Results 1 to 6 of 6

Thread: திருப்பூர் மாவட்டம்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  35,947
  Downloads
  15
  Uploads
  4

  திருப்பூர் மாவட்டம்

  தமிழகத்தின் 32வது மாவட்டம் திருப்பூர் உதயமானது

  திருப்பூர் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.
  ---------
  செய்தி...

  திருப்பூர், பிப்.23: தமிழகத்தின் 32வது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் நேற்று உதயமானது.

  கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடுமலை, ஈரோடு மாவட்டத்தில் இருந்து தாராபுரம், காங்கயம் ஆகிய தாலுகாக்களை பிரித்து, தமிழகத்தின் 32வது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.

  புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து, ரூ.102 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
  கடந்த ஓராண்டுக்கு முன், திருப்பூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்தியில் ஆசியாவில் முதலிடம், சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத பூமி என பல்வேறு பெருமைகளை திருப்பூர் கொண்டுள்ளது. பெரியாரும், அண்ணாவும் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட இடம் என்ற பெருமையும் கொண்டது.
  திருப்பூரை இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை திருப்பூர் அளித்து வருகிறது. இதில் 50 சதவீதத்தினர் பெண்கள்.

  அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதும் மக்கள் வசதிக்காகத்தான். கடந்த 1996-2001ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 10 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டன. 2006ல் திருநெல்வேலி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டது.

  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைந்து மேற்கொள்வதற்கான பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.

  திருப்பூர் சாயப்பட்டறை பிரச்னைக்கு தீர்வு காண, குழாய்கள் மூலம் சாயக்கழிவுகளை ஒருங்கிணைத்து கடலில் கலக்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் முதலாவது குடிநீர் திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய குடிநீர் திட்டத்தை ரூ.453 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஆய்வு நடந்து வருகிறது.
  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
  -நன்றி தினகரன்

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,731
  Downloads
  97
  Uploads
  2
  ஆதலால், இந்த நல்ல செய்திக்காக நம் மன்றத்தின் திருப்பூர் திருமகன்களான ஆதவனும் சூரியனும் (பெயரில் என்ன ஒற்றுமையப்பா) நம் எல்லோருக்கும் ட்ரீட்டு வைத்துக் கொண்டாடுவார்களென நான் எதிர்வு கூறுகிறேன்...!!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 3. #3
  புதியவர்
  Join Date
  14 Jan 2009
  Posts
  9
  Post Thanks / Like
  iCash Credits
  4,907
  Downloads
  0
  Uploads
  0
  எனது ஊர், மாவட்டத் தலைநகர். சொல்லொணா மகிழ்ச்சி. இந்த ஊரில் பிறந்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஊர் மேலும் மேலும் தழைத்தோங்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

 4. #4
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jun 2007
  Location
  நினைவில்
  Posts
  1,401
  Post Thanks / Like
  iCash Credits
  5,648
  Downloads
  28
  Uploads
  0
  ஓவின்ணா நல்லா யோசியம் சொல்லுவீங்க போல இருக்கு(எங்க தெருவில ஒரு குடுகுடுப்பைக்காரன் காலைல வந்து இம்சை செய்யிறது அது நீங்கதான் என்று கண்டு பிடிச்சிட்டன்)

  முக்கிய அறிவிப்பு.

  திருப்பூரை பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாகவுமுள்ள நண்பர்கள் அணைவரும் தலா 1000icashஇனை எமது கணக்கிற்கு அனுப்பி வைத்து உங்கள் மகிழ்வினை எங்களுடன் பகிர்ந்து அறிக்கை விடுக்கிறோம்

  எக்கவுண்ட் நேம்

  ஓவியன்(முந்தியமைக்காக பாவம் என்று )
  நிரன்

  இப்படிக்கு தமிழ் மன்றத்தின் வெளிநாட்டு வரவு செலவுத்(செலவு செய்யமாட்டம்) தினைக்களம்

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,001
  Post Thanks / Like
  iCash Credits
  30,083
  Downloads
  12
  Uploads
  1
  Quote Originally Posted by ஓவியன் View Post
  ஆதலால், இந்த நல்ல செய்திக்காக நம் மன்றத்தின் திருப்பூர் திருமகன்களான ஆதவனும் சூரியனும் (பெயரில் என்ன ஒற்றுமையப்பா) நம் எல்லோருக்கும் ட்ரீட்டு வைத்துக் கொண்டாடுவார்களென நான் எதிர்வு கூறுகிறேன்...!!
  இது கூட செய்ய மாட்டமா?
  உடனே திருப்பூர் கிளம்பி வாங்க விருந்து வச்சுடலாம்.
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,936
  Downloads
  47
  Uploads
  0
  திருப்பூரை பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாகவுமுள்ள நண்பர்கள் அணைவரும் தலா 1000icashஇனை எமது கணக்கிற்கு அனுப்பி வைத்து உங்கள் மகிழ்வினை எங்களுடன் பகிர்ந்து அறிக்கை விடுக்கிறோம்

  யாருப்பா அது!!! திருப்பூர்ல இருக்கீறது/????? (நம்ம லொகேஷனே வேறல்ல..)

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •