Results 1 to 4 of 4

Thread: புலிவேட்டை

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  17 Jun 2008
  Posts
  119
  Post Thanks / Like
  iCash Credits
  5,064
  Downloads
  2
  Uploads
  0

  புலிவேட்டை

  அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
  அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
  காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
  ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...
  காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......
  உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...


  அமெரிக்காவின் அதிரடிப்படையான கொமாண்டோப்படை அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...
  வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. ரஸ்யா.. சீனா... ஜேர்மன்.... இஸ்ரேல்... என இன்னும் பல நாட்டு சிறப்பு படைகள்..... ஒண்ணும் புடுங்க முடியல.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை


  கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது.
  அதிலே ”அவமானம் எந்க நாட்டாலும் முடியல” என பேசப்பட்ட போது....


  ”எங்களைக் கேட்கலயே.......” ஒரு குரல்...........

  பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

  ”நாங்கள் எவ்வளவு பலி பிடிக்கிறம் ஆயுதத்தோட... இதப் பிடிக்க மாட்டமா...” என்றார் எகத்தாளமாக...

  சரி. அனுமதி அளிக்கப்பட்டது....
  இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்கு...
  நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
  போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...


  கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
  இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..


  அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
  படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...


  அங்கே அவை கண்ட காட்சி...

  ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது.
  கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்.


  "ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"

  உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்,
  ”ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்..?”

  அதற்கு பன்றி,

  "பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான் பண்றாங்க" என்றது சிரித்தவாறு..............!!!?

  நன்றி: மின்னஞ்சல்.
  மறத்தமிழன்
  _____________________________________
  ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை
  ஆள நினைப்பதில் என்ன பிழை...!
  www.enrenrumthamil.blogspot.com

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  மறத்தமிழன் இதே மின்னஞ்சல் எனக்கும் வந்தது...

  என்ன செய்ய,
  குற்றவாளிகளாக்க பல வழிகள்
  அதில் இதுவுமொன்று....

  இந்தக் கவிதையை மீளவும் ஞாபகமூட்டிய பதிவிது...

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  11,044
  Downloads
  60
  Uploads
  24
  நான் இந்த கதையை வாசித்திருக்கின்றேன். இலங்கைத் தமிழருக்காக மாற்றி அமைக்கப்பட்ட பதிவை இப்பத்தான் வாசிக்கின்றேன்.

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

 4. #4
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  Quote Originally Posted by மறத்தமிழன் View Post
  கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்.

  "ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"

  உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்,
  ”ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்..?”

  அதற்கு பன்றி,
  ஏதோ அமெரிக்காவுக்கு தெரியாத மாதிரியெல்லே சொல்லுறியள்...

  தெரிஞ்சு நித்திர கொள்ளுறமாதிரி நடிக்கிறது தான் அமெரிக்காவின் விசேடம்...
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •