Results 1 to 5 of 5

Thread: பாகிஸ்தான்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் தற்கால நிகழ்வுகள் அபாயகரமாக உள்ளது. கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது.

    அது பற்றிய செய்தி - நன்றி தினகரன்
    ------------------------------------------------
    இஸ்லாமாபாத், மார்ச் 16: லாகூரில் வீட்டுக்காவலை உடைத்து விட்டு, பாகிஸ்தானின் முன்னாள்பிரதமர் நவாஸ் ஷெரீப், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் இஸ்லாமாபாத்துக்கு நேற்று பேரணி புறப்பட்டார். அவருக்கு ஆதரவாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள், போலீசார் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு பேரணியில் செல்கின்றனர். இதையடுத்து பாகிஸ்தானில் பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் (என்) தலைமையில் எதிர்க்கட்சிகளும், வக்கீல்களும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் திரண்டு தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு பேரணி புறப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் நுழைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட உள்ளனர். தலைநகருக்குள் பேரணி நுழைய அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத் வரும் சாலைகள் அனைத்தும் முள்வேலி அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. பார்லிமென்டை சுற்றி சரக்கு பெட்டகங்களை வைத்து தடை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் அழைக்கப்பட்டு உள்ளது.

    லாகூரில் ஷெரீப் நேற்று கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ராவல்பிண்டியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெகிரி-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் தப்பி விட்டார்.
    ஷெரீப் திடீரென்று, வீட்டுக்காவலை உடைத்துக் கொண்டு இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி புறப்பட்டார். அவருடன் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் செல்கின்றனர். ஷெரீப்புக்கு ஆதரவாக பஞ்சாப் மாகாண போலீஸ் டி.ஜி.பி. உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு பேரணியில் செல்கின்றனர். இதனால், பேரணி செல்பவர்கள் உற்சாக மடைந்துள்ளனர். போலீஸ் கைதுக்கு பயந்து, மாறு வேடங்களில் இஸ்லாமாபாத்துக்கு வக்கீல்கள் செல்கிறன்றனர். நேற்று இரண்டு வக்கீல்கள் மணமக்கள் போல வேடமணிந்து சென்றனர். அவர்களுடன் 150 வக்கீல்கள் உறவினர் போல சென்றனர்.

    பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் பஞ்சாப்தான் சக்தி மிக்கது. இந்த நிலத்தில் செல்வாக்கு பெற்றவர்தான் பாகிஸ்தானை ஆள முடியும். பஞ்சாபின் ஒட்டுமொத்த ஆதரவும் ஷெரீப்புக்கு கிடைத்துள்ளதால், பாகிஸ்தான் அரசின் நிலைமை மோசமடைந்துள்ளது. செய்வது அறியாமல் அரசு திகைக்கிறது.

    கட்டுக்கடங்காத கூட்டத்துடன் பேரணி இன்று இஸ்லாமாபாத்தில் நுழைய இருப்பதால், நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து பெரும் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், சர்தாரியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அப்படியரு நிலை உருவானால், ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பிரச்சனை சுமுகமாக முடிந்து விட்டது போலிருக்குதே.

    அரசியலில் இது எல்லாம் சகஜம் போல
    பரஞ்சோதி


  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மீண்டும் பிரச்சனை எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும்
    ----------
    கோரிக்கைகளை ஏற்றதால் தொண்டர்கள் உற்சாகம் நவாஸ் பேரணி பாதியில் ரத்து! பாகிஸ்தான் அரசு பணிந்தது



    இஸ்லாமாபாத், மார்ச் 16-
    கலவர அபாயம் பரவியிருந்த பாகிஸ்தானில் திடீர் திருப்பமாக, நவாஸ் ஷெரீப் கோரிக்கைகளை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் பிரதமர் கிலானி அறிவித்துள்ளார். இதையடுத்து, கண்டன பேரணியை பாதியில் ரத்து செய்தார் நவாஸ் ஷெரீப்.
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவும், முக்கிய பதவிகளை வகிக்கவும் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தடை விதித்து. இதையடுத்து ஷாபாஸ் முதல்வராக இருந்த பஞ்சாப் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. இதனால் தற்போதைய சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை இழந்தார் நவாஸ் ஷெரீப்.
    முன்னாள் அதிபர் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்திரி உள்பட மற்ற நீதிபதிகளை மீண்டும் நியமிக்கக் கோரி தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக செல்ல கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டார் நவாஸ் ஷெரீப். இதையடுத்து பல ஊர்களில் இருந்தும் நவாஸ் கட்சித் தொண்டர்கள் பேரணிக்கு திரண்டு வந்தனர்.

    நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக வக்கீல்களும் பேரணியில் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களையும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி தொண்டர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நிலைமை தீவிரமானதால் நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கைகளை ஏற்கும்படி பிரதமர் கிலானியும், ராணுவ தளபதி கயானியும் வற்புறுத்தினர். ஆனால், அதை ஏற்க அதிபர் சர்தாரி மறுத்து விட்டார்.

    இந்நிலையில், லாகூரில் இருந்து நேற்றிரவு பிரமாண்ட பேரணி புறப்பட்டது. இன்று இஸ்லாமாபாத்துக்குள் பேரணி நுழைய இருந்தது. பேரணியில் கலவரம் வெடிக்கும் அபாயம் உருவாகக் கூடும் என்பதால் அதை முறியடிக்க பாகிஸ்தான் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஸ் ஆகியோரை லாகூரில் 3 நாள் வீட்டுக்காவலில் வைத்தது பாகிஸ்தான் அரசு. தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கானும் பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார். அதனால், அவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இஸ்லாமாபாத் நோக்கி செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. பார்லிமென்ட்டை சுற்றி கன்டெய்னர்களை வைத்து தடை ஏற்படுத்தி இருந்தனர். ரோந்துப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டது.

    லாகூரில் நவாஸ் ஷெரீப் சிறை வைக்கப்ட்டிருந்த வீட்டு முன் ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். தொண்டர்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்த நவாஸ் ஷெரீப், திடீரென வீட்டுக் காவலை உடைத்து பேரணியை தொடங்கினார். தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசாரால் பேரணியை தடுக்க முடியவில்லை. ஷெரீப்புக்கு ஆதரவாக பஞ்சாப் டிஜிபி உள்பட போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர்.

    இந்த கூட்டம் இஸ்லாமாபாத்துக்குள் நுழைந்தால் நிச்சயம் கலவரம் வெடிக்கும் என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி, ராணுவ தளபதி கயானி ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர் பேட்டியளித்த பிரதமர் கிலானி, ÔÔபதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்திரி உள்பட அனைத்து நீதிபதிகளையும் மீண்டும் பணியில் நியமிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் அனைவரும் 21-ம் தேதி பணியில் நியமிக்கப்படுவர். இந்த முடிவு அதிபர் சர்தாரியுடன் ஆலோசித்து எடுக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் மீதான தடையை நீக்கும்படி கோர்ட்டில் பாகிஸ்தான் அரசு மனு செய்யும். நவாஸ் ஷெரீப் எங்களுடன் இணைந்து ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகுக்க வேண்டும்ÕÕ என கூறினார்.

    இதையடுத்து பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்த நவாஸ் ஷெரீப், பேரணியை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த வெற்றியை நவாஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சவுத்திரி வீட்டு முன் திரண்ட வக்கீல்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் உளவுப்பிரிவு தலைவர் ஹமித் குல், ÔÔஇந்த முடிவு ஏற்பட ராணுவம் முக்கிய பங்காற்றியதுÕÕ என கூறினார். திடீர் திருப்பத்தால் பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த பதற்றம் தணிந்துள்ளது.
    நன்றி - தமிழ்முரசு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அரசியல் ஸ்டன்டாகவும் இருக்கலாம்.
    தீவிரவாத குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானை சூழ்ந்து விட்ட நிலையில் புதுசாப் புரட்சி செய்து கவனம் திருப்ப நினைக்கலாம். நாங்கள் இன்னும் வேறேதும் நினைக்கலாம்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.இன்னும் பாக்கிஸ்தான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.அது விரைவில் நடக்கும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •