Results 1 to 10 of 10

Thread: குருபெயர்ச்சி பலன்கள் - 2009.

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    4,567
    Downloads
    0
    Uploads
    0

    குருபெயர்ச்சி பலன்கள் - 2009.

    எச்சரிக்கை 2008ம் ஆண்டில் பஞ்சமா பாதகங்கள் அல்லது, ஐந்து அநியாயங்கள் அல்லது குற்றமே செய்யாதவர்கள் மட்டும் படிப்பது நல்லது.

    மேஷ ராசி ரசிகர்களே… !

    ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல ‘a,e,i,o,u’, அப்புறம் தமிழில ‘கசடதபற’ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

    பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

    **************************************************************************************

    ரிஷப ராசி ரசிகர்களே… !

    நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.

    பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, ‘நாலரை பால்’ குடிக்கிறது நல்லது.

    **************************************************************************************

    மிதுன ராசி ரசிகர்களே… !

    எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து ‘நோக்கியா’. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா ‘சங்கு
    சவுண்டை’ அனுப்பி வைக்கும்.

    பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

    **************************************************************************************

    கடக ராசி ரசிகர்களே… !

    சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப்
    போறீங்க, கவனம்.

    பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால, உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!

    **************************************************************************************

    சிம்ம ராசி ரசிகர்களே… !

    குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு ‘Login’ ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. ‘orkut, facebook’ பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து !

    பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.

    **************************************************************************************

    கன்னி ராசி ரசிகர்களே… !

    ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் ‘வாய்தா’ வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை ‘சனி பகவானோட’ காக்கா வந்து கொத்திரும்.

    பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ ‘கவித’ பொஸ்தகம் வாங்கி, ‘கழுதை’க்கு தானம் பண்ணனும்.

    **************************************************************************************

    துலாம் ராசி ரசிகர்களே… !

    கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது. மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

    பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.

    **************************************************************************************

    விருச்சிக ராசி ரசிகர்களே… !

    யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

    பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

    **************************************************************************************

    தனுசு ராசி ரசிகர்களே… !

    நீங்க ‘i’ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு ‘i’யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை ‘ஒரு ரூபாய்’க்கு
    வித்துருங்க.

    பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.

    **************************************************************************************

    மகர ராசி ரசிகர்களே… !

    வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

    பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!

    **************************************************************************************

    கும்ப ராசி ரசிகர்களே… !

    இப்ப ‘கரண்ட்’ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு ‘கரண்டுல’ கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற ‘கரண்ட்’ நியூஸைக்கூட படிக்கக்கூடாது.

    பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

    **************************************************************************************

    மீன ராசி ரசிகர்களே… !

    குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

    பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க

    நன்றி - மு கி ல்
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    133,811
    Downloads
    161
    Uploads
    13
    வேற என்ன சொல்ல.... சூப்பர்...........................
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,596
    Downloads
    47
    Uploads
    0
    அட நம்ம ராசிக்கு கரெக்டா பொருந்துதே!! சூப்பருங்கோ!!

  4. #4
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    4,567
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    வேற என்ன சொல்ல.... சூப்பர்...........................
    நன்றி அண்ணா!
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    7,588
    Downloads
    3
    Uploads
    0
    அட நல்லா இருக்கே பகிர்வுக்கு பாராட்டுக்கள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,391
    Downloads
    97
    Uploads
    2
    அப்பப்பா,
    படிக்கும் போதே, கண்ணைக் கட்டுதே...!!

    பகிர்வுக்கு நன்றி அய்யா..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    19,005
    Downloads
    34
    Uploads
    6
    என்ன ஐயா இப்படி கிளம்பிட்டிங்க
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #8
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    4,567
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    அட நம்ம ராசிக்கு கரெக்டா பொருந்துதே!! சூப்பருங்கோ!!
    Quote Originally Posted by arun View Post
    அட நல்லா இருக்கே பகிர்வுக்கு பாராட்டுக்கள்
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அப்பப்பா,
    படிக்கும் போதே, கண்ணைக் கட்டுதே...!!

    பகிர்வுக்கு நன்றி அய்யா..!!
    Quote Originally Posted by daks View Post
    என்ன ஐயா இப்படி கிளம்பிட்டிங்க
    நன்றி நண்பர்களே!
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  9. #9
    இளையவர் பண்பட்டவர் tamizhan_chennai's Avatar
    Join Date
    24 Aug 2008
    Posts
    57
    Post Thanks / Like
    iCash Credits
    13,446
    Downloads
    69
    Uploads
    0
    ரொம்ப நல்லாயிருக்கு...
    ஒரு ஒரு ராசியையும் இருதடவை படித்து மகிழ்ந்தேன்.....

  10. #10
    புதியவர்
    Join Date
    24 Mar 2009
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    4,621
    Downloads
    0
    Uploads
    0

    Smile

    அய்யா தாங்க முடியல . மொக்கை சாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •