Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: வன்னியில் மக்களின் அவலநிலை...

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  40
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  52,747
  Downloads
  100
  Uploads
  0
  நண்பர்களே...

  இன்றைய காலகட்டத்தில் வன்னியில் பெரும் மனித அவலம் நிகழ்ந்தேறுகின்றது.

  இந்த அவலங்கள் தொடர்பாகப் பல்வேறு திரிகளும் மன்றத்தில், ஆரம்பிகப்பட்டுள்ளன. ஆரம்பிக்கப்படுகின்றன.
  அவற்றில் தொடர்பான திரிகளை ஒன்றிணைத்து,
  வன்னியின் இன்றைய அவலத்தைக்,
  காலப்பதிவாக்கும் பொருட்டு இத்திரி ஏற்படுத்தப்படுகின்றது.
  இலகுவான பார்வைக்காக, இத்திரி ஒட்டியும் வைக்கப்படுகின்றது.

  உங்கள் பார்வைக்குக் கிடைக்கும் செய்திகள், படங்கள், ஒளிப்படங்கள் அனைத்தையும் இங்கேயே பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

  எச்சரிக்கை:
  இதயம் பலவீனமானவர்களுக்கு இங்குள்ள சேதிகளும் காட்சிகளும் அதிர்ச்சியைத் தரலாம்.

  நன்றி!

  பொறுப்பாளர்
  ~அக்னி
  Last edited by அக்னி; 25-01-2009 at 03:45 PM.

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jun 2007
  Location
  நினைவில்
  Posts
  1,401
  Post Thanks / Like
  iCash Credits
  5,638
  Downloads
  28
  Uploads
  0

  வன்னியில் மக்களின் அவலநிலை...

  இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையில் அல்லல் படும் வன்னி மக்கள். இச்செய்தியை வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பு. வெளியிட்டுள்ளது. இச்செய்திகளை நாம் இணைத்திலுாடகக் காணும் பெழுதே வருத்தமாகவுள்ளது.. இதை நேரில் அணுபவித்துக் கொண்டிருப்போர் நிலை!!!!  நிலவர அறிக்கை தை 17,2009
  வன்னி மக்களின் இடப்பெயர்வும் தற்போதய நிலையும்.
  வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பு
  விசுவமடு

  வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையில் இதுவரை 352 பேர் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளடங்குவர். கடந்த நான்கு வாரங்களிற்கு முன் பாடசாலைகள், அகதிமுகாம்கள், வைத்தியசாலைகள் மீது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமான (மகசை) மற்றும் ஆட்லறித் தாக்குதல்களில் 82 இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  இடம்பெயர்ந்த மக்களிற்காக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் உணவு விநியோகம் அடிக்கடி படைத்தரப்பின் தாக்குதல்களால் தடைப்படுகின்றன. இதனால் போதிய நிவாரணம் கிடைப்பதில்லை. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் 15.01.2009 அறிக்கையின்படி கடந்த ஒரு வாரகாலமாக உணவு விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறுகின்றனர்.
  தற்போது 3-4 இலட்சம் மக்கள் இலங்கைப்படையினரின்
  வல் வளைப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். இவர்களிற்குத் தேவையான உணவு இருப்புக்கள் யாவும் தீர்ந்து விட்டன. உணவு கெண்டு செல்லும் பாதையினை அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.


  நிலவர அறிக்கை
  வன்னி (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்)
  15.01.2009
  போர் நிலவரம்ஃஅரச படைகளின் தாக்குதல்; நடவடிக்கைகள்
  கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இலங்கை அரசாங்கத்தின் விமானப்படை, கடற்படை, தரைப்படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த படை நடவடிக்கைகள் காரணமாக வன்னியின் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின்); இயல்பு நிலை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 400,000 இற்கும் அதிகமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டுப் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலேயான சமாதான உடன்படிக்கையினை இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்ட பின்னர் படை நடவடிக்கையினை இலங்கை அரசு ஆரம்பித்தது. இதன்போது பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். இதனால் 2632 பேர் அரச படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதுடன், 6700 பேர் காயப்பட்டுள்ளனர்.
  வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையில் இதுவரை 352 பேர் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளடங்குவர். கடந்த நான்கு வாரங்களிற்கு முன் பாடசாலைகள், அகதிமுகாம்கள், வைத்தியசாலைகள் மீது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமான (மகசை) மற்றும் ஆட்லறித் தாக்குதல்களில் 82 இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  இடப்பெயர்வும், மக்கள் நிலைமையும்
  அட்டவணை – 01
  பிரதேசம் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம்)
  முஅ2
  புதுக்குடியிருப்பு, விசுவமடு, தர்மபரம், முல்லைத்தீவு
  400 முஅ2
  மொத்த சனத்தொகை
  386,000
  இடம்பெயர்ந்த மொத்த சனத்தாhகை
  362,000

