Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 52

Thread: ஊடகவியளாளர் தீக்குளிப்பு...

                  
   
   
  1. #1
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    ஊடகவியளாளர் தீக்குளிப்பு...

    இன்று சென்னையிலுள்ள மத்திய அரசின் தலமைச்செயலகம் சாஸ்திரிபவன் முன்னிலையில் தூத்துக்குடியைச்சேர்ந்த முத்துக்குமார் என்ற பெண்ணே நீ என்ற பத்திரிக்கை ஊடகவியளாளர் இந்திய அரசின் நடவெடிக்கையை எதிர்த்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார்...

    இது தொடர்பான தமிழ்நெட் இணையத்திலுள்ள மேலதிக தகவல்....

    Tamil Nadu journalist burns himself to death condemning Indian inaction

    [TamilNet, Thursday, 29 January 2009, 07:02 GMT]
    A young Tamil activist burnt himself to death in front of the Shastri Bhavan, the Indian Central Government's Chennai Head office Thursday, reports from Chennai said. The activist, Mr. Muthukumar, from Thooththukkudi, who works for Pe'n'nea Nee feminist magazine as typist and also writes articles, doused himself with petrol and set himself afire, condemning the futile visit by Indian Foreign Minister Pranab Mukherjee, who failed to stop the war in Sri Lanka and save Eezham Tamils.

    With 95% burn injuries, the victim was rushed to the Kilpauk Medical College in a critical condition, with slim chances of survival. He succumbed within a short span of time, according to medical sources.

    Tension prevails in the capital city of Chennai following the news of the young Tamil activist burning himself to death in front of Shastri Bhavan office.
    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28193

    ஈழத்தமிழனுக்காக உயிர்நீத்த அந்த மறவனுக்காக என் கண்ணீரஞ்சலிகள்.... என்ன சொல்லி அவரின் குடும்பத்தினரை ஆறுதல் படுத்துவது... மனது உறுத்துகிறது.........
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அஹிம்சாவாதிகளே... இறந்துப்போன என் சகோதரனுக்கு என்னபதில் சொல்ல போகிறீர்கள் நீங்கள்...?!

    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இலங்கையில் ஆதரவின்றி தவிக்கும் 6 லட்சம் தமிழர்களை காப்பாற்ற 6 கோடி தமிழரின் மனக்குமுறலில் ஒன்று, ஒரு வேளை, தங்கள் கையாலாகதனத்தை எண்ணி, எல்லோரும் தற்கொலை செய்து கொண்டால் தான் இந்த பிரச்சினை முடியும் என்று நினைக்கிறேன்.

    இதற்கெல்லாம் மத்திய அரசு மனமிறங்காது, மாறாக இனி இம்மாதிரி யாரும் அதிக உணர்ச்சிவசப்படாமல், சமீபத்தில் சென்னை வந்த தலாய்லாமா சொன்னது போல,

    "நல்லது நடக்கவே நாம் பிரார்த்திப்போம். தலைவிதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை" என்று இருக்க வேண்டியது தான்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இந்த செய்தியை படித்தவுடன் இவ்வளவு காலமும் இல்லாத ஒரு குற்றஉணர்வு இன்று என் மனதில்...

    தலைவிதியை கடிந்து என்ன பயன் பிரவீன்....... ஆனாலும் வேறு வழி இல்லைத்தான்.........
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வைத்தியசாலையில் வைத்தியருக்கு முத்துக்குமார் கூறிய பதில்...

    உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.


    இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.


    மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.


    இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.


    26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2643

    மொத்தத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி தான். கடைசியில் இறப்பது தமிழனே.... நடப்பது நடக்கட்டும். இனியும் இவ்வாறான தீக்குளிப்புக்கள் நிகழாதிருக்கவேண்டும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    செய்தி கேட்டு மனம் தழு தழுக்கிரது, தமிழ் மக்களே ஒற்றுமையுடன்
    இந்த போராட்டத்தில் இணைவோம்,
    அதோடு உயிர் சேதமின்றி போராடுவோம்
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    இலங்கை தமிழர்கள் சாவுக்கு தான் மத்திய அரசு பதில் சொல்லவில்லை, முத்துகுமாரின் சாவுக்காவது பதில் சொல்லட்டும்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by Mano.G. View Post
    செய்தி கேட்டு மனம் தழு தழுக்கிரது, தமிழ் மக்களே ஒற்றுமையுடன்
    இந்த போராட்டத்தில் இணைவோம்,
    அதோடு உயிர் சேதமின்றி போராடுவோம்
    அண்ணா.. "தமிழினத்தின் தலைவன்" "தமிழினத்தின் தலைவி" "தமிழின காவலன்" "தமிழின போராளி" ன்னு தங்களோட பெயருக்கு முன்னால போஸ்டர்ல போட்டுக்கிட்டு ஏ.ஸி ரூம்ல உட்காந்துக்கிட்டு கடிதம் எழுதிக்கிட்டு, அறிக்கை விட்டுக்கிட்டு இருக்குற இவனுங்க எல்லாம் இருக்குற வரைக்கும் எங்க அண்ணா மக்களை ஒன்னுசேர விடப்போறானுங்க...?? இவனுங்களுக்கு சாமானிய மக்களோட உணர்வுகள் புரியும்ங்கிற நம்பிக்கை மக்கள்கிட்ட சுத்தமா செத்துப்போச்சு... வழக்கம்போல இந்த சாவையும் ரசிச்சிக்கிட்டு இருந்துருவானுங்களோன்னு நினைக்கும்போது நெஞ்சுவலிக்குது அண்ணா...!!

    ப்ரவீன் அண்ணா சொன்னதுபோல "அழறதுக்கு மட்டும்தான் ஆண்டவன் நம்மளை படைச்சானான்னு நினைக்க தோணுது".
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #9
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    எரிதழழுக்கு இன்னுயிர தந்த என் சகோதரனுக்கு என்ன பதில் சொல்ல போகிறது இந்த உலகம்.எறிகணையால் கொன்றுவிட்டு கணக்கு சொல்லும் உலக சமுதாயமே இதற்க்கும் ஒரு காரணம் வைதிருப்பீர்களே என்ன அது...?

    மனம் உடைந்த உன் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்களும், உனக்கு என் கண்ணீரஞ்சலிகள் மற்றும் வீரவணக்கம் தோழனே

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
    Join Date
    16 Sep 2007
    Location
    ஐக்கிய இராட்சியம்
    Posts
    398
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    2
    Uploads
    0
    வருத்தமான செய்தி, மனம் கலங்கி வேதனை கொள்கிறேன். இன்னும் எத்தனை உயிர்களை பலிக்கொள்ள போகுதோ இந்தப்போர்.

    வீரமரணமடைந்தவருக்கு என் கண்ணிர் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினற்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    அவரின் உணர்வை கண்டு உணர்ச்சிவசப்படலாம்.ஆனால் எந்தவித குற்றஉணர்வு இல்லாதவர்களுக்கு இவரது மரணம் ஒரு சாதாரணமான விசயம்.சகோதரனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13


    நன்றி - விகடன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •