Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: தவற விட்ட மழை...

 1. #1
  இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
  Join Date
  18 Dec 2008
  Location
  Chennai
  Posts
  677
  Post Thanks / Like
  iCash Credits
  25,013
  Downloads
  2
  Uploads
  0

  தவற விட்ட மழை...

  பூமி நனைக்க புறப்பட்ட மழைத்துளிகள்..
  இன்னும் வந்து சேரவில்லை.
  வாசலில் அமர்ந்தபடி யோசித்திருந்தேன்...
  மழையை வரவேற்கும் கவிதையொன்றை..

  காகிதம் நிறைக்க வார்த்தைகள் கிடைக்காமல்...
  வானம் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
  என் வாசல் வழி சென்ற காற்று..
  அறிந்திருக்கக்கூடும் என் தேடலை.

  காற்று சொல்லி வந்து சேர்ந்தன...
  என் வாசம் வராத வார்த்தைகள்.
  வரவேற்பதா வேண்டாமா எனும் என் யோசனையை
  அலட்சியபடுத்தியபடியே என் முன் அமர்ந்து...
  காகிதம் ஏற விருப்பம் தெரிவித்தன.

  வார்த்தைகளை அனுப்பிய காற்றே...
  காகிதம் பறித்து சென்ற போது...
  ஏனோ இறுக்கி பிடிக்க மனமின்றி...
  காற்றின் பாதையில் பறக்கவிட்டேன் காகிதத்தை.

  என்னை பார்த்தபடி அமர்ந்திருந்த வார்த்தைகளை...
  புறக்கணித்து.. உள் சென்று கதவடைத்து விட்டேன்.
  நான் தவற விட்ட மழையில் நனைந்து...
  கரைந்திருக்ககூடும் காத்திருந்த வார்த்தைகள்...
  நான் உனக்களித்த அன்பு...
  நீ அனுபவிக்காதது என்றாய்.
  நீ எனக்களித்த அன்பு...
  இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
  நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  281,950
  Downloads
  151
  Uploads
  9
  மழைக்கும் ரசனைக்கும் ஜென்ம பந்தம். நீங்களே முத்து முத்தாய் மூன்று மழைத்துளிகளை பெய்திருக்கிறீர்கள். இங்கே குறியீடுகள் பேசும் வார்த்தைகள் புரியாமல் போகலாம். ஆனால் காற்றில் பறந்து காகிதம் வரைந்து கரைந்த ஓவியங்கள் போல் ஏ-காந்தக் கவர்வை மீண்டும் கேட்கிறது உள்ளம்.

  இதே உணர்வை குருவிகளுடன் பறக்கும் மனது என்று கவிதையில் சிறைவைத்தவர் யவனிகா என்கிறது என் நினைவகம்.

  தென்றல் அனுப்பிய வார்த்தைகள் புறமிருந்து வந்திருக்கலாம். அனால் அவை புறம் சேர்ந்தது உங்கள் அகமிருந்து. சொந்தப் பொருளை விட மாற்றான் பொருளுக்கு வரவேற்புக் கொடுக்கும் இயல்பு சந்தர்ப்பங்களில் உயர் செறிவாகி விடுகிறது. அதனாலேயே வார்த்தைகளைப் புறக்கணித்திருக்கின்றீர்கள். பின்னர் தாய்மை உயிர்த்துக்கொள்ள மழையில் கரைந்திருக்குமே என்று வேதனைப்பட்டிருக்கின்றீர்கள்.

  யாருக்குத் தெரியும். கதவைத் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பீர்கள். வீம்பு சொல்ல விடாமல் தடுத்திருக்கலாம். எப்படியோ நீங்கள் எழுத நினைத்ததை நீங்கள் எடுத்து வைத்திருந்த காகிதங்களில் மழை எழுதி இருக்கும். ஊரெல்லாம் அதனை பார்வைக்கு விட்டிருக்கும். யாரும் பார்க்காத சோகத்தில் நைந்து செத்திருக்கும். இயற்கையில் கலந்திருக்கும்.

  பாராட்டுகள் சசிதரன் அவர்களே!
  Last edited by அமரன்; 06-01-2009 at 04:52 PM.

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  79,601
  Downloads
  104
  Uploads
  1
  சபாஷ் சசி...

  கவிதைகளின் வலிமையே இதுதான்.... அதிலும் சொல்ல வந்த கருத்தை தெளிவாக கவிதையில் புகுத்தி அதை வாசிக்கையில் நம்மையும் ஒரு பகுதியாக அதில் மாற்றி...

  நல்ல கரு...
  நல்ல நடை...
  தெளிவான நல்ல கவிதை...

  அமரனின் கச்சித பின்னுட்டத்திற்க்கு பிறகு கவிதை இன்னும் அழகாய்...

  வரும் மழை என்று தெரிந்தும் நனையாமல் சென்றது நாயகன் அவசரமோ...!!!!
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,906
  Downloads
  47
  Uploads
  0
  ஒவ்வொரு கவிதையின் போதும் உங்களுக்கான உயரத்தை நன்கு அளந்து தீர்மானிக்கிறீர்கள் சசி. உங்கள் எழுத்தாக்க விளைவுகள் பிரமாதமாகவே இருக்கின்றன. நிகழ்வுகளின் உணர்வுகளை எப்போது ஆற அமர்ந்து படம் பிடிக்க கற்றுக் கொண்டீர்களோ, அப்போதே உங்களுக்கான வெற்றிப்பாதையும் அமைக்கப்பட்டுவிட்டது.

  ஒருமுறை நம் தலை'யிடம் நீங்கள் எப்படியாவது ஒரு கவிதை எழுதவேண்டும் என்றேன், அவரோ, எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை, ஒரே வெறுமையாக இருக்கிறது என்றார் ; நான், அந்த வெறுமையையாவது எழுதுங்கள் என்றேன்.. பதிலுக்கு அவர், ஓ! நீங்களெல்லாம் அப்படித்தான் எழுதுகிறீர்களோ என்று முடித்தார்.. ஒருவகையில் இக்கவிதை, எழுத முடியாத கவிதையை விமர்சிக்கிறது இல்லையா?

  மழைத்துளிகள் நமக்கு சிந்தனை உதிக்கும் பிளவுமூளைச் செல்களாகக் கொள்வோம்.. அது நம் சுத்திகரிக்கப்பட்ட மனத்திற்கு வந்து கைவழி காகிதத்தை அடையவேண்டுமெனில், சிந்திப்பு எனும் உழைப்பு வேண்டும். இன்னும் வந்து சேராத மழை, கவிதைக்கான கரு கிடைக்காத படைப்பாளியை முன்னிருத்துகிறது. என்ன எழுதலாம் என்று யோசித்து காகிதத்தோடு அமர்கையில் சுத்தியிருக்கும் சூழ்நிலைகளே முதன்மையாக கண்ணுக்குத் தெரிவது கவிதையில் மறைந்து நின்று சொல்லும் பாங்கு.

  மனம் சுற்றிலும் சூன்யம், பட்டுத் தெறித்த நீர்த்துளியின் சப்தம் காதில் அறையும் இருட்கணம், வார்த்தைகளை சிந்தாத பேனா முனையின் கோலி ஆடும் ஓவியப் பந்தம் என, தழுவிக்கொள்ளாத நொடிகளை பின்னிருத்தி கவிதை பயணிக்கிறது. நமக்கான/அடுத்தவருக்கான தேடல்தான் கவிதையின் முளைவு என்பதால் அறிந்தே தொட்டுச் செல்கிறது காற்று. அதாவது, படைப்பின் கருக்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன ; எடுத்துக் கொள்ள சந்தர்ப்பம் தேடி அலைகிறது ஒருங்கில்லா மனது.

  மீறியும் நம்முள் அமர்ந்தாலும் வார்த்தை கிடைப்பதில்லை. அதுதான் இருமன வரவேற்ப்பு.. இக்கவிதையில் குறிப்பிட்டிருக்கும்படி,

  வரவேற்பதா வேண்டாமா எனும் என் யோசனையை
  அலட்சியபடுத்தியபடியே என் முன் அமர்ந்து...

  என்ற வரிகள், தெளிவில்லாத மனத்தையும், விருப்பமில்லா கருத்து உதயத்தையும் குறிக்கின்றன.. ஆனால் வேறு வழியுமில்லை, (உடனடியாக) எழுதியாக வேண்டிய கட்டாயம்... காகிதத்தில் ஏறியது அதன் விருப்பம்.

  எந்த ஒரு கவிதையும் தெளிந்த மனதில் நுழையும்பொழுதுதான் அதன் விளைவும் நமக்கு பெருத்த ஆதாயமாக அமையும்.. அதை இந்த வரிகள் சுட்டுகின்றன. தெளிவின்மையால், காற்றில் பறந்த காகிதத்தையும் பிடிக்க மனமின்றி போகிறது. காற்று இழுத்த பாதைக்கு காகிதமும் சென்றடைகிறது. நமக்காக காத்திருந்த வார்த்தைகள், அழுதவிழிகளோடு கரைந்தும் போகிறது..

  ஒரு சிறு நிகழ்வினை ஒரு கவியின் மனத்தோடு பொருத்தி, உணர்வுகளால் கோலமிட்டிருக்கிறீர்கள் சசி. ஆங்காங்கே விரவிக் கிடக்கும் கருக்களைப் பிடித்து கவிதை எழுதவேண்டும்.. அல்லது, இப்படி காணாமல் கரைந்து போய்விடும் என்பதை, மழைக்கு முந்தைய காற்றின் பிடியில் காகிதம் என்று அழகான பிணைத்தலில் எழுதியிருக்கிறீர்கள்...

  அன்பு அமரன்,

  மழை எழுதும் கவிதையை அப்படியே அப்பட்டமாக்குபவன் தானே கவிஞன். மழை மட்டுமல்ல, சில கவிஞர்கள் எழுதுபவை கூட பலரின் கண்களுக்கு அகப்படாமல் நெய்ந்து போவதும் வேதனைக்குரியதே! இல்லையா.... உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு என்றும் நான் ரசிகன்...

  இனிய பென்ஸ் அண்ணா,,

  உங்கள் இறுதி வரிகளின் எளிய வலிமையை அறிந்து சிலாகித்தேன்..

  அன்புடன்
  ஆதவன்.

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jun 2007
  Location
  நினைவில்
  Posts
  1,401
  Post Thanks / Like
  iCash Credits
  5,618
  Downloads
  28
  Uploads
  0
  நன்றாகக் கவிதை இருக்கிறது விரிவான பின்னூட்டத்தை இன்னும் ஒரு
  தடவை படித்து விட்டுத் தருகிறேன்

  தற்பொழுது நேரமில்லை 2வது தடவை படிக்க
  வருகிறேன் விரைவில்

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  79,601
  Downloads
  104
  Uploads
  1
  அன்பின் ஆதவா...
  சசிதரன் இங்கு வெற்றி பெற்றுள்ளதாகவே சொல்லுவேன்...
  செய்த சமையல் சரியாக முழுமையாக ருசிக்கபட்டு, கடைசியில் ஒரு சின்ன பாராட்டுடன் எழும் கணவனை பார்க்கும் மனைவியின் அந்த சந்தோசம் எந்த ஒரு கவிஞனுக்கும் வரும் என்பதில் சந்தேகமில்லை...
  உன் கவிதையை போல நல்ல அருமையான விமர்சனம்...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jun 2007
  Location
  நினைவில்
  Posts
  1,401
  Post Thanks / Like
  iCash Credits
  5,618
  Downloads
  28
  Uploads
  0
  ================================================================
  முதல் வந்து கவியினைப் பார்த்த பின் மிகவும் பிடித்து விட்டது இதற்கு
  என்னால் முடிந்தளவு சிறப்பாக பின்னுாட்டமிடவேண்டும் என்ற ஆர்வத்துடன்
  கல்லுாரியில் இருந்து வீடு வந்தேன் பின்னர் கவியையும் ஆற ஆமர இருந்து
  படித்தேன் கவியை மட்டும் படித்திருந்தால் பின்னுாட்டம் கொடுத்திருப்பேன்.

  ================================================================

  அமரன் அண்ணா பென்ஸ் அண்ணா மற்றும் ஆதவனின் பின்னுாட்டத்திற்கு
  பின்பு என் மனம் வெறுமையாகிவிட்டது.. வெறுமையாகிவிட்டதென்பதை
  விட அவர்களின் பின்னுாட்டம் என்
  மனதை வெறுமையாக்கி விட்டது என்றே கூறுவேன்.. இதற்கு மேல்
  அழகானவெறு கவிக்கு நான் என்னவென்று பின்னுாட்டமிடுவேன்...
  இவ்வழகான பின்னுாட்டங்களையும் தாண்டி... சுருக்கமாகச் சொன்னால்..

  ================================================================

  மிக அருமையான கவிதை....
  பாரட்டுக்கள் சசி... தொடருங்கள் இது போன்று முத்தான கவிதைகளை

  இக்கவிக்கு என் அன்புப்பரிசாக

  இணையப்பணம் 200
  நட்சத்திரம் 5

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,906
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by நிரன் View Post
  முதல் வந்து கவியினைப் பார்த்த பின் மிகவும் பிடித்து விட்டது இதற்கு
  என்னால் முடிந்தளவு சிறப்பாக பின்னுாட்டமிடவேண்டும் என்ற ஆர்வத்துடன்
  கல்லுாரியில் இருந்து வீடு வந்தேன் பின்னர் கவியையும் ஆற ஆமர இருந்து
  படித்தேன் கவியை மட்டும் படித்திருந்தால் பின்னுாட்டம் கொடுத்திருப்பேன்.

  அமரன் அண்ணா பென்ஸ் அண்ணா மற்றும் ஆதவனின் பின்னுாட்டத்திற்கு
  பின்பு என் மனம் வெறுமையாகிவிட்டது.. வெறுமையாகிவிட்டதென்பதை
  விட அவர்களின் பின்னுாட்டம் என்
  மனதை வெறுமையாக்கி விட்டது என்றே கூறுவேன்.. இதற்கு மேல்
  அழகானவெறு கவிக்கு நான் என்னவென்று பின்னுாட்டமிடுவேன்...
  உண்மையைச் சொல்லப்போனால்..... நீங்கள் இப்பொழுது அனுபவித்த வெறுமையைத்தான் கவிதையும் சொல்கிறது.. எந்த ஒரு உணர்வும், ஒரு விசயத்தை வெளிப்படுத்தும்.. மெளனம் கூட பேச்சில்லா ஒரு மொழிதானே.. வெறுமை பல சங்கதிகளைச் சொல்லும் ஊடகம்.. அவற்றில் ஒன்று மொண்டு ஊற்றியிருக்கிறார் சசி... அவ்வளவே!

  மெல்ல நிதானமாக படிக்கும் உத்திதான் கவிதையை மனதுள் இருத்தும்.. அது உங்களுக்கு நிச்சயம் வாய்த்திருக்ககறது...

  நீங்கள் இனி கவிதையைப் படித்துவிட்டு விமர்சனங்களைப் படிக்காதீர்கள்... ஏனெனில் பாதிக்கும் விசயங்களை உள்ளிழுத்து செய்யுமளவுக்குப் பக்குவப்படுவதற்கு உங்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம்...

  அன்புடன்
  ஆதவன்.

 9. #9
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jun 2007
  Location
  நினைவில்
  Posts
  1,401
  Post Thanks / Like
  iCash Credits
  5,618
  Downloads
  28
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post

  நீங்கள் இனி கவிதையைப் படித்துவிட்டு விமர்சனங்களைப் படிக்காதீர்கள்...
  சசி் அவர்கள் வெறுமையான விடயத்தைக் கவியாக்கியுள்ளார்
  நீங்கள் கூறியது போன்று அவரின் கவிதைக்கு என் மனமும்
  வெறுமையாகிவிட்டது.. உங்கள் அளவுக்கு பின்னுாட்மிடுவதற்கு
  என்னால் முடியாது பொதுவாக எப்பொழுதும் பின்னுாட்டங்களை
  வாசிப்பதில்லை... ஆனால் வாசிக்க வேண்டுமென இன்று மனதில்
  எழுந்த ஆசை மனதை வெறுமையாக்கி விட்டது சசிக்கு வெறுமையில்
  கிடைத்த இந்த அருமை எனக்கும் கிடைத்தது வெறுமையாக மட்டுமே

  நன்றி ஆதவா!!

 10. #10
  இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
  Join Date
  18 Dec 2008
  Location
  Chennai
  Posts
  677
  Post Thanks / Like
  iCash Credits
  25,013
  Downloads
  2
  Uploads
  0
  இத்தனை அற்புதமான பின்னூட்டங்கள் தந்து சிறப்பித்ததற்கு நிச்சயம் நான் பதில் கூற வேண்டும். நேரமில்லாத காரணத்தால் விரிவாக சொல்ல இயலவில்லை.. விரைவில் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதிவிடுகிறேன்... அதிக நேரம் இணையத்தில் செலவிட முடியாத சூழல் தற்பொழுது. ஓரிரு நாட்களில் பதிவிடுகிறேன்... மிக்க நன்றி நண்பர்களே...
  நான் உனக்களித்த அன்பு...
  நீ அனுபவிக்காதது என்றாய்.
  நீ எனக்களித்த அன்பு...
  இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
  நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

 11. #11
  இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
  Join Date
  18 Dec 2008
  Location
  Chennai
  Posts
  677
  Post Thanks / Like
  iCash Credits
  25,013
  Downloads
  2
  Uploads
  0
  Quote Originally Posted by அமரன் View Post
  மழைக்கும் ரசனைக்கும் ஜென்ம பந்தம். நீங்களே முத்து முத்தாய் மூன்று மழைத்துளிகளை பெய்திருக்கிறீர்கள். இங்கே குறியீடுகள் பேசும் வார்த்தைகள் புரியாமல் போகலாம். ஆனால் காற்றில் பறந்து காகிதம் வரைந்து கரைந்த ஓவியங்கள் போல் ஏ-காந்தக் கவர்வை மீண்டும் கேட்கிறது உள்ளம்.

  இதே உணர்வை குருவிகளுடன் பறக்கும் மனது என்று கவிதையில் சிறைவைத்தவர் யவனிகா என்கிறது என் நினைவகம்.

  தென்றல் அனுப்பிய வார்த்தைகள் புறமிருந்து வந்திருக்கலாம். அனால் அவை புறம் சேர்ந்தது உங்கள் அகமிருந்து. சொந்தப் பொருளை விட மாற்றான் பொருளுக்கு வரவேற்புக் கொடுக்கும் இயல்பு சந்தர்ப்பங்களில் உயர் செறிவாகி விடுகிறது. அதனாலேயே வார்த்தைகளைப் புறக்கணித்திருக்கின்றீர்கள். பின்னர் தாய்மை உயிர்த்துக்கொள்ள மழையில் கரைந்திருக்குமே என்று வேதனைப்பட்டிருக்கின்றீர்கள்.

  யாருக்குத் தெரியும். கதவைத் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பீர்கள். வீம்பு சொல்ல விடாமல் தடுத்திருக்கலாம். எப்படியோ நீங்கள் எழுத நினைத்ததை நீங்கள் எடுத்து வைத்திருந்த காகிதங்களில் மழை எழுதி இருக்கும். ஊரெல்லாம் அதனை பார்வைக்கு விட்டிருக்கும். யாரும் பார்க்காத சோகத்தில் நைந்து செத்திருக்கும். இயற்கையில் கலந்திருக்கும்.

  பாராட்டுகள் சசிதரன் அவர்களே!
  அருமையான பின்னூட்டம் தந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி அமரன் அவர்களே...

  //யாருக்குத் தெரியும். கதவைத் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பீர்கள். வீம்பு சொல்ல விடாமல் தடுத்திருக்கலாம். எப்படியோ நீங்கள் எழுத நினைத்ததை நீங்கள் எடுத்து வைத்திருந்த காகிதங்களில் மழை எழுதி இருக்கும். ஊரெல்லாம் அதனை பார்வைக்கு விட்டிருக்கும். யாரும் பார்க்காத சோகத்தில் நைந்து செத்திருக்கும். இயற்கையில் கலந்திருக்கும்.//

  கதவை திறந்து பார்க்கவில்லை நண்பரே. பார்க்கும் மனநிலையும் அன்று இல்லை என்பதே உண்மை. எனினும் நீங்கள் கூறியது போல் தாய்மை உயிர்த்துக் கொள்ள மழையில் கரைந்திருக்குமே என்று வருந்தினேன்.... மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பர் அமரன் அவர்களே..
  நான் உனக்களித்த அன்பு...
  நீ அனுபவிக்காதது என்றாய்.
  நீ எனக்களித்த அன்பு...
  இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
  நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

 12. #12
  இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
  Join Date
  18 Dec 2008
  Location
  Chennai
  Posts
  677
  Post Thanks / Like
  iCash Credits
  25,013
  Downloads
  2
  Uploads
  0
  Quote Originally Posted by பென்ஸ் View Post
  சபாஷ் சசி...

  கவிதைகளின் வலிமையே இதுதான்.... அதிலும் சொல்ல வந்த கருத்தை தெளிவாக கவிதையில் புகுத்தி அதை வாசிக்கையில் நம்மையும் ஒரு பகுதியாக அதில் மாற்றி...

  நல்ல கரு...
  நல்ல நடை...
  தெளிவான நல்ல கவிதை...

  அமரனின் கச்சித பின்னுட்டத்திற்க்கு பிறகு கவிதை இன்னும் அழகாய்...

  வரும் மழை என்று தெரிந்தும் நனையாமல் சென்றது நாயகன் அவசரமோ...!!!!
  மிக்க நன்றி பென்ஸ் அண்ணா( ஆதவா அண்ணன்னு கூப்பிடறாரே.. நானும் கூப்பிடறேன்.) உங்கள் கேள்வி உறைக்கிறது. இருந்தாலும் சில கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருப்பதே அழகு இல்லையா...
  நான் உனக்களித்த அன்பு...
  நீ அனுபவிக்காதது என்றாய்.
  நீ எனக்களித்த அன்பு...
  இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
  நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •