Results 1 to 12 of 15

Thread: முதல்வர் கலைஞருக்கு ஓர் கடிதம்!

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் இறைநேசன்'s Avatar
  Join Date
  14 Apr 2008
  Location
  CHENNAI
  Posts
  423
  Post Thanks / Like
  iCash Credits
  5,606
  Downloads
  3
  Uploads
  0

  முதல்வர் கலைஞருக்கு ஓர் கடிதம்!

  (மிக அருமையான வரிகளில் அழகுதமிழில் உள்ளது விரும்பியவர்கள் படிக்கலாம் வேண்டாம் என்றால் நீக்கிவிடலாம்)


  பல்கோடித் தமிழினத்தின் தன்நிகரில்லாத் தலைவனே! நீர் வாழ்க. தமிழ்த்தாயின் மானத்தினைக் காத்திடும் தரணிபோற்றும் தனயனே! வாழ்க நீடூழி. தமிழினம் இதுவரைநாள் கண்டிராத, கேட்டிராத, சரித்திரத்தின் நாயகனே பல்லாண்டு வாழ்ந்திடுவீர். நீர் தமிழின்பாலும் தமிழரின் சுயகௌரவத்தின்பாலும் அவர்களின் வருங்கால சந்ததியினரின் மானத்தின்பாலும் காட்டிவரும் ஊக்கத்தினையும் உழைப்பினையும் நான் என்னென்று சொல்வேன் தலைவா. உம்மை தமிழினத்தின் தங்கத் தலைவன் என்பதா? சங்கம்காத்த சிங்கத் தமிழன் என்பதா?. சீதையை வர்ணிக்க முடியாமல் கம்பனோ "ஐயகோ" என்றதுபோல், உம்மையும் என்னால் வர்ணிக்க முடியவில்லையே தலைவா!.

  தமிழ்த்தாயின் தலைமகனே! உம்மைப் புகழ்ந்துவிடக்கூடிய அந்தத்தமிழுக்காக ஏங்கித்தவிக்கும் இந்த ஏழைக்கு உமது நாவில் மட்டுமே விளையாடும் அந்த இனிய தமிழினைத்தான் தந்துதவி செய்திடுவீர். இவ்வாறெல்லாம் தலைவரே உம்மைப் புகழ்ந்திடவும் வாழ்த்திடவும் என்மனமோ ஏங்கி நிற்கின்ற வேளையில்.. உண்மைக்கு மாறாக வாழ்த்திடவும் தயங்கி நிற்கின்றது.

  நம் முன்னோர்கள் கட்டிக்காத்த எம்மினத்தின் கௌரவத்திற்கு உம் ஆட்சியானது இன்று ஒரு மாபெரும் பங்கத்தையும் அந்த ஏழரைக்கோடிக்கொரு ஏழரைச்சனியனாகவுமே உள்ளதுவே தலைவா. வரலாற்றை தேடித்தேடி படைத்தார்கள் நம் பொறுப்புள்ள முன்னோர்கள். இன்று உமக்காக ஒரு வரலாறு ஈழத்திலே ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில் உம்சுயநலத்தை எண்ணுகின்றீரே. ஊரறியக்கூடிய மூன்று முனைகளிலே உருவாகியுள்ள உம் மக்களின் நலங்களையே எண்ணுகின்றீரே.


  புகழின் மயக்கம் மக்களின் பாராட்டில் வரவேண்டும் தலைவரே. அதுவே உம் சந்ததி உட்பட எவருக்கும் சிறந்ததும் நேர்மையானதும் வீரமானதும் நிலையானதுமாகும.; "எவ்வளவு காலம் ஒருவன் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல தலைவரே அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியமானது" என்பது ஒரு முதுமொழியாக இருந்தாலும் வள்ளுவனின் குறளைப்போன்று எப்போதும் அது புதுமையானது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இது அரசியலிலேயே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டு மக்களையே நம்பிவாழும் தங்களைப்போன்ற மனிதர்களுக்கு மிகவும் பொருத்தமாகும்.

  என் அரசியல் வாழ்க்கைக்கு இப்பொழுது ஐம்பது வயதாகிறது என்றும் அறுபது வயதாகிறது என்றும் மார்தட்டிக் கொள்ளும் நேரங்களில் என் மக்களுக்கும் என் நாட்டிற்கும் அவைகளின் வருங்கால நன்மைகள் கருதியும் நான் என்ன செய்து விட்டேன் என்றும் அந்த ஆசைநெஞ்சைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கான பதில்களை நீங்களே நினைத்துக் கொள்ளாமல் அதனையே சுயமாக கூறவிடுங்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் சரியாக இரண்டு வருடங்கள்கூட ஆட்சியில் அமர்ந்ததில்லை. ஆனால் இன்று மட்டுமல்ல என்றும் இதுபோன்ற புகழுடன்தான் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். தமிழக மக்களின் நன்மை கருதிய அவர் ஆட்சியும் தான் ஒரு முதலமைச்சர் என்ற பெருமை இல்லாமலும் அதனால் அடைந்திருக்கக் கூடிய நேர்மையான குறுக்குவழியிலான நன்மைகளை பொருட்படுத்தாமலும் ஆனால் தன் குடும்பத்திற்கு வறுமையை மட்டுமே காட்டி வாழ்ந்ததுவே தான் அண்ணாவின் என்றும் புகழின் இரகசியம்.

  இதைவிடுத்து அரசியலில் மாற்றானுக்கு கைகட்டி நின்றும் அவன் விருப்பமே உம்விருப்பம் என்றும் தமிழினத்தை கேவலமாக எண்ணும் அவனின் நினைப்பிற்கு உதவிபுரிந்தும் உம்மக்கள் நலம் ஒன்றேதான் என்றும் எண்ணி தமிழினத்தின் முன்னோர் காத்த கௌரவத்தினை தட்டினிலே போட்டு விற்றுக் கொண்டும் காலம் கழிக்கும் துரோகச்செயலை என்றுமே தமிழினம் மன்னிக்காதது மட்டுமலல இதற்கான ஆண்டவனின் தண்டனை உம்மையும் உம் அன்புச் செல்வங்களையும் அடைந்தே தீரும்.

  எத்தனையோ பிஞ்சுகள் சிறுவர்கள் பெண்கள் இளைஞர் வயோதிபர் என்று சிங்கள —– அரசாங்கத்தினாலும் இந்திய ——- அரசினாலும் திட்டமிட்டு கொடூர முறைகளில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழக அரசியலில் ஒரு பொறுப்பான பதவியிலிருந்தும் இதனை கண்டு கொள்ளாமலும் உமதும் உம் இச்சையின் செல்வங்களுக்கும் நன்மையென கருதி உம் குடும்பமே பழிகளை சுமந்து கொண்டிருப்பதனை அறியாமலிருக்கின்றீர். ஏழைகளின் கண்ணீரும் கம்பலையும் துன்பமும் துயரும் உம் செல்வங்களை எதிர்காலம் வாழவைக்குமென்று நீர் எண்ணுவீராகவிருப்பின் இயற்கையினதும் கடவுளினதும் கூத்துக்களையும் மற்றும் கடந்த காலத்தில் உம்மைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அறியாத ஒரு பாவியாகவே நீர் இருந்து கொள்கிறீர்.

  சரித்திரங்கள் என்பவை சந்தைகளில் கிடைப்பனவுமல்ல அவைகள் சாமான்ய பொருட்களும் அல்ல கலைஞரே. உண்மையான நேர்மையான சத்தியங்களால் உருவாக்;கப்பட்டு எத்தனையோ தியாகங்களால்
  பெறப்படுபவைகளே சரித்திரங்கள். சரித்திர நாயகர்களின் முதல் எதிரி
  சுயநலமாகும். சுயநலத்தையும் காக்க வேண்டும் அத்தோடு ஒரு சரித்திரத்தையும் படைத்திட வேண்டும் என்று விரும்பிய எண்ணிலடங்கா மானிடர்களில் எவரும் வென்றதாகவுமில்லை கடையில் அவர்கள் மக்கள் மத்தியில் அழிந்து போனதே வரலாறுகள் தரும் உண்மை.

  சரித்திரங்களுக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தோரோ ஏராளம். ஆனால் இன்று ஈழத்திலோ உமக்காக ஓரு சரித்திரம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை
  விவசாயப்பெருங்குடி மக்கள் மத்தியில் பேசுகையில்.. "விதை செத்துத் தான் பயிர் முளைக்கின்றது. விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை நாம் அப்படியே உண்டு விட்டோமானால் எதிர்கால சந்ததியினருக்கு அது தீங்காகி விடும்" எனக்கூறினார். எதிர்கால பிள்ளைகளுக்காக நாம் இக்காலத்தில் தியாகங்களைச் செய்ய வேண்டியிருப்பதனை விவசாயிகள் மத்தியில் விதையை வைத்து உதாரணம் காட்டினார் அண்ணா. அந்த தெய்வங்கள் வாழ்ந்த பூமி எங்கே?

  இன்று

  சுயநலத்தின் கும்பல்கள் வாழும் பூமி இங்கே!! அண்ணாவின் அறிவிற்கும் அவர் செல்வாக்கிற்கும் சுயநலம் என்ற ஒன்றை அவர் விரும்பியிருந்தால் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். அண்ணா மட்டுமல்ல தந்தை பெரியாரும் வசதியுள்ள குடும்பத்தில் வாழ்ந்தவரே. கட்சித்தலைவர் என்றொரு பதவியன்றி வேறொரு பதவியுமில்லாமல் தன்வாழ்நாள் முழுதும் உழைத்த மேதையவர். உண்மையான தலைவன் மக்கள் மத்தியில் எப்போதும் வாழ்வான் என்பதற்கு பெரியார் ஓர் நல்ல உதாரணமாகும். குழந்தைச் செல்வங்கள் உட்பட அனைத்து தமிழ் உள்ளங்களிலேயும் ஆழமாக பதிந்துவிட்ட மகாகவி பாரதியார் மட்டுமென்ன இளைத்தவரா?. தனக்குத் தெரிந்த தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் அவர் சுயநலம் என்ற ஒன்றை எண்ணியிருந்திருந்தால் தன்னுடைய குடும்பத்தை வறுமை நெருங்காமலே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழை நினைத்தார். அதன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டார். அதன் பதில் இன்றும் என்றும் தமிழ் உள்ளங்களில் வாழ்கின்றார். சாகாவரமும் பெற்றுவிட்டார்.

  இதேபோன்று அன்னியனுக்கு அடிபணியாத கட்டப்பொம்மன் இன்றும் வாழ்வது ஏன்?. அன்று அவன் தன்னைப்பற்றியே சிந்தித்திருந்தால் இன்று இருநூறு ஆண்டுகளின் பின்பும் வாழ்ந்து கொண்டிருப்பானா?. சிந்தித்துப்பாரும் கலைஞரே. ஏன்! மிக அண்மையில் வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்.ஐp.ராமச்சந்திரன் மட்டும் எதில் குறைந்து விட்டார். இந்தியாவின் வரலாற்றில் மிகவும் பலமானவரும் இராஐதந்திரியுமான இந்திராகாந்தி அம்மையாரையே தன் விடாப்பிடியாலும் தன்
  வலிமையினாலும் தன்வசப்படுத்தி வைத்திருந்த மாமேதை. ஒரு மாபெரும் நடிகராகவிருந்தாலும் அரசியலில் நடிக்காமலும் தமிழினை மதித்தும் வாழ்ந்த அந்த அற்புத மனிதரையும் தமிழினம் மறந்திடுமோ?.

  எளிமையின் நாயகன் காமராஐர் இன்றும் பசுமையாக தமிழ் உள்ளங்களில் இருப்பதன் இரகசியம் என்ன?. அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஒருமுறை தன் தாயாரைக்காண ஊருக்குச் சென்றார். அப்போது தாயார் கேட்டாராம் "டேய்! நீ மெட்ராஸ்ல என்ன தொழில் பண்ணிக்கிட்டிருக்கே" என்று. தாயாருக்கே தெரியாமல் முதலமைச்சர் வாழ்ந்த பூமியிலே இன்று தொலைக்காட்சி மூலம் விளம்பரம் நடத்தும் சண்டாளக்கூட்டம் சதிராடிக் கொண்டிருக்கறது. தமிழ்நாட்டின் பொதுவுடமைக்கட்சித் தலைவர் திரு.ஐPவானந்தம் வாழ்ந்த அற்புத பூமியல்லவா தமிழகம்.

  ஓருமுறை முதலமைச்சர் காமராஐர் அவர்கள் ஒரு கூட்டத்திற்காக ஐPவா அவர்களின் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில் அவரையும் அழைத்தும் செல்லும் நோக்கோடு அவரின் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது ஒரு துவாய் மட்டுமே கட்டிக் கொண்டிருந்த ஐPவா அவர்கள் காமராஐரிடம் நீங்கள் செல்லுங்கள் அப்புறம் வருகின்றேன் என்றாராம். விடாப்பிடியாக நின்ற காமராஐரிடம் ஐPவா அவர்கள் இரகசியமாகக் கூறினாராம் "உள்ள ஒரேயொரு வேட்டியை தோய்த்து உலர வைத்து விட்டேன் காய்ந்ததும் உடுத்திட்டு வந்து விடுகிறேன் நீங்கள் செல்லுங்கள்"என்று. ஐயகோ! அவர்களை எல்லாம் தலைவர்கள் என்று அழைப்பதானால் இன்றுள்ள சண்டாளத் துரோகிகளை எப்படியழைப்பது??

  கலைஞரே! தமிழ்நாட்டிலும் சரி தமிழ்ஈழத்திலும் சரி. இன்று தமிழ்த்தாய்க்கொரு சோதனைக்காலம். நடக்க வேண்டியதோ ஒரு சாதனைக் காலம். ஆனால் நடப்பதோ உம் மக்கள் செல்வங்களின் எதிர்காலச் சிந்தனை. காலங்களுக்கு தாயைப் போன்று தாங்கிக் கொள்ளும் பொறுமையும் உண்டு தலைவனே அதேநேரம் அதனால் தாங்கிக் கொள்ளவே முடியாத தண்டனையும் உண்டு என்பதனை மறந்துவிட வேண்டாம். பழிகள் பாவங்கள் என்பவை இயற்கையின் நியதிகள். இதிலிருந்து யாரும் தப்புவதும் இல்லை தப்பியவரும் இல்லை.

  அப்பாவி ஈழமக்களின் அலறல்கள் ஏங்கும் ஏக்கங்கங்கள் சிந்தும்
  இரத்தங்கள் உம்மையும் உம் செல்லக்குழந்தைகளையும் எவ்வண்ணம் பாதிக்கின்றது என்பதை இந்தத் தமிழகமும் தமிழ்ஈழமும் பார்க்கத்தான் போகின்றன. உள்ளம் குமுறி பொங்கியெழுந்த தமிழக நல்நெஞ்சங்களின் போராட்டத்தினை நயவஞ்சகமாக மத்திய அரசுடன் இணைந்து அழித்தொழித்த பாதகச்செயலுக்கு சரியானதொரு பாடம் காத்திருக்கின்றது. திரும்பிப்பாரும் கலைஞரே திரும்பிப்பாரும். கடந்து போன சம்பவங்களாயினும் இன்றும் திருந்த நினைப்பவர்க்கு பாடமாகவும் திருந்த விரும்பாதவர்க்கும் விளங்க முடியாதவர்க்கும் எச்சரிக்கைகளாவிருக்கும் அன்றைய சம்பவங்களை திரும்பிப்பாரும்.

  கட்டப்பொம்மனுக்கொரு எட்டப்பன் பண்டாரவன்னியனுக்கொரு காக்காய்வன்னியன் பிரபாகரனுக்கொரு —— என்றெல்லாம்
  தங்களினதும் தங்கள் வருங்கால எத்தனையோ சந்ததிகளுக்கெல்லாம் நீங்கமுடியாத களங்கம் கற்பித்துவிட்ட அந்த பாவிப்பிறப்புக்களை எண்ணிப்பாரும். கட்டப்பொம்மனை எண்ணும்போது எப்படி எட்டப்பனை எண்ணமுடியாமல் இருக்கமுடியுமோ அதேபோன்று வருங்காலத்தில் தமிழகத்தையும் அதன் ஈடுஇணையற்ற தலைவர்கள் பெரியார் காமராஜர் அண்ணா எம்.ஜி.ஆர் போன்றோரை எண்ணும் சமயங்களில் உம்மையும் எண்ண வேண்டுமென்ற நிலைமையினை உருவாக்கி விடாதீர்கள்.

  கலைஞரே! எண்பத்தைந்து வயதினையடையும் நீர் இன்னும்
  எதனைத்தான் சாதித்துவிடப் போகின்றீர். உமது கடந்துபோன ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ள களங்கங்களுக்கும் மற்றும் தவறவிட்ட நல்ல சந்தர்ப்பங்களுக்கும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துவைத்து அவைகளுக்கான பாவங்களையும் கவலைகளையும் தீர்த்துக் கொள்வதோடு தியாகி என்ற மாபெரும் புகழையும் அடையும் பாக்கியம் இன்னும் உம்மைவிட்டு விலகவில்லை. இதனையும் நீர் இழப்பீரேயாகில் கலைஞரே உமக்கும் உம் சந்ததிக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  அப்பாவி கோவலன் கொலையால் மதுரைக்கு நேர்ந்த கதி என்ன?. அம்பிகாபதி கொலையால் குலோத்துங்கனுக்கு ஏற்பட்ட கதியென்ன?.
  இதுபோல் சாட்சியங்கள் ஏராளம் இருக்கும்போது தனக்கென்றொரு தகுதியை வைத்துக் கொண்டு சொந்தப்பிள்ளைகளின் நலம்தேடியும் தமிழ்க்கொலையை வேடிக்கை பார்த்தும் நிற்கும் கலைஞரே.. பாவம் பழி என்ற இரண்டும் தலைமுறை வரையில் என்பதனை மறந்திட வேண்டாம். இதற்கான பழிகளைச் எவரும் சுமந்தே தீரவேண்டும். இது என் சாபம் அல்ல. இயற்கையின் நியதி.. ஆண்டவனின் தண்டனை. இன்றே பாவமன்னிப்பு கேளும்.

  சுயநலங்களை மறந்து தாய்த்தமிழுக்காக அரும்பாடுபட்ட முன்னைய தலைவர்களை சிந்தியுங்கள். ஓர் உண்மைத் தமிழனாக மாறும். இதுவே
  தமிழத்தாய்க்கு ஒரு தலைமகனின் கடன். இதுவே தற்போதுள்ள ஓரெயொரு மாற்றுவழி.

  சுட்டது http://www.mkstalin.net/viewcomments.php  http://www.mkstalin.net/viewcomments.php
  Last edited by இறைநேசன்; 21-02-2009 at 07:10 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •