Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 121

Thread: இந்தியா-நியூசிலாந்து தொடர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    இந்தியா-நியூசிலாந்து தொடர்

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடியது.

    ஆனால் அடுத்த கடினமான தொடர் அவர்களுக்கு காத்திருக்கிறது.

    பிப்ரவரி 25ந்தேதி முதல் - ஏப்ரல் 7ந்தேதி வரை T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது.
    அட்டவணை
    பிப்ரவரி 25 - முதல் T20
    பிப்ரவரி 27 - 2வது T20

    ----------------
    மார்ச் 3 - முதல் ஒருநாள்
    மார்ச் 6 - 2வது ஒருநாள்
    மார்ச் 8 - 3வது ஒருநாள்
    மார்ச் 11 - 4வது ஒருநாள்
    மார்ச் 14 - 5வது ஒருநாள்

    ------------------
    மார்ச் 18-22 - முதல் டெஸ்ட்
    மார்ச் 26-30 - 2வது டெஸ்ட்
    ஏப்ரல் 3-7 - 3வது டெஸ்ட்


    போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 20-ம் தேதி நியூசிலாந்து புறப்பட்டு செல்கிறது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் 25-ம் தேதியும் அடுத்த போட்டி வெலிங்டனில் 27-ம் தேதியும் நடக்கிறது.
    இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று காலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடிய வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நடந்தது.

    ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர், கேப்டன் டோனி ஆகியோர் அணியை தேர்வு செய்தனர். டெஸ்ட் அணியில் மும்பையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக வீரர்கள் பாலாஜி, முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 20-20ல் சச்சினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
    அணி விவரம்

    டெஸ்ட்:

    டோனி (கேப்டன்), சச்சின், சேவாக், காம்பீர், டிராவிட், லட்சுமண், யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ஹர்பஜன் சிங், அமிர்மிர்ஷா, ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, முனாப் பட்டேல், பாலாஜி, தவால் குல்கர்னி.


    ஒருநாள் போட்டி:

    டோனி (கேப்டன்), சச்சின், சேவாக், காம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித்ஷர்மா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரவீன்குமார், இர்பான் பதான், முனாப் பட்டேல், ஓஜா, தினேஷ் கார்த்திக்.


    20 ஓவர் போட்டி:

    டோனி (கேப்டன்), சேவாக், காம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் ஷர்மா, யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரவீன்குமார், இர்பான் பதான், முனாப் பட்டேல், ஓஜா, தினேஷ் கார்த்திக்
    .
    Last edited by அறிஞர்; 13-02-2009 at 03:42 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    ஆகா மீண்டும் அணியில் தினேஷ் கார்த்திக் ஆனால் ஆடும் லெவனில் இருப்பது கடினமே ...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஆமாம். அவர் கூடுதல் காப்பாளாராக சேர்க்கப்பட்டுள்ளார். தோனி ஆடாத நிலையில் மட்டுமே அவருக்கு ஆடும் வாய்ப்பு கிட்டும் என்றே தோன்றுகிறது.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    தமிழ்நாட்டு வீரர்கள் ஆடும் 11*ல் இடம் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

    இருந்தாலும் இந்த அளவிற்காவது உள்ளே வரமுடிந்தது பாராட்டப்படவேண்டிய விஷயம்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    நாளை முதலாவது டி 20 போட்டி.

    பகல் 11.30க்கு தூர்தர்ஷன் ஒளிபரப்புகிறது.
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இந்தியர்களுக்கு பகல்.. எனக்கு இரவு 1.00 மணி..

    நல்ல லிங்க் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அங்கே காற்று அதிகம் அடிப்பதால் ஆடுவதில் சிரமம் இருக்கும். நம் மக்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். கொஞ்சம் கஷ்டம்தான்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இந்தியா 162/8 (20 ஓவர்)... மூத்த வீரர்கள் தடவல்.. ரெய்னா 61 ரன்கள்.

    பார்ப்பதற்கு நல்ல தளமேதும் உள்ளதா..

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    குறைவான ஓட்டங்கள்..

    வெற்றி பெறுவது கடினம்..

    இந்திய பந்து வீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டிங்கில் இருக்கிறது வெற்றி..!!

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நியூஸிலாந்து அணியினர் வென்றனர்...
    இந்திய அணியினர் இன்னும் முயலவேண்டும்... வெற்றிக்கனியினைப் பறிக்க.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இர்பான் பதானை மட்டையாளராக்கி விடலாம்.
    அவர் அல்வா போல் பந்து வீசி... ரன்களை அள்ளிக்கொடுத்தார். (3 ஓவரில் 38 ரன்கள்).
    யுவராஜ் 2வது டவுனில் இறங்கவேண்டும். டோனி வந்தவுடனே போல்ட்...
    அடுத்த போட்டியிலாவது இந்தியா போராடுமா... பார்ப்போம்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இர்பான் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினால், பந்து வீச்சு மோசமாகிறது...
    பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தினால், துடுப்பாட்டம் மோசமாகிறது...

    இரண்டில் எதாவது ஒன்றையே கவனிப்பது நல்லது..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •