ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்
- வி. சிவசாமி


படித்ததில் பிடித்தது

இதனை எழுதுவதற்கான பல நூல்களையும் கட்டுரைகளையும், பேராதனைவளாக நூலகத்திலும், யாழ்ப்பாணவளாக நூலகத்திலும் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக பேராதனைவளாக நூலகத்தினைச் சேர்ந்த நண்பர் திரு. எம். துரைசுவாமி அவர்கள் இவ்விடயம் பற்றிய தகவல் தேட்டத்திற்கு அரும்பெரும் உதவி செய்துள்ளார்.

இந்நூலைப் பிரசுரித்தற்கான தாள்களைக் குறைவின்றிப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய கிழக்கு இலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களும். இதனை அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாரும், குறிப்பாக முன்னின்று முகமலர்ச்சியுடன் உதவிய நண்பர் திரு. க. முருகேசு அவர்களும் நினைவுக்குரியவர்கள்.

நூலாக்கப் பணியின் போது ஊக்கியும், பிரசுரிக்கும்போது இதன் அமைப்புப் பற்றிய ஆலோசனைகளைக் கூறியுமுதவிய நண்பர் திரு. ஆ. சிவநேசச் செல்வன் அவர்களுக்கும், பல வழிகளில் ஊக்கி உதவி செய்த ஏனைய நண்பர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி உரியது.

காய்தலுவத்தலகற்றி யொருபொருட்கண்
ஆய்தலறிவுடையார்க் கண்ணதே

யாழ்ப்பாண வளாகம்
திருநெல்வேலி வி. சிவசாமி
வைகாசித் திங்கள், 1976.


பொருளடக்கம்

பக்கம்

ஆரியர் ... 1
ஆதி இருப்பிடம் ... 3
இந்தோ - ஆரிய இந்தோ - இரானியத் தொடர்புகள் ... 10
இந்தோ ஐரோப்பிய மொழிகள் ... 11
ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா ஐரோப்பாவிலா? ... 13
ஆரியரின் புலப் பெயர்ச்சிகளும் காலமும் ... 18
இந்தியாவில் ஆரியர் ... 29
வேத இலக்கியம் ... 30
வேதங்களின் காலமும் வரலாற்றியல்பும் ... 34
வேத காலத்தில் ஆரியர் வாழ்ந்த இடங்களும் ஜனக் குழுக்களும் ... 37
வேத கால அரசியல் நிலை ... 44
வேதகாலச் சமயதத்துவநிலை ... 52
வேதகாலச் சமூகநிலை ... 68
வேதகாலப் பொருளாதாரநிலை ... 82
பிற்காலம் ... 88
அடிக் குறிப்புகள் ... 95
உசாத்துணை நூல்கள் ... 107
அட்டவணை ... 113
பிழைதிருத்தம் ... 116

ஆரியர்

இந்தியாவிற்குக் குறிப்பிடத்தக்க தொண்டு செய்தோரில் ஆரியர் முக்கியமான இடமொன்றினைப்பெறுகின்றனர். ஆரியர் என்ற பதம் வரையறுக்கப்பட்ட ஓரினத்தையன்றிக் குறிப்பிட்ட மொழி. கலாச்சாரத்தினைக் கொண்ட மக்களையே குறிப்பதாகும். ஆனால் அறிஞர்களில் ஒருசாரார் இப்பதம் இனத்தினைக் குறிக்கும் எனவும் கொள்வர். எவ்வாறாயினும் பிறமக்கள் பலரிலும் பார்க்க இவர்களின் செல்வாக்கு இந்தியாவில் மேம்பட்டுக் காணப்படுகின்றது. இவர்களும் திராவிடரும், ஆதிஒஸ்ரலோயிட் போன்ற பிறரும் ஒன்றுபட்டு உருவாக்கியதே புகழ்பெற்ற இந்தியப் பண்பாடாகும். இவ் ஆரியர் எங்கிருந்து வந்தாலும் அவர்களின் வீரம், துணிச்சல், நாகரிக வளர்ச்சி ஆகியன குறிப்பிடத்தக்கன. இந்தியாவிற்கும் பிற இடங்களுக்குமிவர்கள் சென்று அவ்வவ் இடங்களிலே நிலவிய மேம்பட்ட மேம்படாத கலாச்சாரங்களைச் சிலவேளைகளில் அழித்துத் தமது பண்பாட்டினைத் திணித்தனர்@ சில வேளைகளிலே தம்மிலும் மேம்பட்ட பண்பாடுள்ள மக்களை வென்றபோது அம் மக்கள் கலாச்சாரத்தினைத் தாம் ஏற்றுக்கொள்ளப் பின்னின்றிலர். தேவையான தவிர்க்கமுடியாத வேளைகளிலே ஒத்த மேவல் (ஊழஅpசழஅளைந) செய்தும் வந்தனர். தம்முடன் உறவாடிய, தொடர்பு கொண்ட பிறமக்களின் பண்பாடுகள் வளர்ச்சியடையும் பல வேளைகளில் பண்பாடுகள் வளர்ச்சியடையவும் பல வேளைகளில் உதவி அளித்தும் வந்தனர். இந்தியாவில் ஆரிய மொழியின் முக்கியத்துவத்தினை முதுபெரும் மொழிநூற் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தியாவில் எம்முன்னோர் விட்டுச் சென்றுள்ள மிகப்பெரிய செல்வங்களில் எமது ஆரிய மொழியும் ஒன்றாகும். மேலான ஒழுங்கு முறைகளுடன், நெக்கிறிற்றோ, ஆத ஒஸ்ரலோயிட் (திராவிட முதலிய) பலவகையான மக்கட் கூட்டங்களை ஒருங்கு இணைத்தவர்கள் ஆரியரே. இவ்வாறு ஏற்பட்ட ஒருமைப்பாட்டிலே சில இடங்களில் இதன் கூறுகள் இரண்டறக் கலந்து விட்டன. சில இடங்களிலே, மேலெழுந்தவாரியாகவே ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்களின் வரலாறு, சமயம், தத்துவம் - இந்தியாவின் தனிச்சிறப்பான பண்பாடு ஆதியன உருவாகுவதற்கு மிக முக்கியமான காரணியொன்றாக ஆரியமொழி இலங்கிற்று. ஒஸ்ரிக் மொழிபேசியமக்களும், திராவிடரும் அமைத்த அத்திவாரத்தின் மேலேதான் ஆரியர் கட்டத் தொடங்கிய கூட்டான பண்பாடு இந்திய மண்ணிலே மலர்ந்தது. இப்பண்பாட்டினை வெளிப்படுத்தும் வாயிலாகவும், இதன்சின்னமாகவும் இவ் ஆரியமொழி விளங்கிற்று. வடமொழி, பாளி. வடமேற்குப் பிராகிருதம், அர்த்தமாகதி, அபப்பிரம்சம் முதலியனவாகவும், பிற்காலத்திலே ஹிந்தி, குஜராத்;தி, மராத்தி, ஓரிய, வங்காளி, நேபாளி முதலிய பல மொழிகளாகவும் இவ் ஆரிய மொழி கிளைத்து வளர்ந்தது. இவ்வாறாக இம்மொழி வௌ;வேறு காலங்களிலே வௌ;வேறு பிராந்தியங்களில் இந்திய கலாச்சாரத்துடன் அழிக்க முடியாத வகையில் ஒருங்கு இணைந்து விட்டது.

'ஆரிய' என்ற பதம் உயர்குடிச் சேர்ந்த, மிகநேர்மையுள்ள, சிறப்பு வாய்ந்த, பெருந்தன்மையுடைய, மிக மரியாதையுள்ள முதலிய பல கருத்துக்கள் கொண்டதாகும்.

ஆரியர் "நோர்டிக்" எனவும் அழைக்கப்படுவர். தொடக்கத்தில் இவர்கள் உயரமானவர்கள்@ வெண்ணிறமுடையவர்கள்@ மஞ்சள் அல்லது பொன்நிறக் கேசம் உடையவர்கள்@ நீலக்கண்கொண்டிருந்தனர். இத்தகையோராகவே வேத இலக்கியத்தில் இவர்கள் ஒரளவு காட்சியளிக்கின்றனர். ஆனால் காலப்போக்கிலே புதிய இருப்பிடத்தின் சீதோஷ்ண வேறுபாடுபிறமக்களுடன் கொண்டிருந்த தொடர்பு முதலியனவற்றால் நிறம் போன்றவற்றிலே மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் மேற்குறிப்பிட்ட இயல்பு கொண்டோரை வட இந்தியாவின் சில பகுதிகளிலும் 'மஹாராஷ்டிரம்' போன்ற இடங்களிலும் காணலாம்.

ஆதி இருப்பிடம்

ஆரியரின் ஆதி இருப்பிடம் எது என்பது பற்றி முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களும் அறிஞரிடையிலே நிலவுகின்றன. இவர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் என ஒரு சாராரும், வெளியேயிருந்து வந்தவர்கள் என பிறிதொருசாராரும் கூறுகின்றனர். இவ்விருவகையான கருத்துடையோரிடத்தும் தனிப்பட்ட வகையிலே கருத்து வேறுபாடுகள் உள. இவற்றினைத் தொகுத்துக்குறிப்பிடலாம்.

ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவெனக் கொள்ளுவோரிலே திரு. எம். ஜா. பிரஹமர்ஷி தேசம் என்பர். கலாநிதி டி. எஸ். திரிவேத முல்தானிலுள்ள தேவிகா ஆற்றுப் பிரதேசம் என்பர்@ திரு. எஸ். டி. கல்ல காஷ்மீர் ஹிமாலயப் பிரதேசம் என்பர். திரு. ஏ. சி. தாஸ். திரு. கே. எம். முன்ஷி சப்த சிந்து அல்லது பஞ்சாப் என்பர். இவ்வாறு கொள்ளுவோரிற் சிலர் ஆரியர் இந்தியாவிலிருந்து மேற்கேயுள்ள பிற இடங்களுக்கும் சென்றனர் எனக்கூறுவர்.

இவ் அறிஞர்களின் கருத்துப்படி, ஆரியர் வேற்று நாட்டவர் என்பதற்கோ, புலம் பெயர்ந்ததற்கோ தக்க சான்றுகளில. இருக்குவேதகால ஆரியர் சப்த சிந்துப் பகுதியினையே தெய்வத்தால் ஆக்கப்பட்ட தேசமாகவும் தாயகமாகவும் கொண்டனர். புலம்பெயர்ந்து செல்வோர் தமது தாயகத்தினைப்பல நூற்றாண்டுகளின் பின்னரும் நினைவு கூருவர். ஆனால், ஆரியர் இவ்வாறு செய்திலர். ஆதி வடமொழிக்கும், ஆதி இரானியமொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையிற் காணப்படும் ஒற்றுமையியல்புகள் புலப்பெயர்ச்சிக் கான சான்றுகளல்ல. மேலும் வேத இலக்கியம் மிகப் பழமையானது. வெளியிலிருந்து இவர்கள் வந்தவரெனின் ஏன் வரும் வழியில் இலக்கியம் இயற்றிலர்? இந்தியாவிற்கு வந்த பின்னரே இவர்கள் பண்பாட்டு மேன்மையடைந்தனர் எனக் கூறமுடியாது. இந்தியாவிலிருந்தே இவர்கள் வெளியே சென்றிருப்பர். வேள்விச் சடங்குகள் இருக்குவேதம் தொகுக்கப்படுமுன்னரே இந்தியாவிலேற்பட்டு விட்டன.

ஆனால் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. முதலாவதாக, இந்தியாவே அவர்களின் ஆதி இருப்பிடமாயின், அது முழுவதையும் ஆரியமயமாக்கிய பின்னரே வடமேற்கு எல்லையினைக் கடந்து இரானிற்கும், பிறமேற்கு ஆசியா நாடுகள், ஐரோப்பா ஆகிய இடங்களிற்கும் சென்றிருப்பர். வரலாற்றுக்காலத்தில் இத்தகைய மக்கட்புலப் பெயர்ச்சி வடமேற்கு எல்லைக்கு ஊடாக நடைபெற்றிலது. இந்தியாவின் தென்பகுதியில் திராவிட மொழிகள் பரந்து நிலவுவதே ஆரியர் வெளியே இருந்து வந்தமைக்குத் தக்கசான்று எனலாம். மேலும் வேத இலக்கியம் முழுவதையும் கூர்ந்து கவனிக்கும்போது ஆரியர் படிப்படியாக வடமேற்கு இந்தியாவிலிருந்து கங்கைச் சமவெளிக்கும் பின் தக்கணம், தென் இந்தியா ஆகியனவற்றிற்கும் சென்றமையினை அவதானிக்கலாம். அடுத்தபடியாக, வடமொழியுடன் தொடர்புள்ள பிறமொழிகள் ஐரோப்பாவிலேயே தொடர்புள்ள பிறமொழிகள் ஐரோப்பாவிலேயே நெருங்கிக் காணப்படுகின்றன. ஆனால், ஆசியாவிலே வடமொழியுடன் தொடர்புள்ள மொழிகள் சிதறிச் சில இடங்களிலேயே நிலவுகின்றன. மேலும் இந்தியாவின் காலத்தால் முந்திய சிந்துசமவெளி நாகரிகம் (ஹரப்பாகலாச்சாரம்) ஆரியச் சார்பற்றதெனப் பல அறிஞர் கருதுகின்றனர்.

எனவே, ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே உளது எனலாம். இதனை அறிய இருக்குவேதம், ஆதிக்கிரேக்கர், ஆதி இரானியர் போன்ற பிற ஆரியரின் புராதன நூல்கள், தொல்பொருட்கள், ஒப்பியல்மொழிநூல், மானிடவியல்நூல் போன்றவற்றினையே துணையாகக் கொள்ள வேண்டியுளது. இவற்றினைத் துணைகொண்டு மிக முற்பட்டகால ஆரியரின் நாகரிகம், நடமாட்டங்கள், புலப்பெயர்ச்சி ஆகியவற்றினை ஒரளவு ஊகிக்கலாம்.

ஐரோப்பாவின் புராதனமொழிகளான கிரேக்கம், லத்தீன் போன்றவற்றினையும், வடமொழியினையும் பயின்ற மேனாட்டறிஞர் பலர் இவற்றிடையே நிலவிய ஒற்றுமையியல்புகளைக் கண்டு வியப்புற்றனர். இவை ஒரே மூலத்திலிருந்து முகிழ்த்திருக்கலாம் என முடிவு கட்டினர். எடுத்துக் காட்டாக, "வட மொழியின் தொன்மை எவ்வாறாயினும், அதுவியக்கத்தக்க அமைப்புக் கொண்டது@ கிரேக்கத்திலும் பார்க்க முழுமையானது@ லத்தீனிலும் பார்க்க வளமுள்ளது. இவ்விருமொழிகளிலும் பார்க்க மிக நேர்த்தியானது@ அப்படியாயினும் வினையடிச் சொற்கள், இலக்கண வடிவங்கள் ஆகியனவற்றில் இவ்விரண்டினுடன் தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியாத நெருங்கிய தொடர்புள்ளதாய்க் காணப்படுகின்றது. இத்தொடர்பு மிகவலுவாகக் காணப்படுதலின், இவற்றை ஆயும் மொழிநூலறிஞன் எவனும் இவை அனைத்தும் ஒரு பொது மூலத்திலிருந்து தோன்றியவை என்பதை நம்பாதுவிடமாட்டான். கோதிக். கெல்ரிக் போன்றவையும் வடமொழி மூலத்தைக் கொண்டவையே. பழையபாரசீக மொழியுமிதே குடும்பத்தைச் சேர்ந்ததே" என்றகருத்தினைச் சேர்வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1786-ல் வங்காளத்திலிருந்த வேத்தியல் ஆசியக்கழகத்தில் நிகழ்த்திய புகழ்பெற்ற விரிவுரையிலே தெரிவித்தார். இம்மூலமொழி இந்தோ - ஐரோப்பிய மொழியெனப் பெயரிடப்பட்டது. இதனைப் பேசியமக்கள் இந்தோ ஐரோப்பியர் என அழைக்கப்பட்டனர். இதன் விளைவாக ஒப்பியல் மொழிநூல், மொழியியல் ஆகியவற்றிற்கு வித்திடப்பட்டது. இதன்பின்னர் பேராசிரியர் ம~;முல்லரும் இதே கருத்தினைத் தெரிவித்தார். ஆனால், ஆரிய மொழிகளைப் பேசியோர் ஒரே இனத்தவராய் இருந்திருக்கத் தேவையில்லை. சில அறிஞர் இவர்கள் ஒரேஇனத்தவர் எனவும் கருதுவர். ஆனால் அக்கருத்துச் சரியன்று.

வடமொழிக்கும் பிற ஆரியமொழிகளுக்குமிடையில் உள்ள சொல் ஒற்றுமைகளைக் குறிப்பாக, உறவினர் தெய்வம், மிருகங்கள், எண்கள் முதலியனவற்றைக் குறிக்கும் சொற்களிலே காணலாம். எடுத்துக்காட்டாக. சகோதரனைக் குறிக்கும் வடமொழிச் சொல்லான பிராதர் என்பதையும், அதே கருத்தினைக் கிரேக்க மொழியிற் குறிக்கும் பிராதெர் என்பதையும், லத்தீன் மொழியில் விரதர், கெல்ரிக் மொழியில் பிறதிர், தியூத் தோனியக் சார்பான ஆங்கிலத்தில் பிரதர் என்பனவற்றையும் ஒப்பிடலாம். இதுபோலவே, தாய், தந்தையைக் குறிக்கும் மாதர், பிதர் ஆகிய வடசொற்கள் முறையே மேற்ற, பேற்ற எனக்கிரேக்கத்திலும். மாற்ற, பாற்ற என லத்தீனிலும், மதிர், அதிர் எனக் கெல்ரிக்கிலும், மாடர், பாடர் எனத் தோக்கேரியத்திலும் வழங்குவன. தியூத்தோனியத்திலே வதர் எனும் சொல் தந்தையைக் குறிக்கும். தியூத்தோனியத்தைச் சேர்ந்த ஆங்கிலத்திலே வரும் மதர், வாதர் எனும் சொற்களையும் கவனிக்கலாம். மேலும், தெய்வத்தினைக் குறிக்கும் தேவ என்ற வடசொல், தியுஸ் என லத்தீனிலும், திய எனக் கெல்ரிக்கிலும், திவர் எனத் தியூத்தோனியத்திலும் திவொஸ் என லிதுவானியத்திலும் வழங்கும். இவை போலவே, சகோதரி, குதிரை, ஒன்று. பத்து, நூறு முதலியனவற்றைக் குறிக்கும் பதங்களிலும் ஒற்றுமை யுண்டு.

மேலும் ஆரியரின் தேரைக்குறிக்கும் ரத எனும் வடசொல்லினை இதே கருத்தில் லத்தீன் ரொத, கெல்ரிக்கில் ரொத், புராதன ஜேர்மானியத்திலும் லிதுவானியத்திலும் ரதஸ் என வரும் பதங்களுடன் ஒப்பிடலாம். இப்பதம் போலவே, சக்கரம். அச்சு, சில்லுக்குடம், நகம் முதலியனவற்றைக் குறிக்கும் இந்தோ - ஐரோப்பியப் பதங்களிடையில் ஒற்றுமையுண்டு.

இப்பெயர்ப்பட்ட பொதுச் சொற்கள், ஒப்பியல் மொழியியல், தொல்லியல், மொழியியற் புதைபடிவ ஆய்வியல் முதலியனவற்றின் துணைகொண்டு ஆதி ஆரியரின் நாகரிக நிலைகளை அறிவதற்கு அறிஞர் முயன்று சில முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றின்படி ஆதி ஆரியர் மிக உன்னதமான நாகரிகச் சிறப்புள்ளவராய் இருந்திலர். அவர்கள் வியக்கத்தக்க மொழியொன்றினைப் பேசிவந்தனர். சமூக ரீதியிலவர்கள் தம்மை நன்கு ஒழுங்குபடுத்தி யிருந்தனர். மிகமோசமான சூழ்நிலையிற் கூட. அவர்களின் ஜனக்குழு ஒற்றுமை குலைய வில்லை. பிற்காலத்தில் இவர்களுடன் தொடர்புற்ற பிறமக்கள் இவ் ஒற்றுமையினைக் கண்டு வியந்தனர். அவர்களின் சமூகம் குடும்பத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இக் குடும்பத்திலே தந்தை வழியுரிமையும். ஏகபத்தினி விரதமும் நிலவின. தந்தைவழியு ரிமையுடைய குடும்பமே இந்தியாவிற்கு வந்த ஆரியர் மத்தியிலே கோத்திரம் அல்லது குலம் என அழைக்கப்பட்டது. பொதுவாகத் தலைவனைக் கொண்ட இத்தகைய குலங்களே சமூகத்திலிருந்தன.

இந்தோ ஐரோப்பியர் சிறந்த கற்பனையுடையவர்கள். தாங்கள் சென்ற இடங்களிற் கேற்றவாறு தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். இவற்றால் அவர்களைப் பிறர் வெல்லமுடியாதிருந்தனர். ஆண், பெண் ஆகிய இருபாலார் மத்தியிலே நல்லுறவுகள் நிலவின. தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும், மகளாகவும் பெண்ணினை அவர்கள் நன்கு மதித்தனர். பெண்ணின்பாதுகாவலராகவும் விளங்கினர். தாயாகப் பெண் குறிப்பிட்ட குலத்தின் மதிப்புள்ள ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினாள்.

அவர்களின் சமயத்திலே மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் நன்மை சார்பான அம்சங்களே பிரதானமாக வற்புறுத்தப்பட்டன. தெய்வங்கள் மனிதரைப் போலன்றி மேலேயுள்ள உலகத்திலேதான் வாழ்பவர் என அவர்கள் கருதினர். தெய்வங்களை மனித அம்சங்கள் கொண்டவராக அன்றிப் பெரும்பாலும் சக்திகளாகவே அவர்கள் போற்றினர். மனிதப் பண்புகளையும் தெய்வங்களிலேற்றிக்கூறினர். ஆனால் இத்தகைய போக்கு மனித இயல்புள்ள தெய்வங்களை வணங்கிய மக்களின் தொடர்பு கொண்ட பின்னரே, அவர்கள் மத்தியிலேற்பட்டது. அவர்கள் வணங்கிய தெய்வங்களில் எடுத்துக்காட்டாக, வானமாகிய தந்தை, மாதாவாகிய பூமி, சூரியன், உஷா, காற்றுத் தெய்வம் முதலியோரைக் குறிப்பிடலாம். ஆதி எகிப்தியர், சுமேரியர் வணங்கிய தெய்வங்களைப்போல இவர்கள் வணங்கிலர். மேலும் ஆதி ஆரியரின் அன்றாட வாழ்விலே தீ பெரியதோரிடத்தைப் பெற்றிருந்தது. குளிர்வலய மக்களுக்குத் தீயின் இன்றியமையாமை வெள்ளிடைமலை. தீ வணக்கமும் பிரதான இடம் பெற்றிருந்தது.

புராதன இந்தோ - ஐரோப்பிய வேர்ச் சொற்கள் அவற்றிலே காலப்போக்கிலேற்பட்ட மாற்றங்கள் முதலியனவற்றினை அடிப்படையாகக் கொண்டு பிரான்டென்ஸ் ரென் என்ற அறிஞர் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதாவது ஆதி ஆரியர் பெரும்பாலும் வரண்டபாறைப் பிரதேசத்தில் வாழ்ந்தனர். அங்கு "வில்லோ", "ஒக்", "பேர்ச்" பிசினுள்ள மரம் முதலியன வளர்ந்தன. ஆனால் பெரிய காடுகளில்லை. பழமரங்களுமி;ல்லை. அவர்கள் காட்டுப்பன்றி, ஓநாய். நரி, கரடி, முயல், சுண்டெலி முதலிய காட்டு மிருகங்களையும் பசு, செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, நாய், பன்றி முதலிய வீட்டுமிருகங்களையும் அறிந்திருந்தனர். நிலம், நீர் ஆகிய இரண்டிலும் வாழும் மிருகங்களையோ மீனையோ அறிந்திலர். காலம் செல்லத் தொடக்கத்திலிருந்த இடத்தினை விட்டுத் தாழ்ந்த சதுப்பு நிலமுள்ள பிரதேசத்தையடைந்தனர். அவ்விடத்து மேலும்புதிய மிருகங்கள், தாவரங்கள் காணப்பட்டன. யூரல் மலைக்குத் தெற்கேயும் கிழக்கேயுமுள்ள வடக்குக் கேர்க்கிஸ் ஸ்ரெப்பிஸ் (புற்றரைகள்) பகுதியே அவர்களின் புராதன இருப்பிடமென்பது இந்தோ - ஐரோப்பிய மொழியின் மிகப்பழைய நிலைபற்றிய ஆய்வினாற் புலப்படும். அத்துடன் அவர்களின் புதியவிருப்பிடம் கார்ப்பேதியின் தொடக்கம் போல்ரிக் வரையுள்ள சமபூமியே என்பது பிற்பட்ட இந்தோ- ஐரோப்பிய மொழிநிலை பற்றிய ஆய்வினாலறியப்படும்.

இவர்கள் ஒரளவு நாடோடிகளாக மந்தைமேய்த்தும். புராதன விவசாயம் செய்தும் வந்தனர். மந்தைகளே இவர்களின் பெருஞ் செல்வமாகும். இதுபற்றிப் பின்னர் கூறப்படும். இவர்கள் குதிரையினைக் குறிப்பாகப் போரிலே நன்கு பயன்படுத்தினர். இவ்வாறு இந்தோ - ஐரோப்பிய நாகரிக நிலையினைப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் ஓரளவாவது திரும்பவும் அமைத்துக் குறிப்பிடுவர்.

இவர்களின் ஆதி இருப்பிடம் பற்றித் தொடர்ந்து ஆயுமுன் இந்தியாவிற்கு வந்த ஆரியரின் அயலவராகவும், மிகப்பழைய காலத்திலே சகோதரராகவும் விளங்கிய ஆதி இரானியருக்கும், இந்தோ - ஆரியருக்கும்மிடையிலே காணப்படும் ஒற்றுமையம்சங்களைக் குறிப்பிடலாம்.

இந்தோ - ஆரிய இந்தோ - இரானியத் தொடர்புகள்

இந்தோ - ஆரியரின் ஆதி ஏடு இருக்குவேதம். ஆதி இரானியரின் ஆதி ஏடு அவெஸ்தா. இருக்குவேதம் போரன்றி அவெஸ்தா கி. மு. 7ம் நூற்றாண்டளவிலே தோன்றிய சொறாஸ்ரர் எனும் பெரியாரின் சீர்திருத்தங்களால் தோன்றிய சொறாஸ்ரர் எனும் பெரியாரின் சீர்திருத்தங்களால் ஒரளவு மாற்றம் அடைந்துள்ளது அவ்வாறாயினும் அவெஸ்தாவின் மொழிநடை, யாப்பு, பொருள் ஆகியனவற்றிற்கும் இருக்குவேதத்தின் மொழி நடை, யாப்பு, பொருள் ஆகியனவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது இதனாலே மொழி நூலறிஞர் சிலர் இருக்குவேத மொழியும், பழைய இரானிய மொழியும் ஒருமொழியின் பிரதேச வேறுபாடுகள் என்பர். இருக்குவேத ஆரியரும் ஆதி இரானியரும் தம்மை 'ஆரிய', 'ஐர்ய' எனஒரு பொதுப் பெயராலழைத்தனர் ஒருவேளை, பொதுவான ஆற்றுப் பெயர்களையும் அறிந்திருந்தனர் போலும், எடுத்துக்காட்டாக இருக்குவேதத்திலே வரும் சரஸ்வதி, ஹரஉவதிஸ் என அவெஸ்தாவிற் குறிப்பிடப்படுகின்றது. இருசாராரும் பெரும்பாலும் பொதுத் தெய்வங்களை வணங்கினர். உதாரணமாக இருக்கு வேத மித்ர, வருண, சோம, அர்யமன், நாசத்ய போன்ற தெய்வங்கள் முறையே மித்ர, அஹ{ரமஸ்த, ஹயோம. அர்யமன், நாசத்ய என அவெஸ்தாவில் அழைக்கப்படுகின்றனர். பல சொற்களிலும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. எனவே "இருக்குவேதமும், அவெஸ்தாவும் ஒரே ஊற்றிலிருந்து பாயுமிரு நதிகள்" என ரொத் எனும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமானது. இருக்குவேத ஆரியரும், ஆதி இரானியரும் முன்னொரு காலத்தில் ஒரே மக்கட் கூட்டத்தினராய் வாழ்ந்து பின் பிரிந்தனர் போலக்காணப்படுகின்றனர். இவ்வாறு இரு சாராரும் ஒன்றாக வாழ்ந்த காலம் இந்தோ - இரானிய காலமெனவும், (ஒன்றாயிருந்தபோது) இவர்களை இந்தோ - இரானியர் எனவும், அழைக்கலாமென அறிஞர் கருதுவர். ஆரியரின் ஆதியிருப்பிடம் பற்றி ஆயும்போது இந்தோ இரானியகாலம் ஒரு முக்கியமான காலகட்டமெனலாம். இரானில் ஆரியரின் சுவடுகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட நெருங்கிய கலாச்சார ஒற்றுமை பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக் கிடையிலே காணப்பட்டிலது.

இந்தோ - ஐரோப்பிய மொழிகள்

நூறு எனும் எண்ணைக் குறிக்கும் பதத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தோ ஐரோப்பிய மொழிகளிலே பெரும்பாலும் ஆசியாவிலுள்ளவை (தோகேரிய மொழி தவிர்த்து) 'சதம்' எனவும். அறிஞரால் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலே முக்கியமாகப் பத்து மொழிகள் உள்ளனவாகப் பேராசிரியர் ரி. பறோ குறிப்பிட்டுள்ளார். அவையாவன@

1. ஆரிய அல்லது இந்தோ - இரானியமொழி: இதிலே, புராதன பாரசீக மொழி இந்தியாவிற்கு வந்த ஆதிஆரியரின் மொழி ஆகியன அடங்குவன. இவற்றுள்ளே காலத்தால் முந்திய இலக்கியம் இந்தியாவிற்கு வந்த ஆரியருடைய இருக்குவேதமாகும். இதுவே, இந்து - ஐரோப்பிய மொழிகளில் எழுந்த காலத்தால் முந்திய மிகப் பழைய நூலாகும். ஆதிப்பாரசீகரின் காலத்தால் முந்திய நூல் அவெஸ்தா.

2. போல்ரிக் - சிலாவேனிய மொழிகள்: முன்னையதிலே லிதுவானியம். லெற்றிஸ், வழக்கற்ற பிரஸ்ஸிய மொழி ஆகியனவும் பின்னையதிலே, ரூசிய, போலிஸ்செக், புல்கேரிய மொழிகளும் பிற சிலவும் அடங்குவன.

3. ஆர்மானிய மொழி: இது கி.பி. 5-ம்நூற்றாண்டு தொடக்கம் அறியப்படுகின்றது.

4. அல்பேனிய மொழி: இது தற்காலத்திலே தான் அறியப்படுகின்றது. இதுவரை குறிப்பிட்ட நான்கு சதம் மொழிகள்.

5. கிரேக்கம்: இதிலே பலகிளை மொழிகள் உள்ளன. கி. மு 800 அளவிலே வாழ்ந்த ஹோமரின் பாடல்களே காலத்தால் முந்திய கிரேக்க இலக்கியமாகும்.

6. லத்தீன்: இதிலிருந்துதான் பிராஞ்சியம், இத்தாலியம், ஸ்பானியம், போர்த்துக்கேயம், ரூமேனியம் முதலியன முகிழ்ந்தன. லத்தீன் இலக்கியம் கி. மு. 200 அளவில் வளரத் தொடங்கியது. இதற்கு முற்பட்ட காலச் சில சாசனங்கள் உள்ளன.

7. கெல்ரிக்: இதிலிருந்து ஐரிஸ், வெல்ஸ் முதலியன வளர்ந்தன. காலத்தால் முந்திய ஐரிஸ் பாடல்கள் கி. பி. 8-ம் நுற்றாண்டளவைச் சேர்ந்தவை.

8. ஜேர்மானியம்: இதிலிருந்து வழக்கிறந்த கோதிக், ஸ்காந்திநேவியன், மேற்கு ஜேர்மனியம் முதலியன தோன்றின. கடைசியாகக் குறிப்பிட்டதிலிருந்து தற்கால ஜேர்மானியம், ஆங்கிலம் முதலியன முகிழ்ந்தன. காலத்தால் முந்திய ஜேர்மானிய நூல் கி.பி. 4ம் நூற்றாண்டில் உல்வில என்பவரால் எழுதப்பட்ட கிறிஸ்தவவேத மொழிபெயர்ப்பாகும்.

9. தோக்கேரியன்: மத்திய ஆசியாவிலே, சீனத் துருக்கிஸ்தானில் கி.பி 6-10 நூற்றாண்டு காலத்திய பௌத்த ஏட்டுச்சுவடிகளில் இது இக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கற்ற n;மாழியாகும்.

10. ஹிற்றைற்: இது மேற்காசியாவிலேயுள்ள போகஸ்கோயில் ஆப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள சாசனங்களில் இக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்டது. இச்சாசனங்களின் காலம் கி. மு. 19-12 நூற்றாண்டு வரையாகும். இவற்றிலுள்ள மொழி வழக்கற்று விட்டது பிற்குறிப்பிட்ட ஆறு மொழிகளும் கென்ரும் வகையின.

வேறு எந்தமொழிக்குடும்பத்திலும் பார்க்க இந்தோ - ஐரோப்பிய மொழிகளே உலகின் பலபாகங்களிலும் நிலவுகின்றன. அத்துடன் உலகிலுள்ள இலக்கியவளமுள்ள மொழிகளிற் பலவும் இம்மொழிக் குடும்பத்தனவே. இதனால், இந்தோ - ஐரோப்பியரின் ஆதி இருப்பிடம் பற்றிப்பல ஆய்வுகள் நடைபெற்றமையினாலே வியப்பில்லை.

ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா, ஐரோப்பாவிலா?

ஆராய்ச்சி நன்கு வளர்ச்சியுறாத காலத்திலே, மத்திய ஆசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனப் பலர் கருதினர். ஆனால் பெரும்பாலான இந்தோ - ஐரோப்பிய மொழிகள் ஐரோப்பாவிலே நிலவுவதால் அங்கேயே அவர்களின் ஆதி இருப்பிடம் இருந்திருக்க வேண்டும் எனவும் பலர் பிற்காலத்திலே கொண்டனர். மத்திய ஆசியாவிற்கு நீண்டகாலத்தின் பின்னரே வந்திருப்பர் எனவாதித்து வரலாயினர். ஐரோப்பாவின் தென்பகுதி, மேற்குப்பகுதி ஆகியனவற்றில் ஆரியரின் நடமாட்டங்கள் காலம் செல்ல ஏற்பட்டன. எனவே ஐரோப்பாவின் மத்திய பகுதி, கிழக்குப்பகுதி ஆகியன அவர்களின் ஆதி இருப்பிடம் எனக்கருதப்பட்டது. ஆகவே மத்திய ஆசியாவின் மேற்குப்பகுதி ஐரோப்பாவின் கிழக்குப் பகுதி ஆகியனவற்றிலேதான் அவர்களின் ஆதி இருப்பிடத்தைத் தேட வேண்டியுள்ளது.

ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே ஆசியாவிலுள்ளதென ஒரு சாராரும், ஐரோப்பாவில் உள்ளதெனப் பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். முதலில் ஆசியாவே அவர்களின் ஆதி இருப்பிடம் எனக் கொள்ளுவோரின் கருத்தினைக் குறிப்பிடலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. மத்திய ஆசியாவே (பமீர் - பக்ரியப் பகுதிகள்) ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் கூறியோரிலே பேராசிரியர் ம~;முல்லர் குறி;ப்பிடற்பாலர். இவ்வாறு கொள்ளுதற்குச் சிலகாரணங்கள் உள்ளன. முதலாவதாகச் 'சதம்', 'கென்ரும்' பிரிவுகளுக்குத் தகுந்த மையம் மத்திய ஆசியா. ஆதிகால நாகரிக மையங்கள் பல ஆசியாவிலேதான் உள்ளன. பிற்காலத்திலே பெருமளவிலே நடைபெற்ற மக்கட் புலப்பெயர்ச்சிகள் மத்திய ஆசியாவிலிருந்து ஏற்பட்டன. ஆதி ஆரியர் கடலுடன்; தொடர்பு கொண்டிருந்தனர் போலும் ஆதி இரானியரின் வேதமான அவெஸ்தாவின்படி மக்கள் மத்திய ஆசியாவிலே (அர்யானம் வையங்) உண்டாயினர்.

மேலும் அனவ் போன்ற இடங்களிலே காணப்படும் மைபூசிய பாத்திரங்களைப்பயன் படுத்திய மக்கள் குதிரைவளர்த்தனர் எனவும், ஒரு சாரார் கூறுவர். மத்திய ஆசியா ஆரியரின் ஆதி இருப்பிடம். (ருசாநiஅயவ) என்ற கருத்தினைப் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். யூரல் தொடக்கம் வட அல்தாய் வரையுள்ள வடகேர்க்கிஸ் புற்றரைகளே ஆரியரின் ஆதி இருப்பிடமாகும் என்பதே இவரின் கருத்தாகும் இவ்விடத்தில் ஆதி ஆரியரின் நாகரிக நிலைகளுக்குத் தக்க சான்றுகள் உள்ளன என இவர் கூறுவர்.

பேராசிரியர் சய்ஸ் அனட்டோலிய பீடபூமியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். அண்மைக்காலத்திலே றொபேட்ஷேவர் என்பவர் திபெத் ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கருத்தினை ஏற்கனவே பர்ஜிதர் போன்றோர் கூறியுள்ளனர்.

புகழ்பெற்ற இந்திய தேசிய விடுதலைவீரரான பால கங்காதர் திலக் வடதுருவமே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். இவர் தமது கருத்திற்குச் சான்றாக வேதங்களிலுள்ள வானநூற்குறிப்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இவரின் கருத்தினைப் பலர் ஏற்றிலர்.

ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக்கொள்வோரின் கருத்துக்களை கவனிக்கலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. பேராசிரியர் கைல்ஸ் கங்கேரி சமவெளியியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். இவர்களை இவ்வறிஞர் "விரொஸ்" என அழைத்துள்ளார். 'விரொஸ்' விவசாயம் செய்தனர்@ மந்தை மேய்த்தனர் எனக் கூறுவர். ஆனால் கைல்ஸ் மொழிநூல் வல்லுநர்@ தொல்லியலாய்வாளரல்லர்.

வட ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என பென்கா லதம் போன்ற ஆய்வாளர் கூறியுள்ளனர் இவர்களின் கருத்துப்படி நோர்டிக் இனத்தவர்கள் நாகரிகமுள்ளவர்கள் பென்கா, கைகர் போன்றோர் ஜேர்மனியையும், லதம் போன்றோர் ஸ்காந்திநேவியாவையும் ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். பேராசிரியர் ஜே. சி. மையேர்ஸ், ஸ்கிரேடர், கோர்டன் சைல்ட், பி. கே. கோஸ் போன்றோர் தென்ரூசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். கஸ்பியன் கடல் தொடக்கம் நீப்பர் வரையுள்ள பிரதேசத்திலே சுருங்கிய எலும்புக் கூடுகள் கொண்டுள்ள கல்;லறைகள் உள்ளன. இவை சிவப்புக்களி மண்ணாலே மூடப்பட்டு மேலே மேடொன்று (குர்க்கன்) கொண்டுள்ளன. கல்லறைக்குமேலே, மண்தூவுதல், மேடையைச் சுற்றி மரவேலியிடுதல் ஆகியன இருக்கு வேதம் 10-18-4, 18-13-லே தொனிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் உயரமுள்ளவர்கள்@ பெரிய மண்டையோடு உடையவர்கள். இவர்களைப் பொதுவான நோர்டிக் இனத்தவர் எனலாம். இவ்விடத்திலே நிலவிய பண்பாடு ஒரே தன்மையானது. இம்மேடுகளிலே (குர்க்கன்களிலே) செம்மறியாடு, மாடு, குதிரை ஆகியனவற்றின் எலும்புகள் உள்ளன. எனவே இம்மக்கள் மந்தைமேய்த்த நாடோடிகளா? சக்கரமுள்ள குதிரை வண்டிக்காரரா? மேடுகளின் மேற்காணப்படும் தானியங்கள் விவசாயத்திற்குச் சான்றாகும் எனவும் சிலர் கருதுவர். இக் கல்லறைகளால் அறியப்படும் நாகரிகத்திலே கல், செம்பு, வெண்கலம் முதலியன இடம்பெற்றுள்ளன. கல், செம்பு, ஆதியனவற்றாலான துளையிட்ட கோடரிகள், அம்புகள். ஈட்டிகள் முதலிய கருவிகள் உள்ளன. இத்தகைய சின்னங்கள் மைக்கோப் போன்ற இடங்களிலே கிடைத்தன. மேலும், இப்பிரதேசத்திற்கு வெளியே ரேப்கிஸர், ருறங்ரேப் போன்ற இடங்களிலும் அநட்டோலியாவிலும் உள்ளன.

மேலும், தேன் உற்பத்திக்குத் தேவையான எலுமிச்சைமரம், 'பீச்' மரம் முதலியனவுமிங்கு வளர்ந்தன. இருக்குவேதத்திற் கூறப்படும் ரசா வொல்காவின் பழைய பெயரான ரா ஆக இருக்கலாமெனவும் சிலர் கருதுவர். பொதுவாக அறிஞர் பலர் இந்தோ, ஐரோப்பியரின் ஆதி இருப்பிடம் கலாச்சாரம் முதலியனபற்றிக் கூறுவனயாவும் பிறவற்றிலும் பார்க்க மேற்குறி;ப்பிட்ட கலாச்சாரத்துடன் பெருமளவு ஒத்துக் காணப்படுகின்றன எனவே, ஆதி ஆரியர் இங்கிருந்து பிற இடங்களுக்குப்புலம் பெயர்ந்தனர் எனவும் கொள்ளலாம் என்பர். மேலும் நெஹ்றிங்என்ற அறிஞர் ஆதி ஆரியர் 'ரிப்பொல்ஜி' கலாச்சாரத்தினைக் கொண்டிருந்தனர் எனவும், அவர்களினிருப்பிடம் தென்ரூசியாவிலே மட்டுமன்றி மேற்கேயுமிருந்தது என்பர். அண்மைக்காலத்திலே பிரான் டென்ஸ்ரென் என்பவர் சொற்பொருளாராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு ஆரியரின் ஆதி இருப்பிடம் மலைத் தொடரின் அடிவாரத்திலுள்ள புற்றரையெனவும் அது யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள வடமேற்குக் கேர்க்கிஸ் புற்றரைகள் எனவும் கூறுவர். மேலும் அவரின் கருத்துக்கள் சில குறிப்பிடற்பாலன. மொழியியற்சான்றினைக் கொண்டு நோக்கும்போது புராதன இந்தோ - ஐரோப்பிய வரலாற்றில் இரு காலப்பகுதிகள் உள்ளன. அவையாவன.

1. காலத்தால் முந்திய பகுதி - அதாவது. இந்தோ - ஐரோப்பியர் யாவரும் ஒன்றாக வாழ்ந்த காலம் அல்லது இந்தோ - ஐரோப்பியர் காலம்.
2. பிரதான மையத்திலிருந்து இந்தோ - இரானியர் பிரிந்து புதிய சுவாத்தியமுள்ள பிறிதோரிடத்திற்குச் சென்றுவிட்ட காலம்.

இந்தோ - இரானியர், ஹிற்றைற் மக்கள் ஆகியோரின் முன்னோர் கோகஸஸைத் தாண்டிச் சின்னாசியா, மொசொப்பொத்தேமியா, இரான் ஆகிய இடங்களுக்கும், பின் இந்தியாவிற்கும் வந்திருப்பர். அல்லது, ஒரு பகுதியினர் பிரதான மையத்திலிருந்து புலம் பெயர்ந்து இரானிய பீடபூமிக்கும்பின் இந்தியாவிற்கும் வந்திருப்பர். பிரதான மையத்திலிருந்து பிறிதொரு பிரிவினர் மேற்கே, போலந்து எனும்புதிய இடத்திற்குச் சென்றிருப்பர். இதைவிட. கார்ப்பேதியன், கிழக்கு ஐரோப்பா முதலிய பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து பரவினர் எனலாம். பரான்டென்ஸ் ரெனின் கருத்துக்கள் பெருமளவு நியாயமானவை@ மிகத் திட்டவட்டமான மொழியியல், தொல்லியற்சான்றுகளின் அடிப்படையிலமைந்துள்ளவை. பொதுப்பட நோக்கும்போது, யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள பரந்த ஆசியச் - ஐரோப்பிய சமவெளியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என அறிஞரில் ஒரு சாரார் நன்கு எடுத்துக்காட்டியுள்ளனர். ஆரியரின் ஆதி இருப்பிடம் தென்ரூசியா எனப் பேராசிரியர் ரி. பறோ சில காலத்திற்குமுன் கூறியிருந்தார். ஆனால், அண்மையில் இக்கருத்தினை மாற்றியுள்ளார் என்பது பின்னர் கூறப்படும்.

ஆரியரின் புலப்பெயர்ச்சிகளும் காலமும்

ஆரியரின் புலப்பெயர்ச்சிகள் அவற்றின் காலம், இயல்புகள் ஆகியன பற்றிக் கலாநிதி சுப்பராவ் குறிப்பிட்டுள்ளவை கவனித்தற்குரியன. கி. மு. இரண்டாயிரம் ஆண்டின் பிற்பாதியிலே மேற்கு ஆசியா அடங்கலும் மக்களின் கொந்தளிப்புள்ள புலப்பெயர்ச்சிகள், அழிவுகள், புதிய மொழிகள் தோன்றல் முதலியன அநட்டோலியா தொடக்கம் நிலவின மேற்குறிப்பிட்டவை இந்தோ - ஐரோப்பியரின் வருகையாலே பலநாடுகளிலே காணப்பட்டன. இவற்றின் தாக்கத்திற்கு இந்தியா தப்பவில்லை. ஆனால் ஒரு முக்கியமான குறிப்பினை நினைவிலிருத்த வேண்டும். வன் செயலில் ஈடுபட்டும், ஒரளவு மந்தை மேய்த்தும் வந்த மக்கள் தாம் வென்று அடிப்படுத்தியோரின் கலாச்சார அம்சங்கள் பலவற்றை மேற்கொண்டனர். இவ்வாறு பழைய உலகனைத்திலும் ஆரியர் தெளிவற்றும். உறுதியற்றும் காணப்படுகின்றனர். ஆனால் நாகரிக வரலாற்றிற்கு அவர்களின் மொழிகள் முதுசொத்தாகக் கிடைத்துள்ளன. இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பரவுதலும் குதிரையினைப்பழக்குதலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எளிதிற் செல்லும் போர்த்தேர் உபயோகமும் ஒரளவு சமகாலத்தவை. ஆரியரின் நாகரிகத்துடன் தொடர்பான மிருகங்களிலே பசுமட்டுமன்றிச் குதிரையும் குறிப்பிடற்பாலது. குதிரைகள் காட்டுமிருகங்களாகத் தென்ரூசிய, உக்றெயின் புற்றரைகளிலே திரிந்தன. பின்னர் மத்திய ஆசியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டன. கி.மு. 2000 அளவிலே மனிதன் இவற்றை நன்கு பயன்படுத்தி வந்தான். வேத இலக்கியத்திலே வரும் குதிரை பற்றிய குறிப்புகள் மத்திய ஆசியப் புற்றரைகளில் (ஸ்ரெப்பிஸில்) வாழ்ந்த வற்றினை நினைவூட்டுவன. ஆரியருக்குப் பெரும்பாலும் குதிரை தேர் இழுக்கும் மிருகமாகவே போருக்கும், சவாரிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கி மு. 2000 - 1500 அளவிலே தென்ரூசியாவிலே குதிரை வளர்க்கப்பட்டது. காலத்தால் முந்திய மைக்கொப் கல்லறையிலுள்ள வெள்ளிக் கிண்ணத்திலும் அனவ். சியல்க் போன்ற இடங்களிலுள்ள தொல்லியற சின்னங்களிலும் குதிரையின் வடிவம் காணப்படுகின்றது ஆரியர் குதிரை உபயோகத்தினைத் தொடக்கி வைத்திலர்@ ஆனால் அதனை விரைவான போக்குவரத்துச் சாதனமாக்கினர் என்று கூறுதலே பொருத்தமானது. மேற்காசியாவிலே சீரியாவிலுள்ள சாசனங்களிலும், கஸ்ஸைற், மித்தானிய மன்னர் சாசனங்களிலும் குதிரை பற்றிய குறி;ப்புகள் வருகின்றன. இந்தோ - ஐரோப்பியர்புலப்பெயர்ச்சி பற்றிய சான்றுகள் திட்டவட்டமாகக் கிடைத்தில. எனினும், சிலவற்றைக் குறிப்பிடலாம். வடபலுக்கிஸ்தானிலே ரணாகுந்தை, டபர்கொற் முதலிய இடங்களிலே பலகுடியிருப்புகள் முற்றாகவே வன்முறைச் செயல்களால் அழிக்கப்பட்டதற்கான சின்னங்கள் உள்ளன. தென்பலுக்கிஸ்தானிலுள்ள சாஹிதும்ப் கல்லறையிலே செப்புத்தகடு முத்திரைகள் (இலச்சனைகள்) செப்பினாற் செய்த துளையுள்ள கோடரி, காலுள்ள கிண்ணங்கள் முதலியன கிடைத்துள்ளன. இம்முத்திரைகள் இரானிலுள்ள அனவ் (iii) கிஸார் (iii) காலச்சின்னங்களிற் கிடைத்தவற்றினைப் போன்றவை. மேற்குறிப்பிட்ட கோடரிவகை இதுவரை இந்தியாவிற் கிடைத்திலது. இது மேற்காசிய வகையுடனும், தென் ரூசியாவிலுள்ள மைக்கொப் சார்ஸ்கய போன்ற இடங்களிற் கிடைத்தவற்றுடன் ஒப்பிடற்பாலது.

தென்ரூசியப் புற்றரைகளிலிருந்து ஆதி ஆரியர் மேற்கு, தெற்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் புலம் பெயர்ந்திருப்பர். மேற்கே சென்றவர்களும் தெற்கே வந்தவர்களில் ஒரு சாராரும் மேற்கு, தெற்கு ஐரோப்பாவிலே குடியேறியிருப்பர். கிழக்கேயும், தெற்கேயும் சென்றோர் இரான் அதற்கு மேற்கேயுள்ள மேற்கு ஆசியப் பகுதிகள், இந்தியா ஆகிய இடங்களை நோக்கினர். கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டும் சில சான்றுகள் கிடைத்துள்ளன. கி. மு. 2300 அளவில் அல்லது அதற்குச் சில நூற்றாண்டுகளின் முன் அதி ஆரியர் புலம்பெயரத் தொடங்கியிருப்பர். அவர்களில், ஒரு பிரிவினரான ஆதிக்கிரேக்கர் கி;. மு. 2300 -க்குச் சற்றுப்பின்னரே கிரீசிற்கு வந்தனர். கி; மு 16ம் நூற்றாண்டளவிலே, ஆரியர் மேற்கு ஆசியாவிலே காணப்பட்டனர். பழைய புகழ்பெற்ற மெசொப்பொத்தேமிய நாகரிக எல்லையிலும் ஆரியர் சிலர் வாழ்ந்தனர். அங்கிருந்தும் நாகரிக அம்சங்கள் சிலவற்றைப் பெற்றனர். கி;.மு 16ம் நூற்றாண்டளவிலே மெசொப்பொத்தேமியாவை ஆண்ட கஸ்ஸைற் மன்னர் இந்தோ - ஐரோப்பியப் பெயர்கள் தரித்திருந்தனர். எடுத்துக்காட்டாக அர்த்தமன்ய, அர்ஸவிய, யஸ்தத, சுத்தர்ன போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் வடக்கே அல்லது வடகிழக்கேயிருந்து வந்திருப்பர். கி. மு 14ம், 15ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த மித்தானிய மன்னர் பெயர்களிலே இந்தோ - ஐரோப்பியப் பெயர்கள் பல காணப்படுகின்றன. எகிப்திலுள்ள எல் அமர்னாவிற்கும் சின்னாசியாவில் உள்ள ஹிற்றைற் தலைநகரான போகஸ் கோய்க்குமிடையிலே நடைபெற்ற ராஜதந்திரத் தொடர்புகளில் இவற்றைக் காணலாம். ஹிற்றைற் மன்னரான சுபிலுலியுமவிற்கும், மித்தானிய மன்னரான சுபிலுலியுமவிற்கும், மித்தானிய மன்னரான துஸ்ரத்தவின் மகன் மத்தியுசாவிற்குமிடையிலே கி. மு. 1380லே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறிப்பிடப்பாலது. இதிலே, மித்தானிய மன்னன் தான் வழிபட்ட மி -இத்ர (மித்திரன்), உருவன (வருணன்), இந்தர (இந்திரன்), நச...அத்தி இயன்ன (நாசத்ய) ஆகிய தெய்வங்களைச் சாட்சியாக விளித்து வணங்குகிறான். எனவே, கிழக்கே சென்ற ஆரியரின் தெய்வங்களை மித்தானியரும் வணங்கியிருந்தனர். மேலும், கூடுதலான சான்று ஒன்றினைக்குறிப்பிடலாம். போகஸ்கோய் சாசனங்களிலே குதிரைச் சவாரிபற்றிய நூலொன்று அரைகுறையாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடற்பாலது. இது கி. மு. 14ம் நூற்றாண்டளவைச் சேர்ந்ததாகும். இதனைக் கிக்குலி எனும் மித்தானிய மன்னன் எழுதினான். இதிலே திருப்புதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் வடமொழிச் சொற்களைப் போன்றவை. எடுத்துக்காட்டாக ஜகவர்த்தன, தேரவர்த்தன, பஞ்சவர்த்தன என்பன முறையே ஒன்று, மூன்று, ஐந்து திருப்புதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. குதிரைச்சவாரியினை ஆதி ஆரியர் இந்தியாவிலும் சிறப்பாகப் பயன்படுத்தினர். தொல்லியல் ரீதியிலும். மொழியியல் ரீதியிலும் மேற்குறித்த சான்று கி. மு இரண்டாயிரம் ஆண்டளவில் இந்து - ஐரோப்பிய மொழிகள் பேசியோரை இந்தியாவுடன் தொடர்புபடுத்தக்கூடிய முக்கியமான ஒன்றாகும். எளிதாகவும், மிகவிரைவாகவும் செல்லும் குதிரைகளையும், குதிரைபூட்டிய தேர்களையும் முதன் முதலாக நன்கு பயன்படுத்தி ஆரியர் வெற்றியடைந்தனர். மேற்கு ஆசியாவிலே கி, மு. 1500 அளவில் ஆரியரின் நடமாட்டங்களைப் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டது.

அண்மையிலே பேராசிரியர் ரி. பறோ ஆரியரின் ஆதி இருப்பிடம் மத்திய, கிழக்கு ஐரோப்பாவாக இருந்திருக்கலாம் என்பர். இந்தோ - இரானியருக்கும் சதம் மொழிகளுக்கும் குறிப்பாக போல்ரோ - சிலாவோனிய மொழிகளுக்கும் வின்னிய உக்;ரிய மொழிகளுக்கும் புராதன இந்தோ - ஐரோப்பிய காலத்திலே நிலவிய விசேட தொடர்புகளை நோக்கும்போது மேற்குறிப்பிட்ட கருத்துத் தெளிவாகும் என்பது அவரின் வாதமாகும். மத்திய ரூசியாவிலிருந்து மக்கள் புலப்பெயர்ச்சி கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியுமேற்பட்டது. இதனால், மத்திய ஆசியா சில காலமாக ஆரியரின் இருப்பிடமாயிற்று. இப்பழையகாலத்தில் இந்தோ - ஆரிய, இரானிய எனும் இரு கிளைகள் ஏற்படத் தொடங்கி விட்டமைக்குச் சான்று உள்ளது. இந்தோ - ஆரிய, இரானிய எனும் இரு கிளைகள் ஏற்படத் தொடங்கி விட்டமைக்குச் சான்று உள்ளது. இந்தோ - ஆரியர் தான் முதலிலே தெற்கு நோக்கி இரானிற்கும் அங்கிருந்து இந்தியாவிற்கும் மேற்கு இரானிற்கும் சென்றனர் இரண்டாவது அலையாகவே இரானியரின் புலப்பெயர்ச்சி முதலிலே கிழக்கு இரானிலேற்பட்டது. இதன் விளைவாகக் கிழக்கேயும், மேற்கேயும் சென்ற இந்தோ - ஆரியரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன பின்னர் இரானியர் மேற்கே செல்ல, அங்கு முன்னர் சென்றோரின் செல்வாக்குக்குன்றிற்று. ஆனால் அவர்கள் அங்குமுன் இருந்தமைக்கு மேற்கு ஆசியாவிலேயுள்ள ஆவணங்கள் சான்றுபகருவன.

இந்தியாவிலே ஹரப்பா கலாச்சார முடிவும் (கி. மு 1500 அளவில்) ஆரியரின் வருகையினாலேற்றப்பட்டதெனத் தொல்லியலறிஞரான மார்ட்டிமர் வீலர், ஸ்ருவட் பிகொற் போன்றோரும். மொழிநூல்விற்பன்னரான பேராசிரியர் பறோவும் வற்புறுத்தியுள்ளனர். எவ்வாறியினும் ஹரப்பா கலாச்சாரம் மங்கிக் கொண்டிருந்த காலத்திலே திடீரென முடிவுற்றது. இக்கலாச்hசரத்தலங்கள் பலவற்றலே அரண் செய்த நகரங்கள், கோட்டைகள் பல இருந்தன. இருக்குவேதத்திலே வரும் பிரபல்யமான போர்த் தெய்வமான இந்திரன் கறுத்த நிறம், தட்டையான மூக்குமுள்ள தாசர், தஸ்யுக்களின் அரணுள்ள நகரங்களைத் தகர்த்து ஆரியர் வெற்றியினை மேம்படுத்திய வீரனாக, புரந்தரனாக, புரபித் (நகரங்களைத் தகர்த்தவன்) ஆகப் போற்றப்படுகிறான். இக்கோட்டை நகரங்கள் கல்லினாலும், சுடாத செங்கட்டிகளினாலும் ஆனவை. சில வேளைகளிலே தீயினாலும் அழிவுகளை இந்திரன் ஏற்படுத்தினான். சிந்து சமவெளியிலுள்ள மொஹெஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் விளைவாக, அவ்விடங்களில் அரணுள்ள நகரங்கள் இருந்தமை நன்கு அறியப்பட்டுள்ளது. ஆரியர் நகரங்களை அறிந்திலர்@ கிராமிய நாகரிகத்தினர். மேற்குறிப்பிட்ட நாகரிகச் சின்னங்கள் ஆரியரின் வருகையினாலே அழிவுற்றன எனவும். சூழ்நிலைக்கேற்ற பொருத்தம் காட்டும் சான்றுகளைக் கொண்டு நோக்கும்போது இந்திரனே இதற்குக் காரணம் எனவும் வீலர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹரப்பா கலாச்சாரம் கி;. மு. 2500 - 1500 வரையெனப் பொதுவாகக் கொள்ளலாம் என்பர். ஆனால் அண்மைக்காலத்திலே காபன் 14 முறைப்படி இதன் காலம் பொதுவாக கி. மு. 2300 - 1750 வரையெனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஹரப்பா கலாச்சாரம் முடிவுற்ற பின். தரம் குறைந்த ஜுகர் கலாச்சாரம் ஜங்கர் கலாச்சாரம் ஒன்றன் பின் ஒன்றாக நிலவின. இவ்விரண்டிலும் ஒன்று அல்லது இரண்டுமே ஆரியர் கலாச்சாரமாயிருக்கலாமெனச் சில ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர். ஹைனேகெல்டேன், வெயர்சேவிஸ் ஆகிய இரு அறிஞர்கள் ஜுகர் கலாச்சாரமே, ஆரியருடையது என்பதைப் பொதுவாக ஏற்றுக்கொள்ளலாம். ஜுகர் கலாச்சாரம் ஆரியருடையது என்ற கருத்து வலுப்பெறுகிறது. கலாநிதி புசல்கார், கலாநிதி ரி. என். ராமச்சந்திரன் முதலியோர் ஹரப்பா கலாச்சாரம், ஆரியருடையதென்பர். கங்கை ஆற்றங்கரையிலுள்ள ஹஸ்தினாபுரத்தில் நடத்திய அகழ்வாய்வின் விளைவாகக் கங்கைக் சமவெளியிலே சாதாரண மைபூசிய சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Pயiவெநன புசநல றயசந) பலவற்றைத் திரு. பி. பி. லால் கண்டுபிடித்துள்ளார். இவை கி;. மு. இரண்டாவது ஆயிரம் காலத்தன. இவற்றைச் சமகாலத்திய மேற்காசிய. கிழக்கு ஐரோப்பியத் தொல்லியற் சின்னங்களுடன் ஒப்பிட்டு இவர் ஆராய்ந்துள்ளார். இவை போன்றவை கிரிஸ், இரானிலுள்ள ஷாரேப் ஆகிய இடங்களிலும், சில மாற்றங்களுடன் உர்மியா ஏரிக்குத் தெற்கேயும். கிழக்கே இந்தியாவின் மேற்கு எல்லையிலே, சீஸ்ரனிலும் காணப்படுகின்றன. இச்சின்னங்கள் இவ்வாறு கிரீஸ் தொடக்கம் சீஸ்ரன் வரை இந்தியாவுக்கு வெளியேயும் காணப்படுகின்றன. இதே காலப்பகுதியிலே கி. மு. 1360 ஆண்டளவைச் சேர்ந்த போகஸ்கோய்க் சாசனங்களும், மேற்காசியாவில் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டுவன. எனவே, மேற் குறி;ப்பிட்ட சின்னங்கள் பொதுவாக ஆரியரின் புலப்பெயர்ச்சி, நடமாட்டங்கள் ஆகியவற்றைக் காட்டுவன. ஏற்கனவே குறிப்பிட்ட மைபூசிய சாம்பல்நிற மட்பாண்ட கலாச்சாரத்திற்கு முன் கங்கைச் சமவெளியிலே நிலவிய வெண்கலக் கருவிகளின் கலாச்சாரத்திலே (சிவப்புநிறம் நீரால் கழுவப்பட்டு மங்கி) மஞ்சள் நிறமட்பாண்டங்களும் இடம் பெற்றிருந்தன. வெண்கலக்கருவிகளிலே கோடரி, ஈட்டி, வாள், மனிதவடிவம் போன்ற கருவி முதலியனவும் அடங்கும். மேற்குறிப்பிட்ட பல்வேறு ஆய்வாளரின் கருத்துக்களிலே திரு. பி. லால் என்பவரின் கருத்தே பொருத்தமானதாகத் தெரிகின்றது. ஹரப்பா கலாச்சாரம் ஆரியருக்கு முற்பட்டது. ஆனால் இதனை ஆரியர்தான் அழித்தனர் என்பதும் அறிஞரின் ஒருமுகமான முடிவன்று.

இந்தியாவிற்கு ஆரியர் படிப்படியாகவே, வட மேற்கு எல்லைப்புறக்கணவாய்கள் ஆற்றோரங்கள் மூலமாக வரலாயினர். இவற்றுள். கிருமு, (குரம்), கோமதி (கோமல்), குபா (கபூல்), சுவாஸ்து (சுவாத்) முதலியன இருக்குவேதத்திலே குறிப்பிடப்படுகின்றன. ஆரியரின் இந்தியப் புலப்பெயர்ச்சி பல நூற்றாண்டுகளாக நடைபெற்றது எனலாம். இது குறித்துப் பேராசிரியர் ரி. பறோ பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தோ - ஆரியரின் புலப்பெயர்ச்சி இந்தியாவில் ஒரே இயக்கமாக அன்றிப் பற்பல கட்டங்களாக ஏற்பட்டதற்கு மொழியியற் சான்றும் காணப்படுகிறது. வடமேற்கு இந்தியாவிலே நிலவிய வேதகால மொழிக்கும் மத்திய தேசத்திலே நிலவிய பிற்பட்ட காலமொழிக்குமிடையிலே கிளைமொழிச்சார்பான வேறுபாடுகள் பல உள்ளன. வேதமொழியிலே ர், ல். வேறுபாடுபெருமளவு பேணப்பட்டுள்ளது. இஃது ஒரு முக்கியமான வேறுபாடாகும். வேத மொழியிலுள்ள முக்கியமான வேறுபாடாகும். வேத மொழியிலுள்ள இவ்வியல்பு இரானிய மொழிக்குமுள்ள தனியியல்பாகும். மேற்காசியாவிலுள்ள ஆரியமொழிகளிலும் வின்னிய உக்ரிய மொழிகளிலுள்ள ஆரியச் சொற்கள் சிலவற்றிலும் இவ்வியல்பு காணப்படுகின்றது. ஆரியரின் புலப்பெயர்ச்சி திட்டவட்டமான தனியான செயலன்று. பல ஜனக்குழுக்களுடன் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றது. இவ்வாறு வந்த மக்கள் ஒருவேளை ஒரே இனம் ஒரே மொழியினைச் சேர்ந்தவராயிருந்திலர்.

மேலும், இந்தியாவிற்குவந்த ஆரியர் வருகைப்பற்றிப் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி குறிப்பிட்டுள்ள கருத்துக்களும் மனம் கொள்ளத்தக்கன. 'இரானிலிருந்து இந்தியாவிற்கு ஆரிய ஜனக்குழுக்கள் படிப்படியாகவே புலம்பெயர்ந்தனர். இப்புலப்பெயர்ச்சி பல தலைமுறைகளாக நடைபெற்றிருந்திருப்பன. இப்புலப்பெயர்ச்சிபற்றி இன்று கிடைத்துள்ள வேத இலக்கியத்திலே குறிப்பு எதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் தாம் புதிய இடத்திற்குப் புலம்பெயர்ந்தமை பற்றிய நினைவு கொண்டிருந்திலர். பர்சு, மத முதலிய இரானிய ஜனக்குழுக்களோடு பல நூற்றாண்டுகள் வாழ்ந்தனர். இரானிய மேட்டு நிலம் அவர்களின் புலப்பெயர்ச்சியின் போது தங்குமிடமாக அன்றித்தாயகமாகவே விளங்கியது. அங்கு அவர்கள் இந்தோ - இரானிய கலாச்சாரமரபுகள் பலவற்றை உருவாக்கினர். இவற்றின் தாக்கம் மெசொப்பொத்தேமியாவிலே நன்கு காணப்படுகின்றது. அவெஸ்தா, இருக்குவேதம் ஆகியவை இப்பொதுவான மரபுகளைக் கொண்டவை"

வரலாற்றுக்காலத்தில் இந்தியாவில் இஸ்லாமியர் வருகையும் ஆதிக்கமேற்படுத்தலும் பல நூற்றாண்டுகளின் பின்னரே வெற்றிகரமாக முடிந்தன. எனவே ஆரியரின் புலப்பெயர்ச்சியும் இவ்வாறே நெடுங்காலப் பகுதியிலே நடைபெற்றிருக்கலாம். இந்தியாவிற்கு வந்த ஆரியர் நீண்டகாலமாக ஆரியரல்லாத மக்களுடன் போர் செய்தே தமது செல்வாக்கினை நிலைநாட்டினர்.

"ஆரியர் கி. மு. 2000 அளவில் இந்தியாவை நோக்கி வந்திருப்பர். கி. மு. 1400 - க்குப்பின் வந்திரார். கி.மு. 1500 அளவிலே வந்திருப்பர். ஆனால் கி.மு 1800க்குமுன் வந்திரார்" எனப் பேராசிரியர் ஏ. பி. கீத் ஆரியரின் இந்திய வருகைபற்றிய காலத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆரியர் கி. மு. 1500 அளவிலே வந்திருப்பர் என மராட்டிமர் வீலர் கருதுவர். மேலும் "ஆரியர் கி. மு. 1700 - 1400க்கு மிடையில் இந்தியாவிற்கு வந்தனர்" எனவும், "இருக்குவேதப்பாடல்கள் கிமு 1200 - 1000க்கு மிடையில் இயற்றப்பட்டன எனவும் பேராசிரியர் ரி. பறோ கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவிற்கு கி. மு. 1750 - 1300 வரையுள்ள காலப்பகுதியிலே வந்திருப்பர் என டி. எச் கோர்டன் எனும் ஆய்வாளர் கருதுவர். ஹைனேகெல்டேர்ன்;;;;;;;;, வெயர்சேவிஸ் ஆகியோர் இவர்கள் கி. மு. 1200 - 1000 வரையில் வந்தனர் என்பர். இவ்விரு ஆய்வாளர்களுடைய முடிபுகளுக்கான தொல்லியற் சின்னங்களையும் பிறவற்றையும் இந்தியாவில் அண்மையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட நவ்டதோலி (மத்திய இந்தியாவில்) ராஜஸ்தான், மத்திய பிரசேதம், மஹாராஷ்டிரம், ஆந்திரதேசம் ஆகிய இடங்களிலே கிடைத்துள்ள தொல்லியற் சின்னங்களுடன் நன்கு ஆராய்ந்து பேராசிரியர் எச். டி. சங்காலியா மேற்கு இந்தியா மேற்காசியத் தொடர்புகளுக்கான காலம் கி. மு. 1700 - 1500 வரை யென்பர். சேர்லியனாட் வூலி எனும் தொல்லியல் ஆய்வாளர் ஆரியர் கி. மு. 1500 அளவில் இந்தியாவிற்கு வந்தனர் என்பர்.