Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: ஐ லவ் யூவர் டாட்டர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    ஐ லவ் யூவர் டாட்டர்

    ஐ லவ் யூவர் டாட்டர்

    மகேஷ் தன்னிடம் இருக்கும் மிக உயர்ந்த லேவண்டர் கலர் சட்டையை (பேசிக், 400 ரூபாய்) உடுத்தினான். அழகாக தலையை வாரிக் கொண்டான். ஜவ்வாது செண்டு போட்டுக் கொண்டு புறப்பட்டான். பஸ்ஸில் போகும் பொழுது அவன் இரவெல்லாம் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தபடியே சென்றான். பஸ் ராமாபுரம் தாண்டி நின்றது. அவன் கையில் பையிலுடன் (ஃப்யில்) இறங்கினான். மிகப் பிரமாண்டமான மென்பொருள் அலுவலகத்துக்குள் நுழைந்தான். முகப்பில் தன்னுடைய விவரத்தை சொல்லி விட்டு காத்து இருந்தான். செக்யூரிட்டி உள்ளே இவனை விடவில்லை, ஆபிஸ் நேரத்தில் யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டான். இவன் எவ்வளவோ கூறியும் இவனை உள்ளே விடவில்லை. இவன் என்ன செய்வதுனு தெரியாமல் ரங்கராஜனுக்கு போன் செய்தான்.

    "ஹலோ நான் மகேஷ் பேசறேன், உங்க ஆபிஸ் கீழ நிக்கிறேன்" என்றான். எதிர்முனையில் போன் துண்டிக்கப் பட்டது.

    செக்யூரிட்டி ரூமில் போன் அலறியது. அவன் போனில் பேசி விட்டு, மகேஷை நோக்கி வந்தான்

    "சார் நீங்க போங்க, பி லிஃப்டு-ல போங்க, ரூம் நம்பர்-09" என்றான் செக்யூரிட்டி பவ்யமாக.

    மகேஷ் சந்தோஷத்துடன் ரூமை அடைந்தான். ரங்கராஜன் அறையில் கணிணியை பார்த்துக் கொண்டு இருந்தார். நல்ல ஆஜானுபாகுவான ஆள் அவர். வயது 50 இருக்கும், நல்ல அடர்த்தியான மீசை. மகேஷ் அவரைப் பார்த்ததும் வாய் நிறைய சிரித்தான், அவர் பதிலுக்கு அளவாக சிரித்தார்.

    "குட்மார்னிங் அங்கிள்"

    "மார்னிங் டேக் யூர் சீட்"

    "அங்கிள் இதான் என்னுடைய மார்க் லிஸ்டு"

    "குட், எதாவது காபி சாப்பிடுறீங்களா" என்று போனை எடுத்து காபி ஆர்டர் பண்ண போனவரை

    "இல்ல அங்கிள், நல்ல செய்தியா சொல்லுங்க அப்புறம் கை நனைக்குறேன் அங்கிள்"

    "ஜஸ்ட் கால் மீ ரங்கராஜன்" என்றார். மகேஷ்க்கு சுறுக்கென்று இருந்தது.

    "இல்ல பெரியவங்கள பேர் சொல்ல கூடாது, நான் சார்னு கூப்பிடுறேன்"

    "தட்ஸ் பேட்டர், ஓ.கே சொல்லுங்க....... வாட்ஸ் யூவர் நேம்" என்றார். அவனுக்கு இன்னும் சுறுக்கென்றது.

    "ம...ம..மகேஷ்"

    "ஆ....மகேஷ், சொல்லுங்க"

    "சார் அதுவந்து ஐ லவ் யூவர் டாட்டர் சார், அவளும்..... சாரி அவங்களும் தான்,..... அதைப் பற்றி பேச நீங்க தான் இங்க வரச் சொன்னீங்கனு உங்க டாட்டர் சொன்னாங்க"

    "யெஸ் மகேஷ் ஐ ரிமம்பர், எந்த கம்பனியில வேலை செய்றீங்க, வாட்ஸ் யூவர் ஆனுவல் இன்கம், அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் சேர்ஸ்...."

    "சார்....சார்... நான் இன்னும் வேலை தேடினு இருக்கேன்"

    "ஓ குட் எப்ப கிடைக்கும்"

    "சீக்கிரம்"

    "காலேஜ் முடித்து 3 வருஷம் ஆச்சி, மொத்தம் எத்தனை வருஷமா லவ் பண்றதா சொன்னீங்க"

    " 6 வருஷமா?......., நான் அகிலாவை நல்லபடியா பார்த்துப்பேன் சார்" என்றான். அவர் சத்தமாக சிரித்தார். மகேஷ்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

    "ஐயம் சாரி மகேஷ், ஐ காண்டு கன்ரோல் இட், நான் இந்த கம்பனியுடைய சீனியர் ஏ.ஒ, எனக்கு சம்பளம் 75,000 ரூபாய். என்னால என் மனைவியை சந்தோஷமா வச்சிக்க முடியில அவளுக்கு ஒரு டைமண்டு நெக்லஸ்ல வாங்கிதர முடியில ஆறு மாசமா"

    "சார் எங்க காதல் உண்மையானது, சந்தோஷம் என்பது நெக்லஸ்ல இல்ல"

    "எக்ஸ்செக்ட்லி எக்ஸ்செக்ட்லி, ஆனா திண்ண சோறு இல்லைனா காதல் இனிக்குமா?"

    "உண்மைக்காதல்னா......"

    "ஏய் மகேஷ் ஸ்டாப் இட் மேன், நாம நண்பர்களாக பேசுவோம். தோபாரு மகேஷ் ஆம்பளைகளுக்கு வேலை தான் புருஷலச்சனம், அது இல்லைனா யாரும் மதிக்க மாட்டாங்க. யாராக இருந்தாலும் ஏன் நானாக இருந்தாலும், அகிலாவாக இருந்தாலும், ஏன் உங்க வீட்டிலயும் தான். சரி நீ படிக்கு பொழுது உன் வீட்டில் உனக்கு என்ன மரியாதை இருந்தது இப்ப என்ன இருக்கு யோசித்து பார், அது அவங்க மேல தப்பு இல்லை"

    மகேஷ் அமைதியாக தலையை குனிந்தான்.

    "மை டியர் எங் மேன், நான் சொல்வதை கேள். நீயும் அகிலாவும் ஒன்னா சந்தோஷமாக சேர்ந்து வாழ முடியாது, ஏன்னா அவ வாழ்ந்த வாழ்க்கை வேற, நீ வாழற வாழ்க்கை வேற. இத ஒரு ஹய் கிளாஸ் மேனா சொல்ல்லை நானும் உன்ன மாதிரி தான் ஒரு கஷ்ட ஜீவனம் செய்யும் குடுமபத்துல இருந்து வந்தவன் என்ற தகுதியில் சொல்றேன்"

    "சார் உங்கள மாதிரி நானும் பெரிய ஆள வருவேன் சார்"

    "கண்டிப்பா வரணும் ஆனா நான் 20 வயதில் வேலைக்கு சேர்ந்து உன் வயதில் நான் ஒரு ஆபிஸையே கவனித்தேன். ஆனால் நீ இன்னும் வேலை தேடுகிறாய். நீ இந்த சினிமாவில் வருவது போல ஓரே பாட்டில் எல்லாம் முன்னேற முடியாது. என்னை தப்பாக நினைக்காதே உண்மை அதான், வாழ்க்கை வேறு கனவு வேறு"

    "கனவு கண்டா தானே வாழ்க்கையை அடைய முடியும்"

    "இந்த மாதிரி டைலாக்கெல்லாம் வேலைக்கு ஆவாது எங் மேன். 15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும், கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல நீங்க இரண்டு பேரும் வெறுத்து ஒதுங்க வேண்டுமா?, நீங்களே யோசிங்க"

    மகேஷ் அமைதியாக அமர்ந்தான். ரங்கராஜன் அவனை பார்த்து கொண்டு இருந்தார். அவன் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்.

    "என்ன மகேஷ் என்ன சொல்றீங்க"

    "சார் ஒரு காபி சொல்லுங்க" என்றான் கண்களை துடைத்தபடி.
    Last edited by ரங்கராஜன்; 15-04-2009 at 04:43 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    யதார்த்தமான கதை.. ஆனாலும் இன்னும் வேலைகூட கிடைக்காமல் பொண்ணு கேட்டு போறவங்க இருக்காங்களா என்ன...??

    இந்தக் கதைக்கு ஆங்கிலத்தில் தலைப்பு தேவையா...? முடிந்தால் தமிழில் வைய்யுங்களேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by murthyd99 View Post
    ஐ லவ் யூவர் டாட்டர்


    "ஐயம் சாரி மகேஷ், ஐ காண்டு கன்ரோல் இட், நான் இந்த கம்பனியுடைய சீனியர் ஏ.ஒ, எனக்கு சம்பளம் 75,000 ரூபாய். என்னால என் மனைவியை சந்தோஷமா வச்சிக்க முடியில அவளுக்கு ஒரு டைமண்டு பேண்டண்டு வாங்கிதர முடியில ஆறு மாசமா"






    ஆனா திண்ண சோறு இல்லைனா காதல் இனிக்குமா?"





    . நீ இந்த சினிமாவில் வருவது போல ஓரே பாட்டில் எல்லாம் மூன்னேற முடியாது. என்னை தப்பாக நினைக்காதே உண்மை அதான், வாழ்க்கை வேறு கனவு வேறு"




    "இந்த மாதிரி டைலாக்கெல்லாம் வேலைக்கு ஆவாது எங் மேன். 15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும், கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல நீங்க இரண்டு பேரும் வெறுத்து ஒதுங்க வேண்டுமா?, நீங்களே யோசிங்க"




    எதார்த்தங்களை இலகுவாகச் சொல்லும் சிந்தனையும், வன்மையும் உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றன மூர்த்தி.. பாராட்டுகள்..!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by மதி View Post
    இன்னும் வேலைகூட கிடைக்காமல் பொண்ணு கேட்டு போறவங்க இருக்காங்களா என்ன...??

    இந்தக் கதைக்கு ஆங்கிலத்தில் தலைப்பு தேவையா...? முடிந்தால் தமிழில் வைய்யுங்களேன்.
    நன்றி மதி
    இருக்காங்க மதி, வேலையில்லாமல் கல்யாணம் செய்து கொள்பவர்களே இருக்காங்க.

    இதை தமிழில் "நான் உங்கள் மகளை காதலிக்கிறேன்" ன்னு வைக்க முடியாது மதி. தப்பாக நினைக்க மாட்டிங்கன்னு சொன்னேன். எனக்கு நீங்களே ஒரு நல்ல தலைப்பை சொல்லுங்க மதி நன்றாக இருந்தால் மாத்தி விடலாம்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ராஜா View Post
    எதார்த்தங்களை இலகுவாகச் சொல்லும் சிந்தனையும், வன்மையும் உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றன மூர்த்தி.. பாராட்டுகள்..!
    நன்றி அண்ணா
    உங்களுக்கு பிடிச்சி இருந்தா சரி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    உங்கள் குருஜியின் பாதையில் போறீங்க போல. யதார்த்ததை ரசித்தேன் மூர்த்தி. காதல் எனும் கானல் நீரில் மீன் பிடிக்க நினைக்கும் கனவுலகில் வாழும் பையன்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும்.

    "அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் ஹார்ஸ்....""".....


    சேர்ஸ்னு சொல்ல வந்தீங்களோ?
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by mukilan View Post
    "அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் ஹார்ஸ்....""".....


    சேர்ஸ்னு சொல்ல வந்தீங்களோ?
    நன்றி முகிலன்
    நீங்கள் முழுமையாக படித்தீர்கள் என்ற சான்று இது, நன்றி மாற்றி விட்டேன்
    Last edited by ரங்கராஜன்; 17-11-2008 at 03:43 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல கரு. அதற்க்கு முதல் பாராட்டு
    நல்ல உரையாடல் நடை அதற்க்கு இரண்டாம் பாராட்டு
    'ஒரு காப்பி' என்ற ஒரு வரியில் ஒரு முடிவு அதற்க்கும் பாராட்டு

    கதை சுவாரஸ்யமாக போகின்றது, இருப்பினும் 6 வருடமாக காதலிக்கும் ஒரு காதல் தனக்கு வேலையில்லை என்பதால் கைநழுவி போவது என்பது ஒருவனுக்கு மரணத்தின் முதல் வலியை அனுபவிப்பதற்க்கு சமம்.

    மூர்த்தி எழுத்துலகில் தங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஒரு ஒளி என் கண்களுக்கு தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    என் தாழ்மையான வேண்டுகோள். மிக அதிகமான ஆங்கில கலவையை கையாளும் விதம் சருக்கலின் முதற்ப்படி. முடிந்தால் தவிருங்கள். ஆங்கில தலைப்பை கண்டு கதையை காணமல் போவும் மனிதர்கள் பலர் இருக்கின்றனர், என்னையும் சேர்த்து.

    ********************************************************************************************************
    (அன்று ராஜா அண்ணாவின் கதையும் இப்படிதான் இருந்தது, இன்று மூர்த்தியின் கதையும் அப்படியே. இதற்க்கும் என் கருத்து இதேதான்)

    தற்ப்பொழுது மக்கள் 90% இப்படிதான் உறையாடுகின்றனர் என்பது தெரிந்த விசயம்தான்.
    இருப்பினும், நடைமுறை வசனமாக இருந்தாலும் சரி, முடிந்தவரை ஆங்கிலம் இல்லாமல் இருந்தால் தமிழ் மன்றம் இன்னும் சிறக்கும். தமிழ் மன்றத்தை சிறப்பிப்பது அனைவரின் கடமை.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல கதை மூர்த்தி. காதல் செய்யலாம், ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்பாக வீட்டிற்கு வரும் மனைவியை வைத்து காப்பாற்ற முடியுமா என்று முதலில் பார்க்கவேண்டும் பின்னரே அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

    ரங்கராஜம் ஒரு யதார்த்தவாதி, யதார்த்தைப் பேசுகிறார். மகேஷ் கவலைப்படவேண்டாம், முனைப்புடன் காரியத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by aren View Post
    நல்ல கதை மூர்த்தி. காதல் செய்யலாம், ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்பாக வீட்டிற்கு வரும் மனைவியை வைத்து காப்பாற்ற முடியுமா என்று முதலில் பார்க்கவேண்டும் பின்னரே அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

    ரங்கராஜம் ஒரு யதார்த்தவாதி, யதார்த்தைப் பேசுகிறார். மகேஷ் கவலைப்படவேண்டாம், முனைப்புடன் காரியத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.
    வெற்றி வெற்றி
    திரு. அரென் அவர்களே உங்களுடைய + -வான பதிலுக்கு நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஓவியா View Post
    கதை சுவாரஸ்யமாக போகின்றது, இருப்பினும் 6 வருடமாக காதலிக்கும் ஒரு காதல் தனக்கு வேலையில்லை என்பதால் கைநழுவி போவது என்பது ஒருவனுக்கு மரணத்தின் முதல் வலியை அனுபவிப்பதற்க்கு சமம்

    என் தாழ்மையான வேண்டுகோள். மிக அதிகமான ஆங்கில கலவையை கையாளும் விதம் சருக்கலின் முதற்ப்படி. முடிந்தால் தவிருங்கள். ஆங்கில தலைப்பை கண்டு கதையை காணமல் போவும் மனிதர்கள் பலர் இருக்கின்றனர், என்னையும் சேர்த்து..
    1. அதான் இந்த கதையின் வலியே

    2. உங்களின் வேண்டுகோளை பாராட்டுக்கு உரியதே. என்னுடைய முதல் ஆங்கில தலைப்பு கதை இது, இதுவரை என்னுடைய பழைய கதைகளில் நான் தமிழை தவிர வேறு வைத்ததில்லை. ஏனென்றால் அந்த கதைக்கு அது சரியாக பட்டது, அதே போல தான் இந்த கதைக்கு இந்த தலைப்பு சரியாக பட்டது. அதே போல இந்த கதையில் வரும் ஆங்கில வார்த்தைகள் எல்லாம் அவசியமானது (புரிதலை நாடி), ஏனென்றால் கதையின் ஓட்டம் அப்படி, இந்த ஆங்கில வார்த்தைகளை எடுத்து விட்டு தமிழில் போட்டு பாருங்கள், உங்களுக்கு கதாபாத்திரத்தின் வேறுபாடு உணர முடியாது. அதனால் தான்?. நான் கூடிய அளவில் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை தவிர்க முடியாத பட்சத்தில்.

    நண்பர்களே இந்த கதைக்கு ஒரு சிறந்த தமிழ் தலைப்பை தாருங்கள், பாராபச்சம் இல்லாமல் எனக்கு பிடிக்கும் பட்சத்தில் அந்த நண்பருக்கு ஐ-கேஷ் 200 தருகிறேன் (ஏனென்றால் என்னிடம் கொஞ்சமா தான் ஐ-கேஷ் இருக்கு)
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    1960 களிலிருந்து கையாளப்பட்ட கருதானென்றாலும், புதிதாக எதையும் சொல்லவில்லையென்றாலும், எதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள் மூர்த்தி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •