Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 92

Thread: காதல்னா சும்மாவா? - இறுதி பாகம்

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    காதல்னா சும்மாவா? - இறுதி பாகம்

    (முன்குறிப்பு: நீண்ட நாட்கள் கழித்து எழுதப்பழகுகிறேன். வழக்கமான பாணியில் மொக்கையாக இருக்கும் என நம்புகிறேன். ஆயினும் இந்தக் கதைத் தொடரை முடிப்பேன் என்று நம்பிக்கை இல்லை.)

    பரபரப்பான பெங்களூர் நகரம். வாரநாட்களில் ஒரு நாள். காலையில் வழக்கம் போல் ஏகத்துக்கும் போக்குவரத்து நெரிசல். எரிச்சலுடன் ஊரிலுள்ள கெட்டவார்த்தையை எல்லாம் ஞாபகப்படுத்தி போற வழிக்கு இடைஞ்சலா இருக்கறவனைத் திட்டுகிற லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள். பெட்ரோலியப் புகையை மட்டுமே பிராணவாயுவாய் சுவாசிக்கும் மக்கள், வீட்டிலிருந்து குளித்து புத்துணர்ச்சியோடு கிளம்பினால் அலுவலகம் செல்வதற்குள் மூன்று அல்லது நான்கு முறை முகத்திற்கு மேக்கப் போட்டுவிடும் புழுதியை கிளப்பிவிடும் சாலைகள். இப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு மாதந்தோறும் பேங்க் அக்கவுண்டில் போடப்படும் பணத்திற்காக காலை முதல் மாலை வரை பலியாடு மாதிரி வேலைப்பார்க்கும் ஐ.டி கம்பெனியினர்.

    அந்தச் சாலை முழுதும் ஏகப்பட்ட ஐ.டி. கம்பெனிகளை பதுக்கியபடி விண்ணுயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சுவர்கள் உஷ்ணத்தை வெளியே பரப்பிக்கொண்டிருந்தது. அதில் மூன்றாவது கட்டிடத்துள் நுழைகையில் வரவேற்பறையில் ஒட்ட வைத்த சிரிப்போடு பெண். பக்கத்தில் செக்யூரிட்ட்ய் ஆபிஸர். சம்பிரதாய சடங்குகள் முடிந்து இதோ நம்மை உள்ளே விட்டுவிட்டனர். வளைந்து சென்ற பாதை முடிவில் இதோ லிப்ட். நிறைய மக்கள் காத்திருப்பதனால் நாமும் கொஞ்சம் பொறுப்போம்.
    ஒருவழியா லிப்டுள் நுழைந்தாகிவிட்டது. என்ன இது? டைட்டானிக் பாட்டு மெல்லிய இசையாய் வழிந்தது. மூச்சு திணறுவதற்குள் சேர வேண்டிய ஆறாம் மாடி வந்துவிட்டது. இங்கு நமக்கு வேலையில்லை. நாம் போக வேண்டியது ஏழாம் மாடி. ஏழாம் மாடிக்கு லிஃப்ட் இல்லை. படியில் ஏறி தான் செல்ல வேண்டும். ஏறியாகிவிட்டது. இடப்புறமா வலப்புறமா. அதையும் நான் தான் சொல்லியாக வேண்டுமோ? இடப்பக்கம் விஸ்தாரணமான உணவகம். சாப்பிடலாம். சாட்டலாம். வலப்புறம் சென்றால் ஆங்காங்கே தடுக்கப்பட்டு பொறியாளர்கள் உட்கார க்யூபிக்கல். அதில் மூன்றாவது ஆளாய் உட்கார்ந்திருக்கிறானே அவனைப் பார்க்கத் தான் வந்தோம். அவன் தான் அருண். (அடடா.. எம்மாம் பெரிய பில்டப்பு)….


    “ஆண்பிள்ளைகள் எல்லாம் மரத்தின் மேலிருக்கும் ஆப்பிள் பழம் மாதிரி. சிறந்த பழங்கள் எல்லாம் மரத்தின் உச்சியில் இருக்கும். பெண்கள் அதிக உயரத்திற்கு ஏற மாட்டார்கள். ஏனென்றால் விழுந்தால் அடி பலமாக இருக்கும் என்ற பயம். அதனால் வீணாய் போன தரையில் கிடக்கும் அழுகியஆப்பிள் பழங்களை எடுத்துக் கொள்வார்கள். இதைப் பார்த்து மர உச்சியில் இருக்கும் ஆப்பிள்கள் தன்மேல் தான் ஏதோ தவறிருப்பதாய் எண்ணிக் கொள்ளும். ஆனால் உண்மையில் அவர்கள் சிறந்தவர்கள். சிறந்த ஆண்களைத் தேடும் பெண் மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று நல்ல ஆப்பிளை பறிப்பாள். அதற்கான நேரம் வரும். வெகு சீக்கிரத்திலேயே…”


    கம்ப்யூட்டர் திரையில் தனக்கு வந்த ஒரு ஃபார்வேர்ட் மெயிலை படித்து பெருமிதம் கொண்டது அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. முகத்தில் சின்ன புன்முறுவல். இந்நேரம் தெரிந்திருக்குமே அவனும் மர உச்சியில் உள்ள ஆப்பிள் தான் என்று. அநேகமாய் அவன் தான் அதிக உயரத்தில் இருக்கிறான் போலும். எந்தப் பெண்ணும் அவ்வளவு தூரம் ஏறுவேனா என்கிறாள். இதோ பாருங்க, இதை இன்னும் நாலு பேருக்கு ஃபார்வேர்ட் செய்யப்போகிறான். கேர்ள் ப்ரண்ட் இல்லாத நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பப்போகிறான். அதற்குள் அவனைப்பற்றி பார்த்திடுவோமா?

    அருண். நல்ல பெயர். அதிகம் வைக்கப்படும் பெயர். அதனாலேயே அவன் தனித்துத் தெரியவில்லையோ என்னவோ. அடச்சே. எப்ப பார்த்தாலும் அவன் மேல் பாவப்படுவதும் பச்சாதாபப்படுவதும். கிட்டத்தட்ட ஆறடி உயரம். உயரத்திற்கேற்ற உடம்பு. அழகாக நறுக்கப்பட்ட மீசை. கன்னத்தில் சின்னதாய் பரவியிருக்கும் கிருதா. படியவாரிய தலை. லேசாய் சதைப் போட்ட கன்னங்கள். இதே கம்பெனியில் நீண்ட நாளாய் தூர் வாரிக்கொண்டிருக்கிறான். இன்னும் புதையலை எடுத்த பாடில்லை. சாஃப்ட்வேருமில்லாமல் ஹார்ட்வேருமில்லாமல் யாருக்குமே புரியாத மாதிரி வேலை பார்க்கிறான். அதனால் அவனுக்கு உண்மையிலேயே வேலை இருக்கா இல்லையா என்று நிறைய பேருக்கு நீண்ட நாட்களாய் சந்தேகம்.
    வயசாயிட்டே போகுதுன்னு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் காதல் பண்ணியே தீரணும்னு ஏனோ ஒரு வைராக்கியம்.

    நேரம் காலை ஒன்பது மணியாகப் போகிறது. மனசுக்குள் சின்ன குதூகலம். இனம் புரியாத ஒரு சந்தோஷம்.இதுவரை இப்படி ஆனதில்லை. இன்று மட்டும் இப்படி. இருக்கு காரணம் இருக்கு. இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் ஒரு பெண்ணைப் பார்த்ததும் மனதை தொலைத்து விட்டான். அவளைப் பார்க்கப் போகிறான். அதான் இப்படி.

    ‘இந்த கணேஷும் ஹரீஷும் வந்து சேரமாட்டாங்களா? வெட்டிப்பயலுக. காலாகாலத்துக்கு கம்பெனிக்கு வர வேண்டியது தானே. தூங்குமூஞ்சிப் பயலுவ.’ இப்படி திட்டிக் கொண்டே இந்தக் கதைக்கு முக்கியமான அந்த இரு நபர்களை எதிர்நோக்கியிருந்தான். நேரம் ஆக ஆக அவன் படபடப்பு கூடிக்கொண்டே போனது.

    கணேஷும் ஹரீஷூம் அந்த நேரத்தில்….
    Last edited by மதி; 23-04-2009 at 05:09 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    மதி உண்மையில் சொன்னா உன்னுடைய நடை சூப்பர், இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்திருந்தாய் இந்த நடையை, கூடவே வாசகனும் பயணிப்பது போல இருக்கிறது மதி, இந்த கதையில் நானும் சாலையில் நடந்து வந்து, லிஃப்டு ஏறி, மெயிலை பார்த்து சிரித்து அருமை அருமை என்ன சொல்ல, கதையை சீக்கிரம் தொடர், எனக்கு தொடர் கதைகளில் பொறுமை இல்லை, ஏனென்றால் முடிவை தெரிந்து கொள்ள பயங்கரமா யோசிப்பேன் மண்டை வெடித்து விடும், அதனாலே தொடர் கதை பக்கம் போவது இல்லை, எழுதுவதும் இல்லை. பாதியில் விட்டு விடாதே சூப்பரா இருக்கு, இந்த டெம்போவிலே கொண்டு செல், மதி ஆச்சர்யமான வாழ்த்துக்கள்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆயினும் இந்தக் கதைத் தொடரை முடிப்பேன் என்று நம்பிக்கை இல்லை
    எனக்கு புரிஞ்சுப் போச்சு ... அது தானே.....
    எப்பவும்போல கலக்கலா... ஆரம்பிச்சிருக்கீங்க......
    ஆருணுக்கு குடுக்கிற வர்ணனை எல்லாம் பார்த்தா நான் சமீபத்தில சந்திச்ச ஒருத்தருக்கு மிகச்சரியாப் பொருந்துது.....
    தொடருங்க...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    ஆகா அருமையாக ஒரு கதையை கொடுக்க தொடங்கி உள்ளீர்கள் எதார்த்தமான அதே நேரம் தங்களுக்கே உரித்தான மொக்கையுடம் படைத்து உள்ளீர்கள்

    எங்களது நம்பிக்கையை குலைக்காமல் முழு கதையை படைக்க எனது வாழ்த்துக்கள்

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அடடா அதுக்குள்ள இவ்வளவு நல்ல உள்ளங்கள் இதைப் படிச்சாச்சா..? நன்றி.. நன்றி...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ஆஹா மதி காதல் கதையெழுத ஆரம்பித்து கலக்குகிறார்..
    ஹீரோ பற்றி பில்டப் சூப்பர்.
    ஹீரோ.. நீங்க தானா...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    ஹீரோ.. நீங்க தானா...
    அப்போ மதியப் பாத்தா ஹீரோ மாதிரி தெரியலியா உங்களுக்கு?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அறிஞர் View Post
    ஆஹா மதி காதல் கதையெழுத ஆரம்பித்து கலக்குகிறார்..
    ஹீரோ பற்றி பில்டப் சூப்பர்.
    ஹீரோ.. நீங்க தானா...
    டைட்டில்ல மட்டும் தான் காதல் இருக்கு.. ஆனா இது காதல் கதையான்னே தெரியல.. .

    Quote Originally Posted by செல்வா View Post
    அப்போ மதியப் பாத்தா ஹீரோ மாதிரி தெரியலியா உங்களுக்கு?
    கிளம்பிட்டாங்கைய்யா.. கிளம்பிட்டாங்க....
    அண்ணே... எழுதறது ஒரு தப்பா...பீதிய கிளப்பறதுக்குன்னே அலையறாங்கப்பா...
    அவ்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    கதையை அருமையா ஆரபிச்சு அழகா கொண்டு போறீங்க ... இடையிடையே கதாப்பாத்திரத்தை பற்றிய அறிமுகம் நல்ல இருக்கு. பாதியிலே நிறுத்தாம "கணேஷும் ஹரீஷூம் அந்த நேரத்தில் என்ன செய்தார்கள்? அருண் எப்போ அவரின் தேவதையை சந்திசார்? " சீக்கரமா சொல்லுங்க.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நன்றி லீலுமா....
    அடுத்த பாகம் இனிமே தான் எழுதணும்.. கணேஷும் ஹரீஷும் என்ன செய்தாங்கன்னு அவங்ககிட்ட தான் கேட்கணும்..

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மதி...............சூ..................ப்பர். அசத்திட்டீங்க. அருமையான நடை. கலக்கலான விவரணங்கள்.

    அந்த உச்சி ஆப்பிளில் உங்களைத்தான் பார்க்கிறேன்...ஹி..ஹி...

    ”சப் குச் டீக் சல்த்தாய்க்கா?”

    புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

    வாழ்த்துகள்.

    எதிர்பார்ப்புக்களோடு............
    Last edited by சிவா.ஜி; 25-02-2009 at 09:03 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சிவாண்ணா... நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல..

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •