Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: இலங்கைக்கு தமிழகம் வழியாக இந்திய இராணுவ பீரங்கி அனுப்பப்பட்டதா?: அதிர்ச்சித் தகவல்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0

    இலங்கைக்கு தமிழகம் வழியாக இந்திய இராணுவ பீரங்கி அனுப்பப்பட்டதா?: அதிர்ச்சித் தகவல்

    இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திடீரென இன்று செவ்வாய்கிழமை இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கை இராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா இராணுவ தளபாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக எறிகணை, மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. திங்கட்கிழமை முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் நடத்திய சரமாரியான குண்டு வீச்சுத் தாக்குதலில் பெண்கள், கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உள்பட 300 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1000 ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்நிலையில் இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு தற்போது நவீன ரக பீரங்கிகளையும், இராணுவ தளபாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வழியாக கொச்சி கொண்டு செல்லப்பட்ட இந்த இராணுவ தளபாடங்கள் அங்கிருந்து திங்கட்கிழமை கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர், இராணுவத் தடபாளங்களும், பீரங்கிகளும் ஈரோட்டில் இருந்து கொச்சி வழியாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாக கூறியதோடு, செய்தித்தாள்களில் வந்த புகைப்படங்களையும் காண்பித்தனர்.

    இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் இச்செயலை பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டித்துள்ளதோடு, இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இராணுவ தளபாடங்களை அனுப்பியதை கண்டித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.



    நன்றி : தமிழ்வின்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    இந்த பீரங்கிகள் இலங்கைக்குத்தான் போகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது..?
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நம்மாளுங்கள கொல்ல வேற ஒருத்தன் வேணாம்யா... நாமளே போதுமே!!!

    அய்யா அவர்களே!

    இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்ன? இல்லை, பக்கத்து நாடுகள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனவா?

    அதான், திருவனந்த புரம் என்று தினத்தந்தி காரர்களே சொல்லிட்டாங்கள்ல... பிறகு வேற எங்க போகும்??? தமிழ் மக்களை அழிக்கத்தானே!!!

    ஆதவன்...

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    அதான், திருவனந்த புரம் என்று தினத்தந்தி காரர்களே சொல்லிட்டாங்கள்ல... பிறகு வேற எங்க போகும்??? தமிழ் மக்களை அழிக்கத்தானே!!!

    ஆதவன்...
    safe ஆக போய் சேர்திட்டுதாம் என்றும் செய்திகள் பரவுது


    160சீனா + 100 இந்தியா

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by அய்யா View Post
    இந்த பீரங்கிகள் இலங்கைக்குத்தான் போகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது..?
    தமிழ்நாட்டுல ஏதாவது சண்டையா என்ன ?

    Quote Originally Posted by நிரன்
    160சீனா + 100 இந்தியா
    கோவிந்தா..... கோவிந்தா.........

  6. #6
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    நம்மாளுங்கள கொல்ல வேற ஒருத்தன் வேணாம்யா... நாமளே போதுமே!!!

    அய்யா அவர்களே!

    இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்ன? இல்லை, பக்கத்து நாடுகள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனவா?

    அதான், திருவனந்த புரம் என்று தினத்தந்தி காரர்களே சொல்லிட்டாங்கள்ல... பிறகு வேற எங்க போகும்??? தமிழ் மக்களை அழிக்கத்தானே!!!

    ஆதவன்...
    தினத்தந்தி செய்திகூட திட்டவட்டமாகச் சொல்லவில்லை ஆதவா! சந்தேகிக்கப்படுகிறது; பேசிக்கொள்கிறார்கள் என்றுதான் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆதாரம் கேட்பதை வைத்து இனப்பற்றை எடைபோடுவது விந்தைதான்!
    Last edited by அய்யா; 28-01-2009 at 05:10 PM.
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தெளிவான செய்திகள் இல்லாவிட்டாலும்... இலங்கைக்கு தான் என யூகிக்கமுடிகிறது.
    இது ஒரு தேவையற்ற செயல்..
    எரிகிற தீயில் எண்ணெய் ஊறுவது போல்...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லைனா,
    வழியில போறவனும் தலையில
    தட்டித்தான் பார்ப்பான்.
    தமிழர்கள் ஏங்கு இருக்காங்களோ
    அங்கெல்லாம் இதே கதிதான்.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  9. #9
    புதியவர்
    Join Date
    27 Mar 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்னஇது ஒரு முட்டாள்களின் கூற்று தான், நம் நாட்டின் பாதுக்காப்புக்கு எங்கு வேண்டும்னாலும் போகலாம் , நாம் முதலில் நமது நாட்டு குடிமகனாக இருக்கலாம்

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by erode View Post
    இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்னஇது ஒரு முட்டாள்களின் கூற்று தான், நம் நாட்டின் பாதுக்காப்புக்கு எங்கு வேண்டும்னாலும் போகலாம் , நாம் முதலில் நமது நாட்டு குடிமகனாக இருக்கலாம்
    மனுசனா இருக்க. அப்புறம் குடிமகனா இருக்கிறதப்பற்றி சிந்திக்கலாம்...

    உங்களுக்கும் கெகலியவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை............
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by erode View Post
    இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்னஇது ஒரு முட்டாள்களின் கூற்று தான், நம் நாட்டின் பாதுக்காப்புக்கு எங்கு வேண்டும்னாலும் போகலாம் , நாம் முதலில் நமது நாட்டு குடிமகனாக இருக்கலாம்

    உள்நாட்டுப் போர் ஏதாவது நடக்குதா??? பாதுகாப்புக்கு இவ்வளவு பீரங்கிகள் வேண்டுமோ??


    பிறநாட்டுத் தழிழனை மதிக்க வேண்டாம் அன்பரே மிதிக்காமலாவது இருக்கலாமே. சிலர் இலங்கைத் தமிழர் எனப் பார்ப்பதில்லை.. நம்
    தமிழ் உறவுகள் என்றுதான் சொல்கிறார்கள் :( உங்களின் இது போன்று சுயநலக் கூற்றிற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். :(

  12. #12
    புதியவர்
    Join Date
    27 Mar 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    நண்பா நானும் மனுசன் தான், முதலில் என் நாட்டை தான் நான் பாக்கனும், அதுவும் இல்லாமல் தமிழ் தமிழ் என்ற காரணத்துக்குக அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லது இல்லை , அவர்கள் அங்கத்து குடிமகனாக இருக்கும் போது நமக்கு என்ன உரிமை இருக்கு , முதலில் இந்திய குடிமகனாக இருக்கனும் அது தான் நமது கடமை

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •