நீ எனக்கு வேண்டும்

வணக்கம் உறவுகளே
ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த பக்கம் வந்து, சரி இந்த முறை கொஞ்சம் சுவாரஸ்யமான கரு இது. எப்பொழுது எங்கு என்று நினைவில்லை. ஒரு புத்தகத்தில் ஒரு கட்டுரையை படித்தேன், என்னுடைய சுஜாதா ஐயா நண்பரின் நிஜ வாழ்க்கையை எழுதி இருந்தார். பெயர் நியாபகம் இல்லை. சுஜாதா ஐயாவின் எழுத்தில் இருந்து.

“என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடன் நான் பணி புரியும் சென்னை விமான நிலையத்தில் எனக்கு சீனியராக இருந்தார். அவர் ஒரு கட்ட பிரம்மச்சாரி வயது 40 இருக்கும், திடீர் என்று ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சென்றேன். பார்த்தால் அவர் வயதுடைய ஒரு பெண்ணும் அவருடைய குழந்தைகளும் இருந்தார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம். யார் அவங்க என்று கேட்க விரும்பினாலும் கேட்கவில்லை. அவரே சொன்னார்

“ இவங்கல தான் நான் கல்லூரி படிக்கும் பொழுது காதலித்தேன், ஆனால் அவங்க சம்மதிக்கவில்லை, எங்கள் வீட்டிலும் சம்மதிக்கவில்லை, அவங்க திருமணம் செய்து கொண்டாள். நான் செய்துக் கொள்ளவில்லை. ரொம்ப வருஷம் கழித்து போன வாரம் ஒரு கல்யாணத்தில் அவங்கள சந்தித்தேன், கணவர் இறந்து விட்டாராம். தனியாக கஷ்டப்பட்டாங்க, நான் என்னுடன் அழைத்து கொண்டு வந்துவிட்டேன் குழந்தைகளுடன்” என்றார் என்னுடைய நண்பர் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, சற்று சலங்கை ஒலி படம் போலவும் இருந்தது. என்ன வித்தியாசம் அது நிழல் இது நிஜம். காமம் என்ற சுகத்திற்காக மட்டும் காதலிக்கும் காலத்தில், காதலுக்காக காதலித்த என்னுடைய நண்பரை பார்க்க பெருமையாக இருந்தது. ஆச்சர்யத்துடன் இதை என்னுடைய மருத்துவ நண்பரிடம் சொன்னேன், அத்ற்கு அவர் சிரித்துக் கொண்டு சொன்னார் “அவர் ஒரு அப்நார்மல் மனிதன், சைக்கலாஜிக்கா அவருக்கு எதோ பிராபலம் இருக்கிறதுனு” சொன்னார்


இப்படி முடித்து இருப்பார் அந்த கட்டுரையை, நான் இதை படித்து பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அந்த பெயர் தெரியாத மனிதன் மேல் எனக்கு மிகுந்த மரியாதை வந்தது. மருத்துவம் அவருக்கு என்ன பெயர் வைத்தாலும், மனம் அவரை மகுடத்தில் தான் வைத்து அழகு பார்க்கிறது. இந்த கருவை வைத்து தான் கொஞ்சம் என்னுடைய கோபங்களையும் வைத்து கதையை திரித்தேன்.

இந்த மாதிரி பிரச்சனையை கொஞ்சம் அலசினால், இந்த மாதிரி அடமண்ட், அக்ரஸிவ், பண்புகள் எல்லாம் ஒரு குழந்தை மட்டும் இருக்கும் குடும்பத்து குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். எப்படியாவது தான் நினைத்தது தனக்கு வந்து சேர வேண்டும் என்று நினைப்பது உண்டு. குழந்தைகள் வளர வளர வேகமும், கோபமும், மூர்க்கதனமும் அதிகமாகும். அப்பொழுது தான் மனம் இந்த மாதிரி கிரிமினலாக நினைக்க வைக்கும்

ஒரே குழந்தையாக வளர்ந்த தகுதியில்
தக்ஷ்ணாமூர்த்தி.

கதையின் சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18560