படப் போட்டி 2009 (இறுதி தேதி: 31-03-2009 மாலை ஐந்து (5) மணி)

    சென்னையை சேர்ந்த வெல்கம் டு சினிமா எனும் மாதப் பத்திரிகை நடத்தும் குறும்படப் போட்டிகளுக்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பரிசுகள்:

    முதல் பரிசு: ரூபாய் 10,000
    இரண்டாம் பரிசு: ரூபாய் 5,000
    மூன்றாம் பரிசு: ரூபாய் 3,000

    நிபந்தனைகள்:

    1. குறும்படங்கள் 30 அல்லது 40 நிமிடங்கள் இருத்தல் வேண்டும்

    2. படைப்புகள் DVD யாக இருத்தல் வேண்டும்.

    3. மையக்கரு, கதைச்சுருக்கம் மற்றும் பணியாற்றிய கலைஞர்களின் விபரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

    4. போட்டியின் நுழைவுக் கட்டணம்: ஒரு குறும்படத்திற்கு ருபாய் 300/- D.D. அல்லது M.O. Welcome to cinema என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு எண்ணிற்கு பணப் பரிமாற்றம் செய்து விட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

    5. திரையிடல் மற்றும் பரிசுகள் நடுவர் குழுவே தீர்மானிக்கும்.

    6. படைப்புகள் திருப்பி தரப்படமாட்டாது. அனுப்பப்பபட்ட படைப்புகள் குறித்து எந்தவித பிரச்சனை எழுந்தாலும் அதற்கு அதன் படைப்பாளிகள் அல்லது போட்டிக்காக அனுப்பி வைப்பவர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான உறுதிமொழி கடிதம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

    7.சர்வதேச போட்டி என்பதனால் எந்த நாட்டில் உள்ளவரும் போட்டிக்கு தங்களது படங்களை அனுப்பலாம்.

    8. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி தேதி: 31-03-2009 மாலை ஐந்து (5) மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    பணப் பரிமாற்றம் செய்ய வேண்டிய வங்கிக் கணக்கு:
    Bank Name: ICICI Bank,
    Account Holder: Welcome to Cinema
    Account No: 602305027641
    Branch: West Mambalam

    குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    Welcome to Cinema
    No. 74, Brindavanam Street, West Mambalam,
    Chennai - 600033.

    தொடர்புக்கு:

    044 65150055, 9884741266.
    Last edited by ரங்கராஜன்; 23-03-2009 at 03:48 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    குறும்படங்கள் மீது எனக்குத் தீராத காதலுண்டு. அந்த வழியில் பயணிக்கும் எண்ணமுமுண்டு. அதற்கான முன்னோட்டமாக அடுத்தடுத்த மாதங்களில் நாலைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு சோதனைப் படம் செய்யும் பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். அந்த நிலையில் இந்த அறிவிப்பு. இதை பொருத்தமான இடத்துக்கு நகர்த்தி சிலகாலத்துக்கு ஒட்டி வைக்கலாமே.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    குறும்படங்கள் மீது எனக்குத் தீராத காதலுண்டு. அந்த வழியில் பயணிக்கும் எண்ணமுமுண்டு. அதற்கான முன்னோட்டமாக அடுத்தடுத்த மாதங்களில் நாலைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு சோதனைப் படம் செய்யும் பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். அந்த நிலையில் இந்த அறிவிப்பு. இதை பொருத்தமான இடத்துக்கு நகர்த்தி சிலகாலத்துக்கு ஒட்டி வைக்கலாமே.
    குறும்பட முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் அமரன்.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாழ்த்துகள் அமரன். வெற்றியாளர் வரிசையில் உங்கள் பெயரைக்காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    குறும்படங்கள் மீது எனக்குத் தீராத காதலுண்டு. அந்த வழியில் பயணிக்கும் எண்ணமுமுண்டு. அதற்கான முன்னோட்டமாக அடுத்தடுத்த மாதங்களில் நாலைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு சோதனைப் படம் செய்யும் பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். அந்த நிலையில் இந்த அறிவிப்பு. இதை பொருத்தமான இடத்துக்கு நகர்த்தி சிலகாலத்துக்கு ஒட்டி வைக்கலாமே.

    நீங்க வெற்றியடைய முன்கூட்டிய வாழ்த்துகள் அமரன்.
    பரஞ்சோதி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    குறும்படங்கள் மீது எனக்குத் தீராத காதலுண்டு. அந்த வழியில் பயணிக்கும் எண்ணமுமுண்டு. அதற்கான முன்னோட்டமாக அடுத்தடுத்த மாதங்களில் நாலைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு சோதனைப் படம் செய்யும் பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். அந்த நிலையில் இந்த அறிவிப்பு. இதை பொருத்தமான இடத்துக்கு நகர்த்தி சிலகாலத்துக்கு ஒட்டி வைக்கலாமே.
    நல்லவங்களுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும்..

    உங்கள சுத்தி நல்லவை இருக்கு..(வேற யாரு.. எங்க உருவத்தில் தான்... ) உங்களுக்குள்ளும் நல்லவையே இருக்கு... நிச்சயம் நீங்க ஜெயிப்பீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு...

    இப்படி செண்டிமெண்டா பேசி உங்க இ-பணத்தை அல்லது அன்பைக் கொள்ளை அடிக்கும் உரிமையும் இந்த தங்கைக்கு இருக்கு... ஹீ ஹீ...

    நல்லவர்கள் சேர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க.. இவ்வகை முயற்சிகள் முக்கியமானவை.. எல்லாருக்கும் அமையாத ஒன்று..

    துவக்கத்துக்கும்.. வெற்றிக்கும் முன் வாழ்த்துகள் அமர் அண்ணா..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    சொல்ல மறந்துட்டேனே.. செய்தி பகிர்வுக்கு நன்றி தக்ஸ்..!!

    அமரண்ணா... நம்ம தக்ஸை வைச்சே படம் எடுக்கலாமே....

    (இன்னும் கொஞ்சம் தக்ஸுக்கு அடி வாங்க வைக்கும் ஆசையில்...)
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    எனக்கும் தான் அமரன் நான் கதை எழுத ஆரம்பித்ததே ஒரு குறும்படத்தை எடுக்க வேண்டும் என்று தான், என்னுடைய முதல் சிறுகதையான வழித்துணையை நான் ஒரு குறும்படமாக தான் எடுக்க நினைத்தேன். அதற்கு அமர்ந்து ஒரு வாரம் சீன்களை அடிக்கி, எந்த இடத்தில் இசை வைப்பது, எந்த இடத்தில் கேமிரா ஆங்கில் வைப்பது என்று எல்லாம் யோசித்து. கீளினாக ஸ்கிரிப்டு எழுதி, டெஸ்டு சூட்டிங் எடுத்து, இன்னும் அதில் அருக்கப்பட இருந்த கோழி தான் வாங்க வில்லை. மற்ற எல்லா வேலையும் செய்தாகி விட்டது. ஆனால் வெட்டியானாக நடிக்க இருந்த என் நண்பன் சூட்டிங்க்கு முன்னாடியே ஆப்பில் ஜூஸ், கேரவான் வேன், கால்ஷீட் பிரச்சனை என்று எதோ எதோ சும்மா தமாஸூக்காக பேசி, சூட்டிங் அடுத்த வாரம் சூட்டிங் போக இருந்த எங்களை சிரிக்க வைத்தே கெடுத்து விட்டான்............... என்னுடைய வழித்துணை வழியில்லாமல் நிற்கதியாக நின்றது. கண்டிப்பாக ஒரு நாள் அதை எடுப்பேன்.

    அமரன் உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், ஒரு சின்ன ஆலோசனை ஒரு காட்சியை பல மாதிரி, பல ஏங்கிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எடிட்டிங்கில் பல விதமான அருமையான யோசனைகள் கிடைக்கும், அது படத்திற்கு இன்னும் மெறுகு ஏற்றும். வாழ்த்துக்கள்.

    அப்புறம் பூமகள் என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே, என்னை வச்சி படம் எடுக்க நீங்கள் ரெடியா தயாரிப்பாளராக?, ஒரு 10000 ரூபாய் (ஐ-கேஷ் இல்லை) மட்டும் போதும் நானே உங்களுக்கு நல்ல குறும்படம் எடுத்து தருகிறேன்,....... எப்படி நம்ம டீலிங்.......................... பூமகள் ஓடாதீங்க ஓடாதீங்க நில்லுங்க, ஒரு 8000....ஒரு 5000........ஒரு 2000..............ஒரு 500.....ம்ம்ம்ம்ம்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பதிவுக்கு நன்றி.... தக்ஸ்..
    பலர் இதனால் பயனடையட்டும்.
    அமரனுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நானும் எனது நண்பனும் சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்தோம் கடைசியில் அது எடிட்டிங் செய்யப்படாமல் அப்படியே வீட்டில் கிடக்கின்றது.

    நல்ல பயனுள்ள செய்தி நானும் மற்றவர்களுக்கு தெரிவித்துவிடுகின்றேன்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by Suuriyan View Post
    நானும் எனது நண்பனும் சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்தோம் கடைசியில் அது எடிட்டிங் செய்யப்படாமல் அப்படியே வீட்டில் கிடக்கின்றது.

    நல்ல பயனுள்ள செய்தி நானும் மற்றவர்களுக்கு தெரிவித்துவிடுகின்றேன்.
    தம்பி சூரியன்

    நீங்களே எடிட்டிங் செய்யலாமே, நிறைய எடிட்டிங் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்குமே. குறும்படத்தை எடுத்து அதை சும்மா போட்டு இருக்காதீர்கள், தூசி தட்டி எடுத்து அதை எடிட் செய்து இந்த போட்டிக்கு அனுப்புங்கள், உங்களுக்கு பரிசு கிடைத்தாலும் கிடைக்கும். முயற்சி தானே வாழ்க்கை
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    ஆஸ்கார் விருது பெற்ற படங்களை கொண்டாடும் அதே வேலையில், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளை தான் நாம் தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் அதில் பல பிரிவுகள் இருக்கிறது. அதில் இந்த திரிக்கு முக்கியமாகப்படுவது குறும்படம்,

    ஆம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றது ஜெர்மனிய நாட்டு படம், இந்த 14 நிமிஷ படத்தை இயக்க அந்த இயக்குனர் தன் வாழ்நாளில் நான்கு வருடம் எடுத்துக் கொண்டாராம். நம்ம மன்றத்தில் இருக்கும் உறவுகள் பலர் குறும்படத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பதினால், இது அவர்களுக்கு ஒரு ஊந்து சக்தியாக இருக்கும், அடுத்த ஆஸ்கார் விருது நம் மன்றத்தில் யாராவது ஒருத்தர் வாங்கினால், இந்த திரியின் நோக்கம் நிறைவேறும். அந்த படத்தை இங்கு தருகிறேன், இந்த திரிக்கு அது சம்பந்தப்பட்டதாக இருப்பதினால்.

    [media]http://www.youtube.com/watch?v=1Hzy689Fzv0&feature=related[/media]

    [media]http://www.youtube.com/watch?v=aO-GqfOiQ2Y&feature=related[/media]
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •