Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: பிடிக்கும்....!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,235
    Downloads
    39
    Uploads
    0

    பிடிக்கும்....!!!

    உப்பு பெறாத என் சின்ன ஆசைகளுக்கு
    ஒப்புக்கு கூட மறுக்காமல்
    ஒத்துக்கொள்ளும் உள்ளம் பிடிக்கும்!

    என்னிடம் மறைத்து,
    சொல்லாமல் ஒளித்து,
    எதிர்பாராமல் பரிசளிக்கும்
    கள்ளம் பிடிக்கும்!

    களைப்பாய் வீடு திரும்பி
    காப்பிக் கேட்டு கத்தாத
    அதிகாரமில்லா ஆண்மை பிடிக்கும்!

    தவறு செய்யாத தன்மை பிடிக்கும்
    தவறி செய்தாலும்
    சொல்லிவிடும் உண்மை பிடிக்கும்!

    இரவின் மூர்க்கம் பிடிக்கும்
    பகலின் சாந்தம் பிடிக்கும்
    பிள்ளையைக் கண்டிக்கையில்
    தடுக்காது தள்ளி நிற்கும்
    தந்தைமை பிடிக்கும்!

    தனக்கென எதையும் வைக்காது
    தன்னை எல்லாமுமாய்
    என்னிடம் தந்தமை பிடிக்கும்!

    சிரிப்பது பிடிக்கும்
    சீண்டுவது பிடிக்கும்
    வேண்டுவது பிடிக்கும்-தடை
    தாண்டுவது பிடிக்கும்!

    பாசம் பிடிக்கும்
    நேசம் பிடிக்கும்
    வாசம் பிடிக்கும்
    ரோசம் பிடிக்கும்!

    தாயாய், தந்தையாய்,
    தோழனாய், கணவனாய்
    எல்லாமுமாய் இருத்தல் பிடிக்கும்!

    ஆயின் கணவனே...................

    உன்னிடம் கிடைக்காத இவை அனைத்தையும்
    உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு
    ஒப்புக்கு உன் முன்னால்-என்
    ஒப்பனை முகம் நடிக்கும்!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,803
    Post Thanks / Like
    iCash Credits
    59,230
    Downloads
    57
    Uploads
    0
    காந்தமாய் சொல்லமர்த்தி
    சாந்தமாய் அவளாசையை
    சொன்னவிதம் அருமை
    அண்ணா..

    பேசுக்கும் எனக்கு
    பிடித்தமானவைகள் கேட்கவில்லை நீ..
    மூச்சும் விடவில்லை நான்

    எப்போதும் நீயிப்படித்தான் என்றாலும்
    ஒப்பேதும் இல்லாதவன் தான்நீ எனக்கு
    என்பதெல்லாம் அக்காலம்
    எப்போதும் நீயிப்படித்தான் என்றால்
    முப்போதும் இல்லாதவன் தான்நீ எனக்கு
    இது இக்காலம்..

    கனக்கசத்தினமான வார்த்தை அமைப்புகள் கலக்கீட்டிங்க அண்ணா..

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    அன்புடன் ஆதி



  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    4,708
    Downloads
    28
    Uploads
    0
    தவறு செய்யாத தன்மை பிடிக்கும்
    தவறி செய்தாலும்
    சொல்லிவிடும் உண்மை பிடிக்கும்!
    தவறை செய்வதை விட இதை ஒப்புக்கொள்வதுதான் கடினமானது அதையே ஒப்புக்கொண்டால் வாழ்க்கையில் சந்தோசக் கடல் பொங்கும்


    உன்னிடம் கிடைக்காத இவை அனைத்தையும்
    உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு
    ஒப்புக்கு உன் முன்னால்-என்
    ஒப்பனை முகம் நடிக்கும்!
    ஒரு மனைவியின் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள் சிவா.ஜி அண்ணா கவிதையின் வரிகள் அனைத்தும் படித்தபின் மனதுக்குப்பிடித்துவிட்டன.


    அருமையான கவிதை...........................

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,996
    Downloads
    47
    Uploads
    0
    ஒவ்வொரு பிடிக்கும்'களை எப்படி அடுக்கியிருக்கிறீர்கள்!!!

    சும்மா சொல்லிவிடவில்லை... ஒவ்வொரு பிடிக்கும்களும் காதல் தூண்டும் வார்த்தைகள்.

    ஒரு கணவன் மனைவிக்கு உள்ளே உள்ள பரஸ்பர அன்பு எப்படியிருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது கவிதை.. கணவன் எப்படியிருக்கிறானோ அப்படியே பிடிக்கும் என்று சொல்லும் மனைவி.... அப்படியொரு மனைவி கிடைப்பது பாக்கியம் தானே!!

    ஒரு பெண்ணின் பார்வையில், ஆணை எப்படியெல்லாம் (எதிர்)பார்க்கிறாள் ;

    அதிகாரமில்லாத ஆண்மை பிடிக்குமாம்... ஆண்மைத்தனத்தில் அதிகாரம் வெறுக்கும் அப்பெண்ணின் எதிர்பார்ப்பு சிறந்ததே, கவிதையில் வார்த்தை கவனமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.இரவில் மூர்க்கம், பகலில் சாந்தம் என்று, தழுவிச் செல்லும் காமம், சுளிப்பில்லாமல் சொல்கிறது. தந்தைமை எனும் வார்த்தை தமிழில் உண்டோ? எனக்குத் தெரிந்து இல்லை..

    வாசம் பிடிக்கும் எனும் சொல்.... கவனிக்கத்தக்கது. கணவனை எப்படியெல்லாமோ காதலிக்கிறாள். அவன் வியர்வைகூட முகம் சுளிப்பதில்லையாம்.

    இத்தனை எளிமையாய், பெண்மையாய், ஆழமாய், கவிதைகள் படிப்பது நீண்டநாட்களுக்கு ஒருமுறைதான்.. அது இன்று வாய்த்திருக்கிறது.

    வாழ்த்துக்கள் அண்ணா..

    காதல் சொல்லும் இக்கவிதைக்கு
    • 250 இகாசுகள்
    • 5 ஸ்டார்கள்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    40
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    51,817
    Downloads
    100
    Uploads
    0
    உன்னைப் எனக்குப் பிடித்தது...
    உனக்குப் பிடித்தது
    எனக்குப் பிடிபடாதது
    எனக்கு ஏனெனப் பிடிபடவில்லை...
    உனக்குப் பிடித்தது
    எனக்குப் பிடிபட்டபோது
    எனக்கு என்னைப் பிடிக்கவில்லை...

    தம்பதி ஆனாலும்,
    இன்னமும்
    உன் பாதி ஆகாத உன் பதி,
    என்னால்,
    தாம்பத்தியம்,
    உனக்குப் பத்தியமாக...

    பவித்திரம் அணிந்தது
    நானுமானாலும்,
    இன்றுவரை,
    பவித்திரமாய் அணியாவது
    நீ மட்டும்தான்...

    பதிவிரதை நீ...
    என்னால்,
    விரதம் உனக்கு...

    திரவியம் நீ...
    என்னால்,
    விரயம் உனக்கு...

    திருமதி நீ
    எனக்கு வெகுமதி...
    ஆனால்
    என்னால் வேகும் மதி...

    இன்றுவரை உன் குணம் பார்த்தேன்...
    இன்றுமுதல் உன் மனம் பார்ப்பேன்...

    *****
    அபாரக் கவிதை...
    இறுதிப் பத்திவரை, உயர்ந்திருந்தான் கணவன்.
    இறுதிப் பத்தியிலோ, உயர்ந்துவிட்டாள் மனைவி.

    சொற்கட்டுகள் கட்டிப் போடுகின்றன. சொக்க வைக்கின்றன.

    மிகுந்த பாராட்டுகள் சிவா.ஜி...

    *****
    ஒன்றில் மட்டும் சிறு சந்தேகம்.
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உன்னிடம் கிடைக்காத இவை அனைத்தையும்
    இப்படியானதால்,
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சிரிப்பது பிடிக்கும்
    சீண்டுவது பிடிக்கும்
    வேண்டுவது பிடிக்கும்-தடை
    தாண்டுவது பிடிக்கும்!
    என்றாகையில்,
    தடை தாண்டுவதில்லை என்ற அர்த்தமாகிடாதோ...

    *****
    மனைவியை முழுமையாய்ப் புரிந்து,
    மகிழ்வாய் வாழ்ந்துகொண்டிருக்கும்,
    உங்களுக்குள்,
    இப்படி ஒரு முரண் பார்வை,
    யதார்த்தமான கவிதையாகப் பரிணமித்தது,
    மிகுந்த வியப்பைத் தருகின்றது.

    ஒருவேளை முரண்படுத்திப் பார்த்தீர்களோ...

    மீண்டும் பாராட்டுக்கள்...

    5 நட்சத்திரக் கௌரவிப்பும், 500 இ-பண அன்பளிப்பும் வழங்கி மகிழ்கின்றேன்.

    *****
    ஆதியின் அழகுக் கவிக்கும்,
    ஆதவாவின் அம்ச விமர்சிப்புக்கும்,
    விசேட பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 18-12-2008 at 08:37 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் இறைநேசன்'s Avatar
    Join Date
    14 Apr 2008
    Location
    CHENNAI
    Posts
    423
    Post Thanks / Like
    iCash Credits
    4,526
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆயின் கணவனே...................

    உன்னிடம் கிடைக்காத இவை அனைத்தையும்
    உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு
    ஒப்புக்கு உன் முன்னால்-என்
    ஒப்பனை முகம் நடிக்கும்!
    அருமையான கருவொன்றை அழகாக கவிவடித்த
    அன்பர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அனேக பெண்களின் உள்ள பிரதிபலிப்பு அப்படியே
    உங்கள் வார்த்தையில் பிரதிபலிப்பது ஆச்சர்யமே!

    அன்பால் வயப்பட்ட கணவனும் மனைவியும்
    ஒருவரை ஒருவர் பிரதிபலிக்கும் கண்ணாடி என்றே கருதுகிறேன்.
    எதிபார்ப்பதை நிறைவேற்றினால் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்!
    அன்புடன்
    இறைநேசன்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    4,034
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல கவிதை. மனைவிக்கு கணவன் மேலே உள்ள எதிர்பார்ப்புகளை சொல்லும் கவிதை.
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,235
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    பேசுக்கும் எனக்கு
    பிடித்தமானவைகள் கேட்கவில்லை நீ..
    மூச்சும் விடவில்லை நான்

    எப்போதும் நீயிப்படித்தான் என்றாலும்
    ஒப்பேதும் இல்லாதவன் தான்நீ எனக்கு
    என்பதெல்லாம் அக்காலம்
    எப்போதும் நீயிப்படித்தான் என்றால்
    முப்போதும் இல்லாதவன் தான்நீ எனக்கு
    இது இக்காலம்..
    ஆஹா...ஆதியின் தமிழில் அழகு மிளிர்கிறது. உணர்ந்து எழுதிய பின்னூட்டத்திற்கு என் உளம்நிறைந்த நன்றிகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,235
    Downloads
    39
    Uploads
    0
    உற்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நிரஞ்சன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,235
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    தந்தைமை எனும் வார்த்தை தமிழில் உண்டோ? எனக்குத் தெரிந்து இல்லை..
    [/LIST]
    கவிதையை எப்படி விமர்சிப்பது எனக் கற்றுக்கொடுக்கும் ஆசானின் விமர்சனமல்லவா..? சொக்க வைக்கிறது. எழுதிப்பதிக்கும்போது இல்லாத நிறைவு உங்கள் எழுத்தைப் பார்த்தபின் கிடைக்கிறது ஆதவா....

    தாய்மை இருக்கும்போது ஏன் தந்தைமை இருக்கக்கூடாது எனத்தான் அந்த வார்த்தையை பிரயோகித்தேன். இதுவரை இல்லையென்றால் என்ன இனி சேர்த்துக்கொள்ளலாமே....(கொஞ்சம் ஓவர்தான் இல்ல....)

    மனம் நிறைத்த வரிகளுக்கும், வாரிவழங்கிய பரிசுக்கும் என் இதயப்பூர்வ நன்றிகள் ஆதவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,235
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    உன்னைப் எனக்குப் பிடித்தது...
    உனக்குப் பிடித்தது
    எனக்குப் பிடிபடாதது
    எனக்கு ஏனெனப் பிடிபடவில்லை...
    உனக்குப் பிடித்தது
    எனக்குப் பிடிபட்டபோது
    எனக்கு என்னைப் பிடிக்கவில்லை...

    தம்பதி ஆனாலும்,
    இன்னமும்
    உன் பாதி ஆகாத உன் பதி,
    என்னால்,
    தாம்பத்தியம்,
    உனக்குப் பத்தியமாக...

    பவித்திரம் அணிந்தது
    நானுமானாலும்,
    இன்றுவரை,
    பவித்திரமாய் அணியாவது
    நீ மட்டும்தான்...

    பதிவிரதை நீ...
    என்னால்,
    விரதம் உனக்கு...

    திரவியம் நீ...
    என்னால்,
    விரயம் உனக்கு...

    திருமதி நீ
    எனக்கு வெகுமதி...
    ஆனால்
    என்னால் வேகும் மதி...

    இன்றுவரை உன் குணம் பார்த்தேன்...
    இன்றுமுதல் உன் மனம் பார்ப்பேன்...

    *****

    ஆஹா...ஆஹா....அற்புதமான வரிகள். அக்னியின் பின்னூட்டக் கவிதைகளுக்கு நிகரில்லை. எத்தனை அழகான வார்த்தை விளையாடல்....அடடா....மிகப் பிரமாதம்.


    ஒன்றில் மட்டும் சிறு சந்தேகம்.

    இப்படியானதால்,

    என்றாகையில்,
    தடை தாண்டுவதில்லை என்ற அர்த்தமாகிடாதோ...

    *****
    அதேதான் அக்னி. அதற்கு முன்பான வரிகளை கவனியுங்கள்...

    வேண்டுவது பிடிக்கும்-தடை
    தாண்டுவது பிடிக்கும்...

    வேண்டாமலேயே மனைவிடம் எல்லாமும் கிடைத்தாலும், சீண்டி, பின் வேண்டி..அதை அவள் செல்லமாய் மறுத்து....அவள் மறுத்தாலும்,அந்த தடையைத் தாண்டி அவளிடம் அவன் வேண்டுவதைப் பெறுவது என ஒரு காதல் விளையாட்டு.....இதில் அவன் தடை தாண்டுவதை அவள் விரும்புகிறாள். ஆனால் இந்தக் கணவனோ வேண்டுவதுமில்லை, தடை தாண்டுவதுமில்லை...


    அற்புதமான பின்னூட்டக் கவியெழுதி என் படைப்புக்குப் பெருமை சேர்த்ததற்கும், பொற்கிழிக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,235
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by இறைநேசன் View Post
    அன்பால் வயப்பட்ட கணவனும் மனைவியும்
    ஒருவரை ஒருவர் பிரதிபலிக்கும் கண்ணாடி என்றே கருதுகிறேன்.

    அன்புடன்
    இறைநேசன்
    மிக மிக சத்தியமான வார்த்தைகள் இறைநேசன். இவனில் அவளைக் காணலாம், அவனில் இவளைக் காணலாம்...ஒருவரையொருவர் புரிந்துகொண்ட தம்பதிகளில்....

    தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •