Results 1 to 5 of 5

Thread: உன்னை ஆராதிப்பேன்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2006
    Location
    chennai
    Posts
    77
    Post Thanks / Like
    iCash Credits
    4,870
    Downloads
    0
    Uploads
    0

    Red face உன்னை ஆராதிப்பேன்

    முழு நிலவாய் முகம் காட்டவிடினும்
    வளர் பிறையாய் தேய் பிறையாய்
    அரை குறை முகமும் காட்டாது
    அம்மவாசையாய் அடைத்து கொள்கிறாய்

    உன் முகம் காண
    இரவில் உன் தெருவில்
    குறுக்கும் மறுக்கவும்
    அலைந்து அலைந்து
    கூர்கா கூலி கிடைத்தது

    பகல் எல்லாம் உன் தெருவில்
    அலைந்து அலைந்து
    உன் தெருவுக்கும்
    பால்காரன் முதல்
    தபால்காரன் வரை
    பாரிட்ச்யமாகி போனார்கள்

    உனக்காக
    காத்திருக்கையில்
    கல்லெறிந்து கல்லெறிந்து
    குட்டையே தூர்ந்து போனது

    உனக்காக
    பேரூந்து நிறுத்தத்தில்
    காத்திருந்து காத்திருந்து
    வழித்தடம் சொல்லும்
    டைம் கீப்பர் ஆகி போனேன்

    பார்க்கும் பெண்கள் எல்லாம்
    நீயாகா எனக்கு தெரிவதற்குள்
    உன் அழகு முகம் காட்டி
    அமிழ்து ஊட்ட வா வா
    வாரதிருந்தால் ஆவியாய்
    உன் வீடு புகுந்து
    உன்னை ஆராதிப்பேன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,960
    Downloads
    151
    Uploads
    9
    சிறுமறைவின் பின்நின்று துளியாக ஒளிமுகம் காட்டும் சேய் நீயானால் தாயடி நானுனக்கு!
    ஆரம்பத்தில் மலைத்தேன் பிச்சுமணி..
    "அடைந்தால் காதல்தேவி இல்லெயேல் மரணதேவி" என்று முடித்தபோது கலைந்தேன்.

    தொடருங்கள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    25,023
    Downloads
    2
    Uploads
    0
    நல்லா இருக்கு நண்பரே... தொடருங்கள்...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2006
    Location
    chennai
    Posts
    77
    Post Thanks / Like
    iCash Credits
    4,870
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அமரன் சசிதரன்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    45,195
    Downloads
    114
    Uploads
    0
    கவலைப்படாதீர்கள்....
    வேலையில்லாத் திண்டாட்டக் கவலை உங்களுக்கு வேண்டாம்...
    அது தான் பலவேலைகள் பழகியிருக்கிறீர்களே...
    அனாலும்
    நீங்க ரொம்ப நல்லவருங்க...
    சம்பளமே வாங்காம இத்தனை வேலைகள் செஞ்சிருக்கீங்களே...

    கவிதை புன்னகைக்க வைத்தது.. என்னை
    வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •