அன்பு மன்ற உறவுகளே....

குடியரசு தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் சில புதிய வசதிகளை உருவாக்கி வருகிறோம். அவை பின்வருமாறு:

1) நமது தளத்தின் முன்பக்கம் முன்பிருந்தபடி Portal (போர்டல்) போன்ற வசதி மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

2) முன்பு இருந்த Last 15 posts வசதி தற்போது வேலை செய்வதில்லை, அதனால் தற்காலிகமாக வேலை செய்யும், Latest 5 posts என்ற வசதியை நிறுவியுள்ளோம். விரைவில் அது உயர்த்தப்படும்.

3) நமது தளத்தினுள் உள்ள ஒலி-ஒளிப் பகுதி தவிர, அவற்றினுள் பதிக்கப் படுபவைகளை எளிதில் காணும், தேடும் வகையில் "புதிய ஒலி-ஒளிப் பகுதி" (Video Directory) ஒன்றை நிறுவியுள்ளோம். இதில் எளிய முறையில் Youtube, Metacafe, DailyMotion போன்ற தளங்களில் உள்ள அசைபடங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

தற்போது சில பிரிவிகளை (Categories) மட்டும் உருவாக்கியுள்ளோம், உங்கள் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு மேலும் பிரிவுகள் உருவாக்கப் படும்.(மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்)

தற்போது Navigation Bar-ல் இடமில்லாததினால், Quick Links பகுதியில் இதன் சுட்டி உள்ளது, அல்லது http://www.tamilmantram.com/vb/video.php என்ற முகவரி தட்டச்சு செய்து செல்லலாம்.

4) புதிய "New posts" என்னும் வசதியை சோதித்து வருகிறோம்.

5) புதிய "Live Search" என்று திரிகளின் தலைப்பைத் தேடும் வசதியும், பரிசோதனையில் உள்ளது இன்று சேர்க்கப் படுகிறது.

இவைகளை உபயோகித்து பார்த்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.