  தொடர்ந்து இலங்கைப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களினால் 4 மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் முழுமையாக இடம்பெயர்ந்து விடுதலைப்புலிகளின் ஓர் குறுகிய நிலப்பரப்பிற்குள் சென்றுள்ளனர். 400 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் 400,000 மக்கள் பலதடவை இடம்பெயர்ந்து வீதியோரங்கள், மரநிழல்கள், காடுகள், வயல்நிலங்களில் வசித்து வருகின்றனர். இவர்களிற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிகக் குடிசை வசதிகள் எதுவும் இல்லை. காரணம் அரசாங்கம்
  அனைத்தையும் தடை செய்தது மட்டுமன்றி விநியோகப் பாதைகளையும் மூடியுள்ளது. மக்கள் கூடியிருக்கும் இடங்கள், பாடசாலைகள், கோயில்கள் ஆகியவற்றை இலக்குவைத்து இலங்கை
  விமானப்படை தாக்குதல் நடாத்துவதால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலானோர் காடுகளிலேயே தமது வாழ்க்கையை நடாத்துகின்றனர். ஏற்கனவே இப்பிரதேசங்கள் மழை வெள்ளம், மலேரியா நுளம்பு, கொடிய பாம்புகள் ஆகியவற்றினால் ஓர் அபாயகரமான இடப்பகுதியாகவே காணப்படுகிறது.
  உணவு விநியோக நிலவரம்
  வன்னியின் அனைத்து விவசாய நிலங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாய உற்பத்திகள், கால்நடைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்பிடியும் கடற்படையினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களிற்காக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் உணவு விநியோகம் அடிக்கடி படைத்தரப்பின் தாக்குதல்களால் தடைப்படுகின்றன. இதனால் போதிய நிவாரணம் கிடைப்பதில்லை. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் 15.01.2009 அறிக்கையின்படி கடந்த ஒரு வாரகாலமாக உணவு விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறுகின்றனர். தற்போது 3-4 இலட்சம் மக்கள் இலங்கைப்படையினரின் வல் வளைப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். இவர்களிற்குத் தேவையான உணவு இருப்புக்கள் யாவும் தீர்ந்து விட்டன. உணவு கெண்டு செல்லும் பாதையினை அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.
  சுகாதார மருத்துவ சேவை
  வன்னியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் செயற்பாடும் விமானத்தாக்குதல், எறிகணைத்தாக்குதல், இடம்பெயர்வு காரணமாக தமது சேவையினை நிறுத்தியுள்ளன. 10 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. வன்னியின் மிகப் பெரிய வைத்தியசாலைகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து தற்போது விசுவமடு மற்றும் உடையார்கட்டுப் பாடசாலைகளில் இயங்குகின்றன. .புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மற்றும் விசுவமடு வைத்தியசாலை விமான மற்றும் எறிகணைத் தாக்கதல்களிற்கு உள்ளாகியுள்ளதால் நோயாளர் அங்கு செல்லப் பயப்படுகின்றனர்.
  வன்னி மொத்தச் சனத்தொகை
  386,000
  வைத்தியசாலைகள் (தற்காலிகமாக இயங்குவது)
  02
  வைத்தியசாலைகள் (நிரந்தரமாக இயங்குவது)
  01
  மொத்த வைத்தியர்கள்
  10
  தாதியர்கள்
  30 - 40
  மொத்தப் படுக்கைகள்
  250 - 300
  அவசர சத்திர சிகிச்சை பிரிவு
  01

  தற்போது காயப்படுகின்ற மக்கள் அதிகரித்துச் செல்வதனால் வைத்தியசேவை முற்று முழுதாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 400,000 மக்களிற்கு 10 வைத்தியர்கள், 40 தாதியர்களுடன், 400
  தற்காலிகப் படுக்கை வசதிகளுடன் தான் வைத்திய சேவை நடைபெறுகின்றது. அரசாங்கத்தினால் கடந்த 06 மாதத்திற்கான மருந்துகள் போதியளவு அனுப்பி வைக்கப்படவில்லை.
  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் மாதம் ஒன்றிற்கு 200 தடவைகள் நோயாளர் காவு வண்டி வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டிற்கு நோயாளரை எடுத்துச் செல்வது வழமை.
  தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதால், போதிய மருத்துவ வசதி இன்றி நோயாளர்கள் இறக்கும் தருவாயில் உள்ளனர்.
  அரச படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் நோயாளர் மற்றும் காயப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
  எல்லைகளிற்கு இடையேயான போக்குவரத்து
  அரசாங்கத்தினதும், விடுதலைப்புலிகளினதும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இடையில் இடையில் ஒவ்வொருநாளும் 4000 – 5000 மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வர். தினமும் 20 - 30 நோயாளர்கள் அவசர சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்படுவர். 300 வாகனங்கள் சராசரி தமது பயணங்களை மேற்கொண்டன. தற்போது அனைத்தும் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது.
  பொதுச்சேவைகள்
  வன்னியில் 400,000 மக்களிற்கான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கிச்சேவை, பாடசாலைகள், உணவு விநியோக மையங்கள், வியாபார நிலையங்கள் அனைத்தும் இராணுவ நடவடிக்கையினால் மூடப்பட்டுள்ளன அல்லது நிறுத்தப்பட்டுள்ளன.
  நிவாரண வேலைத்திட்டங்கள்
  இலங்கை அரசாங்கம் 09 செப்ரெம்பர் 2008 அன்று அனைத்து நிவாரணப் பணிகளையும், சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தையும் வன்னியிலிருந்து வெளியேற்றி உள்ளது. அதன் பின்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடம்பெயர்ந்த மக்களிற்கான நலன்களைக் கவனித்து வந்த 15 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணி மூடப்பட்டது. ருniஉநகஇ ருnhஉசஇ ஊயசநஇ ழுஒகயஅஇ ளுயஎந வாந உhடைனசநn போன்ற அமைப்புக்களும் வெளியேறிய நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சிறுவர்களின் கல்வி, சுகாதார, போசாக்கு வேலைத்திட்டங்கள் பாதிக்கப்பட்டன.
  கடந்த நவம்பர் மாதம் மட்டும் பதிவு செய்யப்பட்ட 60,056 குடும்பங்கள் உணவு அல்லா நிவாரணத்தினை (தமிழ்நாட்டு மக்களின் நிவாரணப் பொருட்கள்) ஒரு தடவை பெற்றுள்ளார்கள்.
  அதன்பின்பு எதுவும் வழங்கப்படவில்லை. இதுவரை 5600 தற்காலிகக் கூடாரங்களே இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது மொத்தத் தேவையின் 10 சதவீதமே ஆகும். அவ்வாறே மலசல கூடங்களும்.
  உள்ளுர் நிறுவனங்களின் செயற்பாடு
  வுசுழுஇ மற்றும் தமிழர் சமூக பொருளாதார அமைப்பு, அத்துடன் சில மத அமைப்புக்கள், 20 இற்கும் மேற்பட்ட உள்ளுர் நிறுவனங்கள் தமது வளங்களைக் கொண்டு இடம்பெயர்ந்த மக்களின் வேலைத்திட்டத்தினைக் கவனித்து வருகின்றன.
  எமது வேண்டுகைகள்
  தினம்தோறும் இலங்கை அரசின் இனஅழிப்பு நடவடிக்கையினால் வன்னியில் செத்துக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் காயப்பட்டவர்களை சிகிச்சைக்குட்படுத்துவதற்கும் ஒட்டுமொத்தமாக நான்கு இலட்சம் மக்களை பட்டிணி மற்றும் உயிர் ஆபத்துக்களில் இருந்து மீட்டிட புலம்பெயர்ந்த மக்களே புறப்படுங்கள்.
  1.
  பொதுமக்களின் குடியிருப்புகள்இ மருத்துவமனைகள்இ பாடசாலைகளஇ; வழிபாட்டுத் தலங்கள்இ பொதுநிர்வாக அலகுகள் மீதான வான்வழித் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துதல்.
  2.
  ஐ.நா மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட அனுமதித்தல்.
  3.
  சோதனைச் சாவடிகளைத் திறப்பதன் மூலம் காயப்பட்ட பொதுமக்களை வெளி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதித்தல்.
  4.
  உணவு மருந்து தற்காலிக குடில்கள் அமைப்பதற்கான தரப்பாழ்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் போன்றவை வன்னிப் பிரதேசத்தை ஓழுங்காக சென்றடைய அனுமதித்தல்.
  5.
  இலங்கை படைகளின் தமிழர் மீதான இனப்படுகொலைகளிற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அடிப்படையில் உலக நாடுகள் செய்யும் உதவியினை நிறுத்த வற்புறுத்துங்கள்.
  6.
  போர் நிறுத்தம் செய்து விடுதலைப்புலிகளுடன் பேச இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

  நன்றி
  வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பு.
  யுனிக்கோட்டாக்கம் நிரன்

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
  Join Date
  16 Sep 2007
  Location
  ஐக்கிய இராட்சியம்
  Posts
  398
  Post Thanks / Like
  iCash Credits
  4,901
  Downloads
  2
  Uploads
  0
  நன்றி நிரன்.

  இவைகளை படிக்கும்பொழுது இன்னும் எம்மினத்திற்க்கு ரத்தக்கண்ணீர்தான் மிச்சமுண்டு.
  அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
  பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  40
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  52,747
  Downloads
  100
  Uploads
  0
  இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கெதிரான தாக்குதல்களில்,
  20.01.2009 இல் சிதைக்கப்பட்டவர்கள்...  நன்றி: தமிழ்வின் இணையம்
  Last edited by அக்னி; 20-01-2009 at 11:43 PM.

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  35,937
  Downloads
  15
  Uploads
  4
  இராணுவத்தின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. இதற்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  162,746
  Downloads
  69
  Uploads
  1
  மனிதநேயமுள்ள மனிதர்களே இதை பார்த்துவிட்டு நீங்களே கூறுங்கள் இது உண்மையிலேயே பயங்கரவாதத்திற்க்கு எதிரான யுத்தம்தானா என்று..??

  http://www.rwohomeland.com/public/si...attack_vdo.zip
  http://www.rwohomeland.com/public/si...cement_vdo.zip
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,001
  Post Thanks / Like
  iCash Credits
  30,073
  Downloads
  12
  Uploads
  1
  உள்ளம் துடிக்கின்றது,
  உலக நாடுகள் எல்லாம் இதைப்பார்த்துக்கொண்டு ஏன் அமைதியாய் இருக்கின்றன?
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,926
  Downloads
  47
  Uploads
  0
  ஒரு கணம் யோசித்து, மனதில் அழுதேன்...


  இது இனியெப்போது தீரும்??

 9. #9
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  40
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  52,747
  Downloads
  100
  Uploads
  0
  ஒரு கிறிஸ்தவப் பாடலின் வரிகள் நிழலாடுகின்றன...

  “வேதனை கண்டும் நீ காட்டிடும் மௌனம்,
  விளங்கவில்லை அது ஏன் இறைவா..?”

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 10. #10
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jun 2007
  Location
  நினைவில்
  Posts
  1,401
  Post Thanks / Like
  iCash Credits
  5,638
  Downloads
  28
  Uploads
  0
  சிலவற்றைப் பார்க்கும் போது கண்ணீர் மட்டுந்தான் விடையாகிறது.. இது மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நம் மன்றம் வராத.. உண்மைகள் பற்பல நண்பர்களே!


  காசா அழிவுகள் கவலையளிப்பதாக கூறுகிறார் ஐ நா பொதுச் செயலர் அப்படியென்றால் ஈழமக்களின் இவ் அழிவுகள் மட்டும் இன்னும் ஐ நா கண்களில் தென்படவில்லையா!!! இல்லை கண்டும் காணமல் செயற்படுகிறார்களா காசா மக்களில் ஓடும் இரத்தம்தான் ஈழ மக்களிலும் ஓடுகிறது. அவர்களும் மனிதர்கள்தான் ஈழத்திலும் வாழ்வது மனிதரே என்று ஒரு கனம் ஐ நா திரும்பிப் பார்க்காதா!!!!!!!
  இஸ்ரேலியப் பிரதமர் எகுத் ஒல்மார்டுடன் ஐ நா பொதுச் செயலர் பான் கீ மூன்

  காசாவுக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், அங்கு தான் கண்ட அழிவுகளையிட்டு மிகுந்த கவலை கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

  அங்கு தான் கண்ட காட்சிகள் அதிர்ச்சியாகவும், நெஞ்சை பிளக்கச் செய்வதாகவும் இருந்ததாகக் கூறிய அவர், இஸ்ரேலின் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் என்று தான் கூறும் நடவடிக்கை குறித்து கடுமையான கண்டனமும் தெரிவித்துள்ளார்.

  இஸ்ரேல் மீதான பாலத்தீனர்களின் ராக்கட் தாக்குதல்களும் ஏற்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இஸ்ரேலிய ஷெல்களால் நிர்மூலமாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பண்டகசாலையின் முன்பாக அவர் உரையாற்றினார்.

  இந்தத் தாக்குதல்களால் தான் வேதனையடைந்துள்ளதாகக் கூறிய அவர், இதற்கு காரணமானவர்கள், அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

  காசா மக்கள் தமது வாழ்க்கையை மறுசீரமைத்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.


  நன்றி பிபிசி தமிழ்

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,013
  Downloads
  3
  Uploads
  0
  [media]http://www.youtube.com/watch?v=7T6DX4BXHuo&feature=related[/media]

  [media]http://www.youtube.com/watch?v=KMqlepUg3GQ[/media]

 12. #12
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  12 Aug 2007
  Posts
  175
  Post Thanks / Like
  iCash Credits
  8,320
  Downloads
  0
  Uploads
  0

  யாராவது எங்களுக்காக பேசுங்களேன்


Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •