Results 1 to 4 of 4

Thread: புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க இந்திய உளவுத்துறை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    5,688
    Downloads
    28
    Uploads
    0

    புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க இந்திய உளவுத்துறை

    கருணா புலிகளிடம் இருந்து விலகிய பிறகு அவர்களின் படைத்தளங்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டார்கள் என செய்திகள் வெளியானது. அப்படியெனின் கருணா கொடுத்த தகவலின் படி பிரபாகரன் முல்லைத் தீவுக்காட்டில் இறங்கியுள்ளது. இந்தியா 2வது தடவையாக இராணுவ உதவி செய்கிறது இலங்கை அரசுக்கு என்று கருத்துகள் வெளியாகியுள்ளது இது தொடர்பான விளக்கச் செய்திகள் இங்கே


    முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க சிங்கள படைகளுடன் இணைந்து கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நிறைந்த முல்லைத்தீவு வீழ்ந்து விட்டது என சிங்கள ராணுவம் கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து புலிகள் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    தமிழ் ஈழம் மலர்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்த கருணா என்ற முரளீதரன் இந்த தகவலை சிங்கள இராணுவத்திடம் கூறியுள்ளார் என்றும், அந்த காட்டுப் பகுதிகளையும் அடையாளம் காட்டி கருணா இனத் துரோகம் செய்துள்ளார் என்றும் புலிகளின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

    இதன் அடிப்படையில் சிங்கள இராணுவத்தின் அதிரடிப்படை வீரர்கள் முல்லைத்தீவு காட்டை முற்றுகையிட்டுள்ளனர். விடுதலைப்புலிகளிடம் உள்ள குட்டி விமானங்களை கண்டு பிடித்து கைப்பற்ற முன்னுரிமை கொடுத்து, அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க இந்தியாவும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், பிரபாகரன் இருக்கும் இரகசிய இடத்தை கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பிரபாகரன் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

    இது தவிர இலங்கையை சுற்றி இந்திய கடற்படை கப்பல் வளையம் போல நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இலங்கை இராணுவ கப்பல்களுடன், இந்திய கடற்படை கப்பல்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்போது இலங்கையின் எந்த பகுதியிலும் விடுதலைப்புலிகள் வலுவாக இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறது.

    நன்றி
    தமிழ்வின்
    Last edited by மதி; 26-01-2009 at 05:17 PM. Reason: தலைப்பில் பிழைதிருத்தம்

  2. #2
    புதியவர் பண்பட்டவர் rmsachitha's Avatar
    Join Date
    17 Feb 2007
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    4,960
    Downloads
    0
    Uploads
    0
    என்ன நடக்கப்போகிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
    என்றும் உங்கள் ஆர் எம் சசிதா

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,976
    Downloads
    47
    Uploads
    0
    குழந்தையைக் கொல்லும் தாய்...
    மாற்றான் வெல்லுவதாய்.

    வெட்ட முளைக்கும் வாழை நாம்.. பார்ப்போம்...

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    6,365
    Downloads
    21
    Uploads
    0
    எப்பொழுது தான் இதற்க்கு தீர்வு வருமோ!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •