கவிதையின் சுவையினை சுவைத்திட காத்திருக்கும் சுவை நெஞ்சங்களுக்கு வந்தனங்கள். நான் ஒன்றும் பெரிய கவிஞனல்ல. நல்ல ரசிகன் என்று சொல்லலாம். நல்ல பல விடயங்களை ரசிப்பதில் ஆர்வமிருக்கிறது. ரசித்த அந்த விடயங்களை வார்த்தைகளைக் கோர்த்து பகிர்ந்துகொள்வதில் பிரியமிருக்கிறது. இந்தக் கிறுக்கல்களை கவிதைபோல் இருக்கிறது என என் நண்பர்கள் குறிப்பிடுவார்கள். இதுதான் என்னை கவிதை எழுத வைத்தது எனலாம். குறிப்பாக என் அன்புக்குரியவளைச் சொல்வேன். என்னை கவிதையெழுத வைத்தவள் அந்த மதிபோல் மென்மையானவள்தான். சாதாரண கிறுக்கல்களை கவிதைநயத்தோடு படித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தியவள். என்னுடைய கவிகளுக்கு அவள்தான் சொந்தக்காரி... என்னுடைய சில படைப்புகளை http://apmathan.blogspot.com என்னும் தளத்தில் பதிந்து வைத்திருக்கின்றேன். படித்துப்பாருங்கள், விமர்சனங்களை அன்போடு குட்டிச் சொல்லித்தாருங்கள்...
Bookmarks