Results 1 to 5 of 5

Thread: வாமலோஷன் கைது

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  London / Sri Lanka
  Posts
  5,891
  Post Thanks / Like
  iCash Credits
  8,547
  Downloads
  11
  Uploads
  0

  வாமலோஷன் கைது

  "வெற்றி எப் எம்" வானொலி நிகழ்ச்சி முகாமையாளர் வாமலோஷன் கைது

  செய்தி : வீரகேசரி இணையம் 11/15/2008 11:24:42 AM -

  தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

  பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  லோஷன் முன்னாள் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 'சூரியன்' வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்துப் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது
  தமிழை வளர்க்க,
  தமிழரோடு தமிழில் பேசுங்கள்

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  நேற்று இந்த செய்தி, வெற்றி எப் எம்மில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததாக அறிந்தேன், லோஷனை எனக்கு ஒரு ஒலிப்பரப்பாளனாக மிகவும் பிடிக்கும்...

  அவர் விரைவில் விடுதலையாகி வீடு திரும்ப என் பிரார்த்தனைகளும்..

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 3. #3
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
  Join Date
  18 Aug 2005
  Location
  யாழ்ப்பாணம்
  Posts
  1,135
  Post Thanks / Like
  iCash Credits
  29,949
  Downloads
  4
  Uploads
  0
  நாரதரே... நீங்கள் நலம்தானே...?
  லோஷன் அண்ணா விரைவில் விடுவிக்கப்படுவாரென தகவல்.
  ஒரு ரசிகனாய் காத்திருக்கிறேன்.
  என்றென்றும் நட்புடன்
  உங்கள் தீபன்.

 4. #4
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
  Join Date
  18 Aug 2006
  Location
  srilanka
  Posts
  1,432
  Post Thanks / Like
  iCash Credits
  18,185
  Downloads
  55
  Uploads
  0
  பத்தாண்டு கால ஊடக இலக்கியத்தின் எனது நெருங்கிய நண்பரின் கைது கவலை தருகிறது..

  ஒரு முறை எனது வீட்டுக்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்தமையை வாழ்நாளில் மறக்க முடியாது.

  திறமையான நல்ல நேர்மையான ஊடகவியலாளர் திரு.வாமலோஷன் அவர்கள்..

  அவர் விரைவில் விடுதலை பெற பிரார்த்திக்கிறேன்..
  வாழ்க்கை என்பதும்
  ஒரு புதுக்கவிதைதான்..
  என்ன ஒரு புதுமை..
  நம்மால் விளங்கவே முடியாத
  புதிர்க்கவிதை


  www.shiblypoems.blogspot.com

  இங்கே சொடுக்கவும்..
  http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  வெற்றி எப்.எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது...

  பி.கு- லோசனின் கைதுக்கு இந்த பதிவுதான் காரணமென்று ஒரு செய்தி காற்றிலே உலாவுகிறது..
  Last edited by ஓவியன்; 22-11-2008 at 01:11 PM.

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •